Thursday, 14 May 2015

அழுகையும், சிரிப்பும் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகள்!



அழுகையும், சிரிப்பும் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகள்!



அழுகையும் சிரிப்பும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுகிற சுபாவங்களில் ஒன்றாகும்.

கவலையும், துக்கமும், கஷ்டமும், நோவினையும் ஏற்படுகிற போது மனிதன் அழுகின்றான்.

மகிழ்ச்சியும், சந்தோஷமும், இன்பமும், வெற்றியும் ஏற்படுகிற போது மனிதன் சிரிக்கின்றான்.

யதார்த்தத்தில் இது மனிதனுக்கு ஏற்படுகிற உணர்வாக இருந்தாலும் கூட உண்மையில் அழவைப்பவனும், சிரிக்கவைப்பவனும் இறைவன் தான் என்று இஸ்லாம் போதிக்கின்றது.

وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى ()

மேலும், அவனே சிரிக்க வைக்கின்றான்; அவனே அழவும் வைக்கின்றான்
                                                       ( அல்குர்ஆன்: 53:43 )

ஏனெனில், எந்த ஒரு மனிதனாலும் நான் சாகும் வரை சிரிக்கவே மாட்டேன் என்றோ, நான் சாகும் வரை அழவே மாட்டேன் என்றோ உறுதியிட்டுக் கூற முடியாது.

மனித வாழ்க்கையை அல்லாஹ் இத்தகைய உணர்வுகள் சுழன்று வரும் வகையிலேயே அமைத்திருக்கின்றான்.

ஆகவே, மனிதன் அழுவதாகட்டும், சிரிப்பதாகட்டும் அதனதன் எல்லைகளில், வரம்புகளில் நின்று கொள்ள வேண்டும் என்றும், அதற்காக நாளை மறுமையில் கூலி வழங்கப்படும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ ()

அவர்கள் குறைவாக சிரிக்கட்டும்; அதிகமாக அழட்டும்! ஏனெனில், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றின் அளவு கூலி கொடுக்கப்படுவார்கள்”.
                                                        ( அல்குர்ஆன்: 9:82 )

அல்லாஹ் சிரிக்கின்றான்….

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّاسَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تُضَارُّونَ فِى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ » . قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ « فَهَلْ تُضَارُّونَ فِى الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ » . قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ « فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ ………،
ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ ، وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ هُوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولاً الْجَنَّةَ فَيَقُولُ أَىْ رَبِّ اصْرِفْ وَجْهِى عَنِ النَّارِ ، فَإِنَّهُ قَدْ قَشَبَنِى رِيحُهَا وَأَحْرَقَنِى ذَكَاؤُهَا . فَيَدْعُو اللَّهَ بِمَا شَاءَ أَنْ يَدْعُوَهُ ثُمَّ يَقُولُ اللَّهُ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَنِى غَيْرَهُ . فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ ، وَيُعْطِى رَبَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ مَا شَاءَ ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ ، فَإِذَا أَقْبَلَ عَلَى الْجَنَّةِ وَرَآهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ قَدِّمْنِى إِلَى بَابِ الْجَنَّةِ . فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَنِى غَيْرَ الَّذِى أُعْطِيتَ أَبَدًا ، وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ . فَيَقُولُ أَىْ رَبِّ . وَيَدْعُو اللَّهَ حَتَّى يَقُولَ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ . فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ ، وَيُعْطِى مَا شَاءَ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ ، فَيُقَدِّمُهُ إِلَى بَابِ الْجَنَّةِ ، فَإِذَا قَامَ إِلَى بَابِ الْجَنَّةِ انْفَهَقَتْ لَهُ الْجَنَّةُ فَرَأَى مَا فِيهَا مِنَ الْحَبْرَةِ وَالسُّرُورِ ، فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ أَدْخِلْنِى الْجَنَّةَ . فَيَقُولُ اللَّهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ مَا أُعْطِيتَ - فَيَقُولُ - وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ . فَيَقُولُ أَىْ رَبِّ لاَ أَكُونَنَّ أَشْقَى خَلْقِكَ فَلاَ يَزَالُ يَدْعُو حَتَّى يَضْحَكَ اللَّهُ مِنْهُ فَإِذَا ضَحِكَ مِنْهُ قَالَ لَهُ ادْخُلِ الْجَنَّةَ . فَإِذَا دَخَلَهَا قَالَ اللَّهُ لَهُ تَمَنَّهْ . فَسَأَلَ رَبَّهُ وَتَمَنَّى حَتَّى إِنَّ اللَّهَ لَيُذَكِّرُهُ يَقُولُ كَذَا وَكَذَا ، حَتَّى انْقَطَعَتْ بِهِ الأَمَانِىُّ قَالَ اللَّهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ » .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிற நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிக்கும் போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் எஞ்சியிருப்பார். அவர் தான் சுவனத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார்.

அவர், “என் இறைவா! என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக! அதன் வெப்பக் காற்றால் என் மூச்சு அடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்து விட்டது.” என்று கூறுவார்.

பின்னர் அல்லாஹ்விடம் எதைச் சொல்லி பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.

பிறகு அல்லாஹ் அவரிடம்நீ கேட்பதை நான் நிறைவேற்றினால் இதுவல்லாத இன்னொன்றையும் நீ கேட்கக் கூடும் அல்லவா?” என்று வினவுவான். அதற்கவர், இல்லை என் இறைவா! உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் கேட்கப்போவதில்லைஎன்று கூறி இறைவன் நாடிய வாக்குறுதிகளையும், உறுதி மொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார்.

அதன் பின்னர் அல்லாஹ் அவரின் முகத்தை நரகத்தை விட்டு வேறு பக்கம் திருப்பி விடுவான். அவர் சுவனத்தை முன்னோக்கி பார்வையை செலுத்தும் போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அவர் அமைதியாக இருப்பார்.

பிறகு, “என் இறைவனே! சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ் அவரிடம்உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒரு போதும் என்னிடம் கேட்கமாட்டேன் என முன்னர் உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் நீ என்னிடம் வழங்கவில்லையா?” என்று கேட்டு விட்டு, மனிதா உனக்கு கேடுதான்! உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கேட்பான்.

அதற்கவர், “இல்லை உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன்எனக் கூறிவிட்டு,  இறைவன் நாடிய வாக்குறுதிகளையும், உறுதி மொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார்.

ஆகவே, அல்லாஹ் அவரை சுவனத்தின் வாசல் வரை கொண்டு செல்வான். சுவனத்து வாசலின் முன்புறம் அவர் நிற்கும் போது சுவனத்தின் வாசல் அவருக்காக திறக்கும். அப்போது, அவர் சுவனத்து சுக போகங்களை சுவனவாசிகள் அனுபவிப்பதைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய நேரம் வரை அமைதியாக நிற்பார்.

பிறகு, “என் இறைவா! என்னை சுவனத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கூறுவார். அப்போது, அல்லாஹ் அவரிடம்உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒரு போதும் என்னிடம் கேட்கமாட்டேன் என முன்னர் உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் நீ என்னிடம் வழங்கவில்லையா?” என்று கேட்டு விட்டு, மனிதா உனக்கு கேடுதான்! உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கேட்பான்.

அதற்கவர், “என் இறைவா! உன் படைப்புகளிலேயே துர்பாக்கியசாலியாக நான் ஆகிவிடக்கூடாதுஎன்று பிரார்த்திக் கொண்டே இருப்பார். இறுதியில் அல்லாஹ் அவரின் செயல் கண்டு சிரித்து விடுவான். அவரைக் கண்டு சிரித்த அந்தக் கணத்திலேயேசுவனத்தில் நுழைந்து கொள்என்று கூறுவான்.

சுவனத்தில் அவர் நுழைந்த பின்னர்நீ விரும்பியதை ஆசைப்படுஎன்று அல்லாஹ் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார்.

இறுதியில், அல்லாஹ்வே அவருக்கு ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாக நினைவு படுத்திஇன்னதை நீ ஆசைப்படு, இன்னின்னதை நீ ஆசைப்படுஎன்று கூறுவான்.

கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். அதன் பின்னர் அல்லாஹ், “நீ விரும்பிக் கேட்ட இதுவும் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்என்று கூறுவான்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில்

فيسمع أصوات أهل الجنة فيقول : أي رب أدخلنيها ، فيقول : يا ابن آدم ، ما يصريني منك ؟ أيرضيك أن أعطيك الدنيا ومثلها معها ؟ قال : يا رب أتستهزئ مني وأنت رب العالمين ؟ فضحك ابن مسعود ، فقال : ألا تسألوني مم أضحك ؟ فقالوا : مم
تضحك ؟ قال : هكذا ضحك رسول الله ( صلى الله عليه وآله ) ، فقالوا : مم تضحك يا رسول الله ؟ قال ( صلى الله عليه وآله ) : من ضحك رب العالمين حين قال : أتستهزئ مني وأنت رب العالمين ؟ فيقول : إني لا أستهزئ منك ،

தங்களிடம் பயின்ற மாணவர்களிடையே ஒரு நாள் இந்தச் செய்தியை அறிவிக்கும் போது

அவர் சுவனத்தில் நுழைந்ததும், அல்லாஹ் அவரைப் பார்த்து



        ( நூல்: புகாரி, பாபு கவ்லில்லாஹிஉஜூஹுய் யவ்மயிதின் நாளிரா” )

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ இரு மனிதர்களின் விஷயத்தில்அல்லாஹ் சிரிக்கின்றான் ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்கிறார் இவரும், கொலை செய்யப்பட்டவரும் சுவர்க்கத்தில் நுழைவதைக் கண்டு அல்லாஹ் சிரிக்கின்றான்என்று நபி {ஸல்} அவர்கள் தம் தோழர்கள் நிரம்பியிருந்த ஓர் சபையில் கூறிய போது...

அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி சாத்தியமாகும்?” என்று நபித்தோழர்கள் வினவ, அதற்கு நபி {ஸல்} அவர்கள்போர்க்களத்தில் எதிரும் புதிருமாக இரு அணிகளில் உள்ள இருவர், ஒருவர் அல்லாஹ்வின் சத்திய சன்மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலந்து கொண்டவர். மற்றொருவர், சத்திய இஸ்லாம் மேலோங்கக் கூடாது எனும் முனைப்போடு எதிர்க் களத்தில் பங்கு பெற்றவர்.

எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கலந்து கொண்டவரை களத்தில் கொலை செய்கிறார். அவருக்கு ஷஹீத் உடைய அந்தஸ்து வழங்கப்படுகிறது. அவர் சுவனத்தில் நுழைவிக்கப் படுகிறார்.

பின்நாளில், எதிர் களத்தில் பங்கு பெற்றவர் இஸ்லாத்தைத் தழுவுகின்றார். பின்னர் தாம் எதிரும் புதிருமாய் இருந்த காலத்தில் யுத்த களத்தில் செய்த கொலைக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பாச் செய்கிறார்.

அல்லாஹ் அவருக்கும் ஓர் நற்பேற்றை வழங்குகின்றான். அவர் சத்திய சன் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்கிற அடிப்படையில் நடக்கிற யுத்தத்தில் கலந்து கொண்டு தீனுக்காக தம் உயிரை அர்ப்பணிக்கிறார், ஷஹீதாகின்றார். எனவே, இவரும் சுவனத்தில் நுழைவிக்கப்படுகின்றார்என்று கூறிய அண்ணலார் இதன் காரணத்தினாலேயே அல்லாஹ் சிரிக்கின்றான்என்று கூறினார்கள்.
                                                        ( நூல்: அபூதாவூத் )

உதாரணத்திற்கு ஹம்ஸா (ரலி) அவர்களை இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் வஹ்ஷீ (ரலி) அவர்கள் கொலை செய்திருப்பார்கள். இஸ்லாத்திற்கு வந்த பின்னர் யமாமா யுத்தத்தில் பொய்யன் முஸைலமாவை கொன்று விட்டு அந்தப் போரில் தாமும் ஷஹீத் ஆகிவிடுவார்கள்.

(حديث مرفوع) حَدَّثَنَا مُحَمَّدٌ مِنْ لَفْظِهِ ، حَدَّثَنِي أَبُو الْمَيْمُونِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدٍ الْمُعَدَّلُ , مِنْ لَفْظِهِ سَنَةَ ثَمَانٍ وَتِسْعِينَ وَثَلاثِ مِائَةٍ ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عِيسَى أَبُو الْعَبَّاسِ الْعَمَّارِيُّ بِالأَثَارِبِ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْعَمِّيُّ ، حَدَّثَنَا هُشَيْمٌ ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ ، عَنْ أَبِي الْوَدَّاكِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلاثَةٌ يَضْحَكُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ : الرَّجُلُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يُصَلِّي ، وَالْقَوْمُ إِذَا صَفُّوا لِلصَّلاةِ ، وَالْقَوْمُ إِذَا صَفُّوا لِقِتَالِ الْعَدُوِّ " . غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ سَعْدِ بْنِ مَالِكِ بْنِ سِنَانٍ الْخُدْرِيِّ ، لا أَعْلَمُ حَدَّثَ بِهِ عَنْهُ غَيْرَ أَبِي الْوَدَّاكِ جَبْرِ بْنِ نَوْفٍ ، وَمَا كَتَبْنَاهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ ، وَحَدَّثَ بِهِ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ، عَنْ رَجُلٍ عَن هُشَيْمٍ ، فَكَأَنِّي سَمِعْتُهُ مِنْ عَبْدِ اللَّهِ ابْنِهِ .

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மூன்று வகை மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ் சிரிப்பான். முதல் வகையினர், இரவில் நின்று வணங்கிய வணக்கசாலிகள். இரண்டாம் வகையினர், தொழுகைக்காக ஸஃப்ஃபில் அணிவகுத்து நின்றவர்கள். மூன்றாம் வகையினர், போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திப்பதற்காக அணிவகுத்து நின்றவர்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                ( நூல்: இப்னு மாஜா )

وأما ما ذكرته من كون الله تعالى إذا ضحك لعبد فلا حساب عليه، فقد روى أحمد في مسنده هذا الحديث وصححه الألباني رحمه الله ولفظه: وإذا ضحك ربك إلى عبد في الدنيا فلا حساب عليه.

அல்லாஹ் சிரிக்கிறான் என்பதற்கு என்ன பொருள் என்பதை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் விளக்கம் தருகிற போதுஎவரைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றானோ அவரை அல்லாஹ் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் நுழைவித்து விடுவான்என கூறினார்கள்.                        ( நூல்: அஹ்மத் )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் சிரித்திருக்கின்றார்கள்….

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - إِذْ جَاءَهُ رَجُلٌ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ . قَالَ « مَا لَكَ » . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِى وَأَنَا صَائِمٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا » . قَالَ لاَ . قَالَ « فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ » . قَالَ لاَ . فَقَالَ « فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا » . قَالَ لاَ . قَالَ فَمَكَثَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِىَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالْعَرَقُ الْمِكْتَلُ - قَالَ « أَيْنَ السَّائِلُ » . فَقَالَ أَنَا . قَالَ « خُذْهَا فَتَصَدَّقْ بِهِ » . فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّى يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الْحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِى ، فَضَحِكَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ « أَطْعِمْهُ أَهْلَكَ » .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் அமர்ந்திருந்த சபைக்கு ஸுலைமான் இப்னு ஸஃக்ர் அல்பயாளீ (ரலி) எனும் நபித்தோழர் வந்தார். வந்தவர்அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்உமக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார்கள். நான் ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு என் மனைவியுடன் பகலில் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்என்று ஸுலைமான் (ரலி) பதில் கூறினார்கள்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள்இதற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கவர்என்னால் இயலாதுஎன்றார்.

அப்படியானால், ”இரண்டு மாதங்கள் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும் உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்என்னால் இயலாதுஎன்று கூறிவிட்டார்.

அப்படியென்றால், அதற்குப் பரிகாரமாகஅறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்என்னால் இயலாதுஎன்று கூறி விட்டார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கொஞ்ச நேரம் அப்படியே எங்களுடனே அமர்ந்திருந்தார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்பாக பேரீத்தம் பழங்கள் நிறைந்தஅரக்எனும் பெரிய கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ”இதோ நான் இங்கிருக்கின்றேன்என்று கூறி ஓரிடத்திலிருந்து எழுந்து நபி {ஸல்} அவர்களின் அருகே வந்தார்.

பேரீத்தம் பழக்கூடையை நீர் எடுத்துச் சென்று உம்முடைய அந்தச் செயலுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, அவர்அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்குத் தானே நான் தர்மம் செய்ய வேண்டும்?” அப்படியானால், இதோ தெரிகிற மதீனாவின் இரு கரும்பாறைகளுக்குமலைகளுக்கு இடையே வசிப்போரில் என் குடும்பத்தாரை விடப் பரம ஏழை யாருமில்லைஎன்று கூறினார்.

இதைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள்தங்களது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்; பிறகு, “இதை உம் குடும்படத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்று கூறினார்கள்.                          ( நூல்: புகாரீ, முஸ்லிம் )

ஆக வாழ்வில் யதார்த்தமாக நடக்கிற நிகழ்வின் போதோ, நகைச்சுவையான சம்பவங்களின் போதோ சிரிப்பது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இந்த உம்ம்த்திற்கு தெளிவானதொரு வழியைக் காண்பித்து இருக்கின்றார்கள்.

ஆனால், சதா எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது, பிறரை கேலி செய்து சிரிப்பது, பிறர் துன்பத்தைக் கண்டு சிரிப்பது, நயவஞ்சகத்தோடு சிரிப்பது, பொய்யாகச் சிரிப்பது போன்ற சிரிப்புக்களை இஸ்லாம் விமர்சிக்கிறது. சில சிரிப்புக்களால் பாவங்கள் உருவாகும் என எச்சரிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களை நோக்கி ”அபூஹுரைராவே! பேணுதலைக் கடைபிடித்து வருவீராக! நீர் ஏனைய மக்களை விட உயர்ந்த வணக்கசாலி ஆகிவிடுவீர்! போதுமென்ற மனத்தைக் கொண்டவராக வாழ்வீராக! ஏனைய மக்களை விட அல்லாஹ்விற்கு அதிகம் நன்றி செலுத்துபவராக ஆகிவிடுவீர்! உமக்கு விரும்புவதையே நீர் பிறர் விஷயங்களிலும் விரும்புவீராக! நீர் முழுமையான இறைநம்பிக்கையாளனாக ஆகிவிடுவீர்! உமக்கு தீங்கிழைத்தோருக்கும் நீர் நலவை நாடுவீராக! நீர் முழுமையான முஸ்லிமாக ஆகிவிடுவீர்!

அபூஹுரைராவே! குறைவாகவே சிரிப்பீராக! ஏனெனில், அதிகமாகச் சிரிப்பது உள்ளத்தை  ( மௌத்தாக்கி விடுகிறது) சரிவர இயங்கவிடாமல் செய்து விடுகிறது” என்று கூறினார்கள்.                                         ( நூல்: இப்னு மாஜா )

قال الفقيه ابو الليث السمرقندي :اياك وضحك القهقهة فان فيه ثمانيا من الافات
اولها :ان يذمك العلماء والعقلاء
الثانيه: ان يجترئ عليك السفهاء والجهال
والثالثة : انك لو كنت جاهلا ازداد جهلك وان كنت عالما نقص علمك
والرابعة : ان فيه نسيان الذنوب الماضية
والخامسة : فيه جراءة على الذنوب في المستقبل لانك اذا ضحكت يقسو قلبك
والسادسة : ان فيه نسيان الموت وما بعده من امر الاخرة
والسابعة : ان عليك وزر من ضحك بضحكك
والثامنة : انه يجزي بالضحك القليل بكاء كثيرا في الاخرة

அல்லாமா அபுல்லைஸ் அஸ்ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மை சப்தமாகச் (வெடிச் சிரிப்பு) சிரிப்பதன் விஷயத்தில் எச்சரிக்கின்றேன். ஏனெனில், அதன் காரணத்தால் எட்டு விதமான பேராபத்துகள் ஏற்படுகின்றன.

1. உம்மை அறிவுடையோரும், ஆலிம்களும் சபிப்பார்கள்.
2. உம் விஷயத்தில் அறிவிழந்தோரும், மடையர்களும் துணிவு பெற்றிடுவார்கள்.
3. நீர் அறிவிலியாக இருந்தால் உம் அறியாமை இன்னும் அதிகரிக்கும். நீர் கற்றறிந்தவனாக, ஆலிமாக இருந்தால் உம் கல்வி குறைந்து விடும்.
4. கடந்த காலத்தில் செய்த பாவங்கள் மறந்து விடும்.
5. எதிர் காலத்தில் பாவம் செய்வதின் மீது உமக்கு துணிவு ஏற்பட்டு விடும். ஏனெனில், உள்ளம் தான் இயங்காமல் இருக்கிறதே.
6. மரணத்தைப் பற்றிய ஞாபகமோ, மறுமையைப் பற்றிய சிந்தனையோ உமக்கு இருக்காது.
7. நீர் சிரித்த உம் சிரிப்பால் உம்மீது ஒரு பாவம் எழுதப்படுகின்றது.
8. மறுமையில் அல்லாஹ் உம்மை அழுகையைக் கொண்டு சோதிப்பான்.

                              ( தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம் 1, பக்கம்: 152 )

وروى عن ابن عباس رضي الله عنه أنه قال : من أذنب وهو يضحك دخل النار وهو يبكي .

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “எவனொருவன் சிரித்துக் கொண்டே பாவத்தில் ஈடுபடுகின்றானோ அவன் அழுது கொண்டே நரகில் நுழைவான்”.

قال يحيى بن معاذ الرازي رحمه الله : أربع خصال لم يبقين للمؤمن ضحكاً ولا فرحاً : همّ المعاد - يعني همّ الآخرة . وشغل المعاش ، وغم الذنوب ، وإلمام المصائب .

யஹ்யா இப்னு முஆத் அர்ராஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான்கு அம்சங்கள் ஓர் இறைநம்பிக்கையாளனை சிரிக்கவோ, மகிழ்ச்சியாக இருக்கவோ விடாது.

1. மறுமை பற்றிய கவலை. 2. உலக வாழ்வு சம்பந்தமாக உழைப்பில் ஈடுபடுவது. 3. பாவத்தை நினைத்து கவலை கொள்வது. 4. சோதனைகளில் உழன்று கொண்டிருப்பது. இந்நான்கு அம்சங்களைக் கொண்டிருக்கிற் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வென்பது சிரிப்பதற்கான அவகாசத்தையே தராது. ஆகவே, இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் உம்மை ஈடுபடுத்து, அது உம்மை சிரிப்பதில் இருந்தும் காப்பாற்றி விடும். ஏனெனில், சிரிப்பு என்பது இறைநம்பிக்கையாளனின் குணமோ, அடையாளமோ அல்ல.”

                        ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 148 )

وَقِيلَ : مَرَّ الْحَسَنُ الْبَصْرِيُّ بِشَابٍّ وَهُوَ يَضْحَكُ ، فَقَالَ لَهُ : يَا بُنَيَّ هَلْ جُزْتَ عَلَى الصِّرَاطِ ؟ قَالَ : لَا فَقَالَ : هَلْ تَبَيَّنَ لَكَ ، إِلَى الْجَنَّةِ تَصِيرُ أَمْ إِلَى النَّارِ ؟ قَالَ : لَا.

قَالَ : فَفِيمَ هَذَا الضَّحِكُ ؟ قَالَ : فَمَا رُؤِيَ الْفَتَى ضَاحِكًا بَعْدَهُ قَطُّ.

يَعْنِي أَنَّ قَوْلَ الْحَسَنِ وَقَعَ فِي قَلْبِهِ فَتَابَ عَنِ الضَّحِكِ.

ஒரு நாள் இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் இளைஞன் ஏதோ ஒரு காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனிடம், ஓ மகனே! நீ ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து விட்டாயா? என்று கேட்டார். அவன், ”இல்லை” என்றான்.

நீ சுவனம் செல்வாயா? அல்லது நரகம் செல்வாயா? என்பது உமக்கு தீர்மானமாகத் தெரிந்து விட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கவன் “இல்லை” என்றான். அப்படியென்றால், எதற்காக நீ இப்படிச் சிரிக்க வேண்டும்? என்று மீண்டும் கேட்டார்கள்.

இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகின்றார்கள்: “ இந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்த இளைஞனை சிரிப்பவனாக ஒரு போதும் நான் கண்டதில்லை. நான் கூறிய நல்லுபதேசம் அவனுடைய உள்ளத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றது.”

                        ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 149 )

பிறரைக் கேலி செய்து சிரிப்பது….

”இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம், கேலி செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம், கேலி செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம்.                                  ( அல்குர்ஆன்: 49:11 )

புஹ்லூல் மஃப்தூன் என்கிற மாமேதை இவர்கள் ஹாரூன் ரஷீத் அவர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்கள். புஹ்லூல் (ரஹ்) அவர்களை சக காலத்தில் வாழ்ந்த எல்லா மேதைகளும், அறிஞர்களும் மரியாதையும், கண்ணியமும் செலுத்தி வந்திருக்கின்றனர்.

ஆனால், மக்களும் நாடும் அவரை பைத்தியக்காரன் என்றே அழைத்தது. இதற்கு ஆட்சியாளர் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களும் விதிவிலக்கல்ல. அவரும் புஹ்லூல் (ரஹ்) அவர்களை பைத்தியக்காரன் என்றே அழைத்தார்.

يحكى أن بهلول كان رجلا مجنونا فى عهد الخليفة العباسي هارون الرشيد ..
ومن طرائف بهلول أنه مرعليه الرشيد يوما وهو جالس على إحدى المقابر ..
فقال له هارون معنفا "
يا بهلول يا مجنون متى تعقل ؟ "
فركض بهلول وصعد إلى أعلى شجرة ثم نادى على هارون بأعلى صوته "
ياهارون يا مجنون متى تعقل ؟"
فأتى هارون تحت الشجرة وهو على صهوة حصانه وقال له " أنا المجنون أم أنت
الذى يجلس على المقابر "
فقال له بهلول " بل أنا عاقل "
قال هارون وكيف ذلك ؟
قال بهلول "
لأنى عرفت أن هذا زائل
وأشار إلى قصر هارون
وأن هذا باق وأشار إلى القبر ،
فعمرت هذا قبل هذا ،
وأما أنت فإنك قد عمرت هذا ( يقصد قصره ) وخربت هذا ( يعنى القبر ) ..
فتكره أن تنتقل من العمران إلى الخراب
مع أنك تعلم أنه مصيرك لامحال ،
وأردف قائلا " فقل لي أينا المجنون ؟" ،
فرجف قلب هارون الرشيد من كلمات بهلول وبكى حتى بلل لحيته وهو يقول " والله إنك لصادق .."
ثم قال هارون زدنى يا بهلول
فقال بهلول " يكفيك كتاب الله فالزمه . "
قال هارون " ألك حاجة فأقضيها "
قال بهلول: نعم ثلاث حاجات إن قضيتها شكرتك
قال فاطلب ،
قال : " أن تزيد فى عمري "
قال : "لا اقدر "
قال : أن تحميني من ملك الموت
قال : لا أقدر
قال :" أن تدخلنى الجنة وتبعدنى عن النار "
قال : " لا أقدر "
قال : فاعلم انت مملوك ولست ملك " ولاحاجة لي عندك "

ஒரு முறை அரசு முறை பயணமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த கலீஃபா ஹாரூன் அவர்களின் பார்வையில் அந்தக் காட்சி தென்படுகிறது.

பார்வையில் பட்ட அந்த இடத்தை நோக்கி வந்தார்கள். அது ஒரு மண்ணறை அங்கே புஹ்லூல் (ரஹ்) அமர்ந்து அழுது கொண்டிருக்கின்றார்.

அருகே வந்த ஹாரூன் அவர்கள் “பைத்தியக்காரரே! எப்போது உமது பைத்தியம் தெளிந்தது. எப்போது நீர் அறிவு பெற்றீர் என்று கேலியாகக் கேட்டார்.

அப்போது, அருகில் இருந்த மரத்தில் ஏறி, மரத்தின் மத்தியப் பகுதியில் அமர்ந்து கொண்டு மன்னர் ஹாரூனை சப்தமாக அழைத்தார்.

மன்னர் குதிரையில் அமர்ந்தபடி, மரத்தின் அருகே வந்தார். அப்போது மன்னரை நோக்கி “ஓ பைத்தியக்கார மன்னனே! எனக்கு இப்போது பைத்தியம் தெளிந்து விட்டது. உமக்கு எப்போது பைத்தியம் தெளியப்போகிறது?” என்று கேட்டார்.

அதிர்ந்து போன மன்னர் ஹாரூன், ஆவேசமாக புஹ்லூல் (ரஹ்) அவர்களை நோக்கி “உம்மைத் தான் ஊர் மக்கள் பைத்தியம் என்று சொல்கின்றார்கள். நீ பைத்தியமா? அல்லது நான் பைத்தியமா?” என்று கேட்டார்.

அதற்கு, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் ”நான் தெளிவோடு தான் இருக்கின்றேன். நீர் தான் பைத்தியக்காரனாய் அலைகின்றீர்” என்றார்.

எப்போது நீர் பைத்தியத்திலிருந்து தெளிவு பெற்றீர் என மன்னர் புஹ்லூலை நோக்கி கேட்ட போது மன்னனின் மாளிகை இருந்த இடத்தைக் காட்டி “இது அழிந்து போகும்” மண்ணறையைக் காட்டி “இது தான் நிரந்தரமானது” என்பதை நான் எப்போது உணர்ந்தேனோ அப்போதே நான் தெளிவு அடைந்து விட்டேன். மேலும், அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக வாழாமல் நிரந்தரமான இந்த மண்ணறை வாழ்க்கைக்காக வாழ ஆரம்பித்து விட்டேன்.

ஆனால், நீரோ இன்னமும் அழிந்து போகும் இவ்வுலக வாழ்விற்காக, சொகுசு வாழ்க்கையை வாழ்கின்றீர்! நிரந்தரமான ஓர் வாழ்க்கையை உணர்த்தும் மண்ணறை வாழ்க்கைக்காக என்றாவது வாழ்ந்திருக்கின்றீரா?” இப்போது சொல்லும்! நீர் பைத்தியக்காரரா? நான் பைத்தியக்காரனா?” என்று.

இந்த வார்த்தையைக் கேட்டதும் தான் தாமதம், மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தன் அகக்கண்ணை திறந்து விட்ட புஹ்லூல் (ரஹ்) அவர்களை நன்றிப் பெருக்கோடு பார்த்து விட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கின்றேன்! நீர் உண்மையாளர்! பைத்தியக்காரர் அல்ல” என்று கூறினார்கள்.

பின்னர், ”புஹ்லூல் அவர்களே! எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள்!” என்றார் ஹாரூன் ரஷீத் அவர்கள். “உம் வாழ்க்கையை அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்!” என்று புஹ்லூல் (ரஹ்) உபதேசித்தார்கள்.

மன்னர் விடைபெறுகிற போது, புஹ்லூல் (ரஹ்) அவர்களே! உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் நம்மிடம் சொல்லுங்கள்! நாம் நிறைவேற்றித் தருகின்றோம்!” என்றார்கள்.

ஆம்! மன்னரே! எனக்கு மூன்று தேவைகள் இருக்கின்றன, நீங்கள் நிறைவேற்றுவீர்களா?” என்று கேட்டார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள்.

”ஓ! தாராளமாக சொல்லுங்கள் நிறைவேற்றி விடலாம்” என்று மன்னர் பதில் கூறினார்.

அப்போது, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் “என் ஆயுளை நீட்டித்தர வேண்டும்” என்றார். அதற்கு மன்னர், “என்னால் இது இயலாது” என்றார்.

பரவாயில்லை, ”ரூஹைக் கைப்பற்றும் வானவரிடம் இருந்தாவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்றார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது” என்றார்.

சரி, சரி “நரகத்தை விட்டு என்னை தூரமாக்கி, சுவனத்தில் என்னை நுழைவிக்கச் செய்தால் போதும்” என்றார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது” என்றார்.

இதைக் கேட்ட புஹ்லூல் (ரஹ்) அவர்கள், மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களைப் பார்த்து “அறிந்து கொள்ளும்! நீர் ஒரு அடிமை தான், நீர் ஒன்றும் அரசனல்ல. ஆகவே, உம்மிடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை.” என்று பதில் கூறினார்கள்.

                                                  ( நூல்: வஃபாவுல் வஃபா )

ஆக, சிரிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவசியத்திற்கு சிரித்துக் கொள்ள வேண்டும். சிரிப்பதால் ஏராளமான நன்மைகள் விளைவதாக அறிவியல் உலகும், மருத்துவ உலகும் கூறுகின்றன.

அளவுக்கதிகமாக சிரிக்கிற போது அது உலக வாழ்வையும், மறுமை வாழ்வையும் சீரழித்து விடுவதாக இஸ்லாமிய அறிஞர் உலகு எச்சரிக்கின்றன.

ஆகவே, அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று குறைவாகச் சிரிப்போம்!    ஈருலகிலும் வளமாக வாழ்வோம்!

           அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!!
                         வஸ்ஸலாம்!!!

இன்ஷா அல்லாஹ்…. “அழுகையைப் பற்றி அடுத்த வாரம் தொடர்வோம்”..





4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்


    பயானில் 8 வகையான அம்சங்கள் யாவும் அருமையானது


    வஸ்ஸலாம்

    ReplyDelete
  2. ALHAMDHU LILLAAH .....


    UNGAL ELUTHTHAANI

    PAYANAM THODARATTUM...

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லா
    நல்ல தகவல். ஜஸாகல்லாஹு ஹைரா

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லா
    நல்ல தகவல். ஜஸாகல்லாஹு ஹைரா

    ReplyDelete