Wednesday, 15 October 2014

நீதிக்கு சான்று பகர்வோம்!



நீதிக்கு சான்று பகர்வோம்!





கடந்த சில தினங்களாக நீதி பரிபாலனம் குறித்தும், நீதிமன்றங்கள் குறித்தும், நியாய அநியாயங்கள் குறித்தும் பரவலாக மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்ல தீர்ப்புக்களை கேட்கவே முடியாது எனும் சூழ்நிலையில் கொடுக்கப்படும் சில அரிய தீர்ப்புகள் மக்களின் மனதில் நீங்காமல் நிலை பெற்று விடுகின்றனஎன்பதை இது உணர்த்துகின்றது.

இந்த தருணத்தில் இஸ்லாத்தில் நீதிக்கான மதிப்பீடு என்ன? நீதி பரிபாலனம்  குறித்து இஸ்லாத்தின் வரையறை என்ன? என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு கடமைப் பட்டுள்ளோம்.

நபிமார்களை அனுப்பியதன் நோக்கம் குறித்து பேசும் போது

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ

நாம் நம் தூதர்களைத் தெளிவான சான்றுகளுடனும், வழிகாட்டுதல்களுடனும் அனுப்பினோம்; மேலும், அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும், துலாக்கோலையும் இறக்கினோம். மக்களுக்கு மத்தியில் நீதியை நிலை நாட்டும் பொருட்டு!”

                                                        ( அல்குர்ஆன்:57:25 )

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர்ஏகத்துவ அழைப்போடு நீதத்தையும் நடைமுறைப்படுத்த முயல வேண்டும் என்பதும், நீதி நிலைபெறுவதற்குத் தேவையான வலிமையைத் திரட்ட வேண்டும் என்பதும், அந்த நீதியை மறுத்திடுவோருக்கும், குலைத்திடுவோருக்கும் தண்டனை அளித்திட வேண்டும் என்பதும், நபிமார்களின் அழைப்புப் பணியில் அடங்கியவை ஆகும்.” என்று கூறுகின்றார்கள்.
தவறிழைப்பதை பாவம் என்றும், அவைகளுக்கு ஏற்ப சில போது உலகிலும், சில போது மறுமையிலும், சில போது ஈருலகிலும் தண்டனை உண்டு என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

ஓர் அடியான் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் அல்லாஹ்விற்கு மாறுபட்டு நீதி தவறிடும் பட்சத்தில் உடனடியாக அதற்கு பரிகாரம் தேடச் சொல்கிறது.

ஓர் அடியான் அல்லாஹ்வின் அடியார்களோடு தொடர்புடைய விஷயங்களில் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி, நீதி தவறி நடந்திடும் பட்சத்தில் அதை பெரும் பாவமாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதுகின்றது.

பெரும்பாலும், அல்லாஹ் அல்குர்ஆனின் மூலம் பல இடங்களில் சக மனிதர்களுடனான விவகாரங்களில் நீதி வழுவாமல் வாழுமாறு ஏவுகிறான்.

வாழ்க்கையின் முழு பகுதியிலும் நீதி

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى

திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தி வாழும் படியும், பிறருக்கு நலன் செய்து வாழும் படியும், உறவினர்களுக்கு ஈந்து வாழும் படியும் உங்களுக்கு ஏவுகிறான்.” (அல்குர் ஆன்:16:90)           

பேசுவதில் நீதி

وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا

இன்னும் பேசும் போது நீதியுடன் பேசுங்கள்! (அல்குர்ஆன்:6:152)

அளவை, நிறுவையில் நீதி

وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ

மேலும், அளவையிலும், நிறுவையிலும் நீதியைக் கடைப்பிடியுங்கள்!” (அல்குர்ஆன்: 6:152)

திருமண உறவில் நீதி

فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا

உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால், அவர்களிடையே நீதமாக நடந்திட இயலாது என நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமல் வாழ்வதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.”                        (அல்குர்ஆன்:4:3)

எழுத்தில் நீதி

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ

இறை நம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுக்கல், வாங்கல் மேற்கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கிடையே ஓர் எழுத்தாளர் நீதியோடு எழுத வேண்டும்.”                                           
                                                  
                                                          (அல்குர்ஆன்:2:282)

சமாதானத்தில் நீதி..

فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

அவர்கள் சமாதானத்தின் பால் திரும்பி விட்டால், அவர்களிடையே நீதியுடன் சமாதானம் செய்து வையுங்கள்! இன்னும், நீதி செலுத்துங்கள்! அல்லாஹ் நீதி செலுத்துபவர்களை நேசிக்கிறான்.”                               (அல்குர்ஆன்:49:9)

தீர்ப்பில் நீதி

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ

(முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அமானிதம்அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களின் விவகாரங்களில் தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள்!”                                                   (அல்குர்ஆன்:4:58)

ஆக, ஓர் இறை நம்பிக்கையாளனின் வாழ்வில் நீதி என்பது எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மேற்கூறிய இறைவசனங்களின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

எனவே, நேர்வழியில் நிலைத்திருக்க விரும்பும் ஓர் உண்மையான முஸ்லிம்  எந்தச் சூழ்நிலையிலும் நீதி பிறழ்ந்து வாழ மாட்டான்.

 நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

وقد روى ابن مَرْدُويه، من طريق العوفي، عن ابن عباس قال: إن نفرا من الأنصار غزوا مع رسول الله صلى الله عليه وسلم في بعض غزواته، فسرقت درع لأحدهم، فأظن بها رجل من الأنصار، فأتى صاحب الدرع رسول الله صلى الله عليه وسلم فقال: إن طُعْمةَ بن أُبَيْرق سرق درعي، فلما رأى السارق (2) ذلك عمد إليها فألقاها في بيت رجل بريء، وقال لنفر من عشيرته: إني غَيَّبْتُ الدرع وألقيتها في بيت فلان، وستوجد عنده. فانطلقوا إلى نبي الله صلى الله عليه وسلم ليلا فقالوا: يا نبي الله، إن صاحبنا بريء. وإن صاحب الدرع فلان، وقد أحطنا بذلك علما، فاعذُرْ صاحبنا على رءوس الناس وجادل عنه. فإنه إلا (3) يعصمه الله بك يهلك، فقام رسول الله صلى الله عليه وسلم فبرأه وعذرَه على رءوس الناس،

عن عكرمة قال : استودع رجل من الأنصار طعمة بن أبيرق مشربة له فيها درع فغاب فلما قدم الأنصاري فتح مشربته فلم يجد الدرع فسأل عنها طعمة بن أبيرق فرمى بها رجلا من اليهود يقال له زيد بن السمين فتعلق صاحب الدرع بطعمة في درعه فلما رأى ذلك قومه أتو النَّبِيّ صلى الله عليه وسلم فكلموه ليدرأ عنه فهم بذلك

وأخرج ابن المنذر عن الحسن أن رجلا على عهد رسول الله صلى الله عليه وسلم اختان درعا من حديد فلما خشي أن توجد عنده ألقاها في بيت جار له من اليهود وقال : تزعمون إني اختنت الدرع - فوالله - لقد انبئت أنها عند اليهودي فرفع ذلك إلى النَّبِيّ صلى الله عليه وسلم وجاء أصحابه يعذرونه فكأن النَّبِيّ صلى الله عليه وسلم عذره حين لم يجد عليه بينة ووجدوا الدرع في بيت اليهودي

ரிஃபாஆ இப்னு ஜைதுல் அவ்ஸீ (ரலி) எனும் நபித்தோழர் அன்ஸாரித் தோழர்களோடு ஓர் படைப்பிரிவில் போருக்குச் சென்றார்.

வழியில் ஓரிடத்தில் அவருடைய கேடயம் ஒன்று திருடப்பட்டது. அதை ளஃப்ரீ கோத்திரத்தைச் சார்ந்த துஃமத் இப்னு உபைரிக் என்ற அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் தான் திருடி இருக்க வேண்டுமென ரிஃபாஆ (ரலி) அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

படைப்பிரிவு மதீனா வந்ததும், முதல் வேளையாக நபிகளாரைச் சந்தித்த ரிஃபாஆ (ரலி) அவர்கள் தங்களது கேடயம் திருடு போனது குறித்தும், துஃமத் இப்னு உபைரிக் மீதான தமது வலுவான சந்தேகம் குறித்தும் விவரித்து விட்டு, தமக்கு இந்த விஷயத்தில் விசாரித்து நீதி வழங்குமாறு முறையிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ரிஃபாஆ (ரலி) அவர்கள் தொடுத்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட துஃமத் இப்னு உபைரிக், ஜைத் இப்னு ஸமீன் என்ற தமது பக்கத்து வீட்டு யூதரின் தோட்டத்தில் தாம் திருடிய கேடயத்தைத் தூக்கியெறிந்தார்.

பின்னர், தமது கோத்திரத்தார்களிடம் வந்து நடந்த விஷயங்களைக் கூறிவிட்டு, ”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த பொருள் எங்கே இருக்கிறது என்பதை அறிய வீடு வீடாக சோதனை மேற்கொள்வார்கள்.

அப்படி தேடும் முயற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் அந்தக் கேடயம் ஜைத் இப்னு ஸமீன் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்படும்.

நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், நான் குற்றமற்றவன் என்றும், ரிஃபாஆ (ரலி) என் மீது அவதூறு சுமத்துகிறார் என்றும் நபி {ஸல்} அவர்களிடம் கூறிவிட்டு, எங்களுக்கென்னவோ இந்த திருட்டை எங்கள் கோத்திரத்தைச் சார்ந்த துஃமத் இப்னு உபைரிக்கின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜைத் இப்னு ஸமீன் தான் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆகவே, அவர் வீட்டைச் சோதனை செய்தால் உண்மை தெரிந்து விடும் என்று கூறிவிடுங்கள்என்று தமது திட்டத்தைக் கூறினார்.

அங்கிருந்து விடைபெற்ற அவரது கோத்திரத்தார்கள், நேராக மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வருகை தந்துஅல்லாஹ்வின் தூதரே! எங்களின் கோத்திரத்தை சார்ந்த துஃமத் இப்னு உபைரிக் ஒரு நல்ல முஸ்லிம். மேலும், அவர் மீது சுமத்தப் பட்டிருக்கிற குற்றச்சாட்டை விட்டும் தூய்மையானவர்.

அந்தக் கேடயத்தை திருடியது அவர் இல்லை. அவரின் பக்கத்து வீட்டுக்காரரான ஜைத் இப்னு ஸமீன் தான் திருடினார். வேண்டுமானால் நீங்கள் விசாரித்துப் பாருங்கள்.

மேலும், எங்களது கோத்திரத்தார்கள் எவருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள். ஆனால், எங்கள் கோத்திரத்தாரின் மீது இப்போது களங்கம் ஏற்பட்டுள்ளது.

நீங்கள் தான் மக்களை அழைத்து, ஒன்று கூட்டி துஃமத் இப்னு உபைரிக் குற்றமற்றவர் என்று அறிவித்து எங்கள் கோத்திரத்தார்கள் மீது வீசப்பட்டிருக்கிற களங்கத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இந்தச் செய்தியைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்களை ஒன்று கூட்டி அமர வைத்து விட்டு, யூதரின் வீட்டில் இவர்கள் சொல்வது போன்று கேடயம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய சில தோழர்களை அனுப்பினார்கள்.

யூதரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட கேடயம் கண்டெடுக்கப்பட்டு நபி {ஸல்} அவர்களின் முன்னால் கொண்டுவரப்பட்டது.

உடனே, திரண்டிருந்த மக்களின் முன்பாக நின்று நபி {ஸல்} அவர்கள்துஃமத் இப்னு உபைரிக் நல்லவர், அவர் குற்றமற்றவர்என்று அறிவித்தார்கள்.

அந்த சபையில் ரிஃபாஆ (ரலி) அவர்களின் மாமா {தாயின் சகோதரர்} கதாதா இப்னு நுஃமான் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

நேராக ரிஃபாஆ (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, ரிஃபாஆ (ரலி) அவர்களைச் சந்தித்து மாநபி {ஸல்} அவர்களின் சபையில் நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் கூறினார்கள்.

فقال: الله المستعان.
அதைக் கேட்ட ரிஃபாஆ (ரலி) அவர்கள்நான் உண்மையையே கூறினேன்! இது விஷயத்தில் அல்லாஹ் எனக்கு பேருதவி செய்வான்எனக் கூறினார்கள்.

அப்போது, அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தின் 105 முதல் 109 வரையிலான வசனங்களை தொடர்ந்து இறக்கியருளினான்.

إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا

(நபியே! அல்லாஹ் உமக்கு அறிவித்துத் தந்த நேரிய வழியின்படி மக்களிடையே நீர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே உம்மீது இந்த திருக்குர்ஆனை சத்தியத்துடன் நாம் இறக்கிவைத்தோம். நீர் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு வாதாடுபவராய் இருக்க வேண்டாம்.

وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (106) وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنْفُسَهُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا (107) يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا

மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக! திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

தமக்குத்தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும், பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டோனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

அவர்கள் தம் இழிசெயல்களை மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு போதும் அல்லாஹ்விடம் இருந்து மறைக்க முடியாது. அவனோ, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக சதியாலோசனை செய்து கொண்டிருக்கும் போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கிற அனைத்துச் செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான்.”

இங்கே, அல்லாஹ் ஓர் நிரபராதி தண்டிக்கப்பட்டதை தவறென்கிறான். நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக வாதிடுவதை அல்லாஹ் தடுக்கின்றான்.

மேலும், பிறரின் மீது அநீதி இழைப்பது மாபெரும் குற்றமெனவும், நீதி நிலை நாட்டப்பட வேண்டுமெனவும் விவரிக்கின்றான்.

அல்லாஹ் இதை தம் நபியிடம் இரகசியமாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், மறுமை நாள் வரை அனுதினமும் ஆயிரமாயிரம் முறை வாசிக்கப்படுகிற குர்ஆனில் இதைப் பதிவு செய்திருப்பதால் நீதி என்பது எந்தளவு அல்லாஹ்விடத்திலே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்த்துகிறது.

இந்த இறைவசனங்களை இறக்கியருளி நிறைவு செய்கிற போது அல்லாஹ் தம் நபியை நோக்கி

هَا أَنْتُمْ هَؤُلَاءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَمَنْ يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَمْ مَنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا

சரி! இக்குற்றவாளிகளுக்காக உலக வாழ்க்கையில் நீங்கள் வாதாடிவிட்டீர்கள்! ஆனால், மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்?” என்று சற்று கோபமாகவே கேட்கிறான்.

               ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூர் )

ஆகவே, நீதி நிலை நாட்டப்படுவது முக்கியத்துவம் என்பதால் தான் ஒரு யூதருக்கு அநீதி இழைக்கப்பட்ட போதும் அல்லாஹ் நீதியின் மீதான நிலைப்பாட்டை தனது தூதருக்கு இறைவசனங்களை இறக்கியருளி நினைவூட்டுகின்றான்.

 நீதிக்கு முன் அனைவரும் சமமே.

لقي العباس يوماً, فقال له: يا عباس لقد سمعت رسول الله صلَّى الله عليه وسلَّم قبل موته يريد أن يزيد في المسجد، وإن دارك قريبة من المسجد، فاعطنا إيّاها نزدها فيه، وأقطع لك أوسع منها مع التعويض،

 فقال له العباس: لا أفعل، قال عمر: إذاً أغلبك عليها ، أنا صاحب السلطة ، فأصدر لها أمرَ استملاك، فأجابه العباس: ليس ذلك لك، فاجعل بيني وبينك من يقضي بالحق، فقال عمر: من تختار؟, قال العباس: حذيفة بن اليمان،

 وبدلاً أن يستدعي سيدنا عمر حذيفة إلى مجلسه، انتقل عمر والعباس إليه، لماذا؟ لأن القاضي يؤتى ولا يأتي، والعلم يؤتى ولا يأتي، هكذا الأدب،

 حذيفة الآن يمثل القضاء، وأحد الخصوم سيدنا عمر، خليفة المسلمين، وأمام حذيفة جلس عمر والعباس، وقصا عليه الخلاف الذي بينهما،

 فقال حذيفة: سمعت أن نبي الله داود عليه السلام أراد أن يزيد في بيت المقدس، فوجد بيتاً قريبـاً من المسجد، وكان هذا البيت ليتيم، فطلبه منه فأبى، فأراد داود أن يأخذه قهراً، فأوحى الله إليه أن أنزه البيوت عن الظلم هو بيتي، فعدل داود، وتركه لصاحبه

، فالعباس نظر إلى عمر، وقال: ألا تزال تريد أن تغلبني على ذلك؟، فقال له عمر: لا والله,

 فقال العباس: ومع هذا, فقد أعطيتك الدار تزيدها في مسجد رسول الله عليه الصلاة والسلام، أنا سوف أعطيها لك من عندي تبرعاً، أما أن تغلبني عليها فلا تستطيع، وحذيفة هو القاضي بيننا .

      உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களை சந்திக்க அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.

உரையாடலின் போது உமர் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நபி {ஸல்} அவர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும் போதே மஸ்ஜிதுன் நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள்.

ஆனால், அந்த விருப்பத்தை நிறைவு செய்யும் முன்னதாகவே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை மரணம் தழுவிக் கொண்டது.

ஆகவே, நான் நபி {ஸல்} அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றலாம் என நினைக்கிறேன்என்று கூறினார்கள்.

அது கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள் தாராளமாக நிறைவேற்றுங்கள்! இதையெல்லாமா என்னிடம் நீங்கள் கேட்பீர்கள்?” என்றார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் விஷயம் அதுவல்ல! மஸ்ஜிதுன் நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டுமானால் அதற்கு சுற்றியுள்ள இடங்கள் தேவைப்படுகிறது.

மஸ்ஜிதுன் நபவீயை ஒட்டினாற்போல் உங்களின் வீடும் இருக்கிறது; விரிவாக்கம் செய்வதற்கு உங்களின் வீட்டை விட்டுக் கொடுத்தீர்களானால், அதற்கு சிறந்த, தகுதியான பகரத்தை உங்களுக்குத் தருவதாக நான் உறுதியளிக்கின்றேன்என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள்இல்லை, என்னால் தர இயலாதுஎன்று கூறி விட்டார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள்ஒன்றும் பிரச்சனையில்லை, நீங்கள் தர மறுக்கிற போது ஆட்சியதிகாரத்தை வைத்து உமது நிலத்தை கையகப்படுத்த எமக்கு முழு சுதந்திரம் இருக்கிறதுஎன்று கூறினார்.

அதற்கு, அப்பாஸ் (ரலி) அவர்கள்உம்முடைய அதிகாரத்திற்கு அதற்கான சுதந்திரம் வழங்கப்பட வில்லை, உம்முடைய அதிகாரத்திற்கு அது அழகும் இல்லைஎன்று கூறி விட்டு, என்னுடைய உரிமையை பறிக்கிற உம் அதிகாரத்திற்கெதிராக நான் வழக்கு தொடுக்கப் போகின்றேன்என்றார்கள்.

ஆட்சியாளர் நான் இருக்க எனக்கு எதிராக யாரிடம் வழக்கு தொடுப்பீர்? யார் எம்மை அழைத்து விசாரிக்கத் தைரியம் படைத்தவர்கள்?” என்று கோபாவேசத்தோடு சீறவில்லை உமர் (ரலி) அவர்கள்.

அமைதியான குரலில் உமர் (ரலி) அவர்கள்சரி! இந்த விவகாரத்தில் நீர் யாரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கின்றீரோ அவர் வழங்கும் நீதிக்கு இந்த உமர் கட்டுப்படுவார்என்று கூறினார்கள்.

அதற்கு, அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்க நபித்தோழர் ஹுதைஃபா இப்னு அல் யமான் (ரலி) அவர்களிடம் நாம் இருவரும் செல்வோம்என்றார்கள்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மஸ்ஜிதுன் நபவீ முழுவதிலும் நபித்தோழர்கள் நிறைந்து காணப்பட்டனர்.

பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழைக்கப்பட்டு அவர்களின் வாதப் பிரதிவாதங்களை கேட்டறிந்தார்கள் இடைக்கால சிறப்பு நீதிபதி ஹுதைஃபா (ரலி) அவர்கள்.

ஏனென்றால், ஃகலீஃபா அவர்கள் தான் இஸ்லாமிய தேசத்தின் பிரதான நீதிபதி, அதற்கு அடுத்து அந்தந்த மாகாண ஆளுநர்கள் நீதிபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

இப்போது, பிரதான நீதிபதி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் மீது தான் அப்பாஸ் (ரலி) அதிகார துஷ்பிரயோக வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.

முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள் வழக்கு குறித்து விசாரித்தார்கள்.

பின்னர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உமர் அவர்களே! உங்களின் நிலைப் பாடு என்ன? என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்நீதிபதி அவர்களே! நான் என் சொந்த காரியத்திற்காக நிலம் கையகப்படுத்த என் அதிகாரத்தைப் பயன் படுத்துவேன்! என்று  கூறவில்லை.

மாறாக, முஃமின்களோடு தொடர்புடைய ஒரு விவகாரத்தில், அல்லாஹ்வின் இல்லம் சம்பத்தப்பட்ட ஓர் விஷயத்தில் அதுவும் முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அந்த இடத்திற்கு ஈடாக சிறந்த பகரம் செய்யப்படும் என்று வாக்குறுதி தந்தேன். அவர் மறுக்கவே, எனக்கு வழங்கப்பட்டிருக்கிற ஆட்சியதிகாரத்தின் துணை கொண்டு நான் உம் நிலத்தை கையகப் படுத்துவேன்என்று கூறினேன்.

எனவே, நான் எப்படி குற்றமிழைத்தவனாக கருதப்படுவேன்!” என்று உமர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.

அதற்கு, ஹுதைஃபா (ரலி) அவர்கள்உமர் அவர்களே! நபி {ஸல்} அவர்கள் கூற நான் செவியேற்றிருக்கின்றேன்அல்லாஹ்வின் தூதர் தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை நிர்மாணிக்க ஆயத்தமான போது, இட விசாலத்திற்காக அருகே இருந்த ஓர் அநாதைச் சிறுவனுக்குச் சொந்தமான இடத்தை அவனின் அனுமதி பெறாமலே பள்ளியின் ஒரு பகுதியாகச் சேர்த்த போது அல்லாஹ் தம் தூதர் தாவூத் {அலை} அவர்களை அழைத்துச் சொன்னானாம் தாவூதே! அநியாயமாக அபகரிக்கப்பட்ட இடத்தை விட்டும் தூய்மையானதாக என்னை வணங்கும் இடம் அமைந்திருக்க வேண்டுமென்றுஅதற்குப் பின்னர் அந்த இடத்தை விட்டு விட்டு தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டினார்கள்.”

உமரே! உம் நோக்கம் உயர்வாக இருப்பினும் அதைக் கையாண்ட விதம் தவறானது! என்று கூறினார்கள்.

அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம்இதற்கு மேலும் எம்மிடம் இருந்து நீர் வலுக்கட்டாயமாக எம் வீட்டை பறித்துக் கொள்வீரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு போதும் நான் உம்மிடம் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்என உறுதி கூறினார்கள்.

அதற்குப் பிறகு, அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்களுடைய வீட்டை எந்தப் பிரதிபலனும் வேண்டாம்என்று கூறி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அதன் பின்னர் மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் செய்யப்பட்டது.

                            ( நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:147 )

இங்கே, ஓர் ஆட்சியாளராய் இருந்தும் கூட உமர் (ரலி) அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். தமக்கு வழங்கப்படும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறினார்கள்.

ஏனெனில், இஸ்லாம் நீதி செலுத்துவதின் மீதும், நீதியின் அடிப்படையின் கீழ் வாழுமாறும் எந்தளவு தூண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார்கள்.

ஆகவே, நீதியோடு வாழ்வோம்! நீதி நிலை நாட்டப்பட உறுதுணையாக இருப்போம்! நல்ல தீர்ப்புகள் வருகிற போது வரவேற்போம்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: “இறை நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும், நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டிருக்கிற பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.”

         ஆகவே, நீதிக்கு சான்றாளர்களாய் திகழ்வோம்!

                       வஸ்ஸலாம்!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் அருளால் உஸ்மானிகளின் செல்வங்கள் ஒவ்வொரு வாரமும் அவ்வப்போது நடைபெறுகிற நிகழ்வுகளுக்கு தோதுவான தலைப்புகளில் பயான்களை தமிழக ஆலிம்களுக்கு தந்து கொண்டிருப்பது மிக மிக அருமை. அதிலும் இந்த தளத்தில் வரும் கட்டுரைகள் மிக வரவேற்கத்தக்கது அல்ஹம்து லில்லாஹ்! ரப்புல் ஆலமீன் தங்களின் சேவைகளை கபூல் செய்து கொண்டு இதற்காக நீங்கள் படும் சிரமத்திற்கு இரு உலகிலும் பெரும் கூலி வழங்குவானாக,தங்களின் ஈருலக தேவைகளை நிறைவேற்றி தருவானாக.

    ReplyDelete
  2. إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى NALLA VISAYAM

    ReplyDelete