தன்பாலின உறவு: அங்கீகாரமும், அபாயமும்!
உலகில் சமய
நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும்
மாறினாலும் அனைத்து சமயங்களும்
ஒத்துப்போகிற அம்சங்களில் ஒன்று
தான் திருமணம். ஆம்!
ஆணுக்கும் பெண்ணுக்கும் தான்
திருமணம் நடைபெறும் என்பதில்
மாறுபடவில்லை.
எனினும் மேற்குலக
கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கி
இருக்கும் சிலரின் கேவலமான
சிந்தனையில் பிறந்தது தான்
தன்பாலின உறவு முறை.
இந்த உறவு
முறையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை
உலகம் முழுவதும் சமீப
காலமாக கனிசமாக உயர்ந்து
வருகின்ற நிலையில் இந்தியாவிலும்
தன்பாலின உறவுக்கு ஆதரவான
குரல்கள் உயரத் துவங்கி
இருக்கின்றது.
ஆசியாவிலேயே தன்பாலின
உறவு ஆதரவாளர்களுக்கான அமைப்பு
செயல்படுவது தமிழகத்தில் தான்
அதுவும் மதுரையில் தான்
எனும் போது அதிர்ச்சியாக
இருக்கின்றது.
எதிர்காலம் நிறைய
சவால்களை தரக் காத்திருக்கின்றது.
ஒரு மனிதனாக, ஒரு
முஸ்லிமாக இதை நாம்
எப்படி எதிர் கொள்ளப்போகின்றோம் என்று தெரியவில்லை.
கடந்த 2018 –ம்
ஆண்டு செப்டம்பர் 6- தேதி
தன்பாலின உறவு என்பது
குற்றமல்ல என்று கூறிய
உச்ச நீதிமன்றம் தன்பாலின
உறவு குற்றச் செயல்
என்ற இந்திய குற்றவியல்
சட்டத்தின் 377 –A பிரிவை
நீக்கி சட்டப்பூர்வ தீர்ப்பளித்தது.
தற்போது கேரளாவைச்
சேர்ந்த ஆதிலா – நூரா
(பெண்கள்) தன்பாலின உறவு
வைத்திருக்கும் இவர்கள் தொடுத்த
வழக்கில் வழக்கு விசாரணை
தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே
“இருவரும் இணைந்து வாழ
விருப்பமா?” என்று நீதிபதி
கேள்வி எழுப்ப, “ஆம்”
என்று இருவரும் பதில்
கூற அப்படியானால், “உரிய
வயதில் இருக்கும் இருவரும்
இணைந்து வாழ விரும்பினால்
இணைந்து வாழலாம்” என
உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து
அதிர்ச்சியளித்திருக்கின்றது. ( நன்றி:
விகடன், ஜூன் 1, 2022 )
இதுவரை தன்பாலின
உறவு குற்றச்செயல் அல்ல
என்று இருந்த நிலை
மாறி, இணைந்து வாழலாம்
என்ற இந்த தீர்ப்பு
எதிர்காலத்தில் “திருமண அங்கீகாரத்தை”
வழங்கி விடுமோ என்கிற
அச்சத்தை ஏற்படுத்தாமலில்லை.
இங்கே நாம்
இன்னொரு விஷயத்தையும் கவனத்தில்
கொள்ள வேண்டும். “இந்த
வழக்கை முஸ்லிம் பெண்கள்
தொடுத்த காரணத்தினால் தான்
நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்கள்” என்று நாம்
கூறிட முடியாது. கடந்த
சில வருடங்களாகவே பாலியல்
தொடர்பான தீர்ப்புகளில் நமது
நாட்டின் மேதகு நீதிபதிகள்
மிகுந்த தாராளத்தன்மையோடு தீர்ப்புகளை
வழங்கி வருவதை பார்த்து
வருகின்றோம். வேறு யார்
வழக்கு தொடுத்திருந்தாலும் இவ்வாறே
தீர்ப்பு வழங்கி இருப்பார்கள்.
கழுதைக்கு பேர் முத்து
மாலையாம்….
இதுவரை ஓரினச் சேர்க்கை என அழைக்கப்பட்டு வந்த ஓர் ஆணும் மற்றொரு ஆணும் அல்லது
ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் பாலியல்
ரீதியிலான உடலுறவு. தற்போது அந்தச் சொல் மெருகேற்றப்பட்டு “தன்பாலின உறவு” என மரபு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்றும், திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என்றும் பெயர் மாற்றம் செய்ததற்கு நிகராக
இதை நாம் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.
எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்..?
இந்த அங்கீகாரமானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம், சிலருக்கு மகிழ்ச்சியை வரவழைத்திருக்கலாம்.
ஊடகவியலாளர்களுக்கு விவாதக் களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். ஆனால்
இவர்களெல்லாம் ஒரு விஷயத்தை மிகத்திடமாக மனதில் கொள்ள வேண்டும். இவ்வுலகானது
இயற்கையை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் அவ்வளவு எளிதாக
மறந்துவிடக் கூடாது. இயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு
ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.
உடலியல், உளவியல், சமூகவியல் ஆகியவற்றிற்கு எதிரானது..
செப்டம்பர்
6/2018 அன்று வழங்கப்பட்ட தன்பாலின உறவுக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் கல்வியியல் கல்லூரி ஒன்றின்
முதல்வரும் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை
சேர்ந்தவருமான முனைவர் கமல. செல்வராஜ் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி
தற்போது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இதோ! அந்த பகுதி...
“தன்பாலின உறவுக்கு சட்ட
அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பு, அதனை மிக முக்கியமான
மூன்று காரணிகளை மையப்படுத்தி அலசி ஆராய்து அங்கீகரித்திருக்க வேண்டும்” எனத் தன் கருத்தை முன் வைக்கிறார் ஒரு மருத்துவர்! அது எவை என அவரிடம்
தொடர்ந்த வினாவிற்கு,
அவர் முன்வைத்த விடை இதுவாக இருந்தது.
“ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவருக்கு, பாலியல் உறவு கொள்வதற்கான
சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், அவர்களின் உடலியல், உளவியல்,
சமூகவியல் பாதிப்புகளை மிகத் துல்லியமாக ஆய்ந்தறிந்த
பின்னரே இவ்வங்கீகாரம் அளித்திருக்க வேண்டும்” என்கிறார் அந்த
மருந்தியலாளர்.
முதலில் அவர் முன்
வைத்த காரணியானது,
உடலியல் ரீதியிலானது. “ஓர் ஆணும் பெண்ணும்
உடலுறவு கொள்வதாக இருந்தால், அதற்கென்றே இயற்கையாகவே
இருவருக்கும் உடல்கூறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முறையில் அவர்கள் உறவு கொள்வதாக
இருந்தால்,
அவர்களுக்கு உடல் ரீதியிலான எவ்விதப் பிரச்னைகளும்
எழுவதற்கான வாய்ப்புகளில்லை. அதோடு அவர்களை எவ்வித நோய்களும் அண்டுவதற்கும்
வழியில்லை”
என்பதாகும்.
இயல்பான, இயற்கையான நடைமுறைகளைத் தவிர்த்து அவர்கள் மேற்கொள்ளும் செயற்கையான உறவு
முறையானது,
ஒருவர் தனக்கு வாயிருந்தும் மலதூரம் வழியாக
உணவருந்துவதற்கும்,
மலத்தூரம் இருந்தும் வாய்வழியே மலம், சிறுநீர் கழிப்பதற்கும் சமமானதாகும். இவ்வாறு செய்வதின் மூலம் அவர் என்னென்ன
சிரமங்களையும் நோய்களையும் அனுபவிப்பாரோ அவை அனைத்தையும் இதன் மூலம் அவர்
அனுபவிக்க வேண்டியிருக்கும்” என விளக்கினார்.
இரண்டாவதாக
அவர்கள் முன்வைத்தக் காரணம் உளவியல் ரீதியிலானது. “இருவர் இணைந்து இன்பம் துய்த்தல் போன்றக் காரியத்தில் ஈடுபடும் போது அதில்
அவர்கள் இருவருக்கும் ஒன்று போல் இன்பம் கிடைக்க வேண்டும். என்றால் மட்டுமே
அவர்கள் இருவரும் அந்த விஷயத்தில் முழுத் திருப்தியடைவார்கள். ஆனால் இவ்விதமான
தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயமாக, அவ்வாறான முழுத்
திருப்திக் கிடைக்காது என்பது உளவியல் ரீதியிலான உண்மை.
அப்படி இயற்கைக்கு மாறான உறவில் திருப்திக் கிடைக்காமல்
போனால், அவர்களுக்குள் ஒரு முரட்டுத்தனமும் வெறித்தனமும் இயல்பாகவே தோன்றிவிடும். அது
அவர்களிடமிருக்கும் மனிதத்தன்மையை மாற்றி மிருக நிலைக்குக் கொண்டு செல்லும். அதோடு
அவர்களின் மனநிலையும் நிச்சயமாகப் பாதிக்கப்படும்.
அதன் பிறகு அவர்களால் இயல்பான மனநிலையில் இயங்குவதற்கு
இயலாமல் போகும். சதாநேரமும் அது பற்றிய கவலையில் முழ்கிவிடுவார்கள். அதோடு
அவர்களுக்கு வாழ்க்கையில் ஒருவித விரக்தி ஏற்பட்டுத் தற்கொலை முயற்சிக்கே தங்களை
ஆளாக்கிக் கொள்வார்கள்”
எனக்கூறினார்.
மூன்றாவதாக அந்த
மருந்தியலாளர் முன் வைத்த விளக்கமானது சமூகவியல் பாதிப்புகள் பற்றியதாகும். “ஓர் ஆணும் பெண்ணும் ஒருவேளைத் தப்பித் தவறி, தங்களுக்குள் கள்ளத்தனமானத் தொடர்பை வைத்திருந்தால் கூட இச் சமுதாயமானது
எவ்வளவு பெரிய குற்ற உணர்வோடு அதை பார்க்கின்றது.
அப்படியென்றால், ஓர் ஆணும் ஆணும் அல்லது
ஒரு பெண்ணும் பெண்ணும் தங்களுக்குள் இதுபோன்ற ஓர் உறவு வைத்திருப்பதை அறிந்தால்
இச்சமூகம் அவர்களை எந்த அளவிற்கு அங்கீகரிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
அவர்களைப் பெரும் குற்றவாளிகளாக்கி இழித்துரைப்பதும், பழித்துப் பேசுவதும் இச் சமூகத்தின் வாடிக்கையாகி விடும். மட்டுமின்றி
அவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகும். அவர்களுக்கு சந்தானங்கள் இல்லாமல்
போகும்.
சொத்துரிமைகளை கூட
இழந்து விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, ஒட்டுமொத்தச் சமூகமும்
அவர்களை ஒதுக்கியே வைத்து விடும். மட்டுமின்றி சொந்த வீட்டாரும் உறவினர்களும் கூட
இவர்களை அங்கீகரிப்பதற்கு மறுத்து, ஒதுக்கி ஓரம் கட்டியே
வைத்துவிடுவார்கள் காலப்போக்கில் இவர்கள் யாருக்கும் வேண்டாதச் செல்லாக் காசாகி
விடுவார்கள்”
என்று கூறினார்.
இந்த
மருத்துவயிலார் கூறும் காரணங்கள் அனைத்திற்கும் நமது தமிழகத்தில் சான்றுகள் உண்டு.
தன்பாலினச் செயற்கையினால் தங்களுக்கு முழுத்திருப்தி கிடைக்காமல் போனால்
அவர்களுக்குள் ஒரு முரட்டுத்தனமும் வெறித்தனமும் இயல்பாகவே தோன்றிவிடும். அது
அவர்களிடமிருக்கும் மனிதத்தன்மையை அழித்து கொடூரமானக் கொலை வெறிக்குக் கூட ஆளாக்கி
விடும் என்பதற்குச் சான்றுதான்
1996 ஆம் ஆண்டு, சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படித்து வந்த
சீனியர் மாணவன்,
தனது ஜூனியர் மாணவனை தனது தன்பாலின இச்சைக்கு ஆள்படுத்தி
அதில் தன் காம இச்சை அடங்காததினால், கண்டம் துண்டமாக வெட்டித்
தூக்கி வீசியதாக அறியப்பட்ட வழக்கு! அந்த நிகழ்வு, இன்றும் தமிழக மக்கள் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சட்ட
அங்கீகாரத்தினால் இனி,
உயர் கல்வி நிலையங்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இல்லையேல் அதுவே
தற்போது விடுதிகளில் தங்கிப் படிக்கும் இன்னும் பல அப்பாவிகளுக்கு நடப்பதற்கு
வாய்ப்புண்டு. இதுவரை விடுதிகளில் அதிகம் வெளிச்சத்திற்கு வராமல் இலைமறைக்காயாக
நடந்து வந்த இந்தத் தன்பாலின உறவு, இனி பகிரங்கமாக நடக்கும்
என்பதில் எங்விதச் சந்தேகமும் இல்லை. அப்படி நடந்தால் அதைத் தட்டிக் கேட்பதற்கு
நாதியற்றுப் போகும்.
மனிதன் தன்
எல்லாச் செயல்களிலும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால், அவனை எவ்வித இன்னல்களும் அண்டாது. நோய்நொடிகளும் நெருங்காது. இயற்கையை மீறி
நடக்கும் எந்தச் செயலானாலும் அது அவனுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் ஆபத்தை விளைவிக்கத்தான்
செய்யும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
அவ்வகையில்
இயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக்
கொள்ள வைப்பது,
எவ்வகையிலும் நியாயமானதன்று. ( நன்றி: https://tamil.indianexpress.com/opinion/gay-sex-recognition/, September 18, 2018 5:36:21 pm )
ஓரினச்சேர்க்கையாளர்களும், ஆதரவும்…
ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணம்
சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணம்
சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. இதன்காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை
பகிரங்கமாக வெளிக்காட்டுவதில்லை. முகமூடி மனிதர்களைப் போல ரகசியமாக வாழ்கின்றனர்.
"ஆணை விரும்பும் ஆண் (ஹோமோசெக்ஸ் அல்லது கே), பெண்ணை விரும்பும் பெண் (லெஸ்பியன்), இருபாலின உறவை விரும்புவோர் (பைசெக்ஸ்யுவல்), திருநங்கைகள் (டிரான்ஸ்ஜென்டர்) ஆகியோர் எல்.ஜி.பி.டி
என்று அழைக்கப்படுகிறார்கள். இத்தகையவர்களின் எண்ணிக்கை உலகில் 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் ஆணை விரும்பும் ஆண்கள் 2 சதவிகிதத்தினர். பெண்ணை விரும்பும் பெண்கள் குறித்த
கணக்கெடுப்பு இல்லை. ஆனால் லெஸ்பியன்களின் எண்ணிக்கை குறைவு.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக செயல்படும் 'சகோதரன்' என்ற அமைப்பின் பொது மேலாளர் ஜெயா கூறுகையில்,
சகோதரன் அமைப்பில் மத்திய சென்னையில் 2,800 பேரும், வடசென்னையில் 1,200 பேரும்
என 4,000 ஆணை
விரும்பும் ஆண் என்ற 'கே' ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள்
சமூகத்தில் தங்களை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டவர்கள்.
ஆனால் சமுதாயத்துக்குப் பயந்து பலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணை விரும்பும் ஆண்கள் இருப்பதாக
விவரங்கள் உள்ளன. ( நன்றி: விகடன், மே
5, 2015 )
ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு,
அங்கீகாரத்தின் பிண்ணனி…
புரூஸ் பேக்மில் (Bruce Bagemihl) என்ற அமெரிக்க மருத்துவர் மிருகங்களிடம் உள்ள பாலுறவு பழக்கங்களை ஆய்வு செய்து
“உயிரியல் எழுச்சி;
மிருகங்களின் ஓரின உறவும் இயற்கையின் பன்மையும்’’ (Biological
Exuberance: Animal Homosexuality and Natural Diversity) என்ற தலைப்பிலான நூல் ஓரினச் சேர்க்கை குறித்த மருத்துவ அறிவில் ஓர் திருப்பு
முனையை ஏற்படுத்தியது.
காட்டு
விலங்குகளிடமும் பறவைகள் மற்றும் புழு இனங்களிடமும், வீட்டு விலங்களிடமும் பாலியல் உறவு முறை குறித்து விரிவாக ஆய்வு செய்த புரூஸ்
பேக்மில் ஏறத்தாழ 1500
விலங்கு மற்றும் பறவை இனங்களிடம் சிறிய அளவில் ஓரின பாலுறவு
நிகழ்வதாகக் கண்டறிந்தார். பட விளக்கங்களுடன் கொணர்ந்த தனது ஆய்வு நூலில் ஓரினச்
சேர்க்கை என்பது எல்லா உயிரினங்களிடமும் சிறிய எண்ணிக்கையினரிடையே நிகழக்கூடிய ஒரு
விலகல் (Deviation)
என உறுதிபடக் கூறினார்.
இந்த ஆய்வை
அடுத்து மனிதர்களிடையே ஓரினைச் சேர்க்கைப் பழக்கம் இருப்பது குறித்த உடலியல்
ஆய்வுகள் விரிந்த அளவில் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு வரிசையில் முஸ்டான்கி
மற்றும் பிறர் (Mustanki
et al) 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை முகாமையானது.
மரபு வழியாக
குரோமோசோம் கள் மூலம் ஒரு தலைமுறையி லிருந்து அடுத்தத் தலைமுறைக்கு உடலியல்
வழியில் ஓரின ஈர்ப்பு என்ற பாலியல் பண்பு கடத்தப்படு கிறது என்று இந்த ஆய்வு உரை
வலியுறுத்தியது. தாய் வழியாக சேய்க்கு வரும் குரோமோசோம்களில் Xq28 என்ற குரோமோ சோமில் ஏற்படும் பிறழ்ச்சியே ஓரின ஈர்ப்பை உடலியல் வழியில்
உருவாக்குகிறது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறியது. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உள்ள
இளைஞர்களின் தாய் மாமன்களிடம் இப் பழக்கம் இருந்ததை இதற்குச் சான்றாக எடுத்துக்
கூறியது.
மனித மரபியல்
குறித்த அமெரிக்கக் கழகம் (American Society of Human Genetics) பல அறிவியலாளர்களை களமிறக்கி இன்னும் விரிவாக பல முனை ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு
முஸ்டான்கி ஆய்வு முடிவை உறுதி செய்ததோடு ஓரின ஈர்ப்புக்கான வேறு காரணங்களையும்
எடுத்துக் கூறியது. ஆண்களிடம் சுரக்கும் பாலியல் நொதியான ஆன்ட்ரோஜன், பெண்களிடம் சுரக்கும் பாலியல் நொதி யான எஸ்ட்ரோஜன் ஆகியவற்றில் ஏற்படும் அளவு
மாறுபாடு காரண மாகவும்,
இவ்வகை பாலியல் விலகல் ஏற்படுவதாக இந்த ஆய்வு எடுத்துக்
கூறியது.
சூழலியல்
காரணங்களும் மேற்கண்ட பாலியல் நொதி சுரத்தலில் தலையிட்டு ஓரின ஈர்ப்புக்கு காரணமாக
அமைக்கிறது. என்றும் இந்த ஆய்வு கூறியது. மீத்தைல் மெர்குரி என்ற வேதிப்பொருளின்
அளவு சுற்றுச்சூழலில் அதிகமானால் அது ஆன்ட் ரோஜன் மற்றும் எஸ்ட் ரோஜன் சுரத்தலின்
மாறுபாட்டை ஏற்படுத்தி ஓரின ஈர்ப்பை விளைவிக்கிறது. என்பதை ஒருவகை அமெரிக்க
செங்கால் நாரை பறவையை இவ்வாய்வுக்கு உட்படுத்தி தங்களது ஆய்வு முடிவை மெய்ப்பித்தனர்.
ஒருபால்
மிருகங்களை நீண்ட நாள் ஒரிடத்தில் அடைத்து வைத்தால் அவற்றிடையே ஓரினச் சேர்க்கை
நடைபெறுவதையும்,
நீண்டகால சிறையாளிகளிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறுவதையும், “தற்காலிக பாலுறவு விலகல்’’ என்பதாக அமெரிக்க ஆய்வுக்
கழகத்தினர் வகைப்படுத்தினர்.
மேலும், உலகில்
இதுவரை 450
இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள்
ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள்,
ஊர்வன என எல்லாமே இதில் அடக்கம். பாலூட்டிகளில் ஆடு, குரங்கு மாதிரியான சிறு விலங்குகள் தொடங்கி யானை, காட்டெருமை,
ஒட்டகச்சிவிங்கி மாதிரியான பெரு விலங்குகள் வரை
எல்லாவற்றிலுமே ஓரினச்சேர்க்கை நடக்கிறது.
பறவைகளில்
பென்குவின்,
பருந்து, புறாக்கள், பூச்சிகளில்,
ஈக்கள், மூட்டைப் பூச்சி, தட்டான் போன்றவையும் ஊர்வனவற்றில் பல்லி மற்றும் ஆமைகளுக்கும் இந்த தன்மை
இருக்கிறது.
எனவே, எல்லா
உயிரினங்களிடேயேயும் தன்பாலின
உறவு இருக்கிறபடியால் மனிதனிடம்
இருந்தும் ஏற்படுகிற இந்த
உறவை அங்கீகரிக்க வேண்டும்
என்றும், சம மரியாதை
வழங்க வேண்டும் என்றும்
ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும்
அதன் ஆதரவாளர்களின் வாதமாக
இருக்கின்றது.
ஓரினச்சேர்க்கை குறித்து இஸ்லாம்…
ஓரினச்சேர்க்கை -
தன்பாலின உறவு குறித்து அறிவியல் தொடர்பான ஆய்வுகள், சட்ட ரீதியான தீர்ப்புகள், அங்கீகாரம் வழங்கும்
நாடுகள்,
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் என பல்வேறு
அம்சங்கள் ஒரு முஸ்லிமை வியப்பில் ஆழ்த்தினாலும் ஒரு போதும் அந்த முஸ்லிம் இது
போன்ற தீய நடவடிக்கைகளை ஆமோதிக்கவோ, அனுமதிக்கவோ, அங்கீகரிக்கவோ மாட்டான். அதன் அருகில் கூட நெருங்க மாட்டான். ஏனெனில், அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
قُلْ
لَّا يَسْتَوِى الْخَبِيْثُ وَالطَّيِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيْثِ
ۚ فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الْاَ لْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
"அருவருப்பான (தீய)
வை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “அருவருப்பான (தீய) தும், நல்லதும் ஒருபோதும் சமமாக
மாட்டாது! எனவே,
அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக. ( அல்குர்ஆன்:
5:100 )
இந்த உலகத்தில்
முதன் முதலாக இந்த இழிவான ஓரினச்சேர்க்கை எனும் பண்பாட்டைக் கொண்டிருந்த அந்த
சமூகத்தின் செய்திகளை அல்லாஹ் அல்குர்ஆனில் 9 இடங்களில் ( அஃராஃப், ஹூத்,
ஹிஜ்ர், அன்பியா, ஷுஅரா,
நம்ல், அன்கபூத், ஸாஃப்ஃபாத்,
கமர் ஆகிய அத்தியாயங்களில் ) குறிப்பிடுகின்றான்.
மேலும், அவர்களின் அந்த தீய செயலை "ஃபாஹிஷா - ஆபாசமான செயல், ஃகபாயிஸ் - அருவருப்பான செயல், ஸய்யிஆ - தீய செயல் என்று
அடையாளப்படுத்துவதோடு "கவ்முன் ஆதூன் - வரம்புகளைக் கடந்த சமுதாயம்"
என்றும்,
"கவ்மும் முஸ்ரிஃபூன் - வீண் விரயம் செய்யும் சமுதாயம்"
என்றும்,
கவ்ம ஸூஇன் ஃபாஸிக்கீன் - தடை செய்யப்பட்ட கெட்ட செயலை
செய்யும் பெரும் பாவம் செய்யும் சமுதாயம்" என்றும், "கவ்மும் முன்கரூன் - நிராகரிக்கப்பட்ட செயலை செய்யும் சமுதாயம்" என்றும், "கவ்முன் தஜ்ஹலூன் - மடமைத்தனமான செயலைச் செய்யும் சமுதாயம்" என்றும்
எட்டு விதமாக குறிப்பிடுகின்றான்.
அல்குர்ஆனில்
மிகக் குறைந்த அளவே இவர்களின் வரலாறு பேசப்பட்டாலும் இவர்களை அடையாளப்படுத்தியது
போன்று இவர்களைக் குறிப்பிட்டது போன்று வேறு எந்த சமுதாயத்தைப் பற்றியும் அல்லாஹ்
விமர்சித்துப் பேசியதில்லை.
மேலும், அவர்களுக்கு வழங்கிய தண்டனை ஒன்று தான். ஆனால், நான்கு வடிவத்தில் அந்த தண்டனை வழங்கப்பட்டதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
அல்குர்ஆனில் வரிசைப் படுத்துகின்றான். வேறெந்த சமூகத்தையும் அல்லாஹ் இப்படித்
தண்டித்ததில்லை. அவை:
1.அவர்களின் கண்களைக்
குருடாக்கினான்.
2.அவர்கள் வசித்த ஊரை மேலே
உயர்த்தி தலைகீழாக புரட்டினான்.
3.அவர்களின் மீது சுட்ட
கற்களை தொடர்ந்து பொழியச் செய்தான்.
4. அவர்கள் மீது
பேரிடியை விழச் செய்தான்.
ஓரினச்சேர்க்கையை துவக்கிய
சமுதாயம்..
இந்த ஓரின
சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை
ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத் (அலை) எனும் நபியை அனுப்பி வைத்தான்.
وَلُوطًا
إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ
مِّن الْعَالَمِينَ
மேலும் லூத்தை
(அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம்
சமூகத்தாரிடம் கூறினார்;
உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு
செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?". ( அல்குர்ஆன்: 7: 80 )
إِنَّكُمْ
لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ
مُّسْرِفُونَ
"மெய்யாகவே நீங்கள்
பெண்களை விட்டு விட்டு,
ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் -
நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.". ( அல்குர்ஆன்: 7:81 )
இந்த இரு
வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபி லூத் (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை
விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்
(அலை) அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்
(அலை) அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை
அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.
وَمَا
كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ
إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
நிச்சயமாக இவர்கள்
தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி
விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக
இருக்கவில்லை. ( அல்குர்ஆன்: 7: 82 )
அழிக்க வந்த வானவர்களையும்
'அனுபவிக்க'
நினைத்த பாவிகள்;
ஓரின சேர்க்கை
அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள்
வடிவில் அனுப்பிவைக்க,
ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த
வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத் (அலை) அவர்கள்
கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.
وَجَاءهُ
قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ
قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ
وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ
அவருடைய
சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே
அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்)
"என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர்
விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார். ( அல்குர்ஆன்: 11: 78 )
قَالُواْ
لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا
نُرِيدُ(
அதற்கு) அவர்கள்
"உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக
நீர் அறிந்திருக்கிறீர்;
நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர்
அறிவீர்" என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 11: 79 )
قَالَ
لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ
அதற்கு அவர்
"உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத்
தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று
(விசனத்துடன்) கூறினார். ( அல்குர்ஆன்: 11: 80 )
فَأَخَذَتْهُمُ
الصَّيْحَةُ مُشْرِقِينَ
மனித மிருகங்கள்
மண்ணில் புதைந்தன;(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம்
மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72) ஆகவே,
பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (அல்குர்ஆன்: 15: 73 )
فَجَعَلْنَا
عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
பின்பு அவர்களுடைய
ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். ( அல்குர்ஆன்: 15: 74 )
மேற்கண்ட
வசனங்களில்,
ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் பார்த்தோம்.
கண்ணாடிக்கூண்டில் இருந்து கல் எறிந்தவன்…
அதற்குப் பிறகு
நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த
விவகாரத்தைக் கையில் எடுத்தவன்
ராஃபிளா எனும் பிரிவைச் சார்ந்த ஒருவன் ஆவான்.
ابْنُ أَبِي العَزَاقِرِ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بنُ عَلِيٍّ
الزِّندِيقُ، المُعَثَّرُ،
أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بنُ عَلِيٍّ الشَّلْمَغَانِيُّ، الرَّافِضيُّ
يُخَاطِبُ الشَّلْمَغَانِيُّ
فِيْهَا بِالإِلَهِيَّةِ، وَأَنَّهُ يُحْيِيْهِ وَيُمِيْتُهُ، وَيَسْأَلُهُ أَنْ
يَغْفِرَ لَهُ ذُنُوْبَهُ.فَأُخْرِجَتْ تِلْكَ الرِّقَاعُ، وَشَهِدَ جَمَاعَةٌ
أَنَّهُ خَطُّهُ،
ثُمَّ إِنَّهُم أُحضِرُوا
مَرَّاتٍ بِمَحْضَرِ الفُقَهَاءِ وَالقُضَاةِ، ثُمَّ فِي آخِرِ
الأَمْرِ أَفْتَى العُلَمَاءُ بِإِبَاحَةِ دَمِهِ، فَأُحرِقَ فِي ذِي القَعْدَةِ
مِنَ السَّنَةِ، وَضُرِبَ ابْنُ أَبِي عَوْنٍ بِالسِّيَاطِ، ثُمَّ ضُرِبَتْ
عُنُقُهُ، وَأُحْرِقَ
وَطِيْفَ بِرَأْسِهِ فِي ذِي
القعدةِ، سَنَةَ اثْنَتَيْنِ وَعِشْرِيْنَ وَثَلاَثِ مائَةٍ.
وَعَاشَ: ثَمَانِياً
وَسَبْعِيْنَ سَنَةً
. وَمِنْ رَأْيِه تَرْكُ
الصَّلاَةِ وَالصَّوْمِ، وَإِبَاحَةُ كُلِّ فَرْجٍ، وَأَنَّهُ لاَ بُدَّ
لِلْفَاضِلِ أَنْ يَنِيْكَ المَفْضُوْلَ لِيُولِجَ فِيْهِ النُّوْرَ، وَمَنِ
امتَنَعَ، مُسِخَ فِي الدَّوْرِ الثَّانِي.
ஹிஜ்ரி 322 –ம் ஆண்டு,
அல் ராதி இப்னு அல்-முக்ததிர் ஆட்சியின் போது, பக்தாத்துக்கு வருகை தந்த இப்னு அபூ அஜாகிர் என்று அழைக்கப்பட்ட முஹம்மது இப்னு
அலி அல்-ஷெல்மகானி என்கிற ஷீஆவின் ராஃபிளா பிரிவைச் சார்ந்தவன் துவக்க காலத்தில்
தன்னை அறிஞராக அடையாளப்படுத்தி எண்ணற்ற பல பெரிய பெரிய நூல்களை எழுதிக்
குவித்தான். பெரும் புகழும் செல்வாக்கும் வந்த பின்னர் தன்னை இறைவனாக அறிவித்து
ஷரியா சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும் ஓரினசெயற்கையைத் தான்
அங்கீகரிப்பதாகவும் கூறினான். இன்னும் பல வழிகெட்ட போதனைகளைக் கூறி வழி
கெடுத்தான். அவன் பின்னால் ஒரு கூட்டம் செல்ல ஆரம்பித்தது. இதனை அக்காலத்து
அறிஞர்களும், ஃபுகஹாக்களும் மிகவும் கவலையோடு அணுகி அவனுக்கு மரண தண்டனை வழங்க
வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அதன் படியே அவன் கொல்லப்பட்டு தீயிட்டு
எரிக்கப்பட்டான். ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா, அல் ஃபர்க்கு பைனல் ஃபிரக்
பக்கம்: 217 ) கி.பி 944 –ம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வு தான் ஓரினச் சேர்க்கைக்கு
ஆதரவு தெரிவித்த முதலும் கடைசியுமான நிகழ்வு. அதன் பின்னரும் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிலர் புறப்பட்டு வந்த போதிலும் பெரிய அளவில் சமூகத்தில் தாக்கம்
ஏற்படுத்தவில்லை. அதற்குப் பின்னர் கடந்த 19 –ம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி
20 – நூற்றாண்டில் வளர்ந்து தற்போது அங்கீகாரம், அனுமதி என்கிற நிலையை
அடைந்திருக்கின்றது.
புதிய ஃபித்னாவைக்
கிளப்பும் புதியவர்கள்...
ஓரினச்சேர்க்கைக்கு
ஆதரவாக இஸ்லாமிய வேடம் அணிந்த சிலர் நவீன சிந்தனையுடன் புறப்பட்டுள்ளனர்.
உலகில் மொத்தம் 12 ஓரினச்சேர்க்கையாளர் இமாம்கள் இருப்பதாகவும் அதில் 8 பேர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் ஓரினச்சேர்க்கையாளர் இமாம் தாயீ
அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின்
டெட்ராய்ட் நகரில் கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தவர் ஆப்பிரிக்க-அமெரிக்கரான தாயீ
அப்துல்லா. கருப்பினத்தை சேர்ந்த அவர் தனக்கு 30 வயது இருக்கையில்
இஸ்லாத்திற்கு மாறினார். வாஷிங்டனில் உள்ள மசூதி ஒன்றில் இமாமாக உள்ளார்.
மேலும்
ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாம்
ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குர்ஆனிலும் ஓரினச்சேர்க்கைக்கு
எதிராக எதுவும் இல்லை. குர்ஆனில் திருமணம் செய்வதற்கு பாலினத்தை குறிப்பிட்டு
சொல்லவில்லை.
குர்ஆனில் எந்த
பிரச்சனையும் இல்லை. அதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் தான்
பிரச்சனை. ஆண்கள் சக ஆண்களை முத்தமிடுவதில் தப்பில்லை. நான் இஸ்லாமிய நாடுகளில் பல
ஆண்களை முத்தமிட்டுள்ளேன். அதில் செக்ஸுக்கு இடமில்லை.
கே (GAY) இமாம்
ஓரினச்சேர்க்கையாளர்
இமாமாக இருப்பது கடினம். ஆனால் அத்தகைய இமாம்களாகிய நாங்கள் இருக்கத் தான்
செய்கிறோம். உலகில் மொத்தம் 12 ஓரினச்சேர்க்கையாளர்
இமாம்கள் உள்ளனர். அதில் 8
பேர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டவர்கள். மேற்கத்திய
நாடுகளில் எங்களை போன்ற இமாம்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் அவர்
தெரிவித்துள்ளார். ( நன்றி: ஒன் இந்தியா, ஜூன் 16, 2016, பதிவு நேரம், 11:46 )
மேலும், துருக்கியின்
இஸ்தான்புல் நகரில் இமாமாக பணிபுரியும் ஈரானைச் சார்ந்த தாஹா என்பவர் பல
ஓரினச்சேர்க்கைத் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி இருக்கின்றார் என பிபிசி
நிறுவனம் நேரடியாகச் சந்தித்து பேட்டி எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம்
செய்துள்ளது. ( நன்றி: இஸ்லாம் – ஓர் ஆய்வு முகநூல் பக்கம், பதிவு நாள், 28/06/2016
)
இவர்களில்
அதிகமானோர் ஷீஆ எனும் வழிகெட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநபி {ஸல்} அவர்களின் வழிகாட்டலும், மார்க்கச் சட்ட
வல்லுனர்களின் தீர்ப்பும்...
என் சமூகத்தார்
விடயத்தில் நான் அதிகம் பயப்படுவது ஓரினச் சேர்க்கையைத்தான்!” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: இப்னு மாஜா
(திர்மிதி)
*இப்பாதக செயலில்
விரும்பி ஈடுபடும் இருவருக்குமான தண்டனையை நபி (ஸல்) அவர்களின் பின்வரும்
பொன்மொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
وعن
جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال: “من عَمِل عَمَلَ قوم لوط
فاقتلوه”.
“லூத் நபியின் சமூகத்தார்
செயலில் (ஓரினச் சேர்க்கையில்) ஈடுபடும் இருவரையும் கொன்றுவிடுங்கள்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: அபூதாவூத் (4462), திர்மிதி(1456),
இப்னுமாஜா(2561)
وعن أبي
هريرة عن النبي صلى الله عليه وسلم في الذي يعمل عمل قوم لوط، قال: “ارجموا الأعلى
والأسفل، ارجموهما جميعاً”
“ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும்
இருவரையும் கல்லெறிந்து கொல்லுங்கள்” (அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி),
நூல்: இப்னுமாஜா)
عَنْ
ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ
فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ ) وصححه الألباني في صحيح الترمذي .
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
அறிவிக்கிறார்கள்:
உங்களில் எவரேனும்
நபி லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செயலைக் கண்டால் செய்பவனையும், செய்யப்படுபவனையும் கொன்றுவிடுங்கள். மற்றும் நீங்கள் யாராவது விலங்குகளுடன்
புணர்வதை கண்டால்,
அவனையும் அந்த விலங்கையும் கொன்று விடுங்கள்.
புலூகுல் மராமில்
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுழ்ழாஹு அவர்கள் பதிந்துள்ளார்கள். இது முஸ்னத்
அஹ்மத் இல் இடம்பெற்ற ஹதீஸ் ஆகும்.
இலக்கம் : 1216
இஸ்லாமிய சட்ட
வல்லுனர்கள் இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர் மற்றும் ஈடுபடுத்தப்பட்ட இருவரையும்
கொலை செய்து தீயிட்டு எரிக்க வேண்டும் என சட்டமியற்றியுள்ளனர்.
*ஓரினச்சேர்க்கை என்ற குற்றச்செயலில்
ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது, அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் மற்றும் பெரும்பாலான ஸஹாபாக்களினதும் ஏகோபித்த
முடிவாகும். ஆனால்,
தண்டனை வழங்கப்படும் முறைகளில் வேறுபட்ட கருத்துக்களை
உடையவர்களாக உள்ளனர்.
وقد
أجمع الصحابة على قتل اللوطي ، لكن اختلفوا في طريقة قتله ، فمنهم من ذهب إلى أن
يحرق بالنار ، وهذا قول علي رضي الله عنه ، وبه أخذ أبو بكر رضي الله عنه
அலி ரழியல்லாஹு
அன்ஹு மற்றும் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு போன்ற சில ஸஹாபாக்களின் கருத்து படி, இவர்கள் உயிருடன் எரிக்கப்படவேண்டும் என்கின்றனர். மற்றும் இவ்வாறான ஒரு
தண்டனை அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்டும் உள்ளது.
அந்த நிகழ்வு பின்னால் கூறப்படும்..
وعن بعضهم : أنه يرفع على أعلى جدار في القرية ، ويرمى منه ،
ويتبع بالحجارة ، كما فعل الله بقوم لوط وهذه رواية عن ابن عباس ، والرواية الأخرى
قال : يرجم ، وعلى هذا أكثر السلف ، قالوا : لأن الله رجم قوم لوط ، وشرع رجم
الزاني تشبيها برجم لوط ، فيرجم الاثنان ، سواء كانا حرين أو مملوكين ، أو كان
أحدهما مملوك الآخر ، إذا كانا بالغين ، فإن كان أحدهما غير بالغ عوقب بما دون
القتل ، ولا يرجم إلا البالغ " انتهى من "السياسة الشرعية" ص 138.
மற்றும் இப்னு
அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற சில ஸஹாபாக்களின் கருத்து படி இவர்கள்
உயரமான இடமொன்றில் இருந்து வீசப்பட வேண்டும் பிறகு கற்களால் அடித்து கொல்லப்பட
வேண்டும் என்பதாகும். மற்றும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அலி
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருவரினதும் இன்னொரு கருத்து படி இறக்கும் வரை கற்களால்
அடித்தல்
*“உங்களில் ஒருவர் இல்லறத்தில்
ஈடுபடுவதும் தர்மம் (நன்மையளிக்கக்கூடிய காரியம்) ஆகும். என்று நபியவர்கள்
கூறியபோது ஸஹாபாக்கள்,
''அல்லாஹ்வின் தூதரே! தன் இச்சையைத் தணித்துக் கொள்வதற்காக
ஒருவர் இதைச் செய்கிறார். அதற்கு கூலி உண்டா?'' என்றார்கள். அப்போது
நபியவர்கள் ''தன்னுடைய இச்சையைத் தவறான (ஹராமான) வழியில் தணித்துக் கொண்டால் அவனுக்குத்
தண்டனை உண்டல்லவா?
எனக் கேட்டுவிட்டு அதுபோல் ஹலாலான வழியில் தீர்த்துக்
கொள்பவனுக்கு கூலியும் உண்டு எனப் பகர்ந்தார்கள்” (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)
عَنِ
ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ : ( لَعَنَ اللَّهُ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ ، لَعَنَ
اللَّهُ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ ، ثَلاثًا ) وحسنه شعيب الأرنؤوط في
تحقيق المسند
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். “லூத் நபியின் சமூகத்தார் செயலில் (ஓரினச் சேர்க்கையில்) ஈடுபடுபவன் சபிக்கப்பட்டவனாவான்.
லூத் நபியின் சமூகத்தார் செயலில்...... ஈடுபடுபவன் சபிக்கப்பட்டவனாவான்.
லூத் நபியின் சமூகத்தார் செயலில்...... ஈடுபடுபவன் சபிக்கப்பட்டவனாவான்.
என்று 3 தடவைகள் கூறுகிறார்கள். மேலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனும்
மிருகங்களுடன் புணர்ச்சியில் ஈடுபடுபவர்களும் சபிக்கப்பட்டவர்களாவர்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: தப்ரானீ அத்தர்கீப்
வத்தர்ஹீப்
இதே ஹதீஸை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
அறிவிக்கிறார்கள். இது முஸ்னத் அஹ்மத்தில் 2915 ஆவது ஹதீஸ் ஆக
பதிந்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தை உடையது என்று சுஐப் அல்-அர்னஊத் என்பவரால்
தஹ்கீக் அல்-முஸ்னத் இல் பதிவுசெய்யப்பட்டு உள்ளது.
*நபியின் போதனைகளைப்
பொருட்படுத்தாது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக லூத் நபியின்
சமூகம் கொடூரமான முறையில் அழிக்கப்பட்டது. ஏனெனில், இது இறை சாபத்தைப் பெற்றுத் தரும் ஒரு கொடிய செயல்.
*அல்லாஹ்வின் அருள், கருணை,
அன்பு போன்றவற்றை இல்லாதொழிக்கும் சாபக்கேடு
இதிலிருக்கும் காரணத்தால் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் இஸ்லாம் இதைக் கணிக்கின்றது.
*ஆண், பெண்ணுடைய பின் துவாரங்களில் புணர்ச்சியில் ஈடுபடுபவனை அல்லாஹ்
கருணைக் கண் கொண்டு பார்க்கமாட்டான்'' என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்கள்: திர்மிதி,
நஸஈ,
இப்னு ஹிப்பான்)
மறுமையில் அல்லாஹ்வின்
பார்வை கிடைப்பது நிச்சயம் பாக்கியம் நிறைந்ததாகவே இருக்கும். இப்பாக்கியம்
கிடைக்காதோர் துரதிஷ்டவாதிகளே! இப்பாக்கியத்தை இழக்கச் செய்யும் இச்
செயல் மிகவும் பாரதூரமான ஒன்று என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
وقد ثبت
عن خالد بن الوليد أنه وجد في بعض نواحي العرب رجلا ينكح كما تنكح المرأة ، فكتب
إلى أبي بكر الصديق رضي الله عنه ، فاستشار أبو بكر الصديق الصحابة رضي الله عنهم
، فكان على بن أبي طالب أشدهم قولا فيه ، فقال : ما فعل هذا إلا أمة من الأمم
واحدة وقد علمتم ما فعل الله بها . أرى أن يحرق بالنار ، فكتب أبو بكر إلى خالد
فحرقه .
அபூபக்ர்
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக உள்ள போது,
அவரும் தமது ஆலோசகர்களும் ஒன்றுகூடி , ஆசனவாய் வழியாக புணர்ச்சி செய்த ஒரு பாவி தொடர்பான வழக்கில் கொடுக்க வேண்டிய
தண்டனை பற்றி ஆலோசனை செய்தார்கள். அப்போது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
கூறினார்கள்,
இது இதற்கு முன்பு ஒரே ஒரு சமுதாயத்தை தவிர வேறு எந்த
சமுதாயமும் செய்திராத ஒரு பாவமாகும். மற்றும் அவர்களை அல்லாஹ் எவ்வாறு தீர்த்தான்
என்பதை நீர் அறிவீரா?
நான் அவனை உயிரோடு எரிக்க வேண்டும் என்று கருதுகிறேன்
என்றார்கள்.
பின், ஸஹாபாக்கள் ( ரழியல்லாஹு அன்ஹும் வரளு அன்ஹும்) அலி ரழியல்லாஹு அன்ஹு
அவர்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டனர். பிறகு அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
காலித் இப்னு வலீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு , அவனை உயிருடன் எரிக்குமாறு கட்டளை இட்டு கடிதம் எழுதினார்.
( பைஹகீ)
அல் முன்திரீ
ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகிறார்கள்:
" ஆசனவாய் வழியாக புணர்ச்சி செய்பவர்களை உயிருடன் எரித்து
தண்டனை வழங்கிய 4
கலீபாக்கள் உள்ளனர், அவர்கள்;
1) அபூ பக்ர்
அஸ்-ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு
2) அலி இப்னு
அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு
3) அப்துல்லாஹ் இப்னு
அஸ்-ஸுபைர்
4) ஹிஷாம் இப்னு
அப்தில்மலிக்
ஆவார்கள். ( அத்-தர்கீப் வத்-தர்ஹீப்
)
ومنهم
من قال : يرجم بالحجارة حتى يموت ، وهذا مروي عن علي وابن عباس أيضاً .
ثم
اختلف الفقهاء بعد الصحابة ، فمنهم من قال يقتل على أي حال كان ، محصنا أو غير
محصن .
ومنهم
من قال : بل يعاقب عقوبة الزاني ، فيرجم إن كان محصنا ، ويجلد إن كان غير محصن.
ومنهم
من قال : يعزر التعزير البليغ الذي يراه الحاكم
.
ஸஹாபாக்களுக்கு
பிறகு வந்த புகஹாக்களும் இதற்கு தண்டனை கொடுக்கும் முறைகளில் கருத்து வேறுபட்டுள்ளனர்.
சில ஃபுகஹாக்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்கின்றனர், அவர்களின் நிலையை பற்றி
கவலைப்பட வேண்டியதில்லை,
அதாவது அவர்கள் திருமணம் முடித்தவர்களா? அல்லது முடிக்காதவர்களா? என்று பார்க்கவே
தேவையில்லை,
அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்கின்றனர்.
சில ஃபுகஹாக்கள், இதற்கு விபச்சார குற்றத்திற்கு தண்டனை கொடுப்பது போல் கொடுக்கப்பட வேண்டும்
என்கின்றனர். அதாவது,
திருமணம் முடித்தவராக இருந்தால், கற்களால் அடித்து கொல்லப்பட வேண்டும் . திருமணம் முடிக்காதவராக இருந்தால், கசையடி கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர்.
நிறைவாக...
وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗؕ اِنَّ الَّذِيْنَ
یَکْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ
(முஃமின்களே!) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும்
விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள். ( அல்குர்ஆன்: 6:120 )
اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِىَّ الْاُمِّىَّ
الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ
عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ
وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ ؕ
فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ
الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
எவர்கள்
எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள்
தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக்
காண்பார்கள்;
அவர், அவர்களை நன்மையான
காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான
காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே
அவர்களுக்கு ஆகுமாக்குவார்;
கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த
விலங்குகளையும்,
(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து,
அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின்
பற்றுகிறார்களோ,
அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். ( அல்குர்ஆன்:
7: 157.
)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இழிவான இந்த தீய செயல்களில்
இருந்து அனைத்து மக்களையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தந்தருள் புரிவானாக
ReplyDelete