ரமழான் சிந்தனை, தொடர் – 15
நட்பு எனும்
ஐஸ்வர்யமான அருட்கொடை!!!
14 –ஆவது நோன்பை
நிறைவு செய்து, 15 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல்
செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அந்நூர் அத்தியாயத்தின் சிறு பகுதியும் அல்ஃபுர்கான், அஷ்ஷுஅரா
ஆகிய அத்தியாயங்கள் நிறைவு செய்யப்பட்டு, அந்நம்ல் அத்தியாயத்தின் 5 வசனங்கள் என
354 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
அல் ஃபுர்கான் அத்தியாயத்தின் 27, மற்றும் 28 –ஆவது இறைவசனங்களில் மூலம் நட்பு என்பது அல்லாஹ்
மனித சமூகத்திற்கு வழங்கிய ஐஸ்வர்யமான அருட்கொடை என்பதை உணர முடியும்.
நண்பன் என்றால் யார்? நட்பு என்றால் என்ன? நட்புக்கு இஸ்லாம் வழங்கி
இருக்கிற அங்கீகாரமும் உயரிய அந்தஸ்தும் என்ன? என்பதை இன்றைய
ரமழான் சிந்தனையாக பார்க்க இருக்கின்றோம்.
ஏனெனில், நம்மில் பெரும்பாலானவர்கள் நண்பர்களை, நட்பு
வட்டாரத்தைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தவறிழைத்து விடுகின்றோம்.
அதன் விளைவை உணர்கிற ஒரு தருணத்தை தான் அல்லாஹ் இன்று ஓதிய அல்ஃபுர்கான்
அத்தியாயத்தின் 28 –ஆவது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي
اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا (27) يَاوَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ
فُلَانًا خَلِيلًا (28)
“அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்:
“அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணை புரிந்திருக்கூடாதா? ஐயகோ! எனது
துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று
அலறுவான்”. (
அல்குர்ஆன்: 25: 27, 28 )
இன்றைய நட்புக்கான இலக்கணத்திற்கும் இஸ்லாம் கூறும் நட்புக்கான இலக்கணத்திற்கும்
மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் இருக்கின்றது.
நண்பன் என்பவன் யார்?
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ,
قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
" الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلْ "
رَوَاهُ أَبُو دَاوُدَ ,
“ஒரு
மனிதன் தன் நேசரின், நண்பனின் மார்க்கத்திலே இருக்கின்றான்.
ஆகவே உங்களில் ஒவ்வொருவரும் தன் நண்பர் யார் என்பதைச் சிந்தித்துக்
கொள்ளட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: அபூதாவூத் )
அழகிய நட்பிற்கான மரியாதை என்ன?
وَثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ صَالِحٍ ، ثَنَا ابْنُ فُضَيْلٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عُمَارَةَ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ : " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ عِبَادًا يَغْبِطُهُمُ
الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ " ,
قِيلَ مَنْ هُمْ لَعَلَّنَا نُحِبُّهُمْ ، قَالَ :
" قَوْمٌ تَحَابُّوا بِنُورِ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ غَيْرِ أَرْحَامٍ
وَلَا أَنْسَابٍ وُجُوهُهُمْ نُورٌ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ لَا يَخَافُونَ
إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ ، ثُمَّ قَرَأَ :
إِنَّ
أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ سورة يونس آية 62
" .
قُلْتُ
: رَوَاهُ النَّسَائِيُّ فِي الْكُبْرَى , وَابْنُ حِبَّانَ في صحيحه
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்}
அவர்கள் ஒரு முறை எங்களிடையே “அல்லாஹ்வின்
அடியார்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் நபிமார்களோ,
உயிர்த்தியாகிகளோ அல்லர். ஆனால், மறுமையில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும்,
உயிர்த்தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்” என்று
கூறினார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? எனக்கூறுங்கள். நாங்களும் அவர்களை நேசிப்போமே!”
என நபித்தோழர்கள் வினவினர்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “சில மனிதர்கள் அவர்கள் அல்லாஹ்வுக்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தனர்.
அவர்களுக்கிடையே இரத்த உறவும் கிடையாது. கொடுக்கல்,
வாங்கல், வியாபாரம் எதுவும் கிடையாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களின் முகங்கள்
ஒளிபோல் இலங்கிக் கொண்டிருக்கும். அவர்கள் ஒளியினாலான
மேடைகளின் மீது வீற்றிருப்பார்கள்.
மக்களெல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் அந்நாளில் அவர்களுக்கு எந்த
பயமும் இருக்காது. மக்களெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் அந்நாளில் அவர்களுக்கு எந்தக்
கவலையும் இருக்காது” என்று கூறிவிட்டு, “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்களுக்கு
எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்”
என்ற வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.
( நூல்: இத்திஹாஃபுல் ஃகியரதில் மிஹரா – பிஜவாயிதில் மஸானீதில் அஷ்ரா லி இமாமி அல் யூஸீரி, ஹதீஸ்
எண்: 4935 )
நட்பிற்கான உயரிய அந்தஸ்து என்ன?
فقد أخرج الإمام البخاري من حديث عبد الله بن مسعود
وأبي موسى الأشعري - رضي الله عنهما - أنه: جاء رجل إلى رسول الله صلى الله عليه
وسلم فقال: يا رسول الله كيف تقول في رجل أحب قوماً ولما يلحق بهم ؟ فقال رسول
الله - صلى الله عليه وسلم
((المرء مع من أحب))
”மனிதன்
யாரை நேசிக்கின்றானோ அவருடன் மறுமையில் இருப்பான்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (
நூல்: புகாரீ )
நட்பிற்கான இலக்கணம் என்ன?
"من أراد اللَّه به خيرًا
رزقه اللَّه أخًا صالحًا، إن نسي ذكره، وإن ذكر أعانه
" اورده السبكي في الطبقات الشافعية
الكبرى6/315
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஓர்
அடியானுக்கு அல்லாஹ் நலவை நாடினான் என்றால் நேர்வழிக்குப் பிறகு நல்ல (நண்பனை) சகோதரனை வழங்கி விடுவான். அந்த நல்ல நண்பன் தன் நண்பன் நல்ல விஷயங்களை மறந்து விட்டால்
ஞாபகப்படுத்துவான். அவனுக்கு நினைவு படுத்தினால் நல்லதை
செய்வதற்கு உதவி செய்வான்.” ( நூல்: அத்தபகாத்துஷ்
ஷாஃபிஇய்யதுல் குப்ரா லி இமாமிஸ் ஸுப்கீ )
معاذ بن جبل رضي الله عنه قال
فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
: (( قال الله تعالى :
وجبت محبتي للمتحابين فيّ ، والمتجالسين فيّ ،
والمتزاورين فيّ ، والمتياذلين فيّ
مالك في الموطأ بإسناده الصحيح
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ அல்லாஹ் கூறியதாக நபி {ஸல்} அவர்கள்
கூற நான் கேட்டேன்: “எனக்காக யார் இருவர் நேசிக்கிறார்களோ,
எனக்காக யார் இருவர் சேர்ந்து அமர்கின்றார்களோ, எனக்காக யார் இருவர் சந்தித்துக் கொள்கின்றார்களோ, எனக்காக
யார் இருவர் அன்பை பரிமாறிக் கொள்கின்றார்களோ அவர்களை நேசிப்பதும், அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் என் மீது கடமையாகி விட்டது” என்று. ( நூல்: முஅத்தா )
மேற்கூறிய நபிமொழிகள் தன் சக முஸ்லிம் மீது நேசம் பாராட்டுவதை, நட்பு வைப்பதை இஸ்லாம்
கடமையாக்கி இருப்பதை உணர்த்துவதோடு, அந்த நட்பை அழகிய
முறையில் அமைத்துக் கொள்கின்றவர்களை உயரிய அந்தஸ்துகள் பல வழங்கி கௌரவிப்பதையும்
எடுத்துக் கூறுகின்றது.
நண்பர்கள் தான் நம்முடைய சுவனத்தையும், நரகத்தையும் நம் இறுதி முடிவையும்
தீர்மானிக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.
நரகத்திற்கு அழைத்துச் சென்ற தீய நட்பு…
عقبة بن أبي معيط ، وذلك أنه كان لا يقدم من سفر ، إلا صنع طعاما ودعا
إليه أشراف قومه وكان يكثر مجالسة النبيّ صلّى اللّه عليه وسلّم فقدم ذات يوم من
سفر ، فصنع طعاما ودعا الناس إليه ودعا رسول اللّه صلّى اللّه عليه وسلّم فلما قرب
الطعام ، قال رسول اللّه صلّى اللّه عليه وسلّم : ما أنا بآكل طعامك حتى تشهد أن
لا إله إلا اللّه ، وأني رسول اللّه فقال عقبة : أشهد أن لا إله إلا اللّه وأن
محمدا رسول اللّه. فأكل رسول اللّه صلّى اللّه عليه وسلّم من طعامه. وكان عقبة
صديقا لأبيّ بن خلف ، فلما أخبر أبيّ بن خلف ، قال له : يا عقبة صبأت ، قال لا
واللّه ما صبأت ولكن دخل علي رجل فأبى أن يأكل طعامي إلا أن أشهد له ، فاستحييت أن
يخرج من بيتي ، ولم يطعم فشهدت له فطعم ، فقال : ما أنا بالذي أرضى عنك أبدا إلا
أن تأتيه فتبزق في وجهه ، ففعل ذلك عقبة فقال عليه الصلاة والسلام ، لا أراك خارجا
من مكة إلا علوت رأسك بالسيف ، فقتل عقبة يوم بدر صبرا وأما أبيّ بن خلف فقتله
النبيّ صلّى اللّه عليه وسلّم بيده يوم أحد ، وقيل : لما بزق عقبة في وجه النبيّ
صلّى اللّه عليه وسلّم عاد بزاقه في وجهه ، فاحترق خداه فكان أثر ذلك في وجهه ،
حتى قتل وقيل كان عقبة بن أبي معيط خليلأمية بن خلف ، فأسلم عقبة فقال له أمية :
وجهي من وجهك حرام إن تابعت محمدا فكفر وارتد ، فأنزل اللّه فيه
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ يعني عقبة بن أبي معيط بن أمية بن عبد شمس بن عبد
مناف ، على يديه ، أي ندما وأسفا على ما فرط في جنب اللّه ، وأوبق نفسه
உக்பா இப்னு அபீ முயீத் என்பவனும், உபை இப்னு ஃகலஃப் என்பவனும் குறைஷி
குலத்தலைவர்களில் முக்கியமானவர்கள்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைத் துன்புறுத்துவதிலும் இருவருமே முன்னிலையில் தான் இருந்தனர்.
ஒருமுறை நபி {ஸல்}
அவர்களை உக்பா தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு அழைத்தான்.
அதற்கு அண்ணலார் ”நான் உன் வீட்டிற்கு விருந்துண்ண
வரவேண்டுமானால் நீர் கலிமா ஷஹாதாவை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.
அப்போது, உக்பா நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்று கூறிவிட்டு, கலிமா
ஷஹாதாவை மொழிந்தான். இந்த நிகழ்வு நடைபெறுகிற போது அவன் நண்பன் உபை இப்னு ஃகலஃப் ஊரில்
இல்லை.
வெளியூர் சென்றிருந்த அவன் ஊர் திரும்பிய போது, மக்கள் அவனிடம் உன்னுடைய நண்பன் உக்பா
முஹம்மதின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதாக கூறினார்கள்.
உடனடியாக உக்பாவைச் சந்தித்த உபை “நீயும் முஹம்மதும் உரையாடியது எமக்குத்
தெரியும். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாய் எனில், நம் உறவு
இத்தோடு முடிந்து விடும். நம் நட்பு தொடரவேண்டுமானால் முஹம்மதின் முகத்தில் காரி
உமிழ வேண்டும். அப்போது தான் நான் திருப்தியடைவேன்” என்று
கூறினான்.
நண்பனின் தூண்டுதலால் உந்தப்பட்ட உக்பா வேகமாகச் சென்று அண்ணலாரின் அருகே
சென்று முகத்தில் காரி உமிழ்ந்தான்.
உடனடியாக அல்லாஹ்…
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي
اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا (27) يَاوَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ
فُلَانًا خَلِيلًا (28) لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي
وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنْسَانِ خَذُولًا (29)
“மேலும்,
அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக்
கதறுவான். “அந்தோ! நான் இறைத்தூதருக்கு துணை
புரிந்திருக்கக்கூடாதா? ஐயகோ! எனக்கு ஏற்பட்ட துர்பாக்கியமே!
நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே! நான் அவனுடைய
வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்து விட்டேனே!
ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்பது இன்று நிரூபணமாகி விட்டது”
என்ற 25 –ஆம் அத்தியாயத்தின் 28 முதல் 30 வரையிலான வசனங்களை இறக்கியருளினான்.
( நூல்:
தஃப்ஸீர் அல் காஸின், தஃப்ஸீர் அல் குர்துபீ )
உக்பாவின் முன் வைக்கப்பட்ட நேர்வழியா? நேசமா? எனும்
கேள்விக்கு உக்பா தீய நேசத்தைத் தேர்ந்தெடுத்தான். நேர்வழியில் செல்வதற்கு
வாய்ப்பு கிடைத்தும் தீய நட்பால் வழிகெட்டான். இறை நிராகரிப்பாளனாக மரணித்தான்.
பத்ரில் கொல்லப்பட்டு கேவலத்தை அடைந்தான்.
ஆக தீயவர்கள் மீது கொள்ளும் நேசம் சிலபோது நம்மைத் தடம் புரளச் செய்து விடும்.
சுவனப்பாதைக்கு அழைத்துச் சென்ற தூய நட்பு…
وفي يوم فتح مكة لم ينس عمير صاحبه وقريبه صفوان بن أمية فراح اليه
يناشده الاسلام ويدعوه اليه بعد أن لم يبق شك في صدق الرسول، وصدق الرسالة..
بيد أن صفوان كان قد شدّ رحاله صوب جدّة ليبحر منها الى اليمن..
واشتدّ اشفاق عمير على صفوان، وصمم على أن يستردّه من يد الشيطان بكل
وسيلة.
وذهب مسرعا الى رسول الله صلى الله عليه وسلم فقال له:
முன்னரே நாம் உமைர் இப்னு வஹப் (ரலி) அவர்களுக்கும், ஸஃப்வான் இப்னு உமைய்யா
விற்கும் இடையே இருந்த நட்பை பார்த்தோம்.
உமைர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தம் நண்பர் ஸஃப்வானை நேர்வழியின்
பால் அழைப்புக்கொடுத்தார்.
ஸஃப்வான் அதை நிராகரித்து விட்டார். எனினும் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்
உமைர் (ரலி) அவர்கள் ஸஃப்வானிடம் ஏகத்துவ அழைப்பைக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மக்கா வெற்றியை நல்கினான். மக்கா வெற்றி
குறைஷிகளுக்கும், இஸ்லாமிய விரோதிகளுக்கும் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த உணர்வு ஸஃப்வானையும் தொற்றிக்கொள்ளவே ஊரை விட்டு ஓடி விட முடிவெடுத்து
ஜித்தா துறைமுகத்திற்கு வந்தார்.
உமைரோ ஸஃப்வானைத் தேடினார். இறுதியாக உயிருக்குப் பயந்து ஜித்தா துறைமுகத்தில்
ஸஃப்வான் அடைக்கலம் புகுந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, ஸஃப்வானைக் கண்டு கொண்டு
நேராக ஸஃப்வானிடம் வந்து “நண்பனே! நான் உனக்கு அபயம் நல்கி,
உன்னை முஹம்மத் {ஸல்} அவர்களிடம்
அழைத்துச் செல்கின்றேன். நீ என்னோடு வந்து விடு!” என்று
கூறினார்.
ஸஃப்வானோ மறுத்து விட்டார். உடனடியாக, ஜித்தாவிலிருந்து ஹரமை நோக்கி ஓடி
வருகின்றார் உமைர் (ரலி) அவர்கள்.
"
يا نبيّ الله ان صفوان بن أميّة سيّد قومه، وقد خرج هاربا منك ليقذف نفسه في البحر
فأمّنه صلى الله عليك،
فقال النبي: هو آمن.
قال رسول الله فأعطني آية يعرف بها أمانك، فأعطاه الرسول صلى الله عليه
وسلم عمامته التي دخل فيها مكة"..
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே!
ஸஃப்வான் அவருடைய சமூகத்திற்கு தலைவராவார். இப்போது அவர் தங்களை எண்ணி மிகவும்
அஞ்சுகின்றார். அந்த அச்சம் எங்கே அவரை தவறான வழிக்கு அழைத்துச் சென்று விடுமோ என
நான் பயப்படுகின்றேன். ஏனெனில், அந்த அச்சத்தினால் அவர்
கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வாரோ என நான் அஞ்சுகின்றேன்.
எனவே, நீங்கள் அவருக்கு அபயம் அளிக்க வேண்டும். அத்தோடு அவருக்கு நீங்கள்
அபயமளித்ததற்கான ஒரு சான்றையும் என்னோடு தந்து அனுப்பவேண்டும்!” என்று கூறினார்.
உடனே, நபி {ஸல்} அவர்கள் “மக்கா வெற்றியின் போது எந்த தலைப்பாகையை அணிந்திருந்தார்களோ அந்த
தலைப்பாகையை அபயமளித்ததற்குச் சான்றாக” உமைரிடம் எடுத்துக்
கொடுத்தார்கள்.
அங்கிருந்து உமைர் (ரலி) அவர்கள் மீண்டும் ஜித்தாவை நோக்கி ஓடினார்கள்.
"
فخرج بها عمير حتى أدركه وهو يريد أن يركب البحر فقال: يا صفوان، فداك أبي وأمي..
الله الله في نفسك أن تهلكها.. هذا أمان رسول الله صلى الله عليه وسلم قد جئتك
به..
قال له صفوان: ويحك، اغرب عني فلا تكلمني. قال: أي صفوان..فداك أبي
وأمي، ان رسول الله صلى الله عليه وسلم أفضل الناس، وأبرّ الناس ، وأحلم الناس،
وخير الانس.. عزّه عزّك، وشرفه شرفك..
قال: اني أخاف على نفسي..
قال: هوأحلم من ذاك وأكرم..
அங்கே ஸஃப்வானை அருகே அழைத்து “இதோ உமக்கு அண்ணலார்
அபயமளித்திருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளம்! இனி நீர் உம்மை அழித்துக் கொள்ள
வேண்டாம்! நபி {ஸல்} அவர்களைக் கண்டு
அஞ்சவும் வேண்டாம்! அல்லாஹ்வை மட்டுமே அஞ்சிக்கொள்ளும்! இந்த அடையாளத்தைப்
பெற்றுக் கொண்டு உடனடியாக என்னோடு கிளம்புவீராக!” என்று
உமைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அண்ணலாரின் சபைக்கு ஸஃப்வானை அழைத்து வந்தார்கள் உமைர் (ரலி) அவர்கள்.
فقال صفوان للنبي صلى الله عليه وسلم: ان هذا يزعم أنك أمّنتني..
قال السول صلى الله عليه وسلم: صدق..
قال صفوان: فاجعلني فيه بالخيار شهرين..
قال صلى الله عليه وسلم: أنت بالخيار أربعة أشهر".
அண்ணலாரை நோக்கி ஸஃப்வான் “தாங்கள் எனக்கு அபயம் அளித்துள்ளதாகக் கூறி இவர் உங்களிடம்
அழைத்து வந்துள்ளார். இவர் கூறுவது உண்மை தானா?” என்று
கேட்டார்.
”ஆம்!
உமைர் கூறியது முற்றிலும் உண்மை தான்” என்று நபி {ஸல்} அவர்கள் பதில் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் ஸஃப்வானிடம் இஸ்லாத்தை எடுத்துக் கூறினார்கள். அதற்கு
ஸஃப்வான் “எனக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும்” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரோ “இரண்டு
மாதங்கள் என்ன? நான்கு மாதங்கள் கூட வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள்.
وفيما بعد أسلم صفوان
وسعد عمير باسلامه أيّما
سعادة.
ஹுனைன் யுத்தமும் தாயிஃப் யுத்தமும் முடிந்த பிறகு ஸஃப்வான் (ரலி) அவர்கள்
இஸ்லாத்தை ஏற்றார்கள். உமைர் இப்னு வஹப் (ரலி) அவர்களின் கண்களும், இதயமும் அப்பொழுது தான்
குளிர்ச்சியடைந்தன.
( நூல்: ரிஜாலுன்
ஹவ்லர் ரஸூல் {ஸல்}.., உஸ்துல் ஃகாபா )
உமைர் (ரலி) அவர்களோடு கொண்டிருந்த நேசமும் நட்பும் ஸஃப்வான் (ரலி) அவர்களை
சுவனப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றது.
எனவே, நாம் நல்லவர்களை நல்லவர்களை நேசிக்கும் போது நேர்வழியிலும், சுவனப்பாதையிலும் பயணிப்போம்.
உயிரும், மானமும் காப்பான் தோழன்…
كان في زمان سليمان بن عبد الملك بن مروان بن الحكم رجلٌ يُقال له
" خُزيمة بن بِشر " ؛ من بني أسد بالرَّقَّة ، وكانت له مروءة و نِعمة
حسنة وفضل و بِرٌّ بإخوانه ، فلم يزل على تلك الحال حتى احتاج إلى إخوانه الذين
كان يتفضَّل عليهم ، فواسَوه حيناً ، ثم ملُّوه ، فلمّا لاح له تغيُّرهم أتى إلى
امرأته
وكانت ابنة عمه - ؛ فقال لها : يابنت عمّ ؛ قد
رأيتُ من إخواني تغيُّراً ، و قد عزمتُ على لزوم بيتي إلى أن يأتيني الموت .
وأغلق بابه عليه ، وأقام يتقوَّتُ بما عنده ، حتى نفد ؛ وبقي حائراً في أمره ؟!!.
وأغلق بابه عليه ، وأقام يتقوَّتُ بما عنده ، حتى نفد ؛ وبقي حائراً في أمره ؟!!.
ஸுலைமான் இப்னு அப்துல் மலிக் இப்னு மர்வான் இப்னுல் ஹகம் (ரஹ்) அவர்களின் ஆட்சிகாலத்தில் குஸைமா இப்னு பிஷ்ர் (ரஹ்) என்கிற
கொடையாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அல்லாஹ்வின் வழங்கிய அருட்கொடைகள் அனைத்தையும் மனித நேயப் பண்போடு தேவையுள்ளவர்களைத் தேடித்தேடிச் சென்று கொடுப்பார்.
அத்தோடு நின்று விடாமல் தன் சகோதரர்களுக்கும் வாரி, வாரி வழங்குவார். ஒரு கட்டத்தில் அவரை வறுமை சூழ்ந்து கொண்டது.
அவர் தன் சகோதர்களிடம் சென்று தன் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய அளவிலான சூழ்நிலையும் வந்தது.
ஒரு கட்டத்தில் கொடுத்து உதவியவர்கள், சில நாட்களிலேயே வார்த்தைகளால் சூடு வைக்கத்துவங்கினர். இவரைக் கண்டதும் முகம் சுழிக்க
ஆரம்பித்தனர்.
தன் சகோதரர்களே அவமானப்படுத்துகின்றார்களே என்ற மன வேதனையோடு வீட்டிற்கு வந்து தன் மனைவியோடு நடந்தவைகளை பரிமாறிக் கொண்டார்.
பேச்சின் ஊடாக, தன்மானத்தோடு மனைவியைப் பார்த்து “வீட்டைப் பூட்டி விடு! நான் மௌத்தாகும் வரை வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை!
என முடிவெடுத்து விட்டேன்” என்றார். மனைவியும் அவ்வாறே செய்கின்றார்.
ஒரு நாள், இரண்டு நாள், என்று நகர்ந்து, ஒரு வாரம் கழிந்ததும் வீட்டில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து
போனது.
இனி அடுத்த வேளைக்கு உண்ண உணவில்லை, வீட்டின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற பணம் இல்லை.
எனினும் தன்மான உணர்ச்சி அவரை மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க தடுத்தது. ஆகவே, அங்கு இங்கு என்று கடன் வாங்கினார், திருப்பிக் கொடுக்கவும் முடியவில்லை. கடன்காரர்கள்
நெருக்கினார்கள்.
சற்று காலம் முன்பு வரை தாம் ஒரு கொடைவள்ளல்,
இன்றோ இப்படி! என்ன செய்வது அல்லாஹ்வின் சோதனை என்று வீட்டிலேயே முடங்கிப் போனார்.
ஊரெங்கும் இதே பேச்சு தான். வாழ்வாங்கு வாழ்ந்தவர் இப்படி ஆகிப்போனாரே என்று!.
عكرمة الفياض الوالي الجزيرة الفياض لكثرة ما يفيض على إخوانه من المال
والعطايا
و في أحد الأيام كان عكرمة في مجلسه ؛ وعنده
جماعة من أهل البلد ، فجرى ذِكر خزيمة بن بشر في المجلس ، فقال الوالي عكرمة
مستفهماً عن تغيبه الذي طال عن مجلسه : ما حاله ؟ فقالوا : صار من سوء الحال إلى
أمرٍ لا يُوصَف ؛ فأغلق بابه ؛ ولزم بيته .!! فقال عكرمة الفيَّاض : فما وجدَ
خُزيمةُ بنُ بِشر مُواسِياً ولامُكافياً ؟ قالوا : لا . فأمسك عن الكلام ، و عزم
في نفسه على فعل شيء
அவர் வாழ்ந்த பகுதியின் கவர்னராக அப்போது இருந்தவர் இக்ரிமத்துல் ஃபய்யாள் (ரஹ்) என்பவர் ஆவார்கள். இக்ரிமத்துல் ஃபய்யாள் (ரஹ்) அவர்களும்,
குஸைமா இப்னு பிஷ்ர் ரஹ் அவர்களும் நல்ல நண்பர்களாகவும் இருந்தனர்.
கிட்டத்தட்ட குஸைமா அவர்களைப் போன்றே இவர்களும் இரக்கமனமும், உதவி செய்யும் மனப்பான்மையும்
நிறைந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் இப்படிக்
குறிப்பிடுவார்கள்:
“அவரின் இயற்பெயர் இக்ரிமா என்பது மட்டுமே
அவரின் உதவும் மனப்பான்மையால் ஃபய்யாள் எனும் பெயரும் ஒட்டிக்கொண்டது” என்று.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குஸைமா இப்னு பிஷ்ர் அவர்கள் இக்ரிமா (ரஹ்) அவர்களின் சபைக்கு வருகை புரிந்திருந்தார்கள்.
எனினும், முன்பு போல் அவரின் முகத்தோற்றத்தில்
பொலிவு இல்லாததை உணர்ந்த இக்ரிமா அவர்கள் இடையிடையே அவரை கவனித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஏனெனில், அருகில் இருக்கிற நகர்ப்புறத்தில்
இருந்து குழு ஒன்று கவர்னரை சந்திக்க
வந்திருந்தது. அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் கவர்னர் இக்ரிமா அவர்கள்.
இக்ரிமாவும், குஸைமாவும் நெருங்கிய நண்பர்களும் கூட. நீண்ட நாட்களுக்குப் பின் நாம் வந்திருந்தும் கூட நம்மை அழைத்து நம்
நண்பர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என ஆதங்கப்பட்ட
குஸைமா அவர்கள் விருட்டென அங்கிருந்து சென்று விடுகின்றார்கள்.
அந்தக் குழுவோடு பேசி முடித்த பின் இக்ரிமா (ரஹ்) அவர்கள் குஸைமா (ரஹ்) அவர்களைத் தேடுகின்றார்கள். சபையின் எந்த பகுதியிலும்
அவரைக் காணவில்லை.
அதன் பின்னர், அவையில் அமர்ந்திருந்தவர்களிடம் “குஸைமாவின் முகத்தில் பழைய பொலிவைக் காணவில்லையே? அவருக்கு என்ன ஆயிற்று? வந்தார்,
திடீரென சென்று
விட்டாரே? என்று கேட்டார்கள்.
அப்போது தான் அவரின் முழு நிலைமையையும் இக்ரிமா
(ரஹ்) அவர்கள்
தெரிந்து கொண்டார்கள்.
فلما كان الليل عمد إلى أربعة آلاف دينار ؛ فجعلها في كيس واحد ، ثم أمر بإسراج دابته ،وخرج سِرّاً دون أن يُعلم أهله ، فركب ومعه غلام من غِلمانه يحمل المال ، ثم سار إلى بيت خزيمة ، حتى وقف ببابه ، فأخذ الكيسَ من الغلام ، ثم أبعده عن الباب حتى لا يرى و لا يسمع ماذا سيكون من فعله و كلامه .
ثم تقدم الفياض إلى الباب فدقَّه بنفسه ، فخرج إليه خزيمةُ ، و دون كلام ناوله كيس المال ، و قال له : أَصلِح بهذا شأنَكَ . فتناوله خزيمةُ ؛ فرآه ثقيلاً فوضعه ثم أمسك لجام دابّة الفياض ، وقال له : مَن أنت
அப்பொழுதே ஒரு முடிவொன்றையும் எடுத்தார்கள். இரவு நேரத்திற்காக காத்தும் இருந்தார்கள்.
இரவு நேரம் வந்ததும், தங்களின் மனைவியிடமும் கூட சொல்லாமல் இரகசியமாக தம் பணியாளரை அழைத்து பைத்துல் மாலில் இருந்து
நான்காயிரம் தீனாரை எடுத்து ஒரு பையில் போட்டு மாறு
வேடத்தில் குஸைமா (ரஹ்) அவர்களின் வீட்டை அடையாளம் கண்டு, தம் பணியாளரை திரும்பிச் செல்லுமாறு
பணித்து விட்டு, குஸைமா அவர்களின் வீட்டு வாசல் முன் நின்று கதவைத் தட்டினார்கள் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
சில மணித்துளிகளுக்குப் பின்னர் கதவு திறக்கப்பட்டு வாசலில் குஸைமா அவர்கள் வந்து நின்றார்கள்.
வந்து நின்றவரின் கரங்களில் நான்காயிரம் தீனார் நிரப்பப்பட்ட பையைக் கொடுத்து ”இதை வைத்து உங்களின் வாழ்க்கை நிலையை சரி
செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு விறுவிறுவென தங்கள்
குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து நடக்க எத்தனித்தார்கள்.
பை அதிகக் கனமாக இருப்பதை உணர்ந்த குஸைமா (ரஹ்) அவர்கள் “யார் நீங்கள்? என் வாழ்க்கைச் சூழல் எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று கேட்டார்கள்.
அதற்கு, ”நான் யார் என்று அறிமுகப்படுத்துவதற்காக இப்போது, இந்த நடுநிசி வேளையில் உம்மிடம் நான்
வரவில்லை” என்று கூறி நடக்க ஆரம்பித்தார்கள்.
மீண்டும், குஸைமா (ரஹ்) அவர்கள் “என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த
விரும்புகின்றீர்கள்? என் கஷ்டத்தை போக்க இவ்வளவு பெரிய சிரமம் எடுத்துக் கொள்கின்றீர்கள்? நீங்கள் யார் என்று சொன்னால் தான் என்
மனம் அமைதி பெரும்” என்று சொன்னார்கள்.
அதற்கு, இக்ரிமா (ரஹ்) அவர்கள் أنا جابر عَثَرات الكرام “சங்கையான மனிதர் ஒருவரின் துயரை துடைக்க
வந்தவன்” என்று கூறி விட்டு அங்கிருந்து
புறப்பட்டார்கள் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
வீட்டிற்குள் தீனார் பையுடன் நுழைந்த குஸைமா (ரஹ்) அவர்கள் “என் ரப்பு என்னைக் கைவிட வில்லை, மனைவியே அல்லாஹ் நமக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும் இதோ மீண்டும் தந்து விட்டான்” என மகிழ்ச்சி பொங்க கூறிவிட்டு விளக்கை
பற்ற வை எவ்வளவு தீனார் இருக்கிறது என்று பார்ப்போம்? என்றார். அதற்கு குஸைமாவின் மனைவி விளக்கும் இல்லை, விளக்கை பற்ற வைக்க எண்ணையும் இல்லை என்றார்.
காலையில் விழித்து பார்த்துக் கொள்ளலாம் என்றார் அவரின் மனைவி. அதை ஆமோதித்தவராக உறங்கிப்போனார் குஸைமா (ரஹ்) அவர்கள்.
ورجع عكرمة الفيّاض إلى منزله ، فوجد امرأته قد
افتقدَتْه؛ وسألت عنه ؟ فأُخبِرَت بركوبه منفرداً ، فارتابت لذلك ؟!! فشقت جَيبَها
؛ولَطَمَت خدَّها ؛ و هي تظن به الظنون !!! ، فلمّا رآها على تلك الحال قال لها : مادَهاكِ يا بنتَ عم ؟ . قالت : غَدَرتَ يا عِكرمةُ بابنة عمّك
؟. قال : وما ذاك ؟قالت : أميرُ الجزيرة يخرج بعد هَدْأَةٍ من الليل مُنفرداً من
غلمانه ؛ في سِرٍّ منأهله !! والله ما يَخرُج إلا إلى زوجة أو سَرِيةٍ ؟
ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இக்ரிமா அவர்கள். வீட்டுக்கு வந்ததும் எதிர் பார்த்துக் காத்திருந்த இக்ரிமா அவர்களின்
மனைவி, அவர்களின் ஆடை நனைந்து இருந்ததையும், அவர்கள் மாறுவேடம் அணிந்திருந்ததையும் பார்த்து விட்டு,
எங்கே, இந்த இரவு நேரத்தில் அதுவும் தனியாக சென்று வருகின்றீர்கள்? நெஞ்சுப் பகுதியை சட்டையோடு பிடித்துக் கொண்டு இப்போதே நீங்கள் எனக்கு சொல்லியாக வேண்டும்? யார் வீட்டுக்கு இந்த நேரத்தில் சென்று
விட்டு வருகின்றீர்கள்? வேறு ஏதாவது பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றீர்களா? எனக்கு மோசம் செய்து விட்டீர்களே? என அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார் இக்ரிமா (ரஹ்) அவர்களின் மனைவி.
ஏன் இரவில் தனியாகச் சென்று வந்தால் இந்த நோக்கத்திற்காகத் தான் ஒரு ஆண் செல்வானா? நான் இந்த மாகாணத்தின் கவர்னர், நான் அலுவலக வேலை நிமித்தமாக வெளியே ஒரு இடத்திற்கு சென்று வந்தேன்
என்று கூறினார்கள்.
ஆனாலும், எவ்வளவோ சமாளித்தும் அவரின் மனைவியை
சமாதானம் செய்ய முடியவில்லை. எனக்கு நீங்கள் எங்கு
சென்று வந்தீர்கள் என்ற உண்மையைச் சொல்லும்
வரை உங்களை
விடமாட்டேன் என மனைவி வற்புறுத்தவே வேறு வழியின்றி நடந்த சம்பவங்களை விவரித்துக் கூறிவிட்டு, அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக்
கூறுகின்றேன் இதை எப்போதும், எந்த தருணத்திலும், எவரிடமும் கூறக்கூடாது என்று உறுதி வாங்கினார்கள் இக்ரிமா அவர்கள். அவ்வாறே
இரகசியம் பேணுவதாக அவர்களின் மனைவி உறுதி
கூறினார்கள்.
فلما أصبح خُزيمة صالح الغرماء – دفع ديونه - ، وأصلح من حاله ، ثم
تجهز لزيارة الخليفة سليمان بن عبد الملك بفلسطين – و كانت عسقلان بفلسطين مصيف
الخلفاء - ، فسافر إليه ، و لما وقف ببابه دخل الحاجب فأخبره بوصول خزيمة بن بِشر
للقائه – و كان الخليفة سليمان بن عبد الملك يعرف خزيمة و مروءته و كرمه - ،
فأذنله بالدخول ، فلما دخل عليه وسلم بالخلافة ، قال له الخليفة
يا
خزيمة ؛ ما أبطأك عنا ؟ قال : سوء الحال . قال: فما منعك من النّهضة إلينا ؟ -
لماذا لم تأت إلينا لنسعفك ؟
قال خزيمة : ضعفي يا أمير المؤمنين . فقال
الخليفة : ففيمَ نهضت ؟ - كيف فُرِّج عنك فاستطعت أن تأتي إلينا ؟ - قال : لم أعلم
- يا أمير المؤمنين - بعد هَدأَة الليل إلا و رَجُلٌ طرق بابي ، فكان منه كَيت
وكَيتَ ... وأخبره القصة من أولها إلى آخرها . فقال له الخليفة : هل تعرفه ؟ قال
خزيمة : ما عرفته يا أمير المؤمنين ، وذلك لأنه كان متنكِّراً ، وما سمعت منه إلا
" أنا جابر عثرات الكرام " . فقال الخليفة متلهفاً إلى معرفته : لو
عَرَفناه لأعنَّاهُ على مروءته .
காலைப்பொழுதும் மலர்ந்தது. பையைப் பிரித்துப் பார்த்த குஸைமா பூரித்துப் போனார். வாங்கிய கடன்களை அடைத்தார். இயல்பு வாழ்க்கைக்குத்
திரும்பினார்.
சில நாட்கள் கழித்து ஃபலஸ்தீனில் அஸ்கலான் எனும் ஊரில் இருக்கும் கலீஃபா ஸுலைமான் (ரஹ்) அவர்களைச் சந்திக்க ஃபலஸ்தீன்
பயணமானார்.
ஃபலஸ்தீன் வந்த குஸைமா (ரஹ்) அவர்கள் கலீஃபாவைச் சந்திக்க தாம் வந்திருப்பதாக வாயிற்காப்போனிடம் சொல்ல, உள்ளே வந்து இப்படியொருவர் உங்களைச்
சந்திக்க
வந்திருக்கின்றார் உள்ளே வரச் சொல்லவா என வாயிற்காப்போன் அனுமதி கேட்க இறுதியாக, அனுமதி கிடைத்து உள்ளே சென்று கலீஃபாவைச் சந்தித்தார் குஸைமா அவர்கள்.
கலீஃபா பரிவோடு நலம் விசாரித்து விட்டு, நீண்ட காலமாக எம்மை சந்திக்க ஏன் வரவில்லை? என்று வினவினார்.
அதற்கு, குஸைமா தான் பட்ட கஷ்டங்களைக் கூறினார். அதற்கு, கலீஃபா எனக்கு ஒரு தகவல் அனுப்பி
இருந்தாலோ, என்னிடம் நீர் வந்திருந்தாலோ நான் உமக்கு தேவையான உதவிகளை செய்து இருப்பேனே!” என்று கூறி விட்டு, இப்போது எப்படி நிலைமை சரியானதா?
ஏதேனும் உதவி
செய்யட்டுமா? என்று கேட்டார்.
குஸைமா (ரஹ்) அவர்கள் “அதற்கு அவசியம் இல்லை கலீஃபா அவர்களே! இப்படி, இப்படி இரவில் நடந்தது என நடந்த
சம்பவத்தைக் கூறினார்கள்.
அதற்கு, கலீஃபா உமக்கு உதவியவர் யார் என உமக்கு தெரியுமா? என்று கேட்க, இல்லை,
أنا
جابر عَثَرات الكرام “சங்கையான மனிதர் ஒருவரின் துயரை துடைக்க வந்தவன்” என்று மட்டும் என்னிடம் கூறினார்” என்றார்.
அப்படியானால், அவரை நீர் அடையாளம் கண்டு கொண்டீர் என்றால் எம்மிடம் அறிவியும் நாம் அவரைக் கண்ணியப்படுத்துவோம் என்று கலீஃபா
கூறினார்கள்.
கலீஃபாவைச் சந்திக்கச் சென்ற குஸைமா ஜசீராவுக்கு வருகை தருகிற போது ஒரு ஓலையோடு வந்தார். அந்த ஓலை இது தான் கலீஃபா
எழுதியனுப்பிய கடிதம் “இன்று முதல் குஸைமா ஜஸீரா மாகாணத்தின்
கவர்னராக இருப்பார். கவர்னராக இருந்த இக்ரிமா பதி நீக்கம் செய்யப்படுகின்றார்” என்று.
இக்ரிமா (ரஹ்) கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஸைமா கவர்னராக ஆக்கப்படுகிறார்.
கவர்னர் பதவியில் அமர்ந்ததும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் பொறுப்பேற்று இருக்கும் போது மாகாணத்தின் பைத்துல் மாலில் முறைகேடுகள்
நடந்திருப்பதாகக் குற்றம் சுமத்தி கடுமையான விசாரணைக்கு
உத்தரவிட்டார்.
பைத்துல்மாலின் கணக்குப் பதிவேடு சரிபார்க்கப்படுகின்றது. பக்கம் பக்கமாக ஆய்வு செய்த விசாரணைக் குழு ஓரிடத்தைக் கண்டு
அதிர்ச்சியடைகின்றது.
பைத்துல்மாலில் இருந்து உதவி பெற்றவர்கள், கொடுக்கப்பட்ட பணம் வரிசையாக எழுதப்பட்டு இருந்தது. ஆனால்,
அந்த இடத்தில்
நான்காயிரம் தீனார் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், உதவி பெற்ற அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
விசாரணைக்குழு கவர்னரின் முன்பாக இக்ரிமா (ரஹ்) அவர்களை ஆஜர்படுத்தியது.
கவர்னர் குஸைமா (ரஹ்) யாருக்குக் கொடுத்தீர்கள் என்று கேட்கின்றார். அது இரகசியம் அதை என்னால் சொல்ல முடியாது என்று கூறி
மறுத்து விட்டார் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
கொடுத்தவர் இப்போது குற்றவாளியாக நிற்கின்றார். யாருக்கு கொடுக்கப்பட்டதோ அவர் இப்போது கவர்னராக இருக்கின்றார். என்ன செய்வது?
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றார் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
இடையிடையே யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று கேட்டு அடி, உதை, சித்ரவதைகள் சிறையிலே வழங்குமாறு கலீஃபா
உத்தரவிட்டிருந்தார்.
சிறைத்தண்டனையோடு, சித்ரவதைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார் இக்ரிமா (ரஹ்) அவர்கள்.
وبلغ إلى زوجته ما نزل بعكرمة من الضُّرِّ والأذى ،فجزعت عليه ، واغتمَّت لذلك ، ثم دعت مولاةً – خادمة - لها ذات عقل ، وقالت لها : امضي الساعةََ إلى باب هذا الأمير ؛ فقولي : عندي نصيحة . فإذا طُلِبَت منك ؛ فقولي : لا أقولها إلا للأمير خزيمة بن بشر . فإذا دخلتِ عليه فسَلِيه أن يُخلِيك – أن يكون حديثك معه على انفراد بينكما - ، فإذا فعل ؛ فقولي له : ما كان هذا جزاءَ جابر عثرات الكرام منك ! كافأْتَه بالحبس والضيق والحديد ؟ .
فذهبت المولاة إلى بابقصر الأمير ، و فعلت ما قالته لها سيدتها ، فلما سمع خزيمة دعاها ؛ فاستمع منها كلامها ، و إذا به يقول : وا سوأتاه ! وإنه لهُوَ جابر عثرات الكرام ؟ قالت : نعم .
சிறையில் தன் கணவர் சித்ரவதைகளைச் சந்திக்கின்றார் என்று கேள்வி பட்டதும் துடிதுடித்துப் போனார் இக்ரிமா (ரஹ்) அவர்களின் மனைவி.
ஆவேசப்படாமல், அறிவார்ந்த முறையில் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
தன்னிடம் வேலை செய்த பணிப்பெண்ணை அழைத்து, “நீ கவர்னரின் வீட்டுக்குச் சென்று அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் சென்று, நான் கவர்னரிடம் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கின்றேன்” என்று சொல். அப்போது, அவர்கள் என்ன செய்தி என்று உன்னிடம் கேட்பார்கள்.
அதற்கு, நீ நான் கவர்னரை தனியாகச் சந்தித்து பேச வேண்டும் என்று சொல், அதற்கும் அனுமதி கிடைத்தது என்று
சொன்னால் கவர்னரிடம் சென்று உங்களுக்கு உதவிய جابر عثرات الكرام க்கு இது தான் நீங்கள் செய்கிற பிரதி உபகாரமா? சிறைத்தண்டனையும், சித்ரவதைகளையும் தான் பரிசாகக் கொடுப்பீர்களா? என்று சொல்லி விட்டு வந்து விடு என்றார்கள்.
அப்பணிப்பெண்ணும் அது போன்றே சென்றார்கள். அப்படியே சொல்லவும் செய்தார்கள்.
இதைக் கேட்ட குஸைமா (ரஹ்) அவர்கள் இந்த
செய்தியை யார் உனக்கு சொன்னது? என்று கேட்டார். அதற்கு, நடந்த சம்பவத்தை அப்பணிப்பெண் கூறியதும் குஸைமா மிகவும் வருத்தத்தோடு தவறு செய்து விட்டேனே என சப்தம் போட்டு கதறினார்.
فأمر خزيمة مباشرة بتجهيز راحلته ، فأُسرِجَت ، وبَعَث إلى رؤوس أهل البلد فجمعهم ، وأتى بهم إلى باب الحبس ففُتِح ، و دخل خُزيمةُ ومن معه ، فوجد عِكرمةَ في قاع الحبس متغيِّراً ؛ قد أضناه الضُّرّ ، فلما نظر إليه عِكرمة وإلى الناس أَحشَمَه ذلك و نكَّس رأسه – خجل من الناس و من الوالي ، و علم أنهم عرفوا أنه هو جابر عثرات الكرام - ، فأقبل خُزيمة حتى أكبَّ على رأس عكرمة ؛فقبَّله ، فرفع عكرمةُ رأسَه ؛ وقال : ما أعقبَ هذا منك ؟ - ما الذي جعلك تغير موقفك مني ؛ فأنت سجنتني و عذبتني ؛ والآن تقبل رأسي ؛ فما الذي سبب هذا التغيير منك في معاملتي ؟؟ - ، فقال الوالي خزيمة بن بشر : كريمُ فِعالك ؛ وسوء مكافأتي !!. فقال عكرمة : فغَفَرَ اللهُ لنا ولك . !! .
உடனடியாக, ஊரின் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு
சிறைக்கூடத்திற்குச் சென்றார் குஸைமா. இக்ரிமா (ரஹ்) அவர்களை
ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டவாறே அழுதார்.
அருகில் இருக்கிற கொல்லனை அழைத்து இக்ரிமா (ரஹ்) அவர்களை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை உடைத்தெறியச் சொன்னார்.
இதைப் பார்த்த இக்ரிமா (ரஹ்) நேற்று வரை எனக்கு சித்ரவதைகளையும், அடி உதைகளையும் வழங்க உத்தரவிட்ட நீர்
இப்போது முத்தமிடுவதும், சங்கிலியை உடைக்கச் சொல்வதும் முரணாக இருக்கின்றதே? என்ன விஷயம் என்று கேட்டார்கள்.
என் வாழ்க்கையில் வசந்தத்தை தந்தவர் நீர்! என் வறுமையை போக்கியவர் நீர்! என் முகத்தில் மலர்ச்சியை தந்தவர் நீர்! நான் இழந்த பெருமையை
மீட்டுத் தந்தவர் நீர்! இன்னுமா புரியவில்லை
உமக்கு! உம் மனைவியின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் நீர் தான் என்று சற்று முன்னர் தான் தெரிந்து கொண்டேன்.
எனக்கு உதவியும் செய்து விட்டு, நான் கொடுத்த தண்டனையையும் மனதார ஏற்றுக் கொண்டு ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் இப்படி இருந்து விட்டீரே
நீர்!
நியாயமாகப் பார்த்தால் நான் தான் இந்த தண்டனையை அனுபவித்து இருக்க வேண்டும் என்று கூறியவாறு,
சிறைக்குள்
சென்று சிறைக் கதவைத் தாழிட்டு என்னைச் சங்கிலியால் பிணையுங்கள் என்று
கத்தினார் குஸைமா (ரஹ்) அவர்கள்.
அல்லாஹ் உன்னையும், என்னையும் மன்னிக்க வேண்டும்! அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டுச் சொல்கின்றேன்! உம்மீது எனக்கு எவ்வித
குரோதமும் இல்லை,
நீர் தண்டனை
அனுபவிக்க ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ثم أمر خزيمة بالحمَّام فأُخلِي ، و دخلا جميعاً ،
ثم قام خزيمةُ فتولّى خدمة عكرمة بنفسه ، ثم خرجا ، فخلع عليه – أعطاه جميل
الهدايا و ثمينها - ، وجَمَّله ، وأعطاه مالاً كثيراً ، ثم سار معه إلى
داره ، واستأذنه في الاعتذار إلى ابنة عمه ، فأذن له ،فاعتذر لها ، و صار يذمّ نفسه
على ما فعله ،
சிறையில் இருந்து அழைத்து நேராக தம்முடைய வீட்டிற்கு இக்ரிமாவை கூட்டிப்போய் குளிக்க வைத்து, அழகிய ஆடைகளை அணிவித்து, நறுமணமும் பூசி, உணவு உண்ண அமர வைத்து இக்ரிமா (ரஹ்) அவர்களுக்குப் பரிமாறி பணிவிடையும்
செய்தார்கள். அழகிய சில அன்பளிப்புகள், பண முடிச்சுகளைக் கொடுத்து வீடு வரை கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள் குஸைமா (ரஹ்) அவர்கள்.
பின்னர், தன்னுடைய செயலுக்காக இக்ரிமா (ரஹ்) மற்றும் அவரின் மனைவிடம் மன்னிப்பும் கோரினார்.
ثم طلب من عكرمة أن يسافر معه إلى أمير المؤمنين سليمان بن عبد الملك - وهو يومئذ مقيم بالرملة من فلسطين - ، فوافق عكرمة .
و في اليوم الثاني توجه عكرمة الفياض مع خزيمة بن بشر إلى الخليفة سليمان بن عبد الملك ، فسارا جميعاً ، حتى قدما على سليمان بن عبد الملك ، فدخل الحاجبُ وأعلم الخليفة بقدوم خزيمة بن بشر ، فراعه ذلك وقال : والي الجزيرة يقدم بغير أمرنا ؛ مع قُرب العهد به ؟ ما هذا إلا لحادث عظيم !! . فلما دخل خزيمة ؛ قال له الخليفة قبل أن يسلِّم : ما وراءك يا خزيمة ؟قال : خيرٌ ؛ يا أمير المؤمنين . قال : فما الذي أقدمك ؟ قال : ظفرت بـ " جابر عثرات الكرام " ، فأحببت أن أَسرَّك به ، لما رأيت من تلهفك وشوقك إلى رؤيته . فقال الخليفة : ومن هو ؟ قال : هو عكرمة الفياض . فأذن الخليفة له بالدخول ، فدخل عكرمة، وسلّم على الخليفة بالخلافة ، فرحّب به ، وأدناه من مجلسه.
பின்னர் சில நாட்கள் கழித்து கலீஃபா ஸுலைமான் அவர்களைச் சந்திக்க இக்ரிமா அவர்களை அழைத்துச் சென்று,
முன்பு நான்
சொன்னேனே அந்த அவர் جابر عثرات الكرام வந்திருக்கின்றார் என அறிமுகப் படுத்தி வைத்து விட்டு, நடந்த சம்பவங்களைக் கூறினார்கள்.
கலீஃபா அவர்கள் தங்களின் அருகே அமரவைத்து ஆறுதல் கூறி, உமக்கு என்ன தேவையோ அத்தனையும் இதோ இந்த
பேப்பரில் எழுதித்தாருங்கள் என்று கூறி
பேப்பர் ஒன்றை
இக்ரிமா அவர்களிடம் நீட்டினார்.
இக்ரிமா மறுத்து விட்டார். கலீஃபா அவர்கள் உயர்தர ஆடை இரண்டை அன்பளிப்பாகக் கொடுத்து,
10000 தீனாரையும்
அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பினார்கள்.
மீண்டும் அல்ஜசீராவின் கவர்னராக ஆக்கி அனுப்பி வைத்தார்கள். ஆனால், இக்ரிமா (ரஹ்) குஸைமா (ரஹ்) கவர்னராக
தொடர விரும்பினால் அவரே தொடரட்டும்! அவர்
விரும்பி
விலகினால் நான் கவர்னராக தொடர்கின்றேன் என்றார்கள். பின்னர் இருவரும்
அல்ஜஸீராவுக்கு திரும்பி வந்தார்கள்.
அத்தோடு நின்று விடாமல், இக்ரிமா (ரஹ்) அவர்களையும், குஸைமா (ரஹ்) அவர்களையும் தங்களின் ஆட்சிக்காலத்தில் அல் ஜஸீரா, அர்மீனியா, அஜர்பைஜான் ஆகிய பகுதிகளுக்கு கவர்னராகவும் நியமித்தார்கள்.
( நூல்: அல் முஸ்தஜாத் மன்ஃபஅலாத்தில்
அஜ்வாத் லிஇமாமி அல் காழீ அத்துனூஃகி (ரஹ்) 1/6, ஃபீ தீபில் முதாக் மின் ஸமராத்தில் அவ்ராக் லிஇமாமி இப்னு
ஹுஜ்ஜதுல் ஹம்வீ (ரஹ்)... 195 – 196 )
நமது நட்பு வட்டத்தை அல்லாஹ்வும், அவன் தூதரும் கூறியிருக்கிற இலக்கணத்தின்
அடிப்படையில் அமைத்துக் கொள்வோம்.
அல்லாஹ் நேர்வழியில் அழைத்துச் செல்கிற, சுவனத்துப் பாதையில் பயணிக்க வைக்கிற தூய
நண்பர்களைத் தந்தருள்வானாக!
போலிகள் நிறைந்த இந்த உலகத்தில் தூய நட்பைத் தேர்ந்தெடுக்கும் நல்ல நஸீபைத்
தந்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
Masha Allah
ReplyDelete