Monday 27 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 23 இறைவனின் கவனத்தை ஈர்த்த இரு மாதரசிகள்!!!


ரமழான் சிந்தனை, தொடர் – 23
இறைவனின் கவனத்தை ஈர்த்த இரு மாதரசிகள்!!!




22 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 23 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அர் ரஹ்மான், அல் வாகிஆ, அல் ஹதீத், அல் முஜாதலா, அல் ஹஷ்ர் அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் முஜாதலா அத்தியாயத்தின் முதல் 4 வசனங்களும், அல் ஹஷ்ர் அத்தியாயத்தின் 9 –ஆவது வசனமும் இறைவனின் கவனத்தை ஈர்த்த இரு பெரும் பெண்மணிகளின் செயல்பாடுகள் குறித்து பேசுவதை அல்லாஹ் பதிவு செய்திருக்கின்றான்.

குர்ஆன் பல பெண்மணிகளின் வரலாற்றுத் தரவுகளை பதிவு செய்திருந்தாலும் கூட இம்ரானின் மனைவி (அலைஹஸ்ஸலாம்) ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலைஹஸ்ஸலாம்) மர்யம் (அலைஹஸ்ஸலாம்) ஆகியோர்களின் வரிசையில் புகழ்ந்து பேசப்படுகிற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாக கவ்லா பிந்த் ஸஅலபா (ரலி), உம்மு ஸுலைம் (ரலி) ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளது.

கவ்லா பின் ஸஅலபா (ரலி) அவர்களின் சிறப்பை பின் வரும் நிகழ்வின் மூலம் விளங்கி விட்டு பின்னர் இறைவனின் கவனத்தை ஈர்த்த அந்த நிகழ்வினை பார்ப்போம்.

وقد مر بها عمر بن الخطاب رضي الله عنه في خلافته والناس معه على حمار ، فاستوقفته طويلا ، ووعظته وقالت : يا عمر قد كنت تدعى عميرا ، ثم قيل لك : عمر ، ثم قيل لك : أمير المؤمنين ، فاتق الله يا عمر ، فإنه من أيقن بالموت خاف الفوت ، ومن أيقن بالحساب خاف العذاب ، وهو واقف يسمع كلامها ، فقيل له : يا أمير المؤمنين ، أتقف لهذه العجوز هذا الوقوف ؟ فقال : والله لو حبستني من أول النهار إلى آخره لا زلت إلا للصلاة المكتوبة ، أتدرون من هذه العجوز ؟ هي خولة بنت ثعلبة سمع الله قولها من فوق سبع سموات ، أيسمع رب العالمين قولها ولا يسمعه عمر ؟ (قرطبي

ஒரு முறை ஹள்ரத் உமர் ரலி அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் தன் சீடர்களோடு நகர் வளம் வந்து கொண்டிருந்தார்கள்.இடையில் ஒரு மூதாட்டி குறிக்கிட்டு உமர் ரலி அவர்களுக்கு வெகு நேரம் உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.உமர் ரலி அவர்களும் அதை பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதனைக் கண்ணுற்ற சீடர்கள், இந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்டு ஒரு ஜனாதிபதியான நீங்கள் இவ்வளவு நேரம் நிற்க வேண்டுமா என்று கேட்டார்கள்.அப்போது உமர் ரலி அவர்கள் இடையில் தொழுகை நேரம் மட்டும் இல்லையெனில் அந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்க நான் இரவு வரை கூட நின்றிருப்பேன். அவர்கள் யார் தெரியுமா ? கவ்லா பின் ஸஃலபா. படைத்த அல்லாஹ்வே அவர்களின் சொல்லைக் கேட்டான்.இந்த உமர் கேட்க மாட்டாரா என்று கூறினார்கள்.

قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ ‌ۖ
 وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ ۢ بَصِيْرٌ‏ 

தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآٮِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ‌ؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـىِْٔ وَلَدْنَهُمْ‌ؕ وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا‌ؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ‏ 

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன்.

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّا‌ ؕ ذٰ لِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ‌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 

தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّاؕ فَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّيْنَ مِسْكِيْنًا‌ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِیْمٌ‏ 

(அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது. இவை அல்லாஹ்வின் வரம்புகள். (அவனை) மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

وتذكر كتب التفاسير بخصوص سبب نزول هذه الآية الكريمة، أن خولة بنت ثعلبة زوجة أوس بن الصامترضي الله عنهما، كان بينها وبين زوجها ما يكون بين الرجل وزوجته من خلاف. وقد كان زوجها رجلاً سريع الغضب، فلما كان بينهما ما كان، حلف أن لا يقربها، وقال لها: أنت علي كأمي. وكانت هذه العادة من عادات الجاهلية التي حرمها الإسلام، لكن بقيت رواسبها عند البعض.
ثم إن أوسًا بعد ما كان منه ما كان، أراد أن يقرب زوجته فامتنعت منه، ورفضت أن تستجيب له، حتى يأتي رسول الله صلى الله عليه وسلم ويخبره بما كان، لكن أوسًاتحرج منعه الحياء أن يذكر لرسول الله ما جرى منه؛ فذهبت خولة بنفسها إلى رسول الله صلى الله عليه وسلم، وأخبرته بالذي حدث، فقال لها رسول الله صلى الله عليه وسلم: (ما أراك إلا قد حرمت عليه) !! فأخبرت رسول الله صلى الله عليه وسلم أن زوجها لم يرد بقوله ذلك طلاقًا ولا فراقًا، فأجابها رسول الله ثانية: (ما أراك إلا قد حرمت عليه)، فلما سمعت جواب رسول الله التجأت إلى الله قائلة: اللهم إليك أشكو حالي وفقري.
ثم أخذت تحاور رسول الله لتقنعه أنها تحب زوجها، ولا تريد فراقه، وأنه يبادلها نفس المشاعر، فما كان من رسول الله إلا أن أجابها ثالثة: (ما أراك إلا قد حرمت عليه)؛ ومع هذا، فإنها لم تيأس من رحمة الله، ومن ثم أخذت من جديد تحاور رسول الله صلى الله عليه وسلم، عن طريق التركيز على الجانب العاطفي والإنساني، لعلها تقنعه بإيجاد مخرج للمأزق الذي هي فيه، فتقول له: فإني وحيدة، ليس لي أهل سواه...إن لي صبية صغارًا، إن ضممتهم إليه ضاعوا، وإن ضممتهم إلي جاعوا، فلا يجد لها رسول الله جوابًا إلا أن يقول لها: (لا أراك إلا قد حرمت)، فلما لم تجد لها جوابًا عند رسول الله، التجأت إلى الله قائلة: اللهم أنزل على لسان نبيك ما يقضي لي في أمري، فلم تكد تنتهي من دعائها، حتى أنزل الله على نبيه قوله سبحانه: {قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير}.
ثم إن رسول الله صلى الله عليه وسلم بعد أن أنزل الله عليه قرآنًا، بين فيه حكم هذه الواقعة، دعا زوجها أوسًا ، وسأله أن يحرر عبدًا كفارة عن فعله، فأخبر أوس رسول صلى الله عليه وسلم أنه لا طاقة له بذلك، فسأله رسول الله إن كان يستطيع أن يصوم شهرين، فأجابه أنه لا يستطيع؛ لأنه رجل قد تقدم به العمر، والصيام يضعفه، حينئذ طلب منه رسول صلى الله عليه وسلم أن يتصدق على ستين مسكينًا، فأخبره أنه لا يملك من المال ما يتصدق به، فلما رأى عليه الصلاة والسلام من حاله ما رأى، تصدق عنه، وطلب منه أن يعود إلى زوجته.

கவ்லா பின்த் ஸலபா (ரலி) என்ற பெண்மணிக்கும் அவரது கணவர் அவ்ஸ் இப்னு ஸாமித் (ரலி) அவர்களுக்கும் ஒரு சமயம் சின்ன சண்டை ஏற்பட்டது. மிகவும் கோபக்காரராக இருந்த அவ்ஸ் கோபத்தில் தம் மனைவியைப் பார்த்து “நீ என் மீது என் தாயின் முதுகைப் போல என்று கூறி விட்டார்.

(இஸ்லாம் வரும் முன்பாக அரபுலகத்தில் ஒருவர் தன் மனைவியை தனக்கு மஹ்ரமான ஒரு பெண்ணோடு இவ்வாறு ஒப்பிட்டு கூறி விட்டால் அதன் பின்னர் அந்த இருவருக்கும் மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விடும். இருவரும் அதன் பிறகு சேர்ந்து வாழ முடியாது அதற்கு ளிஹார் என்று சொல்லப்படும்)

சிறிது நாட்கள் கழித்து தான் சொன்னது தவறு என்றுணர்ந்து மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பி மனைவியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதற்கு கவ்லா ரலி அவர்கள், நான் நபி {ஸல்} அவர்களிடம் சென்று இதற்கான விளக்கத்தை தெரிந்து வருகிறேன் என்று கூறி நபி {ஸல்} அவர்களிடம் வந்து கேட்ட போது நபி {ஸல்} அவர்கள், உங்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விட்டது. எனவே நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.

அதற்கு அந்த பெண்மனி, யாரசூலல்லாஹ்! என் கணவர் கோபத்தில் சொன்ன வார்த்தை.அதனைக் கொண்டு அவர் தலாக்கை நாட வில்லை என்று கூறிய போது  நபி {ஸல்} அவர்கள், எப்படியிருந்தாலும் நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள். அந்த பெண்மனி போய் விடுகிறார்கள்.

மறுபடியும் இரண்டாவது முறை வந்து சேர்ந்து வாழ்வதற்கான கோரிக்கையை வைத்தார்.என் கணவர் தலாக் விட வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்ல வில்லை. ஏதோ கோபத்தில் சொல்லி விட்டார் என்று சொல்லிப் பார்த்தார்.அப்போதும் நபி {ஸல்} அவர்கள் முந்தைய பதிலையே சொன்னார்கள். இதற்கிடையில் அந்த பெண்மனி அல்லாஹ் விடமும் தன் பிரச்சனைக்கான தீர்வை நாடி துஆ செய்து கொண்டிருந்தார்.

கொஞ்ச நாள் சென்ற பிறகு மறுபடியும் அந்த பெண்மனி வந்து யாரசூலல்லாஹ்! நான் வயதான பெண்மனி.எனக்கு ஆதரவாக என் குடும்பத்தில் யாருமில்லை. என் கணவரும் வயதானவர் அவருக்கும் என்னை விட்டால் ஆதரவில்லை.

எனக்கு சின்ன பிள்ளைகளும் இருக்கிறார்கள்.அவர்களையும் கவனிக்க வேண்டும்.அந்த பிள்ளைகளை என் கணவரோடு விட்டால் அவர்கள் வீணாகி விடுவார்கள். என்னோடு வைத்துக் கொண்டால் பசியால் வாடிப் போவார்கள்.

எனவே இக்கட்டான சூழ்நிலையிலே நான் இருக்கிறேன் என்று அந்த பெண்மனி கூறினார்கள். அப்போதும் நபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இதற்கான எந்த உத்தரவும் வர வில்லை. அதனால் நீங்கள் சேர்ந்து வாழ வழியில்லை என்று கூறினார்கள்.

இப்படி மூன்று முறை கேட்டும் தன் இயலாமையை வெளிப்படுத்தியும் எந்த பலனும் ஏற்பட வில்லை. இருந்தாலும் அவர்கள் மனம் தளராத அவர் அல்லாஹ்விடம் தன் கோரிக்கைத் தொடர்ந்தார்கள்.

என் பிரச்சனைக்கான ஒரு தீர்வை உன் நபியின் நாவின் வழியாக எனக்கு ஏற்படுத்து என்று அல்லாஹ்விடம் கேட்டு அழுதார்கள். கெஞ்சி கண்ணீர் வடித்தார்கள்.

அவர்களின் கனத்த அழு குரல் அல்லாஹ்வின் அர்ஷின் கதவைத் தட்டியது. அல்லாஹ்வின் கவனத்தை ஈர்த்தது. அல்லாஹ் மேல்கூறிய வசனங்களை இறக்கியருளினான்.

ஒரு அடிமையை உரிமை விடுதல், அதற்கு இயலாதவர்கள் 60 நாட்கள் நோன்பு நோற்றல், அதற்கும் இயலாதவர்கள் 60 ஏழைகளுக்கு உணவளித்தல் இந்த பரிகாரங்களில் ஒன்றை செய்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்ற வசனங்களை இறக்கி வைத்தான்.                                       ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )

உம்மு ஸுலைம் ரலி

  وَالَّذِيْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِيْمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَيْهِمْ وَلَا يَجِدُوْنَ فِىْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ؕ
 وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‌ۚ‏ 

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர்.

அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
 
عن أبي هريرة أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فاستضافه فبعث إلى نسائه هل عندكن من شيء؟ فقلن ما معناه: إلا الماء فقال رسول الله صلى الله عليه وسلم من يضم أو يضيف هذا؟ فقال رجل من الأنصار: أنا يا رسول الله فانطلق به إلى امرأته فقال: أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم فقالت: ما عندنا إلا قوت الصبيان
قال: هيئي طعامك وأصبحي سراجك ونومي صبيانك، إذا أرداوا عشاءً، فهيأت طعامها وأصبحت سراجها ونوّمت صبيانها ثم قامت كأنها تصلح سراجها فأطفأته، فجعلا يريانه أنهما يأكلان فباتا طاويين، فلما أصبح غدا إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: ضحك الله الليلة أو عجب من فعالكما فأنزل الله عز وجل: "ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة، ومن يوق شح نفسه فأولئك هم المفلحون"

ஒருமுறை நபி(ஸல்) அவர்களின் சமூகத்துக்கு ஒரு புதிய விருந்தாளி வந்தார். இவரை அபூதல்ஹா(ரலி) அவர்கள் தனது வீட்டுக்கு விருந்தளிக்க அழைத்து வந்தார்கள்.

மனைவியிடம் ஏதேனும் உணவு உண்டா எனக்கேட்க, குழந்தைகளுக்கு மட்டும்தான் உணவுள்ளது, இருந்தாலும் விருந்தாளியை கெளரவிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் குழந்தைகளை எப்படியேனும் சமாளித்து தூங்க வைத்துவிடுகிறேன், விருந்தாளி மட்டும் உண்டு பசியாறட்டும் என்று ஆலோசனை கூறினார்கள். பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு இவர்கள் தமக்குள் செய்த இந்த இரகசிய தியாகம் பற்றி மேற்கூறிய அல்குர்ஆன் வசனம் அருளப்பட்டது. ( நூல்: தஃப்ஸீர் அல் பக்வீ )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனது கவனத்தை ஈர்க்கும் மேன்மக்களாக நம்மை ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Saturday 25 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 22, இறுதிப் பத்து நாட்களை அமல்களால் அலங்கரிப்போம் – 2 !!!


ரமழான் சிந்தனை, தொடர் – 22,
இறுதிப் பத்து நாட்களை அமல்களால் அலங்கரிப்போம் – 2 !!!

 



21 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 22 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

புனிதம் மிக்க ரமலான் மாதத்தின் நிறைவுப் பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நரக விடுதலையைப் பெற்றுத் தருகிற இறுதிப்பத்தில் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தினரையும், நம் சார்ந்தவர்களையும், உலக முஸ்லிம்கள் அனைவரையும் ரமலானின் தூய பரக்கத் கொண்டு நரகத்தின் வாடையைக் கூட நுகர விடாமல் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்!

நேற்றைய அமர்வில் இரவில் நின்று தொழுவதால் கிடைக்கிற நன்மைகளை, அல்லாஹ் வழங்குகிற கூலிகளை, மாநபி {ஸல்} அவர்கள் கூறிய சோபனங்களைப் பேசினோம், கேட்டோம்.

இன்றைய அமர்வில் அபரிமிதமான நன்மைகளை பெற்றுத்தரும் செயல்களாகவும், இறை உவப்பை பெற்றுத்தரும் அமலாகவும் அல்லாஹ்வும், அவனுடைய தூதர் {ஸல்} அவர்களும் அடையாளப் படுத்தி இருக்கிற சிறிய, சிறிய அமல்களை நம்முடைய வாழ்வில் எல்லா காலங்களிலும் இடம் பெறச் செய்து, அமல்களால் அழகுபடுத்துவோம்.

இன்ஷாஅல்லாஹ்…. ரமலானுக்குப் பிறகும் தொடர்ந்து வாழ்வின் இறுதி வரை கடைபிடித்து வருவோம்.

அல்லாஹ் தொடர்ந்து செய்து வருவதற்கு நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீல்!!!

அபரிமிதமான நன்மைகளை அள்ளித்தரும் உபரியான வணக்கங்கள்

1. சில சூராக்களும், சில வசனங்களும்.. அதன் சிறப்பும்….

قال صلى الله عليه وسلم
من قرأ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ حتى يختمها عشر مرات بني الله له قصرًا في الجنة
فقال عمر رضي الله عنه: إذن نستكثر قصورًا يا رسول الله، فقال: الله أكثر وأطيب
.السلسلة الصحيحة 1/589

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அல் இக்லாஸ் அத்தியாயத்தை தினமும் பத்து தடவை ஓதுகின்றாரோ, அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஓர் மாளிகையை கட்டித்தருகின்றான். அப்போது, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால், நாங்கள் எங்களுக்காக அதிகமாக கோட்டைகளை கட்டிக்கொள்கிறோம்என்றார்கள். அதற்கு, நபி {ஸல்} அவர்கள்அல்லாஹ் அதிகரித்துத் தர காத்திருக்கின்றான். மேலும், அவன் தூய்மையானவன்என்று பதில் கூறினார்கள்.  ( நூல்: அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா லில் அல்பானீ )

قال صلى الله عليه وسلم
                       من قرأ سورة الكهف في الجمعة، أضاء له من النور ما بين
 الجمعتين
صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் ஜும்ஆ நாளில் அல்கஹ்ஃப் அத்தியாயம் ஓதுகின்றாரோ அடுத்த ஜும்ஆ நாள் வரை அல்லாஹ் அவரை ஒளியால் அரவணைத்துக் கொள்கின்றான்”.          ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من حفظ عشر آيات من أول سورة الكهف عُصم من فتنة الدجال
صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை மனனமிட்டு இருக்கின்றாரோ அவரை அல்லாஹ் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பான்”.                    ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة، لم يمنعه من دخول الجنة إلا أن يموت
صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் ஆயத்துல் குர்ஸீயை கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் ஓதுவாரோ, அவர் சுவனத்தில் நுழைவதற்கு மரணத்தைத் தவிர வேறெதுவும் தடையாக இருக்காது”. ( நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
إذا أخذت مضجعك من الليل، فاقرأ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) , ثم نم على خاتمتها فإنها براءة من الشرك
.صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் ஒரு நபித்தோழரிடம்நீர் உறங்குவதற்காக உம் படுக்கைக்குச் செல்வீரேயானால் அல் காஃபிரூன் அத்தியாயத்தை ஓதிய நிலையில் உறங்குவீராக! ஏனெனில், இணைவைப்பிலிருந்து உம்மை அது பாதுகாக்கும்என்று கூறினார்கள்.                                      ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

2. சில துஆக்களும், சில தஸ்பீஹ்களும்அதன் சிறப்பும்

قال صلى الله عليه وسلم
من توضأ فأحسن الوضوء، ثم قال: "أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، اللهم أجعلني من التوابين، واجعلني من المتطهرين، فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء
.صحيح الجامع

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அழகிய முறையில் உளூ செய்து விட்டு, வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், நிச்சயமாக, முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்.

யாஅல்லாஹ்! என்னை பாவமன்னிப்புக் கோரியவர்களில் ஒருவராகவும், பரிசுத்தவான்களில் ஒருவராகவும் ஆக்குவாயாக!” என்று ஓதுவாரானால் அவருக்காக சுவனத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன. அவர் நாடிய வாசல் வழியாக சுவனத்தில் நுழைந்து கொள்ளலாம்”.                ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

بينما نحن نصلي مع رسول الله ، إذ قال رجل من القوم: الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً،فقال رسول الله من القائل كلمة كذا وكذا؟، فقال رجل من القوم: أنا يا رسول الله، قال: «عجبت لها، فتحت لها أبواب السماء
 قال ابن عمر فما تركتهن منذ
 سمعت رسول الله يقول ذلك
صحيح مسلم

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது கூட்டத்தில் ஒருவர் الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلاً “” என்றார். அப்போது, நபி {ஸல்} அவர்கள்இன்னின்னவாறு கூறியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது, ”கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நான் தான் இன்னின்னவாறு கூறினேன்என்றார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்என்ன ஓர் ஆச்சர்யம்! அந்த வார்த்தைகளை நீங்கள் கூறிய போது வானத்தின் அத்தனை வாசல்களும் திறக்கப்பட்டனஎன்றார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்படிக் கூறியதைக் கேட்டதிலிருந்து ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நான் ஓதிவருவதை இதுவரை விட்டதில்லை”.         ( நூல்: முஸ்லிம் )

قال صلى الله عليه وسلم من قال
سبحان الله العظيم وبحمده، غُرست له نخلة في الجنة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “سبحان الله العظيم وبحمده،என்று சொல்வாரோ சுவனத்தில் ஒரு மரம் நடப்படுகின்றது”.

                              ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉஸ்ஸஃகீர் )

قال صلى الله عليه وسلم
إنَّ الله تعالى اصطفى من الكلام أربعًا: سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، فمن قال: سبحان الله كتبت له عشرون حسنة، وحطت عنه عشرون سيئة، ومن قال: الله أكبر مثل ذلك. ومن قال: لا إله إلا الله مثل ذلك. ومن قال: الحمد لله رب العالمين، من قبل نفسه كتبت له ثلاثون حسنة وحطَّت عنه ثلاثون خطيئة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நான்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்துள்ளான். அவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு ஆகியவை ஆகும். யார்  سبحان الله என்று கூறுவாரோ அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றது. பத்து பாவங்கள் அழிக்கப்படுகின்றது. இது போன்றே الله أكبر கூறினாலும், இது போன்றே لا إله إلا الله கூறினாலும் வழங்கப்படுகின்றது.

எவர் الحمد لله رب العالمين என்று கூறுவாரோ முப்பது நன்மைகள் எழுதப் படுகின்றது. முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”.     ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من صلَّى عليَّ حين يُصبح عشرًا، وحين يُمسي عشرًا، أدركته شفاعتي يوم القيامة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்: “எவர் தினமும் காலை, மற்றும் மாலை நேரங்களில் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகின்றாரோ அவர் என் ஷஃபாஅத்தைப் பெற்றுக் கொள்வார்”.                ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من قال رضيت بالله رباً وبالإسلام دينًا، وبمحمد نبيًا، وجبت له الجنة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் தினமும் رضيت بالله رباً وبالإسلام دينًا، وبمحمد نبيًا சொல்கின்றாரோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது”.

3. சில தொழுகைகளும்.. அதன் சிறப்புக்களும்

قال صلى الله عليه وسلم
من صلَّى في اليوم والليلة اثني عشرة ركعة تطوعًا، بنى الله له بيتًا في الجنة
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்: ”எவர் தினந்தோரும் விரும்பி, பேணுதலாக 12 ரக்அத் தொழுது வருகின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுகின்றான்”.                          ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
من حافظ على أربع ركعات قبل الظهر، وأربع بعدها حُرم على النار
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகளும், பின்னர் நான்கு ரக்அத்துகளும் பேணுதலாக தொழுது வருகின்றாரோ, அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடுகின்றது”.  ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
رحم الله امرءًا صلى قبل العصر أربعًا
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத் (சுன்னத்) தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள் பாளிப்பானாக!”

قال صلى الله عليه وسلم
من صلى الفجر في جماعة، ثم قعد يذكر الله حتى تطلع الشمس، ثم صلى ركعتين، كانت له كأجر حجة وعمرة تامة تامة تامة
.صحيح الجامع وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது விட்டு, அதே இடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை திக்ரும் செய்து, சூரியன் உதயமாகிய பின்னர் இரண்டு ரக்அத் தொழுவாரோ அவருக்கு பரிபூரணமான ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மை வழங்கப்படுகின்றது”. ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ )

قال صلى الله عليه وسلم
أفضل الصلوات عند الله صلاة الصبح يوم الجمعة في جماعة
.السلسلة الصحيحة 4/1566

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த தொழுகை ஜும்ஆ தினத்தன்று சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவது தான்”.                                       ( நூல்: ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா )

قال صلى الله عليه وسلم
من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى، كُتب له براءتان: براءة من النار، وبراءة من النفاق
.صحيح الجامع الصغير وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவர் அல்லாஹ்விற்காக நாற்பது நாட்கள் முதல் தக்பீருடன் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வாரோ அல்லாஹ் அவருக்கு இரண்டு விடுதலைப் பத்திரங்களை வழங்குகின்றான். ஒன்று, நயவஞ்சகத்தன்மையில் இருந்தும், மற்றொன்று நரகில் இருந்தும் என்று”.

قال صلى الله عليه وسلم
إنَّ الله وملائكته يصلون على الذين يصلون الصفوف، ومن سد فرجة بني الله له بيتًا في الجنة ورفعه بها درجة
.السلسلة الصحيحة 4/1892

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஸஃப்ஃபில் சேர்ந்து நின்று தொழுவோரின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத்து சொல்கின்றார்கள். எவர் ஸஃப்ஃபில் காணப்படும் இடைவெளியை சரி செய்கின்றாரோ, அல்லது அந்த இடைவெளியை நிரப்புகின்றாரோ அல்லாஹ் சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான். மேலும், சுவனத்தில் ஓர் அந்தஸ்தை உயர்த்துகின்றான்”.

قال صلى الله عليه وسلم
ما من عبد يسجد لله سجدة إلا كتب له بها حسنة، وحط بها سيئة، ورفع له بها درجة، فاستكثروا من السجود
. صحيح الجامع وزيادته

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்விற்காக ஓர் அடியான் ஒரு ஸஜ்தா செய்கிறான் என்றால், அல்லாஹ் அந்த அடியானுக்கு ஓர் நன்மையை எழுதுகின்றான். ஒரு பாவத்தை அழிக்கின்றான். ஒரு அந்தஸ்தை உயர்த்துகின்றான். எனவே, நீங்கள் அதிகமாக ஸுஜூது செய்யுங்கள்”.         ( ஸஹீஹ் அல் ஜாமிஉ )

அமல் சிறியதாயினும்அல்லாஹ் வழங்கும் அந்தஸ்து அளப்பெரியது!..

أخبرنا أحمد قال: حدثنا مسلمة بن القاسم، حدثنا جعفر بن محمد بن الحسن الأصبهاني بسيراف، قال: حدثنا حذيفة بن غياث بن حسان العسكري، قال: حدثنا عثمان بن الهيثم، قال: حدثنا محبوب بن هلال المدني عن ابن أبي ميمونة، عن أنس بن مالك، قال: نزل جبريل على النبي صلى الله عليه وسلم فقال: يا محمد، مات معاوية بن معاوية المزني، أفتحب أن تصلي عليه؟ قال: " نعم " فضرب بجناحه الأرض، فلم يبق شجرة ولا أكمة إلا تضعضعت، ورفع إليه سريره، حتى نظر إليه، فصلى عليه وخلفه صفان من الملائكة في كل صف سبعون ألف ملك، فقال النبي صلى الله عليه وسلم لجبريل عليه السلام: " يا جبريل، بم نال هذه المنزلة من الله؟ قال: بحبه قل هو الله أحد، وقراءته إياها جائياً وذاهباً وقائماً وقاعداً وعلى كل حال " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு தபூக்கிலே இருந்த தருணம் அது..

என்றைக்கும் இல்லாத அளவு சூரியனின் ஒளி வெண்மையாகவும், பிரகாசமாகவும் இருந்தது.

அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தருகின்றார்கள்.

நபிகள் {ஸல்} அவர்கள் ஆச்சர்யம் மேலிட ஜிப்ரயீலே! என்றைக்கும் இல்லாத அளவிற்கு சூரியனின் பிரகாசம் இன்று மிகவும் வெண்மையாய் அமைந்திருக்கின்றதே காரணம் தான் என்னவோ?” என ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இன்று தங்களின் தோழர் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யி (ரலி) மதீனாவில் இறந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹ்..)

அவருக்காக நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்த விரும்புகின்றீர்களா?” என அண்ணலாரிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கேட்டார்கள்.

ஆம் என நபிகளார் பதில் அளித்ததும், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தங்களது இறக்கையை பூமியில் அடித்தார்கள்.

தபூக்கில் இருந்தவாரே அண்ணலார் மக்காவையும் மதீனாவையும் கண்டார்கள்.

பின்பு, அண்ணலார் தோழர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி ஜனாஸா தொழுகைக்குத் தயாராகுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழவைத்தார்கள். நபிகளாரோடு ஜிப்ரயீல் (அலை) அவர்களும், இரண்டு ஸஃப் நிறைய வானவர்களும், (ஒவ்வொரு ஸஃப்ஃபிலும் எழுபதினாயிரம் வானவர்கள் நின்றனர்), நபித்தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

தொழுது முடித்த பின்னர், ஜிப்ரயீலை நோக்கிய நபிகளார் ஜிப்ரயீலே! எதன் காரணத்தினால் முஆவியா இப்னு முஆவியத்துல் முஸனிய்யீ இந்த உயர் அந்தஸ்தை அடைந்தார்எனக் கேட்டார்கள்.

அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் உலகில் வாழும் காலங்களில் அவர் அல் இஃக்லாஸ் அத்தியாயத்தை மிகவும் நேசித்தார்; அமர்ந்த நிலையில், நின்ற நிலையில், பசித்திருந்த நிலையில், படுத்த நிலையில், நடந்த நிலையில் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை ஓதியும் வந்தார்ஆதலால் அல்லாஹ் அவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கௌரவித்துள்ளான்என பதில் கூறினார்கள்.

இந்தச் செய்தி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வாயிலாக முஸ்னத் அபூ யஃலா வில் 4268 வது ஹதீஸாகவும், இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்கள் சுனனில் பாகம்: 4, பக்கம்:50 லும், அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் முஃஜமுல் கபீரில் 7537 வது ஹதீஸாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அல்லாமா இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் எனும் நூலில் மேற்கண்ட மூன்று அறிவிப்புக்களையும் பதிவு செய்து விட்டு இந்தச் செய்தி வலுவான அறிவிப்புத் தொடர்களின் மூலம் இடம் பெற வில்லையென்றாலும் இது முன்கர் வகையைச் சார்ந்த ஹதீஸ் அல்ல என்றும் சான்று பகர்கின்றார்கள்.

    ( நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:364,365. மற்றும் உஸ்துல் ஃகாபா )

حدثنا إسحاق بن نصر حدثنا أبو أسامة عن أبي حيان عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دف نعليك بين يدي في الجنة قال ما عملت عملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي قال أبو عبد الله دف نعليك يعني تحريك



அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் ஃபஜ்ருடைய தொழுகைக்காக நாங்கள் காத்திருந்த போது, நபி {ஸல்} அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அருகே அழைத்து, “பிலாலே! நான் சுவனத்திலே நுழைந்தேன், ஆனால், அங்கு எனக்கு முன்னாடியே யாரோ ஒருவர் நடந்து போகிற காலடிச் சப்தத்தை கேட்டேன்.

அப்போது, என் அருகே இருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம்இந்த காலடிச் சப்தத்திற்கு உரியவர் யார்?” என்று கேட்டேன். “பிலால் (ரலி) அவர்களுடைய காலடிச் சப்தம் தான்என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

இப்போது, மீண்டும் பிலால் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள்இஸ்லாத்தில் எந்த அமலை ஆதரவு வைத்து இந்த சீரிய சிறப்பை நீர் அடைந்து கொண்டீர்!” எனக் கேட்டார்கள்.

அதற்கு, பிலால் (ரலி) அவர்கள்இரவு, பகல் எந்த நேரமானாலும் சரி நான் உளூவுடனே இருப்பேன். எந்த நேரத்தில் உளூ முறிந்தாலும் உடனடியாக உளூ செய்து விடுவேன். பின்னர், உடனடியாக இரண்டு ரக்அத் தொழுது விடுவேன். இதை நான் என் மீது கடமையாகவே ஆக்கிக் கொண்டேன்என பதில் கூறினார்கள்.
                                          ( நூல்: புகாரீ, அல் இஸ்தீஆப் )

وذكر عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: " نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا قالوا صوت حارثة بن النعمان " . فقال رسول الله صلى الله عليه وسلم: " كذلك البر كذلك البر " . وكان أبر الناس بأمه.

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம்ஆயிஷாவே! எனக்கு உறக்கத்தில் சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின் ஓர் பகுதியிலிருந்து ஒருவர் அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக் கேட்டேன்.

அப்போது, நான்யார் இவர்? இங்கே குர்ஆன் ஓதுகின்றாரே? என்று ஆச்சர்யத்தோடு வினவினேன்.

அப்போது, என்னிடம்இந்த சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டதுஎன்று கூறிய அண்ணலார் தொடர்ந்து, “ நன்மை செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء " .


இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி வாழ்ந்தார்கள்.

தான் தொழுகிற இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை வைத்திருப்பார்கள்.

வீட்டு வாசலில் எவராவது வந்து யாசகம் கேட்டால், கையில் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில் கொடுத்து விட்டு மீண்டும் தாங்கள் அமரும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.

ஒருவர் அல்ல இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.

ஹாரிஸா (ரலி) அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், சிரமங்களையும் பார்த்து விட்டு அவர்களின் குடும்பத்தினர்ஓர் யாசகருக்கு இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு கொடுப்போமே?” என்று கூறினார்கள்.

அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள்ஏழை எளியோரை தேடிச் சென்று, அவர்களின் கரங்களில் கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.
ஆதலால், தான் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்என்றார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் லி இப்னி அப்தில் பர் )

ஏழை, எளியோரை உதாசீனப்படுத்துவதிலும், பெற்றெடுத்த தாய், தந்தையரை கொடுமை புரிவதிலும் மூழ்கிப் போயிருக்கிற நம் கால சமூக மக்களுக்கான நிறைவான ஓர் படிப்பினை தான் ஹாரிஸா (ரலி) அவர்களின் வரலாறு.

மனித வாழ்வின் அனைத்துச் செயல்களும் அலசப்பட்டு, எடைபோடப்படும் மறுமை நாளில் நல்லறங்களின் எடை அதிகக் கனமுள்ளதாகக் காணப்பட வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கிற எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் எந்த ஒரு அமலையும் குறைத்து மதிப்பிட மாட்டார்.

நமது ( ஃபர்ள் ) கட்டாய வணக்கங்களில் ஏற்படுகிற குறைகளையும், வாழ்வின் கடமைகளில் நிகழ்கிற குறைகளையும் நிவர்த்தி செய்து, ரஹ்மானின் நெருக்கத்தை சம்பூர்ணமாக்கித் தருகிற ஆற்றலும் வலிமையும், நாம் அதிகம் கண்டு கொள்ளாத, அல்லது லட்சியப்படுத்தாத இது போன்ற சிறிய, உபரியான வணக்கங்களுக்கே இருக்கின்றது.

ரமலான் காலத்தில் இவைகளை மிகக் கவனத்தோடு துவங்கி, நம் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் முழுமையாக இடம் பெறச் செய்வோம்.

எனவே, நன்மைகளை அள்ளித்தருகிற, இறை உவப்பைப் பெற்றுத்தருகிற எல்லா நன்மையான காரியங்களையும் முனைப்போடு செய்து, ஈமானையும், நன்மைகளின் தராசையும் உயர்த்துவோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை நிற்பானாக! ஆமீன்! ஆமீன்!!
                யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!