பெண் என்பவள்….
Objectification வெறும்
பிண்டப் பொருளாக பெண்
சமூகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நவீன காலத்தில்
நாம் வாழ்ந்து வருகின்றோம்.
எல்லாம் முன்னேறி
விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்தக் கால
கட்டத்தில் தான் பெண்
சமூகத்திற்கெதிரான குற்றங்கள்
பெருகிக் கொண்டிருக்கிறது என்றால்
அதை முன்னேற்றம் என்று
கூற முடியுமா?
எதிரி நாட்டின்
எல்லையைத் தாண்டி, வான்
வெளிக்குள் ஊடுருவி மிகத்
துல்லியமாகத் தாக்கும் திறன்
கொண்ட ஒரு நாடு.
தன் சொந்த நாட்டிற்குள்
வன்புணர்வுகளாலும், பாலியல் தொல்லைகளாலும்
சீரழிக்கப்படும் பெண்
சமூகத்தை பாதுகாக்க முடியாமல்
திணறுகிறது என்றால் அதை
வளர்ந்த நாடென்றும், அசுர
பலம் கொண்ட தேசம்
என்றும் கூறிட இயலுமா?
ஆகவே தான்
சொல்கின்றேன் நாம் வாழும்
காலம் பெண் சமூகத்தை Objectification வெறும்
பிண்டப் பொருளாக பார்த்துக்
கொண்டிருக்கும், ரசித்துக் கொண்டிருக்கும் காலம் என்று.
மகளிர்
தினம் உருவான
வரலாறு..
மார்ச் 8 –ஆம்
தேதி உலகளவில் மகளிர்
தினமாக கொண்டாடப்பட்டு வருகிற
நாளாகும்.
1789 –ஆம் ஆண்டு
பிரெஞ்சுப் புரட்சி நடந்த
போது சமத்துவம், வாக்குரிமை,
வேலைக்கு ஏற்ற ஊதியம்
போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி
பெண்களும் போராட்ட களத்தில்
இறங்கினர்.
அதன் விலைவாக
மன்னர் லூயிஸ் தன்
பதவியைத் துறந்தார். இந்த
போராட்டம் இதே காலகட்டத்தில்
ஐரோப்பா, அமெரிக்காவிலும் பரவியது.
இதையடுத்து பிரான்ஸின்
2 –ஆம் குடியரசை நிறுவிய
லூயிஸ் பிளாங் 1848 –ஆம்
ஆண்டு மார்ச் 8 –இல்
பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற
ஒப்புக் கொண்டார்.
1910 –ஆம் ஆண்டு
ஓப்பன் ஹேகலில் கிளாரா
ஜெட்கின் என்கிற பெண்மணியின்
தலைமையில் அனைத்துலக பெண்கள்
மாநாடு மிகப் பிரமாண்டமாக
நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து
சர்வதேச மாதர் அமைப்பும்
உருவானது.
1920 –ஆம் ஆண்டு
சோவியத் ரஷ்யாவில் செயிண்ட்
பீட்டர்ஸ் நகரில் நடைபெற்ற
மாபெரும் பெண்கள் போராட்டத்தில்
மார்ச் 8 –ஆம் தேதியை
உலக மகளிர் தினமாக
கொண்டாடப்பட வேண்டும் என்று
அப்போராட்டத்தை தலைமை தாங்கி
நடத்திய பெண்மணி அலெக்ஸண்டிரா
ஹெலன்ரா உலக நாடுகளை
கேட்டுக் கொண்டார்.
இந்த கோரிக்கையை
ஐ.
நா சபை அங்கீகரித்தது.
இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல்
மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அத்தோடு
தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் பல இந்நாளை பொதுவிடுமுறை
தினமாகவும் அறிவித்தது.
பொதுவாக இந்த நாளில்
பெண்களின் உரிமைகளை நிலை நாட்டுவது, பெண்களின் மீதான வன்முறையை நிறுத்துவது,
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பது, பெண்களை மதிப்பது ஆகிய பெண்ணுரிமை
குறித்தான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவது பிரதான நோக்கமாகும்.
உண்மையில், இந்த
நோக்கம் உலகளவில் நிறைவேறியுள்ளதா? விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா? என்றால் இல்லை
என்றே சொல்லலாம்.
சில நேரங்களில்
பெண்ணினத்திற்கெதிரான குற்றச்செயல்களைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் நாம்
விலங்குகள் வாழும் காட்டில் வாழ்கின்றோமா? இல்லை, மனிதர்கள் வாழும் நாட்டில் தான்
வாழ்கின்றோமா? என்று எண்ணத் தோன்றும்.
உலக நாடுகளிலும் இந்தியாவிலும் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள்
சில...
இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலானோர்
பெண்களும்,
குழந்தைகளும், மூத்த குடிமக்களாவோர் ஆவர். ஆகவே பெண்களின் நலன் ஐ.நா.சபையின் பட்டயத்தில் 1945 ஆம் வருடம்
அதிகமாக காணப் பட்டது.
1946 ஆம் ஆண்டு உலக பெண்களின் அரசியல், பொருளாதாரம், சிவில்,
சமூக மற்றும் கல்வி போன்றவற்றின் நிலை பற்றி அறிய ஒரு
கமிசன்
அமைக்கப் பட்டது. அதன் பலனாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமை பற்றிய சர்வதேச அறிவிப்பு வெளியானது. அதில் மனிதராக பிறந்தவர் அனைவரும் சுதந்திரப் பறவை மற்றும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது.
பெண்களைப் பாலியல் குற்றங்களில் தள்ளும் பழக்க முள்ள
அந்நாளில் 1949
ஆம் ஆண்டு பெண்களை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும், அவ்வாறு தொழிலில் ஈடு
பட்டவர்களை நல்வழிப் படுத்துவது அரசின் கடமை என்று
அறிவிக்கப் பட்டது.
1952 ஆம் ஆண்டு
பெண்களுக்கு அரசியல் உரிமை கொடுத்து அவர்கள் ஓட்டுப் போடும்
வாய்ப்பும்
வழங்கி, பெண்களை ஓட்டுப்போடாமல்
தடுப்பது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டுப் பெண்களை மணம் முடித்து அவர்களை
கணவர்மார்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையினை 1957
ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கமிசன் அவர்களுக்கு கணவர் நாட்டுக் குடிமக்கள் என்று அறிவிப்பு செய்தது.
1967 மற்றும் 1979
ஆண்டுகளில் அமைக்கப் பட்ட கமிசன்கள் பெண்கள் என்பதால்
ஒதுக்குவது குற்றம் என்று அறிவிப்புச் செய்ததோடு
அவர்களுடைய சுய கௌரவத்தினைப் பாதிக்கும் செயலாக அறிவிப்பு செய்தது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா.சபை
உறுப்பு நாடுகள்
அனைத்தும் பெண்களுக்கு எதிரான பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ
வன்முறையில்
ஈடுபடுவது குற்றமாக அறிவிக்க வகை செய்தது.
இதில் ஒரு ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கற்காலத்தில் ஸ்கன்டிநேவியன் நாட்டில் எடுக்கப் பட்ட ஆறு பெண்களின் மண்டை ஓடுகளில் ஒரு ஓட்டில் அடிபட்ட காயம் இருந்திருக்கிறது. இது எதனைக் காட்டுகிறது என்றால் காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டுதான் வந்துள்ளது.
1995ஆம் ஆண்டு பீஜிங் நகரில் கூடிய கூட்டத்தில் ஆண், பெண்
ஆகியோரின் அனைத்து வேறுபாட்டினையும் களைந்து அறிவிப்பு
வெளியானது.
இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டில் பெண்களுக்கான
சமத்துவ உரிமையினை உறுதி செய்தது. அதில் சதி தடுப்புச் சட்டம்,
சீதன ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.
அரசியல் சட்டம் பகுதி நான்கில் டிரெக்டிவ் ப்ரின்ச்பில்
ஆப் ஸ்டேட் பாலிசி என்ற அரசின் கொள்கையினை வழிச் செலுத்தும் நெறிகள் என்ற பகுதியில் வேலையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம்,கருவுற்ற நேரத்தில் பெண்களுக்கான சலுகைகள், பெண்களை மதிக்கும் விதமான அறிவுப்புகள் மற்றும் பெண்களுக்கு அவமான காரியங்களிருந்து விலக்கம் போன்ற நடவடிக்கைகள் போன்றன செயல் படுத்தப்பட்டன.
இஸ்லாமியப் பார்வையில் பெண் என்பவள்...
இஸ்லாம் பெண்களை 1. மனிதன்
2. குழந்தை 3. மகள் 4. சகோதரி 5. தாய்
6. மனைவி
7. பாட்டி போன்ற பல நிலைகளில் வைத்து
கௌரவித்திருக்கின்றது ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்கான உரிமைகளையும் உத்தரவாதப் படுத்தியுள்ளது. பெண்கள் ஆண்களின் சரிபாதி,
சமபாதி என்பதையும் உரக்கக் கூறியுள்ளது.
பெண்கள் ஆண்களின் சரிபாதி, சமபாதி...
“மனிதர்களே!
உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், அதே
ஆன்மாவில் இருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம்
அதிகமான ஆண்களையும், பெண்களையும் உலகில் பரவச் செய்தான்”. ( அல்குர்ஆன்: 4: 1 )
இஸ்லாம் தன்
அறிவொளியை வீச ஆரம்பித்த காலக்கட்டம் மடமைத் தனத்தின் உச்சத்தில் பயணித்து
கொண்டிருந்த அரபுலக மாந்தர்களும் இந்த ஈவு இரக்கமற்ற பெண்சிசுக் கொலையை சர்வ
சாதாரணமாக செய்து கொண்டிருந்த வேளையில்.....
"அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள்தாக
நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம்
கோபத்தால் கறுத்துவிடும். அவனிடம் கூறப்பட்ட செய்தியை தீய செய்தியாகக் கருதி அச்செய்தியின்
கெடுதிக்காகத் தன் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து
கொள்கின்றன். இழிவோடு அந்தக் குழந்தையை வைத்துக் கொள்வதா அல்லது அதனை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா என்று
குழம்புகிறான்." (16: 58 - 59)
“நபியே! அம்மக்களை அழைத்துக் கூறிவிடும். வாருங்கள்!
உங்கள் இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள் எவை என்பதை நான்
கூறுகின்றேன். (அதாவது) அவனோடு யாரையும் எதையும் இணை வைக்காதீர்கள். மேலும்
பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மேலும் வறுமைக்கு பயந்து உங்கள்
(பெண்) குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாமே உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிப்போம்”. ( அல்குர்ஆன் 6-151 )
எனும்
இறைவசனத்தின் மூலம் அவர்களின் இதயத்தில் நிறைந்திருந்த பெண் குழந்தைகளின் மீதான
இறுக்கத்தை தளர்த்துமாறு அறிவுறுத்துகின்றான். இரண்டாம் கட்டமாக.....
“மேலும் வறுமைக்கு
பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் நாமே உங்களுக்கும் உணவளிப்போம்
அவர்களுக்கும் உணவளிப்போம் திண்ணமாக அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்”. ( அல்குர்ஆன் 17-31 )
எனும்
இறைவசனத்தின் மூலம் பெரும் பாவமென பிரகடனப்படுத்தி எச்சரிக்கிறான். அடுத்த
கட்டமாக.........
“உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் அவள் எக்குற்றத்திற்காக
கொல்லப்பட்டாள்? என வினவப்படும்போது?” ( அல்குர்ஆன் 81-8, 9 )
மறுமை நாளின்
பயங்கரத்தை விவரிக்கும்போது சிசுக் கொலை இறைவனால் மஹ்ஷர் பெருவெளியில்
விசாரிக்கப்படும் மாபாதகச் செயல் மனித சமூகம் விலகிச் செல்ல வேண்டியதன் என
அவசியத்தை முற்றிலுமாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எந்த மனிதனுக்கு
ஒரு பெண் குழந்தை பிறந்து அவன் அதை அறியாமைக்கால வழக்கபடி உயிரோடு புதைக்கவில்லையோ
அதனை இழிவாகக் கருதவில்லையோ அதைக் காட்டிலும் ஆண் மக்களுக்கு முன்னுரிமை
வழங்கவில்லையோ அத்தகைய மனிதனை அல்லாஹ் சுவனத்தில் நுழையச்செய்வான். ( நூல் – அபுதாவுத் )
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: “எந்த மனிதன் மூன்று பெண்மக்களை அல்லது மூன்று சகோதரிகளைப்
பராமரித்து கல்வியும், ஒழுக்கப்பயிற்சியு அளித்து அவர்களை
தன்னிறைவு உடைய்வர்களாய் அல்லாஹ் ஆக்கிவிடும் வரை அவர்களுடன் கருணையுடன்
நடந்து கொள்கின்றானோ அத்தகைய மனிதனுக்கு அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான்.
இதனைக் கேட்ட ஒருவர் இரண்டு பெண்மக்கள் இருந்தாலுமா? என்று
வினவினார். ஆம்! இரண்டு பெண் மக்களைப் பராமரித்தாலும் இந்த சோபனம் உண்டு என நபி
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்-
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ஒரே ஒரு பெண்ணை பராமரித்து
ஆளாக்கினாலும் இந்த சோபனம் கிடைக்குமோ என கேட்டிருந்தால் அப்போதும் அண்ணல்
நபிகளார் இதே சோபனத்தை தான் கூறியிருப்பார்கள்.
( நூல்-மிஷ்காத் )
பெண் சமூகத்திற்கெதிரான
சிந்தனையும், அடக்குமுறையும் நிறைந்திருந்த ஓர் காலகட்டத்தில் பெண் சமூகத்திற்கான
உரிமை என்பது முதலில் அவள் மனித சமூகத்தைச் சார்ந்தவள் அவள் வாழ்வதற்கான தகுதி
படைத்தவள் அவளை வாழ வைப்பதால் கிடைக்கும் நற்பேறுகள் என்று இறைவனோடும்,
மறுமையோடும் இணைத்துக் கூறி பெண்ணுரிமைக்கான குரலை இஸ்லாம் மிக அழுத்தமாக பதிவு
செய்தது.
இதன் விளைவாக
அந்தச் சமூகத்தில் பெண் சமூகம் அடைந்த மாற்றம், மிகப் பெரிய முன்னேற்றத்தை வரலாறு
நெடுகிலும் காண இயலும்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களின் முன்பாக, சபையில் வந்து நின்று உரிமை கோரிய பெண்களின் வரலாறு மிக
நீண்டது… சிலதை மட்டும் இங்கு பார்ப்போம்.
அதிலும் ரிஃபாஆ என்ற நபித்தோழரின் மனைவியவர்கள்
மாநபி {ஸல்} அவர்களின் முன் வந்து நின்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை.
நிகழ்வு 1.
يروي المؤرخ ابن الأثير في كتابه "أُسد الغابة": أتت أسماء
النبي صلى الله عليه وسلم، وهو بين أصحابه فقالت: بأبي وأمي أنت يا رسول الله، أنا
وافدة النساء إليك، إن الله بعثك إلى الرجال والنساء كافة فآمنا بك. وإنّا
معشر النساء محصوراتٌ مقصوراتٌ قواعدُ بيوتكم ومَقضى شهواتكم وحاملات أولادكم،
وإنكم معشر الرجال فُضِّلتم علينا بالجُمَع والجماعات وعيادة المرضى وشهود الجنائز
والحج بعد الحج، وأفضل من ذلك الجهاد في سبيل الله، وإنّ الرجل إذا خرج حاجّاً أو
معتمراً أو مجاهداً حفظنا لكم أموالكم وغزلنا أثوابكم وربينا لكم أولادكم. أفما
نشارككم في هذا الأجر والخير؟.. فالتفت النبي صلى الله عليه وسلم إلى
أصحابه بوجهه كلِّه ثم قال: ((هل سمعتم مقالة امرأة قَط أحسن من مساءلتها في أمر
دينها من هذه؟)) فقالوا: يا رسول الله، ما ظننا أن امرأة تهتدي إلى مثل هذا. فالتفت النبي صلى الله عليه وسلم إليها فقال: ((افهمي،
أيتها المرأة، وأَعْلِمي مَن خلفك من النساء أنّ حُسْنَ تبعُّلِ المرأة لزوجها
وطلَبها مرضاته واتباعَها موافقته يَعْدِل ذلك كلّه)). فانصرفت المرأة وهي تهلّل.
ஒருநாள் நபியவர்கள் தம்
தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள்.
“அல்லாஹ்வின்தூதரே! என்
தாயும் தந்தையும்
தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம்பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம்
அனுப்பியுள்ளார்கள். நான்அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும் அவர்களது கருத்தே என் கருத்தும்கூட.
ஆண்கள் பெண்கள்
இரு பாலாருக்கும்பொதுவாகத் தான் அல்லாஹ் தங்களை நபியாக
அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கைக்
கொண்டோம்;
பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின்தூண்களைப்
போல் தனித்து
வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு இல்லற சுகம்
அளிக்கிறோம்;
அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள் ஜிஹாதுக்குச்
சென்று விடும் போது அவர்களது வீடு, வாசல்,
செல்வத்தைப் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் பராமரித்து வளர்க்கிறோம்.
ஆண்களுக்கோ ஜமாஅத்
- கூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் ஜனாஸா - பிரேத
நல்லடக்கத்தில் ஈடுபவதும், ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. அல்லாஹ்வின் தூதரே!
அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு
இருக்கவேண்டுமில்லையா?”
என்று வினாவொன்றை எழுப்பினார்கள்.
அது கேட்டு வியந்துபோன
நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றிஇத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசிகேட்டிருக்கிறீர்களா?” என்றார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே!
நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள்
நினைத்ததில்லை.”
என்று பதில் கூறினார்கள்.
“அஸ்மா! உன் தோழியரிடம்
சென்று சொல்,
‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணையாகவும்
அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப்
பூர்த்திசெய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீ விவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’
என்று.” இறைத் தூதர் சொல்லியதைக்
கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு தக்பீரை முழங்கியவாறு அங்கிருந்து
விலகினார் அஸ்மா (ரலி) அவர்கள்.
நிகழ்வு 2.
حَدَّثَنَا
أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا
خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ
قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا
رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ
دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ:
نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ
الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ
يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»
ஸாபித் பின் கைஸ்
பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து,
அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான்
குறை
கூறவில்லை.
ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக்
கொடையாக) அளித்த
தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்)
அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள். ( அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 5273
)
நிகழ்வு 3.
5283 – حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ
الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ
زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ
يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ
تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا»
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ:
يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ
حَاجَةَ لِي فِيهِ
பரீராவின் கணவர்
முகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா தம்மைப்
பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.
அப்போது நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ்
அவர்களே! முஃகீஸ்,
பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும்,
பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?
என்று கேட்டார்கள்.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின்
தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,)
அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
( அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
(ரலி) நூல் : புகாரி 5283 )
நிகழ்வு
4.
رواه البخاري: حدثنا
عمرو بن علي، حدثنا يحيى، عن هشام، حدثني أبي، عن عائشة، عن النبي صلى الله عليه
وسلم. وحدثنا عثمان بن أبي شيبة، حدثنا عبدة، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة:
أن رفاعة القرظي تزوج امرأة ثم طلقها، فتزوجت آخر فأتت النبي صلى الله عليه وسلم،
فذكرت له أنه لا يأتيها، وأنه ليس معه إلا مثل هدبة الثوب فقال: "لا حتى
تذوقي عسيلته ويذوق عسيلتك " .
ஆயிஷா(ரலி)
அறிவித்தார்: ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர்
அவர்களே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத்
தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர்
ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன்.
ஆனால், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்'' என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை
அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.)
அதற்கு
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் நீ (உன் பழைய கணவர் 'ரிஃபாஆ'விடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்துகொள்ள முடியாது. உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய)
இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை
மணக்கமுடியாது)''
என்று கூறினார்கள்.
இறுதியாக,
பெண்குழந்தைகள் பிறந்தாலே முகம் கருத்துப்போன ஒரு சமூகம் மிகக் குறுகிய கால
கட்டத்திலேயே எப்படி மாறிப்போனார்கள் என்பதற்கு கீழ் வரும் வரலாறு மிகப்பெரும்
சான்றாகும்.
أخبرنا محمد بن عمر حدثني بن أبي حبيبة عن داود بن الحصين عن عكرمة عن
بن عباس قال: إن عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة،
فلما قدم رسول الله كلم علي النبي، فقال: علام تترك ابنة عمنا يتيمة بين ظهري
المشركين ، فلم ينهه النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي
حمزة وكان النبي آخى بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي.
فلما سمع بذلك جعفر بن أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها
عندي أسماء بنت عميس. فقال علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من
بين أظهر المشركين وليس لكم إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله:
" أنا أحكم بينكم، أما أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي
وصاحبي، وأما أنت يا جعفر فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها
ولا تنكح المرأة على خالتها ولا على عمتها"، فقضى بها لجعفر.
ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள்.
அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களும், ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும் மக்காவில்
வாழ்ந்து வந்தார்கள்.
அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் “ஹம்ஜா
(ரலி) அவர்களின் ஒரேயொரு மகள் இப்போது
அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள். நான்
சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை மதீனாவிற்கு
அழைத்து வந்தார்கள்.
அமாராவை யார் பொறுப்பேற்பது? என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான் எடுப்பேன்
என சண்டையிட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த
விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த மூவரும்.
அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு
அபூதாலிப் அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை
வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.
”அல்லாஹ்வின்
தூதரே! அமாரா என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்”
என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு
அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.
”அல்லாஹ்வின்
தூதரே! ஹம்ஜா அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும்,
எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி
இருக்கின்றீர்கள். ஆகவே, இரு தகுதிகள் இருப்பதால் நானே
அதிகத்தகுதியுடையவன்” என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு
அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.
“அல்லாஹ்வின்
தூதரே! ஹம்ஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார்,
மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா
பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம்
முடித்திருக்கின்றேன். அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்”
என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
மூவரின் உரிமை கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து ”அலீயே! நீர் என்
சகோதரரும், என் சுவனத்து தோழரும் ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை
அழைத்து “ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!,
ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து “ஜஅஃபரே! நீர்
என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து
இருக்கின்றீர்!” என்று கூறி விட்டு, அமாராவின்
சின்னம்மாவை நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்!
நீர் அமாராவை உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!” என்று தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )
பெண் குழந்தையை
வளர்க்க, வாழ வைக்க ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டனர்.
பெண்ணுரிமை பேணுவதில் இஸ்லாமே சிறந்த மார்க்கம்..
மேற்கத்திய சட்டங்களால் உறுதிசெய்யப்படாத உரிமைகளை இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்ட
தாய்மார்கள், சகோதரிகள், துணைவியர் மற்றும் புதல்வியர்களுக்காக உறுதி
செய்திருக்கிறது எனும் பொருளில் கியரி பிரைட்டஸ் என்ற ஆங்கில
அறிஞர்
Islam
assured to the mother sisters, wives and daughters of Islam some rights which
are not assured to them by the western laws
என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் பேச்சுரிமை, சொத்துரிமை, மறுதார மண உரிமை, தகுதியற்ற கணவனின் இல்லறப்பிடியிலிருந்து விடுதலைப் பெற்றிடும் உரிமை,
பதிப்புரிமை,
தொழில்
உரிமை போன்ற எண்ணற்ற
உரிமைகளை ஆறாவது நூற்றாண்டிலேயே பெண்ணினத்திற்கு
வழங்கி
பெருமைப்படுத்தியுள்ளது.
யஜூர் வேதத்தின் ஒரு பகுதியாக தைத்திரிய சம்ஹித் என்ற நூலின் படி
சொத்துரிமை இழந்திருந்த இந்துப் பெண்கள் 1929
–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட
இந்துவாரிசு வழி சொத்துரிமைச் சட்டத்தின் மூலம் சகோதரிகளும்,
பேத்திகளும் மட்டுமே
சொத்துரிமைப் பெற்றனர்.
1937 –ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டப்படி
மணமாகாத பெண்கள் மட்டும் சொத்துரிமை பெற்றனர். 1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து
வாரிசுரிமைச் சட்டத்தில்
கூட தந்தையின் சொத்தில் மகளுக்கு முழுமையான
வாரிசுரிமை இருக்கவில்லை.
அதேநேரத்தில் 14-ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு
முஸ்லிம் பெண்ணுக்கு
கணவனின் மனைவியாய் தாய் – தந்தையின் மகளாய் பிள்ளைகளின் அன்னையாய் அண்ணனின் தங்கையாய்,
பாட்டன், பாட்டியின் பேத்தியாய்
பல்வேறு உரிமையை வழங்கி
மகிழ்ந்த வளமார் மார்க்கம் இஸ்லாம்.
عبد الله بن محمد بن عقيل عن جابر بن عبد الله قال جاءت امرأة سعد ابن الربيع
بابنتيها من سعد فقالت يا رسول الله هاتان بنتا سعد قتل أبوهما معك يوم أحد شهيدا
وإن عمهما أخذ مالهما فلم يدع لهما مالا ولا تنكحان إلا ولهما مال قال ( يقضي الله
في ذلك ) فأنزلت آية المواريث فبعث إلى عمهما فقال ( أعط بنتي سعد الثلثين وأعط
أمهما الثمن وما بقي فهو لك )
ஒருநாள் ஒரு
பெண்மணி நபி (ஸல்) அவர்களின் முன்வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே என் கணவர்
இறந்துவிட்டார்.
என் கணவரின்
சகோதரர் எங்களுக்கு என் கணவரின் சொத்தில் எந்தப் பங்கும் இல்லை எனக்கூறி
விரட்டிவிட்டார். இதோ பாருங்கள் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் என பரிதாபத்துடன்
கூறி நின்றாள்.
ஆம்! ஸஅதுப்னு
ரபீஃ (ரலி) என்கிற நபித்தோழரின் மனைவி தான் அவர்கள். உஹத் களத்திற்குச் சென்ற ஸஅத்
அங்கேயே வீர மரணமடைந்து போவார் என்று அப்பெண்மணி நினைத்துக்கூட பார்க்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் உஹத் யுத்தம் முடிந்த பிறகுத ஸஅத் இப்னு ரபீஃ (ரலி) அவர்களின்
தியாகம் குறித்து ”அல்லாஹ் ஸஅதுக்கு அருள்புரிவானாக! அவர் வாழும் போதும் இறக்கும்
போதும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நலம் நாடுபவராகவே அமையப்
பெற்றிருந்தார்” என சிறப்பித்து துஆ செய்தார்கள்.
அந்த சிறப்பிற்கு
சொந்தமான ஸஅதின் மனைவிதான் தன் இரண்டு பெண்மக்களோடு நபிகளார் முன் வந்து நின்று
தனது அவலத்தை கூறி நின்றார்.
நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ் உன் விஷயத்தில் தீர்வை தரும் வரை பொறுமையாக இரு என்று கூறி ஸஅது (ரலி)
அவர்களின் மனைவியை அனுப்பிவைத்தார்கள். பின்பு தான் அல்லாஹ்...
“உங்களுடைய
பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகிறான். ஓ ஆணின் பங்கு இரு
பெண்களின் பங்கிற்கு சம்மானது (இறந்து போனவருக்கு) இரண்டுக்கும் மேற்பட்ட
பெண்மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு
அர்களுகுரியதாகும்.
மேலும், ஒரு மகள்
மட்டும் இருந்தால் (சொத்தில் ) பாதி அவளுக்கியதாகும் இறந்து போனவருக்கு குழந்தை
இருப்பின் அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு அவருக்கு
குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே இருப்பின் தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு
அளிக்கப்பட வேண்டும்.
அவருக்கு சகோதர, சகோதரிகளிருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு உண்டு இறந்து
போனவர் செய்த மரண சாசனம் (வஸிய்யத்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன்
அடைக்கப்பட்ட பின்பும் தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்).
உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக
சமீபமாக இருப்பார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் (இப் பங்குகளை)
அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும்
நுட்பமானவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன் ; 4 ;11 ) இவ்வசனத்தை இறக்கியருளினான்.
இவ்வசனம் அருளப்
பெற்றதும் ஸஅத் (ரலி) அவர்களின் சகோதரரை நபிகளார் சபைக்கு அழைத்து வரச் செய்து ஸஅதின்
பெண்மக்களுக்கு மூன்றில் இருபங்கையும் ஸஅதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும்
கொடுத்துவிட்டு மீதமுள்ளதை நீ எடுத்துக் கொள்!” எனக் கூறினார்கள். ( நூல்
உஸ்துல்காபா, பாகம் -2, பக்கம்-
277
இஸ்தீஆப், பாகம் -1, பக்கம் -323 )
பெண்ணுரிமையைப் பேணுவோம்!! பெண் சமூகத்தைப் பாதுகாப்போம்!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத் இரு பெண் குழந்தைகளுக்கு தந்தை என்ற முறையில் எனக்கு தங்களது இந்த ஆக்கம் எல்லையற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது. جزاكم الله خيرا كثيرا يا استاذ
ReplyDelete