Thursday, 29 January 2015

நம்பகத்தன்மை எனும் மணிமகுடம்!



நம்பகத்தன்மை எனும் மணிமகுடம்!





கடந்த சில தினங்களாக தமிழ் நாளேடுகள் சிலதில் நம்பகத்தன்மை என்கிற வார்த்தைப் பிரயோகம் அதிகமாக புழங்கப்படுவதை பார்க்க முடிகிறது.

பரபரப்பிற்கு பேர் போன தமிழக அரசியலில் மத்திய அமைச்சர் ஒருவரின் ஊழல் விவகாரம் தற்போது சூடுபிடித்திருக்கின்றது.

கடந்த 2004 –ஆம் ஆண்டு முதல் 2007 –ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்தொலைபேசி இணைப்புகளை தவறாக பயன்படுத்தினார்எனும் குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து இது வரை நடைபெற்று வருகிற நீதிமன்ற நடவடிக்கைகளின் விவகாரத்தில், இந்த வழக்கை விசாரித்த சி.பி. மத்திய புலனாய்வுத்துறை தவறிழைத்து விட்டதாக அரசியல் தலைவர்களும், சட்ட நிபுணர்களும், முன்னாள் நீதிபதிகளும் விமர்சனக் கணைகளைத் தொடுத்திருப்பதே அந்த பரபரப்புக்கு முக்கிய காரணம் ஆகும்.

முதலில் சி.பி.. என்றால் என்ன என்பது குறித்த சில தகவல்களைப் பார்ப்போம்.

C.B.I (Central Bureau Of Investigation) குற்றம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களை ஆராயும் இந்தியாவின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பு. இது மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு மற்றும் உத்தரவின் கீழ் இயங்குவதால் மத்திய புலனாய்வுத்துறை என்றும் அழைக்கப்படுகின்றது.

உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்புகளில் இண்டர்போலுக்கு அடுத்த இடத்தைப் பெற்ற அமைப்பும் இது தான்.

இந்தியாவிலேயே அதிக வசதிகளுடன் இயங்கும் அரசு அமைப்பும் இது தான். அந்த வகையில் பார்த்தால் சுமார் 186 கோடி ரூபாய் செலவில் (39 மில்லியன் டாலர்) கட்டப்பட்ட 11 மாடிகள் கொண்ட, முழுக்க முழுக்க கண்ணாடிகளால் வடிவமைக்கப் பட்ட உயரிய மாளிகையில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

ஒட்டு மொத்தமாக 5000 பேர்களே இங்கு பணிபுரிகின்றார்கள். சர்வதேச தரம் கொண்ட பயிற்சி, தளவாடங்கள், ஆயுதங்கள் வசதிகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த தேசத்தின் பிரதமர் முதற்கொண்டு மிகச் சாதரண ஒரு குடிமகன் வரை யாரை இவர்கள் சந்தேகப்பட்டாலும் அடுத்த நிமிடத்திலிருந்து அவர் இவர்களின் விசாரணை மற்றும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்து விடுவார். அவரைப் பற்றி உண்டான எல்லாத்தகவல்களையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே திரட்டுகிற அபார ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

1963 –ஆம் ஆண்டு இந்திய தேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு புகழாதாரத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

இந்திய தேசத்தின் மிகப்பெரும் நம்பகமான, பொறுப்புணர்வு நிறைந்த இந்த அமைப்பின் மீது தற்போது விமர்சனக்கனைகளை வீசியிருப்பவர்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு உட்பட பல முக்கியமான வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் சி.பி.. அதிகாரி கே. ரகோத்தமன்என்பவர்.

27.01.2015 அன்று வெளியான தினகரன் நாளிதழின் நீண்ட ஒரு பேட்டியில்சி.பி.. மீதான நம்பகத்தன்மை அகன்று விட்டதுஎன்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இன்று சி.பி.ஐ மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையானவர்களிடத்தில் நம்பகத்தன்மை அகன்று விட்டதை பார்த்து வருகின்றோம்.

ஓர் இறைநம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் நம்பகத்தன்மை என்பது அவனது வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இஸ்லாம் மிக அழகாகவே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

இபாதத்தாக இருக்கட்டும், தனிமனித வாழ்வாக இருக்கட்டும், குடும்ப வாழ்வாக இருக்கட்டும் தலைமைத்துவமாக இருக்கட்டும், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் நம்பகத்தன்மை பேணப்பட வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

உண்மை பேசுவது, இரகசியம் காப்பது, வாக்குறுதி பேணுவது, அடைக்கலத்தை உரிய முறையில் நிறைவேற்றுவது என நம்பகத்தன்மையின் பல்வேறு பரிணாமங்களையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருக்கின்றது.

ஈருலகிலும் வெற்றிக்குரிய வாழ்க்கையை வாழ்பவர்கள் யார் என்பது குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிக்கும் போது

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ()

இன்னும், அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக்காக்கக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள்.”

يقول القرطبي : والأمانة تعم جميع وظائف الدين على الصحيح من الأقوال

والأمانة تشمل كل ما يحمله الإنسان من أمر دينه ودنياه قولا وفعلاً , والأمانة هي أداء الحقوق، والمحافظة عليها، فالمسلم يعطي كل ذي حق حقه؛ يؤدي حق الله في العبادة، ويحفظ جوارحه عن الحرام، ويؤدي ما عليه تجاه الخلق .

تفسير القرطبي 14/255.

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள்மனித வாழ்க்கையில் தீன் மற்றும் துன்யாவின் எல்லா விவகாரங்களிலும், சொல்லாலும், செயலாலும் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வதாகும்என விளக்கமளித்துள்ளார்கள்.

 நம்பகத்தன்மை என்பது இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகிற அனைத்து நற்குணங்களின் அடிப்படை அம்சமாகும்.

إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் இந்த அமானிதத்தைநம்பகத்தன்மையை வானங்கள், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்த போது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதனைக் கண்டு அவைகள் அஞ்சின.

ஆனால், மனிதனோ அதனை ஏற்றுக் கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் நம்பகத்தன்மையின் பயன்பாடுகளை அறியாதவனாகவும் இருக்கின்றான்.”

நம்பகத்தன்மையோடு வாழ்வது கட்டாயமாகும்.

فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ

உங்களில் ஒருவர் மற்றொருவரை நம்பி ஏதேனும் ஒன்றை ஒப்படைத்தால் நம்பப்பட்டவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தைநம்பகத்தன்மையை முறையே நிறைவேற்றட்டும். இதன் விஷயத்தில் தன் அதிபதியான அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக்கொள்ளட்டும்!”

நம்பகத்தன்மை என்பது ஈமானின் அடையாளமாகும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : مَا خَطَبَنَا نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم إِلاَّ قَالَ:لاَ إِيمَانَ لِمَنْ لاَ أَمَانَةَ لَهُ ، وَلاَ دِينَ لِمَنْ لاَ عَهْدَ لَهُ.
أخرجه أحمد 3/135(12410) الألباني ( صحيح ) انظر حديث رقم : 7179 في صحيح الجامع .

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எந்த உரை நிகழ்த்தினாலும்நம்பகத்தன்மை இல்லாதவனிடத்தில் ஈமான் இருக்காது. வாக்குறுதியை நிறைவேற்றாதவனிடத்தில் இறைநெறி மார்க்கம் இருக்காதுஎன்று குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள்”. ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

உலக நன்மைகளில் மிகவும் சிறப்பிற்குரியது.

وعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: أَرْبَعٌ إِذَا كُنَّ فِيكَ ، فَلاَ عَلَيْكَ مَا فَاتَكَ مِنَ الدُّنْيَا : حِفْظُ أَمَانَةٍ ، وَصِدْقُ حَدِيثٍ، وَحُسْنُ خَلِيقَةٍ ، وَعِفَّةٌ فِي طُعْمَةٍ. أخرجه أحمد 2/177(6652) الألباني في \"السلسلة الصحيحة\" 2 / 370.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் நான்கு நற்பண்புகள் உம்மிடம் இருக்குமானால் இந்த உலகில் எது உம்மிடம் இல்லை என்றாலும் அது பற்றி கவலை கொள்ள உமக்குத் தேவையில்லை.

1. நம்பகத்தன்மையை பேணுவது., 2. உண்மை பேசுவது., 3. நற்குணத்தோடு நடந்து கொள்வது. 4. பிறரின் அருட்கொடைகளைக் கண்டு ஏங்குவதில் இருந்தும் தவிர்ந்து வாழ்வது.” என்று கூறினார்கள். ( நூல்: அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா )

நம்பகத்தன்மை ஓர் முஃமின் வாழ்க்கையில் இன்றிமையாதது.

ولقد كانت من آخر وصايا النبي صلى الله عليه وسلم في حجة الوداع الوصية بالأمانة فقال : \" وَمَنْ كَانَتْ عِنْدَهُ أَمَانَةٌ فَلْيُؤَدِّهَا إِلَى مَنِ ائْتَمَنَهُ عَلَيْهَا - وَبَسَطَ يَدَيْهِ فَقَالَ - أَلاَ هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ - ثُمَّ قَالَ - لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّهُ رُبَّ مُبَلَّغٍ أَسْعَدُ مِنْ سَامِعٍ. أخرجه أحمد 5/72(20971) و\"الدرامي\" 2537 و\"أبو داود\" 2145 .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா விஷயங்களையும் தங்களது இறுதிப் பேருரையின் போது குறிப்பிட மறக்க வில்லை.

அந்த வகையில் அமானிதம்நம்பகத்தன்மை பற்றியும் குறிப்பிட்டார்கள்.

அமானத்நம்பகத்தன்மை என்றால் பிறரிடம் இருந்து வாங்கிய ஒன்றை அப்படியே திருப்பித் தருவது தான் என நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், பரந்து விரிந்த பொருளுக்குச் சொந்தமானது தான் இந்த நம்பகத்தன்மை என்கிற வார்த்தை.

ஆம், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்பு, நம்மை நம்பி நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட இரகசியம், நாம் வகிக்கும் பதவி, அதிகாரம், கணவன் மனைவி இடையேயான உரையாடல், என மிக நீண்ட பொருள் கொண்டது.

இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனை ஏதாவது ஒரு விஷயத்திற்காக நம்பிக்கொண்டு தான் இருக்கின்றான்.

உதாரணத்திற்கு தொலைதூரப் பயணம் செய்யும் ஒருவன் பேரூந்தின் ஓட்டுனர், மற்றும் சக பயணிகள் ஆகியோரின் மீதான நம்பத்தன்மையைக் கொண்டு தான் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றான்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எப்போது இந்த நம்பகத்தன்மை அகன்று விடுகின்றதோ அப்போது நீங்கள் யுக முடிவு நாளை எதிர் பாருங்கள்என்றார்கள்.

இன்றைக்கு சர்வ சாதாரணமாக சமூகத்தில் நம்பிக்கைத் துரோகங்கள் நடை பெற்றுக் கொண்டிருப்பதைக் காணும் போது யுக முடிவு நெருங்கிக் கொண்டிருக்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது.

அண்ணல் நபிகளார் வாழ்விலிருந்து…..

عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ(1) وَاسْتَتْبَعَهُ(2) لِيَقْبِضَ ثَمَنَ فَرَسِهِ
فَأَسْرَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ وَطَفِقَ(3) الرِّجَالُ يَتَعَرَّضُونَ لِلْأَعْرَابِيِّ فَيَسُومُونَهُ بِالْفَرَسِ(4) وَهُمْ لَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ حَتَّى زَادَ بَعْضُهُمْ فِي السَّوْمِ عَلَى مَا ابْتَاعَهُ بِهِ مِنْهُ فَنَادَى الْأَعْرَابِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا(5) هَذَا الْفَرَسَ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَهُ فَقَالَ:" أَلَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ؟!" قَالَ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :"قَدْ ابْتَعْتُهُ مِنْكَ" فَطَفِقَ النَّاسُ يَلُوذونَ(6) بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالْأَعْرَابِيِّ وَهُمَا يَتَرَاجَعَانِ وَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ :"هَلُمَّ شَاهِدًا(7) يَشْهَدُ أَنِّي قَدْ بِعْتُكَهُ" قَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ :"أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بِعْتَهُ" قَالَ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ:" لِمَ تَشْهَدُ؟" قَالَ:" بِتَصْدِيقِكَ(8) يَا رَسُولَ اللَّهِ"
في رواية :" فقال رسول الله صلى الله عليه وسلم :"يا خزيمة أنــّـا لم نشهدك فكيف تَشْهَدُ ؟" قال :"أنا أصدقك على خَبر السماء الا أصدقك على الأَعْرَابِيِّ"
وَفِي لَفْظ قَالَ خُزَيْمَةُ : أَعْلَم أَنَّك لَا تَقُول إِلَّا حَقًّا قَدْ أمَّنَّاك عَلَى أَفْضَلَ مِنْ ذَلِكَ عَلَى دِيننَا
فَجَعَلَ (9)رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ شَهَادَةَ رَجُلَيْنِ. فلم يكن في الاسلام رجل تجوز شهادته بشهادة رجلين غير خزيمة بن ثابت
رواه أبوداود 3130 والنسائي 4568 وأحمد 20878 وفي بغية الحارث 1/306 والطبراني في الكبير 18381 صححه الحاكم والذهبي والألباني في الإرواء 6/127

(معاني المفردات)
1.  ( اِبْتَاعَ ): أَيْ اِشْتَرَى
2.  ( وَاسْتَتْبَعَهُ ) : أَيْ قَالَ لِلْأَعْرَابِيِّ اِتَّبِعْنِي
3.    ( فَطَفِقَ ): أَيْ أَخَذَ .
4.    ( فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ ): زَادَ اِبْن سَعْد فِي الطَّبَقَات : حَتَّى زَادَ بَعْضُهُمْ الْأَعْرَابِيَّ فِي السَّوْم عَلَى ثَمَن الْفَرَس الَّذِي اِبْتَاعَهُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ ، فَلَمَّا زَادَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ
5.  ( إِنْ كُنْت مُبْتَاعًا ) : أَيْ مَرِيدًا لِشِرَائِهِ أَيْ فَاشْتَرِ
6.  ( يَلُوذُونَ ) : أَيْ يَتَعَلَّقُونَ بِهِمَا وَيَحْضُرُونَ مُكَالَمَتهمَا
7.  ( هَلُمَّ شَاهِدًا ) : أَيْ هَاتِ شَاهِدًا عَلَى مَا تَقُول
8.  ( بِتَصْدِيقِك ) : أَيْ بِمَعْرِفَتِي أَنَّك صَادِق فِي كُلّ مَا تَقُول أَوْ بِسَبَبِ أَنِّي صَدَّقْتُك فِي أَنَّك رَسُول وَمَعْلُوم مِنْ حَال الرَّسُول عَدَم الْكَذِب فِيمَا يُخْبِر سِيَّمَا لِأَجْلِ الدُّنْيَا
9.  ( فَجَعَلَ ) : أَيْ فَحَكَمَ بِذَلِكَ وَشَرَعَ فِي حَقّه إِمَّا بِوَحْيٍ جَدِيد أَوْ بِتَفْوِيضِ مِثْل هَذِهِ الْأُمُور إِلَيْهِ مِنْهُ تَعَالَى
قال السِّنْدِيِّ :وَالْمَشْهُور أَنَّهُ رَدَّ الْفَرَس بَعْد ذَلِكَ عَلَى الْأَعْرَابِيّ فَمَاتَ مِنْ لَيْلَته عِنْده وَاَللَّه تَعَالَى أَعْلَم .

உமாரா இப்னு ஃகுஸைமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதீனாவின் சந்தையில் கிராமவாசி ஒருவரிடம் ஒரு குதிரையை விலை பேசினார்கள். ஆனால், பேசிய விலையைக் கொடுப்பதற்கு அப்போது கையில் அந்த தொகை இல்லை. ஆகவே, தம்மோடு வந்து அந்தக் குதிரைக்கான விலையைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்த கிராமவாசியைத் தம்மோடு அழைத்து வந்தார்கள்.

வருகிற வழியில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஏற்கனவே அந்த குதிரையை விலைபேசி விட்டார்கள் என்பதை அறியாத சிலர் அந்த கிராமவாசியை அணுகி தங்களுக்கு விலைக்குத் தருமாறு கேட்டனர்.

அவர்கள் தருவதாகச் சொன்ன அந்த விலை, நபிகளார் கேட்ட விலையை விட கூடுதலாக இருந்ததால் அதற்கு ஆசைப்பட்டு, முன்னால் சென்று கொண்டிருந்த நபிகளாரை அழைத்துஇந்த குதிரைக்கு பேசிய விலையை தருகின்றீரா? இல்லையா? இல்லையென்றால் இதை வேறொருவரிடம் நான் விற்று விடுகின்றேன்என்று சப்தமிட்டார்.

அதற்கு, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் கிராமவாசியே! ஏற்கனவே உம்மிடம் தான் நான் விலைபேசி விட்டேனே! அதைப் பெற்றுக் கொள்வதற்காகத் தானே எம்மோடு நீர் வந்து கொண்டிருக்கின்றீர்என்று கேட்டார்கள்.

அதற்கு, அந்த கிராமவாசியோஇல்லையே! அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெற வில்லையே? எப்போது நீர் விலை பேசினீர்!” என தடம் மாறிப் பேச ஆரம்பித்தார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோ, மிகவும் பொறுமையாகஇப்போது தானே இன்ன இடத்தில் வைத்து இன்ன விலைக்கு உம்மிடம் இந்த குதிரையை விலை பேசினேன்என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், அந்த கிராமவாசியும் பேசியதைக் கேட்ட மக்கள் அங்கே திரண்டனர்.

கூட்டம் கூடியதும், இப்போது அந்தக் கிராமவாசி தம் குரலை உயர்த்தி அதிகாரத்தோடுஅப்படியானால், நீர் என்னிடம் விலைபேசியதற்கு சாட்சி இருந்தால் கொண்டு வாரும் பார்ப்போம்!” என்றார்.

அப்போது, எதேச்சையாக அந்த வழியாக வந்த நபித்தோழர் ஃகுஸைமா இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் சூழ்நிலையை விளங்கிக் கொண்டுஅல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரிடம் விலைபேசியதை நான் கண்ணால் கண்டேன்என்று கூறினார்.

இதைக் கேட்டதும், அண்ணலார் {ஸல்} அவர்கள்நீர் தான் எங்களுக்குள் விவகாரம் நடைபெறும் போது இல்லையே! பின்னர் நீர் ஏன் சாட்சி சொல்ல வேண்டும்?” என்று வினவினார்கள்.

அப்போது, ஃகுஸைமா (ரலி) அவர்கள்உங்களை உண்மைபடுத்துவது எங்களின் மீது கடமை அல்லவா?” என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்

அப்போது, நபி {ஸல்} அவர்கள்ஃகுஸைமாவே! உம்மை தான் நாங்கள் சாட்சியாக வைத்து வியாபாரம் பேச வில்லையே பின்னர் நீர் ஏன் சாட்சி சொல்ல வேண்டும்”? என்று வினவினார்கள்.

அதற்கு, ஃகுஸைமா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! வானலோகத்துச் செய்திகளை எப்படி நாங்கள் நம்புகின்றோமோ, அது போன்றே இந்த கிராமவாசியின் விவகாரத்திலும் உங்களை நாங்கள் நம்புகின்றோம்என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பில்

அப்போது, ஃகுஸைமா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் பேசமாட்டீர்கள்என்பதை நான் மிகவும் அறிந்திருக்கின்றேன்.

எங்களின் வாழ்க்கை வழிகாட்டியான சத்திய சன்மார்க்கத்தின் நம்பிக்கையே நீங்கள் தானே! உங்களைத் தான் நாங்கள் நம்பிக்கையாளராகக் காண்கின்றோமே!” என்று கூறினார்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்இதோ இந்த ஃகுஸைமாவின் சாட்சியம் இருவரின் சாட்சியத்திற்கு ஒப்பானதுஎன்று கூறினார்கள்.

அல்லாமா ஸிந்திய்யி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்னர் நபி {ஸல்} அவர்கள் அந்தக் குதிரையை வாங்கவில்லை. அந்த வியாபாரத்தை முறித்துக் கொண்டார்கள். அன்றைய இரவே அந்த கிராமவாசி இறந்து போனார்.

                                              ( நூல்: அஹ்மத், அபூதாவூத் )

لقيتُ بلالًا مؤذِّنَ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ بحلبَ فقلتُ: يا بلالُ حدِّثني كيفَ كانت نفقةُ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ؟
 قالَ: ما كانَ لَهُ شيءٌ، كنتُ أَنا الَّذي ألي ذلِكَ منهُ منذُ بعثَهُ اللَّهُ إلى أن توُفِّيَ، وَكانَ إذا أتاهُ الإنسانُ مُسلمًا فرآهُ عاريًا، يأمرُني فأنطلقُ فأستقرِضُ فأشتري لَهُ البردةَ فأَكْسوهُ وأطعمُهُ حتَّى اعتَرضَني رجلٌ منَ المشرِكينَ،
 فقالَ: يا بلالُ، إنَّ عندي سَعةً، فلا تستقرِضْ من أحدٍ إلَّا منِّي، ففعلتُ فلمَّا أن كانَ ذاتَ يومٍ توضَّأتُ، ثمَّ قمتُ لأؤذِّنَ بالصَّلاةِ، فإذا المشرِكُ قد أقبَلَ في عصابةٍ منَ التُّجَّارِ، فلمَّا أن رآني، قالَ: يا حبشيُّ، قلتُ: يا لبَّاهُ فتجَهَّمَني، وقالَ لي قولًا غليظًا، وقالَ لي: أتدري كم بينَكَ وبينَ الشَّهرِ؟ قالَ: قُلتُ قريبٌ، قالَ: إنَّما بينَكَ وبينَهُ أربعٌ، فآخذُكَ بالَّذي عليكَ، فأردُّكَ تَرعى الغنمَ، كما كنتَ قبلَ ذلِكَ فأخذَ في نَفسي ما يأخذُ في أنفسِ النَّاسِ، حتَّى إذا صلَّيتُ العتَمةَ،
 رجعَ رسولُ اللَّهِ صلّى اللَّه عليه وسلَّمَ إلى أَهْلِهِ، فاستأذنتُ علَيهِ فأذنَ لي، فقلتُ: يا رسولَ اللَّهِ، بأبي أنتَ وأمِّي، إنَّ المُشْرِكَ الَّذي كنتُ أتديَّنُ منهُ، قالَ لي كذا وَكَذا، وليسَ عندَكَ ما تَقضي عنِّي، ولا عندي، وَهوَ فاضحي، فأذن لي أن آبَقَ إلى بعضِ هؤلاءِ الأحياءِ الَّذينَ قد أسلَموا، حتَّى يرزُقَ اللَّهُ رسولَهُ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ ما يَقضي عنِّي، فخرجتُ حتَّى إذا أتيتُ منزلي، فجعَلتُ سيفي وجرابي ونَعلي ومجنِّي عندَ رأسي، حتَّى إذا انشقَّ عمودُ الصُّبحِ الأوَّلِ أردتُ أن أنطلِقَ،
 فإذا إنسانٌ يسعَى يدعو: يا بلالُ أجب رسولَ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، فانطلقتُ حتَّى أتيتُهُ، فإذا أربعُ رَكائبَ مُناخاتٌ عليهنَّ أحمالُهُنَّ، فاستأذنتُ، فقالَ لي رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ: أبشِر فقد جاءَكَ اللَّهُ بقضائِكَ ثمَّ قالَ: ألم ترَ الرَّكائبَ المُناخاتِ الأربَع فقلتُ: بلى، فقالَ: إنَّ لَكَ رقابَهُنَّ وما عليهنَّ، فإنَّ عليهنَّ كسوةً وطعامًا أَهْداهنَّ إليَّ عظيمُ فدَكَ فاقبِضهنَّ، واقضِ دَينَكَ ففعلتُ،
 فذَكَرَ الحديثَ، ثمَّ انطلقتُ إلى المسجدِ، فإذا رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ قاعدٌ في المسجدِ فسلَّمتُ علَيهِ، فقالَ: ما فعلَ ما قِبلَكَ؟ قلتُ: قد قضى اللَّهُ كلَّ شيءٍ كانَ على رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، فلم يبقَ شيءٌ،
 قالَ: أفضَلَ شيءٌ؟ قلتُ: نعَم، قالَ: انظُر أن تريحَني منهُ، فإنِّي لستُ بداخلٍ على أحدٍ من أَهْلي حتَّى تريحَني منه فلمَّا صلَّى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ العتمةَ دعاني، فقالَ: ما فعلَ الَّذي قبلَكَ؟ قالَ: قلتُ: هوَ معي لم يأتِنا أحدٌ،
 فباتَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، في المسجدِ، وقصَّ الحديثَ حتَّى إذا صلَّى العتَمةَ يعني منَ الغدِ دعاني، قالَ: ما فعلَ الَّذي قبلَكَ؟ قالَ: قلتُ: قد أراحَكَ اللَّهُ منهُ يا رسولَ اللَّهِ، فَكَبَّرَ وحمدَ اللَّهَ شفَقًا من أن يُدْرِكَهُ الموتُ، وعندَهُ ذلِكَ، ثمَّ اتَّبعتُهُ، حتَّى إذا جاءَ أزواجَهُ فسلَّمَ على امرأةٍ، امرأةٍ حتَّى أتى مَبيتَهُ فَهَذا الَّذي سألتَني عنهُ
الراوي: عبدالله الهوزني المحدث: الألباني - المصدر: صحيح أبي داود - الصفحة أو الرقم: 3055, إسناده صحيح
      அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின்னர், முஸ்லிம் ஏழைகள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எவ்வாறு செலவுகள் செய்யப்பட்டன?” என்று பிலால் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது,

பிலால் (ரலி) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “எங்களிடையே ஏழைகளும், வழிப்போக்கர்களும் உதவி தேடி வருவர். அதுபோது எங்களிடம் எது இருக்குமோ அதைக் கொடுப்போம். எதுவும் இல்லாத போது நபி {ஸல்} அவர்கள் என்னிடத்தில் அந்த ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்திடுமாறு கூறுவார்கள்.

நானும் யாரிடமாவது கடன் வாங்கி அவர்களுக்கு உதவிகள் செய்வேன். பின்னர் நபி {ஸல்} அவர்களுக்கு தர்மப்பொருளோ, அல்லது அன்பளிப்புகளோ வருமானால் அதைக் கொண்டு கடனை அடைத்து விடுவேன். இது தான் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், மக்காவின் இணைவைப்பாளரான பெரிய செல்வந்தர் ஒருவர் என்னை ஒருபோது சந்தித்து உங்களின் விவகாரம் குறித்து நான் கேள்விபட்டேன்.

இனிமேல் நீங்கள் வேறுயாரிடமும் சென்று கடன் வாங்கவேண்டாம். என்னிடமே பெற்றுக் கொள்ளுங்கள். சொல்கிற தவணையில் சரியாகக் கொடுத்தால் போதும் என்றான்.

அவ்வாறே நானும் ஒரு சந்தர்ப்பத்தில் தவணையின் அடிப்படையில் கடன் பெற்றிருந்தேன்.

ஒரு நாள் பாங்கு சொல்வதற்காக உளூ செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு கடன் கொடுத்த அந்த முஷ்ரிக் சில நபர்களை அழைத்துக் கொண்டு என்னை நோக்கி ”ஓ கறுப்பு அடிமையே!” என்று சப்தமிட்டான். அந்த சப்தத்தைக் கேட்டு நான் நடுங்கிப்போனேன்.

அந்த முஷ்ரிக்கை நோக்கி “ஓ கொழுத்தவனே! என்னைப் பயமுறுத்தி விட்டாயே! என்று கேட்டேன்.

அதற்கு, அந்த முஷ்ரிக் ஓ! கறுப்பு அடிமையே! நான் உம்மீது இரக்கப்பட்டு கடனுதவி வழங்கினேன் என்று எண்ணிக் கொண்டாயா? ஒரு போதும் இல்லை. உமக்கு நான் கடன் தர வேண்டும். நீ அதைத் தர முடியாமல் தவிக்க வேண்டும். உன்னை நான் முன்பு போல அடிமைப் படுத்தி, ஒட்டகம் மேய்க்க விடவேண்டும்” என்று நினைத்தல்லவா? உமக்கு கடன் தந்தேன்” என்றான்.

அதற்கு நான் ”தவணை முடிய இன்னும் நான்கு நாட்கள் இருக்கத்தானே செய்கிறது?” அதற்கு முன் ஏன் இப்படி வந்து மிரட்டுகின்றாய்” என்று கூறினேன். அதனைக் கேட்ட அவன் நான்கு நாட்கள் கழித்து வருவதாக சொல்லி விட்டுச் சென்றான்.

எனக்கு என் முந்தைய அடிமை வாழ்க்கையும், அவனுடைய மிரட்டலும் கண் முன் வரவே பயந்து போய் நபிகளாரின் சபைக்கு ஓடோடி வந்து நடந்தவற்றை நபி {ஸல்} அவர்களிடம் விளக்கிக் கூறி விட்டு, அல்லாஹ்வின் தூதரே! நான் நான்கு நாட்கள் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிற எங்காவது தலைமறைவாக இருக்க விரும்புகின்றேன்.

உங்களிடம் தர்மப்பொருளோ, அல்லது அன்பளிப்புகளோ வந்து விட்டதென்றால் நான் வந்து அதைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து விடுகின்றேன்” என்றேன்.

அதுகேட்ட அண்ணலார், மிகவும் மௌனமாக இருந்தார்கள். அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு வந்த நான் வெளியூர் செல்வதற்கு தயாரானேன்.

அப்போது, என்னிடம் ஒருவர் வந்து பிலால் அவர்களே உங்களை நபி {ஸல்} அவர்கள் வரச் சொன்னார்கள். உடனடியாக செல்லுங்கள் என்றார்.

நானும் உடனடியாக நபிகளாரைக் காண மஸ்ஜிதுன் நபவீக்கு வந்தேன். பள்ளிக்கு வெளியே நான்கு ஒட்டகங்களும் அதன் மீது சாதனங்கள் அடங்கிய மூட்டைகளும் இருக்கக் கண்டேன்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் முகம் மலர்ந்தவர்களாக இருக்கக் கண்டேன்.

என்னைப் பார்த்ததும் நபி {ஸல்} அவர்கள் “பிலாலே சோபனத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! பள்ளிக்கு வெளியே நான்கு ஒட்டகைகளைப் பார்த்தீர்களா?” இப்போதே அதை ஓட்டிச் சென்று யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து விட்டு எனக்கு மன நிம்மதியை ஏற்படுத்துங்கள்” என்றார்கள்.

நானும் மகிழ்ச்சியோடு வெளியே வந்து “யார் யாருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சார்பாக கடன் பெறப்பட்டுள்ளதோ அவர்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று பொது அறிவிப்புச் செய்தேன்.

பின்னர் அந்த முஷ்ரிக்கிடம் சென்று அவனுக்கு தரவேண்டிய கடனையும் கொடுத்து விட்டு பள்ளிக்கு வந்தேன்.

என்னைப் பார்த்த நபிகளார் என்ன பிலாலே எல்லா சாதனங்களும் தீர்ந்து விட்டதா? நான் மன நிம்மதி பெற்று விடுவேனா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இன்னும் கொஞ்சம் பொருட்கள் இருக்கின்றன” என்றேன். அப்படியானால் சீக்கிரம் கொண்டு கொடுத்து விட்டு வாருங்கள்” என்றார்கள் நபி {ஸல்} அவர்கள்.

இப்படியாக இரண்டு நாட்கள் நபி {ஸல்} அவர்கள் வீட்டிற்கே செல்லவில்லை. பள்ளியிலேயே இருந்து விட்டார்கள். நானும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையுடையோர்களைத் தேடிப் பிடித்துச் சென்று உதவிகளைச் செய்தேன்.

மூன்றாவது நாள் இரவு நேரமும் வந்தது. அண்ணலார் முன்பு போலவே என்னிடம் கேட்டார்கள். வெளியே செல்லுங்கள் பிலாலே! வெளியில் தேவையுடையோர் யாராவது தென்பட்டால் அவர்களிடம் கொடுத்து விட்டு என் சுமையைக் கொஞ்சம் குறையுங்கள்” என்றார்கள்.

இறுதியாக, ஒரு பிரயாணக்குழுவொன்று வந்தது. அவர்களில் தேவையுடையோருக்கு உண்வும், ஆடையும் கொடுத்த பின் என்னிடம் இருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து போயின.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சென்று நான் சொன்னேன். அதைக் கேட்டதும் அண்ணல் {ஸல்} அவர்கள் தக்பீர் கூறியவர்களாக, அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக பள்ளியை விட்டு எழுந்து சென்றார்கள்.

தங்களின் மனைவியர்களின் வீடுகளின் முன்பு நின்று ஸலாம் கூறி இன்று யார் வீட்டில் தங்கும் முறை என்று கேட்டு விட்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூன்று இரவு மற்றும் மூன்று பகலாக எந்த மனைவியரின் வீட்டிற்கும் செல்லவில்லை. பள்ளியிலேயே தங்கியிருந்தார்கள்.

                                                       ( நூல்; அபூதாவூத் )

மேற்கூறிய இரு நிகழ்வுகளிலும் அண்ணலார் நம்பகத்தன்மை விஷயத்தில் காட்டிய பேணுதல் நமக்கு மிகப்பெரிய பாடமாய் அமைந்திருக்கின்றது.

ஏனெனில், நபிகளார் நபியாக அனுப்பப்படுவதற்கு முன் அந்த மக்களிடையே நம்பகத்தன்மையின் உச்சத்தைப் பெற்றிருந்தார்கள்.

அஸ்ஸாதிக் உண்மையாளர் என்றும், அல் அமீன் நம்பிக்கையாளார் என்றுமே அறியப்பட்டார்கள்.

நம்பகத்தன்மை இல்லாதவன் நயவஞ்சகன் என்றும், ஈமான் இல்லாதவன் என்றும் உணர்த்திய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த நம்பகத்தன்மையின் விஷயத்தில் மிகப்பெரிய பேணுதலைக் கடைபிடித்தார்கள்.

ஆகவே, நம்பகத்தன்மையோடு வாழ்வோம்!

ஈமானை இழக்கச்செய்திடும், நயவஞ்சகர்களில் ஒருவாராக மாற்றி விடும் அபாயகரமான குற்றச் செயல்களில் இருந்து பாதுகாத்திட அல்லாஹ்வே போதுமானவன்.

                        வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. உங்கள் இல்மை அல்லாஹ் மேலும் வளம் பெறச் செய்ய துஆச் செய்கிறோம், ஆமீன்.

    ReplyDelete
  2. மவ்லானா! கட்டுரை அருமையாய் அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமை அருமை

    ReplyDelete