ஸலாமத்தான வாழ்வைத் தந்தருள்வாய் யாஅல்லாஹ்!!!
மிஃராஜ் சிந்தனை -1
தம்முடைய வாழ்க்கை எல்லாவிதமான கவலை, சிரமம், துக்கம், ஆபத்து ஆகியவற்றில் இருந்து விடுபட்டதாக அமைந்திருக்க வேண்டும் என நம்மில் ஒவ்வொருவரும் விரும்புகின்றோம்.
தம்முடைய வாழ்க்கை எல்லாவிதமான சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பம், நிம்மதி, அமைதி ஆகியவற்றால் நிரம்பியிருக்க வேண்டும் என நம்மில் ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றோம்.
இப்படியான வாழ்க்கை வாழப்பெற்றவரையே நாம் ஸலாமத்தான வாழ்க்கை வாழ்பவர் என்று அழைப்போம்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஸலாமத்தான வாழ்க்கையை தந்தருள் புரிவானாக! ஆமீன்!!
மாநபி {ஸல்} அவர்கள்
சென்று வந்த மிஃராஜ்
பயணம் இந்த உம்மத்திற்கு
பல்வேறு பாடங்களையும், படிப்பினைகளையும்,
நன்மைகளையும், நலவுகளையும் கொண்ட
மகத்தான பயணம் என்றால்
அது மிகையல்ல.
ما تنقله بعض كتب التفسير عند قوله تعالى: (سَلامٌ قَوْلاً مِنْ
رَبٍّ رَحِيمٍ) يّـس /58 ، فقالوا: "يشير إلى السلام الذي سلمه الله على
حبيبه عليه السلام ليلة المعراج إذ قال له: "السلام عليك أيها النبي ورحمة
الله وبركاته"، فقال في قبول السلام: "السلام علينا وعلى عباد الله
الصالحين" انتهى.
انظر "روح المعاني"
للآلوسي" (3/38) .
وما يذكره بعض شراح السنة عند
الكلام على حديث التشهد، ذكره بدر الدين العيني في "شرح سنن أبي داود"
(4/238)، ونقله الملا علي القاري في "مرقاة المفاتيح" عن ابن الملك،
وكذلك تذكره هذه القصة في بعض كتب الفقه، مثل حاشية "تبيين الحقائق شرح كنز
الدقائق" (1/121)، وفي بعض كتب الصوفية كالقسطلاني والشعراني.
பெருமானார் {ஸல்} அவர்களை நேரில் அழைத்து உரையாடிய அல்லாஹ் உரையாடலின் துவக்கமாக “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு” “நபியே! உம்மீது என் புறத்தில் இருந்து ஸலாமும், பரக்கத்தும் நிலவட்டும்!” என்று கூறி மகிழ்வித்தான்.
அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக பூமான் நபி {ஸல்} அவர்கள் “உன்னுடைய ஸலாம் எங்களின் மீதும் எம்மில் நல்லோர்களின் மீதும் நிலவட்டுமாக” என்று கூறி பரவசமடைந்தார்கள்.
இறைவன் புறத்திலிருந்து கிடைத்த ஸலாமத் இந்த உம்மத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பூமான் நபி {ஸல்} அவர்கள் ஆசைப்பட்டார்கள்.
இறைவன் புறத்திலிருந்து ஒரு அடியானுக்கு ஸலாமத் கிடைக்கப் பெறுவது என்பது சாமானிய காரியமல்ல.
அஸ் ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தில் பல்வேறு நபிமார்களுக்கு அல்லாஹ் தன் புறத்தில் இருந்து ஸலாமைத் தெரிவித்த நிகழ்வைக் கூறுகின்றான்
ஸலாமுன் அலா இப்ராஹீம், ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன், ஸலாமுன் அலா நூஹ், ஸலாமுன் அலா இல்யாஸீன் என்ன ஒவ்வொரு நபிமார்களுக்கும் தான் ஸலாம் சொன்ன விதத்தையும் பதிவி செய்திருக்கின்றான்.
எண்ணற்ற பல தியாகங்களுக்குப் பிறகே அல்லாஹ் இந்தப் புவியில் வாழ்ந்த நபிமார்களுக்கு தன் புறத்தில் இருந்து ஸலாமை வழங்கியதாக சான்று பகர்கின்றான்.
இப்ராஹீம் அலை அவர்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, மூஸா அலை, ஹாரூன் அலை அவர்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, நூஹ் அலை அவர்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
நம் உயிரினும் மேலான நபி {ஸல்} அவர்கள் மக்காவில் நபித்துவத்தின் முதல் பத்தாண்டுகளின் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஆனால், பெருமானார் {ஸல்} அவர்கள் தாம் பெற்ற பேற்றை இந்த உம்மத்தும் அனுபவிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார்கள், ஆசைப்பட்டார்கள்.
எனவே, அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஓர் அடியானுக்கு ஸலாமத் கிடைப்பது என்பது கிடைப்பதற்கரிய பெரும் பேறாகும்
ஸலாமத்தான வாழ்க்கை என்றால் என்ன
நாம் ஸலாமத்தான வாழ்க்கை குறித்து விளங்கிக் கொண்டிருப்பது ஸலாமத்தான வாழ்க்கையின் ஒரு வகை தான்.
இன்னொரு வகை வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழும் பாக்கியத்தை மிகவும் அரிதானவர்களுக்கே அல்லாஹ் வழங்குகின்றான்.
முதல் வகையான வாழ்க்கை வாழ விரும்புவது போன்று இரண்டாவது வகையான வாழ்க்கை வாழவும் ஒரு இறைநம்பிக்கையாளன் விரும்ப வேண்டும்.
ஆபத்தும், துன்பமும் இல்லாத வாழ்க்கை எப்படி ஸலாமத்தான வாழ்க்கையோ அதே போன்று ஆபத்தும், துன்பமும் கண் முன்னால் நிற்கும் போது, அதை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது எவ்வித சலனமும் இல்லாமல் இதயம் இயல்பாக இயங்குமே அது தான் ஸலாமத்தான் வாழ்க்கை.
عن أنس
بن مالك رضي الله عنه قال : ( كان رجل من أصحاب النبي صلى الله عليه وسلم من
الأنصار يكنى ( أبا معلق ) ، وكان تاجراً يتجر بماله ولغيره يضرب به في الآفاق ،
وكان ناسكا ورعا ، فخرج مرة فلقيه لص مقنع في السلاح ، فقال له : ضع ما معك فإني
قاتلك ، قال : ما تريد إلى دمي ! شأنك بالمال ، فقال : أما المال فلي ، ولست أريد
إلا دمك ، قال : أمَّا إذا أبيت فذرني أصلي أربع ركعات ؟ قال : صلِّ ما بدا لك ،
قال : فتوضأ ثم صلَّى أربع ركعات ، فكان من دعائه في آخر سجدة أن قال : ( يا ودود ! يا ذا
العرش المجيد ! يا فعَّال لما يريد ! أسألك بعزك الذي لا يرام ، وملكك الذي لا
يضام ، وبنورك الذي ملأ أركان عرشك ، أن تكفيني شرَّ هذا اللص ، يا مغيث أغثني ! ثلاث
مرار ) قال : دعا بها ثلاث مرات ، فإذا هو بفارس قد أقبل بيده حربة واضعها بين
أذني فرسه ، فلما بصر به اللص أقبل نحوه فطعنه فقتله ، ثم أقبل إليه فقال : قم ،
قال : من أنت بأبي أنت وأمي فقد أغاثني الله بك اليوم ؟ قال : أنا ملَكٌ من أهل
السماء الرابعة ، دعوت بدعائك الأول فسمعت لأبواب السماء قعقعة ، ثم دعوت بدعائك
الثاني فسمعت لأهل السماء ضجة ، ثم دعوت بدعائك الثالث فقيل لي : دعاء مكروب ،
فسألت الله تعالى أن يوليني قتله .
قال أنس رضي الله عنه : فاعلم أنه من توضأ وصلى أربع
ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروباً كان أو غير مكروب ) .
أخرجه ابنُ أبي الدنيا في " مجابي الدعوة " ( 64 ) و" الهواتف " ( 24 ) ، ومن طريقهِ أخرجه اللالكائي في "
شرح أصولِ الاعتقاد "
( 5 / 166 ) وبوَّب عليه
" سياق ما روي من كراماتِ أبي معلق " ،
وأخرجه " أبو موسى المديني " – كما ذكر ذلك الحافظ ابن حجر في "
الإصابة " ( 7 / 379 ) في ترجمة
أبي معلق
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபீ முஅல்லகுல் அன்ஸாரி என்கிற நபித்தோழர் ஒருவர் இருந்தார். மிகவும் பேணுதலும், வணக்க வழிபாட்டில் பற்றுதலும் நிறைந்து காணப்பட்டார்.
பெரும் வியாபாரியாக திகழ்ந்த அவர் அவ்வப்போது வியாபார விஷயமாக வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் செல்வார்
அப்படி ஒரு முறை வெளியூர் சென்று திரும்பி இருந்த போது அவரச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது ஆச்சர்யமான நிகழ்வொன்றைக் கூறினார்.
வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் கொள்ளையன் ஒருவன் இடைமறித்து பொருளையும், பணத்தையும் புடுங்கிக் கொண்டு, அபீ முஅல்லக்கை கொலை செய்ய வாளை உருவினான்
பணத்தையும், பொருளையும் தான் எடுத்துக் கொண்டாயே என்னை ஏன் கொல்லப் போகின்றாய்? என்று அந்த அன்ஸாரித் தோழர் கேட்க, கொள்ளையன் என்னுடைய நடைமுறை இது தான் என்று கூறினான்.
அப்படியென்றால் எனக்கு நான்கு ரக்அத் தொழ சிறிது நேரம் அவகாசம் கொடு என்றார் அன்ஸாரித்தோழர். சாகப்போகிற உமக்கு தொழத்தானே அனுமதி வேண்டும்? தொழுது கொள்! என்றான் கொள்ளையன்.
ஒழுச் செய்து தொழ ஆரம்பித்த அவர், தொழுகையின் நான்காவது ரக்அத்தின் கடைசி ஸஜ்தாவில் அல்லாஹ்விடம் மனமுருகி பின்வருமாறு இறைஞ்சினார்.
அல்லாஹ்வே! பேரன்பு கொண்ட பெரும் கருணையாளனே! கீர்த்தி மிக்க அர்ஷின் அதிபதியே! நாடியதை நாடியவாறு செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவனே
களங்கப்படுத்தப்படாத உன் கண்ணியத்தை கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்! பங்கு கேட்கப்பட முடியாத உன் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்! அரியணை முழுவதும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் ஒளியைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்!
இந்த கொள்ளையனின் தீங்கிலிருந்து என்னை காத்தருள்! அபயம் அளிப்பவனே! எனக்கு அபயம் அளிப்பாயாக! அபயம் அளிப்பவனே எனக்கு அபயம் அளிப்பாயாக! அபயம் அளிப்பவனே எனக்கு அபயம் அளிப்பாயாக! என்று கேட்டு விட்டு தொழுகையை முடித்து பார்த்தால் பிரம்மாண்டமான ஒருவர் கையில் பெரிய ஆயுதத்துடன் நின்று கொண்டிருக்கின்றார்.
கொள்ளையன் கீழே பிணமாக வீழ்ந்து கிடக்கின்றான். அங்கே நின்றிருந்தவரை நோக்கி “என் தாயும் தந்தையும் உமக்கு அர்ப்பணமாகட்டும்! நீர் யார்? எங்கிருந்து வந்திருக்கின்றீர்? என்று கேட்டாராம்.
அதற்கவர், நான் நான்காம் வானத்தில் இருக்கும் மலக் வானவர் ஆவேன். உம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ் எனக்கு கட்டளையிட்டான்” என்று கூறிவிட்டு, உம்முடைய முதல் வார்த்தையான யாவதூத் – பேரன்பு கொண்ட பெரும் கருணையாளனே எனும் வார்த்தையை கேட்கும் போது முதலாவது வானம் குலுங்கியது. இரண்டாவது வார்த்தையான கீர்த்திமிக்க அர்ஷின் அதிபதியே என்று நீர் அல்லாஹ்வை அழைத்த போது இரண்டாவது வானம் நடுங்கியது, மூன்றாவது வார்த்தையான நாடியதை நாடியவாறு செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவனே என்று அல்லாஹ்வை நீர் அழைத்த போது, அல்லாஹ் என்னைக் கூப்பிட்டு “என் அடியான் ஏதோ நெருக்கடியில் இருக்கின்றான். விரைவாகச் சென்று என் அடியானுக்கு உதவுவீராக!” என்றான்.
உமக்கு உதவுவதற்காகவே நான்காம் வானத்தில் இருந்து அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தான் என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்” என்று என்னிடம் அன்ஸாரித்தோழர் கூறினார்.
இந்த நிகழ்வை கூறிய பின்னர் அனஸ் (ரலி) அவர்கள் “எவர் ஒழூச் செய்து நான்கு ரக்அத் தொழுது இந்த துஆவை கேட்பார் என்றால் அவர் எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்” என்றார்கள். ( நூல்: அல் இஸாபா )
கண் முன்னால் மரணம் துரத்திக் கொண்டிருக்கும் போது
எவ்வித பயமும்,
கவலையும் இன்றி
இதயம் இயங்குமே,
எவ்வித நடுக்கமும் இன்றி நாவு
பேசுமே அது
தான் ஸலாமத்தான வாழ்க்கை.
إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ
كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا
تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْه
“மலைக்குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த போது, எதிரிகள் வந்து சூழ்ந்து கொண்ட சமயத்தில் தன்னுடன் குகையில் இருந்த தோழராகிய அபூபக்கரை நோக்கி, ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்’ என்று கூறிய போதும், அல்லாஹ் அவருக்கு தன்னுடைய மன நிம்மதியை அளித்தான்”. (திருக்குர்ஆன் 9:40)
قال ابن
إسحاق : فلما أجمع رسول الله صلى الله عليه وسلم الخروج ، أتى أبا بكر بن أبي
قحافة ، فخرجا من خوخة لأبي بكر في ظهر بيته ، ثم عمدا إلى غار بثور - جبل بأسفل
مكة - فدخلاه ، وأمر أبو بكر ابنه عبدالله بن أبي بكر أن يتسمع لهما ما يقول الناس
فيهما نهاره ، ثم يأتيهما إذا أمسى بما يكون في ذلك اليوم من الخبر ؛ وأمر عامر بن
فُهيرة مولاه أن يرعى غنمه نهاره ، ثم يُريحها عليهما ، يأتيهما إذا أمسى في الغار
. وكانت أسماء بنت أبي بكر تأتيهما من الطعام إذا أمست بما يُصلحهما .
قال ابن
هشام : وحدثني بعض أهل العلم ، أن الحسن بن أبي الحسن البصري قال : انتهى
رسول الله صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار ليلا ، فدخل أبو بكر رضي الله
عنه قبل رسول الله صلى الله عليه وسلم ، فلمس الغار ، لينظر أفيه سبع أو حية ، يقي
رسول الله صلى الله عليه وسلم بنفسه .
قال ابن
إسحاق : فأقام رسول الله صلى الله عليه وسلم في الغار ثلاثا ومعه أبو بكر ،
وجعلت قريش فيه حين فقدوه مائة ناقة ، لمن يرده عليهم . وكان عبدالله بن أبي
بكر يكون في قريش نهاره معهم ، يسمع ما يأتمرون به ، وما يقولون في شأن رسول الله
صلى الله عليه وسلم وأبي بكر ، ثم يأتيهما إذا أمسى فيخبرهما الخبر .
وكان
عامر بن فهيرة ، مولى أبي بكر رضي الله عنه ، يرعى في رُعْيان أهل مكة ، فإذا أمسى
أراح عليهما غنم أبي بكر ، فاحتلبا وذبحا ،
மாநபி {ஸல்} தனது தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவில் இருந்து மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்ற தருணம் அது.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி அறிந்த குறைஷிகள் கோபம் அடைந்தனர். குறிப்பாக அபூஜஹ்ல் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான்,
அவர்கள் அவ்வளவு எளிதில் மக்காவின் எல்லையை கடந் திருக்க முடியாது. முஹம்மதை உயிரோடு பிடித்து கொண்டு வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிப்பேன்’ என்று அறிவித்தான்.
அரேபியர்கள் மத்தியில் ஒட்டகத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. அதுவும் நூறு ஒட்டகங்கள் என்றால் கேட்கவா வேண்டும். எதிரிகள் அத்தனை பேருமே குழுக்களாக அண்ணலாரைத் தேடி பல திசைகளில் பயணித்தார்கள்
நபி {ஸல்} அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து ஸவ்ர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.
அந்தக் குகை மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில் ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும் என்று நபி {ஸல்} அஞ்சியவர்களாக, தங்களது விரல் நுனியிலேயே நடந்து வந்தார்கள். இதனால் நபியவர்களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.
அதனைக் கண்ணுற்ற அபூபக்ர் சித்திக் (ரலி) அவர்கள் உடனே நபிகளாரை தனது தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த குகையை நோக்கி நடந்தார்கள். குகைக்குச் சென்றதும் அண்ணலாரை வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே சென்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து அடைத்தார்கள். பின்னர் நபிகளாரை உள்ளே அழைத்தார்கள். நபி {ஸல்} அவர்கள் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.
அண்ணலாரின் தலையை தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு
துவாரங்களையும் அடைத்துக் கொண்டார்கள்.
ولما آلَمَه اللدغُ بكَى ونزَل دمعه على وجهِ النبي
صلَّى الله عليه وسلَّم وهو نائمٌ في حجرِه، فدَعا له النبيُّ الكريم صلَّى الله
عليه وسلَّم وبصَق في مكان اللدْغِ، فبَرَأ بإذن الله تعالى.
துரதிர்ஷ்டவசமாக அந்த துவாரத்தில் இருந்த பாம்பு ஒன்று அபூபக்கர் (ரலி) அவர்களின் பாதங்களை தீண்டி விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது. கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
ஆனால், வலியின் வேதனையில் அவரது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அண்ணலாரின் கன்னங்களில் பட்டு தெறித்தது
உடனே விழித்துக்கொண்ட மாநபி {ஸல்}, ‘அபூபக்கரே! என்ன நேர்ந்தது?’ என வினவினார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே!! எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.
உடனே பூமான் {ஸல்} அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது
நபிகளாரும், அபூபக்கரும் குகையில் நுழைந்ததும் ஒரு புறா ஜோடி அங்கே கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்து விட்டது. குகையின் வாயிற் பகுதியில் ஒரு சிலந்தி தன் வலைகளை முழுவதுமாக பின்னி அந்த இடத்தில் எந்தவித அசைவுகளும் ஏற்படவில்லை என்பது போலவும், யாரும் அங்கே நுழைந்திருக்க முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.
இந்நிலையில் அபூபக்ர் (ரலி) அவர்களின் மகன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், விரோதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒவ்வொரு இரவும் குகைக்கு வந்து மக்கா நகரின் தற்போதைய தகவல்களை சொல்லிச் செல்வார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் அடிமை ஆமீர் இப்னு ஃபுஹைரா (ரலி) என்பவர் பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது போல குகை இருக்கும் பகுதிக்கு இரவில் வந்து, குகையில் தங்கியிருந்த அண்ணலாருக்கும், அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் ஆட்டின் பாலைக் கறந்து அருந்த கொடுப்பார்கள்.
பரிசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் அண்ணலாரை எல்லா இடங்களிலும் தேட
ஆரம்பித்தார்கள்.
فعندما رأى أبو بكر رضي الله عنه القافة اشتد حزنه
على رسول الله – صلى الله عليه وسلم قال له رسول الله صلى الله عليه وسلم ” لا
تحزن إن الله معنا
ஒரு நாள் ஒரு கூட்டத்தினர் அண்ணலார் இருந்த குகை வாசல் வரை வந்து விட்டார்கள். அவர்களின் கால் பாதங்களை அபூபக்ர் (ரலி) அவர்களால் பார்க்க முடிந்தது.
“அல்லாஹ்வின் தூதரே!! நம்மை எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் நாம் பிடிபட்டு விடுவோம். என்ன செய்வது?” என்றார்கள்.
அதற்கு பூமான் {ஸல்} அவர்கள் “நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்றார்கள். (திருக்குர்ஆன் 9:40)
அந்த நேரத்தில் எதிரிகளில் ஒருவன், ‘ஏதோ இங்கே ஒரு குகையின் வாசல் போல தோன்று கிறதே’ என்றான். ஆனால் அதற்கு பதிலாக மற்றொருவன், ‘இங்கே புறா கூடு கட்டியுள்ளது, சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனை அறுத்துக்கொண்டு
யாரும் சென்றதற்கான அடையாளமே இல்லையே?. எனவே இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
وبعثه عمرو بن العاص في عشرة نفر لمقابلة المقوقس، وكان عبادة بن
الصامت أسود اللون، فلما ركبوا السفن إلى المقوقس ودخلوا عليه، تقدم عبادة، فهابه
المقوقس لسواده، فقال: نحُّـو عني هذا الأسود، وقدموا غيره يكلمني. فقالوا: إن هذا الأسود
أفضلنا رأياً وعلماً، وهو سيدنا وخيرنا، والمقدَّم علينا، وإنا نرجع جميعنا إلى
قوله ورأيه، وقد أمّره الأمير دوننا بما أمّره به، وأمرنا ألا نخالف رأيه وقوله.
فقال المقوقس للوفد: وكيف رضيتم أن يكون
هذا الأسود أفضلكم، وإنما ينبغي أن يكون دونكم؟. قالوا: كلا! إنه وإن كان أسود كما
ترى، فإنه من أفضلنا موضعاً وأفضلنا سابقة وعقلاً ورأياً، وليس ينكر السود فينا.
فقال المقوقس لعبادة: تقدم يا أسود وكلمني برفق فإني أهاب سوادك، وإن اشتد عليّ
كلامك ازددت لك هيبة. فتقدم إليه عبادة فقال: قد سمعت مقالتك، وإن فيمن خلَّفت من أصحابي
ألف رجل أسود كلهم مثلي، وأشد سواداً مني وأفظع منظراً، ولو رأيتهم لكنت أهيب لهم
مني، وأنا قد وليّت، وأدبر شبابي، وإني مع ذلك بحمد الله ما أهاب مائة رجل من عدوي
لو استقبلوني جميعاً، وكذلك أصحابي. فلما سمع المقوقس ذلك منه، قال لمن حوله: هل
سمعتم مثل كلام هذا الرجل قط! لقد هبِت منظره وإن قوله لأهيب عندي من منظره، إن
هذا وأصحابه أخرجهم الله لخراب الأرض، وما أظن ملكهم إلا سيغلِب على الأرض كلها
நிறவெறி நிறைந்த எகிப்து தேசத்தை வெற்றி கொண்டு, அதன் தலைமைப் பீடமான பாபிலோனிய கோட்டையை முற்றுகையிட்டிருந்தது அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் தலைமையிலான முஸ்லிம் படை.
கோட்டைக்குள்ளிருந்த எகிப்திய ஆட்சியாளன் மகூகாஸ் முற்றுகையிட்டிருந்த முஸ்லிம் படையினருடன் சமாதானமாய் போய்விடுவதாக அறிவித்தான் ஒரு நிபந்தனையோடு.
அந்த நிபந்தனை இது தான் “தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்து உரையாட வேண்டும், அதுவே எனக்கு மகிழ்ச்சியாய் அமைந்து விடும் பட்சத்தில்…”
இதை கடிதத்தில் எழுதி ஒற்றரின் மூலம் படைத்தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தான்.
மகூகாஸின் ஆசையை நிறைவு செய்ய முன்வந்தார்கள் படைத்தளபதி அம்ர் (ரலி) அவர்கள்.
அதன்படி ஒரு குழுவை அமைத்து அதற்கு தலைவராக உப்பாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) எனும் நபித்தோழரை நியமித்து, “நீங்கள் யாரும் எந்த நிலையிலும் எகிப்திய ஆட்சியாளன் மகூகாஸிடம் எதுவும் பேசக்கூடாது” என்று குழுவில் இடம் பெற்ற அனைவரிடமும் கட்டாயமாகச் சொல்லிவிட்டார்கள்.
காரணம் இது தான், “குழுவில் உள்ள அனைவரும் வெள்ளை நிறத்தவர்கள்; உப்பாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்களோ கறுப்பு நிறம் கொண்டவர்கள். வெள்ளையர்கள் இவர்களைப் போன்றவர்களை அருவருப்பானவர்களாகவே கருதி வந்தனர்.”
குழு எகிப்திய ஆட்சியாளன் முன்னால் நின்றது. உப்பாதா (ரலி) அவர்களின் தோற்றத்தைக் கண்ட மகூகாஸ் முஸ்லிம்களை நோக்கி “இந்த மனிதரை இந்த அவையை விட்டும் வெளியேற்றுங்கள்! உங்களில் வேறொருவர் என்னிடம் வந்து பேசுங்கள்!” என்று அலறினான்.
ஆனால், குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் “ஆட்சியாளரே! உங்களின் வேண்டுகோளை நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏனெனில், எங்களின் படைத் தளபதி இவரைத்தான் எங்கள் குழுவின் தலைவராக நியமித்து இருக்கின்றார்கள்.
மேலும், எங்கள் எவரையும் உம்மோடு பேச அனுமதிக்கவும் இல்லை. இன்னும் எங்கள் குழுவின் தலைவராக இருக்கும் இவர் “எங்களை விடச் சிறந்த அறிவாற்றலும், ஆற்றலும் நிறைந்தவர். இறையச்சத்தால் மிகவும் உயர்ந்தவர், அவருடைய சிந்தனை எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கக் காண்கின்றோம்.
பல நேரங்களில் நாங்களே அவரிடம் தான் எங்களுக்கான விவகாரங்களில் தீர்வு கோரி நிற்கின்றோம். அவ்வளவு ஏன் சில நேரங்களில் எங்களின் தளபதி கூட அவரிடம் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றிருக்கின்றார்கள்.
ஆகவே, நீங்கள் இவரோடு தான் அவசியம் பேசியாக வேண்டும்” என்று கூறினார்கள்.
அப்போது, மகூகாஸ் “எப்படி மிக எளிதாக இவரை சிறப்பானவராக பொருந்திக் கொண்டீர்கள்? இவர் தோற்றம் ஏற்றமுடையதாக இல்லையே? என்றான்.
அதற்கு, குழுவினர் “இறையச்சத்திலும், அறிவிலும், ஆலோசனையிலும் இவரே மிகைத்து விடும் போது அவருடைய தோற்றம் ஏற்பும், ஏற்றமும் நிறைந்ததாய் ஆகிவிடுகின்றது.” என்றார்கள்.
அப்போது, அகம்பாவத்தோடு மகூகாஸ் உப்பாதா (ரலி) அவர்களை நோக்கி “ஓ கறுப்பரே! என்னோடு பேசும். ஆனால், மிகவும் மென்மையான முறையில் பேசவும்! உங்கள் தோற்றமே என்னை நடுங்க வைக்கின்றது. நீர் கடுமையாகப் பேசினால் என் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என நான் அஞ்சுகின்றேன்” என்றான்.
எகிப்தின் ஆட்சியாளன் மகூகாஸை நோக்கி உப்பாதா (ரலி) அவர்கள் “நீர் சொன்னதை நான் கவனமுடன் கேட்டேன். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா என் அருமை தோழரே!?” என்னுடைய படையில் என்னைவிட கடுமையான கறுப்பு நிறம் கொண்ட இன்னும் ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்களை நீர் பார்த்தீர் என்றால் உம் குலை நடுங்கிப்போகும்”
இன்னொன்றையும் சொல்லட்டுமா? ஒரே நேரத்தில் உன்னுடைய படைவீரர்கள் நூறுபேர் என்னை தாக்கிட முனைந்தாலும் “புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே” நான் தனியொரு நபராக நின்று நூறு பேரையும் சாய்த்திடுவேன்.
இது போன்று தான் என்னுடைய தோழர்கள் ஒவ்வொருவரும் நிகரில்லா வீரர்கள் ஆவார்கள்” என்றார்கள்.
இதைக் கேட்டதும், மகூகாஸ் தம் அரசவைப் பிரதானிகளை நோக்கி “இன்று வரை இது போன்றதொரு வீரமிக்கதொரு வார்த்தையை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். நானும் தான், இவரின் தோற்றம் மாத்திரமல்ல இவர் பேசும் பேச்சும் கூட என்னை நடுங்கச் செய்து விட்டதாக நான் உணர்கிறேன்.
அறுதியிட்டுச் சொல்கின்றேன்! இவரும் இவரின் தோழர்களும் நிச்சயம் பெரும் பெரும் பேரரசுகளை வீழ்த்தும் ஆற்றல் கொண்டவர்கள்” என்று கூறினான்
( நூல்: தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல் இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா. )
கடுமையான நோயிலும்,
சிரமத்திலும் வீழ்ந்து கிடக்கும் போது
இறை வழிபாட்டில் ஈடுபட்டு ஆனந்தம் கொள்ளுமே அந்த
இதயமும், அந்த
நாவும், அந்த
உடலும் பெற்றிருப்பது தான்
ஸலாமத்தான வாழ்க்கை.
حدثني بقصة موته محمد بن المنذر بن سعيد قال ثنا
يعقوب بن إسحاق بن الجراح قال ثنا الفضل بن عيسى عن بقية بن الوليد قال: ثنا
الأوزاعي, عن عبد الله بن محمد قال
خرجت الى ساحل البحر مرابطاً, وكان رابطنا يومئذ عريش
مصر, قال: فلما انتهيت إلى الساحل؛ فإذا أنا ببطيحه, وفى البطيحه خيمة فيها رجل؛
قد ذهب يداه, ورجلاه, وثقل سمعه, وبصره, وما له من جارحة تنفعه إلا لسانه
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் அவ்ஜாயீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் நெகிழ்ச்சியான சம்பவத்தை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களின் “அஸ் – ஸிகாத்” எனும் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்கள் மேற்கொண்ட கடல் பயணம் அது.
அவர்கள் பயணம் செய்த கப்பல் மிஸ்ருக்கு அருகேயுள்ள தீவு ஒன்றில் கரை ஒதுங்கியது
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதை நாம் கேட்போம்.
தீவில் இறங்கி நான் நடந்து சென்றேன். தூரத்தில் ஓர் கூடாரம் தெரிந்தது. அதன் அருகே செல்லச் செல்ல அங்கிருந்து ஒருவர் முனகும் சப்தம் ஒன்று கேட்டது
கூடாரத்தின் அருகே சென்று சப்தத்திற்கு சொந்தக்காரர் யார்? என்று பார்த்தேன்.
கால்களும், கைகளும், பார்வையும் முற்றிலும் செயலிழந்து போன நிலையில் ஒருவர் கூனிக்குருகி படுத்துக் கொண்டிருப்பதையும், அவர் ஏதோ ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பதையும் கண்டேன்.
அவரின் வாயருகே என் காதுகளைக் கொண்டு சென்று என்ன சொல்கின்றார்? என்று கேட்டேன். விக்கித்துப்போனேன்.
وهو يقول: "اللهم
أوزعنى أن أحمدك حمداً أكافىء به شكر نعمتك التي أنعمت بها عليّ, وفضلتنى على كثير
ممن خلقت تفضيلاً"
قال الأوزاعي: قال عبد الله قلت: والله لآتين هذا الرجل
ولأسألنه أنَّى له هذا الكلام! فهم أم علم أم إلهام ألهم؟
فأتيت الرجل فسلمت عليه فقلت: سمعتك وأنت تقول: اللهم
أوزعنى أن أحمدك حمدا أكافىء به شكر نعمتك التي أنعمت بها على وفضلتنى على كثير من
خلقت تفضيلاً !
فأي نعمة من نعم الله عليك تحمده عليها, وأي فضيله تفضل
بها عليك تشكره عليها. ؟
قال: وما ترى ما صنع ربي, والله لو أرسل السماء علي
ناراً فأحرقتنى وأمر الجبال فدمرتنى وأمر البحار فغرقتنى وأمر الأرض فبلعتنى ما
ازددت لربى إلا شكراً؛ لما أنعم على من لساني هذا.
ஆம்! அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். “அல்லாஹ்வே! என்னை எல்லாவற்றையும் கொண்டு போதுமாக்கி வைத்திருக்கின்றாய், அதற்காக காலமெல்லாம் உன்னைப் புகழ்ந்து கொண்டே இருக்கும் தவ்ஃபீக்கை எனக்கு நீ வழங்கியருள்வாயாக!
நீ படைத்த படைப்புகள் எல்லாவற்றையும் விட என்னை மேன்மையாக்கி வைத்து, எனக்கு உன் புறத்திலிருந்து உன் அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றாய் அதற்காக, காலமெல்லாம் உனக்கு நன்றி செலுத்தும் தவ்ஃபீக்கைத் தந்தருள்வாயாக!” என்று அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, நான் ஸலாம் சொல்லி, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “ நீங்கள் இன்னின்னவாறு துஆச் செய்ய நான் என் செவியால் கேட்டேன்.
“அல்லாஹ் உங்களுக்கு என்ன நிஃமத்தை வழங்கி விட்டான்? என்று அவனிடம் அவனைப் புகழ்வதற்கு தவ்ஃபீக்கையும், என்ன மேன்மையை வழங்கி விட்டான்? என்று நன்றி செலுத்துவதற்கு தவ்ஃபீக்கையும் கேட்கின்றீர்கள்” என்றேன்.
அதற்கவர், “அல்லாஹ் என்னோடு நடந்து கொண்டிருக்கும் முறையை நீர் அறிய மாட்டீர்! அவன் நினைத்திருந்தால் வானத்தில் இருந்து என் மேல் நெருப்பை இறக்கி கரித்திருக்கலாம். அவன் நாடியிருந்தால் அருகில் இருக்கிற மலையில் இருந்து ஒரு பாறையை உருளச் செய்து என்னை நசுக்கி இருக்கலாம். அவன் நினைத்திருந்தால் இந்த கடல் நீரால் என்னை மூழ்கடிக்க வைத்திருக்கலாம். அவன் நாடியிருந்தால் இந்த பூமியைக் கொண்டு என்னை விழுங்கச் செய்திருக்கலாம். ஆனால், இப்படியெல்லாம் அவன் செய்யவில்லையே! அதற்காக நான் எவ்வளவு அதிகமாக நன்றி செலுத்த வேண்டும்.
ஏன்? என் உடல் உறுப்புக்கள் எல்லாம் செயலிழந்து போனாலும் இந்த நாவை எவ்வித சேதாரமும் இன்றி தந்திருக்கின்றானே? இது என் மீது என் ரப்பு செய்த மகத்தான அருட்கொடை இல்லையா? என்று கேட்டார்.
ولكن يا عبد الله؛ إذ
أتيتني! لي إليك حاجة؟ قد تراني على أي حالة أنا. أنا لست أقدر لنفسى على ضرّ ولا
نفع, ولقد كان معي بُني لي يتعاهدني في وقت صلاتي فيوضيني, وإذا جعت أطعمني وإذا
عطشت سقاني, ولقد فقدته منذ ثلاثة أيام؟ فتحسّسه لي رحمك الله؟
فقلت: والله ما مشي خلق في حاجة خلق كان أعظم عند الله
أجرا ممن يمشي في حاجة مثلك.
فمضيت في طلب الغلام فما مضيت غير بعيد حتى صرت بين
كثبان من الرمل, فإذا أنا بالغلام قد افترسه سبع وأكل لحمه, فاسترجعت, وقلت: أنّي
لي وجه رقيق! آتى به الرجل؟
فبينما أنا مقبل نحوه؛ إذ خطر على قلبي ذكر أيوب النبي صلى
الله عليه و سلم,
பின்னர், அவர் என்னிடம் என் பெயரைக் கூறி எனக்கு ஓர் உதவி செய்வீரா? என்று கேட்டு விட்டு,
நான் எந்த நிலையின் இருக்கின்றேன் என்பது உமக்கு தெரியும். என்னால் எந்த ஒன்றையும் சுயமாக செய்ய இயலாது. எனக்கு ஒரு பணியாள் இருந்தார். அவர் தான் எனக்கு பசிக்கும் போது உணவு கொடுப்பார். நான் தாகித்தால் தண்ணீர் கொடுப்பார். தொழுகை நேரம் வருகிற போது உளூ செய்யவும், தொழுகைக்காக என்னை நிற்க, அமர வைக்கவும் உதவி செய்வார்.
மூன்று நாட்களாக அவரைக் காணவில்லை. அவரைக் கொஞ்சம் தேடி கண்டு பிடித்து என்னிடம் அழைத்து வருவீரா?” என்று கேட்டார்.
அதற்கு நான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியைப் பெற்றுத்தருகிற ஒரு காரியத்தை எம்மைச் செய்யுமாறு கூறியிருக்கின்றீர்! நிச்சயம் இந்த உதவியை நான் செய்கின்றேன் என்று கூறி விடை பெற்று அவரை தேடி அருகில் இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் நுழந்தேன்.
சிறிது தூரம் கூட சென்றிருக்கமாட்டேன். அங்கே, காட்டு விலங்குகளால் ஒருவரின் உடல் சின்னா பின்னமாகி கிடப்பதைப் பார்த்தேன். அநேகமாக அவரின் பணியாளராகத் தான் இருப்பார் என முடிவு செய்தேன்.
அங்கிருந்து திரும்பும் போது ஏனோ எனக்கு அய்யூப்
நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையும், அவர்கள்
காத்த பொறுமையும் நினைவுக்கு வந்தது.
فلما أتيته سلّمت عليه, فردّ عليّ السلام. فقال:
ألست بصاحبي؟ قلت
بلى. قال: ما فعلت في حاجتي؟
فقلت: أنت أكرم على الله أم أيوب النبي؟
قال بل أيوب النبي. قلت: هل علمت ما صنع به ربه! أليس قد
ابتلاه بماله وآله وولده؟
قال: بلى. قلت: فكيف وجده؟ قال: وجده صابراً شاكراً
حامداً.
قلت: لم يرض منه ذلك؛ حتى أوحش من أقربائه وأحبائه؟ قال:
نعم. قلت: فكيف وجده ربه؟ قال: وجده صابراً شاكراً حامداً. قلت: فلم يرض منه بذلك
حتى صيّره عرضاً لمارّ الطريق.
هل علمت! قال: نعم. قلت: فكيف وجده ربه؟ قال: صابراً
شاكراً حامداً أوجز رحمك الله. قلت: له إن الغلام الذي أرسلتني في طلبه وجدته بين
كثبان الرمل وقد افترسه سبع, فأكل لحمه؛ فأعظم الله لك الأجر, وألهمك الصبر.
فقال المبتلى: الحمد لله الذي لم يخلق من ذريتي خلقا
يعصيه فيعذبه بالنار, ثم استرجع, وشهق شهقة؛ فمات.
நேராக, அவரிடம் வந்தேன். அவர் என்னிடம் அவரின் பணியாளர் குறித்து கேட்டார்.
நான் அவரிடம் “அல்லாஹ்விடத்தில் நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் சிறந்தவரா? அல்லது நீர் சிறந்தவரா? என்று கேட்டேன்.
அதற்கவர், சந்தேகமற நபி அய்யூப் (அலை) அவர்களே மிகச் சிறந்தவர் என்றார்.
அய்யூப் (அலை) அவர்களோடு ரப்பு எப்படி நடந்து கொண்டான்? என்பதை நீர் அறிவீரா? அவர்களின் பொருளாதாரத்திலும், அவர்களின் குடும்பத்திலும், பிள்ளைச் செல்வத்திலும் அல்லாஹ் சோதனையை ஏற்படுத்த வில்லையா? என்று கேட்டேன்
அதற்கவர், ஆம்! என்றார். அப்போது நான், அந்த நேரத்தில் அய்யூப் அலை அவர்கள் ரப்போடு எப்படி நடந்து கொண்டார்கள்? என்று கேட்டேன்
அதற்கவர், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவராகவும், அல்லாஹ்வைப் புகழ்ந்தவராகவும், பொறுமையாளராகவும் நபி அய்யூப் அலை அவர்கள் நடந்து கொண்டார்கள்” என்றார்.
மீண்டும் நான் அவரிடம் “அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் உறவுகளும், சமூகமும் உறவைத் துண்டித்து, பாதைகளில் நடமாடும் போது கேலியும் கிண்டலும் செய்தார்களே! அதை நீர் அறிவீரா? என்றேன்
அதற்கவர், ஆம்! என்றார். அப்போது நான், அந்த நேரத்தில் அய்யூப் அலை அவர்கள் ரப்போடு எப்படி நடந்து கொண்டார்கள்? என்று கேட்டேன்.
அதற்கவர், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவராகவும், அல்லாஹ்வைப் புகழ்ந்தவராகவும், பொறுமையாளராகவும் நபி அய்யூப் அலை அவர்கள் நடந்து கொண்டார்கள்” என்றார்.
அப்போது நான், அல்லாஹ் உமக்கு நிரப்பமாக அருள் புரிவானாக! உம்முடைய பணியாளரை காட்டு விலங்குகள் கடித்துக் குதறி கொன்று விட்டன. அவரின் உடல்களை தின்று விட்டன.
அல்லாஹ் உமக்கு மகத்தான நற்கூலியை வழங்குவானாக! அல்லாஹ் உமக்கு பொறுமையை வழங்குவானாக! என்றேன்
அப்போது அவர், இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவனுக்கு மாறு செய்து நரகத்தை தண்டனையாக பெறுகிற எந்த ஒருவரையும் என் சந்ததியில் படைக்காமல் காத்தருளினானே அத்தகைய அல்லாஹ்வுக்கே! என்று துஆச் செய்து விட்டு இறந்து போன அவரின் பணியாளருக்காக இரங்கல் (இன்னா லில்லாஹ்..) கூறிவிட்டு, உடலை ஒரு உலுக்கு உலுக்கி இறந்து போனார்
فقلت: انا لله وانا اليه راجعون, عظمت مصيبتي. رجل
مثل هذا إن تركته أكلته السباع, وإن قعدت لم أقدر على ضرّ ولا نفع. فسجّيته بشملة
كانت عليه, وقعدت عند رأسه باكياً. فبينما أنا قاعد؛ إذ تهجم على أربعة رجال!
فقالوا: يا عبد الله ما حالك وما قصتك؟
فقصصت عليهم قصتي وقصته! فقالوا لي: اكشف لنا عن وجهه
فعسى أن نعرفه؟ فكشفت عن وجهه؛ فانكبّ القوم عليه, يقبّلون عينيه مرّة ويديه أخرى,
ويقولون: بأبي؛ عين طال ما غضّت عن محارم الله. وبأبي؛ وجسمه طال ما كنت
ساجداً والناس نيام.
فقلت: من هذا يرحمكم الله؟
فقالوا: هذا أبو قلابه الجرمي صاحب ابن عباس؛ لقد كان
شديد الحب لله, وللنبيّ صلى الله عليه وسلم فغسّلناه وكفناه بأثواب كانت معنا
وصلينا عليه ودفناه.
فانصرف القوم وانصرفت إلى رباطى؛ فلما أن جنّ عليّ
الليل, وضعت رأسي, فرأيته فيما يرى النائم في روضة من رياض الجنة وعليه حلّتان من
حلل الجنّة وهو يتلو الوحي: {سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار}.
فقلت: ألست بصاحبي؟ قال: بلى! قلت: أنَّى لك هذا؟ قال:
إن لله درجات لا تنال إلا بالصبر عند البلاء
والشكر عند الرخاء
مع خشية الله عز و جل في السر والعلانية".
நானும் இன்னா லில்லாஹ்.. சொல்லி விட்டு எனக்கு பெரிய சோதனை ஏற்பட்டு விட்டதாக நான் கருதினேன். ஆம்! ஆள் அரவம் இல்லாத தீவு ஒன்றின் காட்டுக்குள் இறந்து போன ஒரு ஜனாஸாவை எப்படி விட்டுச் செல்வது? என்ன செய்வது? என்று தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் என் நிலையை நினைத்து நான் தலை மேல் கை வைத்து அழுது கொண்டிருந்தேன்.
அப்போது, அங்கே நான்கு நபர்கள் அங்கே வந்தார்கள். ஏன் அழுகின்றீர்? என்று விசாரித்தார்கள்.
நான் நடந்த சம்பவத்தை ஒன்று விடாமல் கூறினேன். அப்போது அவர்கள் ஆச்சர்யத்தோடு அந்த நல்ல மனிதரின் முகத்தை ஒரு தடவை திறந்து காட்டுங்களேன்!” என்றார்கள்.
நானும் திறந்து காட்டினேன். வந்த நால்வரும் அவரின் நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டார்கள். இந்தக் கண்கள் அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டும் தாழ்த்திக் கொண்ட கண்கள். இந்த உடல் மக்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்த போது அல்லாஹ்வை வணங்கி வழிபட்ட உடல் என்று வாழ்த்துக் கூறினார்கள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை! என்ன நடக்கிறது இங்கே? யார் இவர்கள்? இறந்து போன அந்த மனிதர் யார்? என்ற கேள்விகள் என்னை துளைத்துக் கொண்டே இருக்க, ஒருவாராக இயல்பு நிலைக்கு திரும்பி அந்த நால்வரிடமும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்! முதலில் இவர் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்?!” என்றேன்.
அதற்கவர்கள், “இவர் அபூகிலாபா அப்துல்லாஹ் இப்னு ஜைத் அல் ஜுர்மீ (ரஹ்) அவர்கள் ஆவார்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரும், பணியாளரும் ஆவார்கள்.
அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அளவு கடந்த நேசமும், காதலும் கொண்டவர்கள் பஸராவின் மிகப்பெரிய வணக்கசாலியும், உலகப்பற்றற்றவரும் ஆவார்” என்று கூறினார்கள்.
பின்னர், நாங்கள் ஐவரும் சேர்ந்து அவர்களைக் குளிப்பாட்டினோம். நாங்கள் கொண்டு வந்திருந்த எங்களின் ஆடையில் கஃபன் செய்தோம். பின்னர் ஜனாஸா தொழுகை தொழுவித்தோம். பின்னர் நல்லடக்கமும் செய்தோம்.
அதன் பின்னர் அந்த நால்வரும் சென்று விட்டார்கள். நானும் என்னுடைய கூட்டத்தார்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து விட்டேன்.
இரவில் என்னுடைய கனவில் நான் அவரைக் கண்டேன். அவர் சுவனத்தில் இருக்கின்றார். அவர் சுவனத்து பட்டாடைகள் இரண்டு அணிந்திருக்கக் கண்டேன். மேலும், அவர் “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உலகில் நீங்கள் பொறுமையுடன் வாழ்ந்து வந்த காரணத்தால் இன்று இதற்குத் தகுதி பெற்றிருக்கின்றீர்கள்” என்ற ( அல்குர்ஆன்: 13: 24 ) வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
நான் அவரிடம் “நீங்கள் இன்ன நபர் தானே? என்று கேட்டேன். அவர் ஆம்! என்றார். இந்த அந்தஸ்துகள் எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது? என்று கேட்டேன்.
அதற்கவர், “திண்ணமாக! அல்லாஹ்விடத்தில் சில அந்தஸ்துகள் இருக்கின்றன. அவைகளை “சோதனைகளின் போது பொறுமை காப்பதன் மூலமும், நல்ல நிலையில் இருக்கும் போது ரப்புக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், அந்தரங்கத்திலும், வெளிரங்கத்திலும் அல்லாஹ்வைப் பயப்படுவதன் மூலமும் தவிர பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார்.
( நூல்: கிதாப் அஸ் ஸிகாத் லிஇமாமி இப்னு ஹிப்பான், பாகம், 5, பக்கம் 2 – 5, அல் ஜன்னத்து வன் நார் வ ஃபக்துல் அவ்லாத் லிஇமாமி சுயூத்தீ, பக்கம் 85 – 87 )
زنيرة
الرومية. كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون.
قيل: كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها. وقيل: كانت مولاة بني عَبْد
الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون: أعمتها اللات والعزى لكفرها بهما!
فقالت: وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد
بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش: هذا من سحر مُحَمَّد. ولما رأى
أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين
أعتقهم أبو بكر.
ஸின்னீரா (ரலி) அவர்கள், ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்மணிகளில் ஒருவர்.
பனூ மக்ஸூமீ அல்லது பனூ அப்துத் தார் கோத்திரத்தார்களிடையே அடிமை ஊழியம் செய்து வந்தார்கள்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். விரும்பிய போதெல்லாம் அபூ ஜஹ்ல் கொடுமை செய்து வந்தான்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிற போது அவர்களுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தது. அப்போது மக்கா முஷ்ரிக்குகள் ஸின்னீரா (ரலி) அவர்களிடம் வந்து, ”நீ லாத் உஸ்ஸாவை நிராகரித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தான் லாத்தும் உஸ்ஸாவும் உம் கண்களை குருடாக்கி விட்டனர்” என்றார்கள்.
அது கேட்ட ஸின்னீரா (ரலி) அவர்கள், “எனக்கு ஏற்பட்ட இந்த திடீர் பாதிப்பு வானில் உள்ளோனின் நாட்டமாகும். என் பார்வை மீண்டும் திருப்பித் தருவதற்கு என் இறைவன் மிகவும் ஆற்றல் உடையவன் ஆவான்” என்றார்கள்.
மறுநாளே அவர்களுக்கு கண் பார்வை கிடைத்து விட்டது. இந்தச் செய்தியை கேள்வி பட்டு, பார்த்துச் சென்ற மக்கா முஷ்ரிக்குகள் “சத்தியமாக! இது முஹம்மதின் {ஸல்} சூனியம் தான் என்று கூறினார்கள்.
இறுதியில் அபூ பக்ர் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள். ( நூல்: உஸ்துல் காபா )
அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஸலாத்தைப் பெற்ற முதல் பெண்மணி.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இந்த பூவுலகில் நபிமார்களுக்குப் பின்னர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஸலாம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்கள். முதலில் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பெண்மணியும் கதீஜா (ரலி) அவர்கள் தான்.
பெருமானார் {ஸல்} அவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களோடு வாழ்ந்தது 25 ஆண்டுகள். நபித்துவத்திற்கு முன்பாக 15 ஆண்டுகள் நபித்துவத்திற்கு பின்பாக 10 ஆண்டுகள் ஆனால், மாநபி {ஸல்} அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்னை கதீஜா (ரலி) அவர்களை நினைத்துக் கொண்டே இருந்தார்கள்
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மனைவியாக, இறைத்தூதரை நம்பிக்கை கொண்ட விசுவாசியாக, அல்லாஹ்வின் தூதரை காதலித்த நேசராக நின்று வாழ்வில் செய்த எந்த தியாகத்தை தான் மாநபி {ஸல்} அவர்களால் மறக்க முடியும்??
பெருமானார் {ஸல்} அவர்களைத் திருமணம் செய்த நாள் முதற்கொண்டு ஷுஅப ஆபூதாலிபில் மாநபி {ஸல்} அவர்களோடு தங்கி அங்கேயே நோய்வாய் பட்டு அல்லாஹ்வின் தூதருக்காகவே வாழ்ந்து அல்லாஹ்வின் தூதருக்காகவே மரணித்துப் போனார்களே அந்த தியாகங்களுக்கு ஈடு ஏது?
அல்லாஹ்வின் ஸலாம் தான் அவர்களை
ஆறுதல் படுத்தும், அமைதி படுத்தும்.
روى البخاري من حديث أبي هريرة رضي الله عنه قال: "أتى
جبريل النبي صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، هذه خديجة قد أتَتْ، معها
إناء فيه إدام، أو طعام، أو شراب، فإذا هي أتتك، فاقرأ عليها السلام من ربِّها
ومنِّي، وبشِّرها ببيت في الجنة من قصب، لا صخب فيه، ولا نصب"
அல்லாஹ்விடம் இருந்து தூதுச் செய்தியை மாநபி {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்த துவக்க காலகட்டத்தின் ஒரு நாளில் மாநபி {ஸல்} அவர்கள் ஹிராவில் இருக்கும் பொழுது, தினந்தோரும் அல்லாஹ்வின் தூதருக்கு உணவும் தண்ணீரும் சுமந்து வரும் கதீஜா (ரலி) ஹிராவிற்கு வெளியே வந்து கொண்டிருக்கின்றார்கள்.
அப்போது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி {ஸல்} அவர்களின் திருச்சமூகம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ அன்னை கதீஜா (ரலி) அவர்கள் தங்களிடம் ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அன்னாருக்கு றப்புடையவும், என்னுடையவும் ஸலாம் சொல்லுங்கள்.
சுவனத்தில் முத்தாலான மாளிகை ஒன்று இவர்களுக்குண்டு. அங்கே, எவ்வித சப்தமோ வீண் தொல்லையோ இராது என்ற நற்செய்தியை அவர்களுக்குச் சொல்லுங்கள்!“ என்றனர். ( நூல் : புகாரி,பாகம் – 01, பக்கம் – 539 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஸலாமத்தான
வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மிகவும் அருமை
ReplyDeleteMasha allah
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteஅல்லாஹ் தங்களுக்கு ஸலாமத்தான வாழ்வை என்றென்றும் நிலவச்செய்வானாக! ஆமீன் 🤲. جزاكم الله خيرا كثيرا يا استاذ الكريم திருப்பூர்