ரமழான் சிந்தனை, தொடர் – 13
கல்வி எனும் ஒப்பில்லா அருட்கொடை!!!
12 –ஆவது நோன்பை
நிறைவு செய்து, 13 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல்
செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின் தராவீஹ்
தொழுகையில் அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறு
பகுதியும் மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்கள் நிறைவு செய்யப்பட்டு, அல் அன்பியா
அத்தியாயத்தின் சில பகுதிகள் என 318 வசங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
ஓதப்பட்ட பல இடங்களில்
மனித குலத்திற்கு தேவையான
அற்புதமான வழிகாட்டல்கள், இம்மை,
மறுமை சார்ந்த பல்வேறு
கட்டளைகள், நபி ஜகரிய்யா, நபி யஹ்யா, நபி ஈஸா, நபி
இப்ராஹீம், நபி இஸ்மாயீல், நபி இஸ்ஹாக், நபி மூஸா, நபி ஹாரூன், நபி இத்ரீஸ்
(அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர்களின் வரலாறு என அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல்வேறு விஷயங்களை பேசுகின்றான்.
அல் கஹ்ஃப் தாஹா அத்தியாயத்தின் 114 –ஆவது
இறைவசனத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வி என்பது அல்லாஹ் மனித
சமூகத்திற்கு வழங்கிய மகத்தான அருட்கொடை என்பதையும் பறைசாற்றும் விதமாக
அமைந்திருப்பதை உணர முடிகின்றது.
فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ
مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்;
இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு
அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை
எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
(அல்குர்ஆன் :20;114)
நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தன்னிடம் ஞானத்தை, கல்வியை அதிகமாக தருமாறு கேட்கும்படி உத்தரவிடுகிறான்.
ஞானம், மக்கள் செல்வம், பொருள் செல்வம், ஆட்சி அதிகாரம், என்று எல்லா செல்வமும் நிரப்பமாக கொடுக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் எனக்கு இதை
அதிகமாக தா என எதையும் கேட்ட தில்லை. கேட்கும்படி அல்லாஹ்வும் சொல்லவில்லை.ஆனால்
இல்மை மட்டும் அல்லாஹ் தன்னிடம் இன்னும் அதிகமாக்கித் தா என கேட்கும்படி
சொல்கிறான்.
1.
இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கிய முதல் கட்டளை..
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
(நபியே) நீர் உம்மைப் படைத்த இறைவனின் பெயர் கொண்டு (ஓதுவீராக!) படிப்பீராக!
2.
கல்வியறிவு என்பது ஆளுமைத் தகுதிக்கான அடிப்படை பண்பு ...
أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي
إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا
مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ
عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ
فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا
كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ
عَلِيمٌ بِالظَّالِمِينَ
பனூ இஸ்ரவேலர்கள் மூஸா {அலை} அவர்களுக்குப் பின்னால் நாடாளும் அரசர்களால் நசுக்கப்பட்ட போது, அதிலிருந்து மீண்டெளுவதற்கும், தங்களை வழி நடத்தி அத்தீயோர்களை வெல்வதற்கும் ஓர் ஆட்சியாளரை அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுத்தறுமாறு தங்களின் நபியிடம் வேண்டி நின்றனர்.
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ
بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا
وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ قَالَ
إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ
وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
அதற்கு அந்த நபி, அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு ஆட்சியாளராக நியமித்திருக்கின்றான் என்று கூறிய போது, அதை ஏற்றுக்கொள்ள பனூ இஸ்ரவேலர்கள் மறுத்தனர்.
அதற்கு பதிலளித்த அந்த நபி “உங்களுக்கு மேலாக அல்லாஹ் அவரையே ஆட்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அறிவாற்றலையும், உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான்.” (அல்குர்ஆன்:2:246-247)
3.
மேலும், நீதி நெறி சார்ந்த வாழ்க்கைக்கு கல்வியறிவு அவசியம்...
فَخَرَجَ عَلَى قَوْمِهِ
فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا
مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ (79) وَقَالَ الَّذِينَ
أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ
صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ
காரூணின் செல்வ வளங்களைக் கண்ட பலகீனமான சமுதாய மக்கள் அவனைப் போல வாழ வேண்டுமென விரும்பிய போது, அங்கிருந்த கல்வியாளர்கள் இப்படிக் கூறினார்கள்.
“ஆயினும் கல்வியறிவு வழங்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “உங்கள் நிலை குறித்து வருந்துகிறோம். நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ்வின் நற்கூலி சிறந்ததாகும். மேலும், பொறுமையை மேற்கொள்கிறவர்களுக்குத் தான் இது போன்ற நற்பாக்யம் கிடைக்கும்.” ( அல்குர்ஆன்:28:79-80
)
4.
இறை நெருக்கத்தையும், இறை உதவியையும் பெற்றுத்தரும் உயரிய பொக்கிஷம்...
قَالَ يَا أَيُّهَا
الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ
(38) قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ
مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ (39) قَالَ الَّذِي عِنْدَهُ
عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ
طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ
அல்லாஹ்
கூறுகின்றான்: ஸுலைமான் {அலை}
கேட்டார்: “அவையோரே! அவர்கள்
கீழ்ப்படிந்தவர்களாய் வருமுன் அப்பெண்மணியுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம்
கொண்டு வர முடியும்”?
பலம் பொருந்திய
ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தை விட்டு
எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வருகின்றேன். நான்
அதற்கு வலிமை பெற்றவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.”
அவர்களுள்
கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண்மூடி
திறப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார்.
அவ்வாறே அவ்வரியணை
தம்மிடத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருப்பதை ஸுலைமான் {அலை} கண்டார்.
அல்குர்ஆனில் அல்லாஹ் நான்கு வகையான மக்களின் அந்தஸ்துகளை குறிப்பிடுகிறான்.
முதலாவது, பத்ரு போரில் கலந்து கொண்டவர்களின் அந்தஸ்தை உயர்த்தியிருக்கிறான்.
முஃமின்கள் என்றால் யார்?..
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ
قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ
رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
(உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம்
அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்;
அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால்
அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்;
இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை
வைப்பார்கள். (அல்குர்ஆன்: 8;2)
الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்;
அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு
செய்வார்கள். (அல்குர்ஆன்:8;3)
أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ
رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்;
அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான
உணவும் உண்டு. (அல்குர்ஆன் :8;4)
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் நடுநடுங்கிவிடும் என்று
கூறுகிறான். “அல்லாஹ்” “அல்லாஹ்” என்று கூப்பாடு
போட்டாலும் கொஞ்சமும் நடுங்காத நமது ஈமானின் நிலையை நாம் சற்று சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.
மேற்கூறிய வசனத்தின் இறுதியில் அல்லாஹ், “இவர்கள் தான் உண்மையான முஃமின்கள்” என்று அவர்களை அடையாளப்படுத்துகிறான். மட்டுமல்ல சொர்க்கத்தில் இவர்களுக்கென்று
அந்தஸ்துகள் இருக்கின்றது என்றும் கூறுகிறான்.
இரண்டாவது, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்பவர்கள்...
لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي
الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ ۚ
فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى
الْقَاعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ
اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا
ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்)
உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர்
புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட
அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;
எனினும், ஒவ்வொரு வருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ்
வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால்
மேன்மையாக்கியுள்ளான். ( அல்குர்ஆன் :4;95)
மூன்றாவது. நல்லோர்கள்,
நாதாக்கள்,
ஸாலிஹீன்கள்....
وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَٰئِكَ
لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَىٰ
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான
பதவிகள் உண்டு. (அல்குர்ஆன் :20;75)
நான்காவது, கல்வியாளர்கள்…
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ
آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ
அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், உங்களில் எவர் இறை நம்பிக்கையோடும்,
கல்வியறிவோடும் இருக்கின்றவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்துகளையும், பதவிகளையும் வழங்குவான்”.
( அல்குர்ஆன்: 58 :
11 )
இல்மு கொடுக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்துகளை அல்லாஹ்
வழங்கியிருக்கிறான்.
கல்விபற்றி நபிமொழிகளில் சில...
பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் 'கிதாபுல் இல்ம்'
என்ற பெயரில் கல்வியைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும்.
நூற்றுக்கணக்கான
ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புஹாரியில் மாத்திரம் 'கிதாபுல் இல்ம்'
என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன. இனி,
அறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களைக் பார்ப்போம்.
قال رسول الله صلّى الله عليه وسلّم: (مَن سلك طريقاً يلتمسُ فيه
علماً، سهَّل اللهُ له طريقاً إلى الجنَّةِ).
'ஒருவர் ஓர் அறிவைத் தேடி
ஒரு பாதையில் சென்றால்,
அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை
இலகுபடுத்திக்
கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)
''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு,
மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர்.
அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்'
(வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு,
நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.
மேலும், அறிஞர்கள்
நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ
அல்லது வெள்ளி
நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக
விட்டுச்
சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர்
பெரும் பேற்றைப்
பெற்றுக் கொண்டவராவர்.'' ( நூல்:
அபூதாவூத், அஹ்மத் )
وعن معاذ بن جبل رضي الله عنه وأرضاه: "تعلموا العلم فإن تعلّمه
لله خشية، وطلبه عبادة، ومدارسته تسبيح، والبحث عنه جهاد، وتعليمه لمن لا يعلمه
صدقة، وبذله لأهله قربة، لأنه معالم الحلال والحرام، والأنيس في الوحشة، والصاحب
في الخلوة، والدليل على السراء والضراء، والدين عند الأخلاق، والقرب عند الغرباء،
يرفع الله به أقواماً فيجعلهم في الخلق قادة يقتدى بهم، وأئمة في الخلق يقتفي
آثارهم، و ينتهى إلى رأيهم، وترغب الملائكة في حبّهم بأجنحتها تمسحهم، حتى كل رطب
ويابس لهم مستغفِر، حتى الحيتان في البحر وهوام وسباع البر وأنعامه، والسماء
ونجومها.
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ''அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை அல்லாஹ்வுக்காகக்
கற்பது இறையச்சமாகும். அதனைத் தேடுவது இபாதத்தாகும். அதனை
மீட்டுவது தஸ்பீஹாகும். அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாதாகும். அறியாதவருக்கு அதனைக்கற்பிப்பது ஸதக்காவாகும். அதனை அதற்குரியவர்களுக்கு அளிப்பது நற்கருமமாகும்.
அது (அறிவு)
தனிமையின் தோழன்,
மார்க்கத்தின் வழிகாட்டி, இன்ப துன்பத்தின் போது உதவியாளன், நண்பர்க்கு மத்தியில் மந்திரிஇ நெருக்கமானவர்களுக்கு மத்தியில் நெருங்கியவன். சுவனப் பாதையின் ஒளிவிளக்கு;
இதனைக் கொண்டு அல்லாஹ் சிலரை உயர்த்தி, அவர்களை
நன்மையான விஷயங்களுக்கு முன்னோடிகளாகவும் ஆக்கிவிடுகின்றான்.
அவர்களின் அடிச்சுவட்டில் பலர் செல்வர். அவர்களின் தோழமையை மலக்குகளும் விரும்புவர். மலக்குகள் அவர்களைத் தங்களது இறக்கைகளினால் தடவிடுவர். கடலில் உள்ள மீன்கள்,
ஏனைய ஜீவராசிகள், கரையில் உள்ள மிருகங்கள், கால்நடைகள்,
வானம், நட்சத்திரங்கள் உட்பட பசுமையான,
காய்ந்த, உலர்ந்த அனைத்தும்
அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றன.” ( நூல்: ஜாதுல் மஆத் )
ولما أبطل الاسلام عادة
التبني، صار أخا ورفيقا، ومولى للذي كان يتبناه وهو الصحابي الجليل: أبو حذيفة بن
عتبة..
وبفضل من الله ونعمة على
سالم بلغ بين المسلمين شأوا رفيعا وعاليا، أهّلته له فضائل روحه، وسلوكه وتقواه..
وعرف الصحابي الجليل بهذه التسمية: سالم مولى أبي حذيفة.
ذلك أنه كان رقيقا وأعتق..
وآمن باله ايمانا مبكرا..
وأخذ مكانه بين السابقين
الأولين..
அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள். இவர்களின் இயர்ப் பெயர் ஆமிர் இப்னு உத்பா.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களை எதிர்த்த மாபெரும் குறைஷித் தலைவர்களில் ஒருவரான உத்பா வின்
மகன் தான் அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள்.
ஆனால், வரலாற்றில் ஓரிடத்திலும் கூட அவர்கள் அப்படி அழைக்கப் பெற்றதில்லை. ஸாலிம்
மவ்லா அபூ ஹுதைஃபா (ரலி) என்றே அறியப்படுகின்றார்கள்.
காரணம் அவரால் உரிமை விடப்பட்ட அவரின் அடிமையான ஸாலிம் (ரலி) அவர்களுக்கு
அவர்கள் வழங்கிய மரியாதை மற்றும் மதிப்பு தான்.
குர்ஆனுடைய ஞானமும், தொடர்பும் மிகுதியாக இருந்த ஸாலிம் (ரலி) அவர்களை அந்த ஒரே
காரணத்திற்காகவே உரிமை விட்டார்கள் அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள்.
أوصى رسول الله صلى الله
عليه وسلم أصحابه يوما، فقال:
"
خذوا القرآن من أربعة:
عبدالله بن مسعود..
وسالم مولى أبي حذيفة..
وأبيّ بن كعب..
ومعاذ بن جبل.."
ஒரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
தோழர்களிடத்தில் கூறினார்கள். “குர்ஆனுடைய அறிவை நான்கு
மனிதர்களிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத் (ரலி), ஸாலிம் மவ்லா அபீ
ஹுதைஃபா (ரலி), உபை இப்னு கஃபு
(ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி) ஆகியோர் ஆவார்கள்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்} )
இந்த உம்மத்திற்கு இந்த நற்பேற்றினை பெற்ற நவமணிகள் நால்வரில் ஒருவரை
தந்தவர்கள் அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் ஆவார்கள்.
எனவே, கல்வியைக்
கற்பதில் குறிப்பாக மார்க்கக் கல்வியை கற்பதில் நம் சமூகத்து கட்டமைப்பை மீண்டும்
சரி செய்வோம்!!!
No comments:
Post a Comment