ஜனநாயக இந்தியாவின் நான்கு தூண்களும்…
கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பும்…
இந்தியா வல்லரசுக்
கனவை சுமந்து நிற்கும்
பரந்து விரிந்த தேசம்.
வளர்ந்து வரும் நாடுகளின்
பட்டியலில் முன்னேறிக் கொண்டிருக்கும் வளமான தேசம்.
2020 –ல்
5 ஜி தொழில் நுட்பத்தை
நுகரவிருக்கும் அறிவியல் தொழில்நுட்ப
தேசம். உலகின் விஞ்ஞான
வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து அடுத்தடுத்த
நகர்வுகளை நோக்கி வீறுநடை
போடும் விஞ்ஞான தேசம்.
சர்வதேச நாடுகளின்
முதலீடுகளை பெற்று, பிரம்மாண்டமான
தொழில் வளர்ச்சிகளை கொண்ட
முதலீடு தேசம். இதையெல்லாம்
விட உலகின் மிகப்
பெரிய ஜனநாயக நாடு
இவ்வாறெல்லாம் என் தேசத்தின்
பெருமைகளை நான் பெருமிதத்தோடு
சொல்ல வேண்டும் என்று
தினம் தினம் நினைக்கின்றேன்.
ஆனால், என்
தேசத்து பெண்மணிகள் ( சிறு
குழந்தைகள், சிறுமிகள், இளம்
பெண்கள் என ) பாலியல்
வக்கிரங்களால் கசக்கி எறியப்படும்
போதும், கூட்டுப் பலாத்காரத்தால் குற்றுயிரும் குலையுயிருமாய் வீழ்த்தப்படுவதை பார்க்கும்
போதும் உண்மையில் தனியொருவனாக,
எதையும் செய்யமுடியாதவனாக இந்த
தேசத்தின் குடிமகனாக வெட்கப்படுகிறேன்.
மனித சமூகத்தை
உற்பத்தி செய்கிற, உருவாக்குகிற
பெண்ணினம், அந்த இனத்திற்கெதிராக நடைபெரும் வன்முறைகளை,
கட்டுப்படுத்த இயலாத, அதற்கெதிராக
எதையும் செய்ய இயலாத,
ஆயிரம் காரணிகளை அடுக்கடுக்காக
கூறிக் கொண்டிருக்கிற அறிவு
ஜீவிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும், சட்ட
நிபுணர்களையும் கொண்டிருக்கிற ஒரு
தேசம் எப்படி உயர்வும்,
வளர்ச்சியும் அடைந்ததாக கூறிக்கொள்ள,
சாரி பீற்றிக் கொள்ள
முடியும்.
உலகில் மிகப்பெரிய
வன்முறை எது தெரியுமா?
திருப்பித் தாக்க முடியாதவனின்
மீது நிகழ்த்தப்படும் வன்முறை
தான்.
பல ஆண்கள்
சேர்ந்து ஒரு பெண்ணை
கூட்டுப் பாலியல் வன்புணர்வு
செய்வது அதை விடக்
கொடுமையான வன்முறை.
வன்புணர்வு செய்த
காட்சிகளை பதிவு செய்து
அதைப் பகிர்ந்து, காசுக்காக
விற்று அதை தொழிலாக
செய்வது வன்முறையின் உச்சம்.
வன்முறையை கட்டவிழ்த்து
விடுபவர்களையே மனிதர்களாக கருத
தயங்கும் போது, கொடுமையான
வன்முறையில் ஈடுபடுபவர்களையும், வன்முறையின்
உச்சத்தில் நிற்பவர்களையும் மனிதர்களாக
அல்ல மிருகங்களாகவேனும் கருத
முடியுமா? இவர்கள் மிருகங்களிலும் கீழானவர்கள்.
பொள்ளாச்சி விவகாரம்
தமிழக மக்களின் நாடி
நரம்புகளையெல்லாம் நடுங்கச்
செய்திருக்கும், நெஞ்சை பதை
பதைக்க வைத்திருக்கும் கொடுமையான
நிகழ்வு.
250 க்கும் மேற்பட்ட
( சோஷியல் மீடியா தொடர்புடைய
முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப்
பயன்படுத்தும் ) கல்லூரி மற்றும்
திருமணமான பெண்கள் 1000 க்கும்
மேற்பட்ட வீடியோக்கள், 7 வருடங்களாக
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த
20 க்கும் மேற்பட்ட கயவர்கள்
கூட்டம் என நாட்டையே
பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணும்
அவரின் சகோதரரும் கொடுத்த
புகாரின் பேரில் இதுவரை 8
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இன்றைய தேதிக்கு,
சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள்
ஏராளமாக
உள்ளனர். அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி பல தவறான
செயல்களில்
ஈடுபட்டுள்ளனர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.
மேலும், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், சி.பி.சி.ஐ.டி விசாரிக்க
வேண்டும் அல்லது
ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்குக் கீழ் தனி ஆணையம் அமைத்து
விசாரிக்க வேண்டும் எனப் பல கோரிக்கை எழுந்து வருகிறது.
இதற்கிடையில்,
கைது
செய்யப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்
எனவும் குரல்கள்
வலுத்து வருகின்றன.
இந்நிலையில்,
பொள்ளாச்சி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன். இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக பொள்ளாச்சி வழக்கை சி.பி.சி.ஐ.டி – யிடம் இருந்து சி.பி.ஐ –க்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக
சி.பி..ஐ.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு
நேரில் சென்று தங்களின் விசாரணையைத் தொடங்கவுள்ளனர்.
தொடரும் இது
போன்ற பாலியல் வன்முறைகளை
தடுத்த நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ இயலாதா?
இந்த தேசத்தின்
அரசியல் ஆட்சி (ண்மை)
யாளர்கள் மௌனம் காப்பது
ஏன்?
பெண்ணினம் இனி
வரும் காலங்களில் என்ன
செய்யப்போகிறது?
இந்தியாவும்... பாலியல் குற்றங்களும்...
சர்வதேச அளவில்
பாலியல் வன்முறைகள் நடைபெறுவது பற்றிய புள்ளிவிபரங்கள் இவை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் பெறப்பட்ட இந்தப் பட்டியலில் இந்தியா இருக்கும் இடம் வெட்கக்கேடானது.
தென்னாப்பிரிக்காவில் மட்டும் வருடத்துக்கு 5 லட்சம் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 70 ஆயிரம் வழக்குகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டவை.
தென்னாப்பிரிக்காவில் மட்டும் வருடத்துக்கு 5 லட்சம் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 70 ஆயிரம் வழக்குகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டவை.
உலகிலேயே
குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளின்
உச்சக்கட்டத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது. இதனால் கற்பழிப்புகளின் தலைநகரம் என்ற அவப்பெயரும் தென் ஆப்பிரிக்காவுக்கு உண்டு.
தென் ஆப்பிரிக்க ஆண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள்,
ஒன்றுக்கு மேற்பட்ட கற்பழிப்பு குற்றங்களைச் செய்ததாகக் கூறி இருக்கிறார்கள்.
கற்பழிப்பு
குற்றத்துக்காக கைது செய்யப்படும் ஒருவருக்கு இந்த நாட்டில் வழங்கப்படும் அதிகபட்ச
தண்டனை வெறும் 2
ஆண்டுகள் சிறைவாசம் என்பதும் முக்கிய காரணம். அதனால்தானோ என்னவோ 4-ல் 3
பெண்கள் அவர்களின் பருவ வயதை அடைவதற்குள்ளாகவே பலாத்காரம்
செய்யப்படுகிறார்கள்.
அத்துடன் இந்நாட்டு மக்கள் கற்பழிப்பு குற்றத்தை சகஜமாக பார்க்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால்,
கன்னி கழியாத பெண்ணுடன் உடலுறவு கொள்வதால் எச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களிலிருந்து குணமடைய முடியும் என்றும் பலர் தென் ஆப்பிரிக்கா மக்கள் நம்புகிறார்கள்.
வளர்ந்துவரும்
நாடாக கருதப்படும்
தென்னாப்பிரிக்காவை அடுத்து பட்டியலில் இடம்பெறும் நாடு, உலகமே அண்ணாந்து பார்க்கும் மிகப்பெரிய வல்லரசு நாடான
அமெரிக்கா, என்ன ஒரு முரண்பாடு படித்த
முற்போக்குவாதிகளும் பாலியல் குற்றங்களில் விதிவிலக்கல்ல என்பதையே இது காட்டுகிறது.
அமெரிக்கர்களில் 91 சதவீதப் பெண்கள் பாலியல் சார்ந்த வன்முறைக்கு
ஆளாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது U.S Bureau of Justice -ன் புள்ளிவிவரம்.
பெண்களுக்கு
எதிரான தேசிய வன்முறை அமைப்பின் சர்வேயின்படி, 6-ல் 1
அமெரிக்கப் பெண்ணும், 33-ல் 1 அமெரிக்க ஆணும்,
தங்கள் வாழ்நாளில் முயற்சித்த
அல்லது முழுமையான பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பட்டியலில்
அடுத்தடுத்து இடம்
பெறும் நாடுகள் ஸ்வீடன், இங்கிலாந்து. இதற்கு
அடுத்து 5-வதாக இந்தியா,
நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,
ஜிம்பாப்வே, டென்மார்க் மற்றும் ஃபின்லாந்து போன்றவை வருகின்றன.
இந்தியாவைப்
பொறுத்தவரை சமீப காலமாக பாலியல் வன்முறை மிகப்பெரிய
பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. National Crime Record Bureau (NCRB) 2013ம் ஆண்டின் அறிக்கைப்படி, பெண்களுக்கெதிரான
குற்றங்கள்
2010-ம் ஆண்டு முதல் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2012-ல் 24,923 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள் 2013-ல் 33,707 ஆக உயர்ந்துள்ளது.
2010-ம் ஆண்டு முதல் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2012-ல் 24,923 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள் 2013-ல் 33,707 ஆக உயர்ந்துள்ளது.
பலாத்காரத்துக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இதில்
தலைநகர் டெல்லிக்குத்தான் முதலிடம். அடுத்து மும்பை, ஜெய்ப்பூர்,
புனே, மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,
மஹாராஷ்டிரா வரிசையில் உத்தரப்பிரதேசம் மற்ற மாநிலங்களைவிட முன்னிலை வகிக்கிறது. இதில் 93 சதவீத குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர், நண்பர்களாக இருப்பது கூடுதல் தகவல்.
நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது, 90 சதவீத குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. ( நன்றி: குங்குமம் டாக்டர் ஆன்லைன் இதழ்
கவர் ஸ்டோரி )
இந்தியாவில்
ஆண்டுதோறும் 20
ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது தொடங்கி 77
வயது வரையிலான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது
ஐ.நா.
புள்ளிவிபரம்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில்
2,78, 886 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால்
இதில் தண்டனை பெற்றவர்கள் 30
சதவீதத்திற்கும் குறைவு 70 சதவீதம் தண்டனை பெறவில்லை என்பது உண்மை.
2007- 26.4 சதவீதம், 2008- 26.6 சதவீதம்,
2009- 26.9 சதவீதம்,
2010- 26.6 சதவீதம்,
2011-26.4 சதவீதம்,
2012- 24.2 சதவீதம்,2013- 27.1 சதவீதம், 2014- 28 சதவீதம்,
2015- 29.4 சதவீதம்,
2016- 25.5 சதவீதம்
வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு
உள்ளது.
பெண்களுக்கு
எதிரான
குற்ற வழக்குகள் 2015 ஆண்டை விட 2016 ல் 2.9
சதவீதம்
அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பெரும்பாலான வழக்குகள் 'கணவன் அல்லது
அவரது உறவினர்களால் கொடுமை செய்யப்படுவது ஆகும். ( 32. 6 சதவீதம்)
பெண்களின் மீது தாக்குதல் நடத்தி அவளுடைய மன வலிமையை சீர்குலைத்தல் (25.0
சதவீதமாகும்)பெண்கள் கடத்தல் (19.0 சதவீதம் ) மற்றும்
'கற்பழிப்பு'
(11.5 சதவீதம்).
பாலியல் பலாத்கார வழக்கு 2015
ஆம் ஆண்டில் 34,651 வழக்குகள், 2016 ல் 38,947
என
12.4 சதவீதம்
அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் அதிக அளவு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு
நிலவரப்படி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும். இது 2007
ஆம் ஆண்டு 21 ஆக இருந்தது.
( நன்றி: தினத்தந்தி ஆன்லைன் இதழ், பதிவு:
ஏப்ரல் 17, 2018 15:50 PM )
ஏன் இவ்வளவு குற்றங்கள்?
தனிமனித ஒழுக்கம், சமூக சூழல் ஆகியவற்றைத் தவிர்த்து பார்க்கும் பொழுது
அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகளுக்குக் காரணம், பெரும்பான்மையான பாலியல்
குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போய்விடுவதேயாகும்.
எடுத்துக்கட்டாக 20% பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதாக கருதுவோமாயின், நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படாததானால் 80% குற்றவாளிகள் விடுதலை செயயப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் அடுத்த குற்றங்களை செய்யும் தொடர் குற்றவாளியாக(Habitual offender) மாறிவிடுகின்றனர்.
தொடர் குற்றவாளிகள் என்றால் யார்?
மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.
மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.
ஏன் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை?
ஏனெனில்
பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர்
அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர்.
ஒருவேளை உயிர்
பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை
பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.
பாலியல் வன்முறை குறித்த சட்டப் பிரிவுகளை (375,376) மரண தண்டனை வழங்குமாறு திருத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க இயலுமா?
முடியாது. ஏன்
எனில் சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் குற்றம்
நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகும்பொழுது ஒரு தண்டனையும் கிடைக்காது. எனவே பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கான அறிவியல் பூர்வ வழிமுறைகளை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்.
பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதில் என்ன சிக்கல்?
பாலியல்
குற்றங்கள் CrPC
53இன் கீழ் உதவி ஆய்வாளர் (Sub Inspector) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இவ்வாறு காவல் துறையால் செய்யப்படும் விசாரணை அறிவியல் பூர்வமானதல்ல. காவல் துறையின் விசாரணை அதிகாரிகள், சட்ட மருத்துவம்
(Forensic Medicine) குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக
உள்ளனர்.
காவல் துறை,
அரசின் மற்றும் ஒரு படை பிரிவே(Force) அன்றி அறிவியல் சார்ந்த துறை(Scientific
Investigators) அல்ல. பாலியல் குற்றங்களை
விசாரிக்கும் முழு
பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைப்பது சரியான வழி முறை
அல்ல.
பெரும்பாலும் காவல் துறையின் விசாரணை நேரில் கண்ட சாட்சியங்களைத் திரட்டுவது அல்லது சூழ்நிலை சாட்சியங்களைத் திரட்டுவதாகவே இருக்கும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிடுவதாலும் குழந்தையாக இருப்பதாலும் யாருமல்லாத இடங்களில் குற்றம் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகின்றது.
மேலும், அறிவியல்
பூர்வமான சோதனைகளான பெண்ணுறுப்பின் எபிதிலியல் செல்களை
ஆணுறுப்பில் கண்டுபிடிப்பது, நகங்களில் சிக்கிய தசைத் துணுக்குகளை ஆராய்வது, ஆடைகளில் உள்ள இரத்தம்
மற்றும் விந்து
மாதிரிகளைத் திரட்டுவது மற்றும் லோகர்ட் பரிமாற்ற
விதியின்படி முடி
மற்றும் மற்ற பொருட்களைத் திரட்டுவது போன்ற பல அறிவியல்
பூர்வமான
வழிமுறைகள் பெரும்பாலான வழக்குகளில் செய்யப்படுவதில்லை.
மேலும், இது
தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான வழிகாட்டுதல்கள்
காவல் துறை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை.
எனவே, இவ்வகையான
அறிவியல் பூர்வ ஆய்வுகள் (Forensic
Investigations) உடனடியாக செய்யப்படாததினால் சாட்சியங்கள் திரட்ட இயலாமல்
வழக்கில்
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுகிறது.
மருத்துவக் கல்லுரி / அரசு மருத்துவமனைகளில் சட்ட மருத்துவத் துறையின் பங்கு
என்ன?
நீதிமன்ற ஆணையின்
கீழ் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்ட பெண் சட்ட
மருத்துவக்குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார். மேற்ககூறிய பல அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டும் வேலையை இத்துறை செய்கிறது.
ஆனால் குறைபாடு
என்னவெனில் சட்ட மருத்துவத் துறையால் விசாரணையை தன்னிச்சையாக துவங்கவோ,
நீதிமன்றங்களினால் ஆணையிடப்படும் பரிசோதனைகளைத் தவிர வேறு வகையான குற்ற விசாரணைகளில் (Forensic investigation) ஈடுபடவோ
முடியாது.
எடுத்துக்காட்டாக
பாதிக்கப்பட்ட பெண்,
நீதிமன்றத்தால் சட்ட மருத்துவத் துறைக்கு அனுப்பப்படும்
சூழலில்,
சட்ட மருத்துவர்
குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதினால் அதற்கான ஆணையை அவரால் பிறப்பிக்க இயலாது.
இதனால் சட்ட
மருத்துவத் துறை
அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை மட்டும் செய்து
மேற்கொண்டு தொடர இயலாமல் நின்று போகும் சூழல் உள்ளது.
தற்போதைய தேவை என்ன?
நீதிமன்றங்களில்
பாலியல் குற்றங்களை நிரூபிக்கும் எண்ணிக்கையை
அதிகப்படுத்தும் வழிமுறைகளை வகுக்காமல் குற்றங்களை குறைக்க இயலாது.
எனவே பாலியல்
குற்றங்களை தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரமுடைய, அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் இடை நிலை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.
இக்குழுவில் இடம்
பெறுவதற்கான இடைநிலை அதிகாரிகளாக அறிவியல் மற்றும்
மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து
அவர்களுக்கான புதிய முதுநிலை படிப்பினை உருவாக்கி பயிற்சி அளிப்பதன் மூலமும், மேலும் வளர்ந்த நாடுகளின்
குற்ற
விசாரணை முறைகளை அவர்களை அறிந்து வரச் செய்வதன் மூலமும்
இக்குழுவை சிறப்பான விசாரணை குழுவாக மாற்ற இயலும்.
மேலும்,
இக்குழுவினை சட்ட மருத்துவர், சட்ட வல்லுநர் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கொண்ட குழுவாக அமைக்க வேண்டும்.
இக்குழு ஏதேனும்
ஒரு பாலியல் குற்றம் நடைபெறுமாயின் தன்னிச்சையாக
விசாரணையைத் தொடங்கி,
அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் எண்ணிக்கையை கூட்டலாம்.
( நன்றி கீற்று. டாட்காம்
)
தொடர்ந்து இடம் பெறும் பெண்களுக்கெதிரான
குற்றங்களை, பாலியல் வன்முறைகளை ஒட்டு மொத்தமாக இல்லாமல் ஆக்குகின்ற அதிகாரம் இந்த
தேசத்தில் நான்கு தூண்களுக்கே இருக்கின்றது.
ஆனால், அந்த நான்கு தூண்களும் நீண்ட காலமாக
காத்து வருகிற மௌனம் இந்த தேசத்து தூண்களின் மீதான நம்பிக்கையை குடிமக்களுக்கு நீர்த்துப்
போக வைத்துக்கொண்டிருக்கின்றது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களும்…
நாட்டின் நிலையும்…
“பாரத நாடு பழம்பெரும்
நாடு…”. உண்மையாகவே பாரத நாடு பழம்பெரும் நாடுதான்.
அதன் பழம்பெருமைகளில் முக்கியமானது அதன் ஜனநாயகம். நம்நாட்டைப் பொறுத்தவரை அந்த ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கின்ற(?) தூண்கள் என
நான்கு விஷயங்களைச் சொல்வார்கள்.
1. நாடாளுமன்றம் /
சட்டமன்றம்
2. நீதித்துறை
3. காவல்துறை / ராணுவம் ( நிர்வாகம் )
4. ஊடகம்
2. நீதித்துறை
3. காவல்துறை / ராணுவம் ( நிர்வாகம் )
4. ஊடகம்
இந்த நான்கு
தூண்களில் பிந்தைய மூன்று தூண்களின் நடவடிக்கைகள் மக்களிடம் சென்று சேர்வதற்கு முக்கியமான பாலமாக இருப்பது அதன் முதல் தூண்
நாடாளுமன்றமும்/
சட்டமன்றமும் தான்.
ஆனால்,
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அமர்ந்திருக்கிற மக்கள் பிரதிநிதிகளில் 30%
சதவீதம் பேர் குற்றப் பிண்ணனி உள்ளவர்கள் என்கிறது நம் நாட்டின் புள்ளிவிவரம்
ஒன்று.
சட்டமியற்றும்
இடத்தில்
இருக்கும் அரசியல்வாதிகள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக
இருக்கும்போது,
நீதியை நிலைநாட்டும் எண்ணம் கொண்டோர் நீதிமன்றத்தை
அலங்கரிக்கும்போது,
நேர்மையான நிர்வாகிகள் நிர்வாகம் செய்யும்போது, உண்மையை விளம்பும் சமூக அக்கறை உள்ளவர்கள்
ஊடகங்களை நடத்தும்போது இவை நான்கும் ஜனநாயகத்தின் தூண்களாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது இல்லை, இல்லவே இல்லை என்பதே எதார்த்த உண்மை.
சாமானிய மக்களின்
பிரதிநிகள் இருந்த இடத்தில் பணக்காரர்களின்
பிரதிநிதிகள் மட்டும் இருக்கின்றனர். நீதியை நிலை நாட்டும் இடத்திலும் செல்வந்தர்களின் செல்வாக்கே ஓங்கியிருக்கிறது.
நிர்வாகம் செல்வந்தர்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஊடகங்கள் செல்வந்தர்களால் நடத்தப்படுகிறது. இவை அனைத்திலும் பணமே பிரதானம். பணத்தால் விசிறும் போது ஏற்படும் காற்றில் ஜனநாயகம் பஞ்சாய் பறந்து
கொண்டு இருக்கின்றது.
சிறுமி ஆசிஃபா-வை
கூட்டு பாலியல்
வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற
கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த பாஜக மற்றும்
ஃபாஸிச சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி பெண்களும்
பாதுகாப்பாக வாழ முடியுமா?
கடந்த (2009 – 2014) நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த
உறுப்பினர்களில் 162 பேர் ரவுடிகள், கொலை மற்றும் கொள்ளைக்காரர்கள்.
இது 30% சதவீதமாகும். இதுவே அதற்கு முந்தைய (2004 – 2009) நாடாளுமன்றத்தில் 24% சதவீதமாக இருந்தது.
(வைகறை வெளிச்சம்
மாத இதழ், ஏப்ரல்
2014,Times Of India: 12.2.2014.)
நமது தேசத்தின் மிகப் பெரும் கட்சியும், தற்போது முந்தைய ஆட்சிக்கட்டிலில்
அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில்
ஒருவர் கொலைகாரர்.
நமது தேசத்தை ஆளத்துடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை
மூன்றில் ஒருவர் கொலைகாரர்.
(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014 Association
Of Democratic Rights)
நமது தேசத்தின் பிரபல கட்சிகளைப் பற்றி அதிர்ச்சியூட்டும் இன்னொரு புள்ளி
விபரம்.
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கொலைகாரர்களையும், கொள்ளைகாரர்களையும் (80%சதவீதம் பேர்) கொண்ட கட்சி சிவசேனைகட்சி.
அதற்கு அடுத்து பாரதீய ஜனதா கட்சி
41.7% சதவீதம் பேர். ஐக்கிய ஜனதா தளம் 36.84% சதவீதம் பேர். பகுஜன் சமாஜ் கட்சி 28.57% சதவீதம் பேர்.
சமாஜ்வாதி கட்சி 27.27% சதவீதம் பேர். காங்கிரஸ் கட்சி 23.88% சதவீதம் பேர். கம்யூனிஸ்ட் கட்சி 18.75% சதவீதம் பேர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 16.16% சதவீதம் பேர்.
(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014, The Numbers Story: March 17, 2013.)
ஆளும் மத்திய பாஜக அரசின் பாலியல் குற்றங்கள் - ஒரு தொகுப்பு
பிப்ரவரி 7, 2012-ம் நாள் அன்று,
கர்நாடக சட்டப் பேரவையில் பாஜக அமைச்சர்கள் லக்ஷ்மண் சாவடி, சி.சி.படீல் மற்றும் பாஜக
சட்டப்பேரவை
உறுப்பினர் கிருஷ்ணா பாலேமர் ஆகியோர் ஆபாசப் படம் பார்த்ததை
நிருபர்கள்
படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். இதனால்
எழுந்த கடும்
எதிர்ப்பினை அடுத்து, மூவரும் பதவி விலகினர்.
மார்ச் 20, 2012-ம் தேதி குஜராத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்கர் சவுத்ரி,
ஜீத்தாபாய் பர்வத் இருவரும் சட்டபேரவையில் ஆபாசப் படம் பார்த்ததை செய்தியாளர்கள் கண்டு, அது ஊடகங்களில் வெளியாகி, பெரும்
அமளியானது.
அஸ்ஸாம் மாநில
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொளி 18, பிப்ரவரி 2017
அன்று தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. ஏற்கனவே அவர் மீது 34 வழக்குகள் நிலுவையில் இருந்த போதிலும், அவர் பதவி விலகவில்லை.
பாஜக அவர்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மே 19, 2017ம் நாள் அன்று,
மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலித் அணியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சாரத் தொழில் செய்து
வந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக மாநிலத்
தலைமை அறிவித்தது.
இமாச்சலப்
பிரதேசத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணாவின் பெயர் அடிபட்டது,
எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு செப்டம்பர் 09, 2009ம் தேதி,
தான் வகித்து வந்த ஊடக அறிவுரைக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
மத்தியப் பிரதேச
நிதி அமைச்சரும்,
பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி மீது, வீட்டு வேலைக்காரியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஜூலை 5, 2013ம் தேதி
காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து
அவர்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு, பின்னர் கைதும் செய்யப்பட்டார்.
குஜராத் மாநில
பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷி ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாக ஆபாசக் காணொளி 2005ம் ஆண்டு
வெளியானது. இதனையடுத்து கட்சியின் அனைத்துப்
பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். பின்னர் அந்தக் காணொளி போலியானது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் காணொளியின் பின்புலமாக மோடியின் குழு இருந்ததாக ஜோஷியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
மகாராஷ்டிராவில்
ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்டச் செயலாளர் ரவீந்தர பவந்தாதே பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட காணொளி வெளியானதை அடுத்து,
அந்தப் பெண் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வுப் புகார் அளித்தார். வேலை வாங்கித் தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, தன்னை ஏமாற்றி விட்டார் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜூலை 4, 2017ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என பாஜக மறுத்தது.
ஜார்க்கண்ட் மாநில
பாஜக மகளிர் பிரிவுத் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொளி டிசம்பர் 27, 2016ம் தேதி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது. முதலில் அதனை மறுத்த கீதா
சிங், பின்பு பதவி விலகினார்.
பாஜகவின்
திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து,
2017, ஜனவரி 27ம் தேதி தற்கொலை செய்து
கொண்டார்.
அவரது தற்கொலையை முஸ்லிம்கள் செய்த கொலையாக சித்தரித்து, பாஜக கலவரம்
ஏற்படுத்த முயன்றது. இறுதியில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
இந்து முன்னணியின்
செந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித்
பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கினார். நந்தினி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டன நந்தினியைக்
கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, கொடூரமாகக் கொலை செய்து பாழுங் கிணற்றில் வீசினார். ஜனவரி 14, 2017ம் தேதி
மணிகண்டனும், அவனது கூட்டாளிகளும் கைது
செய்யப்பட்டனர்.
ஆர்.ஆர்.எஸ்.
மூத்த தலைவரும்,
மேகாலயா ஆளுனராக பாஜக-வால் நியமனம் செய்யப்பட்டவருமான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன், டிசம்பர் 7,
2016ம் தேதி நேர்முகத்
தேர்விற்காக வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பிரச்சினை வெடித்தது. இதனையடுத்து, ஆளுனர் மாளிகையில்
பணியாற்றிய 100க்கும்
மேற்பட்டோர், ஆளுநர் மாளிகையை
இளம்பெண்கள் கிளப்பாகவே மாற்றிவிட்டார் சண்முகநாதன் என பிரதமர், குடியரசுத் தலைவருக்குப்
புகார் அனுப்பியதோடு,
அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தினர். இறுதியில் அவர்
பதவி விலகினார்.
வெளிநாட்டுப்
பாலியல் தொழிலாளிகளுடன் விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டு,
அந்தப் புகைப்படங்கள் வெளிவராமல் இருப்பதற்காக இந்திய
இராணுவ
ரகசியங்களைக் கசிய விட்டதாக 2016ம் ஆண்டு பாஜக இளம் தலைவர் வருண் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜூலை 21, 2017-ம் தேதி சிறுமியைக் கடத்தி, பாலியல் வல்லுறவு
கொண்டதாக
திருவனந்தபுரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜெயதேவ்
ஆகஸ்ட் 17,
2017ல் கைது செய்யப்பட்டான்.
பிப்ரவரி 27, 2017ம் தேதி மேற்கு வங்காள பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூஹி சவுத்ரி,
17க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்றதாக கைது செய்யப்பட்டார்.
மோடி முதல்வராக
இருந்தபோது,
2002ம் நடந்த குஜராத் கலவரத்தில் 250க்கும்
மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் கொடூரமான பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயினர்.
குஜராத் மாநிலம்
கட்ச் மாவட்டத்தில் நலியா நகர பாஜக தலைவர் சாந்திபாய் சோலங்கி,
2015 ஆகஸ்ட் மாதம் தன்னிடம் வேலை பார்த்த 25 வயது பெண்ணை
(திருமணம் ஆனவர்) மயக்க மருந்து கொடுத்து கெடுத்ததோடு, அதை வீடியோ எடுத்து மிரட்டி, தனது நண்பர்களுடனும் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். பல முறை கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளான அந்தப் பெண் மூன்று முறை தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார்.
இறுதியில் 2015, ஜனவரி 25ம் தேதி
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பாஜக பிரமுகர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர்களை சஸ்பெண்ட் செய்வதாக மாநிலத் தலைமை அறிவித்தது.
உத்தரப் பிரதேசம், உன்னா மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை 2017
ஜூன் மாதம் பாலியல் வன்புணர்வு செய்தனர். அதை வெளியே சொன்ன
குற்றத்திற்காக
அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து 2018 ஏப்ரல் 3ம் தேதி கொலை
செய்தனர். குல்தீப் சிங்கின் சாதி செல்வாக்கிற்கு அஞ்சி, மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், ஏப்ரல் 14,
2018ல் மத்திய புலனாய்வுப் பிரிவு
போலிசார் குல்தீப் சிங்கை கைது செய்தனர்.
உச்சகட்டமாக, காஷ்மீர் மாநிலத்தில்
2018 ஜனவரி 10ம் தேதி, குதிரை
மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஆசிஃபா-வை 8 பேர் கொண்ட இந்துத்துவ கும்பல் கடத்தி,
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்திருக்கிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஆர்.எஸ்.எஸ்.யைச் சார்ந்த ‘இந்து ஏக்தா
மஞ்சு’ என்ற அமைப்பு போராட்டமும்
நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த
வனத்துறை அமைச்சர் லால்சிங் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சந்தர் பர்கஷ் கங்கா போன்றோரும் பங்கெடுத்திருக்கின்றார்கள். இருப்பினும் காவல் துறை அந்த 8
பேரையும் கைது செய்திருக்கிறது. பிரச்சினை பெரிதாகவே, குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் செய்த பாஜக அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
ஏப்ரல் 22, 2018ம் தேதி திரிபுரா மாநிலத்தில் 'அகில பாரத அகண்ட விகாஸ் பரிஷத்' என்ற இந்துத்துவ அமைப்பின் தலைவர் கோஷ் (58 வயது), 14 வயது
சிறுமியை பல முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக,பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் POSCO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 22, 2018ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற தொடர்வண்டியில் 9
வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் POSCO
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் 2006ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்.
இவை எல்லாம் ஊடகங்களில் வெளிவந்த, ஆளும் அரசில் இடம் பெற்றிருக்கிற மக்கள் பிரதிநிதிகளின் பாலியல் குற்றங்கள். வெளிவராத செய்திகள் எவ்வளவு இருக்கின்றனவோ..! ( நன்றி: கீற்று. கீற்று நந்தன் வெளியிடப்பட்டது: 15
ஏப்ரல் 2018 )
இவர்கள் எப்படி “பெண்களை பாதுகாக்க சட்டம் இயற்றுவார்கள்?” என்று நம்புவது.
நான்காவது தூணின் பரிதாப நிலை?..
இந்த நான்கு
தூண்களில் முதல் மூன்று தூண்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு
முக்கியமான கருவியாக இருப்பது அதன் நான்காவது
தூணான ஊடகம் தான்.
இந்தியாவின்
சுதந்திர போராட்ட காலம் முதல், சமீபத்தில் நடந்த புல்வாமா
போர் வரை நடப்பவை என்ன என்று, கார்கில் போராக இருந்தாலும் (அதில் நடந்த சவப்பெட்டி ஊழலாக இருந்தாலும், ரஃபேல் விமான ஊழலாக
இருந்தாலும்),
மக்களுக்கு உணர்த்தியது
பத்திரிக்கைகள் தாம். வாட்டர் கேட் ஊழல் முதல், குவாட்டர் ஊழல் வரை அத்தனையும் வெளிக்கொணர்வது ஊடகம்.
ஒரு வாரம் வந்த பத்திரிக்கைகளை எல்லாம் ஒரு நோட்டம் விடுங்கள் அதுவும் முக்கியமாக புலனாய்வு
பத்திரிக்கைகளை.
ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர்,
நெற்றிக்கண், முக்கியமாக மாலை மலர்
மற்றும் மாலை முரசு.
அவையாவிலும், ஒரு
வாரத்தில் மட்டும், வந்த cover story எல்லாம் sex-ஐ முன்னிறுத்தியே இருக்கும். sex என்றால் கலவி இல்லை. Sex
மற்றும் அதன் தொடர்பான குற்றங்களைப் பற்றியது.
கற்பழிப்பு, கொலைகள்,
ஊழல், இவை எல்லாவற்றை விடவும்
அதிகம் இடம்
பெறுவது களளக்காதல் பற்றி. தவறாக பொருள் கொள்ள வேண்டாம்.
சுமார்
பத்து வருடங்களுக்கு முன்பு எத்தனை பேருக்கு கள்ளக்காதல் பற்றி
தெரிந்திருக்கும் அல்லது அந்த வார்த்தைகளையாவது
கேள்விப்பட்டிருப்பார்களா?
நிச்சயமாக இருக்காது.
ஆனால், இப்பொழுது?
இந்த வார்த்தைகள் இப்பொழுது எவ்வளவு பிரபலம். அப்படியே இயற்கையாக அங்காங்கே ஒன்று இரண்டு என நடந்தாலும்,
அதை cover story-ஆக போட்டு காசு பார்ப்பவர்கள்
தானே நம்
பத்திரிக்கைகள். எல்லாம் அந்த பத்திரிக்கைகளின் புண்ணியம்.
மாலைப்
பத்திரிக்கைகள் இன்னும் ஒரு படி மேலே. அதுவும், எங்காவது ஒரு கற்பழிப்பு நடந்துவிடக் கூடாது. அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் கற்பழிப்பு
எப்படியெல்லாம் நடந்தது (“கதற கதற”,
“விரட்டி விரட்டி”), அதன் கொடுமை என்ன என்று நம் கண் எதிரே கொண்டுவந்து நிருத்துவதற்கு அவர்கள் விவரிக்கும் பாங்கு இருக்கிறதே…அடடா! நாளெல்லாம் சொல்லி
சொல்லி
புளங்காகிதம் அடையலாம்.
இந்த புலனாய்வுப்
பத்திரிக்கை தான் இப்படி என்றால், வார நாளிதழ்கள்? முன்பெல்லாம் குடும்ப பாங்கான, உளவியல் ரீதியான,
பிரச்சினைகள் தொடர்பான ஆக்கங்கள்,
அது சம்பந்தமான அந்த வார cover story-யை அட்டைப்படமாக பிரசுரிப்பார்கள்.
ஏதாவது ஒரு குடும்பத்தின் குழு புகைப்படம் / cover story-க்கு ஏற்றவாறு ஏதேனும் இருக்கும். (மற்றும் ஒரு
அட்டைப்பட ஜோக் நிச்சயம் இருக்கும்.
இப்பொழுது? கண்டிப்பாக எதாவது ஒரு
நடிகையின் ( ஜூலி, நமீதா அல்லது நவ்யா நாயர்) புகைப்படம் தான்
பளிச்சிடுகிறது. குமுதம்?
கேட்கவே வேண்டாம். அதன் நடுப்பக்கமே அந்த புத்தகத்தைப் பற்றி சொல்லிடுமே.
Circulation சரியும்
பொழுதெல்லாம் நிச்சயம் “ஒரு நடிகையின் கதை”-யை கண்டிப்பாக
எதிர்பார்க்கலாம்.
இந்த
பத்திரிக்கைகளுக்கு தேவை எல்லாம், circulation, circulation, circulation. அதைத் தவிர வேறெதுவும் இல்லை. தற்சமயம் பாருங்கள், இத்தகைய
cover story எல்லாம் (தற்போதைக்கு) காணாமல் போய்விட்டன. காரணம் “Election”.
ஜனநாயகத்தின்
நான்கு தூண்கள் என சொல்லப்படும் சட்டமியற்றும் மன்றம், நீதிமன்றம்,
நிர்வாகம், ஊடகம் ஆகிய நான்கும்
இப்போது ஜனநாயகத்தை தாங்கும் தூண்களா? அல்லது தாக்கும் தடிகளா? என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது.
பொள்ளாச்சி
விவகாரத்தில் நக்கீரன், விகடன் இதழ்களைத் தவிர மற்ற புலனாய்வு, வார இதழ்களும்,
ஆங்கில, தமிழ் நாளிதழ்களும் அடக்கியே வாசிக்கின்றன.
இந்தியாவில் காணொளி
ஊடகங்கள் எனப்படும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் சீரியல்
சினிமா நடிகைகள் போன்றவர்களுக்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை சாதாரண மனிதனின் பிரச்சனைகளுக்கு
தரப்படுவதில்லை.
நம்முடைய சொந்த
நாட்டில் நடக்கும் காஷ்மீர், அசாம் போன்ற பிரச்சனைகள் குறித்த உண்மை நிலைகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை. இங்கு பல ஊடகங்களுக்கும் ஒரு சார்பு நிலை இருக்கவேச் செய்கிறது. அந்த சார்பு நிலைகளைச் சார்ந்து தான் அந்த நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நடுநிலை
பத்திரிக்கைகள் என்று வருணிக்கப்படும் சில ஆங்கிலப் பத்திரிக்கை தொடங்கி மஞ்சள் பத்திரிக்கை வரை சார்பு நிலை, வியபார நோக்கு தவிர வேறு எதையும் இந் நிறுவனங்கள்
யோசிப்பதில்லை.
இன்று இந்திய
ஊடகங்கள் வியபார
நோக்கு என்ற ஒரு நிலையில் தான் தங்களை நிலை நிறுத்திக்
கொண்டுள்ளன.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லத்தக்க அளவிலான
வெகுஜன ஊடகங்கள்
இந்தியாவில் மிகவும் குறைவே.
தமிழகத்தில்
இருக்கின்ற ஆங்கில,
தமிழ் வெகுஜன ஊடகங்களை நோக்கும் பொழுது
சார்பு நிலை இல்லாத ஒரு நிறுவனத்தையும் பார்க்க முடியவில்லை என்பதே நம்முடைய ஊடகங்கள் எந்நிலையில் தற்பொழுது இருக்கின்றன என்பதற்குச் சிறந்த சான்று.
இந்திய ஊடகங்களை
ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடாது. சில இடங்களில் இது கார்ப்ரேட் நிறுவனங்களாகவும், சில இடங்களில் அரசியல்
கட்சிகளின்
உட்பிரிவுகளாகவுமே ஊடகங்கள் உள்ளன.
ஊடகங்கள்
நினைத்தால் இது போன்ற அவலங்களில் இருந்து பெண் சமூகத்தை பாதுகாத்திட இயலும். ஆனாலும்
அவர்கள் அதற்கு முன் வரமாட்டார்கள்.
மற்ற இரண்டு
தூண்களான நீதியும் நிர்வாகமும் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நாம்
நிதர்சனமாக பார்த்து வருகின்றோம்.
இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டல் என்ன?
பொள்ளாச்சி விவகாரத்தில் முகநூல்
வாயிலாக ஏற்பட்ட நட்பு, காதல், பழக்கம் அதன் பிறகு உருவான தனிமைச் சந்திப்புகள் இவைகள்
தாம் பாலியல் வன்முறைக்கும், இதர வீடியோ பகிர்தலுக்கும் காரணமாக இருந்ததை மிகத் தெளிவாக
அறிய முடிகின்றது.
ஆகவே, பெண் சமூகம் வீட்டின்
அறையில் தனிமையில் இருந்து சோஷியல் மீடியாவில் இருக்கும் போது கூட அந்நிய ஆணோடு சாட்
செய்வது, அலைபேசியில் பேசுவது போன்ற காரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
1.
ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?..
சில தலைப்புகள்
முடிவில்லா விவாதங்களில் சென்று முடியும். அப்படிப்பட்ட ஒரு தலைப்பு தான் 'ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருக்க
முடியுமா?'
என்பதும்
ஆகும்.
ஒரு சிலர் ஆணும்
பெண்ணும்
தாராளமாக வெறும் நண்பர்களாக இருக்க முடியும் என்று சொல்வர். பலர்,
'நண்பர்களாக வேண்டுமானால் இருக்க முடியும், ஆனால் நெருங்கிய நண்பர்களாக இருத்தல் சாத்தியமாகாது
என்பர்.
ஆனால், உண்மையில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது
என்றே இஸ்லாம் சொல்கின்றது.
இன்றைய நவீன உலகில்
ஆண் பெண் நட்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இன்று ஒரு ஆண் தன் மனைவி தவிர வேறு பெண்களோடு பழகுவதும்,
ஒரு பெண் தன் கணவன் தவிர பிற ஆண்களுடன் பழகுவதும் சகஜமானதாகவும்,
தவிர்க்க முடியாததாகவும் பார்க்கப்படுகின்றது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு ஆணும்
பெண்ணும் சாதாரணமாக பழகும் போது பிரச்சனை வராமலிருக்கலாம். ஆனால் நெருங்கி பழகும் போது? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் கவர்ச்சி
என்பது எளிதில் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகும்.
ஏனெனில், மனிதர்கள்
பலவிதங்களில் இருக்கிறார்கள். நாம் தவறு செய்யக் கூடாது; இறைவனுக்குப்
பயந்தவர்களாக இருக்க வேண்டும் என்று உண்மையில் இறைவனுக்குப்
பயப்படும்
ஆண்களும் பெண்களும் இருப்பார்கள்.
சில போது, ஆண், பெண் ஆகிய இரண்டு பேரும் கெட்டவர்களாகவே
இருப்பார்கள். இந்த ஆணும் அந்தப் பெண்ணும் தவறான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இன்னும் சில போது,
ஆண் நல்லவனாகவும் பெண் கெட்டவளாகவும் இருப்பதற்கு
வாய்பிருக்கின்றது. இன்னும் சில போது, பெண் நல்லவளாகவும் ஆண் கெட்டவனாகவும் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இந்த நான்கு
வகையில் எந்த வகையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருப்பதால் நன்மை
ஏற்படப் போவதில்லை.
1.
தனிமைச் சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்…
ஆண்களோ பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களிலிருந்தும், நம்மை
ஒழுக்கத்திலிருந்து நெறி தவழச் செய்கின்ற
காரியங்களிலிருந்தும் தவிர்ந்து வாழவேண்டும் என இஸ்லாம்
நமக்கு வலியுறுத்துகிறது.
நாம் தூய்மையாக இருப்பது மட்டும் நமக்குப் போதாது. நமது தூய்மையைக் களங்கப்படுத்துகின்ற வாய்ப்புக்களையும் அதற்குரிய காரண காரியங்களையும் தவிர்க்க வேண்டும் என நபியவர்கள் நமக்கு பல்வேறு அறிவுரைகளையும் பல்வேறு எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளார்கள்.
அதில் மிக
முக்கியமான அறிவுரை,
பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள்
எவரும்
நுழைந்துவிடக்கூடாது என்ற கட்டளையாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம்
என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர்,
"அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?''
என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று
கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு
அன்ஹு, நூல்:
புகாரி 5232)
இந்தச் செய்தியில் பெண்களுக்குத் தானே சட்டம் சொல்லப்படுகிறது; தனித்திருக்கும் ஆண்களிடம் பெண்கள் தாராளமாக, தனியாகச் சென்று வரலாம் என முடிவெடுத்துவிடக் கூடாது. ஆண்களுக்குச் சொல்லும் எல்லாச் சட்டமும் இஸ்லாத்தில் பெண்களுக்கும் பொருந்தும்.
எனவே ஆண் மட்டும்
தனித்திருக்கின்ற வீடுகளுக்கு எந்தப் பெண்ணும் தனியாகச்
செல்லக் கூடாது. பெண் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளுக்கு ஆண்களும் செல்லக் கூடாது என்பதைத் தான் இந்தச் செய்தி நமக்கு உணர்த்துகிறது.
2.
தனிமையில் எச்சரிக்கை தேவை
தனிமையில் சிக்கிய நபி யூஸுஃப்
(அலை) அவர்களின் அணுகுமுறை..
நபி யூஸுஃப் (அலை)
அவர்கள் சந்தித்த
சோதனைகளை நாம் கூறுவதைவிட அல்லாஹ்வின் வார்த்தைகளான
அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனங்களால் தெளிவாக
அறியலாம்!
وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ
الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي
أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (23)
“எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து ‘வா!’
என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம்
பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய
தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்” எனக் கூறினார்.
( அல்குர்ஆன்: 12:
23 )
இங்கு தவறு
நடைபெறும் சூழல் நிலவுகிறது ஆனால் அந்த தவறை யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பதுதான் கேள்வியாகிறது.
தன் மனோ இச்சைக்கு
இணங்க அந்த எஜமானராகிய அமைச்சரின் மனைவிதான் நபி யூஸுஃப்
(அலை) அவர்களை அழைத்துள்ளார் ஆனால் நபி யூஸுஃப் (அலை) அதற்கு உடன்படவில்லை என்பது தெளிவாக புரிகிறது! எனவே இங்கு நபி யூஸுஃப் (அலை) குற்றமற்றவர் மாறாக அந்த எஜமானரின் மனைவியே முழு முதல் குற்றவாளி என்பது ஊர்ஜிதமாகிறது!
வாசல்களையும் அடைத்து ‘வா!
என்பதன் மூலம் அந்த எஜமானரின் மனைவி நபி யூஸுஃப் (அலை)
அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கிறார் இங்கு இந்த
கட்டளைக்கு நபி யூஸுஃப் (அலை) கட்டுப்படவில்லை.
எனவே இங்கு நாம்
சிந்திக்க வேண்டிய விஷயம் அந்நிய ஆண் ஒரு அந்நிய பெண்ணுடன்
(அவள் நமக்கு உத்தரவிடும் அதிகாரமிக்க பெண்ணாக இருந்தாலும்) விபச்சாரத்திற்காக அழைத்தால் அவளின் எந்த கட்டளைக்கும் தலைசாய்க்கக்கூடாது
என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன் என்று நபி யூஸுஃப் (அலை) அந்த பெண்ணிடம் கூறுவதை சிந்திப்பதன் மூலம் ஒரு பெண் காம இச்சைக்கு அழைத்தாலும் அவள் நமக்கு அதிகாரியாக இருந்தாலும் அவளின் பேச்சை செவிமடுக்காமல் அவளின் இச்சைக்கு எதிர்த்து எதிர்வாதம் புரிய வேண்டும் என்பது யூஸுஃப் (அலை) அவர்களின் மூலம் அறியமுடிகிறது.
எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். என்று நபி யூஸுஃப் (அலை) கூறுவதை சிந்திப்பதன் மூலம் அவர் தாம் வாழ்ந்த அல்லது வளர்ந்த இடத்திற்கு கண்ணியமிக்க மனிதராக இருந்துள்ளார் எந்த சூழ்நிலையிலும் நம்மை கண்ணியத்துடன் வளர்த்த இடத்திற்கு துரோகம் செய்யக்கூடாது என்பது யூஸுஃப் (அலை) அவர்களின் மூலம் தெளிவாக உணர முடிகிறது!
அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள் என்று நபி யூஸுஃப் (அலை) கூறுவதை சிந்திக்கும்போது அந்நிய பெண் (தனது எஜமானரின் மனைவி) அடுத்தவருடைய கண்ணியமாக மனைவியாக இருக்கிறார் எனவே அடுத்தவருடைய கண்ணியத்தில் கை வைப்பது மாபெரும் அநீதி என்பதை உணர முடிகிறது!
குகையில் சிக்கிய மூவரில் ஒருவரின் வாழ்வில் இடம் பெற்ற பெண்ணின் அணுகுமுறை...
பெண்ணின் எதிர்ப்பு பலமாக இருக்க வேண்டும்..
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِى مَرْيَمَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ
بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ قَالَ أَخْبَرَنِى نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ -
رضى الله عنهما - عَنْ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ « بَيْنَمَا
ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَاشَوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ ، فَمَالُوا إِلَى غَارٍ فِى
الْجَبَلِ ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ ،
فَأَطْبَقَتْ عَلَيْهِمْ ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً
عَمِلْتُمُوهَا لِلَّهِ صَالِحَةً ، فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ
يَفْرُجُهَا . فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِى وَالِدَانِ
شَيْخَانِ كَبِيرَانِ ، وَلِى صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ ،
فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ فَحَلَبْتُ بَدَأْتُ بِوَالِدَىَّ أَسْقِيهِمَا قَبْلَ
وَلَدِى ، وَإِنَّهُ نَاءَ بِىَ الشَّجَرُ فَمَا أَتَيْتُ حَتَّى أَمْسَيْتُ ،
فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا ، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ ، فَجِئْتُ
بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا ، أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ
نَوْمِهِمَا ، وَأَكْرَهُ أَنْ أَبْدَأَ بِالصِّبْيَةِ قَبْلَهُمَا ،
وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِى
وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّى فَعَلْتُ
ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ ، فَافْرُجْ لَنَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ
، فَفَرَجَ اللَّهُ لَهُمْ فُرْجَةً حَتَّى يَرَوْنَ مِنْهَا السَّمَاءَ . وَقَالَ الثَّانِى اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِى ابْنَةُ عَمٍّ ،
أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ ، فَطَلَبْتُ إِلَيْهَا
نَفْسَهَا ، فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ ، فَسَعَيْتُ حَتَّى
جَمَعْتُ مِائَةَ دِينَارٍ ، فَلَقِيتُهَا بِهَا ، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ
رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ ، وَلاَ تَفْتَحِ
الْخَاتَمَ . فَقُمْتُ عَنْهَا ، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّى قَدْ
فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فَفَرَجَ لَهُمْ
فُرْجَةً . وَقَالَ الآخَرُ
اللَّهُمَّ إِنِّى كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى
عَمَلَهُ قَالَ أَعْطِنِى حَقِّى . فَعَرَضْتُ عَلَيْهِ حَقَّهُ ، فَتَرَكَهُ
وَرَغِبَ عَنْهُ ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا
وَرَاعِيَهَا ، فَجَاءَنِى فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِى ،
وَأَعْطِنِى حَقِّى . فَقُلْتُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقَرِ وَرَاعِيهَا .
فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَهْزَأْ بِى . فَقُلْتُ إِنِّى لاَ أَهْزَأُ بِكَ ،
فَخُذْ ذَلِكَ الْبَقَرَ وَرَاعِيَهَا . فَأَخَذَهُ فَانْطَلَقَ بِهَا ، فَإِنْ
كُنْتَ تَعْلَمُ أَنِّى فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ ، فَافْرُجْ مَا
بَقِىَ ، فَفَرَجَ اللَّهُ عَنْهُمْ »
”(முன்காலத்தில்) மூன்று
மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது.
அப்போது அவர்கள்
தமக்குள்,
‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச்
சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது
முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால்
கறந்து, பால் பாத்திரத்தைப்
பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள்.
பிறகு
குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி
உண்டானது.
மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும்
விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள்
தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை
அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று
அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு
நான் எழுந்து விட்டேன்.
இதை
உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.
மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார்.
இந்த மாடுகள், அதை
மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்
என்று கூறினேன்.
அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’
எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.”என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புஹாரி: 2215 இப்னு உமர் (ரலி) )
மர்யம் (அலை) அவர்களின் அணுகுமுறை...
தீமைக்கு எதிராக உரத்த குரலை பதிவு செய்ய வேண்டும்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا
مَكَانًا شَرْقِيًّا (16) فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا
إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا (17) قَالَتْ إِنِّي
أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا (18)
“மேலும், ( நபியே!
) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் ( உள்ளதை ) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர்
தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில்
அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார்.
அப்போது, நாம்
அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு
மனித உருவில் தோன்றினார்.
உடனே, மர்யம்
கூறினார் “உம்மை விட்டுக் கருணை மிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன்.
நீர் இறையச்சம் உள்ளவராயின் ( என்னை விட்டும் விலகிச் செல்வீராக!” ). ( அல்குர்ஆன்: 19: 16 –
18 )
கெட்டவர்களின் மிரட்டலுக்கும்,
உருட்டலுக்கும் உடன்பட்டு விடக்கூடாது…
قال الترمذي: حدثنا عبد بن حميد، حدثنا روح بن عُبَادة بن عُبَيد الله
بن الأخنس، أخبرني عمرو بن شُعَيب عن أبيه، عن جده قال: كان رجل يقال له
"مَرْثَد بن أبي مرثد" وكان رجلا يحمل الأسارى من مكة حتى يأتي بهم
المدينة. قال: وكانت امرأةٌ بَغي (7) بمكة يقال لها "عَنَاق"، وكانت
صديقة له، وأنه واعد (8) رجلا من أسارى مكة يحمله. قال: فجئت حتى انتهيتُ إلى ظل
حائط من حوائط مكة في ليلة مقمرة، قال: فجاءت "عناق" فأبصرت سواد ظلي
تحت الحائط، فلما انتهت إليّ عرفتني (9) ، فقالت: مَرْثَد؟ فقلت: مرثد فقالت:
مرحبًا وأهلا هلم فبت عندنا الليلة. قال: فقلت (10) يا عناق، حرم الله الزنى.
فقالت (11) يا أهل الخيام، هذا الرجل يحمل أسراكم. قال: فتبعني ثمانية ودخلت
الحَندمة (12) فانتهيت إلى غار -أو كهف فدخلت فيه (13) فجاءوا حتى قاموا على رأسي
فبالوا، فظل بولهم على رأسي، فأعماهم الله عني -قال: ثم رجعوا، فرجعت إلى صاحبي
فحملته، وكان رجلا ثقيلا حتى انتهيت إلى الإذخَر، ففككت عنه أكبُله، (14) فجعلت
أحمله ويعِينني، حتى أتيت به (15) المدينة، فأتيت رسولَ الله صلى الله عليه وسلم
فقلت: يا رسول الله، أنكح عناقا؟ أنكح عناقا؟ -مرتين-فأمسك رسول الله صلى الله
عليه وسلم، فلم يرد علي شيئا، حتى نزلت { الزَّانِي لا يَنْكِحُ إلا زَانِيَةً
أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لا يَنْكِحُهَا إِلا زَانٍ أَوْ مُشْرِكٌ
وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ } فقال رسول الله صلى الله عليه وسلم:
"يا مرثد، { الزَّانِي لا يَنْكِحُ إلا زَانِيَةً أَوْ مُشْرِكَةً
[وَالزَّانِيَةُ لا يَنْكِحُهَا إِلا زَانٍ أَوْ مُشْرِكٌ ] } (16)
மர்ஸத் இப்னு அபூ மர்ஸத்
அல் ஃகனவீ (ரலி) இவர்கள் கொடூரமாக ஷஹீதாக்கப் பட்டவர்களில் ஒருவர். பத்ர் மற்றும் உஹத் யுத்தகளங்களில் கலந்து
கொண்ட தீரர்களில் ஒருவர்.
இவர் கைதிகளாகவும், பிணையாகவும்
பிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வீரராக அன்றைய அரபுலகத்தில் அறியப்பட்டார்கள்.
அநியாயமாக பிடித்து
வைக்கப்பட்டிருக்கின்ற கைதிகளை எதிரிகளின் இடத்திற்கே சென்று அசாத்திய தைரியத்தோடு
மீட்டு வரும் தைரியசாலி. அதற்காக சில திர்ஹத்தை சம்பந்த பட்டவர்களிடம் பெற்றுக்
கொள்வார்கள்.
ஒரு நாள் அவர்கள் ஒருவரை
மீட்டெடுக்க இரவு நேரத்தில் ஓரிடத்தில் பதுங்கியிருந்த போது அவர்களின் ஜாஹிலிய்யா
காலத்து காதலி அனாக் என்பவளைச் சந்திக்க நேரிடுகின்றது.
இவர்கள் இஸ்லாத்திற்கு
வந்த பின் அன்று தான் அவளைச் சந்திக்கின்றார்கள். தற்போது அவள் தகாத செயல்
செய்யும் விபச்சாரியாக மாறிவிட்டிருந்தாள்.
அந்த இரவிலும் இவரை
அடையாளம் கண்டு கொண்ட அனாக் இன்றிரவு தம்மோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு
அழைக்கின்றாள்.
அனாக்! இஸ்லாம்
விபச்சாரத்தை தடை செய்திருக்கின்றது அது மானங்கெட்ட செயல் என்றும், அதன் அருகே கூட
நெருங்கக் கூடாது எனவும் தடை செய்திருக்கின்றது. ஆகவே தூர விலகிச் செல் என்று கூறி
விரட்டி விட்டார்கள் மர்ஸத் (ரலி) அவர்கள்.
நம்மை காசு பணம் கொடுத்து அழைக்க ஆயிரம் பேர்
காத்து கிடக்க, நாம் வலிய அழைத்தும் வராமல் நம்மை அலட்சியம் செய்து விரட்டி
விடுகிறாரே எனும் கோபத்தில் அவரை ”அவர் எந்த இடத்தில் மறைந்து கைதியை தூக்கிச்
செல்ல வந்திருந்தாரோ அவர்களின் பெயர் கூறி அழைத்து இதோ மர்ஸத் உங்களின் கண்ணில்
மண்ணை தூவி விட்டு கைதியை களவாடிச் செல்ல வந்திருக்கின்றார் என்று கூறி”
சிக்க வைத்தாள்.
அவர்கள் துரத்தி வர
மர்ஸத் (ரலி) அவர்கள் அங்கிருந்து தப்பி, அருகே இருந்த ஒரு
குறுகலான மலைக்குன்றில் ஒளிந்து கொண்டார்கள்.
அவரைத் தேடி வந்த அந்த
நபர்கள் மர்ஸத் (ரலி) அவர்கள் ஒளிந்திருந்த அந்த மலைக்குன்றின் மீது வரிசையாக
ஒருவர் பின் ஒருவராக சிறுநீர் கழித்தனர்.
மலைக்குன்றின் பின் புறம்
ஒளிந்திருந்த மர்ஸத் (ரலி) அவர்களின் தலை முழுக்க சிறுநீர் நன்றாக நனைத்து
விட்டிருந்தது.
துரத்தி வந்தவர்கள்
அங்கிருந்து சென்ற பின்னர் அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்து நடந்த
சம்பவத்தை நபிகளாரிடம் விளக்கிக் கூறி தாம் அனாக்கை திருமணம் செய்ய விரும்புவதாக
சொன்னார்கள்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் மர்ஸத் (ரலி) அவர்கள் கேட்க, அப்போதும் நபிகளார்
{ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
பின்னர் அண்ணலாரின்
சபையிலிருந்து மர்ஸத் (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.
அவர்கள் சென்ற பின்னர், அல்லாஹ் நூர்
அத்தியாயத்தின் 3-ஆம் வசனத்தை
இறக்கியருளினான்.
பின்னர் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள், மர்ஸத் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி “விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம்
செய்யும் பெண்ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணையோ தவிர வேறெவரையும்
திருமணம் செய்ய வேண்டாம்.
விபச்சாரம் செய்யும்
பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இணைவைப்பாளனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய
வேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடுக்கப்பட்டிருக்கின்றது” எனும் (அல்குர்ஆன்:24:3) வசனத்தை ஓதிக்
காண்பித்தார்கள்.
பின்பு ”அனாக்கை நீர்
திருமணம் செய்ய வேண்டாம்” என்று
கூறினார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல்
குர்துபீ, பாகம்:7, பக்கம்:116., அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:382,383., அபூ தாவூத், கிதாபுன் நிகாஹ் )
3.
நடை,
உடை பாவனை, பேச்சில் எச்சரிக்கை
தேவை…
தனிமையில் அந்நிய ஆணுடன் பேசும் நிர்பந்தம் ஏற்பட்டால் வெட்க உணர்வோடு பேச வேண்டும்.…
فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ
أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا
மூஸா (அலை) அவர்களால் உதவி செய்யப்பட்ட ஷுஐபு (அலை)
அவர்களின் இரு பெண்மக்களும், நடைபெற்ற சம்பவத்தை தம் தந்தையிடம் சொல்ல, தந்தை ஷுஐபு
(அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களை அழைத்து வருமாறு கூறினார்கள். அதன் பிறகு நடந்ததை
அல்லாஹ் கூறுகின்றான்.
“அவ்விரு பெண்களில் ஒருத்தி நாணத்தோடு நடந்து வந்து
அவரிடம் கூறினாள். “என்னுடைய தந்தை உங்களை அழைக்கிறார். நீங்கள் எங்களின் கால் நடைகளுக்கு
தண்ணீர் புகட்டியதற்கு கூலி தருவதற்காக!” ( அல்குர்ஆன்:
28: 25 )
குரலில் குழைவு வேண்டாம்.. நேர்த்தியும், தெளிவும்
வேண்டும்…
يَانِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ
اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ
مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا
تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ
الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ
“நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரணப் பெண்களைப்
போன்றவர்களல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் மென்மையாகப்
பேசாதீர்கள்.
ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும்
யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும். ஆகவே, தெளிவாய் நேர்த்தியாய் பேசுங்கள்!
மேலும், உங்களுடைய வீடுகளிலேயே தங்கியிருங்கள்!
கடந்து போன அஞ்ஞானக் காலங்களில் செய்து கொண்டது போன்று ஒப்பனையும், அலங்காரமும் செய்து
கொண்டு அழகை வெளிப்படுத்தாதீர்! தொழுங்கள்! ஜகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவன்
தூதருக்கும் கட்டுப்பட்டு வாழுங்கள்!” (அல்குர்ஆன்:33: 32,33)
நபி {ஸல்} அவர்களின் தூய துணைவியர்களான, முஃமின்களின்
அன்னையரான பெண்மணிகளுக்கு அல்லாஹ் வழங்கும் அறிவுரை இது வென்றால் நம் வீட்டு சாமானியப்பெண்களை
என்னவென்று கூறுவது..?
பெண்களின் ஆடை அமைப்பு பற்றி
அல்குர்ஆனும்.. நபி மொழியும்..
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ
وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا
يَصْنَعُونَ ()
“ ( நபியே! ) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள்
தங்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப்
பாதுகாத்துக் கொள்ளும் படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான
வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ்
நன்கறிபவனாக இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்:
24:30 )
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ
أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
“மேலும்,
( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்:
அவர்கள்
தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை
பாதுகாக்கட்டும்! ( அல்குர்ஆன்: 24:31 )
ஆடை மற்றும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் ஆண்களிடம் விதிக்காத ஒரு
சில கட்டுப்பாடுகளை பெண்கள் மீது இஸ்லாம் விதிக்கின்றது.
எனவே, ஆடை மற்றும் அழகை வெளிப்படுத்துகிற விவகாரத்தில் ஆணும் பெண்ணும் ஒரே
மாதிரியானவர்கள் அல்லர் என்று இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது.
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ
يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ
زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى
جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ
آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ
بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ
أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ
أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا
عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا
يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ
الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()
“மேலும்,
( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்:
அவர்கள்
தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை
பாதுகாக்கட்டும்! தங்களுடைய அழகை வெளியே
காட்டாதிருக்கட்டும்! அதிலிருந்து தாமாக வெளியே
தெரிகின்றவற்றைத் தவிர! மேலும்,
தங்களுடைய
மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்!”
தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள், மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை
அண்டி வாழ்கிற ஆண்கள், மேலும்,
பெண்களின்
அந்தரங்க விஷயங்களைப் பற்றி தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்களின் முன்னிலையில்
அன்றி வேறு எவருடைய முன்னிலையிலும் தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம்.
தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம்.” ( அல்குர்ஆன்: 24:31 )
இந்த இறைவசனத்தின் மூலம் பெண் என்பவள் முழுமையாக மறைப்புக் குரியவள் என்றும்
அவளின் உடை என்பது எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதும் நிரூபணமாகின்றது.
மேலும், இந்த இறைவசனத்தில் இருந்து தான் “அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர!” எனும் சொல்லாடலின் மூலம் பர்தா சம்பந்தமான இரு வேறு கருத்துக்கள் – சட்டப்பிரச்சனைகள் எழுந்தது எனலாம்.
1. ”முகமும் இரு கரங்களும் கூட தெரியக்கூடாது. ஆகவே, முகத்தையும், கரங்களையும் மறைக்க வேண்டும்” என்றும்,
2. “முகத்தையும், இரு கரங்களையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை”
என்றும் இரு
வேறு அபிப்பிராய பேதங்கள் தொன்று தொட்டு இன்று வரை சட்ட அறிஞர்களிடையே நிலவி
வருகின்றன.
وقد قال رسول اللّه صلى
اللّه عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان - رواه الترمذي عن ابن
مسعود فان هذا الحديث يدل على انها كلها عورة
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பெண் என்பவள் முழுமையாக மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். ஒரு பெண் முழுமையாக மறைக்காமல் வெளியே சென்றால் எனில் ஷைத்தான் அவளை அழகாக
காண்பிப்பான்”
என்று
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )
இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்க்கும் போது ஒரு பெண் தனது உடலை முழுமையாக
மறைக்கும் விதத்தில் ஆடை அணிய வேண்டும் என்று தெரிகிறது.
قال رسول الله صلى الله عليه وسلم : " سيكون في آخر أمتي نساءٌ
كاسيات عاريات , على رؤوسهن كأسْنِمَةِ البُخْت , العنوهن , فإنهن ملعونات "
[صحيح] , والبُخْتُ: نوع من الإبل.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எனது உம்மத்தின் கடைசி காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருவார்கள். அவர்களின் தலைமுடி ஒட்டகங்களின் திமில் போன்று இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக,
அவர்கள்
சபிக்கப்பட வேண்டியவர்களே!” ( நூல்: தப்ரானீ
)
قال رسول الله صلى الله عليه وسلم : " صنفان من أهل النارلم
أَرَهُمَا : قوم معهم سِياطٌ كأذناب البقر يضربون بها الناس , ونساء كاسيات عاريات
, مُمِيلاتٌ مائلات , رؤوسهن كأسنمة البُخْتِ المائلة , لا يدخلن الجنة , ولا يجدن
ريحها , وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا " .[ مسلم ]
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இரு வகையினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களில் ஒரு வகையினர் மாட்டின் வாலைப்
போன்ற சாட்டைகளை வைத்திருப்பார்கள்.
அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பார்கள்.
இன்னொரு
வகையினர் ஆடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவார்கள். பிறரைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களும் பிறர் பக்கம் வீழ்வார்கள்.
இவர்களின் தலை உயரமான கழுத்துடன் அங்கும் இங்கும் சாயும் ஆண் ஒட்டங்களின்
திமில்களைப் போல் இருக்கும். இவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். சுவனத்தின் வாடையை இன்னின்ன தூரத்தில்
இருந்து கூட நுகரலாம். (ஆனால்,
இவர்களோ
அச்சுவர்க்கத்தை விட்டும் வெகுதூரம் விலக்கி வைக்கப்படுவார்கள்.) ( நூல்: முஸ்லிம்
)
இந்த இரு நபிமொழிகளும் மெல்லிய அரைகுறை ஆடைகளை அணிவதை தவிர்த்து கனமான ஆடைகளை
அணிய வேண்டும் என அறிவுறுத்துகின்றது.
قالت عائشة رضى اللّه عنها
رحم اللّه النساء المهاجرات الأول لمّا انزل اللّه تعالى وَلْيَضْرِبْنَ
بِخُمُرِهِنَّ عَلى جُيُوبِهِنَّ شققن مروطهن فاختمرن به
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் முந்தைய முஹாஜிர்களான பெண்களுக்கு அருள் புரிவானாக! “பெண்கள் முந்தானைகளால் தங்களின் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்!” என்ற இறைக் கட்டளை அருளப்பட்ட போது அவர்கள் தங்களின் மெல்லிய ஆடைகளைக் கை
விட்டனர். தடித்த
(கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளை அமைத்துக் கொண்டனர்.”
( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )
قال
أسامة بن زيد رضي الله عنهما : ( كساني رسول الله صلى الله عليه وسلم قُبْطِيَّةً
كثيفة مما أهداها له دِحْيَةُ الكلبي , فكسوتُها امرأتي , فقال:" ما لك لم
تلبس القُبْطِيَّةً ؟ " , قلت: ( كسوتُها امرأتي ) , فقال: " مُرها ,
فلتجعل تحتها غُلالة – وهي شعار يُلْبَسُ تحت الثوب – فإني أخاف أن تَصِفَ حجمَ
عِظامِها " ) [ حسن
உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒருமுறை தங்களுக்கு அன்பளிப்பாக
வந்த எகிப்து தேசத்தின் ஆடை ஒன்றை எனக்கு அன்பளிப்பாக அணியக் கொடுத்தார்கள்.
நான் வீட்டிற்குச் சென்று அதை என் மனைவியிடம் அணிந்து கொள்ளுமாறு கூறிவிட்டேன். பின்பு நான் அண்ணலாரின் சபைக்கு வந்த போது என்னிடம் ”உஸாமாவே உம்மிடம் நான் தந்த ஆடையை நீர் ஏன் அணியவில்லை?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு நான் “அல்லாஹ்வின் தூதரே! அதனை நான் என் மனைவிக்கு அணியக் கொடுத்து விட்டதைக்” கூறினேன். அதைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள்
“உமது மனைவியிடம்
அந்த ஆடையை அணியும் போது அதனுள் ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும் படி நீர் கூறும்! ஏனெனில், உமது மனைவியின் உடலமைப்பை
வெளிப்படுத்துவதாக அமைந்து விடுமோ என நான் அஞ்சுகின்றேன்” எனக் கூறினார்கள்.
( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா லி இமாமி அத் தஹபீ )
உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தாத இறுக்கமற்ற,
சற்று தளர்வான
நீளமான பெரிதான ஆடைகளை அணிய வேண்டும் என இந்த நபிமொழிகள் கூறுகின்றன.
فقد روى
النسائي عن أبي موسى الأشعري قال: قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم
ليجدوا من ريحها فهي زانية
وفي
مسند الإمام أحمد
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எந்தப் பெண் நறுமணம் பூசிய நிலையில் அதை மக்கள் நுகர
வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு மத்தியில் நடந்து செல்கின்றாளோ அவள் விபச்சாரியாவாள்.” ( நூல்: முஸ்னத் அஹ்மத் )
عن أبي
هريرة رضي الله عنه أنه استقبلته -أي في الطريق- امرأة متطيبة فقال: أين تريدين يا
أمة الجبار؟ فقالت المسجد. فقال: وله تطيبت؟ قالت نعم.
قال أبو
هريرة إنه قال:
أيما امرأة خرجت من
بيتها متطيبة تريد المسجد لم يقبل الله عز وجل لها صلاة
حتى ترجع
فتغتسل منه غسلها من الجنابة.
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண் நறுமணம் பூசிய நிலையில் மஸ்ஜிதுக்குச்
செல்வாளேயானால், அவள் பெருந்தொடக்குக்காக குளிப்பது
போன்று குளிக்கும் வரை அவளது தொழுகை ஒப்புக்
கொள்ளப்படாது.”
( நூல்: அஹ்மத் )
இமாம் ஷாஃபிஇ, இமாம் அபூஹனீஃபா இமாம் மாலிக்
(ரஹிமஹுமுல்லாஹு அலைஹிம்) ஆகியோர் பெண்களுக்கான நறுமணப்
பொருட்கள் நிறமுடையதாகவும், இலேசான மணமுடையதாகவும் இருக்க வேண்டுமென கூறுகின்றார்கள்.
மேற்கூறிய இரு நபிமொழிகளும் ஆடை மீது நறுமணம் பூசிச் செல்லக்கூடாது என கூறுகின்றது.
وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال : "
رأى رسول الله صلى الله عليه وسلم عَلَيَّ ثوبين معصفرين , فقال : ( إن هذه من
ثياب الكفار فلا تَلْبَسها ). [ مسلم ]
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருந்தேன். இதைக் கண்ட நபி {ஸல்} அவர்கள் இந்த ஆடைகளை அணியாதீர்கள்! இவை நிராகரிப்போர்களுடைய ஆடைகள்” என என்னிடம் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
قال رسول الله صلى الله عليه وسلم : " من تشبه
بقوم فهو منهم " . [ صحيح ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”மாற்றார்களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவர்கள்
அவர்களைச் சார்ந்தவர்களே!” ( நூல்: முஸ்லிம் )
இன்று சமூகத்திலே நடிகைகள் அணிகிற சேலை அமைப்பிலிருந்து ஜாக்கெட் மாடல் வரையிலும் அதை உடுத்தும் விதத்திலும் அங்குலம் அங்குலமாக
பின்பற்றப்படுகிறது.
எனவே, மாற்று மதகலாச்சாரங்களைத் தாங்கிய
ஆடைமுறைகளை அங்கீகரிப்பதும் கூடாது என இந்த இரு
நபிமொழிகளும் உணர்த்துகின்றன.
قال رسول الله صلى الله عليه وسلم : " ومن
لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ في الدنيا , ألبسه الله ثوبَ مَذَلَّةٍ يوم القيامة , ثم
ألهب في ناراً " . [ حسن ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உலகில் புகழுக்காகவும், பிறர் புகழ்வதற்காகவும் ஆடை
அணிபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் இழிவெனும் ஆடையை அணிவித்து நரகத்தில் புகுத்துவான்.” ( நூல்: நஸாயீ )
இன்று நவீன நாகரீக ஆடைகளை பெண்கள் விரும்பி அணிவது பிறர் புகழுக்காகவும், பிரபல்யத்திற்காகவும் தான். அந்த
மாதிரியான ஆடைகளை அணியக் கூடாது என இந்த நபிமொழி உணர்த்துகின்றது.
وعن أبي هريرة رضي الله عنه قال : " لعن رسولُ
الله صلى الله عليه وسلم الرجلَ يَلْبَس لِبْسَةَ المرأة , والمرأة تلبَسُ لِبسَةَ
الرجل " . [ صحيح ]
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஆண்களைப் போன்று ஆடை அணியும்
பெண்களையும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களையும் சபித்தார்கள்.” ( நூல்: முஸ்லிம் )
وقال رسول الله صلى الله عليه وسلم : " ثلاث لا
يدخلون الجنة , ولا ينظر الله إليهم يومَ القيامة: العاقُ والديه , والمرأةُ
المترجلة المتشبهة بالرجال , والدَّيُّوث "الحديث.[ صحيح ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மூன்று நபர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவிக்க
மாட்டான். நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களை பார்க்கவும் மாட்டான். 1. பெற்றோருக்கு நோவினை செய்பவன்., 2. ஆண்களுக்கு ஒப்பாக ஆடை அணியும் பெண்., 3. குடும்பத்தார்களின் அசிங்கங்களை, தீய நடத்தைகளை அங்கீகரிப்பவன்.” ( இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்னத் அஹ்மத் )
قال رسول الله صلى الله عليه وسلم : " ليس منا
من تشبه بالرجال من النساء , ولا من تشبه بالنساء من الرجال ". [ صحيح ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் நம்மைச் சார்ந்தவரல்லர்.” ( நூல்: முஸ்னத் அஹ்மத் )
இறுதியாக…
பெண் சமூகம் தாங்கள் அடைகிற அவலங்களுக்கான பிரச்சனைகளின்
தீர்வை நோக்கி நகர வேண்டுமானால் அழுத்தமாக அதை பதிவு செய்ய வேண்டும்.
قال ابن جريج: وقال
عكرمة: نزلت في كُبَيْشَةَ بنت مَعْن بن عاصم بن الأوس، توفي عنها أبو قيس ابن
الأسلت، فجنَحَ عليها ابنُه، فجاءت رسولَ الله صلى الله عليه وسلم، فقالت: يا رسول
الله، لا أنا وَرِثْتُ زوجي، ولا أنا تُرِكْتُ فأنكح، فنزلت هذه الآية.
மிகப்பெரிய மன
உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உள்ளான பெண்மணி நபிகளார்
முன் வந்து நிற்கிறார். அவரது முகத்தில் படபடப்பும், ஒரு
விதமான ரோஷமும் படர்ந்திருப்பதை நபி (ஸல்) அவர்களால் உணரமுடிந்த்து.
அந்தப் பெண்மணியை
மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உண்டாக்கியது. உண்மையில்
சாதாரண காரணமாக இருக்க வாய்ப்பில்லை அறியாமைக் காலத்தில் ஒரு கடுஞ்செயலால்
அப்பெண்மணி பாதிக்கப்பட்டிருந்தார்.
அதாவது அன்றைய
அரபுலகத்தில் தந்தை இறந்துவிட்டால் தந்தையின் முதல் தாரத்தை இரண்டாம் தாரத்தின்
மகன் திருமணம் செய்து கொள்ளும் கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்து வந்த்து.
தற்போது
அப்பெண்மணியின் கணவர் அபுகைஸ்-ஸைஃபிய் இப்னு அல்-அஸ்லதில் அன்ஸாரி (ரலி) அவர்கள்
இறந்து விட்டார். அவரின் இரண்டாம் மனைவியின் மகன் கைஸ், கப்ஷா
பின்த் மஅன் இப்னு ஆஸிம் எனும் அப்பெண்மணியை திருமணம் செய்ய முயற்சித்து வருவதை
அதற்கான சில அறிகுறிகளை வைத்து அறிந்துகொண்ட கப்ஷா (ரலி) அவர்கள் அடுத்து
அண்ணலாரின் முன்வந்து நிற்கிறார்கள்.
அல்லாஹ்வின்
தூதரே! என் கணவர் அபுகைஸ் இறந்து விட்டார் அவரின் மகன் கைஸ் என்னை திருமணம் செய்ய
முயற்சிப்பதாக நான் அறிகிறேன். மேலும் நான் அவரை மகனாகத்தான கருதுகிறேன். என்
விஷயத்தை – பாதிப்பை உங்களிடம் உணர்த்திவிட்டேன் என
தன் உள்ளத்து உணர்வுகளை மாநபி (ஸல்) அவர்களிடம் வந்து கொட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள்
மௌனமாக இருக்கிறார்கள் சிறிது நேரத்தில் அல்லாஹ்.
وَلَا تَنْكِحُوا مَا
نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ
فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا (22)
”மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த
பெண்களை நீங்கள் ஒருபோதும் மணம் முடித்துக் கொள்ளாதீர்கள் முன்னால் நடந்தது
நடந்துவிட்டது. யதார்த்தத்தில் இது ஒரு மானக்கேடான, தண்டனைக்குரிய
செயலாகும், மேலும் கீழ்த்தரமான செயலுமாகும்.” ( அல்குர்ஆன்; 4; 22 ) எனும் இறைவசனத்தை இறக்கியருளினான்.
இதன் பின்னர்
துணிந்து ஒருவர் தனது தந்தையின் மனைவியை திருமணம் செய்துவிட்டதாக நபிகளாருக்கு
தெரிவிக்கப்பட்ட போது அவரின் தலையை கொய்துவருமாறும் அவரின் சொத்துக்களை பொதுச்
சொத்தில் சேர்த்துவிடுமாறும் ஹாரிஸ் இப்னு அம்ரு எனும் நபித் தோழரை அனுப்பி
வைத்தார்கள் என பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
( நூல் – இப்னு கஸீர், பாகம்-1,
பக்கம் – 611 )
பாலியல் குற்றவாளிகளுக்கு இ.பி.கோ வின் படி கிடைக்கும் தண்டனை என்ன?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு. 375, 376 –ன் படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது
பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறைத்
தண்டனையோ வழங்கப்படலாம்.
பாலியல்
பலாத்காரத்தால் ஒரு பெண் இறந்து விட்டால், பாலியல்
பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு “இந்திய
தண்டனைச் சட்டம் 302 – ன் படி
கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதிற்காக மரண தண்டனையோ, அல்லது
ஆயுள் தண்டனையோ, அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ
வழங்கப்படலாம்.
மேலும், இந்தியத் தண்டனைச்சட்ட பிரிவு 366 -இன் படி ஒரு பெண்ணை கட்டாயத் திருமணத்திற்காகவோ, வன்புணர்ச்சிக்காகவோ கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை
நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
பதினெட்டு வயதுக்கு குறைந்த சிறுமியை வன்புணர்ச்சிக்காக கடத்திச் சென்றால்
பத்தாண்டு வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
குற்ற சதித்திட்டம் போட்டது பிரிவு 120 பி, கடத்தப்பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து – ஒளித்து வைத்தல் பிரிவு 368, ஆதாரங்களை மறையச் செய்தல்
201, சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் பிரிவு 340, முதலிய இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் மற்றும் சிறுவர் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின்
கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை அதாவது பத்தாண்டுகள் அல்லது சிறைத்தண்டனை அல்லது மரணதண்டணை
இம்மூன்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது மூன்றையுமோ வழங்க முடியும்.
( நூல்:
முப்பெரும் குற்றவியல் சட்டங்கள், இந்திய
தண்டனைச் சட்டம், தீங்கியல் சட்டம். )
ஆசிஃபா
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற 8 பேருக்கும் மரண தண்டனை தீர்ப்பளித்து,
கூட்டு மனசாட்சி என்ற பேரில் எப்படி அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றோர் தூக்கில் இடப்பட்டார்களோ அதைப் போன்று இந்தக் காவிக்
கயவர்களும் கூண்டோடு தூக்கில் இடப்பட வேண்டும்.
அப்போது தான் இது போன்ற
வன்புணர்வில் ஈடுபடும் கயவர் கூட்டத்தின் கொட்டங்கள் இந்த தேசத்தில் இல்லாது போகும்.
அப்போதும் கூட எங்கிருந்தாவது
இந்த போலி மனித ( உயிர் வதை ) உரிமை ஆணையம் எனும் பேரில்
மனித உரிமை ஆர்வலர் எனும் பேரில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிக் கொண்டு
வர வாய்ப்பு இருக்கின்றது.
நாட்டு மக்களின் மீது ஆட்சியாளருக்கு அக்கறை இருக்க வேண்டும்...
நாளொன்றுக்கு
இத்தனை கற்பழிப்பு என்று கூறிய காலம் போய் நிமிடத்திற்கு இத்தனை கற்பழிப்பு என்று
புள்ளிவிவரங்கள் கூறுகிற அளவுக்கு பெண்களின் பாதுகாப்பும், நாட்டு மக்களின்
பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கும் இந்த நேரத்தில் ஓர் நேர்மையான ஆட்சியாளன்
என்பவர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
நாட்டின் சட்ட
வல்லுனர்களை அழைத்து “கற்பழிப்பு பெருக கடுமையான சட்டங்களும், தாமதமான
தீர்ப்புகளும் தான் காரணம் என்று கூறப்படுகின்றது” இது குறித்து என்ன சட்ட
திருத்தத்தைக் கொண்டு வருவது என்று சட்ட விவாதம் நடத்தப்பட்டு, உடனடியாக
பாராளுமன்றத்தில் அதை தாக்கல் செய்து உடனடியாக அனைத்து மாநிலங்களிலும் அதை
செயல்படுத்தச் சொல்லி இருக்க வேண்டும்.
இப்போதும் கூட
இந்த தேசத்தின் பாழாய்ப் போன பிரதமர் உலகத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றார்.
தான் கண்ட ஓர்
கனவு நாட்டு மக்களுக்கு பெரும் ஆபத்தாய் முடிந்து விடுமோ என்று அஞ்சிய ஆட்சியாளர்
ஒருவர் தம் அரசவையின் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து உடனடியாக
விவாதித்து அதற்கான தீர்வை நோக்கி நகர்ந்ததாக அல்குர்ஆனின்...
وَقَالَ الْمَلِكُ إِنِّي أَرَى سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ
يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ
يَاأَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا
تَعْبُرُونَ (43) قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ
الْأَحْلَامِ بِعَالِمِينَ (44)
யூஸுஃப்
அத்தியாயத்தின் 43 மற்றும் 44 –ஆம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவான்.
எங்கிருந்தோ (
ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருந்து ) வந்த ஓர் அரசரின் கடிதம் அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாசக அமைப்பு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக
இருந்ததை உணர்ந்த ஓர் நாட்டின் ஆட்சியாளர் தம் அரசவையின் அதிகாரிகள் மற்றும்
அமைச்சர்களை அழைத்து “இன்றோடு இதற்கு சரியானதொரு தீர்வை கண்டு விடவேண்டும்” என்று
கூறி, அவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, விவாதித்து நாட்டையும், நாட்டு மக்களையும்
நல்வழியின் ( ஈமானிய வாழ்வின் ) பால் அழைத்துச் சென்றதாக அல்குர்ஆனின்...
قَالَتْ يَاأَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ
كَرِيمٌ (29) إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ
الرَّحِيمِ (30) أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ (31) قَالَتْ
يَاأَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا
حَتَّى تَشْهَدُونِ (32)
அந்நம்ல்
அத்தியாயத்தின் 29 முதல் 44 வரையிலான வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுவான்.
சுய புத்தி இல்லையென்றால்
சொல்புத்தியாவது இருக்க வேண்டும் அல்லவா? சட்ட வல்லுனர்களையும்,
அமைச்சர்களையும், மாநில முதல்வர்களையும்,
கவர்னர்களையும் அழைத்துப் பேச துப்பில்லை, வக்கில்லை
என்றால் நாட்டு மக்களும், சமூக ஆர்வலர்களும், சமயச் சார்பின்றி எல்லா தரப்பு மக்களும் இந்த விவகாரத்தில் உச்சபட்ச தண்டனையாக
மரண தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்ற போது அதை ஏற்று
பாரதப் பிரதமர் என்கிற அடிப்படையில் “மான் கீ பாத்” அலைவரிசையிலாவது அறிவித்துத் தொலைய வேண்டியது தானே?
ஆணவத்தோடும்,
பெருமையோடும், ஆதிக்க, இன வெறியோடும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த ஃபிர்அவ்ன்
கூட தம் அதிகாரிகளின், அமைச்சர்களின் பேச்சைக் கேட்டான் என்று வரலாறு சொல்கின்றது.
தம்முடைய
ஆட்சிக்கு இஸ்ரவேலர்களில் பிறக்கும் ஓர் ஆண் வாரிசால் பங்கம் வரும் என்று
ஜோஸ்யக்காரன் சொன்னான் என்பதற்காக இஸ்ரவேலர்களின் ஆண் மக்களை கொன்று குவிக்குமாறு
கட்டளை பிறப்பித்தான் ஃபிர்அவ்ன்.
அவனுடைய படை
வீரர்களும் கொத்து கொத்தாய் கொன்று குவித்து வந்தனர். போகிற போக்கைப் பார்த்தால்
அடிமை ஊழியம் செய்ய இஸ்ரவேலர்களில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று அஞ்சிய
ஃபிர்அவ்னின் அமைச்சர்கள் மெதுவாக “இப்படியே போனால் நம்முடைய எல்லா வேலைகளையும்
நாமே தான் செய்ய வேண்டி இருக்கும். அடிமை ஊழியம் செய்ய ஒருவரும் இருக்க
மாட்டார்கள் என்று ஃபிர்அவ்னின் காதில் ஊதினர்.
எனவே, ஆண் மக்களை
கொன்று குவிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் அரசே! என்றும் கூறினர்.
அதன் படி ஒரு
வருடம் பிறக்கும் ஆண் மக்களை கொல்லாமல் விட்டு விடுங்கள்! அடுத்த ஆண்டு பிறக்கும்
எல்லா ஆண் மக்களையும் கொன்று விடுங்கள்! என்று கட்டளையிட்டான் ஃபிர்அவ்ன்.
( அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி கொல்லாமல்
விடப்பட்ட ஆண்டில் பிறந்தவர்கள் தான் மூஸா (அலை) அவர்கள். )
அட நாட்டு
மக்களுக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பற்றாவிட்டாலும் பரவாயில்லை. சராசரி
அரசியல் வாதியாக கூட தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவாவது ”கற்பழிப்புக்
குற்றவாளிகளுக்கு கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால்” உடனடியாக மரண தண்டனை
என்று அறிவித்திருக்க வேண்டாமா?
இஸ்லாமிய நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனை வேண்டும்...
ஹிஜ்ரி 1401 –ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 11 அன்று,
சவூதி அரேபியாவின் மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுனர்களும், முதுபெரும் உலமாக்களும் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் திரளான இஸ்லாமிய கலாச்சார பாதுகாவலர்கள் ஒன்று
கூடி “பாலியல் பலாத்காரத்திற்கான இஸ்லாமிய தண்டனை என்ன?
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி
இருக்கின்றார்கள்? என்று ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனையின் இறுதியாக, அல் மாயிதா அத்தியாயத்தின் 33-ஆம்
வசனத்தின் படி “பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையாக”
அதிக பட்ச தண்டணையாக மரணதண்டனை வழங்குவது என தீர்மானித்து, அதை அன்றைய தேதியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என ஃபத்வா – மார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள்.
அந்த
தீர்மானத்தையும், ஃபத்வாவையும் அத்துணை இஸ்லாமிய
நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை
சவூதி மற்றும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இந்தச் சட்டம் தான்
நடைமுறைபடுத்தப்படுகின்றது.
إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ
وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَنْ يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ
تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ
ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
(33)
“எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய
தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும், பூமியில்
குழப்பம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது
தான்:
அவர்கள் கொல்லப்பட
வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்;
அல்லது மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட
வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்.
இது அவர்களுக்கு
உலகில் கிடைக்கும் இழிவா (ன தண்டனையா) கும்.
மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக்
கடுமையான தண்டனை இருக்கின்றது.” ( அல்குர்ஆன்:5:
33 )
ஒரு பெண்ணை
பாலியல் பலாத்காரம் செய்பவன் அல்லாஹ்வுடன் போர்பிரகடனம் செய்தவனாகவும், தான் வாழும் நாட்டில் அல்லது பகுதியில் பெரும் குழப்பம் விளைய
காரணமானவனாகவும் ஆகிவிடுகின்றான்.
மேலும், அல்லாஹ் இந்த வசனத்தில் கூறிடும் தண்டனையை “ஒரு மனிதனின் உயிர், மானம், பொருள்
ஆகியவைகளில் மிகப் பெரிய சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியவர்களின் விஷயத்திலும்
வழங்கலாம். என அந்த ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளனர். ( நூல்: அல் – மஜ்லதுல்
புஹூஸுல் இஸ்லாமிய்யா, பாகம்:16, பக்கம்:75.
)
இந்த தேசம் பெண்களுக்கும், இதர ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,
பழங்குடியின, சிறுபான்மை சமூக மக்களுக்கு பாதுகாப்பான
வாழ்விற்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிற நாடு என்பதை ஆசிஃபா குற்றவாளிகளுக்கு நீதிமன்றம்
வழங்கும் தீர்ப்பு உறுதி செய்ய வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக
குற்றங்கள் குறைந்த, குற்றவாளிகள் இல்லாத தேசமாக உலகில் அறியப்படும்
அளவிற்கு இந்த தேசத்தை உயர்த்தும் முகமாக குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனை அமைந்திருக்க
வேண்டும்..
விடியலை நோக்கி இந்திய
தேசத்தின் மக்கள்!!!
Alhamthu lillah
ReplyDeleteதங்களின் ஆயுளை நல் அமலோடு அல்லாஹ் நீட்டி வைப்பானாக
ReplyDelete