தித்திக்கும்
திருமறை – ரமழான்
சிந்தனை:- 22.
ஊகங்கள்
தவிர்க்கப்பட வேண்டும்!
செய்திகள்
ஆராயப்பட வேண்டும்!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
21 –வது நோன்பை நோற்று, 22 – வது தராவீஹை
நிறைவு செய்து,
22 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் அல் ஹுஜ்ராத் அத்தியாயத்தின் எஞ்சிய 7 வசனங்கள் ஓதப்பட்டு, காஃப், அத்
தாரியாத், அத்தூர், அந்நஜ்ம் ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு, அர் ரஹ்மான்
அத்தியாயத்தின் 13 வசனங்கள் என 291 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்று தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அல் ஹுஜ்ராத் அத்தியாயத்தின் 12 – ம் வசனத்தில் அல்லாஹ் ஊகங்களை மனித சமூகம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
என்றும், இதே அத்தியாயத்தின் 6 –ம் வசனத்தில் மனித சமூகத்திற்கு கிடைக்கும் எந்த
ஒரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராயப்பட வேண்டும் என்பது குறித்தும்
பேசுகின்றான்.
1.
ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும்...
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ
الظَّنِّ
اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ
முஃமின்களே! (ஊகமான) பல
எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்.
ஊகங்களின்
அடிப்படையில் பேசுவதை மாநபி {ஸல்} அங்கீகரிக்க மாட்டார்கள்..
لما سار رسول الله صلى الله عليه وسلم إلى تبوك جعل لا يزال يتخلف
الرجل، فيقولون يا رسول الله: تخلف فلان، فيقول: دعوه، إن يك فيه خير فسيلحقه الله
بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، حتى قيل: يا رسول الله تخلف أبو ذر
وأبطأ به بعيره، فقال رسول الله صلى الله عليه وسلم: دعوه، إن يك فيه خير فسيلحقه
الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، فتلوم أبو ذر رضي الله عنه على
بعيره فأبطأ عليه، فلما أبطأ عليه أخذ متاعه فجعله على ظهره فخرج يتبع رسول الله
صلى الله عليه وسلم ماشيا، ونزل رسول الله صلى الله عليه وسلم في بعض منازله ونظر
ناظر من المسلمين فقال: يا رسول الله هذا رجل يمشي على الطريق، فقال رسول الله صلى
الله عليه وسلم: كن أبا ذر، فلما تأمله القوم قالوا: يا رسول الله هو والله أبو
ذر! فقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله أبا ذر يمشي وحده ويموت وحده ويبعث
وحده،
ஹிஜ்ரி ஒன்பது, தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடப்படுகின்றது. கடுமையான கோடைக்காலம், மிக நீண்ட தூரப் பயணம்.எதிரிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம் என போருக்கு தடை ஏற்படுத்துகிற சூழ்நிலைகள் முஸ்லிம்களை சூழ்ந்திருந்தது.
ஒருவாராக நபி (ஸல்) அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் போருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
மாலை நேரத்தில் ஓர் இடத்தில் படை வீரர்களை இளைப்பாறிச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவே முஸ்லிம்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களிடத்தில் “நம்மோடு போருக்கு வராமல் இன்னவர் ஊரிலேயே பின் தங்கி விட்டார்” என்று
ஒருவர் குறித்து முறையிட்டனர்.
அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்
”இன்ன மனிதர் குறித்து என்னிடம் கூறுவதை தவிர்த்து
விடுங்கள்! அவர் விஷயத்தில் அல்லாஹ் நலவை நாடியிருந்தால் அவரை உங்களோடு இப்படையில்
இணைப்பான். அவர் விஷயத்தில் அதுவல்லாத வேறேதேனும் நாடி இருந்தால் உங்களுக்கு
இதயத்தில் நிம்மதியை நல்குவான்” என்று கூறினார்கள்.
சற்று நேரம்
கழித்து இன்னும் சிலர் நபி (ஸல்) அவர்களிடத்தில் “ நம்மோடு போருக்கு வராமல் அபூதர் (ரலி) ஊரிலேயே பின்தங்கி விட்டார் என்றனர்.
அதற்கு, உடனடியாக இல்லை! ஒருபோதும் அப்படியிருக்காது;அவர் நம்மோடு தான் புறப்பட்டிருப்பார்; வழியிலே அவரது வாகனம் (கோவேறு கழுதை) பலகீனப்பட்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறுதியாக, அதிகாலை நேரத்தில் மாநபி (ஸல்) அவர்களும், மாநபியின் தோழர்களும் புறப்படத் தயாராயிருந்த போது தூரத்தில் ஒரு மனிதர் முதுகிலே ஒரு மூட்டையை சுமந்து வருவதைக் கண்டு அண்ணலாரிடம் தெரிவித்தார்கள் தோழர்கள்.
அப்படியானால், அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்களாகத்தான் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
மிகச் சமீபமாக வரும்போது அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திய பின் நபிகளாரிடத்தில் இதோ! அபூதர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள் எனக் கூறினார்கள் நபித்தோழர்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள்:“ அல்லாஹ் அபூதர் (ரலி) அவர்களுக்கு அருள் பாளிப்பானாக! தனியே நடந்து வந்தார். தனியே இருக்கும் போதுதான் மரணிப்பார்; நாளை மஹ்ஷரில் தனியாகத்தான் எழுப்பப்படுவார்!” என்று சோபனம் கூறினார்கள்.
( நூல்: தஹ்தீப் - சீரத்- இப்னு ஹிஷாம்; பக்கம்:256 )
எந்த ஒரு தருணத்திலும் ஊகத்தின் அடிப்படையில்
ஒருவர் குறித்து தவறாக எண்ண இடம் கொடுத்து விடக்கூடாது என்பதை இங்கே மாநபி {ஸல்}
அவர்கள் தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.
நபித்தோழர்களும் ஊகங்களின் அடிப்படையில் பேசுவதை அங்கீகரிக்க மாட்டார்கள்..
وَلَمْ
يَذْكُرْنِي رَسُوْلُ اللهِ ' حَتَّي بَلَغَ تَبُوْكًا , فَقَالَ وَهُوَ
جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوْكٍ : مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ؟ فَقَالَ
رَجُلٌ مِنْ بَنِيْ سَلِمَةَ: يَا رَسٌوْلَ اللهِ حَبَسَهُ بُرْدَاهُ, وَالنَظَرُ
فِيْ عِطْفِيْهِ فَقَالَ لَهُ مُعَادُ بْنُ جَبَلٍ : بِئْسَ مَا تَقُوْلُ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ مَا عَلِمْناَ
عَلَيْهِ الاَّ خَيْرًا, فَسَكَتَ رَسُوْ لُ الله ِ فَبَيْنَمَا هُوْ عَلَي ذَلِكَ
رَأي رَجُلاً مُبَيَّضًا يَزُوْلُ بِهِ السَّرَابُ . فَقَالَ رَسُوْلُ اللهِ :
كُنْ أبَا خَيْثَمةَ, فَأذَا هُوَ أبُو خَيْثَمَةَ الاَنْصَارِي وَهُ
الذِّيْ تَصَدَّقَ بِصَاعِ التَّمْرِ حِيْنَ لَمَزَهُ الْمُنَافِقُوْنَ
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் பின் தங்கியவர்களில்
ஒருவனாக ஆகிப் போனேன்.
நபி (ஸல்) அவர்கள் தபூக் சென்றடையும் வரையில் என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. தபூக்கில்
மக்கள் மத்தியில் அவர்கள் அமர்ந்திருந்த பொழுது கஅப் பின் மாலிக் என்ன செய்தார்? என்று கேட்டார்கள்.
அப்போது, பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் சொன்னார்: “அல்லாஹ்வின் தூதரே! அவர் அணிந்திருந்கும் வேஷ்டியும் மேலங்கியும்
அவரைத் தடுத்துவிட்டன! தமது ஆடையழகைக் கண்டு பூரிப்படைவதே அவரது வேலை!
அதற்கு முஆத் பின்
ஜபல் (ரலி) அவர்கள் ”நீ எவ்வளவு மோசமான வார்த்தையைக்
கூறிவிட்டாய்! அல்லாஹ்வின்தூதரே! நாங்கள் அவரது விஷயத்தில் நல்லதைத் தவிர வேறெதையும்
அறிந்திருக்கவில்லை!” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் நபி
(ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். ( நூல்: புகாரி )
இங்கே, முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கஅப் (ரலி) அவர்கள் குறித்து ஒருவர் ஊகத்தின் அடிப்படையில் கஅப் (ரலி)
அவர்கள் குறித்து கூறிய போது அந்த சிந்தனை முற்றிலும் தவறானது என்பதை சுட்டிக் காட்டினார்கள்.
2. செய்திகளின் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டும்...
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ
فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ
فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்;
(இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற)
ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்
படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
இன்று நாம் ஒன்று
கூடி அமர்ந்து பேசுகிற பேச்சில் பெரும்பாலான பேச்சுக்கள் ஒன்று ஊகத்தின்
அடிப்படையிலானதாக இருக்கும் அல்லது ஒரு செய்தியின் உண்மைத் தன்மை அறியப்படாததாக
இருக்கும்.
அதே போன்றே நாம்
பயன்படுத்துகிற சமூக ஊடகங்களில் பகிரப்படுகிற, நாம் பகிர்ந்து கொள்கிற செய்திகளின்
நிலையும் இவ்வாறு தான் இருக்கின்றது.
நாம் மிகச்
சாதாரணமாக அவைகளைப் பேசுகின்றோம். அதை நம்புகின்றோம். அப்படியே பரப்புகின்றோம்.
யாராவது ஒருவர்
ஏதாவது ஒரு செய்தியை நம்மிடம் கொண்டு வந்தால் அல்லது நமக்கு மிகவும் வேண்டப்பட்ட
ஒருவர் வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை
பதிவிட்டால்..
1. அது உண்மையா என்று
அறியும் பொருட்டு தீர விசாரிக்க வேண்டும்.
2. இவ்வாறு
விசாரித்தறியாமல் அதை உடனடியாக பிற மக்களுக்கு அறிவித்தால் இதனால் மக்கள்
தீங்கிழைக்கப்படுவார்கள்.
3. இவ்வாறு செய்வது
சில நேரங்களில் உங்களுக்கே மேசமாகவும் அமையும்.
حدثنا
محمد بن سابق، حدثنا عيسى بن دينار، حدثني أبي أنه سمع الحارث بن ضرار الخزاعي
يقول: قدمت على رسول الله صلى الله عليه وسلم، فدعاني إلى الإسلام، فدخلت فيه
وأقررت به، ودعاني إلى الزكاة فأقررت بها، وقلت: يا رسول الله، أرجع إليهم فأدعوهم
إلى الإسلام وأداء الزكاة، فمن استجاب لي جمعت زكاته، ويُرسل إليَّ رسول الله
رسولا لإبَّان كذا وكذا ليأتيك بما جمَعتُ من الزكاة. فلما جمع الحارث الزكاة ممن
استجاب له، وبلغ الإبان الذي أراد رسول الله صلى الله عليه وسلم أن يبعث إليه، احتبس
عليه الرسول فلم يأته، فظن الحارث أنه قد حدث فيه سُخْطة من الله ورسوله، فدعا
بسَرَوات قومه، فقال لهم: إن رسول الله صلى الله عليه وسلم كان وَقَّت لي وقتا
يرسل إلي رسوله ليقبض ما كان عندي من الزكاة، وليس من رسول الله صلى الله عليه
وسلم الخُلْف، ولا أرى حبس رسوله إلا من سخطة كانت، فانطلقوا فنأتي رسول الله صلى
الله عليه وسلم، وبعث رسول الله صلى الله عليه وسلم الوليد بن عقبة إلى الحارث
ليقبض ما كان عنده مما جمع من الزكاة، فلما أن سار الوليد حتى بلغ بعض الطريق
فَرَق -أي: خاف-فرجع فأتى رسول الله صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، إن
الحارث منعني الزكاة وأراد قتلي. فضرب رسول الله صلى الله عليه وسلم البعث إلى
الحارث. وأقبل الحارث بأصحابه حتى إذا استقبل البعث وفَصَل عن المدينة لقيهم
الحارث، فقالوا: هذا الحارث، فلما
غشيهم
قال لهم: إلى من بُعثتم؟ قالوا: إليك. قال: ولم؟ قالوا: إن رسول الله صلى الله
عليه وسلم كان بعث إليك الوليد بن عقبة، فزعم أنك منعته الزكاة وأردت قتله. قال:
لا والذي بعث محمدا بالحق ما رأيته بَتَّةً ولا أتاني. فلما دخل الحارث على رسول
الله صلى الله عليه وسلم قال: "منعت الزكاة وأردت قتل رسولي؟" . قال: لا
والذي بعثك بالحق ما رأيته ولا أتاني، وما أقبلت إلا حين احتبس علي رسول رسول الله
(1) صلى الله عليه وسلم، خشيت أن يكون كانت سخطة من الله ورسوله. قال: فنزلت
الحجرات: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ } إلى
قوله: { حكيم }
பனூ முஸ்தலக் போர்
நடந்து முடிந்திருந்த நேரம் அது. பனூ முஸ்தலக் குலத்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை
உவந்தெடுத்து,
தழுவிக் கொண்டிருந்த நேரம். அவ்வாறு தழுவிக் கொண்டவர்களின்
தலைவரான அல் ஹாரித் என்பவரிடம், 'நீங்கள் உங்களது
பகுதிக்குச் சென்று விடுங்கள், பின்பு ஒரு நாள்
உங்களிடம் ஜகாத் பொருளை வசூல் செய்வதற்காக ஒருவரை அனுப்பி வைக்கின்றேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி அனுப்பி வைத்தார்கள்.
சில காலங்கள்
கழித்து அல் வலீத் பின் உக்பா (ரலி) என்ற நபித்தோழரை, இந்த பனூ ஹாரிதாக்களிடம் சென்று ஜகாத் பொருட்களைப் பெற்று வருமாறு இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அல் வலீத் பின்
உக்பா (ரலி) அவர்கள்,
வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, பனூ ஹாரிதாக்கள் மதீனாவைத் தாக்கும் எண்ணத்துடன் படைகளைத் திரட்டிக்
கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அவர், அதனைப் பற்றி தீர ஆய்வு செய்வோம் என்ற நிலையை எடுக்காமல், பயத்துடன் மதீனாவிற்கு வந்து விட்ட அவர், பனூ ஹாரிதாக்கள் ஜகாத்
பொருட்களைக் கொடுக்க மறுத்து விட்டதுடன், தன்னைக் கொலை செய்து
விடுவோம் என்று மிரட்டியதாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி விடுகின்றார்.
இந்தச் செய்தியைக்
கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுங்கோபங் கொண்டவர்களாக, பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்களுக்கு எதிராக போர் நடவடிக்கைகளில் இறங்குவதற்காக, மிகப் பெரிய முஸ்லிம் படை ஒன்றையும் திரட்டி விடுகின்றார்கள். இப்பொழுது
இரண்டு படைகளும் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் சந்திக்கக் காத்திருக்கின்றன.
இப்பொழுது அல்
ஹாரிதா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப் பட்டார்கள். ஹாரிதாவைப்
பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,
ஹாரிதாவே.. நீங்கள் ஏன் ஜகாத் கொடுக்க மறுத்து விட்டீர்கள்?
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எங்களிடம் ஜகாத் பொருட்களை
வசூல் செய்வதற்கென்று யாரும் உங்களிடம் இருந்து வரவில்லை. எனவே, அதனைக் கொடுப்பதற்காகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம் என்று தெரிவித்தார்.
இந்த நேரத்தில்
தான் மேற்கண்ட வசனத்தை இறைவன் இறக்கி அருளினான்
அல்குர்ஆனின் இந்த
உபதேசத்தோடு பின்வரும் நபிமொழிகளையும் நாம் உரசிப்பார்க்க
கடமைப்பட்டிருக்கின்றோம்.
عن أبي هريرة رضي الله عنه
قال رسول الله صلى الله عليه وسلم
كفى بالمرء كذبًا أن يحدِّث بكلِّ ما سمع
நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பெய்யர்
என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.' ( நூல்: முஸ்லிம் )
وحَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ
حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ عَنْ عَامِرِ بْنِ
عَبَدَةَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ لِيَتَمَثَّلُ فِي
صُورَةِ الرَّجُلِ فَيَأْتِي الْقَوْمَ فَيُحَدِّثُهُمْ بِالْحَدِيثِ مِنْ
الْكَذِبِ فَيَتَفَرَّقُونَ فَيَقُولُ الرَّجُلُ مِنْهُمْ سَمِعْتُ رَجُلًا
أَعْرِفُ وَجْهَهُ وَلَا أَدْرِي مَا اسْمُهُ يُحَدِّثُ. (رواه مسلم في مقدمته)
இப்னு மஸ்ஊத்
(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஷைத்தான் மனித வேடத்தில் செயலாற்றுகின்றான்.
அவன் மக்களிடம் வந்து பொய்ச் செய்திகளை எடுத்துரைக்கின்றான். பிறகு மக்கள் கலைந்து
சென்றுவிடுகின்றனர். (அதாவது சபை முடிந்து சென்று விடுகின்றர். அப்போது அவர்களில்
ஒருவன் „நான் இந்த விஷயத்தை ஒரு மனிதனிடமிருந்து செவியுற்றேன். அவனது முகம் எனக்குத்
தெரியும். ஆனால்,
பெயர் மட்டும் தெரியாது‟ என்று கூறுவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
இந்த நபிமொழியில், எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்வதோடு, அந்தச் செய்தியை
தந்தவரைக் குறித்தும் அவர் எப்படிப்பட்டவர் என்று புலானாய்வு செய்ய வேண்டும்
என்பது புலப்படுகின்றது. சம்பந்தப்பட்ட அந்த நபர் கேட்பதையெல்லாம் பேசக் கூடியவர்
என்பது உறுதியாகிவிட்;டால்,
அவரது பேச்சை நிராகரித்து விட வேண்டும் என்று தெரிகின்ற்து.
سَمِعْتُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يقولُ:
إنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلَاثًا: قيلَ وقالَ، وإضَاعَةَ المَالِ، وكَثْرَةَ
السُّؤَالِ.
الراوي : المغيرة بن شعبة
நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். 'இவ்வாறு சொல்லப்பட்டது; அவர்
சொன்னார்'
(என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை
வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)யின்
எழுத்தாளர்
( நூல்: புகாரி (1477) )
உங்கள்
நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள்
வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ
அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 24: 15 )
ஸுலைமான் (அலை) அவர்களோடு
இணைந்து பயணித்த ஹுத்ஹுத் பறவை குறித்து, அது கொண்டு வந்த செய்தி குறித்தும் அல்லாஹ்
அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
ஸபா
என்ற தேசத்தில் நடைபெறும் இணைவைப்பு குறித்தான
செய்தி தான் அது. ஹுத்ஹுத் அந்த செய்தி குறித்து இப்படிக்கூறியது.
فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ
بِنَبَإٍ يَقِينٍ
‘‘நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு
வந்திருக்கின்றேன்’’. ( அல்குர்ஆன் 27:22 )
அந்தச் செய்தி இது தான்…
إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ
وَلَهَا عَرْشٌ عَظِيمٌ (23) وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ
دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ
السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ
“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான்
கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும்
கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர்
அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு
ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
ஸுலைமான்
(அலை) அவர்களிடம் அந்த பறவை அந்த செய்தியை கொண்டு வந்தபோது உடனடியாக ஸுலைமான் (அலை)
அவர்கள் எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வரவில்லை. மாறாக,
قَالَ سَنَنْظُرُ أَصَدَقْتَ أَمْ كُنْتَ مِنَ الْكَاذِبِينَ
ஸுலைமான் கூறினார்: நீ உண்மை சொல்கிறாயா அல்லது
பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை நாம் ஆய்வு செய்வோம்’’. ( அல்குர்ஆன் 27:27 )
ஸுலைமான் (அலை)
அந்தச் செய்தி குறித்து ஆராய்ந்தார்கள். அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டதன்
பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார்கள். இறுதியில் ஸபாவின் விவகாரம் சுபமாக முடிந்ததை அல்குர்ஆன்
அழகுபட கூறுகின்றது.
இப்படித்தான் எந்தவொரு விஷயத்தையும் அணுக வேண்டும் என்கிற அழகிய பண்பாட்டை இஸ்லாம்
இதனூடாக கற்றுத்தருகின்றது.
செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் எவரின் மீது
தப்பெண்ணம் வைத்து விடக்கூடாது..
وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ
الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ اللَّهِ ۖ إِنَّهُ رَبِّي
أَحْسَنَ مَثْوَايَ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது
விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன்
விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர்
மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக்
காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக
(கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற
மாட்டார்கள்" என்று சொன்னார்.
وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ
بُرْهَانَ رَبِّهِ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ ۚ
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம்
இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும்
திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக
இருந்தார்.
5 وَاسْتَبَقَا الْبَابَ
وَقَدَّتْ قَمِيصَهُ مِن دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ ۚ قَالَتْ
مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَن يُسْجَنَ أَوْ عَذَابٌ
أَلِيمٌ
(யூஸுஃப் அவளை
விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம்
ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து
விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும்
கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) "உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய
இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு
என்ன தண்டனை இருக்கமுடியும்?"
என்று கேட்டாள்.
قَالَ هِيَ رَاوَدَتْنِي عَن نَّفْسِي ۚ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ
أَهْلِهَا إِن كَانَ قَمِيصُهُ قُدَّ مِن قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ
الْكَاذِبِينَ
(இதை மறுத்து
யூஸீஃப்;) "இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம்
அழைத்தாள்" என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடம்பத்தைச் சேர்ந்த
ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்; "இவருடைய சட்டை
முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
وَإِن كَانَ قَمِيصُهُ قُدَّ مِن دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ
الصَّادِقِينَ
"ஆனால் இவருடைய
சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய்
சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்."
فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِن دُبُرٍ قَالَ إِنَّهُ مِن
كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ
(யூஸுஃபுடைய) சட்டை
பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது
(பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۚ وَاسْتَغْفِرِي لِذَنبِكِ ۖ إِنَّكِ
كُنتِ مِنَ الْخَاطِئِينَ
(என்றும்)
"யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக
மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக
இருக்கின்றாய்" என்று: கூறினார்.
எனவே, ஊகங்களைத்
தவிர்ப்போம்! செய்திகளின் உண்மைத் தண்மையை ஆராய்வோம்!!
No comments:
Post a Comment