Friday, 1 September 2017

ஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா!”



ஈதுல் அள்ஹா பேருரை
நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா!”
 

ஆக்ரமிப்புப் போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், இனஅழிப்பு வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக உயிர் வாழும் உரிமைக்காகச் சொந்தநாட்டை விட்டு, தாய்மண்ணைப் பிரிந்து அகதிகளாய்ப் புலம்பெயர்கிறவர்கள் படும் துன்பங்கள் வலியிலும் வலியானது.

பர்மா எனப்படும் மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படு கொலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக மியான்மர் இராணுவமும், ”696” இயக்க ஃபாசிஸ பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய பயங்கரமான கொலை வெறித் தாக்குதல்களுக்கு குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 3000 பேர் பலியாயினர். 18000 பேர் நாட்டை விட்டு வெளியேனர்.

தொடர்ந்து சிறியதும் பெரியதுமாக நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு அஞ்சிப் பல்லாயிரக்கணக்கானோர் அண்டை நாடுகளான பங்களாதேஷுக்கும் தாய்லாந்துக்கும் தப்பி ஓடுகின்றனர்.

ஆனால், இவர்களை ஏற்க மறுக்கும் அந்நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி அவர்களை விரட்டுகின்றன. கடல்வழியாகப் படகுகளில் தப்பி வருபவர்களைத் தங்கள் எல்லைக்குள் நெருங்க விடாமல் தடுக்கின்றன.

இதனால் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் கடற்கரைக்கருகே சுமார் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் படகுகளில் நடுக்கடலில் தத்தளித்து இறந்து போயிருக்கின்றனர்.

சர்வதேச உலகின் எந்த ஆட்சியாளர்களாலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத ரோஹிங்ய முஸ்லிம்களின் வரலாற்றையும் தொடர் துன்பத்தையும் நாம் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல, உரத்துச் சொல்லக் கடமை பட்டுள்ளோம்.

மியான்மரும்... முஸ்லிம் சமூகமும்...

பர்மாவில் பௌத்தம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது அடுத்த நிலையில் இஸ்லாம், இந்து, கிறிஸ்துவ மதங்கள் இருக்கின்றன. பர்மாவில் 130க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழ்கின்றன.

அங்கு வாழும் ஆறு கோடி மக்களில் பத்து சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். இவர்கள் அனைவரும் அம்மண்ணின் மைந்தர்களாவர்.

1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மாவில் இஸ்லாம் பரவியது. பர்மாவுக்கும் பங்களாதேஷ்க்கும் இடைப்பட்ட பகுதியான அராக் காணில்தான் பெருமளவு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். பர்மாவின் மேற்குப்பகுதி மாகாணமான இங்கு வாழும் முஸ்லிம்கள்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் எனப்படுகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்...

கி.பி. 11 -ஆம் நூற்றாண்டு பாகன் அரசர்கள் காலத்திலேயே ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத வன்முறைகள் முதன்முதலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

கட்டாயப் பௌத்த வழிபாடுகளுக்கு வற்புறுத்தப் படல், ஹலால் உணவுகளுக்குத் தடை, பாலியல் வல்லுறவு, பெருநாள் பண்டிகைகளுக்குத் தடை, கூட்டுத் தொழுகைகளுக்கு நெருக்கடி, கட்டாய மதமாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அம்மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் முடியாத பலவீனமானவர்களாகவே அடிமைப்படுத்தப்பட்டார்கள்.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் பர்மா வந்தபோது, இந்திய முஸ்லிம்கள் பர்மாவுக்கு வணிக ரீதியான பயணங்களை மேற்கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமூக மக்களுடன் தமிழ் முஸ்லிம்களும் அங்கு குடி பெயர்ந்தனர். முதல் உலகப்போருக்குப் பின்னால்தான் அதிக மானோர் பர்மாவுக்கு வந்தனர்.

1930களில் தலை நகர் ரங்கூனில் இந்தியர்கள் பெரும்பான்மையினராக மாறினர். வியாபாரங்களும் தொழில்களும் அவர்கள் வசமாயின. ஆங்கிலேயர்களின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பர்மாவில் விடுதலை முழக்கங்கள் வெடித்தன. 1938இல் உருவான ஆங்கிலேய எதிர்ப்புக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக மாறியது.

ஆங்கிலேயர் எதிர்ப்பு, இந்தியர் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு என மூன்று முழக்கங்கள் பர்மாவில் எதிரொலித்தன. இதில் முஸ்லிம்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

அதில் பர்மாவை பிரிட்டிஷ் இந்தியாவிடமிருந்து பிரித்து தனிநாடாக நிர்வகிப்பது என்றும், பர்மாவில் வாழும் முஸ்லிம்களுக்கு சமஉரிமையும் குடியுரிமையும் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் இரண்டாவது கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது. அதன் கொடூரங்களைத்தான் இன்று ரோஹிங்ய முஸ்லிம்கள் அனுபவிக் கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் பர்மாவை ஆக்ரமித்தது. அப்போதும் ஜப்பானியர்கள் பௌத்த இனவெறியோடு முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்.

1948இல் பர்மா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் அரசுப் படுகொலைகளாக மாறின. ராணுவத்தின் துணைகொண்டு பௌத்த இனவாத இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகளாக முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களை நடத்தி வருகின்றன.

அரச பயங்கரவாதமும்... ஃபாசிஸ பயங்கரவாதமும்...

2012ஆம் அண்டு ஐ.நா. பிரதிநிதியாகச் சென்ற யான் கி லீ என்ற பெண்மணி அங்கு முஸ்லிம்கள் படும் இன்னல்களை அறிக்கையாகத் தயாரித்து உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார். அந்த அறிக்கை பர்மாவில் முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து கொத்தடிமைகளாக வாழ்வதாகக் கூறியது.

இதனைப் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான ஃபாஸிஸ அமைப்பான ‘969’ இயக்கத்தின் தலைவர் விராது கடுமையாகக் கண்டித்தார். இவரை டைம் பத்திரிகை தோலுரித்து அம்பலப்படுத்தியது. அவருக்கு ஆதரவாகப் பர்மாவின் அதிபர் தெய்ன் செய்ன் குரல் கொடுத்தார்.

அவரைத் தங்களின் வழிகாட்டி எனப் புகழ்ந்தார். இதன்மூலம் முஸ்லிம் இனப்படுகொலைகளைப் பர்மாவின் அரசும் ராணுவமும் பகிரங்கமாக ஆதரிப்பது தெளிவானது.

உணவு, உறைவிடம் இன்றி வெட்டவெளியில்....

இதுவரை பர்மாவிலிருந்து புறஅகதிகளாகப் புறப்பட்ட 12 லட்சம் ரோஹிங்ய முஸ்லிம்கள் பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். முன் எப்போதுமில்லாத அளவில் நடைபெறும் கொடுமைகளால், கூட்டம் கூட்டமாக அகதிகளாக புறப்பட்டு எங்கு செல்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள். இவர்களின் அவலங்களை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்அமைப்பு ‘ALL YOU CAN DO IS PRAY’ என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

பர்மாவின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவும் இந்தியாவும் வேடிக்கை பார்க்கின்றன. பர்மாவின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடிய ஆங்சான் சூகியின் மௌனம் இனப்படுகொலைகளைவிடக் கொடுமையானது.
கடந்த காலங்களில், இதுதொடர்பாக தாய்லாந்தில் கூடிய 17 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பெரும்பான்மையான நாடுகள் பர்மாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது ஆறுதலான விஷயம்.

பௌத்த மக்களின் உலகத் தலைவரான தலாய்லாமா பர்மா அரசின் மதவாதத்தைக் கண்டித்து உரத்த குரல் எழுப்பியிருந்தார். அந்த மக்களுக்கு ஆதரவாக உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்று ஆங்சான் சூகியை இரண்டு முறை சந்தித்து வலியுறுத்தியும் இருந்தார்.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்புவதற்காக படகு மூலம் கடல் வழிப் பயணம் செய்து வேறு நாடுகளுக்குள் உயிர் பிச்சைக் கேட்கச் செல்லும் அகதிகளின் படகுகள் கவிழ்ந்து ஆயிரக் கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் கடலிலேயே மரணித்துள்ளார்கள். என்று சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த மூன்றாண்டுகளில் மியன்மாரில் இருந்து சுமார் 120000 க்கும் அதிகமானவர்கள் படகுகள் மூலம் தப்பிச் செல்ல முயன்று கடலில் தத்தளித்து காணமல் போயுள்ளார்கள் அல்லது உயிரிழந்துள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தகவல் மையம் தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டின் (2016) முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 25000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மியன்மாரில் இருந்து கடல் வழியாக வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவிக்கின்றது.

100 நபர்கள் பயணிக்கும் படகில் சுமார் 300 நபர்கள் ஏற்றப்படுகின்றார்கள். அணிந்துள்ள ஆடையைத் தவிர வேறு ஆடைகள் எடுத்துக் கொள்ள முடியாது. எந்த உடமைகளையும் எடுத்துக் கொள்ள முடியாது. எந்தளவுக்கென்றால் மேலதிக உணவைக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து கடலில் பயணிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே குறித்த பயணத்திற்காக படகில் ஏற்றப்படுவார்கள்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மியன்மாரிலேயே இருந்து உயிர் விட வேண்டியதுதான். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இந்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு பயணிக்கின்றார்கள்.

பயணத்தில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக படகில் கடும் சண்டைகள் நடைபெரும். உணவை வைத்திருப்பவர்களிடம் இருந்து பரித்துக் கொள்வதற்காக நடைபெரும் சண்டைகளில் 100 பேர் வரை இறந்து விட்டதாக பி.பி.சி யிடம் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முஸ்லிம் நாடுகள் இருந்தும் அநாதைகளாக்கப் பட்ட ரோஹிங்ய சமூகம்...

உயிர் பிழைப்பதற்காக உயிர்ப் பிச்சைக் கேட்க்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அண்டை நாடுகளான பங்களாதேசம், இந்தோனேஷியா, மலேசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கூட அடைக்கலம் கொடுக்கத் தயங்குகின்றன.

சிலருக்காக கதவைத் திறந்தால் பலருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தின் காரணமாக இந்நாடுகள் மௌனம் காத்து வருகின்றன.
தாய்லாந்தைப் பொருத்த வரையில் அதுவும் பௌத்தத்தை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதினால் மியன்மாரை பகைத்துக் கொள்ள தாய்லாந்து விரும்பவில்லை என்பதே நிதர்சனமாகும்.

மலேசியா முஸ்லிம் நாடு. அதுவும் செல்வந்த நாடாக இருப்பதுதான் அவர்களுக்குறிய பெரும் பிரச்சினையாகும். ரோஹிங்யா அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதித்தால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கு சிக்கலாகி விடும் என்ற காரணத்தினால் மலேசியாவுக்குள் ரோஹிங்யா அகதிகள் உள்வாங்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்கள்.

பங்களாதேச அரசும் ரோஹிங்யா முஸ்லிம்களை தமது நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. நாட்டின் சனத்தொகை பெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேசத்தில் இடமளித்தால் பாரிய பிரச்சினைகள் தோன்றலாம் என்று கருதி அவர்களை ஏற்றுக் கொள்வதை பங்களாதேச அரசும் தவிர்த்து வருகின்றது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பானஆசியான்ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தாலும்ஆசியான்இது தொடர்பில் மௌனமாகவே இருந்து வருகின்றது.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளைக் காப்பாற்றுவதை விட மியன்மாருடனான உறவை பேணுவதே ஆசியான்அமைப்பின் முக்கிய பணியாக அது நினைக்கின்றது.

ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் எர்துகான்....

இந்நிலையில், இன்று ( 01/09/2017 – வெள்ளிக்கிழமை) துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் "மௌலூத் ஜாவிஷ் உக்லூ" மியன்மார் வன்முறைக்கெதிரான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் துருக்கி அரசாங்கம் முன்னெடுக்கும் என அறிவித்துள்ளார்.

President Recep Tayyip Erdoğan underlined Wednesday that Turkey would not leave the oppressed Rohingya Muslims alone in the ongoing crisis in Myanmar.
Speaking at the Victory Day evening reception at the Beştepe Presidential Palace in Ankara, Erdoğan reiterated that Turkey was ready to provide more humanitarian aid to those in Rakhine and called on the international community to do the same.
In the past week around 3,000 Rohingya Muslims have been killed in the violence, while some 18,000 have fled persecution according to the International Organization for Migration.
In his speech, Erdoğan also stressed the importance of the fight against terrorism, hinting that any political and military option would be considered regarding the developments in the region.
"Those who want to corner Turkey through terror organizations will be left alone with these ticking bombs after a while," the president warned.
He said that Turkey owed the success in the fight against terror and cross-border operations to the steps taken in the defense industry over the last 15 years.
He asserted that Turkey was not in a state of regression in any way, saying that the 'veiled' embargoes, recent problems with its allies or FETÖ's coup attempt had not affected the country's current or future plans, projects and operations.
Erdoğan also said that the weapons supplied by Turkey's allies ended up in the hands of Daesh terrorists, adding that the very same weapons would be used against them "when the time comes, just like a boomerang."
Washington's insistence on backing the YPG, which is considered as a terrorist group by Turkey for its ties to the PKK, has strained bilateral relations. The U.S. previously dropped 50 tons of weapons and ammunition to the YPG for the first time in October 2015. That airdrop was followed by heavy arms and weapons supply to the group in recent months for the Raqqa offensive.

மேலும், புதன்கிழமை அன்று (30/08/2017) அன்று சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது துருக்கியின் அதிபர் தைய்யிப் ரஜப் எர்துகான் அவர்கள் “ரோஹிங்ய முஸ்லிம்களைத் தனித்து விடமாட்டோம். நிச்சயம் அவர்களின் பிரச்சனை முடிவுக்கு வரும். என தெரிவித்ததோடு வரும் செப்டம்பர் 09 –ஆம் தேதி ஐ. நாவில் இது குறித்து விவாதிக்க கோரப்படும் என்றும் அறிவித்திருக்கின்றார்.

மேலும், துருக்கி முழுவதும் 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், துருக்கியின் அனைத்து பள்ளிவாசல்களிலும் பர்மா ராணுவம் மற்றும் பர்மா ஃபாசிஸ பயங்கரவாதிகளால் ஷஹீதாக்கப்பட்ட 3000 முஸ்லிம்களுக்கும் ஃகாயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இவ்வருட ஹஜ்பெருநாள் செலவினங்களை குறைத்து ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வழங்க முன்வருமாறு அந்நாட்டு மார்க்க விவகாரத்துறை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

மலேசியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், கத்தர், மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளோடு கலந்து பேசி முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திட இரண்டு போர்க்கப்பல்களையும் அனுப்பியது துருக்கி அரசு.

தற்போது, துருக்கியோடு கத்தார் நாடும் இணைந்துள்ளது. ரோஹிங்ய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து விதமான மனித நேய உதவிகளும் செய்யப்ப்ஊ ஏணா அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் அறிவித்து இருக்கின்றார்.

( தகவல்: காலச்சுவடு மாத இதழ் மற்றும் டெய்லி ஸபாஹ் தின ஆங்கில இதழ் )

நாம் என்ன செய்ய வேண்டும்?...

சுமார் எழுபது ஆண்டுகளாக பலியாகிக் கொண்டிருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்காக, அநாதைகளாக்கப்படும் குழந்தைகளுக்காக, விதவைகளாக்கப் படும் நம் சகோதரிகளுக்காக நாம் செய்யவேண்டியது என்ன?

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு எவ்வகையில் எல்லாம் கடமைப் பட்டிருக்கின்றான் என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தையும் வாழ்க்கையும் நமக்கு மிகப் பெரும் முன்மாதிரியான வழிகாட்டியைத் தந்திருக்கின்றது.

அந்த வழியில் நின்று அவர்களுக்கு ஆறுதல் தருவோம்! அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ வழிவகுப்போம்!

ஒரு முஸ்லிம் உலகின் எந்த ஒரு மூலையில் எந்த ஒரு பாதிப்புக்கு உள்ளானாலும் அந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்ட ஓர் பாதிப்பாக நாம் உணர வேண்டும்.

நாம் வாழ்கிற இந்த ஜனநாயக இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான வழிகளைக் கையாண்டு அவர்களின் பாதிப்பில் இருந்து அவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

1. ரோஹிங்ய முஸ்லிம்களின் மீது நமக்கான அவசரக் கடமைகள் என்ன?

1. நமக்கும் அவர்களுக்கும் இடையே இஸ்லாம் கூறும் சகோதர பந்தம் இருக்கின்றது.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

“திண்ணமாக! இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள். எனவே, உங்களின் சகோதரர்களின் காரியத்தில் சீர்திருத்தத்தையே நீங்கள் நாடுங்கள்!”                                           ( அல்குர்ஆன்: 49: 10 )

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ

“இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் மற்ற இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் நேசர்கள் ஆவார்கள்”. ( அல்குர்ஆன்: 9: 71 )

தான் நேசம் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் இக்கட்டான, சோதனையான நேரத்தில் நேசம் கொண்ட காரணத்தால் எவ்வாரெல்லாம் அந்த நேசத்தை வெளிப்படுத்துவாரோ அவ்வாறே சிரிய முஸ்லிம்கள் விஷயத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.
قول رسول الله - صلى الله عليه وسلم -: ((المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا))

ஒரு இறைநம்பிக்கையாளர், மற்றொரு இறைநம்பிக்கையாளருக்குக் கட்டிடத்தைப் போன்றவராவார். எப்படி ஒரு கட்டிடம் நிலைத்திருப்பதற்கு ஒரு செங்கல் இன்னொரு செங்கலின் துணை கொண்டு உறுதிப்படுத்துகின்றதோ அதைப் போன்றுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

وقوله - عليه السلام -: ((مثل المؤمنين في توادهم وتراحمهم؛ كمثل الجسد، إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى)).

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்போடும், கருணையோடும் இருப்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் உடலை உதராணமாகச் சொல்லலாம். காய்ச்சலின் போதோ, அல்லது ஏதாவது நோவினையின் போதோ உடலின் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்பு என்றால் ஒட்டு மொத்த உடலும் அதில் பங்கெடுத்துக் கொள்கின்றதே அதைப் போன்றுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

2. பிற முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துன்பம் தங்களுக்கு ஏற்பட்டது போன்று உணர வேண்டும்.

கப்பாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அவரின் எஜமானியும், குறைஷித் தலைவர்களும் கடும் வேதனை செய்தார்கள்.

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்து, பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பர்கள்.

அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

பலமுறை மாநபி {ஸல்} அவர்களிடம் முறையிட்ட போதும், மாநபி {ஸல்} அவர்கள் பொறுமையை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்கள்.

இந்நிலையில், நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானி உம்மு அன்மாரும் தன் பங்குக்குப் கொடுமை செய்தாள்

ومر رسول الله به ذات يوم وهو يعذب، فرفع كفيه إلي السماء وقال
اللهم انصر خبابا
واستجاب الله لدعاء رسوله، فقد أصيبت أم أنمار بسعار غريب فجعلها تعوي مثل الكلاب!
ونصحها البعض بأن علاجها هو أن تكوي رأسها بالنار!
وهكذا ذاقت من نفس الكأس التي أذاقته لخباب بن الأرت.

ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று, கப்பாப் அவர்களின் தலையை அனுசரனையாய் தடவி விட்டு, ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாள்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் கீழே வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி யாஅல்லாஹ்! கப்பாபுக்கு நீ உதவி செய்வாயாக!". என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது துஆவுக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

ஆம்! உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி.

வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் அரபுலகத்தின் அனைத்து வைத்தியர்களிடமும் தூக்கிக் கொண்டு ஓடினார்.

ஆனால், யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை. இறுதியாக, அக்காலத்தில் சூட்டுக்கோல் வைத்திய முறை என்று ஒன்று இருந்தது. அதாவது, அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.

கடைசியாக, அதன் காரணமாகவே உம்மு அன்மார் இறந்தும் போனார்.

عن جرير بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

அவர்களது வறிய நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.

அப்போது,  “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.

 பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்” என்கிற  (4 –ஆம் அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

பின்னர், ‘அல் ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ”இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ எனும் ( 59 –ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது ( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்றும் ”பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.

உடனே ( நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின் தர்மப் பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.

இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று இலங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.

அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று கூறினார்கள்.                                    ( நூல்: முஸ்லிம் )


3. முஸ்லிமின் துன்பம் நீங்கும் வரை அவர்களுக்காக துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

عن أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ
 "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".
صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும்  பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

 “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!

தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்…..

ஃபிர்அவ்ன் இடத்தில் மூஸா {அலை} அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வைத்த போது

ஆரம்பத்தில் நீர் என்னிடத்தில் தானே வளர்ந்தீர்! நீர் வளர்பருவத்தில் இருக்கும் போது இன்னின்னவாரெல்லாம் நடந்து கொண்டீரேஎன்றெல்லாம் குதர்க்கம் பேசினான்.

அடுத்து, ஏக இறைவனைக் குறித்து ஏகடியம் பேசினான். தன் அமைச்சர் ஹாமானை அழைத்துஎங்கே வானத்தின் பால் செல்கிற வசதியை ஏற்படுத்திக் கொடு, அங்கு சென்று மூஸாவின் இறைவன் எங்கு இருக்கின்றான் என பார்த்து வருகின்றேன்என்றான்.

அடுத்து, சூனியக்காரர்களை அழைத்து, மண்ணைக் கவ்வி மாபெரும் தோல்வியைச் சந்தித்தான்.

அவன் மூஸா {அலை} அவர்களால் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்த தருணமும், ஃபிர்அவ்ன் இடத்தில் மூஸா {அலை} அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்த தருணம் அது.

وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ رَبَّهُ إِنِّي أَخَافُ أَنْ يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَنْ يُظْهِرَ فِي الْأَرْضِ الْفَسَادَ

என்னை விடுங்கள்! நான் மூஸாவைக் கொலை செய்து விடுகின்றேன்; இன்னும் அவர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அவருடைய இறைவனை அழைக்கட்டும்; உங்களுடைய மார்க்கத்தை அவர் மாற்றிவிடுவார், அல்லது பூமியில் குழப்பத்தை உண்டாக்கி விடுவார் என்று நான் பயப்படுகின்றேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான்.                                                  ( அல்குர்ஆன்: 40: 26 )

وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ
அப்போது, ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிலிருந்து தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஓரிறை நம்பிக்கை கொண்ட ஒருவர் எழுந்துஎன்னுடைய இறைவன் அல்லாஹ் என்று கூறுகின்ற ஒரு மனிதரையா நீர் கொலை செய்யப் போகின்றீர்?” என்று கேட்டார்.                                             ( அல்குர்ஆன்: 40: 28 )

அல்லாஹ் பொங்கி எழுந்த அத்தகைய இறைநம்பிக்கையாளரை நினைவு படுத்தும் பொருட்டே அந்த அத்தியாயத்திற்கு முஃமின் என பெயர் வைத்தான்.

உண்மையில், ஈமான் இருக்கும் உள்ளத்தில் நிச்சயம் சக ஈமான் தாரிக்கு ஏற்படுகிற எந்த ஒரு அநீதியையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடாது.

2. முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

1. அழித்து விடுவான்….

1. அநியாயக்காரர்களை அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை....

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

“இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று நீங்கள் கருத வேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்!        ( அல்குர்ஆன்: 14: 42 )

2. அநியாயக்காரர்களின் முடிவு தாமதமாக்கப் படுவதில்லை....

 وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

“மேலும், கொடுமை புரிகின்றவர்கள் அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்”.  (அல்குர்ஆன்:26:227)

3. வல்லரசுகள் என்ன? எந்த கொம்பனாக இருந்தாலும் அத்து மீறினால் அழிவு நிச்சயம்....

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ () فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا

“ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமும் இன்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களை விட வலிமை மிக்கவர் யார் இருக்கின்றார்கள்” என்று.

அவர்களைப் படைத்த இறைவன் அவர்களை விட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்கு புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், அபசகுணம் உடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்களை சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக!    ( அல்குர்ஆன்: 41: 15, 16 )

2. நேர்வழியைக் கொடுத்து இந்த தீனுக்காக வேலை வாங்கி உயர் நிலையை வழங்குவான்.

இறைநிராகரிப்பில் இருக்கும் போது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும், முஸ்லிம்களை கொன்றொழிக்க வேண்டும், மாநபி {ஸல்} அவர்களை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று வீறு நடை போட்டு, பல யுத்தங்களுக்கு தளபதிகளாய், வழிகாட்டிகளாய், மதியூகிகளாய் விளங்கிய அபூ சுஃப்யான், காலித் இப்னு வலீத், ஸுஹைல் இப்னு அம்ர், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமைய்யா, உமர் போன்றோர்களுக்கு ஈமானை வழங்கி சான்றோர்களாய் மாற்றினான் அல்லாஹ்.

فقال عكرمة
رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

இதோ, பெருமானார் {ஸல்} அவர்கள் முன் நின்று கலிமாவை மொழிந்து, மனம் உருகிப் பேசிய இக்ரிமா {ரலி} அவர்கள்:   அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன்.

இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  

3. ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக துஆச் செய்வோம்! அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை….

பெருநாள் குத்பாவிற்கு வருகை தரும் ஜமாஅத்தார்களிடத்தில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் தாங்களும் ஓதுமாறும் தாங்கள் வீட்டுப் பெண்களையும் ஓதச் சொல்லுமாறும் வலியுறுத்தவும்.

இமாம்களும் ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின்னரும், ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவிலும் ஓதுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது, இதை தமிழ்ப்படுத்த நேரமில்லாத காரணத்தினால் இப்படிப் பதிவிடுகின்றேன்.

மேலும், வாய்ப்பிருந்தால் ஷஹீதான 3000 முஸ்லிம்களுக்காகவும் ஃகாயிப் ஜனாஸா தொழுகை நடத்தி, அவர்களுக்காக பிரத்யேகமாக தமிழில் துஆ செய்யவும்.

اللهم أنج المستضعفين من المؤمنين والمسلمين في ميانمار، وفي مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين، واجعل لهم فرجاً ومخرجاً

اللهم انصر المجاهدين في سبيلك، وألّف بين قلوبهم، ووحّد صفوفهم، ووفقهم لاتباع كتابك وسنة نبيك، ويسّر لهم أسباب النصر وإقامة شريعتك

اللهم اجعلهم من الذين إن مكنتهم في الأرض أقاموا الصلاة وآتوا
الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر، ولله عاقبة الأمور
اللهم أنت ربنا و إلهنا و خالقنا قصدناك و رجوناك فلا تخيب رجاءنا و دعوناك فاستجب دعاءنا
اللهم انصرأهلنا
المستضعفين من المؤمنين والمسلمين في ميانمار
 في سوريا و اليمن وفلسطين و ليبيا و العراق و مصر و تونس والسودان وكافة بلاد المسلمين نصراً عزيزاً من عندك على من يحاربونك و يحاربون سنة نبييك
ودينك و يقتلون عبادك ،
 اللهم كِن سلاحهم واضرب وجوههم و مزقهم و فتتهم
واجعل أمرهم شتاً شتاً ، واجعل بيننا وبينهم سداً سداً ، و صب
عليهم العذاب صباً صباً ، و أطفأ نارهم و شلّ إرادتهم

اللهم جردهم من حولهم وقوتهم و سلطهم على أنفسهم و اجعل بأسهم بينهم
اللهم زلزل الأرض من تحت أقدامهم وألق الرعب فى قلوبهم وانصر اهلنا الابرياء فى كل مكان
اللهم انصر عبادك المؤمنين على القوم الفاسدين
أللهم أن الأعداء قد استهانوا بدينك وبعبادك
اللهم انهم أظهروا علينا قوتهم فأرنا فيهم قدرتك
اللهم زلزلهم أللهم أجعلهم عبرة للعالمين
أللهم يا أكبر من كل كبيرعليك بمن تجبر وتكبر
أللهم أنصرشعوب المسلمين وأشف جرحاهم وفك قيد اسراهم وأرحم شهدائهم وموتاهم

اللهم أرزقهم النصر على عدوهم وألأمان
أللهم أرزقهم الرزق الحلال وعوض عليهم
أللهم عوض عنهم خسائرهم و وسع عليهم ارزاقهم
يا ألله يا ألله يا ألله
حسبنا الله و نعم الوكيل

சிலுவையுத்தக்காரர்கள், மங்கோலியர்கள், தார்த்தாரியர்கள், பொதுவுடமை வாதிகள், யூதர்கள், கிருஸ்துவர்கள், ஆகியோர் இஸ்லாமிய மண்ணில் இழைத்த கொடூரக் குற்றங்களை போல, தங்களின் முன்னாள் சகாக்களை பின்பற்றி மியான்மர் அரசு இராணுவத்தின் துணை கொண்டும், ஃபாசிஸ பயங்கரவாதிகளான “696” இயக்கத்தவர்களோடு கை கோர்த்து தங்களுடைய மூர்க்கத்தனமான வன்கொடுமைகளை மீண்டும், மீண்டும் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது அரங்கேற்றி வருகின்றார்கள்.

ஆனால் இதற்கு முன்னால், முஸ்லிம்களை எதிர்த்த எதிரிகள் இறுதியில் அடைந்த கதி என்ன என்பது வரலாறு நெடுகிலும் பரவி, விரவிக் கிடக்கின்றது, படிப்பினை பெற மறுக்கிறார்கள்!

முஸ்லிம் உம்மாவின் எதிரிகள் அனைவரும் வேரறுக்கப்படுவார்கள்! இஸ்லாத்தின் மகத்துவமும் முஸ்லிம்களின் பெருமையும் மீண்டும் உலகில் நிலை நாட்டப்படும்!  

உலகமெங்கும் சொந்த மண்ணைப் பிரிந்து வாழும் முஸ்லிம் சமூகம் அனைவருக்காகவும் அல்லாஹ்வின் கதவுகளை தட்டுவோம்!

 மனிதநேயத்தோடு குரல் கொடுப்போம்! கொலையைவிடக் கொடுமையானது அநீதிக்கு எதிரான மௌனம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!

இன்ஷா அல்லாஹ்... வரும் நாட்கள் மாற்றத்தை காண காத்திருக்கிறது; அந்த மாற்றத்தைக் காண அல்லாஹ் நம் எல்லோருக்கும் தௌஃபீக் செய்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இன்ஷா அல்லாஹ்... எதிர்வரும் வாரம் 08/09/201 அன்று நமது தளத்தில் ஜும்ஆ பயான் பதிவிடப் படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அனைவருக்கும் ஈதுல் அள்ஹா நல்வாழ்த்துக்கள்!!!!

7 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! ரோஹிங்யா மற்றும் உலகமுழுவதும் துன்பத்தில் உள்ளமுஸ்லிம்களின் துயர் துடைக்க தாங்கள் கற்பித்த துஆவை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து ஓதி வருவோம். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். தங்களின் ஆக்கத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம். மூன்று வாரங்களாக தங்களது ஆக்கங்களை படிக்காத ஏமாற்றம் அளிக்கிறது. தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.. என தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். தங்களின் ஆக்கத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம். மூன்று வாரங்களாக தங்களது ஆக்கங்களை படிக்காத ஏமாற்றம் அளிக்கிறது. தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.. என தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்.

    ReplyDelete
  4. ஹஜ்ரத் நீங்கள் பதிவு போடம்மாள் இருப்பது எனக்கு கவலை
    அளிக்கிறது உங்கள் பதிவை எதிர்பாக்கும் உங்கள் தம்பிமார்களில்
    ஒருவன் அன்புடன்
    ஹாபிழ் அன்வர்

    ReplyDelete
  5. இன்ஷாஅல்லாஹ் வருகிற வாரத்தில் இருந்து தொடர்ந்து பதிவிடுகிறேன்

    ReplyDelete