ரமழான் சிந்தனை, தொடர் – 14
வாழ்நாள் எனும் வனப்பான அருட்கொடை!!!
13 –ஆவது நோன்பை
நிறைவு செய்து, 14 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல்
செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல் அன்பியா அத்தியாயத்தின் சிறு பகுதியும்
அல்ஹஜ்
அல்முஃமினூன் ஆகிய அத்தியாயங்கள்
நிறைவு செய்யப்பட்டு, அந்நூர் அத்தியாயத்தின் சில பகுதிகள் என ஓதப்பட்டிருக்கின்றது.
ஓதப்பட்ட பல இடங்களில்
மனித குலத்திற்கு தேவையான
அற்புதமான வழிகாட்டல்கள், இம்மை,
மறுமை சார்ந்த பல்வேறு
கட்டளைகள், என அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
பல்வேறு விஷயங்களை பேசுகின்றான்.
அல்முஃமினூன்
அத்தியாயத்தின் 99, மற்றும் 100 –ஆவது இறைவசனங்களில் என்பது அல்லாஹ் மனித
சமூகத்திற்கு வழங்கிய மகத்தான அருட்கொடை என்பதையும் பறைசாற்றும் விதமாக
அமைந்திருப்பதை உணர முடிகின்றது.
حَتَّى إِذَا جَاءَ
أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ صَالِحًا
فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا
அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால்,
“என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப
அனுப்புவாயாக! அங்கு சென்று நான் நற்செயல் புரிந்து வருகின்றேன்!” என்று கூறுவான். அப்போது, இவ்வாறு ஒரு போதும்
நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கும் வெற்று வார்த்தைகள் தாம்!” என்று கூறப்படும்”. (அல்குர்ஆன்: 23: 99)
மௌத்துக்கு முன்னால் ஸாலிஹான எல்லா அமல்களையும் செய்து விட வேண்டும். ஏனெனில், மௌத்தின் போது தான் அமல்கள்,
இபாதத்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும் என்பதையும், அப்போது அந்த ஆசைக்கு அல்லாஹ்விடம்
மதிப்பேதும் இருக்காது என்பதையும் மேற்கூறிய இறைவசனம் உணர்த்துகின்றது.
எனவே, அல்லாஹ் வழங்கியிருக்கிற
வாழ்நாள் எனும் அருட்கொடையை மிகச்சரியாக பயன்படுத்தி, உன்னதமான வாழ்க்கையை வாழவேண்டும்.
அப்படி வாழ்ந்தால்
மூன்று வகையான சோபனங்கள் அந்த மனிதனுக்கு உயிர் பிரியும் நேரத்தில் அல்லாஹ்வால்
வழங்கப்படும்.
முதல் சோபனம்…
إِنَّ الَّذِينَ قَالُوا
رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ
أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ
تُوعَدُونَ (30) نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي
الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا
تَدَّعُونَ (31) نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ (32)
“எவர்கள் அல்லாஹ் எங்கள் இறைவன் என்று கூறி
பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ, ( அவர்களின்
உடலை விட்டும் உயிர் பிரியும் போது ) திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள்.
மேலும், அவர்களிடம் அவ்வானவர்கள் கூறுவார்கள் “ ( உலகில் நீங்கள் விட்டுச் செல்கின்றவைகள் குறித்து ) அஞ்சாதீர்கள்!
( நாளை மறுமையில் என்ன நடக்குமோ என்று ) கவலைப்
படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும்
சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! நாங்கள் உங்களுக்கு
உற்ற துணையாக இருப்போம்! இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்!
இரண்டாவது சோபனம்….
فَأَمَّا إِنْ كَانَ مِنَ
الْمُقَرَّبِينَ (88) فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ (89) وَأَمَّا إِنْ
كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ (90) فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
“இறக்கின்ற
மனிதர் இறைவனுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால் அவருக்கு சுகமும்,
உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த
சுவனமும் இருக்கின்றன. மேலும், அவர்
வலப்பக்கத்தார்களுள் ஒருவராய் இருந்தால் “சாந்தி
உண்டாகட்டும்! உம் மீது!” நீர்
வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்! என்று கூறி
வரவேற்கப்படுவார்”. ( அல்குர்ஆன்:
56: 88 – 91 )
மூன்றாவது சோபனம்….
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27) ارْجِعِي إِلَى
رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً (28) فَادْخُلِي فِي عِبَادِي (29) وَادْخُلِي
جَنَّتِي (30)
“ஓ அமைதியடைந்த ஆன்மாவே! செல் உன் இறைவனின் பக்கம்! உன் நல்ல முடிவைக் கொண்டு
மகிழ்ந்த நிலையில், மேலும், உன்
இறைவனின் திருப்தியைப் பெற்ற நிலையில்! இணைந்து விடு,
என்னுடைய நல்லடியார்களுடன்! மேலும், புகுந்து விடு, என்னுடைய சுவனத்தில்!” ( அல்குர்ஆன்:
89: 27-30 )
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஆக உயர்ந்த
பெரும் அருட்கொடை வாழ்நாள் – ஆயுட்காலம்
ஆகும்.
வாழ்வதற்கு நாட்களும், ஆயுளும் இருந்தால் தானே அல்லாஹ்வின்
இன்னபிற அருட்கொடைகளை வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ
السِّتِّينَ إِلَى السَّبْعِينَ ، وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ
وحسنه الألباني في "صحيح الترمذي" .
وحسنه الألباني في "صحيح الترمذي" .
الترمذي (3550) وحسنه ، وابن
ماجة (4236)
மாநபி {ஸல்} அவர்கள் இந்த உம்மத்தின் ஆயுட்காலம்
குறித்து குறிப்பிடும் பொழுது “60 – அறுபதுக்கும் 70 – எழுபதுக்கும் இடையே தான் உள்ளது. எனினும் இந்த வரம்பைக் கடப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே!” என்று கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ
)
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதிப்பிட்ட முறையில் சராசரியாக
ஒருவர் 63 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்கிறார் என்று
வைத்துக் கொள்வோம். உண்மையில் அவர் வாழ்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவது வெறும் 1614 நாட்கள் மட்டுமே.
அந்த 1614 நாட்கள் என்பது மிகவும் இன்றியமையாத
ஒன்றாகும். அந்த நாட்கள் தான் அவரின் ஈருலக
வெற்றிகளை தீர்மானிக்கின்றது.
அது என்ன 1614 நாட்கள்?
வாருங்கள்! அறிந்து கொண்டு, வாய்ப்பு வழங்கப்பட்ட அந்த நாட்களுக்குள்
ஈருலக வெற்றிக்கான வாழ்க்கையை வாழ முயற்சிப்போம்!
63 வயது ஆயுட்காலம் கொண்ட ஒருவருக்கு, ஆயுளில் ஒரு வருடம் என்பது 365 நாட்களைக் கொண்டது. 63 –ஐ 365 நாட்களில் பெருக்கினால் வரும் விடை 22,995 நாட்கள் ஆகும். 63 × 365 = 22995 நாட்கள்.
இத்தோடு சேர்த்து சில விவரங்களை நாம் விளங்கிக் கொள்வோம்.
ஒரு நாளில் சராசரியாக நாம் ஏழு மணி நேரம் தூங்குகின்றோம் என்று
வைத்துக்கொண்டால் அதில் 18 வருடங்கள் கழிந்து விடுகின்றது. 18×
365 = 6570 நாட்கள் ஆகும்.
ஒரு குடும்பத்தலைவிக்கோ, ஒரு மாணவருக்கோ, ஒரு நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஊழியர்களுக்கோ தங்களின் பொறுப்புக்களை, வேலைகளை செய்ய ஒரு வாரத்தில் 50 – முதல்
60 மணி நேரம் வரை
ஆகின்றது. அதனடிப்படையில் பார்த்தால் அதில் 21 வருடங்கள் கழிந்து விடுகின்றது. 21× 365 = 7665 நாட்கள் ஆகும்.
தினந்தோரும் குளிப்பது, மூன்று நேரங்கள் உணவு உண்பது, காலை, மாலைக் கடன்கள் போவது, அலுவலகம், வீடு, மற்றும் தங்களின் சுய தேவை மற்றும்
வேலைகளுக்காக வெளியே செல்வது என்ற வகைகளுக்கு 4 முதல்
5 மணி நேரம்
தேவைப்படுகின்றது. அதனடிப்படையில் பார்த்தால் அதில் 12 வருடங்கள் கழிந்து விடுகின்றது. 12 × 365 = 4380 நாட்கள் ஆகும்.
பொழுதுபோக்கு அம்சங்களான வாட்ஸ்அப், இண்டெர்நெட், தொலைக்காட்சி, நியூஸ்பேப்பர், அரட்டை அடிப்பது, வம்புபேசுவது போன்ற விஷயங்களுக்காக
தினந்தோரும் 2 மணி நேரம் வரை செலவாகின்றது. அதனடிப்படையில் பார்த்தால் அதில் 5
¼ வருடங்கள்
கழிந்து விடுகின்றது. 5¼ × 365
= 1935½ நாட்கள் ஆகும்.
உடல் ரீதியான, மன ரீதியான ஆரோக்கியம் கிடைப்பதற்கு
உடற்பயிற்சிகள் செய்வதற்காக ஒரு வாரத்திற்கு 6 மணி நேரம் தேவைப்படுகின்றது. அந்த வகையில் பார்த்தால் அதில் 1½ வருடங்கள் கழிந்து விடுகின்றது. 1½ ×
365 = 830½ நாட்கள் ஆகும்.
6570 + 7665 + 4380 + 1935 ½ + 830
½ = 21381
நாட்கள் ஆகும். இப்போது இந்த நாட்களோடு 22995 நாட்களை கழித்தால் 1614
நாட்கள் மட்டும்
தான் மீதம் இருக்கின்றது. 22,995
– 21381 = 1614 நாட்கள் ஆகும்.
அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற,
அல்லாஹ்வின்
அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய,
புதிய ஒரு
இல்மைக் கற்றுக் கொள்ள, புதிய ஓர் அமலை அறிந்து கொள்ள, சமூகத்திற்கு தொண்டாற்ற, மனித நேயப்பணிகளில் ஈடுபட, மண்ணறை, மறுமையின் வாழ்க்கையில் வெற்றி பெற, ஆன்மீக வாழ்வின் துணை கொண்டு இறை நெருக்கம் பெற…..
இப்படியாக நாம்
செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது,
ஆனால், அதையெல்லாம் செய்து முடிப்பதற்கான அவகாசங்களை அல்லாஹ் நமக்கு குறைந்த அளவே ( அதாவது 1614
நாட்கள் தான் ) தந்திருக்கின்றான்.
காலம், நேரம் என்பது…
فقد أقسم الله به في مطالع سور عديدة بأجزاء منه مثل
الليل، والنهار، والفجر، والضحى، والعصر، كما في قوله تعالى: ( واللَّيْلِ إِذَا
يَغْشى والنَّهَارِ إِذَا تَجَلَّى ) ، ( وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ ) ، (
وَالضُّحَى وَاللَّيْلِ ) ، ( وَالْعَصْرِ إِنَّ الإِنْسَانَ لَفِيْ خُسْر ) .
ومعروف أن الله إذا أقسم بشيء من خلقه دلَّ ذلك على أهميته وعظمته، وليلفت الأنظار
إليه وينبه على جليل
மனித வாழ்க்கையில் கால நேரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை மனித சமூகம்
குறிப்பாக இளைஞர் சமூகம் உணரும் முகமாக அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில்
காலம், அதிகாலை நேரம், இரவு, பகல்,
முற்பகல் ஆகியவற்றின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்.
அல்லாஹ் ஒரு விஷயத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான் என்றால் அதன்
முக்கியத்துவத்தை உணர முன் வர வேண்டும்.
எனவே, வாழ்க்கையில் முன்னேற ஈடேற்றம் பெற கால நேரங்களை பயன் படுத்திக்
கொள்ளவேண்டும்.
வாழ்நாளில் ஒரு நாள் என்பது...
وقال ابن مسعود: “ما ندمت على شيء ندمي على يوم غربت
شمسه، نقص فيه أجلي، ولم يزدد فيه عملي”.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுவார்களாம்: “என் வாழ்வில் என்னை விட்டும் தப்பிப்போன
எந்த ஒரு விஷயத்திற்காகவும் துளி அளவு கூட நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால்,
ஒவ்வொரு நாள் சூரியன் மறைகிற போதும் ஒரேயொரு விஷயத்தைக் குறித்து
மாத்திரம் நான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன்.
”நேற்றை
விட அதிகப்படியான எந்தவொரு நற்செயலும் செய்யாமல் என் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து
விட்டதே!”... என்று.
قال الحسن البصري:
“ما من يوم يمرُّ على ابن آدم
إلا وهو يقول: يا ابن آدم، أنا يوم جديد، وعلى عملك شهيد، وإذا ذهبت عنك لم أرجع
إليك، فقدِّم ما شئت تجده بين يديك، وأخِّر ما شئت فلن يعود إليك أبداً”.
ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “மனிதனைக் கடந்து செல்கிற எந்த ஒரு நாளும்
இப்படிச் சொல்லாமல் கடந்து செல்வதில்லை.
ஓ ஆதமின் மகனே! நான் உனக்கான புத்தம் புதிய நாளாவேன். நீ என்னை என்ன
செய்யப் போகிறாய்? என்பதைக் காண நான் ஆவலாய் இருக்கின்றேன்.
நான் சென்று விட்டால் இனி ஒருபோதும் உன்னிடம் திரும்பி வரப்போவதில்லை.
நீ விரும்பினால் என்னை அழகிய முறையில் பயன்படுத்திக்கொள்! அதற்கான பலனை உன்
வாழ்வில் நீ பெற்றுக் கொள்வாய்!
நீ விரும்பினால் என்னை பயன்படுத்தாமல் நாளைக்கு செய்கிறேன் என்று தள்ளிப்போடு! ஆனால், ஒன்றை நீ நன்றாக விளங்கிக்கொள்! இன்றாகிய நான்
இப்போது உன்னை விட்டும் சென்று விட்டால் இனி எப்போதும் வரப்போவதில்லை.”
يقول أحد الصالحين: “أوقات العبد أربعة لا خامس لها:
النعمة، والبلية، والطاعة، والمعصية. و لله عليك في كل وقت منها سهم من العبودية
يقتضيه الحق منك بحكم الربوبية: فمن كان وقته الطاعة فسبيله شهود المنَّة من الله
عليه أن هداه لها ووفقه للقيام بها، ومن كان وقته النعمة فسبيله الشكر، ومن كان
وقته المعصية فسبيله التوبة والاستغفار، ومن كان وقته البلية فسبيله الرضا والصبر
வாழ்க்கை என்பது…
மேன்மக்களான ஸாலிஹீன்களில் ஒருவர் கூறுகின்றார்: “ஓர் அடியானின் கால நேரம் என்பது நான்கு
வகைகள் ஆகும். ஐந்தாவதாக ஒன்று கிடையாது.
1. ஓர் அடியான் தன் வாழ்வை அல்லாஹ் வழங்கியிருக்கிற அருட்கொடையாகக் கருதி
கழிப்பானேயானால் அல்லாஹ் அவன் வாழ்க்கையை நன்றி செலுத்துவோரின் பாதையில் வழி
நடத்துவான்.
அதன் விளைவாக அவன் வாழ்க்கை அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிறைந்ததாய் அமைந்து
விடுகின்றது.
لَئِنْ شَكَرْتُمْ
لَأَزِيدَنَّكُمْ
அல்லாஹ் கூறுவது போன்று: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு
மென்மேலும் வழங்குவேன்.”
(அல்குர்ஆன்: 14:7 )
2. ஓர் அடியான் தன் வாழ்வை அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட நிலையிலேயே
கழிப்பானேயானால் அல்லாஹ் பேருபகாரம் வழங்கப்பட்டோரின் பாதையில் வழி நடத்துவான்.
ஆம்! நேர்வழியிலும், நேர்வழியின்
மீது நிலைத்திருக்கிற பேருபகாரத்தை வழங்குவான்.
அதன் விளைவாக அவனது வாழ்க்கை ஈருலகத்திலும் சோபனத்திற்குரியதாய் அமைந்து
விடுகின்றது.
إِنَّ الَّذِينَ قَالُوا
رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ
أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ
تُوعَدُونَ () نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ
அல்லாஹ் கூறுவது போன்று: “எவர்கள் ”அல்லாஹ் தான் எங்கள் இறைவன்”
என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக,
அவர்கள் மீது {மரண நேரத்தின் போது} வானவர்கள் இறங்குகின்றனர். மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:
“அஞ்சாதீர்கள்!
கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு
வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்!
நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த
உலக வாழ்விலும் மறுமையிலும்!”
3. ஓர் அடியான் தன் வாழ்வை நல்லறங்களோடு அல்லாஹ்விற்கு மாறு செய்த நிலையிலும்
கழிக்கின்றானோ அல்லாஹ் அந்த அடியானுக்கு ஒரு வாய்ப்பாக பாவமன்னிப்பு எனும் பாதையை
திறந்து விடுவான்.
அதன் விளைவாக அவனது வாழ்க்கை அல்லாஹ்வின் கருணைக்கும், மன்னிப்புக்கும்
உரியதாய் அமைந்து விடுகின்றது.
وَآخَرُونَ اعْتَرَفُوا
بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَنْ
يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ()
அல்லாஹ் கூறுவது போன்று: “மேலும், தம் குற்றங்களை ஒப்புக்
கொண்டிருக்கும் வேறு சிலரும் அவர்களில் உள்ளனர். அவர்கள்
நற்செயலோடு தீய செயலையும் கலந்து விட்டிருக்கின்றார்கள். ஆயினும்,
அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும்! ஏனென்றால்,
திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை
புரிபவனும் ஆவான்.”
( அல்குர்ஆன்: 9:102 )
4. ஓர் அடியான் தன் வாழ்வை சோதனைகள் நிறைந்ததாய் கழிக்கின்றானோ அல்லாஹ் அந்த
அடியானுக்கு பொறுமையாளர்கள், சோதனைகளை அல்லாஹ்விற்காக
பொருந்திக் கொள்கின்றவர்கள் ஆகியோரின் பாதைகளில் பயணிக்க வைத்து விடுவான்.
அதன் விளைவாக அவனது வாழ்க்கை சோபனத்திற்குரியதாய், அல்லாஹ்வின் அருளுக்கு
சொந்தமானதாய் அமைந்து விடுகின்றது.
وَبَشِّرِ الصَّابِرِينَ () الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ
قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ () أُولَئِكَ عَلَيْهِمْ
صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ()
அல்லாஹ் கூறுவது போன்று: “(வாழ்க்கையில் சோதனையின் போது) பொறுமையை
மேற்கொள்கின்றவர்களுக்கு ( நபியே! ) நீர்
நற்செய்தி கூறுவீராக! அவர்கள் எத்தகையோர் எனில், தங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நிச்சயமாக
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம்”
என்று சொல்வார்கள்.
அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும்.
இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்.” ( அல்குர்ஆன்: 2:155
– 157 )
மஹ்ஷர் பெருவெளியில் இறை நினைவை விட்டு விலகி வாழ்ந்தவர்களின் நிலை..
و في الحديث
أن أربعة يستشهد عليهم بأربعة : ينادى بالأغنياء
و أهل الغبطة فيقال لهم : ما شغلكم عن عبادة الله ؟ فيقولون : أعطانا الله ملكاً و
غبطة شغلنا عن القيام بحقه في دار الدنيا فيقال لهم : من أعظم ملكاً : أنتم أم
سليمان ؟ فيقولون : بل سليمان . فيقال : ما شغله ذلك عن القيام بحق الله و الدأب
في ذكره . ثم يقال : أين أهل البلاء ؟ فيؤتى بهم أنواعاً فيقال لهم : أي شيء شغلكم
عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا الله في دار الدنيا بأنواع من الآفات و
العاهات شغلتنا عن ذكره و القيام بحقه فيقال لهم : من أشد بلاء : أنتم أم أيوب ؟
فيقولون بل أيوب .فيقال لهم : ما شغله ذلك عن حقنا و الدأب لذكرنا ثم ينادي : ابن
الشباب العطرة و المماليك فتقول الشباب : أعطانا الله جمالاً و حسناً فتناً به
فكنا مشغولين عن القيام بحقه و كذلك المماليك فيقولون : شغلنا رق العبودية في
الدنيا فيقال لهم : أنتم أكثر جمالاً أم يوسف عليه السلام . فلقد كان في رق
العبودية ما شغله ذلك عن القيام بحقنا و لا الدأب لذكرنا ثم ينادي : أين الفقراء ؟
فيؤتى بهم أنواعاً فيقال لهم : ما شغلكم عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا
الله في دار الدنيا بفقر شغلنا فيقال لهم : من أشد فقراً . . أنتم أم عيسى عليه
السلام ؟ ! فيقولون : بل عيسى فيقول لهم : ما شغله ذلك عن القيام بحقنا و الدأب
لذكرنا . . . فمن بلى بشيء من هذه الأربع فليذكر صاحبه . .
இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாளை மறுமை நாளில் மஹ்ஷர் பெருவெளியில் அல்லாஹ்வின் விசாரணை மன்றத்தில் நான்கு
வகை மனிதர்கள் விசாரணைக்கு கொண்டு வரப்படுவார்கள்.
முதல் வகையினர் செல்வந்தர்கள், இரண்டாம் வகையினர், கஷ்டங்களுக்கும் சோதனைக்கும் உள்ளானவர்கள், மூன்றாம் வகையினர் அடிமைகள் பணியாளர்கள். நான்காம் வகையினர் ஏழைகள். நான்கு வகையினருமே உலகில் இறை
வழிபாட்டிலிருந்து விலகி வாழ்ந்தவர்கள்.
முதலில் அல்லாஹ் செல்வந்தர்களை அழைப்பான். “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில்
என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்?
ஏன் இபாதத்
செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்!
நாங்கள் உலகில்
வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான செல்வத்தையும், பொருளாதாரத்தையும் தந்திருந்தாய், அதனைப் பன்மடங்காகப் பெருக்குவதிலும், அதைப் பாதுகாப்பதிலுமே எங்களின் கால நேரங்கள் ஓடி விட்டது. இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் நபி ஸுலைமான் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், செல்வம்,
பொருளாதாரம்
ஆகியவற்றையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் பெரும் செல்வந்தர்களா? ஸுலைமான்
(அலை) அவர்கள் பெரும் செல்வந்தரா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”உண்மையில் எங்களை விட நபி ஸுலைமான் (அலை) அவர்களே பெரும் செல்வமும் அதிகாரமும்
கொண்டவராவார்” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ்
“அப்படியானால்
அவர்களுக்கு அவ்வளவு செல்வமும், ஆட்சி,
அதிகாரம்
இருந்தும் அவர்கள் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ
வில்லையே!” என்று கூறுவான்.
பின்னர், சோதனைகளிலும், கஷ்டங்களிலும் உழன்றவர்களை அல்லாஹ் அழைப்பான்.
அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி
வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்!
நாங்கள் உலகில்
வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான கஷ்டங்களையும், சோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாய் கொடுத்தாய்.
அவைகளில்
இருந்து வெளியேருவதற்காக காலம் பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி அய்யூப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடிய நோய் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், அவர்கள் சமூக மக்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அடைந்தது பெரும் சோதனையா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் அடைந்தது பெரும் சோதனையா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”ரஹ்மானே!
உண்மையில்
எங்களை விட நபி அய்யூப் (அலை) அவர்களே பெரும் சோதனைக்கும்
துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள்” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ்
“அப்படியானால்
அவர்கள் அவ்வளவு சோதனையிலும், துன்பத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!”
எப்போதும் என்னை
நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?”
என்று கூறுவான்.
பின்னர், அல்லாஹ் அடிமைகள் மற்றும் பணியாளர்களை
அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி
வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்!
நாங்கள் உலகில்
வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அழகிய தோற்றத்தைத் தந்திருந்தாய்! அதைக் கொண்டு நாங்கள் பலவாறாக சோதிக்கப்பட்டோம்!
மேலும், அடிமைப் பணியாளர்களாக நாங்கள் இருந்தோம்! எங்கள் அழகின் சோதனையில் இருந்து
எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அதிகமான வேலைகள் செய்வதற்கும் காலம்
பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி யூஸுஃப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அழகையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும், அவர்கள் அடிமையாக இருந்து அரச குடும்பத்தார்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும்
நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அழகால் பெரும் சோதனையை அடைந்தீர்களா?
அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அழகால் அடைந்தது பெரும் சோதனையா?” நீங்கள் அடிமையாக இருந்து பட்ட கஷ்டம் பெரிதா?”
அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அடிமையாக இருந்து அடைந்த கஷ்டம்
பெரிதா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”ரஹ்மானே!
உண்மையில்
எங்களை விட எல்லா விதத்திலும் நபி யூஸுஃப் (அலை) அவர்களே அழகால் பெரும் சோதனைக்கும்
துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள், அடிமைத்தனத்தால் பெரும் கஷ்டத்திற்கும்
உள்ளானவர்கள்” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் “அப்படியானால் அவர்கள் அவ்வளவு
சோதனையிலும், கஷ்டத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!”
எப்போதும் என்னை
நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?”
என்று கூறுவான்.
பின்னர், அல்லாஹ் ஏழைகளை அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில்
என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்?
ஏன் இபாதத்
செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்!
நாங்கள் உலகில்
வாழும் காலத்தில் நீ எங்களுக்கு பசி, பட்டினி,
வறுமை
போன்றவற்றைத் தந்திருந்தாய்! வறுமை அகல,
பசி நீங்க, பட்டினி விரண்டோட இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி ஈஸா (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏழ்மை மற்றும் வறுமையை நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் ஏழ்மையால் பெரும் சிரமத்தை
அடைந்தீர்களா? அல்லது ஈஸா (அலை) அவர்கள் ஏழ்மையால் பெரும் சிரமம்
அடைந்தார்களா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”ரஹ்மானே!
உண்மையில்
எங்களை விட
எல்லா
விதத்திலும் நபி ஈஸா (அலை) அவர்களே ஏழ்மையால் பெரும் சோதனைக்கும்
துன்பத்திற்கும் ஆளானார்கள்” என்று பதில் கூறுவார்கள்.
இறுதியில், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குத்
தக்கவாறு தண்டனை வழங்குவான்” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அத் தத்கிரத்து ஃபீ அஹ்வாலில் மௌத்தா
வஉமூருல் ஆஃகிரா லி இமாமி குர்துபீ )
அல்லாஹ் நம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அவன் வழங்கிய வாழ்க்கையை வாழ்வதற்கு
நல்ல தௌஃபீக் செய்வானாக! ஆமீன்!
ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment