Wednesday, 3 April 2024

தொழுகையில் முதல் ஸஃப்ஃபில் நிற்பவர்களே சிறந்தவர்கள்!!

 

தராவீஹ் சிந்தனை:- 25. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 15.

தொழுகையில் முதல் ஸஃப்ஃபில் நிற்பவர்களே சிறந்தவர்கள்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 24 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 25 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "தொழுகையில் சிறந்த ஸஃப் - அணியினர் யார்?" என்பது குறித்து நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

عن أبي هريرة رضي الله عنه أن رَسُولُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: قَالَ:- "خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أوَّلُهَا" (أَخْرَجَهُ مُسْلِمٌ).

தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

 

அல்லாஹ் தொழுகையாளிகளின் முடிவை இரண்டுவிதமாக அல்குர்ஆனில் அடையாளப் படுத்திக் காட்டுகிறான்.

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2)

தங்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருக்கும் முஃமின்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள்.( அல்குர்ஆன்: 23: 1, 2 )

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5)

தங்கள் தொழுகையில் கவனமற்றவர்களாக இருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடுதான்.( அல்குர்ஆன்: 107: 4, 5 )

தொழுகையாளிகளில் சிலருக்கு வெற்றி கிடைக்கின்றது. சிலருக்கு நாசம் உண்டாகிறது.

தொழுகையாளிகளுக்கு வெற்றி கிடைப்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். ஆனால், தொழுகையாளிகளுக்கு நாசம் கிடைப்பது பார தூரமான ஒன்றாகும்.

எனினும், இரண்டுமே தொழுகையிலிருக்கும் தன்மையை பொறுத்தே அமைகின்றது. 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  மனிதனிடம்  இருந்து அடிமைத்தனம் வெளிப்பட வேண்டும் என்பதற்காக சில அமல்களை மனிதனுக்கு கடமையாக்கியுள்ளான்.

அந்த அமல்களில் மிகவும் முக்கியமானது தொழுகையாகும். அந்த தொழுகையை முறைப்படி,  முழுமையாக நிறைவேற்றும் போது  அந்த தொழுகை அல்லாஹ்வால்  அங்கிகரிக்கப்பட்டு  நன்மைகளை பெற்றுத் தரும் உயரிய நற்காரியமாக அமைந்து விடுகிறது.

மாறாக, முறை தவறி   முறைகேடாக தொழுகையில் ஈடுபடுவோமேயானால் அந்த தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகி விடுகின்றது.

ஆதலால், அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாபத்தைப் பெற்றுத் தரும் சாதனமாகவும் அது மாறி விடுகின்றது.

இன்று இந்த உம்மத்தில் பெரும்பாலான தொழுகையாளிகளால் அலட்சியமாக பார்க்கப்படும், கவனக்குறைவாக அனுகப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்று ஸஃப்ஃபில் நிற்பது தொடர்பானதாகும்,

1.   ஸஃப் - வரிசையில் நிற்பது இந்த உம்மத்தின் தனிச் சிறப்பு...

முஸ்லிம் சமூகத்தின் ஜமாஅத் தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) இடைவெளி என்பது பல மஸ்ஜித்களில் தொடர்ந்து வருகிறது.

வரிசையில் (ஸஃப்பில்) இடைவெளி விட்டு தொழுவது தவறு, பாவம் என்று இந்த உம்மத் விளங்கிக் கொள்ள முன் வர வேண்டும். ஏனெனில், தொழுகையில்  வரிசை - ஸஃப் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

عن حذيفة قال

 قال رسول الله صلى الله عليه وسلم

 فضلنا على الناس بثلاث

 نحن المؤمنين المسلمين- جعلت لنا الأرض كلها مسجداً وجعلت ترابها لنا طهوراً، وجعل صفوفنا كصفوف الملائكة، وأوتينا الآيات الأخر من سورة البقرة من كنز تحت العرش لم يعط أحد قبلي، ولا يعطى أحد منه بعدي

أي: من أول قوله

 {آمَنَ الرَّسُولُ

 [البقرة:٢٨٥إلى آخر سورة البقرة.

فهذه الآيات من سورة البقرة نزل بها جبريل مرة، وأعطيها النبي عليه الصلاة والسلام من كنز تحت العرش في رحلة معراجه إلى السماء.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “(இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரை விடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:

1.நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.

2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக "அங்கத் தூய்மை" செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.

3. ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு வசனங்கள் அர்ஷுக்கு கீழ் இருக்கிற புதையலில் இருந்து தரப்பட்டது. எனக்கு முன்போ எனக்கு பின்பு எவருக்கும் இந்த சிறப்பு வழங்கப்பட வில்லை. ( நூல்: முஸ்லிம் )

மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ»

வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ( நூல்கள்: புகாரீ, முஸ்லிம் )

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ قَالَ: حَدَّثَنَا أَبَانُ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ قَالَ: حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رَاصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالْأَعْنَاقِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيَاطِينَ تَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ»

வரிசைகளைச் சரி செய்யுங்கள்! நெருக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்! கழுத்தைக் கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்! முஹம்மதின் உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஷைத்தான் வரிசைகளின் இடையில் சிறிய ஆட்டுக் குட்டிகளைப் போல் நுழைவதை நான் காண்கிறேன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: நஸயீ. அபூதாவூத் )

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ المَلِكِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الجَعْدِ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ»

உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை (கருத்து வேறுபாடுகளால்) மாற்றி விடுவான்”  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம் )

வரிசையை ஒழுங்கு படுத்துவது

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

என் பாட்டி முளைக்கா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டுப் பின்னர்  எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்  என்று கூறினார்கள். பயன்படுத்தப்பட்டதால் கருத்துப் போய் விட்ட எங்களுடைய ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வசிக்கும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முளைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுகை நடத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 380,

முதல் வரிசையின் சிறப்பு

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»

பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்கள்: புகாரீ, முஸ்லிம் )

عن جابر بن سمرة رضي الله عنهما ، قال (( خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال : ألا تصفون كما تصف الملائكة عند ربها ؟ فقلنا : يا رسول الله وكيف تصف الملائكة عند ربها ؟ قال: يتمون الصفوف الأول ، ويتراصون في الصف )) [ رواه مسلم ] .

மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் முன்னிலையில் மலக்குகள் அணிவகுப்பது போன்று நீங்கள் அணிவகுக்க வேண்டாமா ? என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் சொன்ன போது , மலக்குகள் தங்கள் இறைவனின் முன்னிலையில் எப்படி அணிவகுத்து நிற்பர் ? என்று நாங்கள் கேட்டோம் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் முந்தைய வரிசைகளை பூர்த்தி செய்வார்கள் . வரிசையில் ( இடைவெளி இல்லாது ) ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள் என ஜாபிர் பின் சமூரா ( ரலி ) அறிவிக்கின்றார். 

وأخرج ابن ماجه والنسائي وابن خزيمة عن العرباض بن سارية رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصف الأول ثلاثًا وللثاني مرة؛ (صحيح الترغيب والترهيب:

திண்ணை ஸஹாபாக்களில் ஒருவரான இர்பாள் இப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முதலாவது வரிசைக்கு மூன்று முறையும், இரண்டாவது வரிசைக்கு ஒரு தடவையும் ஸலவாத் (பிரார்த்தனை) சொல்லக்கூடியவர்களாக இருந்நனர் ( நூல்: அஹ்மத் )

وعن أَبي هُريْرة رضي الله عنه قَالَ: قَالَ رسُولُ اللَّهِ ﷺ: خَيْرُ صُفوفِ الرِّجالِ أَوَّلُهَا، وشرُّها آخِرُهَا  رواه مُسلِم.

முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (முஸ்லிம்)

தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)

வரிசை சீர்பெற்றாலே தொழுகை முழுமை பெறும்..

عنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاةِ ) رواه البخاري ( 690 ) ومسلم ( 433) , وفي رواية للبخاري ( 723 ) : ( سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاةِ ) .

وفي رواية للبخاري ( سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ حسن الصَّلاةِ ) .

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (741)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும். அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),  நூல்: புகாரி (723)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி (722)

முதல் வரிசையில் யார் நிற்க வேண்டும்

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ، وَيَقُولُ: «اسْتَوُوا، وَلَا تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «فَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا»

உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

முதல் வரிசையில் நின்று தொழுவது இங்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படுகின்றது. எனவே, ஸப்பில் நிற்கும் போது முதல் வரிசையில் நின்று தொழ முற்பட வேண்டும்.

ஸஃப்ஃபை சரியாக அமைக்க வில்லை என்றால்?...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் (ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ( நூல்: அல் முஃஜமுல் கபீர் (11289 பாகம் : 9 பக்கம் ; 390 )

وعن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رضي الله عنهما قال : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا حَتَّى كَأَنَّمَا يُسَوِّي بِهَا الْقِدَاحَ ، حَتَّى رَأَى أَنَّا قَدْ عَقَلْنَا عَنْهُ ثُمَّ خَرَجَ يَوْمًا فَقَامَ حَتَّى كَادَ يُكَبِّرُ ، فَرَأَى رَجُلا بَادِيًا صَدْرُهُ مِنْ الصَّفِّ ، فَقَالَ : ( عِبَادَ اللَّهِ ، لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ) . رواه البخاري ( 717 ) ومسلم (436) .

நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒழுங்கு முறையை புரிந்து நாங்கள் கடைபிடித்து விட்டோம் என்று அவர்கள் எண்ண தலைப்படும் வரை அம்பை சீர் செய்வது போல் எங்களது வரிசைகளை சீர் செய்வார்கள் . ஒரு நாள் அவர்கள் தனது திருமுகத்தால் எங்களை நோக்கி பார்க்கும்போது , தனது நெஞ்சை முன்னால் நிமிர்த்திக் கொண்டு ஒருவர் நின்றிருந்தார் . உடனே அவர்கள் " நீங்கள் உங்கள் வரிசைகளை சரிப்படுத்துங்கள் அல்லது உங்களுடைய முகங்களை மாற்றியமைத்து விடுவான் என்று சொன்னார்கள் என நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்.

وعن ابن عمر رضي الله عنهما ، أن رسول الله صلى الله عليه وسلم : قال : (( أقيموا الصفوف ، وحاذوا بين المناكب ، وسدوا الخلل، ولينوا بأيدي إخوانكم ، ولا تذروا فرجات للشيطان ، ومن وصل صفاً وصله الله ، ومن قطع صفاً قطعه الله )) [ رواه أبو داود وهو صحيح ] .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலக்குமார்களின் வரிசையைக் கொண்டு தான் நீங்கள் வரிசையாக நிற்கிறீர்கள். எனவெ தொழுகை வரிசையை நேராக்குங்கள்! இடைவெளிகளை நிரப்புங்கள்! தோள் புஜங்களை நேராக்கிக் கொள்ளுங்கள்!) உங்களின் சகோதரர்களின் கைகளை (பிடித்து அருகில் நிறுத்துவதில்) இதமாக நடந்து கொள்ளுங்கள். ஷைத்தானிற்கு இடைவெளிகளை விடாதீர்கள். யார் வரிசையில் இணைந்து நிற்கிறாரோ அவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். யார் வரிசையைத் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ( நூல்: அஹ்மத் )

வரிசையில் பிந்தியவர்கள் மறுமையிலும் பிந்தியவர்களே!

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا ، فَقَالَ لَهُمْ : ( تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ ، لا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمْ اللَّهُ ) .

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (மறுமையில்) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம்)

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ مَعِينٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ عَنْ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُؤَخِّرَهُمْ اللَّهُ فِي النَّارِ ‏

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “ஒரு கூட்டத்தார் (வேண்டுமென்றே) முன் வரிசையிலிருந்து பின்தங்கிக் கொண்டேயிருந்தால் இறுதியாக அல்லாஹ் அவர்களை நரகத்தில் பின்தங்கச் செய்துவிடுவான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ( நூல்: அபூதாவூத் )

பள்ளிக்கு முன்கூட்டியே வரும் சிலர் வரிசையில் வேண்டுமென்றே பிற்பகுதிக்குச் செல்வார்கள். இவ்வாறு முன்கூட்டியே வருபவர்கள் பின்வரிசையை நாடிச் செல்வது மறுமையில் அனைவரையும் விட பிந்தச் செய்யக்கூடிய செயலாகும்.

بشر بن الحسن المحدث الثقة العابد، وكان يسمى صفيا نسبة إلى الصف، لملازمته الصف الأول في مسجد البصرة خمسين سنة.

பிஷ்ர் இப்னுல் ஹஸன் (ரஹ்) மிகப் பெரிய முஹத்திஸ் ஆவார்கள். வலிமையான வணக்கசாலியும் ஆவார்கள். அவர்களை மக்கள் "ஸஃபிய்யன்" என்று அழைப்பதுண்டு. ஏனெனில், பஸராவினுடைய மஸ்ஜிதில் ஐம்பதாண்டு காலமாக அவர்கள் முதல் ஸஃப்ஃபில் நின்று தொழுததே காரணமாகும். ( நூல்: தஹ்தீப் அத் தஹ்தீப் )

قال سعيد بن المسيب:” ما فاتتني التكبيرة الأولى منذ خمسين سنة، وما نظرت في قفا رجل غير الإِمام منذ خمسين سنة.

"ஐம்பதாண்டு காலமாக எனக்கு தக்பீர் தஹ்ரீமா தப்பிப் போகவே இல்லை. மேலும், ஐம்பதாண்டு காலமாக நான் இமாமின் பிடரி அல்லாத வேறு எவரின் பிடரியையும் பார்த்ததில்லை" என்று ஸயீத் இப்னு அல் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். காரணம் அவர்கள் முதல் ஸஃப்ஃபில் இமாமுக்கு நேர் பின்புறம் நிற்பார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

وقال وكيع بن الجراح:” كان الأعمش قريبا من سبعين سنة لم تفته التكبيرة الأولى”.

இமாம் அஃமஷ் (ரஹ்) அவர்களுக்கு எழுபதாண்டு காலமாக தக்பீர் தஹ்ரீமா தவறியதே இல்லை " என்று வகீஉ இப்னு அல் ஜராஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்னத் இப்னுல் ஜஅத் )

وقال محمد بن سماعة القاضي:” مكثت أربعين سنة لم تفتني التكبيرة الأولى إلا يوما واحدا ماتت فيه أمي، ففاتتني صلاة واحدة في جماعة”.

முஹம்மது இப்னு ஸமாஅத்துல் காழீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "நாற்பதாண்டு காலத்தில் என் தாய் வஃபாத்தான நேரத்தில் வந்த ஒரு தொழுகையின் தக்பீர் தஹ்ரீமாவும், ஜமாஅத் தொழுகையுமே எனக்கு தப்பிப் போனது" என்று கூறினார்கள். ( நூல்: தஹ்தீப் அத் தஹ்தீப் )

சோபனமும்... சாபமும்...

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஸஃப்ஃபில்வரிசையில் நேராக, சரியாக நிற்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். வானவர்கள் அல்லாஹ்வின் அருள் அந்த அடியாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக துஆச் செய்கின்றார்கள் என்கிற சோபனத்தை கூறுவதோடு, ஸஃப்ஃபில் சரியாக நிற்பதே தொழுகையை பூர்த்தியாக்குகின்றது, அழகுறச் செய்கிறது என்று வலியுறுத்திக் கூறுகின்றார்கள்.

அதே போன்று எவர் ஸஃப்ஃபில் இணைந்து தொழுவதில் ஆர்வம் கொள்ளவில்லையோ, இடைவெளி விட்டு தொழுகின்றாரோ, கடைசி ஸஃப்ஃபில் நின்று தொழுவதையே வழக்கமாக்கி கொள்கின்றாரோ, ஸஃப்ஃபில் சரியாக நிற்பதில்லையோ அவர் குறித்து பல்வேறு சாபங்களை வழங்கி இருப்பதை பார்க்கின்றோம்.

அல்லாஹ்வின் அருளின் முக்கியத்துவம்

இறைவனை வழிபடுவதற்கு இறையருள் தேவை என்பதால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

 

عَنْ الصُّنَابِحِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ وَقَالَ يَا مُعَاذُ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ فَقَالَ أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ وَأَوْصَى بِذَلِكَ مُعَاذٌ الصُّنَابِحِيَّ وَأَوْصَى بِهِ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ

நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, “முஆதே! உன்னை நான் நேசிக்கின்றேன். அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக

பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்என்று கூறினார்கள். ( நூல்: நஸாயீ )

எனவே நன்மைகள் புரிய இறையருள் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்தும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் குர்ஆன், ஹதீஸ் கூறும் சில முக்கிய தகவல்களைக் காண்போம்.

சொர்க்கம் செல்ல காரணி

முஸ்லிம்களின் இலக்கு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. அத்தகைய சொர்க்கத்தினுள் மனிதர்கள் செல்ல தங்கள் வழிபாடுகளை விடவும் முக்கிய காரணமாக இறையருளே திகழ்கிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ يُنَجِّيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَةٍ سَدِّدُوا وَقَارِبُوا وَاغْدُوا وَرُوحُوا وَشَيْءٌ مِنْ الدُّلْجَةِ وَالْقَصْدَ الْقَصْدَ تَبْلُغُوا

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களது நற்செயல் காப்பாற்றாது)?” என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் (தனது) அருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிரஎன்று கூறிவிட்டு, “(ஆகவே,) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்). நடுநிலை(யைக் கடைப்பிடியுங்கள்). (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள் என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

சிறந்த செல்வம்..

மனிதர்கள் திரட்டும் செல்வங்கள் அனைத்தையும் விட இறையருளே மிகச் சிறந்த செல்வமாகும்.

وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ(3:157)

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது. ( அல்குர்ஆன்: 3: 157 )

எல்லையில்லா இறையருள்..

அல்லாஹ்வின் அருளுக்கு வரம்போ, எல்லையோ கிடையாது. ஒரு மனிதன் இறையருளின்மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டால் அவன் எங்கிருந்தபோதும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இறையருள் அவனுக்கு கிட்டிவிடும். இறையருளை எந்தச் சூழலும் தடுக்க முடியாது. எந்த மனிதனும் தடுத்து விட முடியாது.

مَا يَفْتَحْ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(35:2)

மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அவனுக்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். ( அல்குர்ஆன்: 35: 2 )

சாபத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்..

தனது கோபத்தைவிட தனது அன்பு,கருணை,அருள் தான் மிகைத்து நிற்குமென்று தன் ஸிஃபத்துகளைப் பற்றி அல்லாஹ் பல இடங்களில் வர்ணித்துக் கூறுவான். ஓரிடத்தில்.... 

نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ

என் அடியார்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி விடுங்கள்! நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையுடையவன், அன்புடையோன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 15 : 49)

அதே நேரத்தில் அவனது சட்ட வரம்புகள் மீறப்பட்டால், அவனுடைய கட்டளைகளுக்கு மாற்றமாக அடியார்கள் நடந்து கொண்டால், அல்லாஹ்வுடைய ஷரீஆவை மீறினால், அல்லாஹு தஆலா வெறுத்த, சபித்த பாவங்களை மக்கள் செய்தால் அவர்களை தண்டிப்பதிலும் அல்லாஹ் மிகக்கடுமையானவன் என்பதை எச்சரிக்குமாறு அறிவுறுத்துகின்றான்.

وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ

நபியே! எனது தண்டனை மாபெரும் கடுமையான தண்டனை ஆகும். (அல்குர்ஆன் 15 : 50)

குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது, شديد العقاب-"ஷதீதுல் இகாப், شديد العذاب-ஷதீதுல் அதாப்" -தண்டனை வழங்கும் விஷயத்தில் கடுமையானவன். அல்லாஹ்வுடைய தண்டனையைப் போன்று வேறு யாரும் தண்டனை கொடுக்க முடியாது.

سريع الحساب-" ஸரீஉல் ஹிசாப்" அவன் விசாரிணை என வந்துவிட்டால் அவனை விட விரைவாக தீவிரமாக வேறு யாரும் விசாரணை செய்ய முடியாது.

எனவே அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்  தஆலா விசாரணை குறித்து கூறக்கூடிய கடுமையான வசனத்தை பாருங்கள்:-

وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا

எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம். (அல்குர்ஆன் 65 : 8)

ஒரு கட்டளையை மீறுவதை மிக எளிதாக எடுத்துக் கொண்டு ஒரு சமூகம் கடந்து போகுமேயானால், அந்த பாவத்தை அவர்கள் பழகி விட்டார்கள் என்று பொருள். அந்த பாவத்திலே அவர்கள் தங்களை பரிகொடுத்து விட்டார்கள் என்று பொருள்.

ஒரு பாவத்தை செய்யப்பழகி அந்த பாவத்திலே தங்களை பரிகொடுத்து விட்ட காரணத்தினால் ஒரு சமூகத்தை அழித்ததாக அல்லாஹ்  தஆலா கூறுகின்றான்.

 

فَلَمَّا عَتَوْا عَنْ مَا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ

ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.) (அல்குர்ஆன்7 : 166)

இந்த இடத்தில் குர்ஆனின் விரிவுரையாளர் அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்:- அந்த சனிக்கிழமையில் வரம்பு மீறி பாவம் செய்தவர்கள்,மீன் பிடிக்க தந்திரம் செய்தவர்களை மட்டும் தான் அல்லாஹ் கண்டித்தான் என்று நீங்கள் நினைத்து கொள்ள வேண்டாம்.

யார் நன்மையை ஏவி தீமையை தடுக்கவில்லையோ அவர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டார்கள். .(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!)

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் தடுத்த ஒரு பாவத்தை அலட்சியமாக கருதி செய்தவர்கள், அவர்கள் செய்வதை அலட்சியமாக கடந்து சென்றவர்கள் என இரு சாராரும் இறைவனின் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இன்று ஸஃப்ஃபுடைய விஷயத்தில் சமூகம் மிகவும் அலட்சியமாக இருந்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

Tuesday, 2 April 2024

குர்ஆனைக் கற்று, கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர்!!

 

தராவீஹ் சிந்தனை:- 24. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 14.
குர்ஆனைக் கற்று, கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 23 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 24 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே சிறந்தவர்" என்ற  நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مِنْهَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ ‏ ‏سَمِعْتُ ‏ ‏سَعْدَ بْنَ عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

"குர்ஆனைத் தானும் கற்று பிறருக்குக் கற்று கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்" என்று நபி (ஸல்)  அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி, அபூதாவூத், திர்மிதீ )

وقد سُئِل سفيان الثوري رحمه الله عن الجهاد وإقراء القرآن فرجح الثاني، واحتجَّ بهذا الحديث.

ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடம் ஜிஹாத் மார்க்கப் போரில் பங்கேற்பது சிறந்ததா? குர்ஆனை ஓதுவது சிறந்ததா? எனக் கேட்கப்பட்ட போது மேற்கூறிய இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு "குர்ஆனை ஓதுவதே" சிறந்தது என்று கூறினார்கள்.

أن معلم القرآن ومتعلمه متشبهان بالملائكة والرُسل، كفى معلم القرآن ومتعلمه شرفًا وفخرًا أنهم متشبهون بالملائكة والرسل الكرام، فقد بعث الله تعالى جبريل عليه السلام ليُعلم النبي صلى الله عليه وسلم قال الله عز وجل

 عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ   النَّجۡم

குர்ஆனைக் கற்பவரும் குர்ஆனை பிறருக்கு கற்பிப்பவரும் பெறுகிற அந்தஸ்தும் சிறப்புமாகிறது. ரஸூல்மார்களுக்கும் நபிமார்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் போன்றதாகும்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரயீல் அலை அவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கவே அனுப்பி வைத்தான்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந் நஜ்ம் அத்தியாயத்தில் 5 -ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.


عَلَّمَهٗ شَدِيْدُ الْقُوٰىۙ‏

மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்?

قوله تعالى : {الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون} [البقرة: 121]

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!

وهو معنى قول ابن عباس وابن مسعود رضي الله عنهما ... وقيل: يقرءونه حَقَّ قراءته.

இந்த இறை வசனத்திற்கு விளக்கம் தருகிற இப்னு அப்பாஸ் மற்றும் இப்னு மஸ்வூத் ரலி அன்ஹுமா ஆகியோர் "எந்த முறைப்படி ஓத வேண்டுமோ அந்த முறைப்படி ஓத வேண்டும்" என்று பொருள் கூறுகின்றனர்.

قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ".

யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி),( நூல்: அபூதாவூத் )

அல்குர்ஆனை எதற்காக கற்றுக் கொள்ள வேண்டும்?

1. நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا ، لاَ أَقُولُ الْم حَرْفٌ ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம்என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) ( நூல் : திர்மிதீ )

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِى يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ

குர்ஆனை நன்கு (மனனம் செய்து) தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத்தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றனஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ( நூல் : முஸ்லிம் )

2. பரிந்துரைக்காக கற்றுக் கொள்ளுங்கள்!

اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) ( நூல் : முஸ்லிம் )

3. வழிதவறி விடாமல் இருப்பதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

قال رسول الله صلى الله عليه وسلم: " أبشروا فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به فإنكم لن تهلكوا ولن تضلوا بعده أبدا "

இந்த குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) ( நூல்: தப்ரானி )

4. அல்லாஹ்வின் பேச்சாக இருப்பதால் கற்றுக் கொள்ளுங்கள்!

عن جابر بن عبدالله رضي الله عنهما: أن النبي صلى الله عله وسلم كان يقول في خطبته: ((أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهديِ هديُ محمد، وشر الأمور محدَثاتها، وكل بدعة ضلالة))؛ رواه مسلم

பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ( நூல்: முஸ்லிம்)

5. உயர்வு பெறுவதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ

இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) – ( நூல்: முஸ்லிம் )

6. நன்மைகளில் குவியல்கள் கிடைப்பதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

عَنْ عُقْبَةَ بْنِ عَامرٍ رضي الله عنه قَالَ: خَرَجَ رَسُولُ الله صلّى الله عليه وسلّم وَنَحْنُ في الصُّفَّةِ فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ، فِي غَيْرِ إِثْمٍ وَلاَ قَطْعِ رَحِمٍ؟»، فقُلْنَا: يَا رَسُولَ اللهِ! نُحِبُّ ذَلِكَ، قَالَ: «أَفَلاَ يَغْدَوُ أَحَدُكُمْ إِلَى المَسْجِدِ فَيَتَعَلَّمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ الله عزّ وجل خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ. وَثَلاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ. وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ؟»

 

நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) ( நூல்: முஸ்லிம், இப்னுமாஜா )

7. விசாலமான சொர்கத்தை பெறுவதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

و قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ , وَارْتَقِ , وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا , فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا".

மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ( நூல்: அபூதாவுத், திர்மிதி)

8. குர்ஆனின் வெகுமதிகளை அடைவதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ ، فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ ، فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ ، فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ ، فَيَرْضَى عَنْهُ ، فَيُقَالُ لَهُ : اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً " أخرجه الترْمذي

குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான்.

அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) ( நூல்: திர்மிதி, இப்னு குஸைமா )

9. பாழாய் போவாமல் இருப்பதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

وعنِ ابنِ عباسٍ رضيَ اللَّه عنهما قال : قال رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : «إنَّ الَّذي لَيس في جَوْفِهِ شَيْءٌ مِنَ القُرآنِ كالبيتِ الخَرِبِ »  أخرجه الترمذي

குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ( நூல்: திர்மிதி )

10. அமல் செய்வதற்காக கற்றுக் கொள்ளுங்கள்!

عَن النَّوَّاسِ بنِ سَمعانَ رضيَ اللَّه عنهُ قال : سمِعتُ رسول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقولُ : «يُؤْتى يوْمَ القِيامةِ بالْقُرْآنِ وَأَهْلِهِ الذِين كانُوا يعْمَلُونَ بِهِ في الدُّنيَا تَقدُمهُ سورة البقَرَةِ وَآل عِمرَانَ ، تحَاجَّانِ عَنْ صاحِبِهِمَا » أخرجه مسلم

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

கற்றுக் கொடுப்பவர் எதனால் சிறந்தவர் ஆகிறார்?

1. நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்!

عن ابن عمر رضي الله عنهما قال :" كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا القرآن ، فإذا مر بسجود القرآن سجد وسجدنا معه"

இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். ஸஜ்தா உடைய வசனங்கள் வரும் போது ஸஜ்தா செய்வார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து ஸஜ்தா செய்வோம். ( நூல்: அஹ்மத் )

 عن جابر بن عبد الله رضي الله عنهما :" كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن ".

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள். ( நூல்: புகாரி )

2. நபித்தோழர்களை கற்றுக் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள்!

عن عبادة بن الصامت رضي الله عنه قال : ( كان رسول الله صلى الله عليه وسلم يُشغل ، فإذا قدم رجل مهاجر على رسول الله صلى الله عليه وسلم دفعه إلى رجل منا يعلمه القرآن ).

"நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் வேலைகளில் ஈடுபட்டு இருக்கும் போது ஹிஜ்ரத் செய்து யாராவது வருகை தந்தால் அவருக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்குமாறு எங்களிடம் கூறுவார்கள்" என்று உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அஹ்மத் )

وعن أبي موسى رضي الله عنه :( أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا وأبا موسى إلى اليمن ، فأمرهما أن يعلما الناس القرآن )

நபி {ஸல்} அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களையும், அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்களையும் யமனுக்கு அனுப்பி வைக்கும் போது அங்குள்ள மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்குமாறு ஏவினார்கள்" என்று அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள். ( நூல்: அஹ்மத் )

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு தமது முதல் பிரதிநிதியாக தஃவா செய்ய முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்த போது கூடவே அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களையும் மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக அனுப்பி வைத்தார்கள்.

மேன்மக்களும் விரும்பி கற்றுக் கொடுத்தார்கள்!

மேன்மை தங்கிய நான்கு கலீஃபாக்களும் அதற்கு பிறகு வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களும் தங்களுடைய காலத்தில் இஸ்லாமிய எல்லை உலகின் எட்டு திக்குகளிலும் பரவிய போது முதலில் அவர்கள் செய்தது அவர்களை நெறிப்படுத்த கவர்னரையும், அங்குள்ள மக்களுக்கு மார்கத்தையும் குர்ஆனையும் கற்றுக் கொடுக்க சிறந்த முறையில் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் நபித்தோழர்களைத் தான்.

عن سعد بن عبيدة قال : وأقرأ أبو عبد الرحمن في إمارة عثمان حتى كان الحجاج ، قال أبو عبد الرحمن السلمي : وذاك الذي أقعدني مقعدي هذا.

ومعنى قول أبي عبد الرحمن السلمي :" وذاك الذي أقعدني مقعدي هذا "

" أي : أن الحديث الذي حدث به عثمان في أفضلية من تعلم القرآن وعلمه حمل أبا عبد الرحمن أن قعد ــ في مسجد الكوفة مدة طويلة - يعلم الناس القرآن لتحصيل تلك الفضيلة ".

நாம் தலைப்பிட்டுள்ள ஹதீஸை அறிவிக்கும் அபூ அப்துர்ரஹ்மான் (ரஹ்) இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஓரிடத்தை சுட்டிக்காட்டி இந்த இடத்தில் அமர்ந்து தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி காலம் முதற்கொண்டு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஆட்சி காலம் வரை மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தேன் என்று கூறினார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 9, பக்கம்: 97 )

 

ومثله أيضا الإمام المقرئ نافع بن عبد الرحمن بن أبي نعيم المدني - أحد القراء السبعة - فقد أقرأ الناس دهرا طويلا يزيد عن سبعين سنة ، لأنه ممن طال عمره.

ஏழு காரிகளில் ஒருவரான அப்துர்ரஹ்மான் இப்னு அபூ நயீமுல் மதனீ (ரஹ்) அவர்கள் சுமார் 70 ஆண்டுகள் மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள். நீண்ட ஆயுள் வாழ்ந்த மேன்மக்களில் அவர்களும் ஒருவர். ( மஅரிஃபத்துல் குர்ராவுல் கிபார் லிஇமாமித் தஹபீ, பக்கம் : 64 )

وكذلك الإمام أبو منصور الخياط البغدادي : تخرج على يديه عدد كبير من قراء القرآن ، وقد وصفه الإمام الذهبي بقوله " جلس لتعليم كتاب الله دهرا ، وتلا عليه أمم "

அபூ மன்ஸூர் அல் கய்யாத்துல் பக்தாதீ (ரஹ்) அவர்கள் பல ஆண்டுகளாக மக்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள். பெரிய பல காரிகளை உருவாக்கினார்கள். தகபீ (ரஹ்) குர்ஆனை கற்றுக் கொடுக்க அவர் அமர்ந்தது சில காலம் என்றாலும் குர்ஆன் ஓதும் பெருங்கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைத்தார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா பாகம்: 19, பக்கம் 222 )

وقد لقن العميان دهرا لله ، وكان ينفق عليهم ، حتى بلغ عدد من أقرأهم من العميان سبعين نفسا .

قال الإمام الذهبي :" ومن لقنَّ القرآن لسبعين ضريرا ، فقد عمل خيرا كثيرا "

அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்களுக்கும் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் குர்ஆனை கற்று முடிக்கும் காலம் வரை அவர்களின் செலவினங்களுக்கு அபூ மன்ஸூர் (ரஹ்) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அதன் காரணமாக பார்வையற்ற அந்த மாணவர்களில் எழுபது நபர்கள் காரிகளாக உருவானார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா பாகம்: 19, பக்கம் 223 )

وقال السمعاني :" رؤي بعد موته ، فقال : غفر الله لي بتعليمي الصبيان الفاتحة ".

இமாம் ஸம்ஆனீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூ மன்ஸூர் (ரஹ்) அவர்களின் வஃபாத்துக்குப் பின்னர் ஒரு நாள் அவர்களை நான் கனவில் கண்டேன். அபூ மன்ஸூர் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:- "சிறுவர்களுக்கு நான் கற்றுக் கொடுத்த ஸூரத்துல் ஃபாத்திஹாவின் காரணமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னை மன்னித்தான்" என்று. ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா பாகம்: 19, பக்கம் 224 )

குர்ஆன் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்!

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا

நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது ( அல்குர்ஆன்: 17: 9 )

 

பெருமானார் (ஸல்) அவர்களை கவிஞர் என்று நிரூபிக்க முனைந்த பலரை குர்ஆன் வசனம் ஹிதாயத்தின் விசாலமான வாசலைத் திறந்து அந்த குர்ஆனுக்கு பணியாளர்களாய் மாற்றியது. 

குர்ஆன் என்ன தான் கூறுகிறது. கேட்டுத் தான் பார்ப்போமே என்று சாதாரணமாக நினைத்த பலரை சாதனை மனிதர்களாக மாற்றியது.

அபூதர் சிறிது நேரத்தை ஒதுக்கி பெருமானார் (ஸல்) அவர்களை சந்தித்ததால் ஃகிபார் மற்றும் அஸ்லம் என இரு கோத்திரத்தார்களுக்கு நேர்வழி நஸீப் ஆகியது.

குர்ஆனை செவியேற்று விடக்கூடாது என்ற நோக்கில் காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு மறைந்து திரிந்தவர்களை மறையின் வழி நின்று வாழும் மகத்தான மாண்பாளர்களாய் மாற்றியது. துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸி தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு தம் கோத்திரமான தவ்ஸ் முழுமைக்கும் இஸ்லாத்தின் நறுமணத்தை நுகரச் செய்தார். அன்று அவர் காதில் இருந்து பஞ்சை எடுக்காமல் போயிருந்தால் இந்த உம்மத்திற்கு ஓர் அபூஹுரைரா கிடைத்திருக்க மாட்டார்.

டாக்டர் மர்ஹூம் கோட்டாறு ஹபீபுல்லாஹ் அவர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த முன்னாள் மருத்துவர் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றை எமது நண்பரும் பாவா காஸிம் பள்ளிவாசலின் முன்னாள் தலைவருமான கோட்டாறு ஃபித்ரத்துல்லாஹ் அண்ணன் அவர்களின் முகநூல் பதிவு இது.

இந்தியாவில், குறிப்பாக மேல் ஜாதி  ஹிந்து குடும்பத்தில் பிறந்த தலை சிறந்த டாக்டர்கள் சிலர், இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களைஇணைத்து கொண்டு தாயீக்களாக - பிரச்சாரகர்களாக , ஹாபிழ்களாக புனித மக்கா நகரில் கஃபாவை சுற்றி வலம் வருவதையும் தொழுகை,  நோன்பு போன்ற இஸ்லாமிய கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவு செய்வதையும் கண்டு  நான் வியந்ததுண்டு.

அப்படி நான் வியந்த இரு ஹாஃபிழ்கள் மக்கா நகரில்  நான் மருத்துராக பணி புரிந்தகாலத்தில் சில நேரங்களில் இவர்கள் எனக்கு ஆசானாக இருந்து குர்ஆனுக்கு சிறந்த விளக்கம் அளித்ததும் உண்டு.

ஒருவர் பெயர் டாக்டர் ரெய்ஹான் இவரது இயற் பெயர் ராமன், பிராமணர். கர்நாடகா மாநிலத்தைச்சார்ந்தவர். இவரது தந்தை சாஸ்திரிகள் மற்றும் கோவில் குருக்கள். இஸ்லாத்தில்இணையும் தனது ஆவலைதந்தையிடம் சொல்ல குர்ஆனை நான் முழுமையாக படித்து இருக்கிறேன். அது சிறந்த வேதம். உனக்கு பிடித்தால் ஏற்றுக் கொள்.. தந்தை அனுமதி தந்த விசயத்தை என்னிடம் சொன்னார் டாக்டர் ரெய்ஹான்.

இவர் மக்கா நகரில் தலைசிறந்த டெர்மடாலஜிஸ்ட்மக்கா நகரில் இவரைத் தெரியாதவர் எவரும் இல்லை. 

அடுத்தவர், டாக்டர் ஷேக் உமர் கேரளாவைச் சார்ந்த நாயர் குடும்பத்தை சார்ந்தவர்.இவரது இயற் பெயர் டாக்டர் ஸ்ரீகுமார் 

மக்கா நகரின் பிரபல ஆசியா பாலி கிளினிக்கில் சீனியர் டெண்டிஸ்ட்  ஆக உள்ளார். இருவரும் இன்றும் மக்கா நகரில் மிகவும் பிரபலமான டாக்டர்கள் 

 

இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இவர்கள் இப்போதும் இலவச மருத்துவ ஆலோசனை அளித்து வருகிறார்கள் என்பது சிறப்பு. புனித ஹஜ் 

பற்றி விளக்கம் தருவதும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்களில் குர்ஆனிய போதனைகளின் அடிப்படையில் தோற்றுவித்த சமுதாயத்தை தான் சஹாபாக்கள்என்று சரித்திரம் இன்று அழைக்கிறது.

அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்”.( அல்குர்ஆன்: 98: 8 ) என்று சான்று பகிர்கின்றது.

அதே அல்குர்ஆன் தான் இன்றும் நமக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் நமக்கு ஏற்பட வில்லை என்றால் அது நம்முடைய கோளாறு.

அல்குர்ஆனை முறையாக கற்கவும் இல்லை, கற்றுக் கொள்வதில் ஆர்வமும் இல்லை, கற்றவர்கள் ஓதுவதுமில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது?

சிந்திப்போம்! குர்ஆனைக் கற்போம்! குர்ஆனைக் கற்றுக் கொடுப்போம்! கற்றதின் படி செயல்படுவோம்! மனிதர்களில் "சிறந்தவராக" மாற்றம் பெறுவோம்!