Sunday, 27 February 2022

மிஃராஜ் தின சிந்தனை! மகத்தான இரண்டு அன்பளிப்புகள்!!

 

மிஃராஜ் தின சிந்தனை!

மகத்தான

இரண்டு அன்பளிப்புகள்!!

 


அல்லாஹ் நபிமார்களுக்கு வழங்கிய அற்புதங்களின் பட்டியலை அல்குர்ஆன் வழியாக பல்வேறு இடங்களில் அடையாளப் படுத்தி இருக்கின்றான்.

ஆதம்  (அலை) அவர்களைப் படைத்தது முதற் கொண்டு  ஈஸா அலை அவர்களின் பிறப்பு மற்றும் வானில் உயர்த்தப்பட்டது வரையிலான நபிமார்களோடு தொடர்புடைய அற்புதங்கள் அனைத்தையும் நாம் ஆய்வு செய்து பார்த்தால் நாம் பின் வரும் முடிவுக்கு வந்து விடுவோம்.

ஒரு நபிக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதங்கள் இன்னொரு நபிக்கு வழங்கப்பட்ட அற்புதங்களை விட  சிறப்பாக அமைந்திருக்கிறது.

அப்படியானால், ஆன்மாக்களின் உலகிலே அறிமுகப்படுத்தப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களிடம் பைஅத் வாங்கப்பட்ட நபி, எதிர் பார்க்கப்பட்ட இறுதி நபி, முன் சென்ற வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட நபி, நபிமார்களின் தலைவர், மனித, ஜின் இனங்களின் தலைவர் என பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான " முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு வழங்கப்படும் அற்புதம் இதுவரை வழங்கப்பட்ட அற்புதங்களை விட மிகப் பிரம்மாண்டமாகத் தானே அமைந்திருக்கும்?!!

ஆம்! அப்படி எதிர்பார்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான அற்புதமாகத் தான் பல்வேறு அற்புதங்களின் குவியலாகத் தான் மிஃராஜ் விண்ணேற்றப் பயணத்தை நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்.

அந்தப் பயணம் தொடர்பான விஷயங்களை நாம் அப்படியே நாம் நம்ப வேண்டும். சர்ச்சைகளுக்கு இடம் தராமல் நாம் நம்ப வேண்டும். சுருங்கச் சொன்னால் "ஸைய்யிதினா அபூபக்ர் சித்தீக் ரலி அவர்கள் போன்று "மிக உறுதியாக" நம்ப வேண்டும்.

மிஃராஜ் பயணத்தின் பல்வேறு நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு படுத்திக் கொள்கின்றோம். பரிமாறிக் கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!!

சங்கையான இந்த இரவில் துவக்கமாக இந்த உம்மத்திற்கு 5000 ஆண்டுகளுக்கும் முன்பாக வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அலை அவர்கள் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை விண்ணேற்றப் பயணத்தின் போது சந்தித்து கொடுத்தனுப்பிய அன்பளிப்பை அனுபவித்துக் கொள்வோம்.

"உங்களின் தந்தை இப்ராஹிம் அலை அவர்கள் எனது உம்மத்தார்களாகிய உங்களுக்கு ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்" என்று நபி ஸல் அவர்கள் கூறி விட்டு  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று கூறினார்கள்.

 

இதோ அந்த அன்பளிப்பு இது தான். நாம் நெஞ்சோடு ஆரத் தழுவி ஏற்றுக் கொள்வோம். நாமும் பதில் சொல்வது தானே நம் நபி நமக்கு காட்டிய வழிகாட்டல்.

நாமும் பதில் சொல்வோம். நான் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்!

வ அலைக்க, வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு யாரஸூலுல்லாஹ்!!.

இரண்டாவதாக இந்த உம்மத்திற்கு அகிலத்தின் அதிபதியான அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பெருமானார் ஸல் அவர்களிடம் கொடுத்தனுப்பிய அன்பளிப்பையும் அனுபவிக்க ஆசைப்படுவோம்!

முதல் அன்பளிப்பை அனுபவிக்க ஒரு நிமிடம் கொடுத்தோம்! இறைவன் கொடுத்தனுப்பிய அன்பளிப்பை அனுபவிக்க வாழ்நாள் முழுவதும் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

தயாராகலாமா? இன்ஷாஅல்லாஹ் தயாராகுவோம்!!

அகிலத்தின் அதிபதி கொடுத்தனுப்பிய அன்பளிப்பு என்ன?

அகிலத்தின் அதிபதியான அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுத்தனுப்பிய அன்பளிப்பு ஐங்காலத் தொழுகையாகும்.

தொழுகையில் அப்படி என்ன தாங்க இருக்கின்றது? என்று நம்மில் அலட்சியமாகக் கேட்பவர்கள் இருந்தால் மாநபி {ஸல்} அவர்கள் கூறிய “குர்ரத்து ஐனீ ஃபிஸ்ஸலாத்தி” என்ற ஒற்றை வார்த்தையைப் பதிலாக சொல்லலாம்.

தொழுகையில் எல்லாம் இருக்கின்றது. தொழுகையில் தான் எல்லாம் இருக்கின்றது. இது தான் இந்த ஒற்றை வார்த்தையின் விளக்கம்.

முதலில் நாம் அன்பளிப்பு செய்தவனின் மாண்பை உணர வேண்டும். பிறகு அன்பளிப்பு செய்யப்பட்ட தொழுகையின் கன பரிமாணத்தை விளங்க வேண்டும்.

மாநபி {ஸல்} அவர்கள் அன்பளிப்புச் செய்த அகிலத்தின் இறைவனான அல்லாஹ்வின் மாண்பை விளங்கி இருந்தார்கள்.

அன்பளிப்புச் செய்யப்பட்ட தொழுகை என்பது ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நபி ஈஸா (அலை) அவர்கள் வரையிலான லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வோடு உரையாடிட, நெருங்கிட, அல்லாஹ்வின் புறத்தில் இருந்து உதவிகளை விரைவாகப் பெற்றிட பயன்படுத்திய உன்னதமான துணைச் சாதனம் என அந்த அன்பளிப்பின் கன பரிமாணத்தைப் புரிந்து இருந்தார்கள்.

ஆதலால் தான், பலத்த காற்று வீசும் போதும் இடி இடிக்கும் போதும், மின்னல் கீற்றாய் ஒளிரும் போதும் பள்ளிக்கு விரைந்து சென்று தொழ முடிந்தது.

எதிரிகள் ஆயுதம் தரித்து, கூடாரமடித்து கொன்று குவிக்க நேரெதிரே குவிந்திருந்த போதும் ஆசுவாசமாய் ஸஜ்தாவில் வீழ்ந்து இறைவனை தொழ முடிந்தது.

தேவைகளும், பிரச்சினைகளும், நெருக்கடிகளும் சூழ்ந்து குரல்வளையை நெருக்கும் போது இஸ்திகாரா, ஹாஜத் நஃபில் என மன ஓர்மையோடு தொழுகையில் ஈடுபட முடிந்தது.

“குர்ரத்து ஐனீ ஃபிஸ்ஸலாத்தி” என்பது மாநபி {ஸல்} அவர்கள் மொழிந்த ஒற்றை வார்த்தை அல்ல. வாழ்க்கையின் அனுபவம் இல்லையில்லை, அது தான் மாநபி {ஸல்} அவர்களின் வாழ்க்கை.

மாநபி {ஸல்} அவர்கள் தொழுகைக்கு கொடுத்த முக்கியத்துவம்...

1.   பயணங்களில் சோர்வுடன் இருக்கும் போது...

أَبِي قَتَادَةَ رضي الله عنه قال: «سِرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَقَالَ: بَعْضُ القَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلاَةِ، قَالَ بِلاَلٌ: أَنَا أُوقِظُكُمْ...» (رواه البخاري). وفي رواية لأحمد قال صلى الله عليه وسلم: «احْفَظُوا عَلَيْنَا صَلَاتَنَا». وفي حادثة أخرى قال جُبَيْرُ بْنُ مُطْعِمٍ رضي الله عنه: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَقَالَ: مَنْ يَكْلَؤُنَا اللَّيْلَةَ لَا نَرْقُدُ عَنْ صَلَاةِ الْفَجْرِ؟ فَقَالَ بِلَالٌ: أَنَا...» (رواه النسائي).

 

அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். ஒருநாள் இரவில், மக்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதரே! சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுங்களேன்!” என்று கூறினார்கள். அதற்கு நபி {ஸல்} அவர்கள் “நான் தொழாமல் தூங்கி விடுவேனோ?” என அஞ்சுகின்றேன் என்று கூறினார்கள். அப்போது, பிலால் (ரலி) அவர்கள் “நீங்கள் தூங்கி ஓய்வெடுங்கள்! நான் உங்களை எழுப்பி விடுகின்றேன்” என்று கூறினார்கள்.

ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அவர்களின் இன்னொரு அறிவிப்பில்.. “நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். ஒருநாள் இரவில் நபி {ஸல்} அவர்கள் “ஃபஜ்ர் தொழுகையை தொழாமல் தூங்கிடுவதை விட்டும் இரவு முழுவதும் விழித்திருந்து நம்மை எழுப்புவதற்கு மக்களில் யாரேனும் பொறுப்பேற்கின்றீர்களா?” எனக் கேட்டார்கள். அப்போது, பிலால் (ரலி) அவர்கள் “நான் உங்களை எழுப்புவதற்கு பொறுப்பேற்கின்றேன்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, நஸாயீ )

மனைவியோடு தனிமையில், மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய நேரத்திலும்…

حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعْدٍ الْبَغْلَانِيُّ ، حَدَّثَنَا ابْنُ أَبِي زُرَارَةَ الْحَلَبِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحَ  

 قَالَ

 دَخَلْتُ مَعَ ابْنِ عُمَرَ وَعُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا ، فَسَلَّمْنَا عَلَيْهَا ، فَقَالَتْ

 مَنْ هَؤُلَاءِ ؟ فَقُلْنَا : عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ ، فَقَالَتْ : مَرْحَبًا بِكَ يَا عُبَيْدَ بْنَ عُمَيْرٍ مَا لَكَ لَا تَزُورُنَا ؟ فَقَالَ عُبَيْدٌ : زُرْ غِبًّا تَزْدَدْ حُبًّا

فَقَالَ ابْنُ عُمَرَ : دَعُونَا مِنْ هَذَا ، حَدِّثِينَا بِأَعْجَبِ مَا رَأَيْتِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ : كُلُّ أَمْرِهِ عَجِيبٌ غَيْرَ أَنَّهُ أَتَانِي فِي لَيْلَتِي ، فَدَخَلَ مَعِي فِي فِرَاشِي حَتَّى أَلْصَقَ جِلْدَهُ بِجِلْدِي ، فَقَالَ : " يَا عَائِشَةُ ، أَتَأْذَنِينَ لِي أَنْ أَتَعَبَّدَ لِرَبِّي " ، قُلْتُ : وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ ، وَلَأُحِبُّ هَوَاكَ ، فَقَامَ إِلَى قِرْبَةٍ فَتَوَضَّأَ مِنْهَا ، ثُمَّ قَامَ فَبَكَى ، وَهُوَ قَائِمٌ حَتَّى بَلَغَتِ الدُّمُوعُ حِجْرَهُ ، ثُمَّ اتَّكَأَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ ، فَبَكَى حَتَّى رَأَيْتُ الدُّمُوعَ بَلَغَتِ الْأَرْضَ ، ثُمَّ أَتَاهُ بِلَالٌ بَعْدَمَا أَذَّنَ الْفَجْرُ ، رَآهُ يَبْكِي . قَالَ : لِمَ تَبْكِي يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : " يَا بِلَالُ ، أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا ، وَمَا لِي لَا أَبْكِي ، وَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ "

 إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ سورة آل عمران آية  ، إِلَى قَوْلِهِ فَقِنَا عَذَابَ النَّارِ سورة آل عمران آية  ، ثُمَّ قَالَ : " وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا " .

அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ ஒரு நாள் நானும்,  இப்னு உமர் மற்றும் உபைத் இப்னு உமைர் ( ரலி  அன்ஹுமா )  ஆகியோரும்  அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்க  அன்னையரின் வீட்டிற்குச் சென்றோம்.

வீட்டின் வாசலில் நின்று கொண்டு மொத்தமாக ஸலாம் கூறி அனுமதி கேட்டோம். அப்போது என் குரலை வைத்து கண்டு பிடித்து விட்ட அன்னையர் அவர்கள் உடன்  வந்திருப்பவர்கள் யார்? என்று வினவினார்கள்.

அதற்கு, நான் என்னோடு இப்னு உமர் (ரலி) அவர்களும், உபைத் இப்னு உமைர் (ரலி) அவர்களும் வந்திருப்பதாகக் கூறினேன்.

அதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உபைத் இப்னு உமைரே! உமது வரவு நல்வரவாகட்டும்! நீண்ட நாட்களாக நம்மை சந்திக்க வராததன் காரணம் தான்  என்ன?” என்று வினவினார்கள்.

அதற்கு, உபைத் அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரே!  இடைவெளி விட்டு சந்தித்தால் நேசம் அதிகமாகும் அல்லவா?” அது தான் காரணம்  என்றார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் உங்களால் மறக்கவே முடியாத தருணம்  ஏதேனும் உண்டா? அப்படியிருந்தால் எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்  என்றார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கை  முழுவதுமே மறக்க முடியாத தருணங்கள் தானே எனக்கு என்று கூறி விட்டு, என்  மனதை நெகிழச் செய்த ஓர் நிகழ்வினை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கின்றேன்  என்று கூறிய ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள்.

என்னோடு தங்கும் முறை உள்ள ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் {ஸல்}  அவர்கள் என் வீட்டிற்கு வருகை தந்தார்கள். என்னோடு மிக நெருங்கி அமர்ந்தார்கள்.  பின்பு என்னிடம் ஆயிஷாவே! இன்றிரவு முழுவதும் என் இறைவனை நான் வணங்கிட விரும்புகின்றேன்! எனக்கு கொஞ்சம் அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள்.

 

அதற்கு, நான் அல்லாஹ்வின் தூதரே! உங்களின் நெருக்கத்தை எவ்வாறு நான்  விரும்புகின்றேனோ, அது போன்றே உங்களது விருப்பங்களையும் நான் விரும்புகின்றேன்! தாராளமாக இரவு முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எழுந்து, உளூ செய்து விட்டு வந்து  தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். பின்பு நீண்ட நேரம் அழுதவர்களாக நின்றார்கள்.  அவர்களின் தாடியெல்லாம் நனையும் அளவு அழுதார்கள். அவர்களின் கண்ணீர்  நபிகளாரின் தொடையையும் நனைத்தது.

தொழுது முடித்ததன் பின்னர், வலது புறமாக ஒருக்கணித்து அமர்ந்து, வலது  கையை வலது தொடையின் மீது வைத்தவர்களாக அழுது கொண்டே இருந்தார்கள்.  அவர்களின் அழுகையால் வீடு முழுவதும் நனைந்து இருந்தது.

இதே நிலையில் ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கும் விடுக்கப்பட்டது. அண்ணலாரைக் காணாத பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

அண்ணலாரை அழுத நிலையில் கண்ட பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின்  தூதரே! எதற்காக நீங்கள் அழ வேண்டும்? அல்லாஹ் தான் உங்களின் முன் பின்  பாவங்களை மன்னித்து விட்டானே?” என கனிவோடு கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் பிலாலே! நான் அல்லாஹ்விற்கு  நன்றியுணர்வுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கூறி விட்டு, இப்போது தான் ஆலுஇம்ரானின் 190 முதல் 193 வரையிலான இறைவசனங்கள் இறக்கப்பட்டது.

எவன் அதை ஓதியதன் பின்னர் அந்த இறைவசனத்தை சிந்திக்க வில்லையோ  அவன் மீது நாசம் உண்டாகட்டும்!” என்று கூறினார்கள்.               ( நூல்: புகாரி )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையில் அன்னை  ஆயிஷா (ரலி) அவர்களது இதயத்தை நெகிழச் செய்த, நீங்காத பசுமையாய், மறக்க  முடியாத தருணமாய் அமைந்த ஒன்றாக எதைத் தேர்ந்தெடுத்தார்கள்?

உடல் தளர்வுடன் இருக்கும் போதும்…


عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான்  அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு அண்ணலாரைக் காண்பதற்காகச் 

சென்றேன். அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்தபின் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான் கண்டேனே!  உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அபூஹுரைராவே! பசி தான் காரணம் என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்}  அவர்கள் என்னை நோக்கி அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன்!  என்று அழுகின்றீர்கள்?” நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது என்று  பதில் கூறினார்கள்.                                              ( நூல்: அபூதாவூத் )

முழு மனதோடும்… நன்றியுணர்வோடும்… ஆர்வத்தோடும்…


وعن عائشة رضي الله عنها قالت: { كان النبي يقوم من الليل حتى تتفطر قدماه. فقلت له: لِمَ تصنع هذا يا رسول الله، وقد غُفر لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال: أفلا أكون عبداً شكوراً؟ } [متفق عليه].

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர்  {ஸல்} அவர்கள் தங்களின் இரு பாதங்கள் வீங்க நின்று தொழுவார்கள்.  நான் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தான் அல்லாஹ்வால் முன் பின் பாவங்கள்  மன்னிக்கப்பட்டவர்களாக இருக்கின்றீர்களே! ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக்  கொள்கின்றீர்கள்?” என்று கேட்டேன்.

அப்போது, அண்ணலார் நான் அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக ஆக  வேண்டாமா?” என்று பதில் கூறினார்கள்.

 

وعن حذيفة قال: { صليت مع النبي ذات ليلة، فافتتح البقرة، فقلت: يركع بها، ثم افتتح النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسلاً، إذا مرّ بآية فيها تسبيح سبّح، وإذا مرّ بسؤال سأل، وإذا مر بتعوّذ تعوذ... الحديث } [رواه مسلم].

ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :“ஒரு நாள் இரவு நான்  நபி  {ஸல்} அவர்களுடன் இரவில் தொழுதேன். அப்போது, அண்ணலார் ஒரே ரக்அத்தில் சூரா பகரா, அந்நிஸா, ஆலுஇம்ரான் ஆகிய சூராக்களை ஓதினார்கள்.

ஒவ்வொரு வசனங்களைக் கடந்து செல்லும் போது அதில் தஸ்பீஹ் சம்பந்தமான ஆயத் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள். துஆவுடைய வசனம் வந்தால் துஆ கேட்பார்கள். பாதுகாப்பு சம்பந்தமான வசனம் வந்தால் பாதுகாப்பு கேட்பார்கள்.

وعن ابن مسعود قال: { صليت مع النبي ليلة، فلم يزل قائماً حتى هممت بأمر سوء. قيل: ما هممت؟ قال: هممت أن أجلس وأَدَعَهُ ! } [متفق عليه].

 

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் இரவு நான்  நபிகளாருடன் இரவுத் தொழுகையில் ஈடுபட்டேன். நீண்ட நேரம் நின்று தொழுதார்கள்.  அப்போது நான் சீக்கிரமாக தொழுகையை அண்ணலார் முடித்து விட மாட்டார்களா?”  என நினைத்தேன்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம், நீண்ட பல சூராக்களை ஓதி பாதங்களும், கால்களும் வீங்கும் அளவுக்கு நின்று  தொழுவார்கள். காரணம் கேட்ட அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன பதில் அல்லாஹ்வுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்பது தான்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தை மாநபி {ஸல்} அவர்கள் அடைந்திருந்த போதும்..

قالت عَائِشَةَ رضي الله عنها: «ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَصَلَّى النَّاسُ؟ قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ، قَالَ: ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ. قَالَتْ: فَفَعَلْنَا، فَاغْتَسَلَ، فَذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَصَلَّى النَّاسُ؟ قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ، قَالَتْ: فَقَعَدَ فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ: أَصَلَّى النَّاسُ؟ قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ، فَقَعَدَ فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ فَقَالَ: أَصَلَّى النَّاسُ؟ فَقُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، وَالنَّاسُ عُكُوفٌ فِي المَسْجِدِ، يَنْتَظِرُونَ النَّبِيَّ عَلَيْهِ السَّلاَمُ لِصَلاَةِ العِشَاءِ الآخِرَةِ، فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي بَكْرٍ بِأَنْ يُصَلِّيَ بِالنَّاسِ... فَصَلَّى أَبُو بَكْرٍ تِلْكَ الأَيَّامَ، ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ مِنْ نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ أَحَدُهُمَا العَبَّاسُ لِصَلاَةِ الظُّهْرِ وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ لِيَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْ لاَ يَتَأَخَّرَ، قَالَ: أَجْلِسَانِي إِلَى جَنْبِهِ، فَأَجْلَسَاهُ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ، قَالَ: فَجَعَلَ أَبُو بَكْرٍ يُصَلِّي وَهُوَ يَأْتَمُّ بِصَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ بِصَلاَةِ أَبِي بَكْرٍ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ» (رواه الشيخان). وفي رواية للبخاري: أن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا إنما حدثت بهذا الحديث لما تذاكروا عندها المُوَاظَبَةَ عَلَى الصَّلاَةِ وَالتَّعْظِيمَ لَهَا، أرادت أن تبين قدر الصلاة عند النبي صلى الله عليه وسلم حتى في شدة مرضه.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம்.

அப்போது பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள்.

பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள்.

பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை இறைத்தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ஒருவரை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்என்றார்கள். அபூபக்ர் (ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்களிடம், ‘உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியானவர்கள்என்று உமர் (ரலி) கூறிவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாள்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ் (ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூபக்ர் (ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது பின் வாங்க வேண்டாம்என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், ‘என்னை அபூபக்ரின் அருகில் அமர்த்துங்கள்எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூபக்ர் (ரலி) தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள்                                           ( நூல்: புகாரி, முஸ்லிம் )

 

நான் ஏன் தொழுகின்றேன்? நான் ஏன் தொழ வேண்டும்? என்கிற இந்த இரண்டு கேள்விகள் சமூகத்திலே தொழுது கொண்டு இருப்பவர்களுக்கும், தொழாமல் இருப்பவர்களுக்கும் எழுகிற கேள்விகளாகும்.

1.   என்னைப்படைத்தற்காக…

يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். ( அல்குர்ஆன்: 2: 20 )

2.   அவன் அருட்கொடைகளை அனுபவித்து வருவதற்காக..

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். ( அல்குர்ஆன்: 2: 22 )

3.   பசி பட்டினியின்றியும், பயம் இன்றியும் வாழ வைத்திருப்பதற்காக..

இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். ( அல்குர்ஆன்: 106:4.)

4.   இறை நினைவு எப்போதும் இருப்பதை உறுதி செய்வதற்காக..

என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. ( அல்குர்ஆன்: 20: 14 )

5. சாமானிய மனிதனாக வாழாமல் இருக்க..

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்; ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.

தொழுகையாளிகளைத் தவிர-( அல்குர்ஆன்: 70: 19-22 )

6. இறையருளைப் பெறுவதற்காக...

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். ( அல்குர்ஆன்: 24: 56 )

7. இணைவைப்பு மற்றும் ஹராமான பொருளாதாரத்தில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக..

(அதற்கு) அவர்கள் ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்என்று (ஏளனமாகக்) கூறினார்கள். ( அல்குர்ஆன்: 11: 87 )

 

8. மானக்கேடான செயல்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக..

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா( சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். ( அல்குர்ஆன்: 29: 45 )

9. மரணத்தின் கேடுகளில் இருந்து காத்துக் கொள்வதற்காக..

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,- “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.

ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை. ( அல்குர்ஆன்: 75: 26-31 )

10. பாழும் நரகில் வீழாமல் இருக்க…

 (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்- குற்றவாளிகளைக் குறித்து- உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ( அல்குர்ஆன்: 74: 40-43 )

 

11, 12, சுவனத்தையும், மேலான ஜன்னத்துல் ஃபிதவ்ஸையும் பெற..

எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

 (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். ( அல்குர்ஆன்: 70: 34,35 )

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். ( அல்குர்ஆன்: 23: 9-11 )

13. வாழ்நாள் முழுவதும் இறை உதவியைப் பெற்றுக் கொண்டே இருக்க..

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 2: 153 )

14. உலகம், மண்ணறை, மறுமையில் வெற்றி பெற...

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். ( அல்குர்ஆன்: 23: 1,2 )

 

தொழ வேண்டும் என முடிவெடுத்தால் பின் வருபவைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.நினைத்த நேரத்தில் அல்ல… குறித்த நேரத்தில் தொழுவது..

முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. ( அல்குர்ஆன்: 4: 103 )

2.   இந்த இரண்டு நிலை பேராபத்து…

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். ( அல்குர்ஆன்: 19: 59 )

3. இந்த மூன்று நிலை பேரபாயம்

தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (அல்குர்ஆன்: 4: 142 )

4.   இந்த நிலைக்கு ஆளாக வேண்டாம்.

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள்  எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். (அல்குர்ஆன்: 107: 4,5 )

ஆகவே, இறைவன் கொடுத்தனுப்பிய தொழுகை எனும் அன்பளிப்பை அனுபவிக்க வாழ்நாள் முழுவதும் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

தயாராகலாமா? இன்ஷாஅல்லாஹ் தயாராகுவோம்!!

 

 

No comments:

Post a Comment