Thursday, 31 August 2017

அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அரஃபா தினம்!!



அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தும்
அரஃபா தினம்!!



இன்று மகத்தான, சிறப்பிற்குரிய இரண்டு நாட்கள் சங்கமித்திருக்கும் நாளாகும். இன்று ஜும்ஆ மற்றும் அரஃபாவுடைய நாட்களாகும். துஆ ஒப்புக் கொள்ளப்பபடக் கூடிய மகத்தான இரண்டு நாட்களாகும்.

இஸ்லாமிய வரலாற்றிலும் முஸ்லிம்களின் வாழ்விலும் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய தினங்களில் அரஃபா தினம் முதலிடம் வகிக்கின்றது என்றால் அது மிகையல்ல.

அரஃபா தினத்தின் சிறப்பு குறித்து அல்குர்ஆனிலும், நபிமொழிக் கிரந்தங்களிலும் ஏராளமான செய்திகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.

அரஃபாபெயர்க்காரணம்…..

هناك عدّة أقوال فيما يخصّ سبب تسمية يوم عرفة بهذا الاسم، حيث قيل بأنّها سميت بذلك نسبة لتعارف سيدنا آدم على زوجته في تلك المنطقة، أما الرواية الثانية فهي تعريف جبريلُ إبراهيمَ بمناسك الحج، حيث ذكر الإمام القرطبي في التفسير وغيره: "وقالوا في تسمية عرفة بهذا الاسم لأنّ الناس يتعارفون فيه، وقيل لأنّ جبريل عليه السلام طاف بإبراهيم فكان يريه المشاهد فيقول له: أعرفت أعرفت؟ فيقول إبراهيم عرفت عرفت"، وقيل أيضاً أنّ الاسم بسبب تعارف الناس فيها، كما قيل بأّن الكلمة مقتبسة من العَرف وهو الطيب؛ كونها تعتبر هذه المنطقة مقدّسة، ولكن قد يكون تكون الرواية الأكثر تأكيداً هي راوية سيدنا آدم وزوجته.

நமது தந்தை ஆதம் {அலை} அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து தமது துணைவியாரோடு பூமிக்கு இறக்கப்பட்டதன் பின்னர் நீண்ட காலங்கள் பிரிந்து வாழ்ந்து மீண்டும் ஒருவருக்கொருவர் சந்தித்து அறிமுகம் ஆனது அரஃபாத்தில் இருக்கும் மலைக்குன்றின் அருகே தான். ஆகவே, அரஃபா என பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.

நபி இப்ராஹீம் {அலை} அவர்களுக்கு ஹஜ்ஜின் கிரியைகளை அல்லாஹ்வின் பேரில் கறுறுக் கொடுக்க வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்த பின்னர்நீங்கள் அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

இறுதியாக, அரஃபாவில் செய்ய வேண்டிய கிரியைகளை கற்றுக் கொடுத்த பின்னர் மீண்டும்நீங்கள் அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, இப்ராஹீம் {அலை} அவர்கள்அரஃப்துநான் அறிந்து கொண்டேன் என பதில் கூறினார்கள். ஆகவே, அரஃபா என பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுடைய காலத்தில் லட்சோப லட்ச முஸ்லிம்கள் இன, மொழி, நிற பேதமின்றி ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக் கொள்வதால் அரஃபா என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

அரஃபா தினம் & மைதானம் ஓர் கண்ணோட்டம்

இது மக்காவிற்கு கிழக்கே 12 கல் தொலைவில் உள்ள மலையாகும். அதைச்சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும். அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும், 4 மைல் அகலமும் கொண்டதாகும்.

அரஃபா பெருவெளிக்குஅல் மஷ்அருல் ஹராம்புனித வழிபாட்டுத் தலம், ”அல் மஷ்அருல் அக்ஸாகோடியிலுள்ள வழிபாட்டுத்தலம், இலால் மணற்குன்று ஆகிய பெயர்களும் உண்டு.

அரஃபா பெருவெளியின் நடுப்பகுதியில் அமைந்துள்ள குன்றுக்குஜபலுர் ரஹ்மத்” – அருள் மலை என்று பெயர்.
أنه يوم عيد لأهل الموسم؛ فعن عمر بن الخطاب - رضي الله عنه - أن رجلاً من اليهود قال له: يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيداً!! قال: أي آية؟ قال: الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا (3) سورة المائدة. قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي - صلى الله عليه وسلم - وهو قائم بعرفة يوم جمعة"
ஒரு முறை யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம்நீங்கள் ஒரு வசனத்தை ஓதி வருகின்றீர்கள்!  அது மட்டும் எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்த நாளைப் பெருநாளாக கொண்டாடி இருப்போம்என்று கூறினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள்அது எந்த வசனம்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் அல்மாயிதா அத்தியாயத்தின் 3 –ஆம் வசனத்தொடரில் இடம் பெற்றிருக்கிறஇன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்எனும் வசனம் என்றனர்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள்அந்த வசனம் அருளப்பெற்ற நாளையும், அந்த வசனம் அருளப்பெற்ற இடத்தையும், அது அருளப்படும் போது மாநபி {ஸல்} அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையும் நான் அறிவேன்என்று கூறிவிட்டுஅது அரஃபா ( துல்ஹிஜ்ஜா 9 –ஆவது ) நாளன்று வெள்ளிக்கிழமை அருளப்பெற்றது.

அல்லாஹ் புகழுக்குரியவன்! அவ்விரு நாட்களுமே எங்களுக்குப் பண்டிகை நாட்கள் தான்என்று கூறினார்கள்.                   ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
أن يوم عرفة يوم أقسم الله به، والعظيم لا يقسم إلاّ بعظيم، فهو اليوم المشهود في قوله تعالى: ﴿ وَشَاهِدٍ وَمَشْهُودٍ ﴾ [البروج: 3].
قال أبو هُرَيْرَةَ رضي الله عنه: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: "الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ، وَالْيَوْمُ الْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ..."؛ رواه الترمذي وحسنه الألباني.
ويوم عرفة هو الوتر الذي أقسم الله به في قوله: ﴿ وَالشَّفْعِ وَالْوَتْر ﴾
الفجر: 3]، قال ابن عباس: "الشفع يوم الأضحى، والوتر يوم عرفة

அரஃபா நாளின் சிறப்புக்கு சிறப்பு சேற்கும் விதமாக அல்லாஹ்வின் இரண்டு வசனங்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஒன்று அல்புரூஜ் அத்தியாயத்தின் 3 –ஆம் வசனம், மற்றொன்று அல்ஃபஜ்ர் அத்தியாயத்தின் 3 –ஆம் வசனம் இவ்விரு வசனத்திலும் அல்லாஹ் அரஃபா தினத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்.

வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக! மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருள் மீதும் சத்தியமாக!             ( அல்குர்ஆன்: 85: 2, 3 )

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமை நாள் ஆகும். மஷ்ஹூத்பார்க்கப்படும் நாள் என்பது அரஃபா நாள் ஆகும். பார்க்கின்ற நாள் என்பது ஜும்ஆ நாள் ஆகும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                      ( நூல்: திர்மிதீ )

வைகறைப் பொழுதின் மீதும், மேலும், பத்து இரவுகளின் மீதும், ஒற்றை மற்றும் இரட்டைகளின் மீதும் சத்தியமாக!”                 ( அல்குர்ஆன்: 89: 1 – 4 )

இப்னு அப்பாஸ் (ரலி) இந்த வசனத்திற்கு விளக்கம் தருகிற போது, “வைகறை பொழுது என்பது நஹ்ர் உடைய நாளின் வைகறையையும், பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்களின் இரவுகளையும், இரட்டை என்பது ஈதுல் அள்ஹா உடைய நாளையும், ஒற்றை என்பது அரஃபா உடைய நாளையும் எடுத்துக் கொள்ளும்!” என்று விளக்கமளித்தார்கள்.                   ( தஃப்ஸீர் இப்னு கஸீர் )

மன்னிப்பு மற்றும் நரக விடுதலையின் நாள்

أن يوم عرفة هو من أفضل الأيام عند الله... أنه يوم مغفرة الذنوب والعتق من النار والمباهاة بأهل الموقف، وهذا ما اخبر عنه الصادق المصدوق سيدنا محمد - صلى الله عليه وسلم -؛ فعَنْ جَابِرٍ
 قَالَ: قَالَ رَسُولُ اللهِ  - صلى الله عليه وسلم ِ مَا مِنْ أَيَّامٍ
أَفْضَلُ عِنْدَ اللهِ مِنْ أَيَّامِ عَشْرِ ذِي الْحِجَّة
 فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، هُنَّ أَفْضَلُ أَمْ عِدَّتُهُنَّ جِهَادًا فِي سَبِيلِ اللهِ، قَالَ: هُنَّ أَفْضَلُ مِنْ عِدَّتِهِنَّ جِهَادًا فِي سَبِيلِ اللهِ، وَمَا مِنْ يوْمٍ أَفْضَلُ عِنْدَ اللهِ مِنْ يوْمِ عَرَفَةَ يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيُبَاهِي بِأَهْلِ الأَرْضِ أَهْلَ السَّمَاءِ، فَيَقُولُ: انْظُرُوا إِلَى عِبَادِي شُعْثًا غُبْرًا ضَاحِينَ جَاؤُوا مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ يَرْجُونَ رَحْمَتِي، وَلَمْ يَرَوْا عَذَابِي، فَلَمْ يُرَ يَوْمٌ أَكْثَرُ عِتْقًا مِنَ النَّارِ مِنْ يوْمِ عَرَفَةَ))؛ صحيح ابن حبان

ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மாநபி {ஸல்} அவர்கள் எங்களிடத்தில்உலகின் நாட்களில் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த நாட்கள் துல்ஹஜ் உடைய முதல் பத்து நாட்களாகும்என்று கூறிய போது, சபையில் இருந்த ஒரு நபித்தோழர்அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காக கழிக்கின்ற நாட்களை விடவுமா மிகச்சிறந்தது?” என்று கேட்டார்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்ஆம்!” என்று பதில் கூறிவிட்டு, அல்லாஹ்விடத்தில் அரஃபா நாளை விடவும் மிகச் சிறந்த நாள் உலகின் நாட்களில் வேறெதுவும் இல்லை என்றார்கள்.

அந்நாளில், அல்லாஹ் உலகின் வானத்திற்கு வருகை தந்து, வானவர்களிடம் அரஃபா தினத்தன்று ஒன்று கூடியிருக்கின்றவர்களைப் பற்றி பெருமை பாராட்டி பேசுகின்றான்.

இதோ! என் அடியார்களைப் பாருங்கள்! என்னுடைய அருளை ஆதரவு வைத்து வெகு தூரமான இடங்களில் இருந்துதலைவிரி கோலத்தோடு, புழுதி படிந்த நிலையில் இங்கு குழுமியிருக்கின்றார்களே!” என்று அல்லாஹ் கூறுவான்என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள் “(அன்றைய) அரஃபா நாளில் அல்லாஹ் நரகில் இருந்து விடுவிப்பது போன்று வேறெந்த நாளிலும் விடுவிப்பதில்லைஎன்று கூறினார்கள்.                                  ( நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் )


ஓராண்டின் முன், பின் பாவங்களை மன்னிக்கும் நோன்பு.....

عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ» ترمدي

அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அரஃபாவின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு, மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                     ( நூல்: திர்மிதி )

ஹஜ் முழுமை பெற….

أن الله جعل الوقوف بعرفة ركن من أركان الحج بل هو أهمهما فقد قال - صلى الله عليه وسلم -: (الحج عرفة) قال ابن رشد: "أجمعوا على أنه ركن من أركان الحج، وأن من فاته فعليه حج قابل"، وقال ابن قدامة المقدسي: "والوقوف ركن لا يتم الحج إلا به إجماعاً".

அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 இல் மாலை வரைத்தங்க வேண்டும். இது ஹஜ்ஜின் முக்கிய கடமை (பர்ளு) ஆகும். எவரேனும் சிறிது நேரமாவது இங்கு தங்கவில்லை என்றால் ஹஜ் முழுமை பெறாது என்பதை உணர்த்தும் முகமாக “ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவது தான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ரப்பின் முதல் அறிமுகம் கிடைத்த இடம்...

أن الله أخذ فيه الميثاق؛ فعن ابن عباس عن النبي - صلى الله عليه وسلم - قال: (إن الله أخذ الميثاق من ظهر آدم بنعمان - يعني يوم عرفة -، وأخرج من صلبه كل ذرية ذرأها فنثرهم بين يديه كالذر، ثم كلمهم قُبلاً قال: أَلَسْتَ بِرَبِّكُمْ قَالُواْ بَلَى شَهِدْنَا أَن تَقُولُواْ يَوْمَ الْقِيَامَةِ إلى يقوله: بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ
سورة الأعراف(172-173)

“அல்லாஹ் நுஃமான் எனப்படும் அரஃபா பெருவெளியில் ஆதம் {அலை} அவர்களின் முதுகுத்தண்டிலிருந்து உறுதிமொழி பெற்றான். அதாவது, அவரது முதுகுத்தண்டிலிருந்து தான் படைத்த அனைத்து வழித்தோன்றல்களையும் வெளியோக்கினான். பிறகு தனக்கு முன்னால் அவர்களை அணுக்களைப் போன்று பரப்பினான்.

பின்னர், அவர்களை நோக்கி “ நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். ஆம்! நாங்கள் நீதான் எங்கள் இறைவன் என சாட்சியமளிக்கின்றோம்” என்றனர்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.         ( நூல்: இப்னு கஸீர் )

துஆ ஒப்புக் கொள்ளப்படும் தினமும்... இடமும்...

فعن عمرو بن شعيب عن أبيه عن جده قال: قال رسول الله - صلى الله عليه وسلم-: (خير الدعاء دعاء يوم عرفة، وخير ما قلت أنا النبيون من قبلي: لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيءٍ قدير"
، وتحقيق التوحيد يوجب عتق الرقاب، وعتق الرقاب يوجب العتق من النار؛ كما ثبت في الصحيح عن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: (من قال: لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على شيء قدير. في يوم مئة مرة كانت له عدل عشر رقاب، وكتبت له مئة حسنة، ومحيت عنه مئة سيئة، وكانت له حرزاً من الشيطان يومه ذلك حتى يمسي، ولم يأت أحد بأفضل مما جاء به إلا أحد عمل أكثر من ذلك)

அம்ரு இப்னு ஷுஐபு (ரலி) அறிவிக்கின்றார்கள்: “துஆக்களில் சிறந்தது அரஃபா தினத்தன்று செய்யும் துஆவாகும். எனக்கு முன்னுள்ள நபிமார்களும், நானும் மிகச் சிறந்த இந்த لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيءٍ  قدير"கலிமாக்களைத்தான் கூறினோம்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இந்த கலிமா தவ்ஹீதை உறுதிப் படுத்தும் முகமாக அமைந்ததாகும். தவ்ஹீதை உறுதிப்படுத்துவது அடிமைகளை விடுதலை செய்யும் நன்மையை பெற்றுத்தரும்.

அடிமையை விடுதலை செய்வதென்பது நரக விடுதலையைப் பெற்றுத்தரும். ஏனெனில், அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “எவர்
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على شيء قدير. என்று நாளொன்றுக்கு நூறு முறை கூறுவாரோ 10 அடிமைகளை விடுவித்த நன்மையும், நூறு நன்மைகளும் எழுதப்படுகின்றது. நூறு தீமைகள் அழிக்கப்படுகின்றது. அன்றைய நாளின் மாலை வரை ஷைத்தானுக்கும் அவருக்கும் இடையே திரை ஏற்படுத்தப்படுகின்றது. இதை விட வேறெந்த அமலாலும் இவ்வளவு நன்மைகளை எவரும் பெற்று விட முடியாதுஎன மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

الإكثار من الدعاء بالمغفرة والعتق من النار: فقد روى ابن أبي الدنيا بإسناده عن علي قال: ليس في الأرض يوم إلا لله فيه عتقاء من النار، وليس يوم أكثر فيه عتق للرقاب من يوم عرفة، فأكثر فيه أن تقول: اللهم أعتق رقبتي من النار، وأوسع لي من الرزق الحلال، واصرف عني فسقة الجن والإنس، فإنه عامة دعائي اليوم. 

இந்தச் செய்தியை அறிவிக்கும் இப்னு அபித்துன்யா (ரஹ்) அவர்கள் அலீ (ரலி) அவர்கள் கூறியதாக கூறுகின்றார்கள்.

அரஃபா நாளைப் போல் அல்லாஹ்விடம் சிறப்புப் பெற்ற நாள் பூமியில் வேறெதுவும் இல்லை. மேலும், அரஃபா நாளில் நரக விடுதலை அளிப்பதைப் போன்று வேறெந்த நாளிலும் அல்லாஹ் விடுதலை அளிப்பதில்லை. மேற்கூறிய கலிமாக்களை கூறுவதோடு அதிகமாக யாஅல்லாஹ்! என்னை  நரகிலிருந்து விடுதலை செய்வாயாக! ஹலாலான வாழ்வாதாரத்தை எனக்கு விசாலமாகத் தருவாயாக! ஜின் மற்றும் மனித தீங்கை விட்டும் என்னைக் காப்பாயாக!” என்று துஆக் கேட்க வேண்டும். இந்த துஆ எல்லோருக்கும் பொதுவானதாகும்

                                     ( நூல்: முஸ்னத் இப்னு அபித்துன்யா )

மேலும், அரஃபா தினத்தின் முத்தாய்ப்பாக அமைந்த ஓர் அம்சம் இருக்குமானால், அது மாநபி {ஸல்} அவர்களின் ஹஜ்ஜத்துல் விதா விடைபெறும் ஹஜ்ஜில் அரஃபாப் பெருவெளியில் ஆற்றிய உரை தான்.

இஸ்லாம் முழுமைத்துவமும்…. ரப்பின் திருப்பொருத்தத்தையும் பெற்ற தினம்..

في يوم عرفة نزل قوله سبحانه وتعالى
 ﴿ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ﴾

இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்! என்னுடைய அருட்கொடையை உங்களுக்கு முழுமைப் படுத்திவிட்டேன்! மேலும், இஸ்லாத்தை அழகிய நெறியாக பொருந்திக் கொண்டேன்”.       ( அல்குர்ஆன்: 5: 3 )

மாநபி {ஸல்} அவர்கள் அரஃபா தினத்தன்றுபத்னுல் வாதிஎனும் இடத்தில் கஸ்வா வாகத்தின் மீதமர்ந்து சுற்றி இருந்த 1,24,000 நபித்தோழர்களுக்கு மத்தியில் ஆற்றிய விடை பெறும் உரையின் முடிவாக மேற்கூறிய இறைவசனத்தை இறக்கி அருளினான்.

மாநபி {ஸல்} அவர்கள் அரஃபா தினத்தன்றுபத்னுல் வாதிஎனும் இடத்தில் கஸ்வா வாகத்தின் மீதமர்ந்து சுற்றி இருந்த 1,24,000 நபித்தோழர்களுக்கு மத்தியில் இறைவனைப் புகழ்ந்த பின்னர்...

“மக்களே! நான் சொல்லப்போவதை மிகக் கவனமாகக் கேளுங்கள்!. ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் மீண்டும் உங்களைச் சந்திப்பேனா? என்று எனக்குத் தெரியாது” என்று துவங்கி சுமார் நாற்பது அம்சங்களை குறிப்பிட்டார்கள்.

அவைகளில், சில கடமைகளில் கவனமாக இருக்குமாறும், சில கடமைகளை அவசியம் செய்யுமாறும் ஆர்வமூட்டினார்கள்.

சில செயல்களை பெரும்பாவமாக அறிவித்து அவைகளில் இருந்து விலகி வாழுமாறு எச்சரிக்கைச் செய்தார்கள்.

சாதாரணமாக் கருதி விடப்படும் சில கடமைகளை அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அதைச் செய்யுமாறு வலியுறுத்தினார்கள்.

இந்த உம்மத்துக்கு மகத்தான சில சோபனங்களையும், வாழ்த்துக்களையும் கூறினார்கள்.

உரையின் நிறைவாக,

“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கூடியிருந்த நபித்தோழர்களை நோக்கி வினவினார்கள்.

இதைக் கேட்ட கூடியிருந்த நபித்தோழர்கள் ““நிச்சயமாக! நீங்கள் ( சத்தியத்தை - ஏகத்துவத்தை ) எடுத்துரைத்தீர்கள்! அல்லாஹ் உங்களிடம் அமானிதமாக ஒப்படைத்த இந்த தீனின் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றினீர்கள்! ஒட்டுமொத்த மனித குலத்திற்கும், முஸ்லிம் உம்மாவிற்கும் நலவையும், நன்மையையுமே நீங்கள் நாடினீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.

இதனைக் கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்னர் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வே! நீயே, இதற்கு சாட்சியாவாய்!” என்று மூன்று முறை கூறிவிட்டு, ”இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கு எடுத்துக் கூறிவிடுங்கள்” இன்னொரு அறிவிப்பில் “என்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட அதை எத்தி வைத்து விடுங்கள்!”.

ஏனெனில், செய்தியைக் கேள்விப்படுபவர்களில் சிலர், நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்கள்.

இந்த உரை நிறைவு பெற்றதும் அல்லாஹ் {ஜல்} “இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய தீனை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன்” எனும் அல்குர்ஆன்: 5: 3 வசனத்தை இறக்கியருளினான்.

புதியதோர் தியாகத்தை அறிமுகம் செய்த நபித்தோழர்கள்....

அரஃபாப் பெருவெளியில் மாநபி இட்ட “”இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கு எடுத்துக் கூறிவிடுங்கள்!”

இன்னொரு அறிவிப்பில்... “என்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட அதை எத்தி வைத்து விடுங்கள்!” இந்த கட்டளை மாநபித்தோழர்களை இஸ்லாமிய உலகிற்கு புதியதோர் தியாகத்தை அறிமுகம் செய்வதற்கு அழைத்துச் சென்றது.

ஆம்! அல்லாஹ்வின் கட்டளையும், மாநபி {ஸல்} அவர்களின் ஆணையும் மாநபித் தோழர்களை சில போது உணர்வுகளைத் தியாகம் செய்யத் தூண்டியது. உணர்வுகளைத் தியாகம் செய்தார்கள்.

சில போது உறவுகளைத் தியாகம் செய்யத் தூண்டியது. உறவுகளைத் தியாகம் செய்தார்கள்.

சில போது செல்வங்களைத் தியாகம் செய்யத் தூண்டியது. செல்வங்களைத் தியாகம் செய்தார்கள்.

சில போது வீடு, வாசல், சொத்து சுகங்களைத் தியாகம் செய்யத் தூண்டியது. அப்படியே தியாகம் செய்தார்கள்.

ஏன்? சில போது உயிர்களைக் கூட தியாகம் செய்யத் தூண்டியது. உயிர்களை கூட தியாகம் செய்தார்கள்.

ஆனால், இப்போது அவர்களுக்கு முன்னால் இடப்பட்ட கட்டளை ”நன்மைகளைத் தியாகம் செய்யுமாறுத் தூண்டியது” அல்லாஹ்வின் கட்டளை, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஆணை அது எவைகளை இழக்கத் தூண்டினாலும் கொஞ்சம் கூட தயக்கமின்றி தியாகம் செய்யத் துணிந்தவர் நபித் தோழர்கள், இப்போதும் அதை செயல் படுத்த ஆயத்தமானார்கள்.

ஆம்! அல்லாஹ்வின் ஆலயமாம் திருக்கஅபாவில் தொழுகிற ஒவ்வொரு தொழுகைக்கும் கிடைக்கிற நன்மைகளை, மாநபிப் பள்ளியில் தொழுகிற ஒவ்வொரு தொழுகைக்கும் கிடைக்கிற நன்மைகளை, ஆண்டு தோறும் ஹஜ், உம்ரா செய்கிற வாய்ப்பை இன்னும் இதர நன்மைகளை உங்களுக்கும், எனக்கும் இன்னும் கறுப்பருக்கும், வெள்ளையருக்கும் ஈமான் கிடைக்க வேண்டும், இஸ்லாமிய வாழ்க்கை நெறி கிடைக்க வேண்டும் என்பதற்காக தியாகம் செய்ய துணிந்தார்கள்.

அன்று அவர்கள் இந்த தியாகம் செய்ய துணிந்திருக்கா விட்டால் உலகின் 232 நாடுகளில் 180 கோடி முதல் 200 கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் வாழ்கின்றார்கள். உலகில் நடமாடும் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்கிற இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

வரலாறு இப்படிச் சொல்கிறது...

من أكثر من مائة ألف صحابي حضروا حجة الوداع مع النبي صلى الله عليه وسلم، لم يدفن في المدينة المنورة منهم إلا عشرة آلاف، فأين ذهب الباقون؟
لقد فهموا معاني الشهادة {لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ} [البقرة: 143]، ومعنى تبليغ الرسالة «بلغوا عني ولو آية»، ومعنى الأمر الإلهي في الدعوة إلى الإسلام {ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ} [النحل: 125]، فانطلقوا في الآفاق ينشرون دعوة الله ويبلغونها للعالمين.
- أكثر من ثمانين بالمئة من المسلمين اليوم ليسوا من العرب، فمن الذي حمل لهؤلاء الدِّين من مكة والمدينة وطار به إلى أندونيسيا والصين والهند شرقاً وفرنسا وبريطانيا وكندا غرباً؟.
إن أجدادك قد فعلوا ذلك عندما فهموا قول الله: {وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ} [فصلت: 33] فذهبوا إلى تلك البلاد تجاراً وصنَّاعاً وفاتحين، والآن جاء دوري ودورك.
إن الدعوة إلى الإسلام هي مسؤولية المسلمين، وسيسألهم الله عنها يوم القيامة: هل بلَّغتم رسالتي ؟ {فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ} [الأعراف: 6].

ஆம்! மாநபி {ஸல்} அவர்களின் இறுதிப் பேருரையில், அரஃபாஃப் பெருவெளியில் பங்கெடுத்த நபித்தோழர்களின் எண்ணிக்கை 1,24,000 ஆனால், மதீனா ஜன்னத்துல் பகீவு மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 10000 தான்.

ஷாம், இராக், ஸிரியா, ஃபலஸ்தீன், பஸரா, திமிஷ்க், எகிப்து ஆகிய பகுதிகளில் சுமார் 30,000 நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்படிருக்கின்றார்கள்.

மீதமுள்ள நபித்தோழர்கள் எங்கே சென்றார்கள்? என்னவானார்கள்? அவர்களின் அடக்கஸ்தலம் எங்கே இருக்கின்றது? இப்படியான ஒரு தேடலை முன் வைத்தோமானால் விடை இப்படித் தான் கிடைக்கும்.

ஆம்! அரஃபாப் பெருவெளியின் உரை முடிந்து அடுத்த நாள் ஹஜ்ஜுடைய கிரியைகள் முடிந்ததும் தத்தமது வாகனங்கள் எத்திசை நோக்கி நின்றனவோ அத்திசையில் வாகனத்தை செலுத்தினார்கள்.

உலகின் எட்டு திசைகளுக்கும் இஸ்லாம் என்கிற ஏக இறைவனின் ஏகத்துவ ஜோதியை நிரப்பினார்கள்.

நமது இந்திய திரு நாட்டின் தமிழகத்திற்கும் அந்த சத்திய நபித்தோழர்கள் அந்த ஏகத்துவ ஜோதியை எடுத்து வர மறக்கவில்லை.

அதன் ஓர் அடையாளம் தான் கோவளம் கடற்கரையில் அடங்கப்ப பட்டிருக்கும் ஸைய்யிதினா தமீமுல் அன்ஸாரி (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழைப்புப் பணியில் காட்டிய உறுதி, அபூபக்ர் (ரலி) அஸ்அத் இப்னு ஸர்ராரா (ரலி), முஸ்அப் இப்னு உமைர் (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ (ரலி), அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி)  போன்ற நபித்தோழர்கள் அழைப்புப் பணியில் காட்டிய ஆர்வம், அல்லாஹ் அழைப்புப் பணிக்கு வழங்குகின்ற சன்மானங்கள் இவைகள் தாம் அந்த சத்திய நபித்தோழர்களை இவ்வாறான தியாகத்தை மேற்கொள்ளத் தூண்டியது.

அழைப்புப் பணியின் மாபெரும் சிகரம் காலித் இப்னு வலீத் (ரலி)...

فقد أسلم خالد بن الوليد رضي الله عنه سنة سبع بعد الحديبية، وكانت وفاته بالشام سنة إحدى وعشرين، وذكر الذهبي أنه مات وله ستون سنة، فيكون قد أسلم وله نحو من ست وأربعين سنة.
ஹிஜ்ரி 7 –ஆம் ஆண்டு ஹுதைபிய்யாவிற்கு பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

ஹிஜ்ரி 21 –ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் வஃபாத் ஆனார்கள்.

இஸ்லாத்தை அவர்கள் ஏற்கும் போது வயது 46 வஃபாத் ஆகும் போது வயது 60.

وقد قدرت المعارك التي قادها وشارك فيها ما يقارب مائة معركة لم يهزم في أي منها رضي الله عنه وأرضاه.

சுமார் 14 ஆண்டுகளே இஸ்லாத்தின் நிழலில் வாழ்ந்த அவர்கள் ஹிஜ்ரி 8 –ஆம் ஆண்டு நடைபெற்ற மூத்தா யுத்தத்தில் தளபதியாக பொறுப்பேற்றது முதற்கொண்டு 100 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைகளுக்கு தளபதியாக இருந்து இஸ்லாத்தின் நிலப்பரப்பு 22 ½ லட்சம் சதுர மைல் எனும் இலக்கை எட்டுவதற்கு துணை நின்றதோடு, பல்லாயிரக்கணக்கானோர், ஏன் லட்சத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு காரணமாக இருந்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் வஃபாத்திற்குப் பின்னர் ஒரேயொரு முறை மட்டுமே ஹஜ் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே மதீனாவிற்கு வருகை தர முடிந்தது.

வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் இப்படிக் கூறுவார்கள்:

ومضى خالد الى سبيله ينتقل بجيشه من معركة الى معركة، ومن نصر الى مصر حتى كانت المعركة الفاصلة..
கிட்டத்தட்ட, பல ஆயிரம் மைல் தூரம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கும், அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்கும் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு என தொடர்ந்து பயணித்தார்கள். குடும்பம், ஊர், சொந்தம், மக்கள் என எவரின் தொடர்பும் அவர்களுக்கு இல்லை.

அவர்களின் தொடர்பு முழுவதும் இரண்டு ஃகலீஃபாக்கள் ( அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) மற்றும் கலீஃபாக்களின் தூதுவர்களோடு தான் இருந்தது.

هذا السلطان الذي بدأ يحسّ خطر الاسلام الأكبر عليه، فراح يدفع الفتنة في طريقه من وراء ستار..!!
ونشبت نيران الفتننة في قبائل: أسد، وغطفان، وعبس، وطيء، وذبيان..
ثم في قبائل: بني غامر، وهوزان، وسليم، وبني تميم..
ولم تكد المناوشات تبدأ حتى استحالت الى جيوش جرّارة قوامها عشرات الألوف من المقاتلين..
واستجاب للمؤامرة الرهيبة أهل البحرين، وعمان، والمهرة، وواجه الاسلام أخطر محنة، واشتعلت الأرض من حول المسلمين نارا.. ولكن، كان هناك أبو بكر..!!

இவர்களின் வீரத்தால் எப்படி பெரும் பெரும் படைகளைத் தோற்கடித்து இஸ்லாத்திற்கு வெற்றி தேடித் தந்தார்களோ, அது போன்று விவேகமான அழைப்புப் பணியால் பல்லாயிரக் கணக்கானோர் இஸ்லாத்தை தழுவுவதற்கும் அடித்தளமாக விளங்கினார்கள்.

حتى قال رضي الله عنه : (لقد منعني كثيراً من القراءة الجهادُ في سبيل الله) رواه ابن أبي شيبة في " المصنف " (4/214)، وأبو يعلى في " المسند " (13/111)، والإمام أحمد كما في " فضائل الصحابة " (2/814)

காலித் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் பாதையில் போராடுவதில், அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால் அழைப்பதில் எனக்கு இருந்த பேரார்வம் என்னை குர்ஆன் முழுவதையும் மனனமிட முடியாமல் தடுத்து விட்டது” என்று அடிக்கடி சொல்வார்களாம்.

அல்குர்ஆனின் வெறும் மூன்று ஸூராக்களை மட்டுமே மனனமிட்டு இருந்தார்களாம்” என்று முஸன்னஃப் அபீ ஷைபா மற்றும் முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சில நிமிட சந்திப்பில் தீனை அறிமுகம் செய்து....

لقد بهرت عبقرية خالد قوّاد الروم وأمراء جيشهم، مما حمل أحدهم، واسمه جرجح على أن يدعو خالدا للبروز اليه في احدى فترات الراحة بين القتال.
وحين يلتقيان، يوجه القائد الرومي حديثه الى خالد قائلا:
" يا خالد، أصدقني ولا تكذبني فان الحرّ لا يكذب..
هل أنزل على نبيّكم سيفا من السماء فأعطاك ايّاه، فلا تسلّه على أحد الا هزمته"؟؟
قال خالد: لا..
قال الرجل:
فبم سميّت يبف الله"؟
قال خالد: ان الله بعث فينا نبيه، فمنا من صدّقه ومنا من كذّب.ز وكنت فيمن كذّب حتى أخذ الله قلوبنا الى الاسلام، وهدانا برسوله فبايعناه..
فدعا لي الرسول، وقال لي: أنت سيف من سيوف الله، فهكذا سميّت.. سيف الله".
قال القائد الرومي: والام تدعون..؟
قال خالد:
الى توحيد الله، والى الاسلام.
قال: هل لمن يدخل في الاسلام اليوم مثل ما لكممن المثوبة والأجر؟
قال خالد: نعم وأفضل..
قال الرجل: كيف وقد سبقتموه..؟
قال خالد:
لقد عشنا مع رسول الله صلى الله عليه وسلم، ورأينا آياته ومعجزاته وحق لمن رأى ما رأينا، وسمع ما سمعنا أن يسلم في يسر..
أما أنتم يا من لم تروه ولم تسمعوه، ثم آمنتم بالغيب، فان أجركم أجزل وأكبر اا صدقتم الله سرائركم ونواياكم.
وصاح القائد الرومي، وقد دفع جواده الى ناحية خالد، ووقف بجواره:
علمني الاسلام يا خالد"".!!!
وأسلم وصلى ركعتين لله عز وجل.. لم يصلّ سواهما، فقد استأنف الجيشان القتال.. وقاتل جرجه الروماني في صفوف المسلمين مستيتا في طلب لبشهادة حتى نالها وظفر بها..!!

யர்மூக் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணம் அது! முதல் நாள் சண்டை முடிந்து ஓய்வில் அமர்ந்திருந்தனர் முஸ்லிம் படைவீரர்கள்.

ரோமபுரியின் படைத்தளபதிகளில் ஒருவரான ஜுர்ஜஹ் என்பவர் முஸ்லிம்களின் படைத்தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்களை சந்திக்க விரும்புவதாக அனுமதி வேண்டி நின்றார். அனுமதி வழங்கி உள்ளே வரச்சொல்லி ஆணையிட்டார்கள் தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.

வந்தவர் பணிவாக காலித் (ரலி) அவர்கள் முன் வந்து அமர்ந்தார். பின்னர் நடைபெற்ற உரையாடல் இதோ....

ஜுர்ஜஹ் –      காலித் அவர்களே! பொய் சொல்லக்கூடாது உண்மையை
மட்டும் சொல்ல வேண்டும். ஏனெனில், சுதந்திரமானவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் நான் கேள்விப்பட்டது உண்மையா?

காலித் (ரலி) –   என்ன கேள்வி பட்டீர்கள்?..

ஜுர்ஜஹ் -    உங்கள் நபி வானில் இருந்து ஒரு வாளைப் பெற்று  உங்களுக்கு வழங்கினார்களாம் அதனால் தான் உங்கள் வாள் வீச்சுக்கு முன்னால் வல்லரசுகளும், வலிமைவாய்ந்த படைகளும் வலுவிழந்து போகிறார்களாம் அப்படியா? என்று ஆச்சர்யம் ததும்ப கேட்டார்.

காலித் (ரலி -   அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

ஜுர்ஜஹ் -    பின்னர் எப்படி உங்களுக்கு அந்தப் பெயர் வந்த்து?

காலித் (ரலி -   அல்லாஹ் எங்களுக்கு ஒரு தூதரை நபியை   அனுப்பினான், எங்களில் அவர்களை நம்பியவர்களும்  இருந்தனர், மறுத்தவர்களும் , பொய்ப்படுத்தியவர்களும் இருந்தனர்.

                காலித் (ரலி) தொடர்ந்தார், நான் அவர்களை மறுத்தேன்,   பொய்ப்படுத்தினேன். பின்பு அல்லாஹ் என் இதயத்தை இஸ்லாத்திற்காக வென்றெடுத்தான். அந்த நபியைக் கொண்டு என்னை நேர்வழியில் ஆக்கினான்.

                பின்னர் நான் அவர்களிடத்தில் எக் காலத்திலும் இறைவனுக்கும், இறைத்தூதரான உங்களுக்கும் மரணம்  வரை விசுவாசமாய் இருப்பேன் என வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன்.

                அப்போது என்னை தங்களுக்கு அருகே அழைத்த அண்ணலார் நீர் அல்லாஹ்வின் வாள்களில் ஓர் வாள் எனக்கூறினார்கள். அன்றிலிருந்து நான் ஸைஃபுல்லாஹ்என அழைக்கப்படுகிறேன் என்றார்கள்.

ஜுர்ஜஹ் -    எதன் பக்கம் நீங்கள் அழைக்கின்றீர்கள்?

காலித் (ரலி)-   ஏகத்துவத்தின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும்.

ஜுர்ஜஹ் -    இன்று ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும்  உங்களுக்கு கிடைத்திருக்கும்  இது போன்ற கூலியும்  நன்மையும் அவருக்கு கிடைக்குமா?

காலித் (ரலி) -  ஆம்! இதைவிட மிகச் சிறப்பாக கிடைக்கும்.

ஜுர்ஜஹ் -    எப்படி உங்களை விட மிகச்சிறப்பான கூலி கிடைக்கும்?

காலித் (ரலி) -  நாங்கள் நபியின் காலத்தில் வாழ்ந்தோம், அல்லாஹ்வின்  வேத வசனங்கள் நாங்கள் வாழ்ந்த காலத்தில்தான இறங்கியது.

                அல்லாஹ்வின் அற்புதங்களையும், உதவிகளையும்  அத்தாட்சிகளையும் கண்ணாறக் கண்டோம். ஆனால், இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறவர்களோ இவையனைத்தையும் காணாமலே நம்பிக்கை கொள்கிறார்கள்.

                அல்லாஹ்வை மறைவான நிலையில் நம்பிக்கை கொள்ளும் உங்களை கௌரவிக்கும் அல்லாஹ்வின் அருள் மிகவும் சிறப்பிற்குரியதல்லவா?

ஜுர்ஜஹ் -      அப்படியென்றால் காலித் (ரலி) அவர்களே! நான் இஸ்லாத்தைத் தழுவுகின்றேன். எனக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுங்கள் அதிகாலைப் பொழுதில்  தொடங்கிய உரையாடல் ளுஹர் நேரம் வரைத் தொடர்ந்தது. இஸ்லாத்தின் உயரிய கடமையான தொழுகையையும் ஜுர்ஜஹ் கற்றுக் கொண்டார்.

ளுஹர்த் தொழுகையில் கலந்து கொண்டார், இஸ்லாமிய படையின் முதல்வரிசையில் நின்றார், ஏகத்துவ புத்துணர்வோடு எதிரிகளின் களம் புகுந்து சுழன்று சுழன்று போரிட்டார்.

அவரின் முழு சிந்தனையும் இறைவனுக்காக, இறை மார்க்கத்திற்காக உயிர் நீத்து ஷஹீத் ஆக வேண்டும் என்பதாகவே இருந்ததை அவரின் வேகம் முஸ்லிம்களுக்கு உணர்த்தியது.

சுப்ஹானல்லாஹ்.... சிறிது நேரத்தில் அவருக்கு அல்லாஹ் அந்த பரிசை வழங்கிக் கௌரவித்தான்.

ஆம்! ஷஹீத் எனும் கௌரவத்தை வழங்கி ஜுர்ஜஹ் (ரஹ்) அவர்களை அலங்கரித்தான்.                  ( நூல்- ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் (ஸல்) .... 299301 )

نتمنى مع أمير المؤمنين عمر، لوخلا سيف خالد من هذا الرهق، فاننا سنظل نردد مع أمير المؤمنين قوله:
" عجزت النساء أن يلدن مثل خالد"..!!
لقد بكاه عمر يوم مات بكاء كثيرا،
نردد مع أمير المؤمنين عمر كلماته العذاب الرطاب التي ودّعك بها ورثاك:
" رحم الله أبا سليمان
ما عند الله خير مما كان فيه
ولقد عاش حميدا
ومات سعيدا

காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் வஃபாத் ஆன செய்தி கேட்டதும் கலீஃபா உமர் (ரலி) கடுமையாக அழுதார்கள்.

மதீனத்து பெண்கள் காலித் இப்னு வலீத் போன்றவர்களை பெற்றுத் தருவதில் இருந்து இயலாமல் போய்விட்டனர்.

அல்லாஹ் அபூ ஸுலைமான் (காலித் இப்னு வலீத் ) க்கு அருள் புரிவானாக! அல்லாஹ்விடம் எவைகள் எல்லாம் சிறந்தவையாக இருந்தனவோ அவைகள் எல்லாம் கொண்டவராய் அவர் இருந்தார். வாழும் போது புகழோடு வாழ்ந்தார்! இதோ! இப்போது சீதேவியாக மரணித்து இருக்கின்றார்” என்று உமர் (ரலி) கூறினார்கள்.                           ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}… )

ஆக அரஃபா தினம் என்ற உடன் நமக்கு அதன் சிறப்புகளும், மாண்புகளும் ஞாபகத்திற்கு வருவது போன்று அழைப்புப் பணியின் முக்கியத்துவமும் ஞாபகத்திற்கு வர வேண்டும்.

அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்ற அருட்கொடைகளை, தனி ஆற்றல்களைப் பயன்படுத்தி அழைப்புப் பணியில் ஈடுபடுவோம்!

மேலான ரப்பின் நேசத்தையும், நெருக்கத்தையும் பெறுவோம்!

யாஅல்லாஹ்! எங்களைக் கொண்டு உன்னுடைய தீனுக்கு எந்த பணிகளை செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாயோ அவைகளில் ஈடுபடும் நல்ல நஸீபை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


இன்ஷா அல்லாஹ்…. ஹஜ்ஜுப் பெருநாள் பேருரை “ நெஞ்சு பொருக்குதில்லையே இறைவா! என் மியான்மர் முஸ்லிம்களின் நிலையை பார்க்கும் போது” எனும் தலைப்பில் “இன்று இரவு அல்லது நாளை ஜும்ஆக்குப் பின்னர் பதிவிடப்படும்.

என்றென்றும் உங்கள் துஆவின் ஆதரவில்… பஷீர் அஹ்மது உஸ்மானி.

7 comments:

  1. barakallh தங்களின் சேவைகளை ரப்பு அங்கீகரித்து கொள்வானாக

    ReplyDelete
  2. காலத்திற்கு ஏற்ப பதிவுகளை தருவதே தங்களின் தனி சிறப்பு

    ReplyDelete
  3. இன்னும் கல்வி ஞானத்தை அல்லாஹ் உங்களுக்கு அதிகப்படுத்துவானாக.ஆமீன்

    ReplyDelete
  4. உமர்(ரலி)அவர்கள் சொன்னதாக ஒரு
    வார்த்தை சீதேவியாக இறந்தார் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம் உங்களது சேவைகள் தொடர எனது வாழ்துக்கள்

    ReplyDelete
  5. அல்லாஹூம்ம ஃபக்கிஹூக்க பித்தீன்

    ReplyDelete