Saturday, 23 April 2022

தித்திக்கும் திருமறை – ரமழான் சிந்தனை:- 23. அழகிய கடனும்... அளப்பரிய நன்மைகளும்...

 

தித்திக்கும் திருமறைரமழான் சிந்தனை:- 23.

அழகிய கடனும்... அளப்பரிய நன்மைகளும்...



அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 22 –வது நோன்பை நோற்று, 23 – வது தராவீஹை நிறைவு செய்து, 23 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் அர் ரஹ்மான் அத்தியாயத்தின் எஞ்சிய 65 வசனங்கள் ஓதப்பட்டு, அல் வாகிஆ, அல் ஹதீத், அல் முஜாதலா, அல் ஹஷ்ர் ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு, 236 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் ஹதீத் அத்தியாயத்தின் 11 மற்றும் 18ம் வசனங்கள் அழகிய கடன் வழங்குவது பற்றியும், அதற்கு கிடைக்கின்ற அளப்பரிய நன்மைகள் பற்றியும் பேசுகின்றன.

مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِيْمٌ ‏

எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கின்றாரோ அவருக்கு, அதனை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கின்றான். அன்றி, அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு.                                            ( அல்குர்ஆன்: 57: 11 )

அழகிய கடன் தொடர்பாக அல்லாஹ் நான்கு இடங்களில் பேசுகின்றான். அதில் இன்று ஓதப்பட்ட அல் ஹதீத் அத்தியாயத்தில் மட்டும் இரண்டு முறை கூறுகின்றான்.

مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا کَثِيْرَةً

وَاللّٰهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَ اِلَيْهِ تُرْجَعُوْنَ

அழகான முறையில் அல்லாஹ்விற்காகக் கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். அன்றி அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.          ( அல்குர்ஆன்:2: 245 )

 

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ‏

அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான்.                            ( அல்குர்ஆன்: 64: 17 )

அல்லாஹ்வுக்கு கடன் தேவைப்படுமா?, தேவைப்படாது. அப்படியெனில், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்என்பதன் அர்த்தம் என்ன?

மக்களுக்கு வழங்கப்படும் கடன், இறைவனுக்கு வழங்கப்படும் அழகிய கடன்என்று திருக்குர்ஆன் ஏன் குறிப்பிடுகிறது என்பதை பின்வரும் நபிமொழி விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்.

وقال رسول الله صلى الله عليه وسلم: رأيت ليلة أسري بي على باب الجنة مكتوباً الصدقة بعشر أمثالها، والقرض بثمانية عشر، فقلت: يا جبريل ما بال القرض أفضل من الصدقة؟ قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة» رواه ابن ماحة.

நபி {ஸல்} அவர்கள் மிஃராஜ் விண்வெளிப் பயணத்தின் போது, சொர்க்கத்தின் வாசலில் ஒரு தர்மம் செய்தால் பத்து மடங்கு கூலி, கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு கூலிஎன்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

ஜிப்ரயீலே! இந்த சிறப்பு ஏன்?’ என நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் யாசகன் தன்னிடத்தில் உள்ளதை பிறரிடம் கேட்கிறான்; கடனாளி தேவைக்காக தன்னிடம் இல்லாததை கேட்கிறான்என்று விளக்கம் அளித்தார்கள். ( நூல்: இப்னு மாஜா )

ஆதலால் தான் தர்மம் செய்வதை  விட கடன் கொடுப்பது சிறந்ததாக நபி {ஸல்} அவர்கள் கூறியிருக்கின்றார்கள். ஏனெனில், இக்கட்டான நிலையில் இருக்கும் ஒருவருக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவரின் பிரச்சினை கடன் மூலம் தீர்த்து வைக்கப்படுவது போன்று அங்கே மனித நேயமும் மலர்கிறது. தர்மம் செய்வதினால் யாசிப்பவரின் தேவை முழுமையாக நிறைவேறாது. இதனால்தான் தர்மத்தை விட கடன் சிறந்ததாக அமைந்துவிடுகிறது.

கடன் என்பது இன்று வணிகமயமாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில், வீட்டுக் கடன், ஆபரணக் கடன், வாகனக் கடன், மாட்டுக் கடன், ஆட்டுக் கடன், என விளம்பரப்படுத்தி அழைக்கப்படுகின்றது. விளம்பரத்தை நம்பி வங்கிகளில் மக்கள் கடன் பெறுகின்றனர். ஆனால், என்ன நடக்கின்றது? கடன் பெற்றவர் கட்டத் தவறும் தவணைக்கு அவகாசம் தருவதில்லை. மாறாக கட்டத் தவறிய நாட்களைக் கணக்கிட்டு அதற்கும் சேர்த்து குறிப்பிட்டத் தொகையை வசூல் செய்துவிடுகின்றன. இஸ்லாமியப் பார்வையில் இது கடனில் வட்டியாகும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடனுக்காக விளம்பரப்படுத்தி அழைப்பு விடப்பட்டதில்லை. மேலும், இன்றைய மக்களைப் போல் அன்றைய மக்கள் கண்டதற்கும் கடன் வாங்கியதில்லை. மாறாக, அவர்கள் கடன் வாங்கியதெல்லாம் அன்றாட வாழ்வாதாரத் தேவைக்கென வாங்கினார்கள்.

இன்றும் அதே போன்று கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற அவசியத்தேவைகளுக்காக கடன் பெறும் மக்களும் இருக்கின்றார்கள். ஆனால், இந்த உம்மத்தில் அவ்வளவு பெரிய தொகைகளை தர யாரும் இல்லாததால் வங்கிகளில் கடன் பெற்று தவணை தராத காரணத்தினால் அவர்களின் நகையும், வீடும் ஏலத்திற்கு வருகின்றது. சிலர் வீடுகளை விற்று விட்டு வாடகை வீடுகளில் குடியேறும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

ஆனாலும், சமூகத்தில் செல்வம் வழங்கப்பட்ட மேன்மக்கள் பலர் இதை வேடிக்கைப் பார்ப்பது இன்று தொடர் கதையாகி வருகின்றது. இது போன்று அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் கேட்பவர்களுக்கும், இது போன்று வங்கிகளில் கடன் பெற்று திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு கடன் வழங்கி உதவி செய்யுமாறும், அப்படி கடன் பெற்றவர்களால் வாங்கிய கடனை தருவதற்கு சிரமப்படுகிற போது பாதியையோ, அல்லது முடிந்த அளவோ, அல்லது முழுவதையுமோ தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அதையே அழகிய கடன் என்றும் அல்லாஹ்வுக்காக வழங்கும் அழகிய கடன் என்றும் இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது.

இவையெல்லாவற்றையும் விட அப்படி கடன் வழங்குபவர்களுக்கு அளப்பரிய நன்மைகள் வழங்கி சிறப்பு படுத்துகின்றது.

حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ ، قَالَ : ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ، قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللهِ تَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ ، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ، قَالَ لَهُ : بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ

அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.                           ( நூல் : அஹ்மத் )

இங்கே இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்யுமளவிற்கு கடன் கொடுத்தவருக்கு பொருளாதார வலிமை இருக்கவேண்டும். அதாவது, கடனைத் தள்ளுபடி செய்யுமளவுக்கு கடன் கொடுத்தவரின் பொருளாதாரம் உயர்ந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் கடனைத் தள்ளுபடி செய்தாலும் அவர் பாதிக்கப்பட மாட்டார். இல்லையென்றால் அவர் கடன் பெறுகிற சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவார்.

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ : حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ قَالَ : أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ كَعْبِبْنِ مَالِكٍ عَنْ كَعْبٍ

أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى يَا كَعْبُ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ قَالَ ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا وَأَوْمَأَ إِلَيْهِ أَيِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللهِ قَالَ قُمْ فَاقْضِهِ

கஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் கொடுத்திருந்த கடனைப் பள்ளிவாசலில் வைத்து நான் கேட்டேன். எங்கள் இருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து கஅபே!என்று கூப்பிட்டார்கள். இதோ! வந்தேன். அல்லாஹ்வின் தூதரே!என்றேன். பாதிஎன்பதைக் காட்டும் விதமாக சைகை மூலம் காட்டி உமது கடனில் இவ்வளவை தள்ளுபடி செய்வீராகஎன்று கூறினார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். எழுவீராக! பாதியை நிறைவேற்று வீராகஎன்று (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                      ( நூல்: புகாரி ) 

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ سَعْدِ بْنِ طَارِقٍ عَنْ رِبْعِىِّ بْنِ حِرَاشٍ عَنْ حُذَيْفَةَ قَالَ

أُتِىَ اللَّهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللَّهُ مَالاً فَقَالَ لَهُ مَاذَا عَمِلْتَ فِى الدُّنْيَا – قَالَ وَلاَ يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا – قَالَ يَا رَبِّ آتَيْتَنِى مَالَكَ فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ وَكَانَ مِنْ خُلُقِى الْجَوَازُ فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ وَأُنْظِرُ الْمُعْسِرَ. فَقَالَ اللَّهُ أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ تَجَاوَزُوا عَنْ عَبْدِى ». فَقَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِىُّ وَأَبُو مَسْعُودٍ الأَنْصَارِىُّ هَكَذَا سَمِعْنَاهُ مِنْ فِى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم

ரிப்ஈ பின் ஹிராஷ் (ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்?” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்என்ற (4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதற்கு அடியான், “என்னுடைய ரட்சகனே! உன்னுடைய பொருளை எனக்கு வழங்கினாய். மக்களிடம் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடன்பட்டவருக்கு (கடனை) தள்ளுபடி செய்வது என்னுடைய குணமாகும். அதனால் (கடன்பட்ட) பணக்காரரிடம் நளினமாகவும், (கடன்பட்ட) வறியவருக்கு தவணையும் அளித்துக் கொண்டிருந்தேன்என்று பதிலளித்தார். உடனே மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ், “இந்த அடியானை விட நான் மிகவும் உரிமை படைத்தவன். எனவே, இந்த அடியானின் பாவத்தைக் கண்டு கொள்ளாது விட்டு விடுங்கள்என்று (மலக்குகளிடம்) கூறுகின்றான்.                 ( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَتَقَارَبَا فِى لَفْظِ الْحَدِيثِ – وَالسِّيَاقُ لِهَارُونَ قَالاَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ أَبِى حَزْرَةَ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ خَرَجْتُ أَنَا وَأَبِى نَطْلُبُ الْعِلْمَ فِى هَذَا الْحَىِّ مِنَ الأَنْصَارِ قَبْلَ أَنْ يَهْلِكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ صَاحِبَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهُ غُلاَمٌ لَهُ مَعَهُ ضِمَامَةٌ مِنْ صُحُفٍ وَعَلَى أَبِى الْيَسَرِ بُرْدَةٌ وَمَعَافِرِىٌّ وَعَلَى غُلاَمِهِ بُرْدَةٌ وَمَعَافِرِىٌّ فَقَالَ لَهُ أَبِى يَا عَمِّ إِنِّى أَرَى فِى وَجْهِكَ سَفْعَةً مِنْ غَضَبٍ. قَالَ أَجَلْ كَانَ لِى عَلَى فُلاَنِ بْنِ فُلاَنٍ الْحَرَامِىِّ مَالٌ فَأَتَيْتُ أَهْلَهُ فَسَلَّمْتُ فَقُلْتُ ثَمَّ هُوَ قَالُوا لاَ. فَخَرَجَ عَلَىَّ ابْنٌ لَهُ جَفْرٌ فَقُلْتُ لَهُ أَيْنَ أَبُوكَ قَالَ سَمِعَ صَوْتَكَ فَدَخَلَ أَرِيكَةَ أُمِّى. فَقُلْتُ اخْرُجْ إِلَىَّ فَقَدْ عَلِمْتُ أَيْنَ أَنْتَ فَخَرَجَ فَقُلْتُ مَا حَمَلَكَ عَلَى أَنِ اخْتَبَأْتَ مِنِّى قَالَ أَنَا وَاللَّهِ أُحَدِّثُكَ ثُمَّ لاَ أَكْذِبُكَ خَشِيتُ وَاللَّهِ أَنْ أُحَدِّثَكَ فَأَكْذِبَكَ وَأَنْ أَعِدَكَ فَأُخْلِفَكَ وَكُنْتَ صَاحِبَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَكُنْتُ وَاللَّهِ مُعْسِرًا. قَالَ قُلْتُ آللَّهِ قَالَ اللَّهِ. قُلْتُ آللَّهِ. قَالَ اللَّهِ . قُلْتُ آللَّهِ. قَالَ اللَّهِ. قَالَ فَأَتَى بِصَحِيفَتِهِ فَمَحَاهَا بِيَدِهِ فَقَالَ إِنْ وَجَدْتَ قَضَاءً فَاقْضِنِى وَإِلاَّ أَنْتَ فِى حِلٍّ فَأَشْهَدُ بَصَرُ عَيْنَىَّ هَاتَيْنِ – وَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى عَيْنَيْهِ – وَسَمْعُ أُذُنَىَّ هَاتَيْنِ وَوَعَاهُ قَلْبِى هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ أَظَلَّهُ اللَّهُ فِى ظِلِّهِ ». قَالَ فَقُلْتُ لَهُ أَنَا يَا عَمِّ لَوْ أَنَّكَ أَخَذْتَ بُرْدَةَ غُلاَمِكَ وَأَعْطَيْتَهُ مَعَافِرِيَّكَ وَأَخَذْتَ مَعَافِرِيَّهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ فَكَانَتْ عَلَيْكَ حُلَّةٌ وَعَلَيْهِ حُلَّةٌ . فَمَسَحَ رَأْسِى وَقَالَ اللَّهُمَّ بَارِكْ فِيهِ يَا ابْنَ أَخِى بَصَرُ عَيْنَىَّ هَاتَيْنِ وَسَمْعُ أُذُنَىَّ هَاتَيْنِ وَوَعَاهُ قَلْبِى هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللَّهِ

صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ ». وَكَانَ أَنْ أَعْطَيْتُهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنَ عَلَىَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِى يَوْمَ الْقِيَامَةِ

ஹராமிய்யா கிளையைச் சார்ந்த இன்னார் மகன் இன்னாரிடம் எனக்குத் தரவேண்டிய பணப் பற்று உள்ளது. நான் அவருடைய குடும்பத்தாரிடம் சென்று ஸலாம் சொல்லி அவர் இங்கிருக்கின்றாரா?” என்று கேட்டேன். வீட்டினர் இல்லைஎன்று பதிலளித்தனர்.

அப்போது வீட்டிலிருந்து விடலைப் பையன் ஒருவன் வெளியே என்னை நோக்கி வந்தான். நான் அவனிடம், “உன்னுடைய தந்தை எங்கிருக்கின்றார்?” என்று கேட்டேன். உங்களுடைய சப்தம் கேட்டதும் என் தாயாரின் படுக்கை அறை கட்டிலுக்குச் சென்று விட்டார்என்று பதில் சொன்னான். உடனே நான் (அவரை நோக்கி) எங்கிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். வெளியே என்னிடம் வந்து விடுஎன்று கூறினேன். உடனே அவர் வந்தார்.

நீ என்னை விட்டு ஒளிய வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களிடத்தில் பொய் சொல்லவும் வாக்களித்து விட்டு உங்களுக்கு மாறு செய்வதையும் பயந்தேன். (அதனால் தான் ஒளிந்தேன். இந்த விஷயத்தில்) நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தோழராவீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன்என்று சொன்னார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ கஷ்டப்படுபவனா? என்று நான் கேட்டேன். அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கஷ்டப்படுபவன் தான் என்றார்.

அபுல் யஸார் (ரலி) யிடமிருந்து இதை அறிவிக்கும் உப்பாதா பின் ஸாமித் (ரலி) அவர்களின் மகன் தொடர்ந்து கூறுகின்றார்.

அவருடைய கணக்குச் சீட்டைக் கொண்டு வந்து அதைத் தன் கையால் அழித்து விட்டு (கடன்பட்டவரை நோக்கி) திருப்பிக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் எனக்கு (அதை) நிறைவேற்றிவிடு. “(கடன்பட்டு) கஷ்டப்படுபவருக்கு யார் அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவரை அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலில் நிறுத்தி நிழலிடுகின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொல்லும் போது அவர்களை (தன் கண்களைச் சுட்டிக்காட்டி) என்னுடைய இரு கண்களின் பார்வை பார்த்தது. அவர்கள் சொன்னதை என்னுடைய இந்தச் செவிப் புலன் செவியுற்றது. அதை இந்த உள்ளம் மனனம் செய்தது” என்று நான் சான்று கூறுகின்றேன் என்று அபுல் யஸார் (ரலி) கூறினார்கள்.           ( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا حَمَّادٌ ، يَعْنِي ابْنَ سَلَمَةَ ، أَخْبَرَنَا أَبُو جَعْفَرٍ الْخَطْمِيُّ ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ 

أَنَّ أَبَا قَتَادَةَ كَانَ لَهُ عَلَى رَجُلٍ دَيْنٌ ، وَكَانَ يَأْتِيهِ يَتَقَاضَاهُ فَيَخْتَبِئُ مِنْهُ ، فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَخَرَجَ صَبِيٌّ فَسَأَلَهُ عَنْهُ فَقَالَ : نَعَمْ . هُوَ فِي الْبَيْتِ يَأْكُلُ خَزِيرَةً فَنَادَاهُ يَا فُلاَنُ ، اخْرُجْ فَقَدْ أُخْبِرْتُ أَنَّكَ هَاهُنَا فَخَرَجَ إِلَيْهِ فَقَالَ : مَا يُغَيِّبُكَ عَنِّي ؟ قَالَ : إِنِّي مُعْسِرٌ وَلَيْسَ عِنْدِي . قَالَ : آللَّهِ إِنَّكَ مُعْسِرٌ ؟ قَالَ : نَعَمْ . فَبَكَى أَبُو قَتَادَةَ ثُمَّ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ نَفَّسَ عَنْ غَرِيمِهِ أَوْ مَحَا عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ

முஹம்மது பின் அல் குரழீ (ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  அபூகதாதா (ரலி) அவர்களுக்கு ஒருவர் கடன் பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் செல்லும் போது அவர் ஒளிந்து கொள்வார். ஒரு நாள் (அவ்வாறு) வந்த போது சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்த போது ஆம் வீட்டில் கஸீரா (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்என்று சொன்னார். உடனே அபூகதாதா (ரலி) இன்னாரே! வெளியே வந்து விடு. நீ அங்கு தான் இருக்கிறாய் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதுஎன்று சொன்னார்,

அவர் வெளியே வந்ததும் நீ என்னை விட்டும் ஒளிந்து கொள்ளக் காரணம் என்ன?” என்று கேட்டார். என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்என்று சொன்னார். இதைக் கேட்ட அபூகதாதா (ரலி) அழுதார்கள். பிறகு யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூற நான் செவிமடுத்தேன்” என்று கூறினார்கள்.          (நூல்: அஹ்மத் )

வீட்டுக் கடன் மற்றும் இதர கடன்களை  பலதவணை முறையில் செலுத்துவது. 

حدثنا المكي بن إبراهيم أخبرنا ابن جريج أخبرني إبراهيم بن ميسرة عن عمرو بن الشريد قال
: وقفت على سعد بن أبي وقاص فجاء المسور بن مخرمة فوضع يده على إحدى منكبي إذ جاء أبو رافع مولى النبي صلى الله عليه و سلم فقال يا سعد ابتع مني بيتي في دارك فقال سعد والله ما أبتاعهما فقال المسور والله لتبتاعنهما فقال سعد والله لا أزيدك على أربعة آلاف منجمة أو مقطعة قال أبو رافع لقد أعطيت بها خمسمائة دينار ولولا أني سمعت النبي صلى الله عليه و سلم يقول ( الجار أحق بسقبه ) . ما أعطيتكها أربعة آلاف وأنا أعطى بها خمسمائة دينار فأعطاها إياه

அம்ரிப்னு ஷரீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி {ஸல்} அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ (ரலி) அவர்கள் அங்கே வந்தார். வந்தவர் “ஸஅதே! உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத் (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!என்றார்கள். அப்போது, அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!என்றார்கள்.

அப்போது ஸஅத் (ரலி), ‘அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு (ரலி), ‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி {ஸல்} அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.                                               ( நூல்: புகாரி )

ஸதகாவை விட மிகச் சிறந்ததும், அல்லாஹ்வின் மன்னிப்பையும், இரட்டிப்பு மற்றும் பன்மடங்கு கூலியையும் பெற்றுத்தருகிற மேலான அர்ஷின் நிழலில் இடம் பெற்றுத் தருகிற “அழகிய கடனை” வழங்க முன் வருவோம்! அல்லாஹ் நமக்கு விசாலமான பொருளாதாரத்தியும், பெருந்தன்மையான உள்ளத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment