இஸ்லாமியர்களின் இறையில்லங்களை
அபகரிக்கத்துடிக்கும் காவிக் கும்பல்கள்!!
இன்று நாடே கார்ப்பரேட்களின் கையில் சிக்குண்டு, அவர்களின் சூரையாடலுக்கு இரையாக்கப்பட்டு; வேலையின்மை, பசி, பட்டினி கொடுமைகளுக்கு ஆட்பட்டு; கல்வி, மருத்துவம் என அனைத்தும் சேவைத்துறைகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு; விலைவாசியும், பெட்ரோல்,
டீசல் விலையும், காஸ்
விலையும் நாளுக்கு நாள்
ஏறிக்கொண்டு நாடே சுடுகாடாகி வரும் வேளையில் இதை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு விடக் கூடாது என்பதற்காகவே மதவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தி அதில் குளிர் காய நினைக்கிறது காவி & கார்ப்பரேட் (பாசிசக்) கும்பல்.
நமது அண்டை
தேசமான இலங்கையும் இதே போல் தான் நாட்டை கார்ப்பரேட் கும்பலின் சூரையாடலுக்கு அனுமதித்துக் கொண்டே இனவெறியை தூண்டினார்கள். இனப்படுகொலையை நிகழ்த்தினார்கள். ஆனால், இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது? மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள்; இதுதான் காவி & கார்ப்பரேட் (பாசிசக்) கும்பல்களின் போலி முகமூடி.
அதே முகமூடியைதான் இன்று ஆர்.எஸ்.எஸ் எனும் பசுந்தோல் போர்த்தி பா.ஜ.க எனும் வேடம் தரித்த ஒன்றிய அரசும் & கார்ப்பரேட் கும்பலும் அணிந்துள்ளது.
இந்தியா இலங்கை
போல் ஆவதும், இந்திய மக்கள் இலங்கை மக்கள் போல் நடுத்தெருவில் நிறுத்தப்படுவதும்
தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் தேசத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கும்பல்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.
இந்த தேசத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையுடன்
வாழ்கின்றார்கள். அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக வழிபாட்டுத் தலங்களுக்கு
சென்று வழிபட்டு வருகின்றனர். தங்களின் வழிபாடும், வழிபாட்டுத் தளங்களும் தான்
உயர்ந்தவை, மற்றவர்களின் வழிபாடும் வழிபாட்டுத் தளங்களும் ஒன்றுமில்லாதவை என்று
யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் சாதாரண மக்கள். ஆனால், இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலோ திட்டமிட்டே மதவெறியைத் தூண்டி
மசூதிகளையும், முஸ்லிம்கள் எழுப்பிய நினைவுச் சின்னங்களையும் இடிக்க
கூப்பிடுகிறார்கள். கரசேவை நடத்தி இடிக்கவும் செய்கின்றார்கள்.
கியான் வாபி, குதுப் மினார், தாஜ்மஹால்...
அந்த வகையில் அவர்கள் தற்போது கையில் எடுத்திருப்பது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில்
கியான்வாபி என்ற மசூதி அமைந்துள்ளது.
அவுரங்கசீப் என்ற
முகலாய மன்னரால் கட்டப்பட்ட இந்த மசூதிக்கு அந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமிய
மக்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள
சிங்காரகவுரி அம்மனை தரிசனம் செய்ய அனுமதிகோரி சங்பரிவார அமைப்புகள் வாரணாசியில்
உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து ஓர் ஆண்டுக்கு மட்டும்
அந்த கோயிலை வழிபாடு செய்ய அனுமதி பெற்றனர்.
இந்த நிலையில் சுவற்றில் உள்ள அம்மனை நிரந்தரமாக தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்துத்துவ கும்பல் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் இந்துத்துவ கும்பல் எழுப்பு பிரச்சினையை பற்றி பேசாமல்,
மசூதி முழுவதும் ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு நீதிபதி ரவிக்குமார் திவாகர் உத்தரவிட்டுள்ளார்.
மசூதியில் நடக்கும் ஆய்விற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மசூதி நிர்வாகம்
சார்பில் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த
வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் ஆய்விற்கு இடைக்கால தடைவிதிக்க
முடியாது என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த 3 நாட்களாக கியான்வாபி மசூதியில் கள ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஆய்வில் கலந்து கொண்ட ஒருநபரின் மகன் சில தகவல்களை
வெளியிட்டுள்ளார். அதனை காரணமாக வைத்து மசூதியின் ஒசுகானாவில் (ஹவுளில்) உள்ள கை கால்கள் கழுவதற்கான குளத்தில் சிவலிங்கம்
இருப்பதாகவும் அதனால் உடனடியாக மசூதியை அரசு கட்டுப்பாட்டுகுள் கொண்டு வரவேண்டும்
என்றும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதற்கு, மசூதியில் ஒசுகானாவின் (ஹவுளின்) மைய
பகுதியில் இருப்பது நீர் ஊற்றுக்கான கல் என்று மசூதி நிர்வாகம் தரப்பில் பதில் மனு
தாக்கல் செய்யபட்டது. ஆனால், நீதிபதி மசூதி நிர்வாகம்
தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்காமல் இந்துத்துவ அமைப்புகளின் வாதத்தை
மட்டும் ஏற்றுக்கொண்டு,
மசூதியின் மையப் பகுதியில் இருக்கும் ஒசுகானாவை உடனடியாக
ஜப்தி செய்த வாராணசி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அந்த மசூதியின் ஒசுகானா (ஹவுள்) இருக்கும்
இடத்திற்குள் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவித்தும், மசூதியின் வளாகத்திற்குள் 20 பேரை மட்டுமே தொழுகை
நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. ஒசுகானாவில்
(ஹவுளில்) பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்புப் படை
போலீசை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக
விஷ்வ வேதிக் சனாதன் சங் என்ற சங் பரிவார அமைப்பின் தலைவர் ஜிதேந்தர் சிங்
கூறும்போது,
ஒசுகானாவில் (ஹவுளில்) உள்ள
குளத்தில் சுமார் 13
அடி அளவுள்ள சிவலிங்கம் இருப்பதாகவும், இதை மறுக்கும் இஸ்லாமியர்கள் மீது கலவரத்தை நடத்துங்கள் என்றும் இந்தியாவில்
உள்ள இந்துக்களுக்கு மறைமுகமாக மதவெறி பிரச்சாரம் செய்துள்ளார்.
மேலும் நீதிமன்றம்
மூலம் நமக்கு சாதகமான முடிவுகளை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம்
ஒன்றியத்தில் ஆளுவதும் நம்ம அரசுதான். அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதிமன்றமும்
நமது அடியாள்தான் என்று வேறுவார்த்தையில் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வழக்கை
உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்குள் வாரணாசியில் காவி கும்பல்கள் அனைத்து வேலைகளையும்
செய்து முடித்துவிடுவார்கள்.
பாபர் மசூதி அருகே
முதலில் நம்பிக்கையின் அடிப்படையினல் ராமனை வணங்க அனுமதி வாங்கிய காவி கும்பல், பின்னர் படிப்படியாக தனது இழிவான செயல்களை அரங்கேற்றி மசூதியை இடித்து உச்ச
நீதிமன்றத்தின் மூலம் தற்போது கோவிலை கட்ட அனுமதி வாங்கியுள்ளது. அதேபோல்தான்
இனிவரும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவிருக்கிறது. ( நன்றி: வினவு, May 17, 2022 )
அடுத்ததாக, அவர்களின் கையில்
குதுப்மினார், மதுராவின் ஷாயி
ஈத்கா மசூதி, ஆக்ராவின் தாஜ்மஹால்
மற்றும் கர்நாடகாவின் ஜுமா மசூதி ஆகியவைகளை வைத்து பிரச்சினை செய்வதை எதிர்பார்க்கலாம்.
அதன் முதற்கட்ட முயற்சியாக ஒரு வாரத்திற்கு முன்பு சங்பரிவார கும்பல் காவி கொடிகளுடன் வந்து குதுப் மினார் முன்பு அனுமன் மந்திரத்தை
ஓதினர். பின்னர் குதுப் மினாரின் பெயரை ‘விஷ்ணு மினார்’ என மாற்ற வேண்டும் என்று கூறினர்.
காரணம் அது இந்துக் கோயிலை இடித்து கட்டப்பட்டது என பேசினார்கள். ஆர்.எஸ்.எஸ்.ன் கிளை அமைப்பான மஹாகால் மானவ் சேவா என்ற அமைப்பினர் இந்த
கொடூரமான செயலை கையில் எடுத்துள்ளனர். குதுப் மினார் முன்பு அமர்ந்து ‘ஜெய் ஸ்ரீராம்’
என கோஷமிட்டபடி அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், இந்து கோயில்களை இடித்து இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இடம்
இந்துக்களுக்குதான் சொந்தம் என்று கூறிவருகின்றனர்.
மேலும் டெல்லியில்
இஸ்லாமியர்களின் பெயரில் இருக்கும் ஊர்கள், சாலைகள், தெருக்கள்,
பூங்காக்கள் ஆகியவற்றை இந்துக்களின் பெயர்களாக மாற்றும் வரை
போராட்டம் தொடரும் என்று கூறிவருகின்றனர்.
குதுப்மினாரை
காவிகள் சொந்தம் கொண்டாடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2020–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் தேவ் என்ற ஆர்.எஸ்.எஸ் சாமியார் குதுப்மினாரை
இந்து கோவில்களாக அங்கிகரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.
குதுப்மினாரின் நுழைவு வாயிலில் உள்ள ஒரு மசூதி 27 இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகவும் அங்கு இருக்கும் சிலைகள் தரையில்
வைத்து அவமானப் படுத்தபடுவதாகவும் ஒரு கட்டுக்கதையை கட்டமைத்து குதுப்மினாரை
கைப்பற்ற பலவாறு முயற்சிகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டது. தற்போதும் அதை அபகரிக்க
அனைத்து விதமான வேலைகளையும் செய்ய தொடங்கியுள்ளனர்.
ரிஷப் தேவ்
என்பவர் மீண்டும் குதுப்மினாரை இந்து கோயிகளாக அங்கிகரிக்க கோரி டெல்லி மாவட்ட
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர
உள்ளது.
இந்நிலையில் குதுப்மினார்
விவகாரத்தில் புதிய திருப்பமாக ஒன்றிய அரசின் தொல்லியல்
துறையில் (ஏ.எஸ்.ஐ) பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா, புதிதாக மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “குதுப்மினார் கோபுரம்,
டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குத்புதீன் ஐபக்கால்
கட்டப்பட்டது இல்லை”
என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து தரம்வீர்
சர்மா வெளியிட்ட அறிக்கையில், “டெல்லியிலிருப்பது
குதுப்மினார் இல்லை,
அது குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டவும் இல்லை.
அது,
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால்
கட்டப்பட்டது. சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால் அதன் பெயர் சூரியக்
கோபுரம் ஆகும். ஏ.எஸ்.ஐ சார்பில் நான் அங்கு ஆய்வு செய்தபோது அதற்கான பல ஆதாரங்கள்
கிடைத்துள்ளன.
இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இந்த சாய்வானது சூரியனின் திசையை அறிய
அமைக்கப்பட்டது. ஜூன் 21-ம் நாளில் அரை மணி நேரத்திற்கு அதன் நிழல் கீழே விழாது. அறிவியல் ரீதியாகக்
கட்டப்பட்ட அந்தக் கோபுரம் ஒரு தொல்பொருள் சான்றாகும். அந்த கோபுரமானது ஒரு
தனிக்கட்டிடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்த தொடர்பும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தொல்லியல்
துறை அதிகாரி ஓய்வு பெற்றுவிட்டார். தான் பணியாற்றிய காலத்தில் செய்த ஆய்வில்
இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தற்போது பேசுபவர், ஏன் இதற்கு முன்பு இதை பற்றி பேசவில்லை. ஏன் அதை ஆய்வு பூர்வமாக
நிரூபிக்கவில்லை என்று கேள்விகள் எதார்த்தமாக எழுகிறது?
இதேபோல், தாஜ்மஹால் நிறுவப்பட்டுள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்கிறார் பாஜக
நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி.
மேலும்,
முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும்போது தங்கள் பரம்பரையின் நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், அந்த நிலத்தின்மீதுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அயோத்தியில் பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் எனபவர் தாஜ்மஹாலில்
மூடப்பட்டு கிடக்கும் 20
அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் இருக்க வாய்ப்பு
இருப்பதாகவும் உடனடியாக அந்த அறைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த
நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
காவி கும்பல்
பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதில் பெற்ற வெற்றியை வைத்து தற்போது
அடுத்தடுத்து மசூதிகள்,
இஸ்லாமியர்கள் கட்டிய கட்டிடங்களை குறிவைத்து அதை கைப்பற்ற
தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ராமர் கோயில்
கட்டுவதற்கு அவர்கள் 20
ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால்
தற்போது இந்தியாவில் அனைத்து துறைகளையும் கைப்பற்றிவிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது
இலக்கை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது.
அதற்கு மிகப்பெரிய சாட்சியாக இன்றைய நீதிமன்றங்கள் விளங்குவதை நாம் பார்க்க முடிகின்றது.
வழிபாட்டுத்
தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991-ன் படி அயோத்தியை
தவிர்த்து மற்ற வழிபாட்டுத் தலங்கள் 1947, ஆகஸ்ட் 15-க்கு முன்பு எப்படி இருந்து வருகிறதோ அதேபோல் பராமரிக்கப்பட வேண்டும் என
சட்டம் சொல்கிறது.
இவர்கள் உருவாக்கி
வைத்துள்ள இந்த சட்டத்தின் படியே பார்த்தால் கூட இன்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் செய்யும் வேலைகள் எல்லாம் சட்டவிரோதமானவை.
இந்த சட்டவிரோதமான
வேலையைத்தான் நீதிமன்றங்கள் அங்கீகரித்து கலவரத்தை தூண்டுவதற்கு ஆதாரத் தூண்களாக
விளங்குகின்றன.
( நன்றி: வினவு, 17 & 19 மே 2022 )
இஸ்லாமியர்கள்
இழந்த இறையில்லங்கள் எத்தனை?
நாம் 1992 –ல்
இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால், இந்த
தேசத்தில் இடிக்கப்பட்ட, தரைமட்டமாக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 12,000
த்தை தாண்டியது.
டிசம்பர் 21, 2010 அன்று, “ஆலய இடிப்பில் அவமதிக்கப்படும்
மதம்’ என்ற
தலைப்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமர் காலித் என்ற கட்டுரையாளர் எழுதிய ஆங்கிலக்
கட்டுரையில் (அதன் தமிழாக்கம் இது!)
1984ல் பாதிப்புக்குள்ளான பொற்கோயில்
1992ல் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித்
1995ல் காஷ்மீரில் இராணுவத்திற்கும்
போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பாதிப்புக்குள்ளான சரார்-இ-ஷெரீஃப்
இந்த வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே நமக்கு வெளியில் தெரிபவை. இவை
தவிர்த்து இன்னும் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், எதிரிகளால் அபகரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின்
எண்ணிக்கை நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றது.
சண்டிகர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப்
ஆகிய பகுதிகள் அடங்கிய பழைய பஞ்சாபில் 12,000
பள்ளிவாசல்கள்
அழிக்கப்பட்டுள்ளன; அல்லது இந்துக் கோயில்களாக, கடைகளாக, வீடுகளாக, மாட்டுத்
தொழுவங்களாக அதை விடவும் கேடாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்குக்
கூறப்பட்ட காரணமும், கற்பிக்கப்பட்ட
நியாயமும் என்ன?
1947ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில்
உள்ள குருத்துவாராக்கள், கோயில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப்
பழிக்குப் பழி வாங்குவதற்காகத் தான் என்று பதில் தரப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் வாழவில்லை என்ற பொய்யான, போலியான காரணங்களைச் சொல்லி, பள்ளிவாசல்களை அவற்றின் பழைய பயன்பாட்டுக்குக் கொண்டு வர
விடாமல் அரசியல்வாதிகள் தடுக்கின்றனர்.
ஆனால்
உண்மை நிலை என்ன? பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலிருந்தும்
அதிகமதிகம் முஸ்லிம்கள் பஞ்சாபிற்குக் குடிபெயர்ந்து பண்ணைத் தொழிலாளர்களாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
முன்னாள்
மன்னர் மாநிலங்கள் என்று அழைக்கப்பட்ட ஆல்வார், பாரத்பூர் மாநிலங்களில் இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும்
அண்டை மாநிலமான பஞ்பாப் பள்ளிவாசல்கள் சந்தித்த அதே கதியைத் தான் சந்தித்தன.
நாடு
விடுதலையின் போது டெல்லியில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன.
லாகூரில் உள்ள கோயில் மற்றும் குருத்துவாராக்கள் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கும்
படலம் தான் என்று இந்த அக்கிரமத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது.
மூன்று வகை சூழ்ச்சிகள்...
அவர்கள்
பள்ளிவாசல்களை, தர்ஹாக்களை, முஸ்லிம்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்களை அழிக்க
மூன்று வகையான தந்திரங்களை, சூழ்ச்சிகளை கையாளுகின்றனர்.
1.கலவரங்களின் மூலம் அழித்தல். 2.தொல்லியல் துறை மூலம்
அழித்தல். 3. நீதிமன்றங்களின் துணை கொண்டு அழித்தல்.
1.கலவரங்களின் மூலம் அழித்தல்.
இந்தியாவில்
பாழாக்கப்பட்ட, பறிக்கப்பட்ட
12,000
பள்ளிவாசல்களைப் புள்ளி விபரங்களுடன் தருகின்றார்.
1947க்குப் பின் நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு
கலவரத்திலும் பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
1979ல் மத்திய பிரதேசத்தில் 55 பள்ளிவாசல்கள்!
1989ல் பாகல்பூர் இரத்தக் களரியில், வகுப்புக்
கலவரத்தில் 57 பள்ளிவாசல்கள்!
1990ல் ஹைதராபாத் கலவரத்தில் பலியான 77 முஸ்லிம்
கட்டடங்கள்!
2002ல் குஜராத் இனப் படுகொலையில் 236 பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின்
புனிதத் தலங்கள், தர்ஹாக்கள் தகர்த்தெறியப்பட்டன.
குஜராத்தைப் புகழ்ந்து கவிதை பாடிய “வலி
தக்கானி’ என்பவரின் நினைவுக் கோபுரமும் பெருக்கெடுத்து
ஓடிய காவி பயங்கரவாத வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்டது.
2.தொல்லியல் துறை மூலம் அழித்தல்.
தொல்லியல்
துறையும் தன் பங்குக்கு நினைவுச் சின்னம் என்ற பெயரில் முஸ்லிம்கள் தங்கள்
பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடைக் கல்லாக நிற்கின்றது.
தொல்லியல்
துறை தன் கட்டுப்பாட்டில் 118
பள்ளிவாசல்களை வைத்திருக்கின்றது. அந்தப் பள்ளிகளில்
தொழுகைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நிஜாம் ஆட்சி செய்த
ஹைதராபாத்தின் எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களில்
தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முஸ்லிம்
மக்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பள்ளிவாசல்களைத் தொல்லியல் துறை பூட்டி
வைத்திருக்கின்றது. ஆனால் அவ்வூர்களில் முஸ்லிம்கள் வாழத் துவங்கிய பின்னரும்
பள்ளிவாசல்களை முஸ்லிம்களிடம் தர மறுக்கின்றது.
மத்திய அரசின் பெரும் துரோகம்
1979ல்
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தொல்லியல் துறையின்
கீழிருக்கும் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடையை நீக்குவதாக வாக்களித்தது. அந்த
வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அந்தப் பள்ளிகளில் மீண்டும் தொழச் செல்லும் போது
அந்த வாக்குறுதி பொய் என்று புலனானது.
ஒரு பக்கம்
தொல்லியல் துறையின் சதி! மற்றொரு பக்கம் இந்துத்துவா சக்திகளின் சதி! மத்திய
அரசின் முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி தலைமையில் சுமார் 2000 பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், முன்னாள்
இந்துக் கட்டட அமைப்புகள் என்று ஒரு பட்டியல் திரட்டி வைத்திருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய தலங்களும் அவற்றில் உள்ளடங்கும்.
தொல்லியல்
துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் தவ்லதாபாத் கோட்டையில் இருக்கும் இடைக்கால
வரலாற்றுப் பள்ளியான ஜும்ஆ மஸ்ஜிதின் மிஹ்ராபில் சிலைகளைக் கொண்டு வைத்து அதைப் பாரத
மாதா கோயில் என்றாக்கி விட்டனர். அதன் பிறகு இதே பாணியை இந்துத்துவா சக்திகள் ஏனைய
பள்ளிவாசல்கள் விஷயத்திலும் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.
ஒரு
கட்டடத்தின் தூண் அல்லது அமைப்பு இந்துக் கோயிலுக்கு ஒத்திருக்கின்றது என்றோ, அல்லது
அந்தக் கட்டடம் இடிக்கப்பட்ட இந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்டது என்றோ ஒரு கதை
கட்டி விட்டால் போதும். அடுத்த கணம் அது முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு
விடும்.
இந்த
அடிப்படையில் தான் ஆந்திராவில் 1970ல் கட்டப்பட்ட பாக்கியலட்சுமி கோயில், தொல்லியல்
துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சார்மினார் மீது துருத்திக் கொண்டிருக்கின்றது. அலெ
நரேந்திரா என்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி. சார்மினாரை இந்துக் கோயிலாக
மாற்றுவேன் என்று மிரட்டல் விடுத்தான்.
பி.ஜி. கெஸ்கார் என்பவன் மக்கா மஸ்ஜிதைக் குண்டு வைத்துத்
தகர்ப்பேன் என்று கொக்கரித்தான். இவை இந்துத்துவா சக்திகளின்
வெறித்தனத்திற்குரிய எடுத்துக்காட்டுகளாகும்.
பள்ளிவாசல்களில்
ஒரு தடவை சிலைகள் கொண்டு வைக்கப்பட்டால் போதும். மறுகணம் பூஜை புணஸ்காரம் தொடங்கி
விடும். அரசு அதிகாரிகள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, கொஞ்சம்
கொஞ்சமாக இஸ்லாமியச் சின்னத்தை அழித்து அதில் இந்துச் சின்னத்தைப் பதிய வைத்து
விடுகின்றனர்.
3. நீதிமன்றங்களின் துணை கொண்டு அழித்தல்.
பாபரி மஸ்ஜித் விவகாரம்
இதற்கு முழுச் சான்றாகும்.
முஸ்லிம் மன்னர்கள்
இந்துக் கோயில்களை இடித்தார்களா?
வரலாற்றின்
இடைக் காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் இந்துக் கோயில்களை இடித்தார்கள்
என்ற தவறான சரித்திரம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும்
பதிந்திருக்கின்றது; படிந்திருக்கின்றது.
இது இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாகப் பரப்பி வரும் விஷக் கருத்தாகும்.
ஆனால்
சரியான வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் இடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று
அவர்களின் ஏக போக உரிமையாக்குவது அக்கிரமும் அநீதியுமாகும் என்று
குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர்.
முஸ்லிம்
மன்னர்கள் வருவதற்கு முன்னாலேயே இந்தியாவிலிருந்த ஒவ்வொரு மன்னரும் தங்கள்
வெற்றியை நினைவு கூரும் விதமாக பரஸ்பரம் தங்கள் எதிரிகளின் தெய்வங்களை, வழிபாட்டுத்தலங்களை
அடித்து நொறுக்கியிருக்கின்றனர்; அழித்து ஒழித்திருக்கின்றனர்.
முஸ்லிம்
மன்னர்கள் ஆட்சி செய்யும் போது அரசாங்க வருவாயில் அல்லது அரசு நிலத்தில் கோயில்கள்
கட்டப்பட்டன. ஆனால் கோயில்களின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட்ட போது அந்தக்
கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதை இஸ்லாத்துடன் முடிச்சு போடக் கூடாது.
இவ்விரு
காரணங்களால் கோயில் இடிப்பை முஸ்லிம்களுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பேச முடியாது
என்று அந்த வரலாற்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கின்றனர்.
கட்டிடக்கலையும், கட்டிட அமைப்பும் ஒரு காரணம்…
இதல்லாமல்
இந்துக் கொத்தனார்கள், கல்
செதுக்கும் சிற்பிகள் தான் பள்ளிவாசல்களைக் கட்டினார்கள். இதைத் தான் இந்துத்துவா
சக்திகள் பழங்கால இந்துக் கோயில்களின் இடிபாடுகள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். எழுப்பிய
கட்டடங்களில் கண்ணைக் கவருகின்ற வகையில், உள்ளங்களைக் கொள்ளை
கொள்கின்ற விதத்தில் கலை நுணுக்கங்களையும் கைவண்ண வேலைப்பாடுகளையும் அந்தக்
கொத்தனார்கள் மற்றும் சிற்பிகள் மூலம் முஸ்லிம்கள் செய்தனர்.
இந்தக்
கொத்தனார்களுக்கும் சிற்பிகளுக்கும் இஸ்லாமியக் கலை நுணுக்கமோ, இஸ்லாமிய
கட்டடக் கலை வடிவமைப்போ தெரியாது. இருப்பினும் அவர்கள் கட்டிய கட்டடங்களில் தங்கள்
கைவண்ணத்தையும் கலை நுணுக்கத்தையும் மிகத் திறம்படப் பதிய வைத்தனர். இந்துக்
கட்டட அமைப்பிற்கும் இந்துக் கலை நுணுக்கத்திற்கும் அவர்களுடைய கட்டட அமைப்பு ஒத்திருக்கின்றது
என்பதை அறவே அவர்கள் பொருட்படுத்தவில்லை.
சில
கட்டடங்களில் கை கழுவப்பட்ட, கண்டு கொள்ளாமல் விடப்பட்ட, பாழான பழைய
கோயில்களில் உள்ள கட்டடப் பொருட்களை தாங்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்களில்
பயன்படுத்தியிருக்கின்றனர். இது பிற மத வழிபாட்டுத்தலங்களை அவமதிக்கும்
அடிப்படையில் அமையவில்லை. தாங்கள் ஆள்கின்ற, வாழ்கின்ற பகுதியில்
கட்டடக் கலையை தங்கள் கட்டட அமைப்பில் பதிய வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின்
அடிப்படையில் அமைந்ததாகும்.
இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் கோயில்களை இடித்தார்கள்
என்பது அபத்தமாகும் என்று வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.
உண்மையில்
அவர்களின் கருத்துப்படி இது சங்பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபு வாதமாகும். வளைத்து, வளைத்து
இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் இடித்தார்கள் என்று சதாவும் குற்றம்
சாட்டுகின்ற சங்பரிவார்களுக்கும் அவர்களது சார்பாளர்களுக்கும் நாம் ஒரு கேள்வியை
முன்வைக்கின்றோம்.
முஸ்லிம்
மன்னர்கள் ஒரு வாதத்திற்குக் கோயில்களை இடித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு
பேச்சுக்கு இதை ஒப்புக் கொள்வோம். முஸ்லிம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதச்
சார்பின்மை என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியா, மதச்
சார்பின்மையை உயிர் மூச்சாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த
மதச்சார்பற்ற இந்தியாவில் தான் 12000 பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டுள்ளன. ( நன்றி.
பயான்.ஆப்.காம் )
முஸ்லிம்
சமூகம் செய்ய வேண்டிய முதல் பணி என்ன?
1992 –ம்
ஆண்டு டிசம்பர் 6 பாபரி மஸ்ஜிதை இடித்த கையோடு ஃபாசிஸ சங்கிகள் தங்களின் அடுத்த
இலக்குகள் காசி, மதுரா உட்பட ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் என அறிவித்தார்கள்.
மேலும், 100 ஆண்டு கால ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜெண்டாவை இடதுசாரிகள் மற்றும் நடுநிலை
வரலாற்று ஆய்வாளர்கள் நமக்கு எச்சரிக்கை வடிவில் தந்து கொண்டே இருந்தார்கள்.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக நாம் இயக்க மற்றும் மஸாயில் ரீதியான தர்க்கங்களில்
கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். காங்கிரஸும் நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளும்
என்று கனவு கண்டு கொண்டிருந்தோம்.
எதிர்வரும்
காலங்களிலும் நாம் இது போன்று அலட்சியமாக இருந்து விடுவோம் என்றால் நமது
வழிபாட்டுத்தலங்கள் ஒவ்வொன்றும் இது போன்று நம்மிடம் இருந்து பறிக்கப்படும்.
இடிக்கப்படும், அழிக்கப்படும். நவூதுபில்லாஹ்... அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
அதன்
முதற்கட்டமாக கோயிலை இடித்து தான் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்கிற வரலாற்றுத்
திரிபு பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். முஸ்லிம்கள் பள்ளிவாசலை புனிதமாக
கருதுவார்கள். பிறமதங்களையும், பிற மதத்தவர்களையும் பாதுகாப்பார்கள், பிற
மதவழிபாட்டுத்தலங்களை முஸ்லிம்கள் இடிக்கவில்லை இடிக்கவும் மாட்டார்கள் என்ற
கருத்தாக்கத்தை வெகுஜன இந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
அடுத்து,
கலவரங்களின் போது பள்ளிவாசல்களை தாக்குவதை, இடிப்பதை அவர்கள் கொள்கையாகவே
வைத்திருக்கின்றார்கள். சமீபத்திய டெல்லி கலவரத்தின் போது டெல்லியின் மஸ்ஜிதுகள்
தாக்கப்பட்டதும், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக புணரமைத்ததும் நாம்
அறிந்த செய்தியே.
எனவே,
எதிர்வரும் காலங்களில் கலவரத்தின் போது மஸ்ஜிதுகள் தாக்கப்படாமல் இருக்கவும்,
முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்கள், உயிர்கள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படாமல்
இருக்கவும் நாம் முன்னேற்பாடுகளை செய்து வைக்க வேண்டும்.
மஸ்ஜிதின் மாண்பு:-
1. அல்லாஹ்விற்கானது.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
"திண்ணமாக,
இறையில்லங்கள் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வை வணங்குவதற்காகவும் உள்ளவையாகும். எனவே, அங்கே அல்லாஹ் அல்லாத வேறெவரையும் அழைக்க வேண்டாம்". (அல்குர்ஆன்: 72:18)
2.
அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحَبُّ الْبِلَادِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا
وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا مسلم
மக்கள் வசிக்கும் ஊர்களில் அனைத்து இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்விற்கு மிகப்பிடித்த இடம்
பள்ளிவாசல்கள் ஆகும். மிகவும்
வெறுப்பிற்குரிய இடம் கைடைவீதிகள் ஆகும்" என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
3.
ஒரு முஸ்லிம் நேசிப்பதற்கு தகுதியான இடம்.
عن أبي سعيد قال : قال رسول الله صلى الله عليه وسلم : من ألف
المسجد ألفه الله
"யார் பள்ளிவாசலை நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான்" என நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
இவ்வளவு மாண்பு
நிறைந்த பள்ளிவாசல் விஷயத்தில், முஸ்லிம்கள் எவ்வளவு
கவனத்தோடு நடந்து கொள்வார்கள் என நடுநிலையான இந்து சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள
வேண்டும்.
4. தவறான நோக்கத்துடன் ஒரு பள்ளிவாசல் கட்டப்படுமானால் அதை முஸ்லிம்களே இடித்து
விடுவார்கள்.
وَٱلَّذِينَ
ٱتَّخَذُواْ مَسْجِداً ضِرَاراً وَكُفْراً وَتَفْرِيقاً بَيْنَ ٱلْمُؤْمِنِينَ
وَإِرْصَاداً لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ وَلَيَحْلِفُنَّ
إِنْ أَرَدْنَا إِلاَّ ٱلْحُسْنَىٰ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ }
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபன்னவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை"" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
لاَ تَقُمْ فِيهِ أَبَداً لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ
أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن
يَتَطَهَّرُواْ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ
ஆகவே, (நபியே!)
அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே
பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும்,
தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது ஆங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக
இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
{ أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ تَقْوَىٰ مِنَ
اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ شَفَا جُرُفٍ
هَارٍ فَٱنْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَٱللَّهُ لاَ يَهْدِي ٱلْقَوْمَ
ٱلظَّالِمِينَ }
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான். அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒருவடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை) . அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன். ( அல்குர்ஆன்: 9: 108-110 )
நயவஞ்சகர்கள் ‘குபா’
பள்ளிவாசலுக்கு அருகே (போட்டிப்) பள்ளி ஒன்றைக் கட்டலாயினர். அதை
நன்கு உறுதியாகக் கட்டிய அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தபூக் போருக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே கட்டுமான வேலையை முடித்து விட்டனர்.
பின்னர் அந்த நயவஞசகர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் வந்து,
‘(அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் எங்களிடம் வர வேண்டும்;: நாங்கள் கட்டியிருக்கும் பள்ளிவாசலில் தாங்கள் தொழ வேண்டும்: அவ்வாரு தாங்கள்
தொழுவதன் மூலம் உங்கள் ஓப்புதலுக்கும் அங்கீகாரத்துக்கும் அதையே நாங்கள் சான்றாகக்
கொள்வோம்’ என்றனர்.
அந்தப் பள்ளிவாசலைத் தங்களில்
உள்ள பலவீனமானவர்களும் நோய் வாய்ப்பட்டவர்களும் குளிர் கால இரவுகளில் பயன்படுத்திக்
கொள்வதற்குக் கட்டியதாகத் தெரிவித்தனர்.
ஆனால் அதில் தொழுவதிலிருந்து
நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் பாதுகாத்து விட்டான். அப்போது நபி(ஸல்)அவர்கள் (அந்த நயவஞ்சகளிடம்)
நாங்கள் (தற்போது) பயணத்தில் உள்ளோம்.(எனவே, இப்போது அங்கு தொழ வருவது இயலாது.)
எனினும், நாங்கள் (பயணத்தை முடித்துவிட்டுத்) திரும்பும் போது
(வேண்டுமானால்) அல்லாஹ் நாடினால் பார்க்கலாம்.’’ என்றார்கள்.
பின்னர் நபி (ஸல்)அவர்கள் தபூக்கிலிருந்து
மதீனாவை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் மதீனாவுக்கும் இடையே
ஒரு நாள் பயணத் தொலைவு, அல்லது அதை விடக் குறைவான தூரம் தான்
எஞ்சியிருந்தது.
அப்போது நபி(ஸல்) அவர்களிடம் (வானவர் தலைவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்
வந்து (நயவஞ்சகர்கள் கட்டிய) அந்த ஊறு விளைவிக்கும் பள்ளிவாசல் (மஸ்ஜித் ளிரார்) தொடர்பான
செய்தியை எடுத்துரைத்தார்கள்.
அந்த பள்ளிவாசலை நிறுவியவர்கள், இறை
மறுப்பை வளர்க்க வேண்டும் என்றும், தொடக்க நாள் முதல் இறையச்சத்தின்
மீது நிறுவப்பட்ட பள்ளிவாசலாகிய ‘குபா’ பள்ளிவாசலின் இறை நம்பிக்கையாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும்
என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
எனவே அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தாம் மதீனா வந்து சேர்வதற்கு முன்னரே அந்தப்பள்ளிவாசலைத் தரைமட்டமாக்குவதற்காக
அனுப்பி வைத்தார்கள்.
அடுத்த வசனத்தில் (108)> ‘’(நபியே) நீர்
அதில் ஒரு போதும் தொழுவதற்காக நிற்க வேண்டாம்.’’ என்று அல்லாஹ்
கூறுகின்றான்.
இது நபி (ஸல்) அவர்களுக்கு
இடப்பட்ட தடையுத்தரவாகும். நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து அவர்களுடைய சமுதாயத்தர்குக்கும்
இந்தத் தடையுத்தரவு பொறுந்தும்.ஆக> நபி(ஸல்)அவர்களுடைய சமுதாயத்தாரும்
சரி> யாருமே ஒரு போதும் அந்தப் பள்ளி வாசலில் நின்று தொழலாகாது
என்பது இதன் கருத்தாகும்.
( நூல்:: தப்ஸீர் இப்னு கஸீர் )
கோல்கொண்டாவில்
மசூதி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் கூறுவார்கள். கோல்கொண்டா மன்னன், தானஷா, பல ஆண்டுகள் வரியெதுவும் கட்டாமல், அந்த பணத்தை புதைத்து
மசூதி ஒன்றைக் கட்டிவிட்டான். கோபமடைந்த ஒளரங்கசீப் (ரஹ்) மசூதியை
இடிக்கச்சொன்னார்கள். மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை பதுக்கி வைத்து அதை மறைக்க
கட்டிய பள்ளிவாசலை இடிக்க உத்தரவிட்டார்கள் ஔரங்கசீப் (ரஹ்) அவர்கள். பள்ளிவாசல்
இடிக்கப்பட்டு அதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டு அரசு கஜானாவில்
சேர்க்கப்பட்டது.
5.
தவறான முறையில், தவறான வழியில் கட்டப்பட்டாலும் அந்த பள்ளிவாசலை முஸ்லிம்கள் நிராகரித்து
விடுவார்கள்.
استدعت توسعة عمر بن الخطاب رضي الله عنه للمسجد
النبوي الشريف أن يضم الدور التي كانت قريبة من المسجد، ويدخلها فيه، فكان -رضي
الله عنه- يعرض على أهلها التعويض من بيت مال المسلمين لمن أراد البيع، ومن أراد
أن يتصدق بداره على المسجد قبل منه ذلك وشكره على صدقته. فكان ممن تصدق ببعض داره:
عبد الله بن جعفر بن أبي طالب، وأبناء أبي بكر الصديق، رضي الله عن الجميع، فقد
روى السمهودي في رواية ليحيى عن أبي الزناد: (أن عمر بن الخطاب -رضي الله عنه- لما
زاد في المسجد، دعا من كان له إلى جانبه منزل، فقال: اختاروا مني بين ثلاث خصال:
إما البيع فأثمن، وإما الهبة فأشكر، وإما الصدقة على مسجد رسول الله صلى الله عليه
وسلم، فأجابه الناس)
ومن الدور التي أدخلها عمر رضي الله عنه في توسعة المسجد،
دار أسامة وإلى الغرب منها، دار زيد بن حارثة، وإلى الغرب منها دار جعفر بن أبي
طالب، وإلى الغرب منها دار العباس، هذا من جهة القبلة. كما أدخل دار سعد بن أبي
وقاص، ودار عبد الرحمن بن عوف، وإلى الشمال منها دار الصديق، ثم دار عبد الله بن
مسعود، وهذه من الجهة الغربية
وروى السمهودي عن ابن سعد عن سالم أبي النضر قال: لما
كثر المسلمون في عهد عمر رضي الله عنه، وضاق بهم المسجد، اشترى عمر ما حول المسجد
من الدور، إلا دار العباس بن عبد المطلب -رضي الله عنه- وحجرات أمهات المؤمنين -
رضي الله عنهن، فقال عمر للعباس: يا أبا الفضل، إن مسجد المسلمين قد ضاق بهم، وقد
ابتعت ما حوله من المنازل نوسع به على المسلمين في مسجدهم.
فقال العباس: ما كنت لأفعل، قال: فقال له عمر: اختر مني
إحدى ثلاث، إما أن تبيعنيها بما شئت من بيت المال، وإما أن أخطك حيث شئت من
المدينة وأبنيها لك من بيت مال المسلمين، وإما أن تصدق بها على المسلمين فتوسع في
مسجدهم. فقال: لا، ولا واحدة منها. فقال عمر: اجعل بيني وبينك من شئت، فقال: أبي
بن كعب، فانطلقا إلى أبي فقصا عليه القصة، فقال أبي، إن شئتما حدثتكما بحديث سمعته
من رسول الله صلى الله عليه وسلم، فقالا: حدثنا، قال: سمعت رسول الله صلى
الله عليه وسلم يقول: إن
الله أوحى إلى داود أن ابن لي بيتا أذكر فيه، فخط له هذه الخطة، خطة بيت المقدس،
فإذا تربيعتها بزاوية بيت رجل من بني إسرائيل، فسأله داود أن يبيعه إياها، فأبى،
فحدث داود نفسه أن يأخذه منه، فأوحى الله إليه: أن يا داود أمرتك أن تبني لي بيتا
أذكرفيه، فأردت أن تدخل في بيتي الغصب، وليس من شأني الغصب، وإن عقوبتك ألا تبنيه،
قال: يا رب فمن ولدي، قال: فمن ولدك
فأخذ عمر بمجامع أبي بن كعب، فقال: جئتك بشيء فجئت بما
هو أشد منه، لتخرجن مما قلت فجاء يقوده حتى دخل المسجد، فأوقفه على حلقة من أصحاب
رسول الله صلى الله عليه وسلم، فيهم أبو ذر: فقال أبي: نشدتكم الله رجلا سمع رسول
الله صلى الله عليه وسلم يذكرحديث بيت المقدس حين أمر الله داود أن يبنيه إلا ذكر،
فقال أبو ذر: أنا سمعته من رسول الله صلى الله عليه وسلم.، وقال آخر: أنا سمعته،
يعني من رسول الله صلى الله عليه وسلم، قال: فأرسل أبيا.
قال: فأقبل أبي على عمر، فقال يا عمر: أتتهمني على حديث
رسول الله صلى الله عليه وسلم؟ فقال عمر: والله يا أبا المنذر ما اتهمتك عليه،
ولكن أردت أن يكون الحديث عن رسول الله صلى الله عليه وسلم ظاهرا. قال:
وقال عمر للعباس
اذهب فلا أعرض لك في دارك، فقال العباس: أما إذ قلت
ذلك فإني قد تصدقت بها على المسلمين أوسع
ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு, உமர் (ரலி) ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது. மெல்ல,
மெல்ல இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்கு
பரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது.
மஸ்ஜிதுன் நபவீ
உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால் சிக்கித் தவித்துக்
கொண்டிருப்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் பள்ளியை விஸ்தரிக்க முடிவெடுத்தார்கள்.
அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிற நபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம் செய்ய முடியும்
என்ற நிலையையும் உணர்ந்தார்கள்.
பள்ளியைச்
சுற்றிலும் ”உஸாமா (ரலி),
ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் (ரலி),
அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர் (ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி), முஃமின்களின் அன்னையர்
நபி {ஸல்}
அவர்களின் தூய மனைவியர் ஆகியோரின் வீடுகள் இருந்தன.
உமர் (ரலி)
அவர்கள்,
முஃமின்களின் அன்னையர் வீட்டை மட்டும் விட்டு விட்டு
மற்றெல்லாவரின் வீடுகளையும், இடங்களையும் வாங்கிட முடிவெடுத்தார்கள்.
வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து “ நீங்கள் உங்கள் வீட்டை விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப் பகரமாக
மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கான
கிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது நீங்கள்
விரும்பினால் அரசுக்கு அன்பளிப்பாக தரலாம். அரசும் உங்களை நன்றியுணர்வுடன்
நடத்தாட்டும். அல்லது நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விற்காக தருமமாகத்
தந்திடுங்கள். கூலி வழங்குவதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட
மாத்திரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விட்டார்கள்.
மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில் நிலத்தையும் பெற்றுக் கொண்டு அவர்கள்
வசித்த வீட்டையும்,
நிலத்தையும் அரசிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வு
நடைபெறுகிற போது,
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஊரில் இல்லை.
ஊரில் இருந்து
வந்த உடன் உமர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து மற்ற
வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் பேசினார்கள்.
ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ மறுத்து விட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”நீர் இடம் தரவில்லையானால் அரசு உம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக் கொண்டு
கைப்பற்றிக் கொள்ளும்!”
என்று கூறினார்கள்.
இருவருக்கும் பேச்சு முற்றவே, வழக்காக நீதிமன்றத்தில் தொடுத்தார்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
நீதிபதி உபை இப்னு
கஅப் (ரலி) அவர்கள் இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு, உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமர் (ரலி) அவர்களே! நபி {ஸல்}
அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் “அல்லாஹ் நபி தாவூத் (அலை) அவர்களிடம் பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட ஆணை
பிறப்பித்தான்.
முதற்கட்டமாக
அதற்கான இடத்தை தெரிவு செய்யும் பணியை மேற்கொண்டார்கள் தாவூத் (அலை) அவர்கள்.
அங்கே, இஸ்ரவேலர்களில்
ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்ட இடம்
தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலைபேசினார்கள்.
ஆனால், அவரோ தரமுடியாது என்று
மறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலை) அவர்கள் “மனதிற்குள் இப்படிச் சொல்லிக்கொண்டார்களாம் “ நீ தராவிட்டால் என்ன?
நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று.
உடனடியாக, அல்லாஹ் தாவூத் (அலை)
அவர்களிடம் வஹீ மூலம் “என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு,
மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய்
இருக்க வேண்டும்”
என்று அறிவித்தான்.
பின்னர், அதற்கான இழப்பீடைக்
கொடுத்து அந்த இடத்தை வாங்கி பைத்துல் முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள்
தாவூத் (அலை) அவர்கள்”
ஆகவே, உமர் அவர்களே! சற்று
நிதானித்து முடிவெடுங்கள்”
என்றார்கள்.
இதைக் கேட்டதும், உமர் (ரலி) அவர்கள் இப்னு
அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும்
வேண்டாம். இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டு நான் ஒரு போதும் அபகரிக்க மாட்டேன்” என்றார்கள்.
அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் “உமர் (ரலி) அவர்களே! ஒரு மனிதனுக்கு
இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக்
காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன் நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல் இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம் தருகின்றேன்” என்றார்கள். ( நூல்: வஃபாவுல் வஃபா )
في زمن
سيدنا عمرو بن العاص، قرر سيدنا عمر بناء مسجد كبير جدا ليصلي الناس به، فما كان
من القائميين علي البناء من " مهندسين "أن يبحثوا عن أكثر الاماكن
المناسبة لبناء المسجد .
و بعد بحث إستقروا علي المكان الذي يتواجد فيه المسجد
في زمننا الحالي. و قد كان في المكان بعض البيوت التي رضى أصحابها عن طيب خاطر أن
تُهدّ ومن ثم يسكنوا هم في مكان آخر لكي يبني المسجد في هذا المكان .
إلا سيدة مسيحية ، فلقد أبت أن تترك بيتها و تذهب الي
بيت آخر للسكن . فحاولوا إقناعها بشتي الطرق ، و لكنها أبت . فقال سيدنا عمرو حسنا أعطوها المال " المقابل لثمن بيتها
" و هدّوا البيت - فلقد كان بناء المسجد متوقفا علي بيتها فقط .
فما كان من السيدة إلا أن أرسلت ابنها الي أمير
المؤمنيين عمر بن الخطاب شاكيه إليه حالها، ذهب ابنها الي أمير المؤمنيين و بلغه
شكواه ، فماذا فعل عمر بن الخطاب ؟
كتب جملة واحدة علي ورقة شجر ، و أعطاها لابن السيدة ، و
قال له اعطيها لعمرو بن العاص، اندهش الرجل و قال له أهذه الورقة ستُرجع إلينا
بيتنا ؟!
فقال له سيدنا عمر، نعم فقط اعطها له.
عاد الرجل الي مصر و أعطى ورقة الشجر الي سيدنا عمرو ،
فإذا به يقول أوقفوا البناء و ردّوا له بيته!!!!
فيا ترى ما الذي كان مكتوبا علي الورقة ؟؟؟
هل كتب فيها: من أمير المؤمنيين عمر بن الخطاب الي عمرو
بن العاص والي مصر : أنا آمرك بأن ترد البيت الى أصحابه
இதே போன்ற தொரு சம்பவம், இதே உமர் (ரலி) அவர்களின்
ஆட்சிக்காலத்தில் “ஒரு கிறிஸ்தவப் பெண்மனி உமர் (ரலி) அவர்களிடம் எகிப்தின் ஆட்சியாளர் அம்ர்
இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இறையில்லம் கட்ட தம்முடைய வீட்டையும், இடத்தையும் ஆக்கிரமித்ததாக குற்றம் சுமத்திய போது, பள்ளியின் அந்தப் பகுதியை இடித்து விட்டு, முன்பு இருந்தது போன்று
அப்பெண்மனியின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உமர் (ரலி) அவர்கள் எகிப்தின் ஆளுநர்
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டார்கள்.
( நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}…லி இமாமி காலித் முஹம்மத் காலித் (ரஹ்).. )
6.
முஸ்லிம்கள் பிற மத ஆலயங்களை அழிப்பார்களா?
فهذا أبو بكر الصديق أول خليفة للمسلمين يوصي أمير
أول بعثة حربية في عهده أسامة بن زيد فيقول: (لا تخونوا ولا تغلوا ولا تغدورا ولا
تمثلوا ولا تقتلوا طفلاً صغيرًا ولا شيخًا كبيرًا ولا امرأة ولا تقطعوا نخلاً ولا
تحرقوه ولا تقطعوا شجرة مثمرة ولا تذبحوا شاة ولا بقرة ولا بعيرًا إلا لمأكلة وسوف
تمرون على قوم فرَّغوا أنفسهم في الصوامع فدعوهم وما فرَّغوا أنفسهم له)
உங்களிடம் போர்செய்ய வருபவர்களிடம் மட்டுமே போர்செய்ய
வேண்டும்.
மோசடி செய்யக் கூடாது, ஏமாற்றக் கூடாது. வரம்பு
மீறக் கூடாது.
பெண்களை-குழந்தைகளை-சிறுவர்களை-
மதகுருமார்களை-வியாபாரிகளை-வி
பிறமத ஆலயங்களை, மடாலயங்களை
சேதப்படுத்தக்கூடாது.
தேவையின்றி மரங்களை வெட்டவோ,கட்டிடங்களை இடிக்கவோ கூடாது. எரிக்கவோ கூடாது.
ஆடு, மாடு,
ஒட்டகம் போன்ற உயிரினங்களை கொல்லக் கூடாது.
தான் அனுப்பிய முதல் படைப்பிரிவின் தளபதியான உஸாமா இப்னு
ஜைத் (ரலி) அவர்களிடம் முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்டிப்புடன் இட்ட
கட்டளையாகும் இது.
எனவே, தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மீது கோயிலை இடித்து அந்த இடத்தில் பள்ளிவாசலை
கட்டி வைத்தார்கள் என்று குற்றம் சுமத்துவது வரலாற்று திரிபும், அவதூறும் ஆகும்.
7. இதுவும் வரலாறு தான்!! இதை யாராவது சொல்கிறார்களா?
சிவனின் இருப்பிடமான கைலாஷ் மானசரோவர் சீனாவின்
ஆதிக்கத்தில் உள்ளது.. நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப்
பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு
ஐநா அவைக்குச் சென்று,
"சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.
இதற்குச் சீனா
தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை.
எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட
பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்".
இந்த பதில் இன்றும் ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில்
உள்ளது.
சீனா எந்த இந்தியப் பேரரசரின் பெயரை குறிப்பிட்டது தெரியுமா?
"ஔரங்சேப் - Aurangzeb".உண்மையில் ஔரங்சேப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதைக்
குறித்து பேரரசர் ஔரங்சேப்,
அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச (Ching dynasty) மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு (Shunji I) எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு புனிதமான இடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்.
கடிதம் எழுதி
ஒன்றரை மாதமாகியும் சீன தரப்பிடமிருந்து பதில் இல்லாததால் குமாவோன் பகுதி அரசர்
பாஜ் பஹதூர் சந்த் அவர்களின் படையுடன் இணைந்து குமாவோன் வழியாக மலையேறிச் சென்று
சீனாவைத் தாக்கி,
கைலாஷ் மானசரோவர் பகுதியை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தார்.
எந்த பேரரசர்
ஔரங்சேப் அவர்களை தீவிர இஸ்லாமிய அரசர் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பரப்புரை செய்யப்படுகிறதோ அதே பேரரசர்தான்.
அவர்தான் இந்தியாவின் முதல் உண்மையான 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.
வரலாற்றின் இந்த பக்கங்கள், இந்தியா விடுதலை அடைந்த காலத்து ஐநா அவையின் ஆவணங்களில் உள்ளன. அது
மட்டுமின்றி அந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பாக உள்ளன.
அந்த வரலாற்றுச்
சம்பவங்களை நீங்கள் கீழ்க்கண்ட புத்தகங்களிலும் காணலாம்.. ஹிஸ்டரி ஆஃப் உத்தராஞ்சல் - உத்தராஞ்சல் வரலாறு. ஆசிரியர்: ஓ.சி. ஹாண்டா மற்றும் த டிராஜிடி ஆஃப் திபத் - திபத்தின் துயரம் (அல்லது சோகமுடிவு).
ஆசிரியர்: மன்மோஹன் ஷர்மா.
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்!!
இறையில்லங்களைப் பாதுகாப்போம்!!!
No comments:
Post a Comment