மலைகளின் முக்கியத்துவம் குறித்து அல்குர்ஆன்!!
ரமழான் – (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:-
22.
இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அத்தியாயங்களில்
தூர் அத்தியாயமும் ஒன்று. தூர் அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லாஹ் தூர் மலையின்
மீது சத்தியமாக! என்று மலையின் மீது சத்தியம் செய்கின்றான். தொடர்ந்து மறுமை நாளின்
நிகழ்வுகள் குறித்து பேசுகிற இடத்தில் “அந்நாளில் மலைகள் தூள் தூளாகி விடும் போது”
என்று 10 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
நம் கண்களுக்கு பிரம்மாண்டமாய் காட்சி தரும் மலை
அது குறித்து அல்குர்ஆனில் பல இடங்களில் பேசுகின்றான். அவைகளையும் கொஞ்சம் அவதானித்துப்
பார்ப்போம்.
ஜபலுன் (جَبَلٌ) என்று அரபு மொழியிலும் Mountain என்று ஆங்கிலத்திலும் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தைக்கு தமிழில் மலை என்று பொருள்.
ஜபல் என்று ஒருமையில் 6 தடவைகளும் ஜிபால் என்று
பண்மையில் 33
தடவைகளும் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
ஏன் இவ்வளவு
அதிகமாக சொல்லப்படுகிறது என்ற வினாவுக்கு அல்குர்ஆனே பதில் தருகின்றது.
وَاِلَى
الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
"இன்னும்
மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமா?" என்று அல்லாஹ் மலைகள் குறித்து சிந்திக்க தூண்டுகின்றான். (அல்குர்ஆன்: 88: 19 )
மலைகள் குறித்து சிந்திக்க அப்படி என்ன இருக்கிறது?
இன்னொரு
வசனத்தில்...
وَالْجِبَالَ
اَرْسٰٮهَا ۙ مَتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
(அல்குர்ஆன்: 79:
32,33 )
மனிதர்களுக்கும்
கால்நடைகளுக்கும் பயன் தருவதாக சொல்லும் அல்லாஹ் என்ன வகையில் பயன் தருகின்றது
என்பதையும் சொல்லிக் காட்டுகிறான்.
1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ வில் நடைபெற்ற பூமி குறித்தான
உச்சி மாநாட்டில் தான் அருகி வரும் வெப்ப மண்டல காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற சூழல் அமைப்புகளுக்கு கொடுத்து
வரும் முக்கியத்துவத்தை மலைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று முடிவு
செய்யப்பட்டது.
அதன்
தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட சாசனத்திலும் அது குறித்த அறிவிப்பு வெளியானது.
ஐ.நா சபை கூட 2002 ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 ம் தேதியை மலைகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
பூமியில்
உள்ள நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மலைகளால் சூழப்பட்டுள்ளது என்று ஒரு ஆய்வு
தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட
15 சதவீதம் அதாவது 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மலைகளில் வாழ்வதோடு விவசாயமும்
செய்து வருவதாக ஒரு தரவு குறிப்பிடுகிறது.
அது
மட்டுமல்ல அருகி வரும் பல உயிரினங்கள், தாவரங்கள், செடி
கொடிகள் மரங்களின் வாழ்விடமாகவும் மலைகள் அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மலைகள்
தான் உலகத்தின் நீர் கோபுரங்கள் என்று ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுவதோடு பூமியின்
நன்னீர் வளங்களில் 60 முதல் 80 சதவீதம் வரையிலான பங்களிப்பை மலைகள் தான் வழங்குகின்றன
என்று தெளிவு படவும் தெரிவிக்கிறது.
மலைகள் பூமியின்
கவசம்..
وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا
فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ
"இன்னும் இப்பூமி
(மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான
மலைகளை அமைத்தோம்". ( அல்குர்ஆன்: 21: 31 )
وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا
وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ
“உங்களுடன் பூமி
அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்.” ( அல்குர்ஆன்: 16:
15 )
خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَأَلْقَى فِي الْأَرْضِ
رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَأَنْزَلْنَا
مِنَ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ
"உங்களுடன் பூமி
அசையாதிருப்பதற்காக அதன்மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்". ( அல்குர்ஆன்: 31: 10 )
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا (6) وَالْجِبَالَ أَوْتَادًا
"நாம் இப்பூமியை
விரிப்பாக ஆக்கவில்லையா. இன்னும் மலைகளை முலைகளாக ஆக்கவில்லையா?". ( அல்குர்ஆன்: 78:
6-7 )
அல்லாஹ் பூமியின்
மேலோட்டையும் கீலோட்டையும் சேர்த்து மலைகளைக் கொண்டு ஆணிகளாக அடித்வைத்துள்ளான்.
இதற்கு அல்குர்ஆன் அவ்தாத்,
ரவாஸிய என்ற பதங்களைப் பயன்படுத்தியுள்ளது. இச்சொற்களுக்கு
முறையே “ஆப்பு,
நங்கூரம்” என்று பொருளாகும்.
மலைகள் பூமிக்குள்
இவ்வாறு முளைகளாக அமைந்திருக்காவிட்டால், நாம் வசிக்க முடியாத
அளவிற்கு இந்த பூமி ஆடி,
அசையும் என்கின்றனர் புவியியல் வல்லுணர்கள்.
அதாவது ஒரு
காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்த பூமி பிரிந்துசென்று தனித்தனி துண்டுகளாகின.
பூமியின் மேற்பகுதி கடினமானதாகவும், உட்பகுதி உருகிய
நிலையிலும் இருப்பதால் தான் இது நடைபெற்றதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு இந்த நிலப்பரப்புகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த வேளையில் புவித்
தட்டுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வினால் ‘Folding Phenomena’ என்ற முறையில் நிலப்பரப்புகளில் மலைகள் உருவாகின. இம் மலைகள் பூமியின்
மேற்பரப்பில் மட்டுமல்லாமல் பூமிக்குள்ளும் ஆழமாகச் வேர்விட்டு உயர்ந்து நின்றன.
இதனால்தான் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கண்டங்களின் நிலப்பரப்புகள் நகராமல், அசையாமல் அப்படியே நின்றுவிட்டன. இதனைத்தான் திருமறையின் மேற்கூறிய வசனங்கள்
கூறுகின்றன.
மலைகள் தொடர்பான
கல்வி, ஆராய்ச்சிகளுக்கு
மலையியல்
(Mountainology) என்று பெயர். இது இன்று உலகில் பல்வேறு கல்வியாளர்கள், ஆய்வாளர்களைக் கொண்டு விரிவாக இயங்கும் ஒரு துறையாகும்.
மேற்கூறிய
வசனத்திற்கு வலுசேர்க்கும் முகமாக பல்கலைக்கழகங்களில்
மண்ணியல் விஞ்ஞானப்
பாடத்திற்குப் பயிற்றுவிக்கப்படும் ஒரு புத்தகம்தான். “The Earth” . இதன் ஆசிரியர்களுள் ஒருவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி “ஜிம்மி கார்ட்டரின்”
ஆலோசகராகவும் அமெரிக்க விஞ்ஞான ஆய்வுகூடத் தலைவராகவும்
இருந்த Dr.
ஃப்ரேங்க் பரஸ் அப்புத்தகத்தில் “மலைகள் ஆப்பு வடிவத்தில் அமைந்தவை. ஆழமாக நிற்கும் அவற்றுக்கு வேர்களும்
உண்டு. பூமியை நிலைப்படுத்துவதே அவற்றின் உறுதியான இயக்கம்” என்று எழுதியுள்ளார்.
மலைகள் குறித்து சிந்திக்க வேறென்ன இருக்கிறது?
لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا
مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ
لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
நபியே!) நாம் ஒரு
மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானல், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு
விளக்குகிறோம். ( அல்குர்ஆன்: 59: 21 )
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا
الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا
நிச்சயமாக
வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு
எடுத்துக்காட்டினோம்,
ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. ( அல்குர்ஆன்: 33: 72 )
وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَاجِبَالُ أَوِّبِي مَعَهُ
وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ
நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) “மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) ( அல்குர்ஆன்: 34: 10 )
மேற்குறிப்பிட்ட
திருமறை வசனங்களைப் போன்று இன்னும் சில வசனங்களில் அல்லாஹ் உயிரினங்களுக்கு
உத்தரவிடுவது போன்று உயிரற்றவை என நாம் கருதும் வானம், பூமி,
மலைகளைப் பார்த்தும் உத்தரவிட்டுள்ளான். இதன் மூலம் இன்னும்
அறிவியலுக்கு அகப்படாத ஒரு மர்மத்தை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதுதான்
மலைகளுக்கும் உயிருண்டு. அவற்றுக்கு உணர்ச்சி இருக்கின்றது, அவைகள் பயப்படும்,
நடு நடுங்கும் என்பதை முதலிரண்டு வசனங்களும் அவையும் துதி
செய்கின்றன என்பதை மூன்றாவது வசனமும் நேரடியாகவே கூறுகின்றன.
அப்படியானால்
மலைகளுக்கும் உயிர் உள்ளது என்பதை வஹியின் அறிவு சொல்லித் தருகின்றது. ஆனால் இது
இன்றைய அறிவியலுக்கு எட்டாத அப்பாடற்பட்ட ஒரு விஷயமாகவே இருக்கிறது. அல்லாஹ்வே
யாவற்றையும் அறிந்தவன்.
பல நபிமார்களின் வாழ்க்கையோடு இந்த மலைகளை தொடர்பு படுத்தி அல்லாஹ்
அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
இப்ராஹீம் (அலை) வாழ்வில் ஒரு மலை..
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا
وَاعْلَمْ
اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
இன்னும்,
இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை
நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது,
அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்;
“மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும்
பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,)
பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின்,
அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப்
பறந்து) வரும்;
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்)
கூறினான்". ( அல்குர்ஆன்: 2: 260 )
ஹஜ் செய்ய வருமாறு மக்களிடையே நீர் அறிவிப்புச் செய்வீராக 22:27, என்று அல்லாஹ் சொன்னபோது
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் உயரமான “அபூ குபைஸ்”
என்ற மலையின் மேல் ஏறி நின்று அறிவித் தார்கள் (தஃப்சீர்
இப்னு கஸீர் பாகம் 6,
பக்கம் 54:58)
நூஹ் (அலை) அவர்களின் வாழ்வில்
ஒரு மலை..
وَهِىَ
تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ
وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ
فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
قَالَ سَاٰوِىْۤ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِىْ مِنَ الْمَآءِؕ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ
அதற்கு அவன்: “என்னைத்
தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்”
எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ்
யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து
காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று
எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில்
ஒருவனாகி விட்டான்.
وَقِيْلَ يٰۤاَرْضُ ابْلَعِىْ مَآءَكِ وَيٰسَمَآءُ اَقْلِعِىْ وَغِيْضَ الْمَآءُ وَقُضِىَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُوْدِىِّ وَقِيْلَ بُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ
பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. ( அல்குர்ஆன்: 11: 42 - 44 )
நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்வில் ஒரு மலை...
وَلَمَّا
جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ
اَنْظُرْ اِلَيْكَ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ
فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ
لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ
سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
நாம் குறித்த
காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில்
நிலைத்திருந்தால்,
அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத்
தோற்றுவித்த போது,
அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு
கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 7: 143 )
وَاخْتَارَ
مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ
الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ ؕ
اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ
ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِيُّنَا
فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ
இன்னும் மூஸா நாம்
குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே
அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த
(குற்றத்)திற்காக,
எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ
நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை
நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு
மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ
தான் மிக்க மேன்மையானவன்”
என்று பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 7: 155 )
தாவூது (அலை) அவர்களின் வாழ்வில் ஒரு மலை..
اِصْبِرْ
عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَيْدِۚ اِنَّـهٗۤ
اَوَّابٌ
இவர்கள்
கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர்
(எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
اِنَّا
سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ يُسَبِّحْنَ بِالْعَشِىِّ وَالْاِشْرَاقِۙ
நிச்சயமாக நாம்
மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன. (
அல்குர்ஆன்: 38:
17 - 18 )
பனூ இஸ்ரவேலர்களின் தலைக்கு மேல் உயர்த்தப்பட்ட தூர் மலை...
وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ
خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ
تَتَّقُوْن
இன்னும், நாம் உங்களிடம்
வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை
உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும்
நினைவு கூறுங்கள்).
நபி {ஸல்} அவர்கள் வாழ்வில் இடம் பெற்ற மலைகள்...
மக்காவிலிருந்து
மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜபலுன் நூர் என்ற மலையின் உச்சியில்தான் ஹீரா குகை
இருக்கின்றது. அக்குகையில் தான் நபி (ஸல்) அவர்கள் தனிமையில் இருப்பதும், தியானம் செய்வதும் வழக்கம் பல நாட்கள் அவ்வாறு தியானம் செய்தார்கள். ஒரு நாள்
நபி (ஸல்) அவர்கள் தியானத்திலிருந்த போது அல்லாஹ்வின் கட்டளைப்படி வானத்திலிருந்து
ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் (மலக்) நபிகளாரிடம் ஓதுவீராக என்றார்கள் அதனைக் கேட்டு
பயந்து நடுங்கிய நபிகளார் (ஸல்) அவர்கள் எனக்கு ஓதத் தெரியாது என்று கூறினார்கள்.
பின் வானவர் ஜிப்ரீல் நபிகளாரை இருக்க அணைத்து மீண்டும் ஓதுக என்றார்கள் அதற்கு
நபிகளார் மீண்டும் ஓதத் தெரியாது என்றார்கள் மூன்றாவது முறையாக இருக்க அணைத்து
ஓதுவீராக என்று பின்வரும் வசனங்களை ஓதிக்காண்பித்தார்கள். (யாவற்றையும் படைத்த
உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக – அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான் ஓதுவீராக உம் இறைவன் மாபெரும்
கொடையாளி அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றும் கொடுத்தான் (96 :1 - 5) என்ற வசனங்களை அல்லாஹ் இறக்கியருளினான்.
(நபியே!) உம்முடைய
நெருங்கிய உறவி னர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக 2:214 என்ற வசனம் அருளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா”
மலை உச்சியின் மேலே ஏறி நின்று “யா ஸபாஹா”
அதிகாலை ஆபத்து உதவி உதவி என்று கூவி அழைத் தார்கள்.
(புகாரி : 4700,
3527, 4771, 2753, 3073, 3525) முஸ்லிம் 355, 350, 348, 353 முஸ்னத் அஹமத் முஸ்னது அபீ பஅலா & ரஹீக் 100)
உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் ஒரு மலை..
وعن ابن
عمر أن عمر بعث جيشا وأمرعليهم رجلا يدعى سارية فبينما عمريخطب فجعل يصيح :
ياأميرالمؤمنين لقينا عدونا فهزمونا فإذابصائح يصيح: ياساريا الجبل .
فأسندناظهورنا إلى الجبل فهزمهم الله تعالى, (رواه البيهقيفي دلائل النبوة)
ஒரு முறை உமர்
(ரலி) அவர்கள் ஸாரியா என்பவரை தளபதியாக நியமித்து ஒரு படையை அனுப்பிவைத்தார்கள். அதற்கு பிறகு உமர்(ரலி) ஸஹாபாக்களிடம் பிரசங்கம் செய்துகொண்டிருக்கும்போது
இடையில் யா ஸாரியா மலை என்று சப்தமிட்டார்கள். சென்ற படை வெற்றியோடு திரும்பியது
வந்தவர்கள் உமர் அவர்களிடம் ஆச்சரியமான ஒரு செய்தியை சொன்னார்கள். அமீருல்
முஃமினூன் அவர்களே நாங்கள் எதிரிகளை சந்தித்த ஆரம்பத்தில் தோழ்வியை சந்தித்தோம்
அந்நேரத்தில் யா ஸாரியா மலை என்ற உங்களுடைய சப்தத்தை கேட்டோம் நாங்கள் எல்லோரும் மலையின் பக்கம் திரும்பினோம் வெற்றிபெற்றோம் என்று
கூறினார்கள். (நூல். மிஸ்காத். பாபு கராமத். பக்கம்.546 )
முஃமின்களை நேசிக்கும் உஹது மலை..
عن أبي حُميد
قال: أقبلنا مع النبي صلى الله عليه وسلم من غزوة تبوك، حتى إذا أشرفنا على
المدينة قال: (هذه طابة، وهذا أُحُدٌ، جبل يحبنا ونحبه).
நாங்கள் நபி (ஸல்)
அவர்களுடன் தபூக் போரிலிருந்து (திரும்பியவாறு மதீனாவை) முன்னோக்கிச் சென்றோம்.
நாங்கள் மதீனாவை நெருங்கியபோது அவர்கள், ‘இது ‘தாபா’
(தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்” என்று கூறினார்கள். ( புஹாரி : அபூஹுமைத்
(ரலி).
அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்களின் வாழ்வில் ஒரு மலை..
أخبرنا
أبو عبد الله محمد بن محمد بن سرايا ن علي البلدي وغير واحد بإسنادهم عن محمد بن
إسماعيل البخاري، أخبرنا عمرو بن زرارة، أخبرنا زرارة، حدثني حميد الطويل، عن أنس
بن مالك، عن عمه أنس بن النضر، وبه سمي أنس: غاب عمي عن قتال بدر فقال: يا رسول
الله؛ غبت عن أول قتال قاتلت فيه المشركين، والله لئن أشهدني الله قتال المشركين
ليرين الله ما أصنع، فلما كان يوم أحد انكشف المسلمون، فقال: اللهم إن أعتذر إليك
مما صنع هؤلاء، يعني المسلمين، وأبرأ إليك مما جاء به هؤلاء، يعني المشركين، ثم
تقدم، فاستقبله سعد بن معاذ فقال: أي سعد، هذه الجنة ورب أنس أجد ريحها دون أحد،...
வியாபார விஷயமாக ஷாமுக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்த அனஸ்
(ரலி) அவர்கள் மதீனாவின் எல்லைக்குள் காலடியெடுத்த வைத்த போது மதீனா முன்பை விட இப்போது உலகின் நாலா பாகங்களிலும் அறியப்பட்டிருந்ததை எண்ணி அக மகிழ்ந்தார்கள்.
ஆம்! பத்ரின் வெற்றியும், எவராலும் வெற்றி கொள்ள முடியாது என்று அன்றைய நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்த மக்கா குறைஷிகளை புற முதுகிட்டு ஓடச் செய்ததையும், நபித்தோழர்களின் அஞ்சா நெஞ்சத்தையும் தம் பயணத்தின் வழி நெடுக பிற பகுதி மக்களெல்லாம் புகழோடு பேசியதே அவர்களின் அக மகிழ்வுக்கு காரணம்.
ஊரில் நுழைந்த அனஸ் (ரலி) அவர்கள் தான் சந்திக்கும் அத்துனை நபர்களிடமும் ஆவலோடு பத்ரின் காட்சிகளை விசாரித்துக் கொண்டே வந்தார்.
பத்ருக்கான தயாரிப்பு, போர் மேகம் சூழ்ந்த காலகட்டம், பத்ருக்கான ஆலோசனை, போருக்கான வியூகம், முஹாஜிர், அன்ஸார் ஆகியோர்களின் தலைவர்கள் ஆற்றிய நெஞ்சுரம் நிறைந்த உரைகள், படை வீரர்களின் அணிவகுப்பு, போர்முனை, யுத்தகளத்தின் காட்சிகள், மலக்குமார்களைக் கொண்டு அல்லாஹ் உதவியது, கலந்து கொண்டோருக்கும், வீரமரணம் அடைந்தோருக்கும் அல்லாஹ் வழங்கிய சோபனம் என பத்ரைப் பற்றிய கள நிகழ்வுகளை மக்கள் வர்ணித்தனர்.
இதுவரை, ஆனந்தத்தோடும், மகிழ்ச்சியோடும் கேட்டுக் கொண்டிருந்த அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்களுக்கு “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்ரில் தம்மால் கலந்து கொள்ள முடியாமல் போனதை எண்ணி” புழுவாய் துடித்தார். அழுது கண்ணீர் வடித்தார்.
அன்றிலிருந்து மதீனாவின் வீதிகளில், தெருக்களில் காணும் மக்களிடம் எல்லாம் “அல்லாஹ் எனக்கு மட்டும் பத்ரைப் போன்று ஒரு வாய்ப்பைத் தரட்டும், அப்படித்தந்தால் அவனுக்காக, அவன் தந்த இந்த தீனுக்காக நான் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா?” கண்டிப்பாகச் செய்வேன்! அந்த நாளில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று நீங்களும் பார்க்கத்தான் போகின்றீர்கள்” என்று கூறிக் கொண்டே இருப்பார்.
இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. அன்றொரு நாள் மாநபி {ஸல்} அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த ஓர் உன்னதமான தருணத்தில் “அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களோடு நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கியசாலியாக நான் ஆகிவிட்டேன்! அப்போது நான் வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தேன்.
ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! இன்னொரு முறை இணை வைப்பாளர்களோடு போரிடும் வாய்ப்பை வழங்கினால் நான் என்ன செய்வேன் என்பதை அல்லாஹ் உங்களுக்கு காண்பிப்பான்! நீங்களும் அதைப் பார்ப்பீர்கள்” என்றார்கள்.
அவர்கள் எதைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்களோ அதை நிறை வேற்றத் தோதுவான தருணத்தை அல்லாஹ் உஹத் எனும் வடிவில் வழங்கினான்.
ஆம்! மீண்டும் மதீனாவை போர் மேகம் சூழ்ந்து கொண்டது. உஹதுக்கான அழைப்பு பெருமானார் {ஸல்} அவர்களிடம் இருந்து வந்தது.முதல் ஆளாய் தம்மைப் பதிவு செய்து, முதல் வரிசையில், முதல் நபராய் தம்மை ஆக்கிக் கொண்டார்கள்.
உஹத் யுத்தகளம்.. நாலாபுறமும் முஸ்லிம் படைகள் சிதறி ஓடிய சிக்கலான நேரம் அது…யாஅல்லாஹ்! முஸ்லிம்கள் இப்படி சிதறி ஓடுகின்றார்களே அவர்களுக்காக நான் உன்னிடம் அதற்கான காரணத்தைக் கூறுகின்றேன். இந்த இணை வைப்பாளர்கள் எதைச் செய்கின்றார்களோ அதில் இருந்தும் நான் முழுமையாக விலகிக் கொள்கின்றேன்! என்று பிரார்த்தித்து விட்டு வாளை கையில் ஏந்தியவராக வேகமாக களத்தின் மையப் பகுதியை நோக்கி விரைகின்றார்கள்.
நிலமை மிகவும் மோசமாக இருக்கிறதே தோழரே! இவ்வளவு வேகமாக எங்கே செல்கின்றீர் என்று ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் கேட்க,
“இதோ உஹத் மலையடிவாரத்தில் இருந்து சுவனத்தின் சுகந்தம் என்னை அழைத்துக் கொண்டிருக்கின்றது, அதை நுகர்ந்திடத்தான் விரைவாகச் செல்கின்றேன்” என்று அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் பதில் கூறிவிட்டு களத்தினில் புகுந்தார்கள்.
ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் “அனஸ் இப்னு நள்ர் போன்று என்னால் நடந்து கொள்ள ஒரு போதும் இயலாது”
என்று கூறிவிட்டு … யுத்தகளத்தின் கடைசி கட்ட காட்சியை விளக்கினார்கள்.
யுத்தம் முடிவுற்று ஷுஹதாக்களை அடையாளம் காணும் பணி துவங்கியது. ஒரு உடலின் அருகே நாங்கள் சென்று பார்த்தோம். எந்த விதத்திலும் அடையாளம் காண முடியாத படி உடல் முழுவதும் சல்லடையாக்கப்பட்டு, முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுகிட்டத்தட்ட 80 க்கும் அதிகமான காயங்கள் உடலின் சில பகுதிகள் வாளால் துண்டாடப்பட்டு இருந்தது. இன்னும் சில பகுதிகள் ஈட்டியால் குத்தப் பட்டு இருந்தது, இன்னும் சில பகுதிகளில் அம்பால் துவைக்கப்பட்டு இருந்தது.
இறுதியில், அந்த உடல் அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்களுக்குரியது தான் என்பதை அவர்களின் சகோதரி ருபைவு (ரலி) அவர்கள் அடையாளம் காட்டிய பின்னர் தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறைநம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: “அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கின்றார்கள். அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள். இன்னும், சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றார்கள்” எனும் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 23
–ஆம் வசனம் அனஸ் இப்னு நள்ர்(ரலி) அவர்களின் விஷயமாகவே இறக்கியருளப்பட்டது. ( நூல்: உஸ்துல் ஃகாபா, அல் இஸ்தீஆப் )
நபி {ஸல்} அவர்கள் கூறிய சில உவமைகளில் மலைகள்...
حَدَّثَنَا
عِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ
بْنِ حَدِيجٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي
عَامِرٍ الْأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، أَنَّهُ قَالَ
«لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ
الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا
اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا . قَالَ ثَوْبَانُ : يَا رَسُولَ
اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا - أظهر مواصفاتهم - أَنْ لَا نَكُونَ
مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ ؟
قَالَ :
أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنْ اللَّيْلِ
كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ
انْتَهَكُوهَا . رواه ابن ماجه»
“எனது உம்மத்தில் ஒரு
கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் ‘திஹாமா’ எனும் மலைகள் அளவுக்கு நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ்
பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்” என்று நபியவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக
அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!” என்றோம்.
அதற்கு நபியவர்கள் “அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில்
ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின்
தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை
செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்’ என்று கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )
இந்தச் செய்தியில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான வாசகத்தை நாம்
உற்று நோக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அதாவது, திஹாமா எனும் மலை அளவுக்கு நன்மை செய்தவர்களின் நன்மைகளை
அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடுவான்.
அத்தகைய
கைசேதப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து நபித்தோழர்கள் கேட்கும் போது, ஒற்றை வார்த்தையில், இரத்தினச் சுருக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளங்களில் ஆழமாகப்
பதிய வைத்தார்கள்.
அதாவது, உங்களைப் போன்றே வணக்க வழிபாடுகளில், மார்க்க காரியங்களில்
கவனமாக இருப்பார்கள். இரவு வணக்கத்தில் ஈடுபடுவார்கள்; ஆனால் தனித்திருக்கும் போதும், சந்தர்ப்பம் கிடைக்கும்
போதும் தடை செய்யப்பட காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பார்கள்"
என்று.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ عَنْ الْأَعْمَشِ قَال سَمِعْتُ ذَكْوَانَ أَبَا صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَسُبُّوا أَصْحَابِي فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல்குத்ரீ அறிவிக்கிறார்கள், என்
தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹது
மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு
செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட
முடியாது.
عن
النبي صلى الله عليه وسلم أنه قال: ((من شهد الجنازة حتى يُصلَّى عليها، فله
قيراط، ومن شهدها حتى تُدفَن، فله قيراطان))، قيل: وما القيراطان يا رسول الله؟
قال: ((مِثلُ الجبلينِ العظيمين))، وفي رواية: ((أصغرهما مثل أُحُد))، وهذا فضل
عظيم، وأجر كبير
நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி,
அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத்
நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின்
தொடர்ந்து சென்று தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் திரும்புபவர்
ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்’ என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி) ( நூல்: புகாரி 47,
1235 )
No comments:
Post a Comment