மன்னிப்பு கேட்போம்! மன்னிப்போம்!! மன்னிப்பு
பெறுவோம்!!!
அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ்வின்
மகத்தான மன்னிப்பும், கருணையும்
பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடும்
புனிதமிக்க ரமழான் மாதத்தின்
அருள் நிறைந்த இரண்டாவது
பத்தின் முதல் ஜும்ஆவில்
நாம் அமர்ந்திருக்கின்றோம்.
ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்து முதல்
பத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும், இரண்டாம் பத்தில் பாவ மன்னிப்பையும், மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும் வல்ல நாயனிடம் மன்றாடி கேட்க வேண்டுமென
நபி {ஸல்} அவர்கள் கூறுவார்கள்.
ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவனுடைய வாழ்வில்
அல்லாஹ்வின் மன்னிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஈருலகிலும் அல்லாஹ்வின் மன்னிப்பு அவனுக்கு கிடைக்க
வேண்டுமென அவன் ஆசிப்பதும், நேசிப்பதும் ஈமானுக்கு அடுத்த படி மிக
முக்கியமான ஒன்றாகும்.
சுருங்கச்சொன்னால் அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லையென்றால்
அவனுடைய ஒட்டு மொத்த ( உலக, மண்ணறை, மறுமை ) வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியே!
1.
மன்னிப்பு கேட்போம்! அல்லாஹ்விடம்…
அல்லாஹ்விடம் இருந்து மன்னிப்பு கிடைக்கவில்லையானால்….
عن أبي
هريرة رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم صعد المنبر ، فقال : "
آمين آمين آمين " . قيل : يا رسول الله ، إنك حين صعدت المنبر قلت : آمين آمين آمين . ،
قال : " إن جبريل أتاني ، فقال : من أدرك شهر رمضان ولم يغفر له فدخل النار
فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن أدرك أبويه أو أحدهما فلم يبرهما ،
فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن ذكرت عنده فلم يصل
عليك فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين "
حسن صحيح
رواه ابن خزيمة و ابن حبان في صحيحه و ابي يعلى الموصلي في مسنده و الطبراني في المعجم الأوسط و البيهقي في الشعب.
صححه الالباني رحمه الله في صحيح الترغيب و الترهيب (997) و الله أعلم
حسن صحيح
رواه ابن خزيمة و ابن حبان في صحيحه و ابي يعلى الموصلي في مسنده و الطبراني في المعجم الأوسط و البيهقي في الشعب.
صححه الالباني رحمه الله في صحيح الترغيب و الترهيب (997) و الله أعلم
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு முறை நபி
{ஸல்}
அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்”
கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே” என வினவப்பட்டது.
என்னிடம் வானவர்
ஜிப்ரயீல்
(அலை)
வருகை தந்தார். வந்தவர், “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர்
நரகம் நுழைவார்;
அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு,
”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே,
நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன்.
“யார் தன்னுடைய
பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் அவர்களுக்கு நன்மை
செய்யாமல் இறந்து விட்டாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு,
“ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே,
நான் இரண்டாவது முறையாக “ஆமீன்” கூறினேன்.
மேலும், “யாரிடம் தங்களது பெயர் கூறப்பட்டும் தங்களின் மீது ஸலவாத் சொல்லாத நிலையிலேயே
மரணித்து விடுகின்றாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு
அவரும் தூரமாகி விடட்டும்”
எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார்.
எனவே, நான் மூன்றாவது முறையாக “ஆமீன்”
கூறினேன்” என்று பதில் கூறினார்கள். ( நூல்:
இப்னு குஸைமா )
அல்லாஹ்விடம் இருந்து மன்னிப்பை கேட்டுப் பெறுவதில்
விரைவும், வேகமும் காட்ட வேண்டும், தாமதிக்கிற ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும் நமக்கு ஆபத்து
என்பதை பின்வரும் வசனம் நமக்கு உணர்த்துகின்றது.
மௌத்துக்கு
முன்னால் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்று
விடவேண்டும்....
ஏனெனில், மௌத்தின் போது அல்லாஹ்விடம் கேட்கப்படும் பாவமன்னிப்பிற்கு
மதிப்பு கிடையாது. பாவங்களுக்கு மன்னிப்பும் கிடையாது.
وَلَيْسَتِ التَّوْبَةُ
لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ
قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ
أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا ()
அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள்
பாவங்கள் புரிந்தவாறு வாழ்ந்து விட்டு மரணம் நெருங்கும் போது “நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்” என்று
கூறுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. மேலும், இறுதி
மூச்சு வரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது.
இத்தகையோருக்கு துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்”. ( அல்குர்ஆன்: 4: 18 )
மனித படைப்பாகிய
நாம் படைத்த ரப்புக்கு மாற்றமான பாவமான காரியங்களை பகிரங்கமாகவும், இரகசியமாகவும், அறிந்தும் அறியாமலும்,
சிறிதும் பெரிதுமாக வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே
இருக்கின்றோம்.
மனித சமூகமாகிய
நாம் செய்கிற பாவமான செயல்களுக்காக உடனடியாக அல்லாஹ் தண்டிக்க நாடிவிட்டால் இந்த
உலகத்தில் மனித சமூகம் என்கிற ஓர் படைப்பே இல்லாமல் போய் விடும்.
எனினும் அல்லாஹ்
தன்னுடைய மன்னிப்பு எனும் பெருங் கருணையின் துணை கொண்டு நம்மை அரவணைத்து, வாழும் நாட்களை நீட்டித்து, செய்த
பாவமான செயல்களில் இருந்து மீள்வதற்கான பாவமன்னிப்பு எனும் வாசலையும் திறந்து
வைத்து நம்மீது பேருபகாரம் செய்திருக்கின்றான்.
அல்லாஹ் தான்
மன்னிப்பாளன் என்பதை அல்குர்ஆனில் மூன்று விதமாக அடையாளப்படுத்துகின்றான்.
1. ஃகஃபூர் 2.
ஃகாஃபிர், 3. ஃகஃப்ஃபார்.
அல்குர்ஆனில்
ஏறத்தாழ 5 இடங்களில் ஃகஃப்ஃபார் - -
என்றும், ஒரு இடத்தில் ஃகாஃபிர் - - என்றும், 90 மேற்பட்ட
இடங்களில் ஃகஃபூர் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்
அடியார்கள் செய்கிற பாவத்தை மன்னிப்பதோடு, ஈருலகத்திலும்
மறைத்து அவர்கள் மீது அருள் புரிகின்றான்.
عن أنس بن مالك رضى الله عنه قال: سمعت رسول الله يقول: قال الله تعالى
(يا ابن آدَمَ إِنَّكَ مَا دَعَوتَنِى
وَرَجَوتَنِى غَفَرتُ لَكَ عَلى مَا كَانَ مِنكَ وَلاَ أُبَالِى
يَا ابنَ آدَمَ لَو بَلَغَت ذُنُوبُكَ عَنَانَ
السَّماءِ ثُمَّ استَغفَرتَنِى غَفَرتُ لَكَ
يَا ابنَ آدَمَ
إِنَّكَ لَو أَتَيتَنِى بِقُرَابِ الأَرضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِى لا تُشرِكُ
بِى شَيئاً لأَتَيتُكَ بقُرَابِها مَغفِرَةً). رواه الترمذى وقال: حديث حسن صحيح
அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ் சொன்னதாக மாநபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: “ஆதமுடைய மகனே! நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்! நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை மன்னித்து விடுகின்றேன்!
ஆதமின் மகனே! நீ வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு
வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நான் மன்னித்து விடுவேன்!
ஆதமின் மகனே! எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம்
வந்தாலும்,
நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான்
நெருங்கி வருவேன்”. ( நூல்:
திர்மிதீ )
وروي ان حبيب بن الحارث قال للنبي (صلى الله عليه
وآله وسلم): إني مقراف للذنوب، قال: (فتب إلى الله يا حبيب، فقال: إني أتوب ثم
أعود، فقال: كلما أذنبت فتب، حتى قال: عفو الله أكبر من ذنوبك يا حبيب).
ஹபீப் இப்னு
ஹாரிஸ் (ரலி)
என்கிற தோழர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து
“அல்லாஹ்வின் தூதரே! நான் பாவத்தால்
சூழப்பட்டிருக்கின்றேன்”
என்று கூறினார். ஹபீபே! அல்லாஹ்விடம் தவ்பாச் செய் என்று நபி {ஸல்} அவர்கள் பதில் கூற,
அல்லாஹ்வின் தூதரே! நான் தவ்பாச் செய்கிறேன், எனினும் மீண்டும் பாவம் செய்து விடுகின்றேனே” என்ன செய்ய அல்லாஹ்வின் தூதரே! என்று மீண்டும் வினவினார். அதற்கு,
மாநபி {ஸல்} அவர்கள்
“நீர் பாவம் செய்கிற போதெல்லாம் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து
விடு” என்று கூறினார்கள்.
மீண்டும் அவர்
இவ்வாறு கேட்கவே,
“ஹபீபே! உம்முடைய பாவத்தை விட
அல்லாஹ்வின் மன்னிப்பு மிகப் பெரியது” என்று பதிலளித்தார்கள். ( நூல்:
அல் கபாயிர் )
وفي الحديث الطويل لأنس أن الأعرابي قال يا رسول
الله من يلي حساب الخلق فقال الله تبارك وتعالى قال هو بنفسه قال نعم فتبسم
الأعرابي فقال صلى الله عليه و سلم مم ضحكت يا أعرابي فقال إن الكريم إذا قدر عفا
وإذا حاسب سامح فقال النبي صلى الله عليه و سلم صدق الأعربي ألا لا كريم أكرم من
الله تعالى هو أكرم الأكرمين
அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அண்ணலாரின் சபைக்கு ஒரு கிராமவாசி வந்தார். வந்தவர், அல்லாஹ்வின் தூதரே!
படைப்புகளின் கேள்வி கணக்கை யார் கேட்பார்? என்று வினவினார்.
அதற்கு, மாநபி {ஸல்}
அவர்கள் “அல்லாஹ் தான் கேட்பான்” என்று கூறினார்கள்.
அப்போது, அவர்
“அல்லாஹ் தானே, அவன் மட்டும் தானே கேள்வி
கேட்பான்?
என்று வினவினார். அதற்கு பெருமானார் {ஸல்}
அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, அந்தக் கிராமவாசி புன்னகைத்தார். அதைக் கண்ட பெருமானார் {ஸல்}
அவர்கள் “எதற்காக நீர் சிரித்தீர்?” என வினவினார்கள்.
அப்போது, அந்தக்கிராமவாசி
“கண்ணியமானவன் என்றால் யார் தெரியுமா? அனைத்துக்கும் சக்தியிருந்தும் மன்னிப்பான்! விசாரணை மேற்கொண்டால் கண்டும் காணாமல் நடந்து கொள்வான்” என்றார்.
அதற்கு, நபி
{ஸல்}
அவர்கள் “கிராமவாசி உண்மையே
சொன்னார்!
அல்லாஹ்வை விட கண்ணியமானவன் எவருமில்லை. அவன் கண்ணியமானவர்களில் எல்லாம் மிகவும் கண்ணியமானவன்” என்று பதில் கூறினார்கள்.
( நூல்: அல்கபாயிர் )
ஆச்சர்யமூட்டும் ( தவ்பா ) பாவமன்னிப்பு….
و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا
يَحْيَى بْنُ يَعْلَى وَهُوَ ابْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ عَنْ غَيْلَانَ
وَهُوَ ابْنُ جَامِعٍ الْمُحَارِبِيُّ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ
سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ
جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكَ ارْجِعْ
فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ
فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا
كَانَتْ الرَّابِعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ فِيمَ أُطَهِّرُكَ فَقَالَ مِنْ
الزِّنَى فَسَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبِهِ
جُنُونٌ فَأُخْبِرَ أَنَّهُ لَيْسَ بِمَجْنُونٍ فَقَالَ أَشَرِبَ خَمْرًا فَقَامَ
رَجُلٌ فَاسْتَنْكَهَهُ فَلَمْ يَجِدْ مِنْهُ رِيحَ خَمْرٍ قَالَ فَقَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَزَنَيْتَ فَقَالَ نَعَمْ فَأَمَرَ
بِهِ فَرُجِمَ فَكَانَ النَّاسُ فِيهِ فِرْقَتَيْنِ قَائِلٌ يَقُولُ لَقَدْ هَلَكَ
لَقَدْ أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ وَقَائِلٌ يَقُولُ مَا تَوْبَةٌ أَفْضَلَ مِنْ
تَوْبَةِ مَاعِزٍ أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ فِي يَدِهِ ثُمَّ قَالَ اقْتُلْنِي بِالْحِجَارَةِ
قَالَ فَلَبِثُوا بِذَلِكَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جُلُوسٌ فَسَلَّمَ ثُمَّ جَلَسَ فَقَالَ
اسْتَغْفِرُوا لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالُوا غَفَرَ اللَّهُ لِمَاعِزِ
بْنِ مَالِكٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ قَالَ ثُمَّ
جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنْ الْأَزْدِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ
طَهِّرْنِي فَقَالَ وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ
فَقَالَتْ أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ
مَالِكٍ قَالَ وَمَا ذَاكِ قَالَتْ إِنَّهَا حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَ آنْتِ
قَالَتْ نَعَمْ فَقَالَ لَهَا حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ قَالَ فَكَفَلَهَا
رَجُلٌ مِنْ الْأَنْصَارِ حَتَّى وَضَعَتْ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ وَضَعَتْ الْغَامِدِيَّةُ فَقَالَ إِذًا
لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ فَقَامَ
رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ
فَرَجَمَهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا
فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ
فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ
مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ..
விபச்சாரக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டால் அது தண்டனை வழங்கும் அளவிற்கான
குற்றம் என்பதாக அல்லாஹ் இறைவசனத்தை இறக்கியருளியிருந்த தருணம் அது…
புரைதா, இப்னு அப்பாஸ், அனஸ் ( ரலி – அன்ஹும்
) அறிவிக்கின்றார்கள்:
பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மாஇஸ் இப்னு மாலிக் என்கிற நபித்தோழர் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டும் தம் முகத்தைத்
திருப்பிக் கொண்டார்கள்.
மீண்டும் வந்து முறையிடவே, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு கூறி மாயிஸ் (ரலி) அவர்களை நபி {ஸல்}
அனுப்பி வைத்தார்கள்.
இவ்வாறு, அவர் மூன்று முறை அண்ணலாரின் சபைக்கு வருவதும், செல்வதுமாக
இருந்தார்.
நான்காவது முறையாக முன்பு போல் அவர் அவ்வாறு கூறவே அவரை நோக்கி அண்ணலார் {ஸல்} அவர்கள் ”(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ
கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!”
என்றார்கள்.
ஆனால், அவரோ முன்பு போலவே தாம் விபச்சாரம்
புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ”உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார்.
ஆனால், அவரோ மீண்டும் முன்பு போலவே தாம்
விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, அருகில் இருந்த நபித்தோழர்களிடம்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “இவர் மது அருந்தி இருக்கிறாரா?” என்று
பரிசோதித்துப் பாருங்கள்” என்றார்கள்.
பரிசோதித்த நபித்தோழர்கள் “இல்லை, இவர் மது அருந்த வில்லை” என்று பதில் கூறினார்கள்.
இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் ”அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர்,
”ஆம்'”
என்று கூறினார்.
அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
பெருநாள் தொழுகைத் திடல் அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அப்போது,
நபி (ஸல்) அவர்கள் ”அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்”.
மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக
பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் அல்ல.
மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.
மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.
அங்கே, மாயிஸ் (ரலி) குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை கேட்டபோது, மாயிஸ் (ரலி) அவர்களின் இறையச்சத்தை அறிந்த நபியவர்கள்,
”போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்” என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.
”போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்” என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.
பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம்; அல்லது ஆசையோடு
பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ் (ரலி) அவர்களை திருப்பி அனுப்ப
முயற்சிக்கின்றார்கள்.
ஆனாலும், மாயிஸ் (ரலி) அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்.
தான் செய்த பாவத்தை தம்மைத் தவிர யாருமே பார்க்காத போதும், படைத்த இறைவன்
பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சத்தால் உந்தப்பட்டு, வேதனை மிகுந்த தண்டனையை ஏற்கும்
அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ் (ரலி) அவர்களை பொருந்திக் கொள்வானாக!
இந்த தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில்
அண்ணலாரையும்,
நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில்
நடந்தேறியது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின்
கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.
வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி
விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன்
வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது,
அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு
மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில்
நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு “நீயா
அது?” என்று கேட்டார்கள். அதற்கு
அப்பெண்மணி ”ஆம்” என்றார்.
அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை
சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து
“இது நான் பெற்றெடுத்த குழந்தை” என்று
கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று
அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட
பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து
விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து
விட்டது” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை
அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.
அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.
எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.
பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு
மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.
அப்போது,
காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது
எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின்
முகத்தில் தெரித்தது.
அப்போது,
காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.
இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன்
வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத்
தேடிக்கொண்டார்.
பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக்
கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.” என்று
கூறினார்கள்.
பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை
பணித்தார்கள்.
அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி
நல்லடக்கமும் செய்யப்பட்டார்.
( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )
தன் கண் முன்னால் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட, தான் செய்த விபச்சார
குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றுமாறு
ஒரு பெண்மணி பெருமானார் {ஸல்} அவர்களின்
திருச்சமூகத்தின் முன் வந்து நின்றார்கள் என்றால் அந்தப் பெண்மணியை அங்கு வந்து
நிறுத்தியது தக்வா எனும் இறையச்சம் தான்.
அவர் செய்த குற்றத்தை அவரைத் தவிர வேறெவரும் பார்க்கவில்லை எனும் போது, தனக்கு முன்பாக
ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட அந்த தண்டனையை வழிய
வந்து ஏற்றுக் கொண்டார் எனில் அவரின் இறையச்சத்தை எந்த உரைகல் வைத்து
உரசிப்பார்ப்பது.
இந்த இரு செய்திகளையும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் ஷரீஃபில்
கிதாபுல் ஹுதூத் பாடத்தில், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா எனும்
பாபில் ஒரே ஹதீஸாகப் பதிவு செய்திருப்பார்கள்.
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நபி {ஸல்} அவர்கள் அப்பெண்மணியிடம் “ஆச்சர்யத்தோடு “நீயா அது?” என்று கேட்ட அந்த அமைப்பும், அதற்கு அப்பெண்மணி ”ஆம்” என்று
கூறிய விதமும்” மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களோடு தவறான
உறவில் ஈடுபட்ட பெண் இவர் தான்” என்று கூறுகின்றார்கள்.
2.
மன்னிப்போம்! சக அடியார்களை…
ஒரு மனிதனை
சமுதாயத்தின் முன்னே மிக உயர்ந்தவனாய் அடையாளப் படுத்துகின்ற ஓர் ஒப்பற்ற பண்பாடு
இருக்குமேயானால் அது பழிவாங்குவதற்கு எல்லா வகையிலும் வழியும், சக்தியும் இருந்து பெருந்தன்மையோடு மன்னித்து விடும் அந்தப் பண்பு தான்.
குடும்ப உறவுகளில்
காணப்படும் விரிசல்,
அண்டை அயலருடனான நெருக்கத்தில் பிளவு, சமூக மக்களுடனான பழக்க வழக்கங்களில் நெருடல், இரத்த உறவுகளில் ஏற்படும் இழப்பு, நட்பு வட்டாரத்தில்
உருவாகும் பிணக்கு,
பொது வாழ்வில் ஏற்படும் சரிவு என, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் அடிப்படை
அம்சமாக இருப்பது,
அவனிடம் இல்லாமல் போன மன்னிக்கும் மனப்பக்குவம் தான்.
எப்போது மனிதன்
இந்த உயரிய பண்பாட்டை இழந்து விடுகின்றானோ, அப்போதே அவன் வாழ்வின்
பெரும்பாலான நல்லவர்களையும், நலவுகளையும் இழந்து
விடுவான்.
وَلَا يَأْتَلِ أُولُو
الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ
وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا
تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (22)
அல்லாஹ்
கூறுகின்றான்:
“உங்களிடையே பண்பு நலன்களும், வசதி வாய்ப்புகளும் உடையவர்கள், “தங்களுடைய
உறவினர்கள்,
வறியவர்கள், மற்றும் அல்லாஹ்வின்
பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்ய மாட்டோம்” என்று சத்தியம் செய்ய வேண்டாம்.
அவர்களை மன்னித்து
விட வேண்டும்;
பொறுத்துக் கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா? மேலும்,
அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும்
இருக்கின்றான்.”
وهذه الآية نزلت في
الصدِّيق، حين حلف ألا ينفع مِسْطَح بن أثاثة بنافعة بعدما قال في عائشة ما قال،
كما تقدم في الحديث. فلما أنزل الله براءةَ أم المؤمنين عائشة، وطابت النفوس
المؤمنة واستقرت، وتاب الله على مَن كان تكلم من المؤمنين في ذلك، وأقيم الحد على
مَن أقيم عليه -شَرَع تبارك وتعالى، وله الفضل والمنة، يعطفُ الصدِّيق على
قريبه ونسيبه، وهو مِسْطَح بن أثاثة، فإنه كان ابن خالة الصديق، وكان مسكينًا لا
مال له إلا ما ينفق عليه أبو بكر، رضي الله عنه، وكان من المهاجرين في سبيل الله،
وقد وَلَق وَلْقَة تاب الله عليه منها، وضُرب
الحد عليها. وكان الصديق، رضي الله عنه، معروفًا بالمعروف، له الفضل والأيادي على
الأقارب والأجانب. فلما نزلت هذه الآية إلى قوله: { أَلا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ
اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ } أي: فإن الجزاء من جنس العمل، فكما
تغفر عن المذنب إليك نغفر لك، وكما تصفح نصفح عنك. فعند ذلك قال
الصديق: بلى، والله إنا نحب -يا ربنا -أن تغفر لنا. ثم رَجَع إلى مسطح ما كان يصله
من النفقة، وقال: والله لا أنزعها منه أبدًا، في مقابلة ما كان قال: والله
لا أنفعه بنافعة أبدًا، فلهذا كان الصدّيق هو الصديق [رضي الله عنه وعن
بنته].
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் மீது வீசப்பட்ட அவதூறான குற்றச்சாட்டை அள்ளி
வீசியவர்களில் அப்பாவியான சில முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். மேலும்,
அதனைத் தாமும் பரப்பிக் கொண்டுமிருந்தனர்.
அபூபக்ர் ஸித்தீக் (ரலி)
அவர்களின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான மிஸ்தஹ் இப்னு
உஸாஸா (ரலி)
அவர்களும் இந்த விவகாரத்தில் பங்கு கொண்டவர்களில் ஒருவர்.
மிஸ்தஹ் இப்னு
உஸாஸா (ரலி)
அவர்கள் மிகவும் ஏழ்மையானவர். அபூபக்ர்
(ரலி)
அவர்கள் தான் மிஸ்தஹ் (ரலி) அவர்களின் குடும்ப செலவினங்களுக்கு பணம் கொடுத்து வந்தார்கள்.
இதை அறிந்து கொண்ட
அபூபக்ர்
(ரலி)
அவர்கள் ”அல்லாஹ்வின் மீது
சத்தியமாக!
இனி மேல் நான் மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு உதவி,
உபகாரம் செய்ய மாட்டேன்!” என்று கூறினார்கள்.
உடனடியாக, மிஸ்தஹ்
(ரலி)
அவர்கள், அபூபக்ர் (ரலி)
அவர்களைச் சந்தித்து தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக்
கோரினார்.
ஆனால், அபூபக்ர் (ரலி)
அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டார்கள்.
அல்லாஹ் இது
குறித்து உடனடியாக மேற்கூறிய இறைவசனத்தை இறக்கியருளினான்.
இந்த இறைவசனம்
இறக்கப்பட்டதும் அண்ணலாரின் திருச்சபைக்கு ஓடோடி வந்த அபூபக்ர் (ரலி)
அவர்கள் “அல்லாஹ்வின் மீது
சத்தியமாக!
இறைவா! உன் மன்னிப்பை நான்
விரும்புகின்றேன்!
அவரின் மீதான வெறுப்பை அகற்றி, அவரை நான் மன்னித்து விட்டேன்.”
உடனடியாக, மிஸ்தஹை அழைத்துச் சொன்னார்களாம் “இனி ஒரு போதும் நான்
உனக்கு வழங்கி வந்த செலவினங்களை நிறுத்த மாட்டேன்” என்று.
( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்
)
மன்னிக்கும்
மனோபாவம் பெற்றிருப்பவருக்கு அல்லாஹ் பல்வேறு வகையான நற்பேறுகளை வழங்கி
கௌரவிக்கின்றான்.
1.
இறையச்சம் உள்ளவராக அல்லாஹ் ஆக்குகின்றான்..
{
وَأَن تَعْفُواْ أَقْرَبُ لِلتَّقْوَى وَلاَ تَنسَوُاْ الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ
اللّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ } [ البقرة237 ] .
அல்லாஹ்
கூறுகின்றான்:
“மேலும், நீங்கள் மன்னித்து (விட்டுக் கொடுத்து)
வாழ்வது தான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். மேலும்,
நீங்கள் உங்களுக்கிடையில் தயாள குணத்துடன் நடந்து கொள்ள
மறந்து விட வேண்டாம்!
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் உற்று
நோக்கியவனாக இருக்கின்றான்.” (
அல்குர்ஆன்: 2:237 )
2. சொர்க்கத்திற்குரியவர்களாக ஆக்குகின்றான்.
{
وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ
وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ * الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء
وَالضَّرَّاء وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ
يُحِبُّ الْمُحْسِنِينَ } [ آل عمران 133-134 ] .
அல்லாஹ்
கூறுகின்றான்:
“இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின்
பக்கம் (
செல்லும் பாதையில் ) விரைந்து
செல்லுங்கள்!
அது வானங்கள், பூமியின் அளவிற்கு
விசாலமானது.
மேலும், இறையச்சமுடையோருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள்
எத்தகையோர்கள் எனில்,
வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும்
செலவழிப்பார்கள்.
மேலும், அவர்கள் ரோஷத்தை அடக்கிக்
கொள்வார்கள்.
மேலும், மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர் பண்பு
கொண்டிருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
3. கண்ணியம் உள்ளவர்களாக வாழச் செய்கின்றான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي
الله عنه ، قال الله تعالى : عَنْ رَسُولِ اللّهِ صلى الله عليه وسلم قَالَ :
" مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ ، وَمَا زَادَ اللّهُ عَبْداً بِعَفْوٍ
إِلاَّ عِزًّا ، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلّهِ إِلاَّ رَفَعَهُ اللّهُ " [
أخرجه مسلم ] .
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “தர்மம் செய்பவரின்
பொருளில் அல்லாஹ் ஒரு போதும் குறைவை ஏற்படுத்துவதில்லை. பிறரின் குற்றங்களை மன்னித்து வாழ்பவரை அதிக கண்ணியத்தோடே தவிர வாழ வைக்காமல்
இருப்பதில்லை. பணிவோடு நடப்பவரை அல்லாஹ்
உயர்த்தாமல் இருப்பதில்லை.” ( நூல்:
முஸ்லிம், அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா
(ரலி)
)
4. அளப் பெரும் கூலி வழங்கி கௌரவப்படுத்துகின்றான்.
وَجَزَاءُ سَيِّئَةٍ
سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ
لَا يُحِبُّ الظَّالِمِينَ
அல்லாஹ் கூறுகின்றான்: “தீமைக்கு அது போன்ற தீமை தான் கூலியாகும். எனினும் எவர் மன்னித்து, சீர்படுத்திக் கொள்கின்றாரோ அவருக்கு கூலி வழங்குவது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. திண்ணமாக, அல்லாஹ் அநியாயம் செய்பவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.”
பெரும்பாலான இடங்களில் அல்லாஹ் மன்னிக்கும் மனோபாவத்தை குறிக்க “அல் அஃப்வு” - العفو என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான்.
அத்தோடு மாத்திரமல்லாமல் ”அஸ் - ஸஃப்ஹ்” – الصّفح – என்ற வார்த்தையையும் இணைத்தே கூறுவான்.
الفرق بين العفو والصفح :
العفو والصفح متقاربان في
المعنى فيقال :
صفحت عنه : أعرضت عن ذنبه
وعن تثريبه ، كما يقال : عفوت عنه .
إلا أن الصفح أبلغ من العفو
فقد يعفو الإنسان ولا يصفح .
فالصفح ترك المؤاخذة ،
وتصفية القلب ظاهراً وباطناً ،
இரண்டு
வார்த்தைகளும் கிட்டத்தட்ட நெருக்கமான ஒரே பொருளைக் கொடுத்தாலும் சற்று
வித்தியாசம் இருக்கின்றது.
அஃப்வை விட ஸஃப்ஹ் மிகவும் உயர்வானது என அல் ஹிஜ்ர்
அத்தியாயத்தின்
89 –ஆம் வசனத்தின் விளக்கத்தில் அறிஞர் பெருமக்கள் விளக்கம்
தருகின்றார்கள்.
والعفو : هو التجاوُزُ عن
الذنب وتَرْك العِقاب عليه ، وأَصله المَحْوُ والطمْس ، مأْخوذ من قولهم عَفَت
الرياحُ الآثارَ إِذا دَرَسَتْها ومَحَتْها ، وكل من اسْتَحقَّ عندك عُقوبة
فتَرَكتَها فقد عَفَوْتَ عنه ،
அஃப்வு என்றால்
தண்டிக்கும் படியான ஒரு தவறைச் செய்கின்றவனை மன்னித்து அவனை தண்டிக்காமல் விட்டு
விடுவதாகும்.
மன்னிப்பதன் எல்லை….
وعند أبي داود وصححه
الألباني من حديث عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو رضي الله عنه قال : جَاءَ رَجُلٌ
إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ : يَا رَسُولَ اللهِ كَمْ نَعْفُو
عَنِ الْخَادِمِ ؟ فَصَمَتَ ، ثُمَّ أَعَادَ عَلَيْهِ الْكَلاَمَ ، فَصَمَتَ ،
فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ قَالَ : " اعْفُوا عَنْهُ فِي كُل يَوْمٍ
سَبْعِينَ مَرَّة " [ أخرجه أبو داود وصححه الألباني ]
ஒரு மனிதர்
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்)
அவர்களின் சமூகத்திற்கு வந்து “அல்லாஹ்வின் தூதரே!
நம்மிடம் வேலை செய்யும் ஒரு பணியாளனை எத்தனை முறை மன்னித்து
விட வேண்டும்?
அவன் செய்யும் பிழைகளுக்காக.. என்று கேட்டார்.
நபிகளார் மௌனமாக
இருந்தார்கள்.
மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். நபிகளாரின் மௌனம் நீடித்தது. மூன்றாவது முறையாகக்
கேட்ட போது “தினமும் எழுபது முறை மன்னிப்பதற்கு அனுமதி இருக்கின்றது” என்று பதில் கூறினார்கள்.
( நூல்:
அபூதாவூத், ஜாமிவுஸ் ஸஹீஹ் லில்
அல்பானீ
)
முன்னோர்களான மேன்மக்கள் மன்னித்து பெருந்தன்மையோடு நடப்பதையே விரும்பினார்கள்.
قال الحسن بنُ علي رضي الله
تعالى عنهما : " لو أنَّ رجلاً شتَمني في أذني هذه ، واعتذر في أُذني الأخرَى
، لقبِلتُ عذرَه "
ஹஸன் இப்னு அலீ (ரலி)
அவர்கள் சொல்வார்கள்: “என்னுடைய ஒரு
காதின் அருகே வந்து ஒருவன் என்னை ஏசிப் பேசுகின்றான். அவனே மற்றொரு காதின் அருகே வந்து அது தவறென்றான் எனில் அவனுடைய அந்த ஒப்புதலை
ஏற்று நான் அவனை மன்னித்து விடுவேன்.
وقال الفضيل بنُ عياض رحمه
الله : " إذا أتاك رجلٌ يشكو إليك رجلاً فقل : يا أخي ، اعفُ عنه ؛ فإنَّ
العفو أقرب للتقوى ، فإن قال : لا يحتمِل قلبي العفوَ ، ولكن أنتصر كما أمرَني
الله عزّ وجلّ فقل له : إن كنتَ تحسِن أن تنتَصِر ، وإلاّ فارجع إلى بابِ العفو ؛
فإنّه باب واسع ، فإنه من عفَا وأصلحَ فأجره على الله ، وصاحِبُ العفو ينام علَى
فراشه باللّيل ، وصاحب الانتصار يقلِّب الأمور ؛ لأنّ الفُتُوَّة هي العفوُ عن
الإخوان " . [ أدب المجالسة لابن عبد البر 116 ]
ஃபுளைல் இப்னு
இயாள் (ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள்: “தோழனே!
ஒரு மனிதர் உன்னிடம் வந்து இன்னொரு மனிதர் தன்னிடம் தவறாக
நடந்து கொண்டார்”
என்று முறையிட்டால், முறையிடும் அந்த
மனிதரிடம்
“சகோதரனே! தவறாக நடந்து கொண்ட அவரை
நீ மன்னித்து விடு!
ஏனெனில் அது தான் இறையச்சத்திற்கு நெருக்கமான செயல்” என்று சொல்லி விடு.
அவர் ”மன்னிக்க எனக்கு மனம் வர வில்லை, கண்டிப்பாக நான் அவரை பழி
வாங்குவேன் அல்லாஹ் எனக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கின்றான்” என்று உன்னிடம் சொல்வாரேயானால்,
அவரிடம் “உன்னால் அவர் உன்னிடம் நடந்து கொண்ட அதே முறையில் நடந்து கொள்ள முடியுமானால்
நீ பழி வாங்கு.
அப்படி உன்னால் முடியாது போனால் அவரை நீ மன்னித்து விடு! மன்னிக்கும் மனப்பான்மை என்பது விசாலமான வாசல் போன்றது.
அல்லாஹ் அப்படி
மன்னித்து விடுபவர்களுக்கு அளவிட முடியாத பேறுகளை வழங்கி கௌரவிக்கின்றான்.
மன்னிக்கும்
மனோபாவம் கொண்டவனால் மட்டுமே இரவில் நிம்மதியாக தூங்க முடியும். பழி வாங்கும் எண்ணம் கொண்டவனால் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது.
உண்மையில் வீரன் - ஆண்மகன் என்பவன் தன் சகோதரனின் தவறை மன்னிப்பவனே! என்று கூறி விடு!” ( நூல்: அதபுல் மஜாலிஸா லி இப்னி அப்துல் பர் (ரஹ்) )
3.மன்னிப்பு பெறுவோம்! சக அடியார்களிடம்
இருந்து…
மௌத்துக்கு முன்னால் நம்மால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த இழப்பீட்டை
கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து மன்னிப்பை பெற்று விட வேண்டும். …
حدثنا آدم بن أبي إياس حدثنا ابن أبي ذئب حدثنا سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار
ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من
سيئات صاحبه فحمل عليه
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “எவராவது உலகில்
வாழும் காலத்தில் தன் சக முஸ்லிம் ஒருவருக்கு அநீதி இழைத்திருப்பாரேயானால், அவர் எந்த தீனாரும்,
எந்த திர்ஹமும் எந்த வித பயன்பாட்டையும் தந்திடாத மறுமை
நாளைக்கு முன் வாழும் காலத்திலேயே, இந்த உலகத்திலேயே அவர்
அதற்கான பரிகாரத்தைத் தேடிக் கொள்ளட்டும்!
அப்படி எவராவது
பரிகாரம் தேடிக்கொள்ளாமல்,
நாளை அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு கொண்டு வரப்பட்டால்
அநீதம் இழைக்கப்பட்டவருக்கு பரிகாரமாக அநீதி இழைத்தவரிடத்திலிருந்து அவர் இழைத்த
அநீதத்தின் அளவுக்கு நற்செயல்களை எடுத்து அல்லாஹ்
கொடுத்து விடுவான்.
அப்படி, நற்செயல்கள் ஏதும் அவரிடத்தில் இல்லையெனில், அநீதம்
இழைக்கப்பட்டவரிடமிருந்து பாவத்தை எடுத்து அநீதி இழைத்தவருக்கு கொடுத்து விடுவான். இதன் காரணமாக,
அவர் நரகத்திற்கு தூக்கி வீசப்படுவார்.” ( நூல்:
புகாரி )
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்மாதிரி…
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யாத போதும், தங்களோடு வாழும் காலத்தில் தங்களால் பாதிக்கப்பட்டவர், அவர் எவராக இருந்தாலும் தான் வாழும் காலத்திலேயே தன்னை பழிதீர்த்துக்
கொள்ளுமாறு பெரும் மக்கள் திரளிலே சூளுரைத்தார்கள்.
عن الفضل بن عباس قال: جاءني رسول الله صلى الله عليه وسلم فخرجت إليه
فوجدته موعوكاً قد عصب رأسه فأخذ بيدي وأخذت بيده فأقبل حتى جلس على المنبر ثم
قال: ناد في الناس فصحت في الناس فاجتمعوا إليه فقال أما بعد أيها الناس فإني أحمد
إليكم الله الذي لا إله إلا هو وإنه دنا مني خلوف بين أظهركم فمن كنت جلدت له ظهرا
فهذا ظهري فليستقد منه ومن كنت أخذت له مالا فهذا مالي فيأخذ منه ولا يقولن رجل
إني أخشى الشحناء من رسول الله صلى الله عليه وسلم ألا وإن الشحناء ليس من طبيعتي
ولا شأني ألا وإن أحبكم إلي من أخذ حقا إن كان له أو حللني فلقيت الله عز وجل وأنا
طيب النفس وإني أراني أن هذا غير مغن عني حتى أقوم فيكم مراراً ثم نزل فصلى الظهر
ثم رجع فجلس على المنبر فعاد لمقالته الأولى في الشحناء وغيرها فقام رجل فقال: يا
نبي الله إن لي عندك ثلاثة دراهم قال: أما إنا لا نكذب قائلا ولا نستحلفه على يمين
فيم كان لك عندي؟ قال: تذكر يوم مر بك المسكين فأمرتني فأعطيته ثلاثة دراهم فقال:
أعطه يا فضل فأمر به
ஃபள்ல் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களின் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன் கிழமை உடல் நெருப்பாய் கொதித்தது. அவ்வப்போது
நபி {ஸல்}
அவர்கள் மயக்கமுற்றுக் கொண்டிருந்தார்கள்.
நபி {ஸல்}
அவர்கள் எங்களிடம் “பல கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து ஏழு துருத்திகளில் கொண்டு வந்து என் மீது ஊற்றுங்கள், நான் மக்களிடம் சென்று
ஓர் ஒப்பந்தம் வாங்கப்போகின்றேன்” என்று கூறினார்கள்.
நபி {ஸல்}
அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏழு துருத்திகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, நபி {ஸல்}
அவர்களை ஒரு பாத்திரத்தில் அமர வைத்து தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது தான் நபி {ஸல்}
அவர்களின் மேனியில் இருந்த சூடு தணிந்தது.
பின்னர், தலையில் ஒரு தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையை போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அது தான்
நபி {ஸல்}
அவர்கள் அமர்ந்த கடைசி சபையாகும்.
அல்லாஹ்வைப்
போற்றிப் புகழ்ந்து விட்டு,
“மக்களே! நான் எவரையாவது முதுகில்
அடித்திருந்தால் இதோ எனது முதுகை நான் தந்து விடுகின்றேன் அவர் பழி தீர்த்து கொள்ளட்டும்! எவரையாவது அவரின் கண்ணியம் சீர்குலையும் படி
ஏசியிருந்தால்,
திட்டியிருந்தால் இதோ உங்கள் முன் நான் நிற்கின்றேன் அவர்
பழி தீர்த்துக் கொள்ளட்டும்! என்று கூறிவிட்டு
மிம்பரிலிருந்து இறங்கி ளுஹரை தொழ வைத்தார்கள்.
பின்னர், மீண்டும் மிம்பரில் ஏறி பழி தீர்க்க விரும்புவோர் பழி தீர்த்துக் கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வை தூய்மையான மனதோடு சந்திக்கவே
விரும்புகின்றேன்!
நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றேன் என்பதற்காக யாரும்
என்னிடம் பழிதீர்த்துக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்!
என்னிடம் பழிதீர்த்துக் கொள்கிறவர்களை நான் நேசிக்கின்றேன்! என்று மீண்டும் அறிவிப்புச் செய்தார்கள்.
அப்போது, ஒருவர் எழுந்து “எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டியுள்ளது” என்றார்.
அப்போது, நபி {ஸல்}
அவர்கள் “எப்போது உம்மிடம் நான் மூன்று திர்ஹம் வாங்கினேன்! சொல்லுங்கள்” என்றார்கள்.
அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! ஒரு நாள் ஒரு ஏழை உங்களிடம் யாசகம் கேட்டார். அப்போது, அவருக்கு தருவதற்கு
உங்களிடம் எதுவும் இல்லை,
என்னிடம் மூன்று திர்ஹம்களைக் கொடுக்கச் சொன்னீர்கள்! நான்
கொடுத்தேன்”
என்றார்.
ஃபள்லே! அதை
அவரிடம் கொடுத்து விடுங்கள்! என என்னிடம் நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ,
ரஹீக் அல் மக்தூம்)
ஆகவே, நம்முடைய பாவங்களுக்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்
கேட்போம்!
நமக்கு துரோகமிழைத்தவர்கள், தீங்கிழைத்தவர்கள்,
உணர்வுகளைக் காயப்படுத்தியவர்களை மன்னிப்போம்!!
நாம் யாருக்கெல்லாம் தீங்குகளும், பாவங்களும் செய்திருக்கின்றோமோ
அவர்களிடம் மன்னிப்புக் கேட்போம்!!!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரின் பாவங்களையும்
மன்னித்து, நம் அனைவருக்கும் அருளும், கருணையும் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல்
ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
Masaha Allah அற்புதமான கோர்வை அல்லாஹ் தங்களின் கல்வியில் பரக்கத்தும் ஆயுளை நீட்டித்தும் தருவாயாக ஆமீன். அடுத்த வாரமும் தங்களின் பதிவை எதிர்பார்த்தவனாக....
ReplyDeleteஆமீன்
Deleteالحمدالله
ReplyDeleteஅருமையான பயான்
ReplyDeleteஉங்களின் கல்வி வளத்தை அல்லாஹ் அதிகபடுத்துவானாக!!!
ReplyDelete