Wednesday, 20 May 2015

இறைவன் வழங்கிய இருபெரும் அருட்கொடைகள்!!



இறைவன் வழங்கிய இருபெரும் அருட்கொடைகள்!!



அழுகையும் சிரிப்பும் மனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கிற இருபெரும் அருட்கொடைகளாகும்.  

மனிதனுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி, சந்தோஷம் கவலை, துக்கம் போன்றவை மனதில் ஏற்படும் இயல்பான உணர்வுகளாகும். அவற்றைப் புறக்கணிக்க முடியாது.

அவ்வுணர்வுகளின் வெளிப்பாடுகளான அழுகை, சிரிப்பு போன்றவற்றை தடுக்கவும் முடியாது.

உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே அடைத்து வைப்பதால் தான் மனித சமூகத்திற்கு மன அழுத்தம், மனநோய்கள் போன்றவை வெகுவிரைவில் வந்து தாக்குகின்றன என்று மருத்துவ உலகம் எச்சரிக்கின்றது.

எனவே தான் இஸ்லாம் உணர்வுகளை வெளிப்படுத்த அங்கீகரிக்கின்றது. அத்தோடு நின்று விடாமல் சில வரையறைகளையும், கட்டுப்பாடுகளையும், ஆதாபுகளையும், பேணுதல்களையும் பின்பற்றுமாறு பணிக்கிறது.

அழுகையைப் பற்றி விஞ்ஞானம்...

அழுகை என்பது கண்களிலிருந்து நீரை சிந்தும் உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை.

அழுகையைப்  பற்றி அறிவியல் ஆய்வுகள் கூறுகையில்ஒரு நுணுக்கமான செக்ரெடொமொடொர் செயல்பாடு காராணமாக லாக்ரிமல் சுரப்பியிலிருந்து கண்களை உறுத்தாத வகையில் கண்ணீர் சுரக்கிறது.

லாக்ரிமல் சுரப்பிக்கும் மனித மூளையின் உணர்வுகள் தொடர்புடைய பகுதிக்கும் நியூரான் இணைப்பு உள்ளது. சில விஞ்ஞானிகள் உலகில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும், மிருகமும் உணர்ச்சியின் விளைவாக கண்ணீர் சிந்துவதில்லைஎன்று கூறுகின்றனர்.

சுமார் 300 நபருக்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு செய்ததில் சராசரியாக ஒரு ஆண் மாதம் ஒரு முறையும், ஒரு பெண் மாதம் ஐந்து முறையும் அழுவதாக ஆய்வு எடுத்துக் காட்டுகிறது.

அதிலும் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் அதற்கு முன்பும் குறிப்பிடும்படியான காரணமின்றி (மன அழுத்தம், மனச்சோர்வு, துயரம் போன்று எதுவுமின்றி) ஐந்து மடங்கு அதிகம் அழுகிறார்கள்.

பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆண்கள் ஆழுவதை சமூகம் எளிதில் ஏற்பதில்லை.

மற்ற அழுகையின் போது சுரக்கும் கண்ணீரும், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரும் இரசாயனக் கலவையில் மாறுபடுகின்றது.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரானது அதிக அளவில் ப்ரொலாக்டின், அட்ரெனொகொர்டிகொட்ரொபிக் ஹார்மோன், லியு-என்கெப்கலின்போன்ற ஹார்மோன்களையும், பொட்டாஸியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தனிமங்களையும் கொண்டுள்ளது.

மருத்துவ ரீதியாக நகைச்சுவைக்கும் கண்ணீருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப் படுகிறது. மேலும் அழுகை மூளையில் உள்ள அதிகப்படியான நகைச்சுவை உணர்வை அகற்றி மூளையைச் சுத்தப்படுத்த உதவுகிறது.

வில்லியம் ஜேம்ஸ் என்பவர் எண்ணங்களின் பிரதிபலிப்பு காரணமாக உணர்வுகள் உடல் ரீதியாக வெளிப்படுகிறது என்கிறார்.

வில்லியம் H.ப்ரெ, மின்னெசொடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்கள் முக்கியமாக அட்ரெனொகொர்டிகொட்ரொபிக் ஹார்மோன் அழுகையின் போது அழிக்கப்படுவதால், அழுதபின் மக்கள் சற்று நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள் என்கின்றார்.

அழுகை மற்றும் அதன் காரணமாக சுரக்கும் சளியானது ஒரு முடிவுக்கு வழி வகுக்கிறது. மனிதர்களின் மன அழுத்த ஹார்மோன் அளவு அதிகமாகும் போது அதை அழிப்பதற்கு அழுகை பயன்படுகிறது.
அழுகை நமது கண்ணோட்டத்தை மறைத்து போராட்ட எண்ணத்தை முடக்கி விடுகிறது. மேலும் நமது அமைதி, தேவை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் கருவியாகவும் பயன்படுகிறது.

( நன்றி, தமிழ் விக்கிபீடியா, அழுகை சம்பந்தமான ஆய்வுக்கட்டுரையிலிருந்து )

அழுகையைப் பற்றி இஸ்லாம்....

இறைவனின் அற்புத அருட்கொடை..

உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ நபி {ஸல்} அவர்களின் அன்பு மகளார் ஜைனப் (ரலி) அவர்கள்என் மகன் உயிர் பிரியும் தருவாயில் உள்ளான்; எனவே, தாங்கள் வருகை தரவேண்டும்என்று சொல்லியனுப்பினார்கள்.

அதற்கு, அண்ணலார்தங்கள் மகளாருக்கு ஸலாம் கூறியனுப்பினார்கள், மேலும், “அல்லாஹ் வாங்கிக் கொள்வதனைத்தும் அவனுடையதேயாகும். ஒவ்வொரு விஷயமும் அவனிடம் முடிவானதும், காலநிர்ணயம் நிச்சயிக்கப்பட்டதுமாகும்.

எனவே, நீ மறுமையில் கூலி பெரும் எண்ணத்துடன் பொறுமையை மேற்கொள்வாயாக!” என்றும் சொல்லியனுப்பினார்கள்.

இதற்குப் பின்னரும் ஜைனப் (ரலி) அவர்கள் அண்ணலார் அவசியம் வருகை தர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியனுப்பினார்கள்.

தங்களது மகளாரின் வற்புறுத்தல் காரணமாக அண்ணலார் தங்களின் தோழர்கள்முஆத் இப்னு ஜபல், ஸஅத் இப்னு உப்பாதா, உபை இப்னு கஅப், ஸைத் இப்னு ஸாபித், (ரலிஅன்ஹும்) ஆகியோருடன் ஜைனப் (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள்.

குழந்தை அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டது. அண்ணலார் தம் மடியின் மீது குழந்தையை அமர்த்திக் கொண்டார்கள். அப்போது, அக்குழந்தையின் உயிர் சிறிது, சிறிதாகப் பிரிந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்டு நபி {ஸல்} அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமென வழிந்தோடலாயிற்று.

அப்போது, ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) அவர்கள்இது என்ன? தாங்கள் அழுகின்றீர்களே?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளத்தில் வைத்துள்ள கருணை உணர்ச்சியாகும்என்று இன்னொரு அறிவிப்பில்அழுகை உணர்வுகளின் வெளிப்பாடாகும்என்று கூறினார்கள்.                 ( நூல்: புகாரி )

எனவே, கருணையுள்ள உள்ளமும், அழுகிற உணர்ச்சியும் அல்லாஹ் ஓர் அடியானுக்கு வழங்குகின்ற அற்புத கொடையாகும்.

قال ابن القيم -رحمه الله- البكاء أنواع:
الأول: بكاء الرحمة والرقة.
الثاني: بكاء الخوف والخشية .
الثالث:بكاء المحبة والشوق.
الرابع:بكاء الفرح والسرور.
الخامس:بكاء الجزع من ورود المؤلم وعدم إحتماله.
السادس:بكاء الحزن0
والفرق بين بكاء الحزن وبين بكاء الخوف :أن بكاء الحزن يكون على ما مضى وبكاء الخوف يكون لما يتوقع في المستقبل والفرق بين بكاء الفرح وبكاء الحزن:
أن دمعة السرور باردة والقلب فرحان ودمعة الحزن حارة والقلب حزين.
السابع:بكاء الخوف والضعف.
الثامن:بكاء النفاق وهو أن تدمع العين والقلب قاس فيظهر صاحبه الخشوع وهو من أقسى الناس قلبا.
التاسع:البكاء المستعار والمستأجر عليه كبكاء النائحة بالأجرة.
العاشر:بكاء الموافقة وهو أن يرى الرجل الناس يبكون لأمر ورد عليهم فيبكي معهم ولا يدري لأي شيء يبكون ولكن يراهم يبكون فيبكي.

அல்லாமா இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அழுகை என்பது பலவகையாக இருக்கின்றது. 1. உள்ளத்தில் இரக்கும், சாந்தமும் உருவாகிற போது வருகிற அழுகை, 2. நம்மை விட்டு எதுவும் சென்று விடக்கூடாது என்கிற பயமும்,கவலையும் கலந்த உணர்வு ஏற்படுகிற போது வருகிற அழுகை, 3. நேசமும், காதலும் கலந்த அழுகை, 4. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மிகைக்கும் போது வரும் அழுகை, 5. நோவினையும், வலியும் ஏற்படுகிற போது வருகிற அழுகை, 6. தப்பிப் போனதை நினைக்கிற போது வருகிற அழுகை, 7. பலகீனமும், இயலாமையும் ஏற்படுகிற போது வருகிற அழுகை, 8. உள்ளத்தில் ஒன்றை வைத்து நயவஞ்சகமாக அழுவது, 9. ஒப்புக்கு அழுவது, 10. ஓரிடத்தில் எல்லோரும் அழுகின்றார்கள் என்பதற்காக அழுவது.

ஓர் இறை நம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் அவன் கண்களில் இருந்து விழும் கண்ணீர் கூட விலை மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும். சோபனத்திற்குரியதாகவும், புகழுக்குரியதாகவும், உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத்தருவதாகாவும் அமைந்திருக்க வேண்டும் என இஸ்லாம் விரும்புகின்றது.

இதோ புகழுக்குரிய, சோபனத்திற்குரிய சில அழுகைகள்


1. இறையச்சத்தை அதிகப்படுத்தும் அழுகை அது புகழுக்குரிய அழுகை..

قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَى عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا (107) وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا (108) وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا (109)

நபியே! அம்மக்களிடம் நீர் கூறிவிடும்! இந்தக் குர்ஆனை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; இதற்கு முன்பு அறிவு ஞானம் வழங்கப்பட்ட மக்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள் முகங்குப்புற ஸஜ்தாவில் வீழ்கின்றார்கள்.

மேலும்,” தூய்மையானவன் எங்கள் இறைவன்; அவனுடைய வாக்குறுதி நிச்சயம் நிறைவேற வேண்டியிருந்தது” என்று கூறுகின்றார்கள்; அழுதவாறு முகங்குப்புற விழுகின்றார்கள்! இதனை இவ்வாறுச் செவிமடுப்பது அவர்களின் இறையச்சத்தை இன்னும் அதிகப்படுத்தி விடுகின்றது.”     ( அல்குர்ஆன்: 17: 107-109 )

قال سعيد بن جبير: نزلت في سبعين من القسيسين بعثهم النجاشي، فلما قدموا على النبي صلى الله عليه وسلم قرأ عليهم: { يس . وَالْقُرْآنِ الْحَكِيمِ } حتى ختمها، فجعلوا يبكون وأسلموا، ونزلت فيهم هذه الآية وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ (53) أُولَئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ بِمَا صَبَرُوا وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (54)

நஜ்ஜாஷி மன்னர் தமது நாட்டின் அறிஞர்களில் எழுபது பேரைத் தேர்ந்தெடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் அனுப்பி வைத்தார். அந்த எழுபது அறிஞர்களும் மக்காவில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை வந்து சந்தித்தார்கள்.

வருகை தந்திருந்த அந்த அறிஞர்களுக்கு நபி {ஸல்} அவர்கள் சூரா யாஸீனை அதன் இறுதிவரை ஓதிக்காண்பித்தார்கள். அதன் துவக்கத்திலிருந்து இறுதி வரை அந்த அறிஞர்கள் அழுது கொண்டே இருந்தனர்.

இறுதியாக, அவர்கள் அனைவரும் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அப்போது அல்லாஹ் அவர்கள் விஷயமாக அல்கஸஸ் அத்தியாயத்தின் 52, 53 –ஆம் இறை வசனங்களை அல்லாஹ் இறக்கியருளினான்.

2. இறை வார்த்தையை உண்மைபடுத்தும் அழுகை அது புகழுக்குரிய அழுகை..

وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ (83)

“இறைத்தூதர் மீது இறக்கியருளப்பட்ட இவ்வேதத்தை அவர்கள் செவியுறும் போது சத்தியத்தை அவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்கிறீர். மேலும், அவர்கள் “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம். எனவே, சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக!” என்று இறைஞ்சுகின்றார்கள்.
                                                        ( அல்குர்ஆன்: 5:83 )

قال ابن مسعود (:قال رسول الله ":( إقرأ علي :فقلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل؟ قال نعم إني أحب أن أسمعه من غيري.فقرأت سورة النساء حتى أتيت إلى هذه الآية"فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا" فقال حسبك الآن فإذا عيناه تذرفان "

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி­) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:” (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள் என்று சொன்னார்கள்.

நான் ” தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா? என்று கேட்டேன். அதற்கு  நபி {ஸல்} அவர்கள் ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னார்கள்.

ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ஒவ்வொரு சமுதாயத்தி­ருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும் (நபியே) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும் எனும் (4 : 41) வது வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் நிறுத்துங்கள் என்று சொன்னார்கள். அப்போது  நான் அண்ணலாரைப் பார்த்தேன் “அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன”.                  ( நூல் : புகாரி )


3. இறைக்கட்டளையை செயல்படுத்த முடியாத போது வெளிப்படுத்தும் அழுகை அது புகழுக்குரிய அழுகை...

وَلَا عَلَى الَّذِينَ إِذَا مَا أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَا أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوْا وَأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ حَزَنًا أَلَّا يَجِدُوا مَا يُنْفِقُونَ (92)

“ நபியே! இதே போன்று பின்வருபவர்கள் மீதும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை; அவர்களாகவே உம்மிடம் வந்து தங்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும்” எனக் கோரினர்.

“உங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்வதற்கு எம்மிடம் வசதி எதுவும் இல்லையே!” என நீர் கூறிய போது, வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர்.

“மேலும், ஜிஹாதில் கலந்து கொள்வதற்காக, சொந்தமாக செலவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லையே என்ற துயரத்தில் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது.”                    ( அல்குர்ஆன்: 9:92 )

حَدَّثَنَا عَلِىُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ قَالَ سَمِعْتُ الْقَاسِمَ يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ خَرَجْنَا لاَ نَرَى إِلاَّ الْحَجَّ ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ ، فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - وَأَنَا أَبْكِى قَالَ « مَا لَكِ أَنُفِسْتِ » . قُلْتُ نَعَمْ . قَالَ « إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ ، فَاقْضِى مَا يَقْضِى الْحَاجُّ ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِى بِالْبَيْتِ » . قَالَتْ وَضَحَّى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ .

ஆயிஷா (ரலி­) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  ”நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவி­ருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. 

அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்று சொன்னேன்.

இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் மற்ற எல்லாக்காரியங்களையும் நீ செய்து கொள்!” என்று சொல்­விட்டு நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்காக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள். ( நூல்: புகாரி )

4. இறை அரியணையில் இடம் பெறச்செய்யும் அழுகை அது புகழுக்குரிய அழுகை

فعن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: ((سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: الْإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ))
البخاري (620)، ومسلم (1712).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.

1.  நீதியான அரசன், 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபர், 3. இறையில்லத்தோடு தனது இதயத்தை தொடர்புபடுத்திய மனிதர், 4. இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்.

5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், 6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், 7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ ، إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً ، فَلَمَّا ابْتُلِىَ الْمُسْلِمُونَ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الْحَبَشَةِ ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ - وَهْوَ سَيِّدُ الْقَارَةِ - فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِى قَوْمِى فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِى الأَرْضِ فَأَعْبُدَ رَبِّى . قَالَ ابْنُ الدَّغِنَةِ إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ ، فَإِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ ، وَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَقْرِى الضَّيْفَ ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ، وَأَنَا لَكَ جَارٌ فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ . فَارْتَحَلَ ابْنُ الدَّغِنَةِ ، فَرَجَعَ مَعَ أَبِى بَكْرٍ ، فَطَافَ فِى أَشْرَافِ كُفَّارِ قُرَيْشٍ ، فَقَالَ لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ ، وَلاَ يُخْرَجُ ، أَتُخْرِجُونَ رَجُلاً يُكْسِبُ الْمَعْدُومَ ، وَيَصِلُ الرَّحِمَ ، وَيَحْمِلُ الْكَلَّ ، وَيَقْرِى الضَّيْفَ ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ . فَأَنْفَذَتْ قُرَيْشٌ جِوَارَ ابْنِ الدَّغِنَةِ وَآمَنُوا أَبَا بَكْرٍ وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِى دَارِهِ ، فَلْيُصَلِّ وَلْيَقْرَأْ مَا شَاءَ ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ ، فَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا . قَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِى بَكْرٍ ، فَطَفِقَ أَبُو بَكْرٍ يَعْبُدُ رَبَّهُ فِى دَارِهِ ، وَلاَ يَسْتَعْلِنُ بِالصَّلاَةِ وَلاَ الْقِرَاءَةِ فِى غَيْرِ دَارِهِ ، ثُمَّ بَدَا لأَبِى بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَبَرَزَ فَكَانَ يُصَلِّى فِيهِ ، وَيَقْرَأُ الْقُرْآنَ ، فَيَتَقَصَّفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ ، يَعْجَبُونَ وَيَنْظُرُونَ إِلَيْهِ ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ دَمْعَهُ حِينَ يَقْرَأُ الْقُرْآنَ ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ فَقَدِمَ عَلَيْهِمْ ، فَقَالُوا لَهُ إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ ، وَإِنَّهُ جَاوَزَ ذَلِكَ ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ ، وَأَعْلَنَ الصَّلاَةَ وَالْقِرَاءَةَ ، وَقَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا ، فَأْتِهِ فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِى دَارِهِ فَعَلَ ، وَإِنْ أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ ذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ ، فَإِنَّا كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِى بَكْرٍ الاِسْتِعْلاَنَ . قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ أَبَا بَكْرٍ ، فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِى عَقَدْتُ لَكَ عَلَيْهِ ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ وَإِمَّا أَنْ تَرُدَّ إِلَىَّ ذِمَّتِى ، فَإِنِّى لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّى أُخْفِرْتُ فِى رَجُلٍ عَقَدْتُ لَهُ . قَالَ أَبُو بَكْرٍ إِنِّى أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ ، وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்கவில் முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களால் சோதனைக்கு உள்ளாக்கப்பட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் நாடு துறந்து அபீசீனியாவை நோக்கி ஹிஜ்ரத் சென்றார்கள்.

யமன் செல்லும் வழியில் அல்காரா குலத்தின் தலைவர் இப்னு தஃகினா என்பவரை சந்தித்தார்கள்.

தம் நோக்கத்தையும், முஸ்லிம்கள் மக்காவில் சந்தித்துவரும் கஷ்டங்களையும் அவரிடம் தெரிவித்தார்கள்.

அதற்கு, இப்னு தஃகினா “உம்மைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கின்றீர், உறவைப் பேணுகிறீர்; சிரமப்படுவோரின் சுமையைச் சுமக்கின்றீர்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்; சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகின்றீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகின்றேன். ஆகவே, திரும்பிச் சென்று உமது ஊரிலேயே இறைவனை வழிபடுவீராக!” என்று கூறினார்.

அத்தோடு நின்று விடாமால், அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷித்தலைவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தாம் அடைக்கலம் தந்திருப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆகவே, குறைஷிகள் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

மேலும், குறைஷிகள் இப்னு தஃகினாவிடம் ” தமது வீட்டில் தமது இறைவனைத் தொழுது வருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்களது மனைவி மக்களை குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம் என்றனர்.

இதை இப்னு தஃகினா அபூபக்கர் (­லி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்கர் (ரலி­) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது ஓதி பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள்.

பிறகு அவர்களுக்கு ஏதோ தோன்ற தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் தொழுமிடம் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் இடத்தில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள்.

இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலானார்கள். அபூபக்கர் (­) அவர்கள் குர்ஆன் ஓதும் போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்பவர்களான குரைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.

குறைஷிகள் இப்னு தஃகினாவை அழைத்து வரச் செய்து நடந்தவற்றைக் கூறினார்கள். அவர் அடைக்கலத்திற்கான நிபந்தனைகளை அபூபக்ர் (ரலி) அவர்களிடத்திலே நினைவு படுத்திய போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்னு தஃகினாவே! உம் அடைக்கலத்தை நீர் திரும்ப எடுத்துக் கொள்ளும்! நான் அல்லாஹ்வின் அடைக்கலத்தையே திருப்தியுறுகின்றேன்என்று கூறினார்கள்.
                                                            ( நூல்: புகாரி )

அபூபக்ர் (ரலி) அவர்களின் அழுகை எங்கே தங்களின் குடும்ப உறவினர்களின், உறுப்பினர்களின் உள்ளங்களில் ஈமானிய உணர்வை ஏற்படுத்தி விடுமோ என குறைஷிகள் அஞ்சினர்.
 

5. அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் அழுகை அது புகழுக்குரிய அழுகை...

وقال صلى الله عليه وسلم : ( لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ، ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم ) .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “கறந்த பால் எப்படி மடுவுக்குள் திரும்பிச்செல்ல முடியாதோ, அது போன்று தான் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்ணையும், அழுதவரையும் நரகம் தீண்டாது. அல்லாஹ்வின் பாதையில் கிளம்பும் புழுதியும், நரகத்தின் புகையும் ஒன்று சேராது.”

وعن أبي الجلد جيلان بن فروة قال قرأت في مسألة داود عليه السلام أنه قال :
إلهي ما جزاء من بكى من خشيتك حتى تسيل دموعه على وجنتيه ؟.
قال : جزاؤه أن أحرّم وجهه على لفح النار ، وأن أؤمنه يوم الفزع الأكبر.

ஜீலான் இப்னு ஃபர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “இறைத்தூதர் தாவூத் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் “என் இறைவா! உன்னுடைய அச்சத்தால் தாரை, தாரையாய் கண்ணீர் வடிப்பவருக்கு நீ என்ன கூலி வழங்குவாய்” என்று கேட்டார்களாம்.

அதற்கு, அல்லாஹ் “நரகத்தின் ஜுவாலை அவரின் முகத்தைக் கரிப்பதை நான் தடை செய்து விட்டேன். மேலும், திடுக்கங்கள் பல நிறைந்த மஹ்ஷர் பெருவெளியில் அவர்களுக்கு நான் நிம்மதியை நல்குவேன். இதுவே, அவர்களுக்கு நான் வழங்கும் மகத்தான கூலியாகும்.” என்று பதில் கூறினான்.



حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِى مَالِكٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ « لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ ، فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ ، لاَ يُصِيبُكُمْ مَا أَصَابَهُمْ » .

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­)அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்  (ஹிஜ்ர் வாசிகளைக் குறித்து ) இவர்களைத் தீண்டியதைப் போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று அஞ்சி அழுதவர்களாவே தவிர, வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் வசிப்பிடங்களின் வழியாகச் செல்லாதீர்கள். 

உங்களால் அழமுடியாவிட்டால் அந்த இடத்திற்கேச் செல்லாதீர்கள்!” என்று ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற போது எங்களிடம் கூறினார்கள். ( நூல்:புகாரி )

عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانٍ  قَالَ : " كَانَ عُثْمَانُ رَضِي اللَّهُ عَنْهُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ , قَالَ فَقِيلَ لَهُ : تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ وَلا تَبْكِي ، وَتَبْكِي مِنْ هَذَا ؟ فَقَالَ  إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ
  الْقَبْرُ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الآخِرَةِ , فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ
، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدَّ مِنْهُ , وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَا رَأَيْتُ مَنْظَرًا إِلا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ " .

உஸ்மான் (ரலி) அவர்களின் பணியாளர் ஹானிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உஸ்மான் (ரலி) அவர்கள் அடக்கஸ்தலத்திற்குச் சென்று விட்டால் தங்களின் தாடி நனையும் அளவிற்கு தேம்பித் தேம்பி அழுவார்கள்.

அவ்வாறு, ஒருமுறை உஸ்மான் (ரலி) அவர்கள் அழும்போது அருகில் நின்று கொண்டிருந்த தோழர்கள்உஸ்மான் (ரலி) அவர்களே! சுவர்க்கம், நரகம் குறித்து உங்களிடத்திலே கூறப்படுகிற போது கூட இவ்வாறு அழுததில்லையே? இது போன்ற மண்ணறைகளுக்கு நீங்கள் வந்து விட்டால் இப்படித் தேம்பி தேம்பி அழுகின்றீர்களே? ஏன்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக மண்ணறை என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடம் மண்ணறை தான்; ஒருவன் அங்கே வெற்றி பெற்று விடுவான் எனில், அதற்குப் பின் உண்டான அத்துணை திடுக்கங்களில் இருந்தும் வெற்றி பெற்று விடுவான்.

ஒருவன் அங்கே தோற்றுப் போய் விடுவான் எனில், அதற்குப் பின் உண்டான அத்துணை திடுக்கங்களில் இருந்தும் வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமாகி விடும்.” இதனைத் தொடர்ந்து மேலும், நபி {ஸல்} அவர்கள்உலகில்  மண்ணறையை விட பயங்கரம் நிறைந்த ஓர் இடத்தை நான் ஒரு போதும் கண்டதில்லைஎன்று கூறினார்கள்.

   ( நூல்: அல் ஃகராஜ் லி இமாமி அபூ யூஸுஃப் (ரஹ்), ஹதீஸ் எண்:39 )

6. பாவ மன்னிப்பைப் பெற்றுத்தரும் அழுகை அது புகழுக்குரிய அழுகை...

قال صالح المري بلغني عن كعب الأحبار أنه كان يقول :
من بكى خشية من ذنب ، غُفر له ..
ومن بكى اشتياقاً إلى الله ، أباحه النظر إليه تبارك وتعالى يراه متى شاء..

கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள்: “பாவத்தை நினைத்து அல்லாஹ்வின் முன் அழுது புலம்புபவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வின் மீது கொண்ட காதலால் அழுபவருக்கு அல்லாஹ் தன்னுடைய மேலான சந்திப்பை நல்குவான்” என்று கூறினார்கள்.

ويقولون:' يا ارحم الراحمين يا حنان يا منان '
·- فاذا انفذ الله تعالى حكمه.
قال الله تعالى :( يا جبريل ما فعل العاصون من امة محمد صلي الله عليه وسلم )
فيقول جبريل:' اللهم انت اعلم بهم فيقول انطلق فانظر ما حالهم '...
·- فينطلق جبريل عليه السلام الي مالك وهو علي منبر من نار في وسط جهنم .... فاذا نظر مالك علي جبريل عليه السلام قام تعظيما له.
فيقول له جبريل:' ما ادخلك هذا الموضع ؟'
فيقول:' ما فعلت بالعصابه العاصيه من أمة محمد (صلى الله عليه وسلم))؟'
فيقول مالك:' ما اسوء حالهم ... واضيق مكانهم ... قد احرقت اجسامهم ... واكلت لحومهم ... وبقيت وجوههم وقلوبهم يتلالاء فيها الايمان '
فيقول جبريل:' ارفع الطبق عنهم حتي انظر اليهم ' ...
·- قال فيأمر مالك الخزانه فيرفعون الطبق عنهم ... فاذا نظروا الي جبريل والي حسن خلقه .. علموا انه ليس من ملائكه العذاب .
فيقولون: ' من هذا العبد الذي لم نرا احدا قط احسن منه ؟'
فيقول مالك: ' هذا جبريل الكريم الذي كان ياتي محمدا بالوحي'
- فاذا سمعوا ذكر محمد صاحوا بأجمعهم:'أقرئ محمدا منا السلام وأخبره ان معاصينا فرقت بيننا وبينك .. وأخبره بسوء حالنا '..
فينطلق جبريل حتي يقوم بين يدي الله تعالي ..
فيقول الله تعالى: (كيف رايت امة محمد ؟)
فيقول جبريل: ' يا رب ما اسوء حالهم وأضيق مكانهم ' ..
فيقول الله تعالى :(هل سألوك شيئا ؟ ) ...
فيقول جبريل:' يا رب نعم سألوني ان اقرئ نبيهم منهم السلام وأخبره بسوء حالهم ..'
فيقول الله تعالى :( أنطلق فاخبره ) ..
·فينطلق جبريل الي النبي وهو في خيمه من درة بيضاء لها اربعه الاف باب لكل باب مصراعان من ذهب ..
فيقول جبريل: 'يا محمد قد جئتك من عند العصابه العصاه الذين يعذبون من أمتك في النار .. وهم يقرئونك السلام .. ويقولون ما اسوء حالنا واضيق مكاننا ..'
·فيأتي النبي الي تحت العرش فيخر ساجدا ويثني علي الله تعالي ثناء لم يثن عليه احد مثله ..
فيقول الله تعالي : (ارفع راسك .. وسل تعط .. واشفع تشفع )
فيقول صلى الله عليه وسلم)' الاشقياء من امتي قد انفذت فيهم حكمك وانتقمت منهم فشفعني فيهم '
فيقول الله تعالى : (قد شفعتك فيهم .. فأت النار فأخرج منها من قال لا الله الا الله)
·فينطلق النبي فاذا نظر مالك النبي صلي الله عليه وسلم قام تعظيما له
فيقول صلى الله عليه وسلم): ' يا مالك ما حال امتي الاشقياء ؟ '
فيقول مالك: ' ما اسوء حالهم .. واضيق مكانهم ..'
فيقول محمد :' افتح الباب وارفع الطبق '
·فاذا نظر اصحاب النار الي محمد صلي الله عليه وسلم .. صاحوا بأجمعهم فيقولون ... يا محمد احرقت النار جلودنا واحرقت اكبادنا ..
* فيخرجهم جميعا وقد صاروا فحما قد اكلتهم النار فينطلق بهم الي نهر بباب الجنه يسمي نهر الحيوان فيغتسلون منه فيخرجون منه شبابا جردا مردا مكحلين وكأن وجوههم مثل القمر مكتوب علي جباههم
(الجهنميون عتقاء الرحمن من النار) ...
فيدخلون الجنه فاذا رأي اهل النار قد اخرجوا منها قالو :يا ليتنا كنا مسلمين وكنا نخرج من النار ..
وهو قوله تعالي ((ربما يود الذين كفروا لو كانو مسلمين)) (صوره الحجر
2)
முஹம்மது {ஸல்} அவர்களின் உம்மத்தில் பெரும்பாவம் செய்து தவ்பாச் செய்யாமல் இருந்தவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படுவர். அவர்கள் வேதனை தாங்கமுடியாமல் நரகத்தின் காப்பாளர் மாலிக் (அலை) அவர்களிடம் “தாங்கள் இன்னுமா எங்களை வேதனைச் செய்ய நாடுகின்றீர்களா?” எங்கள் மீது இரக்கம் கொள்ளக்கூடாதா? என்று ஓலமிட்டுக் கதறுவார்கள்.

அப்போது, மாலிக் (அலை) அவர்கள் “உங்கள் இறைவன் உங்கள் மீது இரக்கமாக இல்லையே!?” கோபமாக அல்லவா இருக்கின்றான். நான் எப்படி உங்கள் மீது கருணை காட்ட முடியும்” என்பார்கள்.

அப்போது, அவர்கள் “யாஅர்ஹமர் ராஹீமீன்! என்று அழைப்பாளர்கள். அது கேட்ட மாலிக் (அலை) அவர்கள் “நீங்கள் ஷஹாதாவைக் கூறுங்கள்!” என்பார். உடனே எல்லோரும் பெரும் சப்தமாக ஷஹாதாவைக் கூறுவார்கள்.

இந்தச் சப்தம் அதிகமாகவே, அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து ”முஹம்மத் {ஸல்} அவர்களின் சமுதாயம் நரகிலிருந்து தவ்ஹீத் கலிமாவை மொழிந்து கொண்டிருக்கின்றார்கள். நீர் சென்று மாலிக் (அலை) அவர்களிடம் வேதனையை இலகுவாக்கச் சொல்லுங்கள்” என்பான்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், மாலிக் (அலை) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் கட்டளையை தெரியப்படுத்துவார்கள். உடனே, அவர்களுக்கு வேதனை இலகுவாக்கப்படும்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நரகின் வாசலில் வந்து நிற்கும் போது முஃமினான பாவிகள் அவர்களைப் பார்ப்பார்கள். முஃமினான பாவிகளைப் பார்த்ததும், நரகின் வேதனையால் கருகிய கொள்ளிக் கட்டைகளைப் போல் இருக்கிற நிலையைப் பார்த்ததும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அழுவார்கள்.

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தான் தங்களுடைய வேதனையை குறைத்ததாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வர், பின்னர், ஜிப்ரயீல் அவர்களிடம் தெரிவித்து விட்டு, “உங்கள் வருகைக்குப்பின்னரே எங்களின் வேதனை இலகுவாக்கப்பட்டுள்ளது” நீங்கள் யார்?” என்று கேட்பார்கள் முஃமினான பாவிகள்.

அப்போது தான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தாம் யார் என்பதைத் தெரிவிப்பார்கள்.  உடனே, அந்தப் பாவிகள் “எங்களின் வேதனையைப் பார்த்தீர்களா?” நீங்கள் பெருமானார் {ஸல்} அவர்களிடம் சென்றால் எங்களின் ஸலாத்தை எத்தி வையுங்கள்! எங்களை நரகில் இருக்கிற காஃபிர்கள் ஏளனம் செய்கிறார்கள், எங்களின் வேதனையையும், நாங்கள் படும் பாட்டையும் தெரிவித்து விடுங்கள்!” என்பார்கள்.

நீங்கள் இங்கு படுகிற அவஸ்தைகள் உங்களுடைய நபிக்கு தெரியாது; தெரிந்தால் அவர்கள் சுவனத்தில் தரித்திருக்க மாட்டார்கள். எனவே, நான் சென்று இதை எத்திவைக்கிறேன் என்று சொல்லி ஜிப்ரயீல் (அலை) அங்கிருந்து விடை பெற்றார்கள்.

அல்லாஹ்வின் அனுமதியோடு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அண்ணலாரைத் தேடி சுவர்க்கத்திற்கு வருவார்கள். அங்கே அண்ணலார் {ஸல்} அவர்கள் தூபா எனும் மரத்தடியில் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் வீற்றிருப்பார்கள்.

அங்கே, நின்று கொண்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அழுது கொண்டு நிற்பார்கள். பெருமானார் {ஸல்} அவர்கள் ஜீப்ரயீல் (அலை) அவர்களைப் பார்த்து “ஜிப்ரயீலே! ஏன் அழுகின்றீர்?” என்று கேட்பார்கள்.

அப்போது, நடந்தவற்றை நபிகளாரிடத்திலே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறுவார்கள். நரகிலிருந்து எழும் ஷஹாதா சப்தத்தை நபி {ஸல்} காது தாழ்த்தி கேட்டு விட்டு “யாஉம்மத்தீ, யாஉம்மத்தி” என்று கண்ணீர் தாரை, தாரையாய் வடித்தவர்களாக அர்ஷை நோக்கி ஓடிவருவார்கள்.

அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள். அல்லாஹ் நபிகாளாரின் துஆவைக் கபூல் செய்து அந்தப் பாவிகளை விடுதலை செய்வான்.                ( நூல்: தபரானீ )

நீளமான இந்த ஹதீஸ் ளயீஃப் வகையைச் சார்ந்தது தான் என்றாலும், பெருமானார் {ஸல்} அவர்கள் பெரும்பாவிகளுக்கும் பரிந்துரை செய்வார்கள் எனும் ஸஹீஹான ஹதீஸிற்கு ஒத்துப்போவதால் இதை ஏற்றுக்கொள்ளலாம் என சில ஹதீஸ் விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள்.

( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்:1, பக்கம்:

7. ஈடேற்றத்தைப் பெற்றுத்தரும் அழுகை அது புகழுக்குரிய அழுகை...

سأل أحد الصحابة رسول الله( فقال: يا رسول الله ما النجاة؟، قال(: (أملك عليك لسانك، وليسعك بيتك، وابك على خطيئتك).

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் நான் “வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினேன்.

அதற்கு, நபி {ஸல்} ” உம்முடைய நாவை பாதுகாப்பீராக! கொடைத் தன்மையால் உம் இல்லத்தை விசாலமாக்கி வைப்பீராக! உம்முடைய பாவத்தை நினைத்து அழுவீராக!” நீர் வெற்றியடைந்து விடுவீர்” என்று பதில் கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து, அல்லாஹ்வின் ஆற்றலை நினைத்து, அழுவோம்!

புகழுக்குரிய, சோபனத்திற்குரிய அழுகையை அழுது அல்லாஹ்விடம் இருந்து நரக விடுதலையைப் பெறுவோம்!

அல்லாஹ் நம் அனைவரையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்! ஆமீன்!
                         வஸ்ஸலாம்!!!



2 comments: