Wednesday, 21 January 2015

நல்லோர்களின் பாதை! அதன் மாண்பும்.. மகத்துவமும்…



நல்லோர்களின் பாதை! அதன் மாண்பும்.. மகத்துவமும்



ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கைப் பயணம் என்பது மிக உயர்ந்த ஓர் இலட்சியத்தை நோக்கியதாகும்.

அந்த பயணத்திற்கு முடிவென்பதில்லை. இந்த உலக வாழ்வென்பது அந்த இலட்சியத்தை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கம் மட்டும் தான்.

சுருங்கச் சொன்னால் தொலைதூரத்தைக் காட்டும் ஓர் வரைபடத்தைப் போன்றதாகும்.

இதில், மரணம் என்பது ஓரு நிறுத்தத்தில் இறங்கி, இன்னொரு பயணத்திற்காக காத்திருக்கின்ற ஓர் பயணியின் நிலைக்கு ஒப்பானதாகும்.

அங்கிருந்து இன்னொரு நிறுத்தம் மண்ணறை, அடுத்து மஹ்ஷர், அடுத்து ஹிஸாப், அடுத்து மீஜான், அடுத்து ஸிராத் அடுத்து ஜன்னத், அடுத்து நபிமார்கள், நல்லோர்களின் தரிசனம், அடுத்து லிகாவுல்லாஹ் என தொடர்ந்து ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழத்தொடங்கி விடுகின்றான்.

பயணம் மிக நீண்டது. ஆகையால் அதற்கான பாதையும் நீளமானது தான். எனினும், பாதைகள் பல நிறைந்த இப்பூவுலகில் ஓர் இறை நம்பிக்கையாளன் தடுமாறிவிடக்கூடாதென்பதற்காக படைத்த ரப்பிடத்திலேயே அந்தப் பாதைக்கான வழியையும், அதில் பயணிப்பதற்கான ஆற்றலையும் கேட்டுப் பெறுமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ () صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைவா! எங்களுக்கு நீ நேரான பாதையைக் காண்பித்தருள்வாயாக! (அப்பாதை) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் கடந்து சென்ற பாதை                                        ( அல்குர்ஆன்: 1: 6,7 )

அல்லாஹ் அருள் புரிந்த மேன்மக்கள் யார் எனும் கேள்விக்கான விடையை அல்லாஹ் தன் திருமறையில் தருகின்றான்.

وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا () ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيمًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்கள், வாய்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லோர்கள் ஆகியோருடன் இருப்பார்கள்.

இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும்.”                      ( அல்குர்ஆன்:4:69,70 )


இங்கே, அல்லாஹ் தான் அருள் புரிந்த மேன்மக்கள் யார் என்பது குறித்து கூறும் போது 1. நபிமார்கள், 2. வாய்மையாளர்கள், 3. உயிர்த்தியாகிகள், 4. நல்லோர்கள். என நான்கு வகையினர்களாக கூறுகின்றான்.

முதல் வகையினரான நபிமார்கள் உலகிலும் சரி, மறுமையிலும் சரி எல்லா நிலைகளிலும் உயர்வும், அந்தஸ்தும் நிறைந்தவர்கள்.

அல்லாஹ் நபிமார்களுக்கென பல உயர்ந்த படித்தரங்களை வழங்கியிருக்கின்றான். அந்த படித்தரங்களை உலகில் எந்த மனிதருக்கும் அல்லாஹ் வழங்குவதில்லை.

அவைகளில் சில….

1. நபித்துவமும்.. தூதுத்துவமும்

اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلًا وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ ()

திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளை சேர்ப்பிப்பதற்காக வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். நிச்சயமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கு கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.                                             ( அல்குர்ஆன்: 22:75 )

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا () وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا () رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا ()

நபியே! நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போல திண்ணமாக, உமக்கும் நாம் வஹீ அறிவித்துள்ளோம். மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், ஆகியோருக்கும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், சுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹீ அறிவித்திருக்கின்றோம். மேலும், நாம் தாவூதுக்கு ஜபூரை வழங்கினோம்.

மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் வஹீ அறிவித்திருக்கின்றோம். மேலும், அல்லாஹ் மூஸாவோடு பேசியும் இருக்கின்றான்.

இறைத்தூதர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பவர்களாகவும், எச்சரிப்பவர்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஏனெனில், அத்தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு அல்லாஹ்விடம் முறையிட அம்மக்களுக்கு ஆதாரம் ஏதும் இருக்கக்கூடாது என்பதற்காக!”                            ( அல்குர்ஆன்: 4:163 – 165 )

உலகில் எவரும் உரிமை கோரி இந்த அந்தஸ்தைப் பெறமுடியாது. ஏனெனில், அல்லாஹ்வே ரிஸாலத்தையும், நுபுவ்வத்தையும் தேர்ந்தெடுக்கின்றான்.

الوليد بن المغيرة قال أينزل على محمد وأترك وأنا كبير قريش وسيدها ويترك أبو مسعود عمرو بن عمير الثقفي سيد ثقيف ونحن عظيما القريتين فأنزل الله تعالى فيه فيما بلغني " وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتن عظيم " إلى قوله تعالى " مما يجمعون " .

وقال قتادة في قول الله عز وجل: " لولا نزل هذا القرآن على رجلٍ من القريتين عظيم " الزخرف31. قالها الوليد بن المغيرة قال: لو كان ما يقوله محمد حقاً أنزل علي القرآن أو على عروة بن مسعود الثقفي. قال: والقريتان مكة والطائف. وقال مجاهد: هو عتبة بن ربيعة من مكة وابن عبد ياليل الثقفي من الطائف والأكثر قول قتادة والله اعلم.

கதாதா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

வலீத் இப்னு முஃகைரா என்பவன் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தூதுத்துவ பிரச்சாரத்திற்கு இடையூறு செய்யும் முகமாக குறைஷிகளை ஒன்றிணைத்து  இந்த அல்லாஹ் இரு பெரும் நகரங்களின் (மக்கா, தாயிஃப் தலைவர்களான) குறைஷித் தலைவர்களில் ஒருவரான எனக்கும், ஸகீஃப் தலைவர்களில் ஒருவரான உர்வா இப்னு மஸ்வூத்க்கும் அல்லவா தன் வேதவெளிப்பாட்டை இறக்கியருளி இருக்க வேண்டும்?” எனவே, முஹம்மதுக்கு வேத வெளிப்பாடு வருவதென்பதில் உண்மையில்லைஎன்றான்.

அதற்கு, அல்லாஹ் பதிலளிக்கும் முகமாக…..

மேலும், இவர்கள் கூறுகின்றனர்: “இந்தக் குர்ஆன் இவ்விரு ஊர்களிலுமுள்ள பெரிய மனிதர்களில் ஒருவர் மீது ஏன் இறக்கியருளப்படவில்லை?”

என்ன, இவர்கள் உம் இறைவனிடம் அருட்கொடையைப் பங்கிடுகின்றார்களா? உலக வாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம் தானே இவர்களிடையே பகிர்ந்தளிக்கின்றோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு வேறு சிலரை விட உயர்பதவியை அளித்தோம்; இவர்களில் சிலர் வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக!”  ( அல்குர்ஆன்: 43:31,32 ) எனும் இறை வசனத்தை இறக்கியருளினான்.

                    ( நூல்: அல் இஸ்தீஆப், தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )


2. பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்.

மக்களுக்கு எந்த தீனை எடுத்துச் சொல்கின்றார்களோ அதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் அப்படியே வாழ்ந்து காட்டுபவர்கள். ஆகுமாகாத, பாவமான எந்தவொரு செயலையும் செய்வதை விட்டும் அல்லாஹ்வால் முழுக்க, முழுக்க பாதுகாக்கப் பட்டவர்கள்.

وَالنَّجْمِ إِذَا هَوَى () مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى () وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى () إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى () عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ()

அல்லாஹ் கூறுகின்றான்:

தாரகைகளின் மீது ஆணையாக, அவை மறையும் போது! உங்களின் தோழர் வழி தவறிப் போகவுமில்லை; நெறி பிறழ்ந்து செல்லவுமில்லை! மேலும், அவர்தம் மன இச்சையின் படி பேசுவதில்லை. இது (அவர் மீது) இறக்கியருளப்பட்ட வஹீயே ஆகும். மாபெரும் நுண்ணறிவாளரும் அதிக வலிமை வாய்ந்தவருமான ஒருவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.           ( அல்குர்ஆன்: 53:1 – 5 )

3. சொத்துக்கள் வாரிசுரிமை கோரப்படாது.

عَنْ عَائِشَةَ رَضِي اللهُ عَنْهَا:
 أنَّ أزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَ رَسُولُ الله، أرَدْنَ أنْ يَبْعَثْنَ عُثْمَانَ إِلَى أبِي بَكْرٍ يَسْألْنَهُ مِيرَاثَهُنَّ، فَقَالَتْ عَائِشَة
لا نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ ألَيْسَ قَدْ قَالَ رَسُولُ الله
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர், அண்ணலாரின் துணைவியர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை ஆட்சியாளர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி, ”அண்ணலார் விட்டுச் சென்றவைகளில் இருந்து எங்களுக்கு பங்கு வைத்து தாருங்கள்எனக் கோரிய போது, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நாம் விட்டுச் சென்றவைகளுக்கு பங்குதாரர் (வாரிசுரிமை) கிடையாது. நாம் விட்டுச் செல்லும் அனைத்துமே தர்மப் பொருளாகும்என்று சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.                                               ( நூல்: அபூதாவூத் )

4. கண்கள் உறங்கும் இதயம் உறங்காது.

عَنْ أنَسَ بْنِ مَالِكٍ- رضي الله عنه- في قصة الإسراء- وفيه: وَالنَّبِيُّ صلى الله عليه وسلم نَائِمَةٌ عَيْنَاهُ وَلا يَنَامُ قَلْبُهُ، وَكَذَلِكَ الأنْبِيَاءُ تَنَامُ أعْيُنُهُمْ وَلا تَنَامُ قُلُوبُهُمْ. متفق عليه.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ நபிமார்களின் கண்கள் உறங்கும், ஆனால், உள்ளம் உறங்காதுஎன மிஃராஜ் சம்பவத்தின் போது நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                          ( நூல்: புகாரி, முஸ்லிம் )

5. உலக வாழ்வு அல்லது மறுமை வாழ்வை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப் படுதல்.

عَنْ عَائِشَةَ رَضِي اللهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ الله يَقُولُ
 «مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ»
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அனைத்து நபிமார்களின் மரண நோயின் போது அவர்களுக்கு இரு உலக வாழ்வில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்படுகின்றதுஎன்று கூறினார்கள்.

6. இறக்கின்ற இடமே மண்ணறையாகுதல்.

عَنْ أَبي بَكْرٍ- رضي الله عنه- قَالَ: سَمِعْتُ رَسُولَ الله يَقُولُ
 «لَنْ يُقْبَرَ نَبِيٌّ إِلاَّ حَيْثُ يَمُوتُ»
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மரணமாகி, அவர்களின் புனித உடல் எங்கே அடக்கப்பட வேண்டும் என நபித்தோழர்கள் முரண்பட்டு நின்ற போது, அவர்களிடையே அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றுஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்எந்தவொரு நபியும் அவர் எங்கே இறக்கின்றாரோ அங்கேயே நல்லடக்கம் செய்யப்படுவார்என்று.  ( நூல்:அஹ்மத் )

7. மண்ணறைகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கின்றார்கள்.

عَنْ أبِي هُرَيْرَةَ رَضِي اللهُ عَنْهُ قالَ: قالَ رَسُولُ الله
 «لَقَدْ رَأيْتُنِي فِي الحِجْرِ، وَقُرَيْشٌ تَسْألُنِي عَنْ مَسْرَايَ، فَسَألَتْنِي عَنْ أشْيَاءَ مِنْ بَيْتِ المَقْدِسِ لَمْ أثْبِتْهَا، فَكُرِبْتُ كُرْبَةً مَا كُرِبْتُ مِثْلَهُ قَطُّ، قال: فَرَفَعَهُ اللهُ لِي أنْظُرُ إِلَيْهِ، مَا يَسْألُونِي عَنْ شَيْءٍ إِلا أنْبَأْتُهُمْ بِهِ، وَقَدْ رَأيْتُنِي فِي جَمَاعَةٍ مِنَ الأَنْبِيَاءِ، فَإِذَا مُوسَى قَائِمٌ يُصَلِّي، فَإِذَا رَجُلٌ ضَرْبٌ جَعْدٌ كَأنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَإِذَا عِيسَى ابْنُ مَرْيَمَ قَائِمٌ يُصَلِّي، أقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ الثَّقَفِيُّ، وَإِذَا إِبْرَاهِيمُ قَائِمٌ يُصَلِّي، أشْبَهُ النَّاسِ بِهِ صَاحِبُكُمْ (يَعْنِي نَفْسَهُ) فَحَانَتِ الصَّلاةُ فَأمَمْتُهُمْ، فَلَمَّا فَرَغْتُ مِنَ الصَّلاةِ قال قَائِلٌ: يَا مُحَمَّدُ! هَذَا مَالِكٌ صَاحِبُ النَّارِ فَسَلِّمْ عَلَيْهِ، فَالْتَفَتُّ إِلَيْهِ فَبَدَأنِي بِالسَّلامِ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மிஃராஜ்விண்ணுலகப்பயணம் சென்று வந்த செய்தியை, அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை எங்களிடையே அறிவித்தார்கள்.

இதை அறிந்த குறைஷிகள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்துஉங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்என்று கேட்டனர்.

அல்லாஹ் நபி {ஸல்} அவர்களின் கண்முன்னே பைத்துல் முகத்தஸை காண்பித்தான். அப்போது நபி {ஸல்} அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை.

பின்னர், எங்களை நோக்கி, நான் விண்ணுலகம் சென்றிருந்த போது நபிமார்களின் ஒரு கூட்டத்தினர் எனக்கு காண்பிக்கப் பட்டனர். அங்கே நபி மூஸா (அலை) எனக்கு காட்டப்பட்டார்கள். அவர்களை தொழும் நிலையிலே நான் கண்டேன். அவரை நான் ஷனூஆவின் பகுதி மனிதரின் சாயலில் இருக்க கண்டேன்.

அது போன்று நபி ஈஸா {அலை} அவர்களையும் தொழும் நிலையிலேயே கண்டேன். ஈஸா {அலை} அவர்கள் உர்வா இப்னு மஸ்வூத் அஸ் ஸகஃபீ (ரலி) அவர்களில் சாயலில் ஒத்திருக்கக் கண்டேன்.

அது போன்றே நபி இப்ராஹீம் {அலை} அவர்களையும் தொழும் நிலையிலேயே கண்டேன். இப்ராஹீம் {அலை} அவர்கள் என் சாயலிலே இருக்கக் கண்டேன்.

அதன் பின்னர் அனைத்து நபிமார்களும் தொழுகைக்காக ஒன்று சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு நான் இமாமாக நின்று தொழவைத்தேன்.

தொழுது முடித்த போது, முஹம்மதே! என்று என்னை அழைக்கும் ஓர் அழைப்பை நான் செவியுற்று திரும்பிப்பார்த்த போது, இவர்தான் நரகத்தின் பாதுகாவலர், இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று சொல்லப்பட்டது.

நான் ஸலாம் சொல்வதற்காக திரும்பிய போது, மாலிக் {அலை} அவர்கள் என்னை நோக்கி ஸலாம் கூறி முந்திக்கொண்டார்கள்.”          ( நூல்: முஸ்லிம் )

عن أنس رضي الله عنه عن النبي- صلى الله عليه وسلم- قال
 «الأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِم يُصَلُّونَ»
 أخرجه أبو يعلى
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபிமார்கள் மண்ணறைகளில் உயிருடனும் அல்லாஹ்வை தொழுதவாறும் இருக்கின்றார்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                             ( நூல்: முஸ்னத் அபூ யஃலா )

8. நபிமார்களின் மனைவியர்கள் அன்னையர்கள் ஆவார்கள்.

وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا ()
அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வுடைய தூதருக்கு தொல்லை தருவது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் திருமணம் முடிப்பதும் ஒருபோதும் ஆகுமானதன்று. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும்.”             ( அல்குர்ஆன்: 33:53 )

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ

அல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவர்.                     ( அல்குர்ஆன்: 33:6 )

9. ஆண்கள் மட்டுமே நபியாக அனுப்பப்படுவார்கள்.

وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ

அல்லாஹ் கூறுகின்றான்: ”(நபியே!) நாம் உமக்கு முன்பும் மனித சமூகத்தில் ஆண்களையே தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவர்களுக்கு நம்முடைய கட்டளையை அறிவித்துக் கொண்டிருந்தோம்.                  ( அல்குர்ஆன்: 16:43 )

10. மரண நேரம் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

وعن أبى هريرة قال قال رسول اللّه صلى اللّه عليه وسلم جاء ملك الموت إلى موسى فقال له أجب ربك قال فلطم
موسى عليه السّلام عين ملك الموت ففقأها قال فرجع الملك إلى اللّه سبحانه وتعالى فقال انك أرسلتني إلى عبد لك لا يريد الموت وقد فقأ عينى قال فرد اللّه إليه عينه وقال ارجع إلى عبدى فقل له الحيوة تريد فان كنت تريد الحيوة فضع يدك على متن ثور فما وارت يدك من شعره فانك تعيش بها سنة قال ثم مه قال ثم تموت قال فالآن من قريب قال رب أدنني من الأرض المقدسة رمية الحجر قال رسول اللّه صلى اللّه عليه وسلم لو انى عنده لاريتكم قبره إلى جنب الطريق عند الكثيب الأحمر متفق عليه

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ரூஹைக் கைப்பற்றும் வானவர் மனித தோற்றத்தில் மூஸா (அலை) அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! உம் ரப்பின் அழைப்பிற்கு பதில் தாரும்என்றார்.

வந்திருப்பவர் மலக்குல் மவ்த் தான் என்பதை அறிந்து கொண்ட மூஸா {அலை} அவர்கள் வானவரின் கன்னத்தில் ஓங்கி அடித்தார்கள். பலமாக விழுந்த அந்த அடியின் விளைவாக அவ்வானவரின் கண் பெயர்ந்து விட்டது.

அதிர்ந்து போன வானவர் நேராக அல்லாஹ்வின் சமூகம் விரைந்தார். அல்லாஹ்விடம் வந்த அவர்இறைவா! மரணத்தை விரும்பாத ஒருவரிடம் நீ என்னை அனுப்பி வைத்து விட்டாய். அவரோ, என்னை அடித்து என் கண்ணை பெயர்த்து விட்டார்என்று கூறி முறையிட்டார்.

வல்ல அல்லாஹ் அவ்வானவரின் கண்ணை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி விட்டு, “எனது அந்த நல்லடியாரை மறுபடியும் அணுகி”, “அல்லாஹ்வின் நபியே! நீங்கள் இவ்வுலகில் வாழவேண்டும் என்று விரும்பினால் ஒரு காரியம் செய்யுங்கள்.

உங்களின் கரத்தை ஒரு காளை மாட்டின் மீது வையுங்கள். உங்களின் கையின் கீழால் எத்தனை உரோமங்கள் இருக்குமோ, அத்தனை ஆண்டுகள் வரை நீங்கள் உயிர் வாழலாம்என்று கூறுங்கள் என ஆணையிட்டு அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

மீண்டும், மூஸா {அலை} அவர்களின் முன் வந்து நின்ற மலக்குல் மவ்த் (அலை) அவர்கள் அல்லாஹ் அணுகச் சொன்ன முறையில் அணுகி, அல்லாஹ் கூறச் சொன்னவற்றைக் கூறினார்கள்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நபிய்யுல்லாஹ் மூஸா {அலை} அவர்கள் அவ்வானவரை நோக்கி, “சரி! அத்துனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பின்னர் என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள்.

அவ்வானவர், “நீங்கள் மரணத்தைச் சந்திக்க நேரிடும்என்று கூறினார். அதைக் கேட்ட மூஸா {அலை} அவர்கள், “அப்படியானால் இப்போதே நான் மரணிக்கத் தயார்! என்று அவ்வானவரிடம் கூறினார்.

பின்னர், வானை நோக்கி கையை உயர்த்திய மூஸா {அலை} அவர்கள்அல்லாஹ்வே! பைத்துல் முகத்திஸிலிருந்து ஒரு கல் எறியும் தூரத்திற்கு என்னைச் சமீபமாக்குவாயாக!” என்று பிரார்த்தித்து விட்டு, தம் உயிரைக் கைப்பற்ற மூஸா {அலை} அவர்கள் அனுமதியளித்தார்கள்.

இந்நிகழ்வைக் கூறிய நபி {ஸல்} அவர்கள்நான் இப்போது பைத்துல் முகத்தஸின் அருகே இருந்தால் மூஸா {அலை} அவர்களின் மண்ணறை அமைந்துள்ள சிவப்பான மணல் மேட்டின் கீழ்ப்பகுதியின் ஓரத்தை உங்களுக்கு காட்டியிருப்பேன்என்று கூறினார்கள்.

( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ லி இமாமி முஹம்மத் ஸனாவுல்லாஹ் உஸ்மானீ அல் ஹனஃபீ அல் மள்ஹரீ, பாகம்: 3, பக்கம்: 76,77 )

11. இயற்கை விதிகளுக்கு முரணான அற்புதங்களை இறைவனின் துணையோடு நிகழ்த்துதல்.

قال السدى اوحى اللّه إلى موسى انى متوفى هارون عليه السلام فآت به جبل كذا وكذا فانطلق موسى وهارون نحو ذلك الجبل فإذا هما بشجرة لم ير مثلها وإذا بيت مبنى وفيه سرير عليه فرش وإذا فيه ريح طيبة فلما نظر هارون إلى ذلك أعجبه قال يا موسى انى أحب ان أنام على هذا السرير قال فنم عليه فقال انى أخاف ان يأتي رب
هذا البيت فيغضب على قال موسى لا ترهب انى أكفيك رب هذا البيت قال يا موسى فنم أنت معى فان جاء رب البيت غضب علىّ وعليك جميعا فلما ناما أخذ هارون عليه السلام الموت فلما وجد معه قال يا موسى خذ عينى فلما قبض رفع البيت وذهب تلك الشجرة ورفع السرير إلى السماء فلما رجع موسى إلى بنى اسراءيل وليس معه هارون قالوا ان موسى قتل هارون وحسده لحب بنى إسرائيل له فقال موسى ويحكم كان أخي أفترونني اقتله فلما أكثروا عليه قام فصلى ركعتين ثم دعا اللّه تعالى ونزل السرير حتى نظروا إليه بين السماء والأرض فصدقوه وعن على بن أبى طالب رضى اللّه عنه قال صعد موسى وهارون عليهما السلام الجبل فمات هارون فقالت بنو إسرائيل لموسى عليه السلام أنت قتلته فآذوه فامر اللّه تعالى الملئكة فحملته حتى مروا به على بنى إسرائيل فكلمت الملائكة بموته حتى عرف بنوا إسرائيل انه قد مات فبراه الله مما قالوا ثم ان الملائكة حملوه ودفنوه فلم يطلع على موضع قبره الا الرخم فجعله اللّه أصم ابكم وقال عمرو بن ميمون مات هارون وموسى عليهما السّلام فى التيه مات هارون قبل موسى وكانا قد خرجا إلى بعض الكهوف فمات هارون ودفنه موسى وانصرف إلى بنى إسرائيل فقالوا قتلته لحبنا إياه وكان محبا فى بنى إسرائيل فتضرع موسى عليه السلام إلى ربه عز وجل فاوحى اللّه إليه انطلق بهم إلى قبره فنادى يا هارون فخرج من قبره ينفض راسه فقال انا قتلتك قال لا ولكنى مت قال فعد إلى مضجعك وانصرفوا

அஸ்ஸதீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் நான் ஹாரூன் (அலை) அவர்களின் உயிரைக் கைப்பற்றப் போகிறேன். அருகிலிருக்கிற இன்ன மலைக்கு அழைத்து வாருங்கள்என்று வஹீ மூலம் தெரிவித்தான்.

மூஸா {அலை} அவர்கள் அல்லாஹ் சொன்ன அந்த மலைக்கு தமது சகோதரர் ஹாரூன் {அலை} அவர்களை அழைத்து வந்தார்கள்.

அங்கே ஓரிடத்தில் அதுவரை கண்டிராத ஓர் மரத்தைக் கண்டார்கள். அதன் அருகே அழகிய சிறு வீட்டையும், அதிலே அழகிய ஒரு கட்டிலையும், அதன் மீது நறுமணம் கமழும் விரிப்பு ஒன்றும் விரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.

அப்போது, அதை ஆச்சர்யத்தோடு நோக்கிய ஹாரூன் {அலை} அவர்கள்மூஸா {அலை} அவர்களே! இந்த கட்டிலில் உறங்க வேண்டும் என என் உள்ளம் ஆவல் கொள்கின்றதுஎன்றார்கள்.

அதைக் கேட்ட மூஸா {அலை} அவர்கள்சகோதரரே! நீர் அழகிய முறையில் உறங்கி உமது உள்ளத்தின் ஆவலைப் போக்கிக் கொள்ளுங்கள்என்றார்கள்.

அதற்கு, ஹாரூன் {அலை} அவர்கள்நான் உறங்குவதை இந்த வீட்டின் உரிமையாளன் பார்த்தால் என் மீது கோபம் கொள்வாரோ என அஞ்சுகின்றேன்என்றார்கள்.

அதைக் கேட்ட மூஸா {அலை} அவர்கள், “இந்த வீட்டின் உரிமையாளன் குறித்து நீர் ஒன்றும் அஞ்சவேண்டாம். நான் பார்த்துக் கொள்கின்றேன்என்றார்கள்.

அதற்கு, ஹாரூன் {அலை} அவர்கள்சகோதரரே! அப்படியானால் நீரும் எம்மோடு உறங்குவீராக! அப்படியே இந்த வீட்டின் உரிமையாளன் கோபப்பட்டால் நம் இருவரின் மீதும் சேர்த்தே கோபப்படட்டும்!” என்று கூறினார்கள்.

அதற்கு, மூஸா {அலை} அவர்களும் சம்மதித்தார்கள். இருவரும் கட்டிலில் படுத்து உறங்கினார்கள். பின்னர், வானவர்கள் புடைசூழ வருகை தந்த மலக்குல் மவ்த் (அலை) அவர்கள் ஹாரூன் {அலை} அவர்களின் ரூஹைக் கைப்பற்றினார்கள்.

ரூஹ் கைப்பற்றப் படுவதை உணர்ந்த ஹாரூன் {அலை} அவர்கள்மூஸா {அலை} அவர்களிடம் என் கண்ணை மூடுங்கள்!” என்றார்கள். மூஸா {அலை} அவர்களும் அப்படியே செய்தார்கள்.

பின்னர், வீடும், மரமும், கட்டிலும் வானை நோக்கி உயர்த்தப்பட்டது. இந்த சம்பவம் பனூஇஸ்ரவேலர்கள் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அல்லாஹ்வின் தண்டனையால் தட்டழிந்த போது நடைபெற்றது.

தண்டனைக் காலம் முடிந்ததும் பனூஇஸ்ரவேலர்களைக் காண மூஸா {அலை} அவர்கள் வந்தார்கள்.

மூஸா {அலை} அவர்களின் அருகே ஹாரூன் {அலை} அவர்களைக் காணாத பனூஇஸ்ரவேலர்கள் ஹாரூன் {அலை} அவர்கள் எங்கே?” என்று வினவினர்.

அதற்கு, மூஸா {அலை} அவர்கள்ஹாரூனை அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்எனக் கூறினார்.

அதைக் கேட்ட பனூஇஸ்ரவேலர்கள்மூஸாவே! அவர் எங்கள் மீது கொண்டிருந்த அன்பு கண்டு நீர் பொறாமை கொண்டு நீர் அவரைக் கொலை செய்து விட்டீர்என்று கூறினர்.

அதற்கு, மூஸா {அலை} அவர்கள்உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! என் சகோதரரை நானே கொலை செய்து விட்டேன் என்று என் மீது அபாண்டத்தை சுமத்துகின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

பனூஇஸ்ரவேலர்களின் சொற்போர் தொடரவே மூஸா {அலை} அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது தம் மீதான அபாண்டத்தை நீக்குமாறு பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ் வானிலிருந்து கட்டிலை இறக்கினான். அங்கே ஹாரூன் {அலை} அவர்களை உயிர் பிரிந்த நிலையில் கண்டார்கள். அதன் பின்னரே அந்த சமூகத்தினர் ஏற்றுக் கொண்டனர்.

அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில்..

மலக்குமார்கள் கட்டிலை சுமந்து வந்து பனூஇஸ்ரவேலர்களிடம் ஹாரூன் {அலை} அவர்கள் மரணித்து விட்டதாக அறிவிப்புச் செய்தார்கள்என்றும்,

அம்ருப்னு மைமூன் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில்

அல்லாஹ்வின் தண்டனை பனூஇஸ்ரவேலர்களை அடைந்த போது மூஸா {அலை} அவர்களும், ஹாரூன் {அலை} அவர்களும் குகைப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.

அப்போது ஹாரூன் {அலை} அவர்கள் மரணிக்கவே மூஸா {அலை} அவர்கள் ஹாரூன் {அலை} அவர்களை நல்லடக்கம் செய்தார்கள்.

பின்னர் தம் சமூக மக்களிடம் வந்த போது மூஸா {அலை} அவர்களின் அருகே ஹாரூன் {அலை} அவர்களைக் காணாத பனூஇஸ்ரவேலர்கள் ஹாரூன் {அலை} அவர்கள் எங்கே?” என்று வினவினர்.

அதற்கு, மூஸா {அலை} அவர்கள்ஹாரூனை அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்எனக் கூறினார்கள்.

அதைக் கேட்ட பனூஇஸ்ரவேலர்கள்மூஸாவே! அவர் எங்கள் மீது கொண்டிருந்த அன்பு கண்டு நீர் பொறாமை கொண்டு நீர் அவரைக் கொலை செய்து விட்டீர்என்று கூறினர்.

அல்லாஹ்விடம் மூஸா {அலை} அவர்கள் இது குறித்து பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் ஹாரூன் {அலை} அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் மண்ணறைக்குச் சென்று அவரை அழையுங்கள்என்றான்.

அது போன்றே, மூஸா {அலை} அவர்கள் அவர்களின் மண்ணறைக்கு அருகே வந்து நின்றுஹாரூனே!” என்று அழைத்தார்கள்.

அப்போது, ஹாரூன் {அலை} அவர்கள் தங்களின் தலை மீதிருந்த மண்ணை தட்டியவர்களாக வந்து நின்றார்கள்.

மூஸா {அலை} அவர்கள்ஹாரூனே! உம்மை நானா கொலை செய்தேன்?” என்று கேட்டார்கள். அதற்கு, ஹாரூன் {அலை} அவர்கள்இல்லை, அல்லாஹ் தான் மரணத்தின் மூலம் என்னை தன் பக்கம் அழைத்துக் கொண்டான்என்றார்கள்.


அப்போது, மூஸா {அலை} அவர்கள்ஹாரூனே! உம் இடத்திற்கு நீர் சென்று விடும்!” என்று கூறினார்கள். ஹாரூன் {அலை} அவர்கள் மீண்டும் மண்ணறைக்குள் சென்று விட்டார்கள். பின்னர் இதை கண் கூடாகக் கண்ட மூஸா {அலை} அவர்களின் சமூகத்தினர் உண்மையை உணர்ந்தவர்களாக திரும்பினார்கள்.

  ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ லி இமாமி ஸனாவுல்லாஹ் உஸ்மானீ, பாகம்: 3, பக்கம்: 77,78 )

நபிமார்களை ஈமான் கொள்வது ஈமானின் மிக முக்கியமான ஓர் அம்சமாகும். நபியாக வேண்டும் என எவர் ஆசைப்பட்டாலும் அது நிறைவேற்றப் படாது. அது அல்லாஹ் எவரைத் தேர்ந்தெடுக்கின்றானோ அவர்களுக்கே வழங்கப்படும்.

அத்தகைய மேன்மக்களான முதல் நிலை மனிதர்களான நபிமார்களும், ரஸூல்மார்களும் கடந்து சென்ற நேரிய பாதையில் செலுத்திடுமாறு ஒவ்வொரு தொழுகையின் ஆரம்பத்திலும் பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளான்.

இதை மிகச் சரியாக புரியாத பெரும்பாலானவர்கள் தவறான தலைவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வழி தவறிச் சென்று விட்டனர்.

நேரான வழி என்பதைப் பிரார்த்திக்கச் சொன்ன இறைவனுக்கு அந்த நேர்வழி என்ன என்பதை மிகத் தெளிவாகச் சொல்லத்தெரியாமல் இல்லை.

அல்லாஹ் அருள் புரிந்த மேன்மக்கள் சென்ற பாதை என்று சொன்னதின் பொருள் இது தான் அந்த பாதை எவ்வளவு அழகானது! எவ்வளவு எளிதானது! அந்த வழியில் நடைபோற்றவர்கள் எத்தகைய பேறுபெற்றவர்கள் என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டும் என்பதற்காகத் தான்.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!       
                          வஸ்ஸலாம்!!!

1 comment: