Thursday, 21 April 2022

எங்கள் இறைவா! நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக!!

 

எங்கள் இறைவா! நரகத்தின் வேதனையை

எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக!!



அல்லாஹ்வின் மகத்தான கருணையும், அருளும், மன்னிப்பும் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடும் அருள் நிறைந்த ரமழான் மாதத்தின் இரண்டாவது பத்தின் நிறைவு ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம். நரகில் இருந்து விடுதலைப் பெற்றுத் தரும் மூன்றாம் பத்தில் நாம் அடியெடுத்து வைக்க இருக்கின்றோம்.

ரமலானில் நோன்பு நோற்ற நிலையில், கடைசிப் பத்து நாட்களில்  அல்லாஹூம்ம அஃதிக்னா மினன்னாரி, வஅத்கில்னல் ஜன்னத யாரப்பல் ஆலமீன்’. ‘அகில உலகின் இரட்சகனே, நரகத்தில் இருந்து எங்களை காப்பாற்றி, சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக’. என்று பிரார்த்தனையும் செய்கிறோம்.

ரமலான் வந்துவிட்டால், நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன’. (நூல்: புகாரி)

ரமலானின் ஒவ்வொரு இரவிலும், பகலிலும் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது’. (நூல்: அஹ்மது)

நோன்பு நரகத்தை விட்டு பாதுகாக்கும் ஒரு கேடயம்’. (நபிமொழி)

நரகிலிருந்து விடுதலை பெற வைக்கும் மகத்துவமிக்க  ரமலான் மாதம் என்பதால் தான். ஆகவே அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! நரகத்தில் இருந்து நம் அனைவரையும் விடுதலை செய்வானாக, ஆமீன்!

அல்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் அந்நாஸ், அல் ஃபலக், அல் இக்லாஸ், அன் நஸ்ர், அல் காஃபிரூன், அல் குறைஷ், அல் ஃபீல், அல் அஸ்ர், அல் ஆதியாத், அத் தீன், அல் இன்ஷிராஹ், அள் ளுஹா, அஷ் ஷம்ஸ், அல் முனாஃபிக்கூன், அல் ஜும்ஆ அத்தியாயங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து (99) அத்தியாயங்களிலும் மறுமை குறித்து மறுமை நாளின் நிலை குறித்து, சுவர்க்கம், நரகம் குறித்து அல்லாஹ் பேசுகின்றான்.

சுவனத்தின் இன்பங்கள் குறித்து அழகு பட விவரிக்கும் இறைவன், நரகின் கொடுமையான தண்டனைகள் குறித்து எச்சரிக்காமல் இல்லை. நரகின் பல்வேறு பெயர்கள் குறித்து, நரகின் உணவுகள், நரகின் மரம், நரகின் ஓடை என பல்வேறு அம்சங்கள் குறித்து தனித்தனியாக பேசுகின்றான்.

இறைநம்பிக்கையாளனின் ஈமானில் மிக முக்கியமானது. மறைவானதை ஈமான் கொள்வது. அந்த வகையில் சுவர்க்கம், நரகம் குறித்த ஈமான் ஒரு முஃமினுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

சுவர்க்கம், நரகத்தைப் பற்றி நம்பும் ஒரு இறைநம்பிக்கையாளன் மூன்று அம்சங்களை மிக முக்கியமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

نؤمن بأن الجنة والنار حق لا شك فيهما، وأن الجنة دار أولياء الله المتقين، والنار دار أعداء الله الكافرين؛ قال تعالى: ﴿ وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ * وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ * وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ ﴾ [آل عمران: 131 - 133].

 

نعتقد وجودهما الآن، كما تقدم من الآيات عن النار: ﴿ أُعِدَّتْ لِلْكَافِرِينَ ﴾ [آل عمران: 131]، وعن الجنة: ﴿ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ ﴾ [آل عمران: 133]، وقال تعالى: ﴿ عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى * عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى ﴾ [النجم: 14، 15].

 

 نعتقد دوامهما وبقاءهما، وذلك بإبقاء الله لهما، وأنهما لا يفنيان؛ قال تعالى عن الجنة: ﴿ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴾ [التوبة: 100]، وثبت في الحديث: ((ينادي منادٍ: يا أهل الجنة، إن لكم أن تصحوا فلا تسقموا أبدًا، وأن تَشِبُّوا فلا تهرَموا أبدًا، وأن تحيَوْا فلا تموتوا أبدًا))[4].

وقال تعالى عن النار: ﴿ إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا * خَالِدِينَ فِيهَا أَبَدًا لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا ﴾ [الأحزاب: 64، 65].

 

1. சுவர்க்கமும், நரகமும் உண்டு என்று அவன் சந்தேகமற தீர்க்கமாக நம்ப வேண்டும்.

2. சுவர்க்கம் நல்லோர்களுக்காகவும், நரகம் தீயோர்களுக்காகவும் இப்போது தயார் நிலையில் இருக்கிறது என்று நம்ப வேண்டும்.

3. சுவர்க்கத்திலே நல்லோர்கள் நிரந்தரமாகவும், நரகத்திலே தீயோர்கள் நிரந்தரமாகவும் தங்குவார்கள் என்றும் நம்ப வேண்டும். மேற்கூறிய இறைவசனங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.

ஏன் நாம் நரகத்திலே இருந்து விடுதலை பெற வேண்டும்? ஏன் நாம் நரக நெருப்பிலிருந்தும், கொடிய தண்டனைகளில் இருந்தும் பாதுகாப்பு தேட வேண்டும்.

1.   நரகில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும், பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6)

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” ( அல்குர்ஆன்: 66: 06 )

மேற்கூறிய குர்ஆன் வசனத்தின் மூலம் முதலாவது நமது குடும்பத்தை நரகத்தை விட்டு்ம் பாதுகாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட வேண்டும். நாமும், நமது மனைவியும், நமது பிள்ளைகளும், நமது குடும்பமும் சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இறை கடமைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தின் எரி கொல்லிகளாக பாவிகளையும்,கற்களையும் தான் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். என்பதை பயந்து கொள்ள வேண்டும்.

2.   நரகத்தைப் பற்றியும், நரகத்தின் கொடிய வேதனைப் பற்றியும், நரகவாசிகளின் நிலைப் பற்றியும் எச்சரிக்கிற திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும்..

மரணமும் இல்லை.. வாழ்வும் இல்லை..

اِنَّهٗ مَنْ يَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَ‌ۚ لَا يَمُوْتُ فِيْهَا وَ لَا يَحْيٰى‏

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.               ( அல்குர்ஆன்: 20: 74 )

الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏
ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ‏

அவனோ பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். ( அல்குர்ஆன்: 87: 12,13 )

மனிதன் அங்கு சாக வேண்டும் என்று துடியாய் துடிப்பான். சாவு தான் அங்கு அவனுக்குக் கிடைக்கின்ற விடுதலை! அது தான் அவனுக்குக் கிடைக்கின்ற நிரந்தர ஆறுதல். ஆனால் அது அவனுக்கு அறவே கிடையாது என்று மேற்கூறிய வசனங்கள் கூறுகின்றது.

مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏
يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது. ( அல்குர்ஆன்: 14: 16,17)

يَوْمَ يَغْشٰٮهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَيَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்என்று (இறைவன்) கூறுவான்.                                ( அல்குர்ஆன்: 29: 55 )

وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏

இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளதுஎன்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத் தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.                                                 ( அல்குர்ஆன்: 18: 29 )

நரகத்தின் நெருப்பு எல்லா முனைகளிலிருந்தும் தாக்கிக் கொண்டிருக்கும். மேலே, கீழே, வலம், இடம் என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருப்பு சூழ்ந்து முற்றுகையிட்டு அவனைத் தாக்கிக் கொண்டிருக்கும்.

விடுமுறை கோரி விண்ணப்பித்தல்..

வேதனை தாளாமல் நரகத்தின் காவலர்களிடம் ஒரு நாள் மட்டும் விடுமுறை கேட்பார்கள். அப்போது நரகத்தில் காவலர்கள் கூறுவது என்ன தெரியுமா?

وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ‏

قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنٰتِ ؕ قَالُوْا بَلٰى ؕ قَالُوْا‌ فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓـؤُا الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ

உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள். உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம்என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.                                      ( அல்குர்ஆன்: 40: 49,50 )

كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَا

 وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ

கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்)                                           ( அல்குர்ஆன்: 22: 22 )

وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْۤا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَ لَمْ يَجِدُوْا عَنْهَا مَصْرِفًا

குற்றவாளிகள் நரகத்தைப் பார்க்கும் போது அதிலே தாங்கள் விழக்கூடியவர்கள் என்பதை அறிந்து கொள்வார்கள். அதை விட்டுத் தப்பும் இடத்தையும் அவர்கள் காண மாட்டார்கள்.                    ( அல்குர்ஆன்: 18: 53 )

ஈடு கொடுத்து தப்பிக்க நினைத்தாலும்…

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ اُولٰٓٮِٕكَ لَـهُمْ عَذَابٌ اَلِـيْمٌۙ وَّمَا لَـهُمْ مِّــنْ نّٰصِــرِيْنَ

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப் படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை. ( அல்குர்ஆன்: 3: 91 )

நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மனைவி, மக்கள், பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுக்க நினைப்பான். இந்தப் பூமி முழுக்க தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. இப்போது அவனிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ ، عَنْ أَنَسٍ يَرْفَعُهُ

أَنَّ اللَّهَ يَقُولُ لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ أدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلاَّ الشِّرْكَ

 

நாளை மறுமையில் நரகவாதிகளிலிருந்து ஒருவரை கொண்டு வரப்பட்டு, இந்த பூமியிலுள்ளவைகள் உனக்காக இருந்து (நரகத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்காக) அதை நீ அற்பணமாக கொடுப்பாயா? என்று கேட்கப்படும், அதற்கு அவன் ஆம் எனக்கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான், நான் உன்னிடமிருந்து அதைவிட இலகுவானதையே விரும்பினேன். நீ ஆதமுடைய முதுகம் தண்டில் இருக்கும் போது, எனக்கு கொஞ்சம் கூட இணைவைக்கக்கூடாது என உன்னிடம் உறுதி மொழி எடுத்தேன், நீயோ, அதை மறுத்து எனக்கு இணைவைக்கக்கூடியவனாகவே இருந்தாய் என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

இதனையே பின்வரும் இறை வசனத்தில்

எவர்கள் நிராகரித்து நிராகரிக்கும் அதே நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ அவர்களில் எவருக்கேனும் பூமி நிறைய தங்கம் இருந்து எவரேனும் அந்தத் தங்கத்தைத் தமது மீட்சிக்கு ஈடாகக் கொடுத்தாலும் அதனை அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ( அல்குர்ஆன்: 3: 91 ) என்றும்,

مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ (28) هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ (29)

எனது பெரும் செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே எனது ஆட்சி அதிகாரமும் என்னைவிட்டும் அழித்துவிட்டதேஎன்று கதறுவான். ( அல்குர்ஆன்: 69: 28,29 ) என்றும்,

يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ (11) وَصَاحِبَتِهِ وَأَخِيهِ (12) وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ (13) وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ (14) كَلَّا إِنَّهَا لَظَى (15) نَزَّاعَةً لِلشَّوَى (16)

அந்நாளில் வேதனைக்கு ஈடாகத் தனது மக்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்துக் கட்டிக்காத்த உற்றார் உறவினர்களையும், இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் பணயம் வைத்துவிட்டேனும் பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான் அவ்வாறில்லை அது பெரும் நெருப்பாகும் அது தோலை உரிக்கும். ( அல்குர்ஆன்: 70: 11-16 ) என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இப்படி எல்லாம் ஏதாவது செய்து வெளியேறி விடலாம், விடுதலை அடைந்து விடலாம் என்று எண்ணுகிற மனிதனுக்கு முடிவு ஏதும் கிடைக்குமா என்றால்...

அவன் அனுபவிக்கும் வேதனைக்கு முடிவு உண்டா?

لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا‌ ۚ‏

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாக தங்குவார்கள்.                                 ( அல்குர்ஆன்: 78: 23 )

நரகவாசியின் உடலையும், உடல் உறுப்புக்களையும் நரகத்தின் தண்டனையை அனுபவிப்பதற்கேற்ப அல்லாஹ் மாற்றி விடுவான்.

وعند الإمام أحمد عَنْ مُجَاهِدٍ قَالَ: قَالَ لِيَ ابْنُ عَبَّاسٍ رضي الله -تعالى- عنهما: [أَتَدْرِي مَا سَعَةُ جَهَنَّمَ؟!] قُلْتُ: [لَا!] قَالَ: [أَجَلْ وَاللهِ مَا تَدْرِي؛ إنَّ بَيْنَ شَحْمَةِ أُذُنِ أَحَدِهِمْ وَبَيْنَ عَاتِقِهِ مَسِيرَةَ سَبْعِينَ خَرِيفًا، تَجْرِي فِيهَا أَوْدِيَةُ الْقَيْحِ وَالدَّمِ]، قُلْتُ: [أَنْهَارًا؟!] قَالَ: [لَا! بَلْ أَوْدِيَةً]، ثُمَّ قَالَ: [أَتَدْرُونَ مَا سِعَةُ جَهَنَّمَ؟! حَدَّثَتْنِي عَائِشَةُ رضي الله عنها، أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ قَوْلِهِ عز وجل: ﴿وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ﴾]؟ [سورة الزمر: 67]، قَالَتْ: [فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ يَا رَسُولَ اللهِ؟!] فَقَالَ: "هُمْ عَلَى جِسْرِ جَهَنَّمَ" [4].

روى الإمام مسلم والترمذي والإمام أحمد عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: ["مَا بَيْنَ مَنْكِبَيْ الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ للرَّاكِبِ الْمُسْرِعِ]، [وَغِلَظ جِلْدِهِ اثْنَانِ وَأَرْبَعُونَ ذِرَاعًا]، [بِذِرَاعِ الْجَبَّارِ"] -[الجبار]: مَلِك باليمن له ذراع معروف المقدار.- ["وَضِرْسهُ مِثْلُ أُحُدٍ]، [وَفَخِذُهُ مِثْلُ الْبَيْضَاءِ"] -[َالْبَيْضَاءُ]: جَبَلٌ مِثْلُ أُحُدٍ.- ["وَمَقْعَدُهُ مِنْ النَّارِ]؛ [كَمَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ"] [2].

يعني طرفي كتفيه، عاتقه الأيمن والأيسر، هذه المنطقة ما بينها مسيرة ثلاثة أيام!

سُمْكُ جلده اثنان وأربعون ذراعا، -أي واحد وعشرون مترا- بذراع الجبار؛ وهو ملك من ملوك اليمن، كان يضرب المثل بذراعه؛ لأن ذراعه كبير.

وضرسه مثل أحد، الضرس مثل الجبل! فكيف الرأس؟ وكيف الجثة؟

 

وفَخِذُه مثل البيضاء، قالوا: البيضاء أيضا مثل جبل أحد، اسم جبل يساوي جبل أحد، جبل أحد يا عباد الله طوله أكثر من سبعة كيلو مترات طولا، وارتفاعه حوالي ثلاثمائة متر، يحد المدينة من جهة الشمال.

ومقعده من النار؛ كما بين مكة والمدينة، المكان الذي يجلس فيه يملأ ما بين مكة والمدينة، مسيرة نحو خمس أو ست ساعات بالحافلة.

நரகவாசிகளின் இரு காதுகளின் தூர அளவு..

நரகத்தில் நரகவாசிகள் மிகவும் கோரத் தோற்றமுடையவர்களாகக் காட்சியளிப்பார்கள் அவர்களது காதின் சோனைக்கும் தோளுக்குமிடையே எழுபது ஆண்டுகால நடைப்பயண தூரம் அளவிற்கு இடைவெளி இருக்கும் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரலி), முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 2:284)

நரகவாசியின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம்..

இறை மறுப்பாளனின் இரு தோள்புஜங்களுக்கிடையில் உள்ள தூரம் அதிவேகமாகப் பயணிப்பவர் மூன்று நாட்கள் நடந்து செல்லும் அளவு நீண்ட தூரமாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 6551)

நரகவாதியின் தொடை அளவு..

அங்கே நரகவாதியின் தொடை அளவு பைலாஎன்னும் (அரபு தேசத்து) மலையளவு போன்றதாகும் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி), திர்மிதி 2703)

நரகவாசியின் பித்தட்டு இடையே உள்ள தொலைவு..

நரகவாசியின் பின்பகுதியின் இடையே உள்ள தொலைவு மதீனாவுக்கும் ரபாதாவுக்கும் இடையே உள்ள தொலைவு போன்ற மூன்று நாள் பயணத் தொலைவு அகலமாகவும் அமைந்திருக்கும் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி), திர்மிதி 2703, முஸ்னத் அஹ்மத்)

நரகவாசி உட்காரும் இடத்தின் அளவு..

நரகத்தில் அவன் உட்காரும் இடம் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடைப்பட்ட (சுமார் 475கி.மீ) தூரமாகும் என்று நபி {ஸல்}  அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) திர்மிதி 270, முஸ்னத் அஹ்மத், ஹாகிம், இப்னு ஹிப்பான்)

நரகவாசியின் ராட்சத உடலளவு

இதுவரை நாம் பார்த்த வகையில் நரகத்தில் நரகவாசியின் பல்லின் அளவு: நாக்கின் நீறம், இரு உதடுகளின் பெருக்கம், அதற்கேற்றவாறு வாயின் அளவு. காதின் பெருக்கம், இவைகள் அனைத்தையும் கொண்ட தலையின் கொள்ளளவின் பெருக்கம், அதனைக் கொண்ட பித்தட்டுகளின் பருமன், அவன் உட்காரும் இடத்தின் அளவு என ராட்சத உடலுடைய,

خُذُوهُ فَغُلُّوهُ (30) ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ (31) ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ (32)

அந்த நரகவாசியைப் பிடியுங்கள் பிறகு அவனுக்கு அறிகண்டமும் விலங்கும் மாட்டுங்கள், பின்னர் அவனை நரகத்தில் தள்ளுங்கள், பின்னர் எழுபது முழு நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்என்று உத்தரவிடப்படும். (69:30-32)

மேலும் தமது இறை மறுப்பாலும் குழப்பத்தாலும் குற்றம் புரிந்தவர்களில் ஒத்தவர்கள் ஒவ்வொரு பிரிவினரும் சிலர் வேறு சிலருடன் நரக விலங்குகளினால் பிணைக்கபட்டிருப்பார்கள்.

وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ (49)

அன்று குற்றவாளிகள் விலங்குகளினால் பிணைக்கப்பட்டிருப்பதை (நபியே) நீர் காண்பீர் (14:49)

احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ

அநீதியிழைத்தவர்களையும் அவர்களின் கூட்டாளிகளையும் ஒன்றுதிரட்டுங்கள் (37:22)

وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا

அவர்கள் தமது கூட்டாளிகளுடன் சேர்த்துப் பிணைத்துக் கட்டப்பட்டு நரகத்தில் நெருக்கடியானதொரு பகுதியில் தூக்கியெறியப்படும்போது அங்கே அவர்கள் அழிவை அழைப்பார்கள் (25:13)

وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ

உயிர்கள் அனைத்தும் அவற்றின் கூட்டாளிகளோடு சேர்க்கப்படும்போது (81:7) என்றும் பாவிகளை நரகத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.

عن عبد الله بن مسعود -رضي الله عنه- مرفوعاً: «يُؤْتَى بجهنم يومئذ لها سبعون ألف زِمَامٍ مع كل زمام سبعون ألف ملك يَجُرُّونَهَا».  
[صحيح.] - [رواه مسلم.]

அந்த நாளில் அவனுக்கு எழுபதாயிரம் கடிவாளங்கள் மாட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் வானவர்கள் இழுத்துச்செல்வார்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்ஊத் (ரலி), முஷ்லிம்: 5464)

நரகத்தில் ஆகக் குறைந்த தண்டனையையே அங்கு மிகக் கடுமையான  தண்டனையாக  எண்ணுவான்:

وعن النعمان بن بشير رضي الله عنهما قال: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: ((إن أهوَنَ أهلِ النار عذابًا يوم القيامة لَرجلٌ يوضع في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه، ما يرى أن أحدًا أشد منه عذابًا، وإنه لأهوَنُهم عذابًا))؛ متفق عليه

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசான வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார் அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். அதனால் அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் செம்புப் பாதிரம் அல்லது வேறு உலோகத்தினாலான பன்னீர்ப்பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவனது மூளை கொதிக்கும். அப்போது அவன் இந்த நரகத்திலேயே நான்தான் மிகக் கடுமையான வேதனை செய்யப்படுகின்றேன் என்று எண்ணுவான். ஆனால் அவன்தான் நரகில் மிகக் குறைந்த வேதனை செய்யப்படுகின்றவனாவான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நுஃமான் இப்னு பஷீர்(ரழி) புகாரி 3883,3885,6208,6561,6562,6564,6572, முஸ்லிம் 213, திர்மிதி 2731)

உலக நெருப்பும், நரக நெருப்பும் ஒன்றா?

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ

نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ‘‘உஙகள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’’ என்று கூறினார்கள்.

உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே போதுமானதாயிற்றே!’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி {ஸல்} அவர்கள், ‘‘உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’’ என்று கூறினார்கள். ( அறி : அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி முஸ்லிம் 5077 )

149 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும் சூரியனின் வெப்பம் தாக்கி சுருண்டு விடுகின்றோம். 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கினாலே பலர் வெப்பம் 350  இறந்து போகின்றார்கள். இந்த சூரியனை விடவும் வெப்பம் நிறைந்த நரக நெருப்பு எப்படியிருக்கும்?


أُوقد على النار ألف سنة حتى احمرت، ثم أوقد عليها ألف سنة حتى ابيضت، ثم أوقد عليها ألف سنة حتى اسودت؛ فهي سوداء مظلمة

நரகம் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அப்போது அது சிகப்பு நிறத்தில் தோற்றம் தந்தது. பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு தீ மூட்டப்பட்டது. அப்போது அது வெண்மை நிறத்தில் தோற்றம் தந்தது. பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அது கடும் இருளான கருப்பு நிறத்தில் மாறிவிட்டது.

அப்படியானால் மூவாயிரம் ஆண்டுகள் தீ மூட்டப்பட்ட நெருப்புக்குண்டத்தில் இருந்து வெளியாகும் நெருப்பின் வேதனையை நம்மால் தாங்க முடியுமா?

என்ன செய்ய வேண்டும்?

1.   துஆச் செய்ய வேண்டும்..

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا (65) إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا

“ரஹ்மானின் அடியார்கள்” “எங்கள் இறைவா! நரகத்தின் வேதனையை, எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக! நிச்சயமாக! அதன் வேதனையானது நிலையானதாகும்” என்று பிரார்த்திப்பார்கள். நிச்சயமாக, அது நிலையான தங்குமிடத்தாலும்,  சிறிது நேரம் தங்குமிடத்தாலும் அது கெட்டது” ( அல்குர்ஆன்: 25: 65, 66 )


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثًا قَالَتِ الْجَنَّةُ : اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ ، وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ مِنَ النَّارِ ثَلاَثاً قَالَتِ النَّارُ : اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ " [ رواه أحمد وابن ماجة بإسناد صحيح

 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: யார் அல்லாஹ்விடம் மூன்று தடவை சுவனத்தை வேண்டுவாரோ, யாஅல்லாஹ்! அவரை சுவனத்தில் நுழைத்துவிடுவாயாக! என்று சுவனம் அவருக்காக துஆச் செய்யும்! அதே போன்று மூன்று தடவை யார் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுவாரோ யாஅல்லாஹ்! அவரை நரகை விட்டும் பாதுகாப்பாயாக! என நரகம் அவருக்காக துஆச் செய்யும்! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                    ( நூல்: அஹ்மத் )

2.   நரகில் நுழைவிக்கும் அத்துனை பாவமான காரியங்களை விட்டும் தவிர்ந்து வாழ வேண்டும்..

فَأَمَّا مَنْ طَغَى (37) وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا (38) فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى

“ஆகவே, எவன் வரம்பு மீறினானோ, மேலும், இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அப்பொழுது நிச்சயமாக நரகம் அதுவே அவனது ஒதுங்குமிடமாகும்”.                                      ( அல்குர்ஆன்: 79: 37 – 39 )

وفي الصحيحين عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: ((اختصمت الجنة والنار، فقالت الجنة: يا رب، ما لها إنما يدخلها ضعفاء الناس وسقَطهم؟ وقالت النار: يا رب، ما لها يدخلونها الجبارون المتكبرون؟ فقال: أنت رحمتي أصيب بك من أشاء، وأنت عذابي أصيب بك من أشاء، ولكل واحدة منكما ملؤها)

சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது, நரகம் கூறியது, அடக்கி ஆழ்பவர்களும் பெருமையடித்தவர்களைக் கொண்டு நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சுவர்க்கம் கூறியது, பலஹீனர்களும், மனிதர்களால் மதிக்கப்படாதவர்களும், இயலாவாளிகளுமே என்னிடம் நுழைவார்கள். அல்லாஹ் சுவர்க்கத்திற்கு கூறினான், நீ என்னுடைய அருட்கொடையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு அருள்புரிவேன். அல்லாஹ் நரகத்திற்கு கூறினான், நீ என்னுடைய தண்டனையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவரையும் அவர்களைக் கொண்டு நிரப்புவேன். நரகமோ நிரம்பாது, அப்போது அல்லாஹ் தன் கால் பாதத்தை நரகத்தின் மீது வைப்பான், அப்போது அது போதும் போதும் எனக்கூறும், அதில் சிலது சிலதுடன் சேர்ந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3.   நரகில் இருந்து விடுதலை செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கும் அனைத்து நல்லறங்களையும் ஆர்வத்துடன் செய்வது..

عَنْ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، يَقُولُ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخَ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ، تَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّهُ خُلِقَ كُلُّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلاَثِمَائَةِ مَفْصِلٍ فَمَنْ كَبَّرَ اللَّهَ وَحَمِدَ اللَّهَ وَهَلَّلَ اللَّهَ وَسَبَّحَ اللَّهَ وَاسْتَغْفَرَ اللَّهَ وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِ النَّاسِ أَوْ شَوْكَةً أَوْ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ وَأَمَرَ بِمَعْرُوفٍ أَوْ نَهَى عَنْ مُنْكَرٍ عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلاَثِمِائَةِ السُّلاَمَى فَإِنَّهُ يَمْشِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنِ النَّارِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو تَوْبَةَ وَرُبَّمَا قَالَ ‏”‏ يُمْسِي ‏”‏ ‏.‏

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.              ( நூல்: முஸ்லிம் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! புனித ரமழானில் நரகில் இருந்து விடுதலை செய்யும் நல்லோர்களில் நம்மையும், நம் வீட்டரையும், நம் குடும்பத்தார்களையும், நம் மீது நேசம் வைப்போரையும், நாம் நேசம் வைத்திருப்போரையும், நமக்கு உபகாரம் செய்வோரையும் ஒருவராக ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. எல்லாம்வல்ல அல்லாஹ் கடுமையான அந்த நரகிலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக ஆமீன்

    جزاكم الله حضرت

    ReplyDelete