Tuesday, 12 July 2022

இது இருந்தால் ஒரு முஸ்லிமின் இஸ்லாமும் ஈமானும் பூரணமாகி விடும்!!

 ﷽

துல்ஹஜ் பிறை: 12/12/1443

செவ்வாய்கிழமை: 12/07/2022

இது இருந்தால் ஒரு முஸ்லிமின் இஸ்லாமும் ஈமானும் பூரணமாகி விடும்!!

வெட்கம் (Shyness or diffidence) அல்லது வெட்கப்படுதல் இன்று சமூகத்தில் அதிக விவாதத்தை எதிர் கொள்ளும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இன்று வெட்க உணர்வு என்பது  வேண்டாத ஒன்றாகவும் அதை ஒரு பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப் படுகிறது.

ஆனால், இஸ்லாம் உயர்த்திக் கூறும் பண்பாக வெட்கம் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

வெட்கம் என்பது பெயர்ச்சொல் வார்த்தையாகும். இதற்குப் பொருள், பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்கமுடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

இரண்டு பொருள்கள்:-

மேலும் வெட்கம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

1. நாணம்,  திறமையை வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவது, பெண் மாப்பிள்ளையைப் பார்க்க வெட்கப்படுவது போன்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

2. அவமானம், தவறு செய்வதற்குப் பயப்படுவது, மானம் கெட்ட செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது.

பார்க்க: கிரியாவின் தமிழ் அகராதி

மேற்சொன்ன கருத்தில்தான், அரபி மொழியின் பிரபலமான, ஆதாரத்திற்கு ஏற்கத் தகுந்த லிஸானுல் அரப் என்ற அகராதியிலும் வெட்கத்திற்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

லிஸானுல் அரப்: பாகம் 11, பக்கம் 200

பிறர் பழிப்பிற்கு பயந்து ஒன்றிலிருந்து தன்னை விடுவித்து விலக்கிக் கொள்வது அல்லது விலகிக் கொள்வது. (அல்முன்ஜித்: பக்கம் 165)

மேலும் ஹயா என்பதற்கு உயிர்வாழ்தல் என்று கூட பொருள் உண்டு. அதனால்தான் நாம்கூட மானம் இழப்பின் உயிர்வாழ்தல் உடமையா? என்றுகூட கேட்கிறோம். எனவே உயிர்வாழ்வதின் அர்த்தமே மானத்தோடும் மரியாதையோடு வாழ்தலாகும். இதுதான் வெட்கம்.

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு ஒவ்வொரு மனிதனிடமும் வெட்க உணர்வை இயல்பாகவே அமைத்திருக்கிறான் இறைவன். ஆகவே தான்,  சுவனத்தில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் தங்களுடைய ஆடை விலகியதும் உடனே சுவனத்தின் இலைகளை எடுத்து உடலை மறைத்துக் கொண்டதாக குர்ஆன் கூறுகிறது.

فَدَلاَّهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَآنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் – அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு, “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.[7:22]

قال رسول الله صلى الله عليه وسلم” إن لكل دين خلقا وخلق الإسلام الحياء” (رواه ابن ماجه في سننه وحسنه الألباني).

நபிகளார் நவின்றார்கள்: ‘ஒவ்வொரு மார்க்கத்திற்கும் தனியே ஒரு சிறப்பு குணமுண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு குணம் வெட்கம் ஆகும்’. (நூல்: இப்னுமாஜா, தப்ரானி)

அனைத்து நபிமார்களும் வலியுறுத்திய கடமைகளில் ஒன்றாக வெட்க உணர்வு விளங்குகிறது.

அதிலும் நமது பெருமானார் ஸல் அவர்கள் ஈமானோடு இணைத்துக் கூறியது முக்கியத்துவம் பெறுகிறது.

الإيمان بضع وستون شعبة، والحياء شعبة من الإيمان” حديث متفق عليه.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: புகாரி 9.) என்று  நபிகளார் வெகுஅழகாக இறைநம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்களைக் கற்றுத்தந்தார்கள்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ زُهَيْرٍ ، حَدَّثَنَا مَنْصُورٌ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم

إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ.

மக்கள் பெற்றுக் கொண்ட முந்தைய நபித்துவத்தின் முக்கியச் செய்தி - அதாவது - முன்வந்த நபிமார்கள் அனைவரும் கூறி வந்த செய்தி, உனக்கு வெட்கமில்லையானால் நீ நாடியதைச் செய்து கொள்!, என்பது தான், என்று நபி (ஸல்) கூறியுள்ளார்க்ள.  (புகாரி- 3484)

எனவே வெட்க உணர்வின் மீதான கவனக் குவிப்பு என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய ஒரு விஷயமன்று. தொன்றுதொட்டு  வாழையடி வாழையாக இறைத்தூதர்கள் மூலம் வலியுறுத்தப்பட்ட அழகிய பண்பியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் வெட்க உணர்வு...

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்: "நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்." ஷுஅபா(ரஹ்) இதே போன்ற நபிமொழியை அறிவித்துவிட்டு, "நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (நூல்:புஹாரி,எண் 3562)

நபித்தோழர்களின் வெட்க உணர்வு...

وَعَنْ عَبْدِ اللَّهِ بنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الحَيَاءِ؛ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «دَعْهُ، فَإِنَّ الـحَيَاءَ مِنَ الإِيمَانِ»

"அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 24.)

ஸலஃபுஸ் ஸாலிஹீன்களிடம் காணப்பட்ட வெட்க உணர்வு...

قال ابو علي الدقاق: جاءت امراة فسألت حاتما عن سألة فاتفق أنه خرج منها صوت في تلك الحالة فخجلت فقال حاتم ارفعي صوتك فأوهمها أنه أصم فسرت بذلك وقالت إنه لم يسمع الصوت فسرت بذلك ولقب بحاتم الصم وهذا التغافل هو نصف الفُتوَّة

مدارج السالكين ص/344 و ج/2

இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் அபூ அலீ அத்துகாக் (ரஹ்) என்பவரின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்.

பல்க் தேசத்தின் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப் பெரும் அறிஞரான அபூஅப்துர் ரஹ்மான் இப்னு உல்வான் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் குறித்து அபூ அலீ அத்துகாக் (ரஹ்) அவர்களைச் சந்திக்க வந்த ஒருவர் அபூஅப்துர் ரஹ்மான் இப்னு உல்வான் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் கேட்கும் திறன் பெற்றவராக இருந்தும் அவர்களின் பெயருடன் அஸம்மு ( செவிடர் ) என்று இணைத்து அழைக்கப் படுகின்றதே “அவர்களுக்கு எப்படி அஸம்மு எனப் பெயரிட்டது? என்று கேட்டார்.

அதற்கு, அபூ அலீ (ரஹ்) அவர்கள் “ஒரு முறை ஒரு பெண்மணி ஹாத்தமுல் அஸம்மு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைச் சந்தித்து மார்க்க சம்பந்தமான கேள்வி கேட்க வந்தார்.

இமாம் அவர்கள் ஏதோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இமாம் அவர்களுக்கு சற்று தொலைவில் திரை மறைவில் நின்று கொண்டிருந்த அப்பெண்மணி தம் சந்தேகத்தைக் கேட்டார். இந்நிலையில், அப்பெண்மனிக்கு வாயுத் தொல்லையின் காரணமாக சப்தமாக காற்றுப் பிரிந்தது.

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத அப்பெண்மனி வெட்கத்தால் நாணிப் போனார். அந்தப் பெண்மனியின் வெட்கத்தை உணர்ந்த இமாம் அவர்கள் “என்னம்மா கேள்வி கேட்டாய்? எனக்கு காது கேட்காது. கொஞ்சம் சப்தமாகக் கூறு” என்றார்கள்.

இமாம் அவர்கள் இப்படிக் கூறியதும் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மனதில் மகிழ்ச்சியோடு நல்ல நேரம் இமாம் அவர்களுக்கு காது கேட்கவில்லை என்று பூரிப்படைந்து தம் சந்தேகத்திற்கான விடையைப் பெற்று சென்று விட்டார்.

இதற்குப் பிறகு இமாம் அவர்கள் யார் அவர்களிடம் கேள்வி கேட்க, அல்லது பேச வந்தாலும் கொஞ்சம் சப்தமாக கூறுங்கள்! எனக்கு காது கேட்காது என்று கூறுவார்கள்.

நாளடைவில் இமாம் அவர்களுக்கு காது கேட்காது எனும் செய்தி தேசம் முழுவதும் பரவி ஹாத்தம் என்று அழைக்கப்பட்ட இமாம் அவர்கள் ஹாத்தமுல் அஸம்மு என்று அழைக்கப்படலானார்கள்” என்று கூறினார்கள்.

இப்னு முலக்கின் (ரஹ்) அவர்களின் இன்னொரு அறிவிப்பின் படி “ஹாத்தம் (ரஹ்) அவர்கள் அப்பெண்மணி மரணிக்கும் வரை காது கேட்காதவரைப் போன்றே இருந்து விட்டு, பின்னர் தனக்கு காது கேட்கும் என்றும் மேற்கூறிய காரணத்தால் தான் இது வரை காது கேட்காதவரைப் போன்று நான் இருந்தேன் என்றும் எனக்கு காது கேட்கும் விபரம் அப்பெண்மணிக்கு தெரிந்தால் அவரின் மனம் மிகப்பெரிய அளவில் வருந்தும் என்பதால் நான் அஸம்மு என்று அழைப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

( நூல்: மதாரிஜுஸ் ஸாலிக்கீன் லிஇமாமி இப்னுல் கய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்), தபகாத்துல் அவ்லியா லிஇமாமி இப்னுல் முலக்கின் (ரஹ்) …. )

நபி (ஸல்) அவர்களிடத்திலும், ஸஹாபாக்களிடத்திலும், ஸலஃபுகளிடத்திலும், மேன்மக்களிடத்திலும் இறையச்சமும் இருந்தது அதோடு வெட்கமும் இருந்தது. அதனால்தான் அவர்களால் வாய்மையிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கமுடிந்தது.

வெட்க உணர்வால் என்ன பெற்று விட முடியும்?

1. வெட்கம் நல்லதை மட்டுமே கொண்டு வரும்...

عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «الـحَيَاءُ خَيْرٌ كُلُّهُ» قَالَ: أَوْ قَالَ: «الـحَيَاءُ كُلُّهُ خَيْرٌ» 

வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 6117

2. வெட்கம்  காரியங்களை அழகாக்கும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி 1897

3. வெட்கம் ஒருவரின் தீனை முழுமை படுத்தும்....

عَنْ قُرَّةَ - ابنِ إِيَاسٍ رَضِيَ اللَّهُ عَنهُ - قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم، فَذُكِرَ عِنْدَهُ الحَيَاءُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، الحَيَاءُ مِنَ الدِّينِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «بَل هُوَ الدِّينُ كُلُّهُ»  

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் ஒரு சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! வெட்கம் தீனில் கட்டுப்பட்டதா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் "மார்க்கத்தின் முழுமையே தீன் தான்" என்று கூறினார்கள்.

வெட்கம் என்பது மக்களுக்கு மத்தியில் இருக்கும்பொழுது மட்டும் இருப்பதல்ல. தான் தனிமையில் இருக்கும்போதும் தன்னுடைய இறைவன் உடன் இருக்கிறான் என்ற எண்ணத்துடன் அந்த நினைவை மனதில் கொண்டு அந்த தனிமையிலும் வெட்கத்துடன் இருக்க வேண்டும். 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم: «الـحَيَاءُ وَالإِيمَانُ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الآخَرُ» 

"ஈமானும், வெட்கமும்  ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இவற்றில் ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று இருக்காது" என எச்சரிக்கை செய்தார்கள்.

வெட்கம் ஒருவனிடம் இல்லாமல் போய்விட்டால் அவனது வாழ்வு உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது தான். அதனால் தான் ‘அவன் விரும்பியதை செய்து கொள்ளட்டும்’ என முன்னர் சென்ற இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.

4.வெட்கம் ஒருவருக்கு சுவனத்தைப் பெற்றுத் தரும்....

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சஹாபாக்களிடம் மறுமையில் நடக்கவிருக்கும் சம்பவம் குறித்து சொன்னார்கள்:-

நாளை மறுமையில் ஒரு கூட்டம் எல்லோரையும் போன்று கப்ரில் இருந்து எழுப்பப்படுவார்கள். அவர்களுக்கு பறவைகளுக்கு இருப்பதை போன்று இறக்கைகள் இருக்கும்.அவர்கள் பறந்து  சொர்க்கம் சென்று  அதனுடைய இன்ப வாழ்க்கை அனுபவிப்பர். அவர்களை சந்தித்து மலக்குகள் வியப்புடன் கேட்பார்கள். விசாரணை-சிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் நடப்பது, நரகத்தை பார்ப்பது இவை எல்லாம் உங்களுக்கு இல்லையா?அம்மக்கள் நாங்கள் எதையும் பார்க்கவில்லை"  என்று சொல்வார்கள்.  நீங்கள் எந்த நபியின் உம்மத் என்று வானவர்கள் கேட்க, அதற்கவர்கள் நாங்கள் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் சமுதாயம் என்று கூறுவார்கள்.  நீங்கள் உலகில் செய்த அமல்கள் யாவை? என்று வானவர்கள் வினவியதற்கு  எங்களிடம் இரு பண்புகள் இருந்தது அதைக்கொண்டும்,  அல்லாஹ்வின் அருளாலும் நாங்கள் இந்த அந்தஸ்தை பெற்றோம். என்று கூறி ஒன்று, நாங்கள் தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்தோம். எனவே, பாவம் செய்ய வெட்கப்பட்டோம் பயந்தோம்,  இரண்டு, உலகில் அல்லாஹ் எங்களுக்கு செய்த பங்கீட்டை பொருந்திக்கொண்டோம் என்று சொல்வார்கள்." ( நூல்:  இஹ்யா உலூமுத்தீன் 4ம் பாகம் )

5. வெட்கம் நபி (ஸல்) அவர்களின் துஆவைப் பெற்றுத் தரும்...

قال جعفر الصائغ: كان في جيران أبي عبد الله أحمد بن حنبل رجل ممَّن يمارِس المعاصي والقاذورات، فجاء يومًا إلى مجلس أحمد يُسَلِّمُ عليه، فكأنَّ أحمد لم يَرُدَّ عليه ردًّا تامًّا وانقبض منه، فقال له: يا أبا عبد الله، لِمَ تنقبض مني؟! فإني قد انتقلت عمَّا كنتُ تعهدني برؤيا رأيتها. قال: وأي شيء رأيت؟ قال: رأيت النبي صلى الله عليه وسلم في النوم كأنه على علوٍّ من الأرض، وناس كثير أسفل جلوس. قال: فيقوم رجل رجل منهم إليه، فيقول: ادع لي. فيدعو له، حتى لم يبقَ من القوم غيري.

قال: فأردت أن أقوم، فاستحيت من قبيح ما كنت عليه، قال لي: "يا فلان، لِمَ لا تقوم إلي فتَسْأَلْني أدعو لك؟" قال: قلت: يا رسول الله، يقطعني الحياء لقبيح ما أنا عليه. فقال: "إن كان يقطعك الحياء فقم فسلني أدعُ لك، فإنك لا تسبُّ أحدًا من أصحابي". قال: فقمت، فدعا لي، فانتبهت وقد بَغَّضَ اللهُ إليَّ ما كنت عليه. قال: فقال لنا أبو عبد الله: يا جعفر، يا فلان حدثوا بهذا واحفظوه؛ فإنه ينفع[ابن قدامة المقدسي: التوابين] 

ஜஅஃபருஸ் ஸாயிGHக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் அண்டை வீட்டார் ஒருவர் பாவச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவராக இருந்தார்.

ஒரு நாள் அவர் இமாம் அவர்களின் சபைக்கு வருகை தந்து ஸலாம் கூறினார். இமாமவர்கள் அதற்கு முழுமையான முறையில் பதில் கூறாமல் கண்டும் காணாததைப் போல் இருந்தார்கள்.

அப்போது அவர் இமாம் அவர்களே! ஏன் என்னைக் கண்டு முகம் திருப்பிக் கொண்டீர்கள்? நான் நேற்று இரவு கண்ட ஒரு கனவு குறித்து விளக்கம் கேட்கவே வந்தேன் என்று கூறினார்.

அதற்கு இமாமவர்கள் என்ன கனவு கண்டீர்? சொல்லுங்கள் என்றார்கள்.

அப்போது அவர் "நான் பெருமானார் ஸல் அவர்களை கனவில் கண்டேன். உயர்ந்த ஒரு இடத்தில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கீழே பல மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். 

அவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தங்களுக்காக துஆ செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். நபி ஸல் அவர்களும் அவர்களில் ஒவ்வொருவருக்கும் துஆச் செய்தார்கள்.

நான் மட்டுமே நபி ஸல் அவர்களிடம் துஆ செய்யுமாறு வேண்டிக் கொள்ள வில்லை. எனக்கும் துஆ செய்ய சொல்ல ஆசையாக இருந்தது. எனினும், நான் என்னுடைய கெட்ட நிலைகளை நினைத்து வெட்கப்பட்டேன். 

அப்போது, நபி ஸல் அவர்கள் ஓ இன்னவரே! என்று என்னை அழைத்து சபையில் இருந்த எல்லோரும் எழுந்து என்னருகே வந்து தங்களுக்காக துஆச் செய்ய சொன்னது போல ஏன் நீரும் என்னிடம் வேண்டிக் கொள்ள வில்லை. என்று கேட்டார்கள். 

"அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் துஆச் செய்ய சொல்வதை விட்டும் என் நிலை என்னை தடுத்து விட்டது" என்றேன். அப்போது நபி ஸல் அவர்கள் என்னிடம் "என்னருகே எழுந்து வருவீராக! என்னிடம் துஆச் செய்யுமாறு கோருவீராக! உமக்காக நான் துஆ செய்வேன். ஏனெனில் நீர் என் தோழர்கள் எவரையும் திட்டாதவராக இருக்கின்றீர்! என்று கூறினார்கள்.

பின்னர் நான் நபி ஸல் அவர்களின் அருகே சென்று என் நிலை மாற துஆச் செய்யுமாறு வேண்டிக் கொண்டேன். நபி ஸல் அவர்கள் எனக்காக துஆ செய்தார்கள்.

அல்லாஹ் அந்த துஆவின் காரணமாக என் கெட்ட சுபாவங்களை மாற்றியமைத்து விட்டான்" என்பதை நான் இப்போது உணர்கிறேன்" என்று அந்த மனிதர் கூறினார். ‌

இந்த செய்தியை அறிவிக்கின்ற இமாம் ஜஅஃபருஸ் ஸாயிGHக் (ரஹ்)

அவர்கள் கூறுகிறார்கள்:- அப்போது இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் என்னையும், அவரையும் அருகில் அழைத்தார்கள். அந்த மனிதரிடம் "நீர் கண்ட கனவை அவரிடம் அறிவியுங்கள்" என்றார்கள். என்னிடம் "அவர் சொல்லும் செய்தியை பதிவு செய்யுங்கள்! நிச்சயமாக அது (இந்த உம்மத்திற்கு) பயன் தரும்!" என்று கூறினார்கள். ( நூல்: அத் தவ்வாபீன் லி இமாமி இப்னு குதாமா அல் முகத்தஸீ (ரஹ்). )

6. வெட்க உணர்வு பாவம் செய்வதை தடுக்கும்.

ذهب أبو سفيان بن حرب ومعه بعض القرشيين إلى الشام للتجارة، فأرسل إليهم هرقل ملك الروم يطلب حضورهم، فلما جاءوا إليه قال لهم : أيكم أقرب نسبا بهذا الرجل الذي يزعم أنه نبي ؟

فقال أبو سفيان : أنا أقربهم نسبا، فقال هرقل : أدنوه مني واجعلوا أصحابه خلفه، ثم قال لهم : إني سائل هذا الرجل، فإن كذبني فكذبوه، فقال أبو سفيان : لولا الحياء أن يروا عليَّ كذبا لكذبت . فأخذ هرقل يسأله عن صفات النبي ونسبه وأصحابه وأبو سفيان لا يقول إلا صدقا حياء .

அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்னர் ஒரு முறை ஷாமுக்கு வியாபார விஷயமாக குறைஷிகள் சிலருடன் பயணமானார். ரோம் மன்னர் ஹிர்கல் அபூசுஃப்யானை தம்மை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அழைப்பின் பேரில் ஹிர்கல் மன்னரை சந்திக்க அபூசுஃப்யான் தம் வியாபார குழுவுடன் சென்றார்.

மன்னரை சந்திக்க அரண்மனையில் காத்திருந்த நேரத்தில் மன்னர் ஹிர்கல் வருகை தந்து "அபூசுஃப்யானையும், வியாபார குழுவினரையும் தம் அருகே வருமாறு கூறினார். மற்ற வியாபார குழுவினர் பின்னால் நிற்க அபூசுஃப்யான் முன்னால் நின்றார்.

அப்போது, மன்னர் "தம்மை நபி என்று சொல்கிற உங்கள் ஊரின் அந்த மனிதருக்கு உங்களில் குடும்ப உறவால் மிகவும் நெருக்கமானவர் யார்? என்று கேட்டார்.

அப்போது, அபூசுஃப்யான் "இங்கு நிற்பவர்களில் நானே அவருக்கு குடும்ப உறவால் மிகவும் நெருக்கமானவன்" என்றார்.

அபூசுஃப்யானை தம் அருகே நெருங்கி வருமாறு கூறிய மன்னர், நெருங்கி வந்து நின்ற அபூசுஃப்யானிடம் "தம்மை நபி என்று சொல்லும் அவர் குறித்து நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். அவர் குறித்து உண்மையான செய்தியை எனக்கு சொல்ல வேண்டும். அவர் குறித்து பொய்யான தகவல்களை யாரேனும் கூறினால் அவர் பொய் சொல்லும் மனிதர் என்று நான் உலகிற்கு பிரகடனப்படுத்தி விடுவேன்" என்றார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த நிகழ்வை நினைவு கூறிய அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் "வெட்க உணர்வு மட்டும் எனக்கு இல்லையானால் நபி ஸல் அவர்கள் குறித்து நான் பொய்யாக தகவல்களை கூறியிருப்பேன். எனினும் பொய்யாக கூற நபி (ஸல்) அவர்கள் குறித்து எதுவும் இல்லை. ஆனாலும் நான் நபி ஸல் அவர்கள் குறித்து உண்மையையே கூறினேன்" என்று கூறினார்கள்.

மேலும், மார்க்கத்தை கற்பது, கற்றுக் கொண்ட கல்வியின் அடிப்படையில் செயல்படுவது, கற்றுக் கொண்ட மார்க்க விழுமியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது நீங்கலாக,மற்ற அனைத்திற்கும் வெட்கப்பட வேண்டும். இத்தகைய வெட்க உணர்வும் இறையச்சமும் தான் நம்மை பக்குவப்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

மார்க்க விவகாரங்களில்  வெட்கப்பட கூடாது....

வெட்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு மேற்கூறிய செய்திகளே போதுமானதாகும். இனி வெட்கப்படக்கூடாதவைகளைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.சத்தியத்தைச் சொல்ல வெட்கப்படக் கூடாது...

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

(அல்குர்ஆன் 15:94).

اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ؕ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏

கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக்கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை.

(அல்குர்ஆன் 2:26)

மேற்சொன்ன வசனத்தில் இறைவன் கொசுவையோ அதைவிட அற்பமானதேயோ உதாரணம் கூறுவதற்கு வெட்கப்படமாட்டான் என்று சொல்வதிலிருந்தே இறைவன் சத்தியத்தை எடுத்துரைக்க தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது. 

எனவே நாமும் சத்தியத்தை, உண்மையைச் சொல்வதற்கு ஏன் பயப்படவேண்டும்? வெட்கப்படவேண்டும்? எனவே வெட்கப்படக்கூடாது. இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னதைப் போன்று ஏவப்பட்டதை உடைத்துப் பேசிவிட வேண்டும்.

2. மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள வெட்கப் படக்கூடாது...

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ قَالَ : أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ

جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَأَتِ الْمَاءَ فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ – تَعْنِي وَجْهَهَا – وَقَالَتْ يَا رَسُولَ اللهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ نَعَمْ تَرِبَتْ يَمِينُكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا.

(அபூதல்ஹா ரலி அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலிரி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்! உறங்கி விழித்ததும் தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக் கொண்டு, “பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள்.

அறி: உம்மு சலமா (ரலி), நூல்: புகாரி  , 282, 3328, 

3. மார்க்க சபைகளில் அமர வெட்கப்படக் கூடாது...

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ : أَلاَ أُخْبِرُكُمْ ، عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللهِ فَآوَاهُ اللَّهُ ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ.

அபூவாகித் (அல்ஹாரிஸ் பின் மாலிரிக் அல்லைஸீலிரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப் படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்திவிட்டான். அறி: அபூவாக்கித் (ரலி), ( நூல்: முஸ்லிம் 4389 ).

ஒருவர் தனது திறமையைக் காட்ட வேண்டிய அல்லது தன்னை நிரூபிக்க வேண்டிய தருணத்தை வாய்ப்பைப் பயன்படுத்தாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல. வாய்ப்பு நம்மைத் தேடிவரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியும். எனவே வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு முஃமினுக்கு வெட்கம் தடைக்கல்லாக இருக்கவே கூடாது.அதே நேரத்தில் கிடைத்த அல்லது கிடைக்க இருக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மற்றவர்களிடம் நற்சான்று வாங்கிய நபித்தோழர்களும் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் நம்மால் ஹதீஸ்களில் காணமுடிகிறது.

4. வாய்ப்புகளை பயன் படுத்த வெட்கப்படக் கூடாது.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللهِ أَخْبِرْنَا بِهَا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்” என்றார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

( நூல்: புகாரி )

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

، قَالَ : كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ قَالَ فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِيمَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلاَّ لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ {إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ} حَتَّى خَتَمَ السُّورَةَ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَقَالَ بَعْضُهُمْ لاَ نَدْرِي ، أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ قُلْتُ : لاَ قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ اللَّهُ لَهُ {إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} قَال عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.

(அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி….. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)” என்னும் (திருக்குர்ஆனின் 110வது “அந்நஸ்ர்’) அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை.

பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து’ என்பதில் உள்ள “வெற்றி’ என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்’ என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள். அறி: இப்னு அப்பாஸ் (ரலி), ( நூல்: புகாரி )

5. மார்க்கக் கல்வி பயில வெட்கப்படக் கூடாது.

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى – وَهَذَا حَدِيثُهُ – حَدَّثَنَا هِشَامٌ عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ قَالَ – وَلاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَبِى بُرْدَةَ – عَنْ أَبِى مُوسَى قَالَ

اخْتَلَفَ فِى ذَلِكَ رَهْطٌ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّونَ لاَ يَجِبُ الْغُسْلُ إِلاَّ مِنَ الدَّفْقِ أَوْ مِنَ الْمَاءِ. وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ. قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ. فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِى فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ – أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ – إِنِّى أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَىْءٍ وَإِنِّى أَسْتَحْيِيكِ. فَقَالَتْ لاَ تَسْتَحْيِى أَنْ تَسْأَلَنِى عَمَّا كُنْتَ سَائِلاً عَنْهُ أُمَّكَ الَّتِى وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ. قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ ».

அபூமூஸல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா, அல்லது விந்து வெளிப்பட்டால்தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர். அன்சாரிகள், ” “விந்து வெளியானால்தான்’ அல்லது “துள்ளல் இருந்தால்தான்’ குளியல் கடமையாகும்” என்று கூறினர். முஹாஜிர்கள், “இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!)” என்று கூறினர். உடனே நான், “இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ” “அன்னையே!’ அல்லது “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே!’ நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம்” என்றார்கள். நான், “குளியல் எதனால் கடமையாகும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறி: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),( நூல்: முஸ்லிம் )

ஆகவே, வெட்கத்துடன் நடக்க வேண்டிய இடங்களில் வெட்கத்துடனும் வெட்கப்படக்கூடாத இடங்களில் துணிவுடனும் வெட்கப்படாமலும் நடந்து கொள்வோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் இறைத் தண்டனையில் இருந்து காத்தருளும் வெட்க உணர்வை வழங்கியருள்வானாக!

ஈருலக வெற்றிக்கு தடைக்கல்லாக அமையும் வெட்க உணர்விலிருந்தும் காத்தருள்வானாக!!

ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


1 comment: