Saturday, 15 April 2023

எழுதுகோலும்… எழுத்தும்.. எழுத்தாற்றலும்…

 

எழுதுகோலும்… எழுத்தும்.. எழுத்தாற்றலும்…

ரமழான் (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:- 25.



இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் கலம் அத்தியாயத்தின் முதல் வசனத்தின் ஊடாக நாம் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

قال الله تعالى: ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ﴿68:1

 وفى آية اخرى: الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ﴿96:4﴾

நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 68:1) 

மற்றொரு வசனத்தில்,  (அல்லாஹ்வாகிய) அவனே எழுது கோலைக்கொண்டு கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 96:4)

عن أبي هريرة قال: سمعت رسول الله صلي الله عليه وسلم يقول: أول ما خلق الله القلم ثم خلق النون وهي الدواة وذلك قول تعالى: ن وَالْقَلَمِ ثم قال له اكتب قال: وما أكتب قال: ما كان وما هو كائن إلى يوم القيامة من عمل أو أجل أو رزق أو أثر فجرى القلم بما هو كائن إلى يوم القيامة- قال- ثم ختم فم القلم فلم ينطق ولا ينطق إلى يوم القيامة.  (تفسير القرطبى

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: முதலில் பேனாவை அல்லாஹ் படைத்தான். பிறகு மையைப் படைத்தான். அதுதான் அல்லாஹ் தனது திருமறையில்  'நூன், வல்கலம்' என்பதாகும். பிறகு அந்த பேனாவை எழுது! என்றான். எதை எழுத வேண்டும்? என்று பேனா கேட்டது. செயல், தவணை, ரிஜ்க் மற்றும் ஆயுள் ஆகியவற்றின் அனைத்தையும் இறுதிநாள் வரை என்ன நடக்கிறதோ,  நடக்கப்போகிறதோ அனைத்தையும் எழுது என்றான். இறுதிநாள் வரை நடக்க இருக்கின்ற அனைத்தையும் பேனா எழுதி முடித்தது. பிறகு அந்த பேனாவின் வாயில் அல்லாஹ் முத்திரையிட்டான். இறுதிநாள் வரை (வேறு எதுவும்) பேசக்கூடாது" என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் எனக்கூறினார்கள். (தஃப்ஸீருல் குர்துபீ)

எழுதுகோலின் அவசியத்தையும், எழுதுவதன் அவசியத்தையும், எழுத்தாற்றலின் அவசியத்தையும் மேற்கூறிய இறைவசனங்களையும், நபி மொழியையும் வைத்து புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த உம்மத்திற்கு இரண்டு கடமைகள் உண்டு. ஒன்று எழுத கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொன்று அதன் மூலம் எழுத்தாற்றலைக் கற்றுக் கொண்டு இந்த தீனுக்கும் இந்த உம்மத்திற்கும் சேவையாற்ற வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எழுத கற்றுக் கொள்வதன் அவசியத்தை கொடுக்கல் – வாங்கல், கடன் தொடர்பான வசனத்தின் மூலமும், வஸிய்யத் – உயில் தொடர்பான வசனத்தின் மூலமும் உணர்த்துகின்றான்.

அதே போன்று நபி ஸுலைமான் (அலை) அவர்கள் ஸபா நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக எழுத்தாற்றல் கொண்ட ஒருவர் தான் பெற்றிருக்கும் எழுத்தாற்றல் மூலமாக இந்த தீனுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதை உணர்த்துகின்றான்.

உலகின் முதல் மனிதரான நம் தந்தை எழுத்தாற்றல் உள்ளவராகவே இருந்ததாக வரலாறு சான்றுரைக்கின்றது. அதன் தொடர்ச்சியாக நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் மனித குலத்திற்கு எழுத்தாற்றலை விரிவடையச் செய்தவர்கள் என்றும் வரலாறு அடையாளப்படுத்துகின்றது.

எனவே, நாம் எழுத கற்றிருப்பதோடு அதன் மூலம் இந்த தீனுக்கும், இந்த உம்மத்திற்கும் சேவையாற்ற வேண்டும்.

பேனாவின் வரலாறு..

ஸ்டீவன் ரோச்சர் ஃவிசர் (Steven Roger Fischer) தான் எழுதிய எழுதுதலில் வரலாறு (A History of Writing) என்னும் நூலில் எகிப்தில் சக்காரா என்னும் இடத்தில் கிடைத்துள்ள சான்றுகளின்படி நாணல்-போன்ற எழுதுகோல்கள் எகிப்திய அரசர்களின் முதற்பரம்பரையினர் காலத்திலேயே, அதாவது கி.மு 3000 ஆண்டு தொடக்கத்திலேயே வழக்கில் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றார். ஏறத்தாழ இன்றைக்கு 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை, கி.பி. 17 ஆவது நூற்றாண்டு வரை, இந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன.

பழங்காலத்து எகிப்தியர் பாப்பிரசு (papyrus) சுருள்களில் எழுத சிறு நாணலால் (reed) ஆன எழுதுகோல்களைப் பயன்படுத்தினர். இந்த நாணல் போன்ற செடிக்கு ஜங்க்கஸ் மாரிட்டிமஸ் (Juncus Maritimus) என்று பெயர்.

பறவைகளின் இறகாகிய தூவல் (quill) எழுதுகோல்கள் இசுரேல்-பாலசுத்தீனத்தில், மேற்குக் கரை என்னும் பகுதிக்கு அருகே உள்ள கும்ரான் (Qumran) என்னும் இடத்தில் இருந்து கிடைத்த செத்தக் கடல் சுருள்கள் (Dead Sea Scrolls) எழுதப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இப்பழக்கம் கி.பி 700களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை தூவல் எழுதுகோலே 1787 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் சட்டம் எழுதவும், கையெழுத்திடவும் பயன்பட்டது. செத்த கடல் சுருள்கள் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது கி.மு 100 இல் எழுதியதாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பியர்கள் நாணல் போன்ற குழல்கள் கிடைக்காததால் தூவல் எழுதுகோலை வரவேற்றனர். செவில்லைச் சேர்ந்த கி. பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித இசிடோர் (St. Isidore of Seville) அவர்கள் எழுதி வைத்துள்ளதில், தூவல் எழுதுகோலைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. . தூவல் எழுதுகோல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்தன.

வெண்கலத்தால் ஆன எழுதுகோல் நுனி உடையது ஒன்று கி.பி 79 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது என்பற்கான சான்றுகோள் அழிந்து பட்ட பாம்ப்பை நகரில் கிடைத்துள்ளது.. 

சாமுவேல் பெப்பீசு என்பாரின் தன்வாழ்க்கைக் குறிப்பேட்டில் ஆகசட்டு 1663 ஆம் ஆண்டிற்கான பதிவில் இது பற்றிய குறிப்பொன்றும் உள்ளது. 1803 இல் மாழையால் (உலோகத்தால்) ஆன எழுதுகோல் நுனிக்கான காப்புரிமம் ஒன்று உள்ளது ஆனால் விற்பனை செய்யவில்ல்லை.

1822இல் பர்மிங்காம் என்னும் இடத்தைச் சேர்ந்த சான் மிட்செல் (John Mitchell) மாழை நுனி உடைய எழுதுகோல்களை அதிக எண்ணிக்கையில் படைத்து விற்பனை செய்தார்.

ஊற்று எழுதுகோல் (fountain pen) 

ஊற்று எழுதுகோல் (fountain pen) என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஓர் எழுதுகோல் ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் நனை எழுதுகோல் (Dip Pen) ஆகும். நனை எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை மையில் நனைக்கவேண்டி இருந்தது. இது சிரமத்தைத் தந்ததால் 1884ஆம் ஆண்டில் எல். ஈ. வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்தப் புதிய முறையைக் கண்டுபிடித்தார். இதில் உள்ள குப்பியில் நீரை ஆதாரமாகக் கொண்ட மையை நிரப்பி அங்கிருந்து மையை எழுதுகோலின் முனைக்குக் கொண்டுவருவது தான் இந்தப் புதிய முறை. இதன் முனையில் உலோகத்தாலான முள் (Nib) பொருத்தப்பட்டிருந்தது.

17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலியால் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பே குமிழ்முனைப் பேனா எனும் கருத்தும் காணப்படுகின்றது. குமிழ்முனைப் பேனாவுக்கான முதலாவது காப்புரிமம் 1888 அக்டோபர் 30 ஆம் நாள் ஜோன் லோட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு தோல் தயாரிப்பாளர். இத்தோற்பொருட்களில் எழுதுவதற்கு ஊற்றுமைப் பேனாக்கள் பொருத்தமற்றவையாயிருந்ததால் இதனைப் பயன்படுத்தினார்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் மையூற்றுப் பேனாவில் எழுதிய எழுத்துக்கள் தண்ணீர்பட்டு அழிந்து போனதால் அதன் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் பால் பாயிண்ட் பேனா.  

1938ஆம் ஆண்டு, முதன்முதலில் Laszio Biro என்ற பத்திரிகையாளரால் முதன்முதலில் பால் பாயின்ட் பேனாவை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதன் காப்புரிமை John Loud என்பவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் காலத்திற்கு தக்கவாறு பல்வேறு பேனாக்கள் மக்களிடையே புழக்கத்திற்கு வந்தது. கண்ணாடி, பிளாஸ்டிக், மற்றும் அலுமினியத் தாள்களின் மேல் எழுதுவதற்கு ஏதுவாக பிரத்யேகமாகத் தாயாரிக்கப்பட்டதுதான் மார்க்கர் பேனா. 

ஏற்கெனவே அச்சிடப்பட்ட வரிகளில் முக்கிய வரிகளையோ அல்லது முக்கிய வார்த்தைகளையோ வண்ண மை கொண்டு மிகைப்படுத்திக் காட்ட ஹைலைட்டர் பேனா, அடிக்கோடிட்டுக் காட்ட ஸ்டிக் பேனா, வெள்ளை நிற போர்டுகளில் எழுத மார்க்கர் பேனா, அழகாக எழுத ஜெல் பேனா, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்ட ஸ்கெட்ச் பேனா என ஏராளமான பேனாக்கள் தற்போது புழக்கத்தில் உள்ளது.

எழுத்தாற்றலை ஊக்குவித்த நபி (ஸல்) அவர்கள்...

நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தடைந்ததும் மதீனாவில் வாழ்ந்து வந்த யூத, கிருஸ்துவ குழுக்களுடன் ஒப்பந்தம் போட்டது. ஹுதைபிய்யா ஒப்பந்தம், அருகில் இருந்த தூரத்தில் இருந்த மன்னர்களுக்கும், குறு, சிறு நில அரசர்களுக்கு கடிதம் எழுதியதும் எழுதுவதின் மீதான ஆர்வத்தை நபித்தோழர்கள் இடையே ஏற்படுத்தியது. 

عن ابن عباس قال: "لم يكن لأناسٍ من أسارى بدرٍ فداءٌ، فجعَل رسولُ الله - صلى الله عليه وسلم - فداءَهم أن يعلِّموا أولاد الأنصار الكتابة"

وبحسبك أن تذكر أثر غزوة بدر الكبرى في تعليم صبيان المدينة، ونشر العلم بين ربوعها، حينما أذن الرسول عليه الصلاة والسلام لأسرى بدر من المشركين بأن يفدي كل كاتب منهم نفسه بتعليم عشرة من صبيان المسلمين القراءة والكتابة.

பத்ர் யுத்தம் முடிந்து கைதிகளாக பிடிக்கப்பட்ட மக்காவாசிகளை நபி ஸல் அவர்கள் ஒரு கைதி மதீனாவின் பத்து சிறுவர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுத் தர வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ( நூல்: பைஹகீ )

وقد أجاز النبيُّ - صلى الله عليه وسلم - الكتابةَ عنه صراحة؛ فعن أبي هريرة أنه عام فتح مكة قتَلت خزاعةُ رجلاً من بني ليث بقتيل لهم في الجاهلية؛ الحديث.. وفيه: "فقام رجلٌ مِن أهل اليمن، يقال له: أبو شاه، فقال: اكتُبْ لي يا رسول الله، فقال رسول الله - صلى الله عليه وسلم -: ((اكتبوا لأبي شاهٍ))؛

நபி (ஸல்) அவர்கள் இடைப்பட்ட காலத்தில் ஹதீஸ்களை எழுதுவதற்கு தடை விதித்தார்கள். குர்ஆனோடு ஹதீஸும் கலந்து விடக் கூடாது என்பதற்காக. பின்னர் அந்த தடையை நீக்கியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி யமனைச் சேர்ந்த அபூ ஷாஹ் என்பவர் நபி ஸல் அவர்களிடம் சபையில் சொல்லப்பட்ட ஒரு செய்தியை தமக்கு எழுதித் தருமாறு கோரினார். அப்போது நபி ஸல் அவர்கள் "அவருக்கு எழுதி கொடுங்கள்" என்று கூறினார்கள். ( பைஹகீ )

فعن مجاهدٍ والمغيرةِ بن حكيم عن أبي هريرة، قالا: سمعناه يقول: "ما كان أحدٌ أعلمَ بحديث رسول الله - صلى الله عليه وسلم - مني، إلا ما كان من عبدالله بن عمرو؛ فإنه كان يكتُبُه بيده، ويَعيه بقلبه، وكنت أعيه بقلبي ولا أكتُب بيدي، واستأذن رسول الله - صلى الله عليه وسلم - في الكتابة عنه فأذن له"،

மேலும், ஒரு சந்தர்ப்பத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் முஜாஹித் மற்றும் முகீரா இப்னு ஹகீம் (ரஹ்) ஆகியோர் கேட்ட கேள்விக்கு பதில் தரும் போது "நபி ஸல் அவர்களிடம் இருந்து நான் அதிகமான நபிமொழிகளை அறிவிக்க காரணம் நான் நபி ஸல் அவர்கள் கூறியதை என் உள்ளத்தில் பதிய வைத்து கொள்வேன். எனக்கு அடுத்த படியாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரலி அவர்கள் அதிகம் நபிமொழிகளை அறிவிக்கின்றார்கள். காரணம் அவர் இரண்டு திறன் கொண்டவர் மனனமும் செய்வார். நபி ஸல் அவர்கள் சொன்னதை எழுதியும் வைத்துக் கொள்வார். ( நூல்: புகாரி )

 

 

நபி ஸல் அவர்கள் வாழும் காலத்தில் குர்ஆன் வசனங்களை எழுதும் பணியில் நபி ஸல் அவர்கள் நியமனம் செய்த எழுத்தர்கள்.

لقد كان لكتابة القرآن بين يدي النبي كتاب من الصحابة معروفون بالدين الكامل والأمانة الفائقة والعقل الراجح، والتثبت البالغ، كما كانوا معروفين بالحذق في الهجاء والكتابة، وقد اشتهر منهم بكتابته: (1) أبو بكر، (2) وعمر، (3) وعثمان، (4) وعلي، (5) وعبد الله بن سعد بن أبي سرح، وهو أول من كتب له بمكة، (6) والزبير بن العوام، (7) ومعاوية، (8)، وخالد، (9) وأبان ابن سعيد بن العاص بن أمية، (10) وأبي بن كعب، وهو أول من كتب له بالمدينة، (11) وزيد بن ثابت، وهو أكثرهم كتابة بالمدينة، (12)، وشرحبيل بن حسنة، (13) وعبد الله ابن رواحة (14) وعمرو بن العاص، (15) وخالد بن الوليد، (16) والأرقم ابن أبي الأرقم المخزومي، (17) وثابت بن قيس، (18) وعبد الله بن الأرقم الزهري، (19) وحنظلة بن الربيع الأسدي، (20) ومعيقيب بن أبي فاطمة في آخرين، وقد كان هؤلاء يكتبون ما يمليه عليهم الرسول، ويرشدهم إلى كتابته من غير أن يزيدوا فيه حرفا، أو ينقصوا منه حرفا، فقد روى أحمد، وأصحاب السنن الثلاثة، وصححه ابن حبان

1 - 4 நான்கு கலீஃபாக்கள். 5. அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபீ ஸரஹ், (மக்காவின் முதல் எழுத்தாளர்) 6. ஜுபைர் இப்னுல் அவ்வாம், 7.முஆவியா,8. காலித், 9. அபான் இப்னு ஸயீத், 10. உபை இப்னு கஅப், ( மதீனாவின் முதல் எழுத்தாளர்) 11. ஜைத் இப்னு ஸாபித், 12. ஷுர்ஹபீல் இப்னு ஹஸ்னா, 13. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, 14. அம்ர் இப்னுல் ஆஸ், 15.காலித் இப்னு வலீத், 16. அர்கம் இப்னுல் அபில் அர்கம், 17, ஸாபித் இப்னு கைஸ், 18. அப்துல்லாஹ் இப்னு அர்கம், 19. ஹன்ளலா இப்னு ரபீஉ, 20. முஐகீப் இப்னு அபீ ஃபாத்திமா ( ரலியல்லாஹு அன்ஹும் ) இவர்கள் அனைவரும் மாநபி ஸல் அவர்கள் கூறியதை அப்படியே எழுதி பாதுகாத்தவர்கள். நபி ஸல் அவர்கள் சொன்னதை விட ஒரு எழுத்தைக்  கூட்டியோ அல்லது ஒரு எழுத்தைக் குறைத்தோ எழுதிட வில்லை" என இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்).

பின்நாளில் மதீனாவின் பெரும்பாலான நபித்தோழர்கள் எழுத்தாற்றல் கொண்டவர்களாக மிளிர்ந்தார்கள்.

ஹிஜ்ரி ஆண்டின் அவசியமே நபிதோழர்களிடையே இருந்த எழுத்தாற்றலால் தான் இந்த உம்மத்திற்கு கிடைத்தது என்றால் அது மிகையாகாது.

 

فقد اكتظ كتاب الضحاك بن مزاحم المتوفى سنة 105هـ بطلابه، حتى اضطر إلى أن يطوف على حماره، ليشرف على طلاب مكتبه، الذين بلغ عددهم ثلاثة آلاف صبي والعجيب أن الضحاك كان لايأخذ أجرًا على عمله، بل ينهض بعملية التعليم تطوعًا واختيارًا

தஃப்ஸீர் கலையின் மாமேதையும் மிகச் சிறந்த தபவுத்தாபியீன்களில் ஒருவரான இமாம் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் 3000 மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியை போதித்தார்களாம். மேலும், அவர்கள் எழுத்தாற்றலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார்கள் என்று வரலாறு சொல்கிறது.

எழுத்தாற்றல்...

எழுத்தாற்றல் என்பது ஒரு வரம். அந்த வரம் பெற்றவர்கள் கடின உழைப்புக்கு அஞ்சக்கூடாது. அது ஒரு வேலை என்று நினைக்காமல் ஒரு தவமாய் நினைத்து செயல்பட வேண்டும். நிறைய படிப்பதும், சமுதாயத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும், அவலங்களையும் உற்று பார்த்து அதற்கு தீர்வு காணும் வகையில் படைப்புகளை எழுதுவதும் ஒரு எழுத்தாளரின் கடமை.

மேலும், எழுத்துலகில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் கட்டாயத்தை நாம் உணர வேண்டும். 

எழுத்துலகம் எழுச்சியடைந்த  1950  களிலிருந்து 1990 வரையிலான காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கெதிரான மறைத்தல்கள், திரித்தல்கள் அனைத்தும் இக்காலகட்டங்களில் சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு, அவற்றால் மக்கள் மனதில் இஸ்லாத்தைக் குறித்தத் தவறான எண்ணங்கள் உறுதியாகப் பதியும் விதத்தில் எழுத்துலகைக் கொண்டு எதிரிகள் சாதித்து விட்டதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஒரு பின்லாடனின் பெயரைக் கூறி ஆப்கான் அரசையும் இல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைக் கூறி ஈராக் அரசையும் வீழ்த்தி, தொடர்ந்து சிரியா, மியான்மார் என்று லட்சகணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடைமையையும் சீரழித்து, முஸ்லிம்களின் வாழ்விடங்களை சின்னாபின்னமாக்கி,  அடுத்து எந்த முஸ்லிம் நாட்டின் மீது அட்டூழியத்தை அவிழ்த்து விடலாம் என ஆய்ந்து கொண்டிருக்கும் வல்லரசுகளுக்கு, அவைகள் செய்யும் அட்டூழியத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரண்டு நிறுத்தாததன் காரணம் ஊடகங்களால் விதைக்கப் பட்ட இஸ்லாத்தைக் குறித்த எதிர்மறைத் திரிபுச் சிந்தனைகளே.

"ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்" எனக் கூறுவதன் அர்த்தம் நடைமுறையில் எதிர்மறையாகச் சாதிக்கப்பட்டு இன்று உலக அரங்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமுதாயம்.

இந்நிலையிலிருந்துச் சமுதாயத்தை மீட்டு எடுப்பதும் அதே பேனா முனையால் மட்டுமே சாத்தியமாகும் என்பதைச் சமுதாயச் சிந்தனையுள்ள அனைவரும் உணர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த உண்மையை உணர்ந்ததால் தான் இன்று இந்த உம்மத்திடம் அறிவுப் பொக்கிஷங்களான திருக்குர்ஆன், நபிமொழி, ஃப்க்ஹ், இலக்கணம், இலக்கியம், வரலாறு என கோடிக்கணக்கான நூல்கள் இருக்கின்றன.

தாத்தாரியர்கள் நம்மை அழிப்பதை விட நம்முடைய லட்சக்கணக்கான நூல்களை அழிப்பதில் தான் கவனம் செலுத்தினர். ஏனெனில், பேனா மட்டும் தான் காலத்திற்கும் நின்று பேசும், காலத்தை கடந்தும் பேசும் அபார சக்தி கொண்டது.

அந்த வகையில் இதுவரை நம் முன்னோர்கள்  இரண்டு இலட்சம் தப்ஸீர்களை இந்த உம்மத்திற்கு எழுதிக் குவித்துள்ளனர், இந்த தஃப்ஸீர்களில், மற்றும் மொழி பெயர்ப்பகளில் 20,000 விளக்கவுரைகளுக்குக் குறையாமல் திரிப்போலியிலுள்ள நூல்நிலையத்தில் இருப்பதாக டாக்டர் அர்னால்ட் கூறுகிறார்.

ஆங்கிலம் இலத்தீன், ஜெர்மனி டச்சு ,பிரஞ்சு,ரஷ்யா ஆகிய மொழிகளிலெல்லாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய மொழிகளில் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள்: 36 ஐரோப்பிய மொழிகளில் 374 திருக்குர்ஆன் மொழபெயர்ப்புகள் 60 ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டன. இப்போது இவை இன்னும் இரண்டு மடங்கு அதிகமாகவே பெருகியிருக்கும்.

1. ஆங்கிலத்தில் 85 மொழி பெயர்ப்புகள்

2. ஜெர்மனியில் 46 மொழி பெயர்ப்புகள்

3. இலத்தீனில் 43 மொழி பெயர்ப்புகள்

4. பிரஞ்சில் 36 மொழி பெயர்ப்புகள்

5. துருக்கியில் 33 மொழி பெயர்ப்புகள்

6. ஸ்பானிஷ் 19 மொழி பெயர்ப்புகள்

இத்தகவலை மிகச்சிறந்த ஆய்வாளர் டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள் 1970ல் வெளியிட்டுள்ளார்கள். இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுடைய எழுத்தாற்றலைக் கொண்டு இந்த தீனுக்கும், இந்த உம்மத்துக்கும் நம்முடைய அறிஞர்கள், மேன்மக்கள் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள்…

நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்ந்து, மறைந்த ஹதீஸ் கலைத் துறையில் சிறந்து விளங்கிய இமாம்களில் ஒருவரான அபூஹாத்தம் என்றும் இப்னு ஹிப்பான் (ரஹ்) என்றும் அறியப்படுகின்ற முஹம்மத் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை பிரமிக்க வைக்கிற அளவிற்கான ஆச்சர்யங்களைக் கொண்டதாகும்.

قال ابن العماد

 قلت وأكثر نقاد الحديث على أن صحيحه أصح من سنن ابن ماجه. والله أعلم

نشأ الإمامُ ابنُ حبان في مدينة بُست، وأمضى فيه طفولته وأوائل شبابه، ثم غادرها إلا أنه عاد إليها في آخر عمره، وتوفي فيها. وكان الإمام ابن حبان من الأئمة الذين جمعوا بين الحديث والفقهوقد ذكر العلماء أنَّ الإمام ابن حبان من المجتهدين، قال الإمام ابن كثير (ت 774هـ): "أحد الحفَّاظ الكبار المصَنِّفين المجتَهِدين، رحلَ إلى البلدان، وسمعَ الكثير من المشايخ..."

وكان الإمام ابن حبان يَعيب على المحدِّثين الذين يهتمُّون بالإسناد فقط، دون الاهتمام بالمتون، كما كان يعيب على الفقهاء الذين يهتمُّون بالمتون فقط، دون الاهتمام بطرق الأحاديث. وقد أشارَ إلى هذا الموضوع في مقدمة (صحيحه)، وكادَ ينفرِد بمذهب خاص فيما يتعلَّق بزيادة الثقة، حيث اشترطَ في المحدِّث الثقة الذي تُقبَل منه الزيادة في المتن أن يكون فقيهًا.

 ومما اشتُهِرَ فيه الإمام ابن حبان هو الرحلة في طلب الحديث النبوي، حيث إنه قد استغرق قرابة أربعين سنة في رحلاته إلى أن رجع إلى وطنه بُست أخيرًا. وقد أشارَ الإمامُ ابنُ حبان إلى كثرة رحلاتِه قائلًا: "ولعلَّنا قد كتبنا عن أكثر من ألفَي شيخ من إسبيجاب إلى الإسكندرية"، و«إسبيجاب» إقليمٌ يقعُ أقصى الشرق الإسلامي في ذلك الوقت، وكانت ثغرًا من أشهر ثغور الإسلام على حدود القبائل التركية التي لم تدخل بعد في الإسلام، قال المقدسيُّ (ت نحو 380هـ): "ويُقال: إنَّ بها ألفًا وسبعمائة رباط، وهي ثغر جليل ودار جهاد"، وكان هذه الأربطةُ للمجاهدين المتطوِّعين، تَشترِك في بنائها مدُن ما وراء النهر قاطبة. كما أنّ الإسكندرية من أشهر مدن مصر، والتي كانت آخر مدينة يُرحَل إليها من جهة المغرب الإسلامي، قال الشيخ شعيب الأرنؤوط في مقدمة تحقيقه لصحيح ابن حبان: "يريد من قوله هذا أن يبيِّن لنا أنه رحل إلى أقصى ما تمكن الرحلة إليه لطلب العلم في عصره... ولا يسعُنا إزاء هذا العدد الضخم من الشيوخ في تلك الرقعة الواسعة من الأرض إلا أن نُرَدِّد مع الذهبي قولَه: هكذا فلتكن الهِمَم". فرحلات الإمام ابن حبان شملَت أقصى الشرق وأقصى الغرب في البلاد الإسلامية التي كان يُرحَل إليها في ذلك الوقت.

மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் ஹிஜ்ரி – 273 –இல் பிறந்து, நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்ந்து ஹிஜ்ரி – 354 ஷவ்வால் பிறை 22 ஜும்ஆ தினத்தின் இரவன்று இப்பூவுலகை விட்டும் பிரிந்து சென்றார்கள்.

 

ஏறத்தாழ 81 ஆண்டு காலம் உலகில் வாழும் பாக்யம் பெற்ற இமாம் அவர்கள் மகத்தான வாழ்க்கையை வாழ்ந்து சென்றார்கள்.

فإن ابن حبان ترجم له ابن هبة الله في كتابه تاريخ مدينة دمشق وذكر فضلها وتسمية من حلها من الأماثل فقال فيه

محمد بن حبان بن أحمد بن حبان بن معاذ بن معبد بن سعيد بن شهيد ويقال ابن معبد بن هدبة بن مرة بن سعد بن يزيد بن مرة بن يزيد بن عبد الله ابن دارم بن مالك بن حنظلة بن مالك بن زيد مناة بن تميم بن مر بن أد ابن طابخة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان أبو حاتم التميمي البستي أحد الأئمة الرحالين والمصنفين المحسنين

இமாமவர்களின் வம்சத் தொடர் பிரபல்யமான அரபுக் கிளையான அத்னான் கிளையின் தமீமீ கோத்திரத்தாருடன் சென்று சேர்கிறது.

இன்றைய ஆஃப்கானிஸ்தான் நாட்டின் காபூல் மாகாணத்தின் ஸஜஸ்தான் நகரின் புஸ்த் எனும் கிராமத்தில் பிறந்த இமாம் அவர்கள் 10 வயதிற்குள்ளாகவே அரபு மொழியைக் கற்றுத் தேறினார்கள்.

தங்களின் 11 –ஆவது வயதில் மார்க்கக் கல்வியைத் தேடி புறப்பட்ட இமாம் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளாக 2000 ஷைகுகளிடம் இருந்து ஹதீஸ் மற்றும் வரலாறு, மருத்துவம், வானவியல் மற்றும் விண்வெளியியல், தர்க்கம் மற்றும் ஃபிக்ஹ், அரபு மொழியியல் மற்றும் இலக்கணம் ஆகியவைகளைக் கற்றுத் தேறி தங்களது 50 –ஆவது வயதில் அன்றைய அப்பாஸிய கலீஃபாவான அமீர் முளஃப்ஃபர் இப்னு அஹ்மத் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஸமர்கந்த் மற்றும் நஸா ஆகிய பகுதியின் தலைமை காழியாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

ஆஃப்கனில் இருந்து கிழக்கில் இருக்கிற, ஆஃப்கனில் இருந்து மேற்கிலிருக்கிற அனைத்து நாடுகளுக்கும் மார்க்கக் கல்வியைத் தேடி பயணம் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

ஹதீஸ்கலையை பிரபல்யமான இமாம் நஸாயீ (ரஹ்), இப்னு குஸைமா (ரஹ்) ஆகியோரிடமிருந்து கற்றார்கள்.

பிரபல்யமான ஹதீஸ்கலை வல்லுனர்களான இமாம் தாரகுத்னீ, இமாம் அபூயஃலா, இமாம் இப்னு முன்தஹ், ( ரஹ் அலைஹிம் ) ஆகியோரின் ஹதீஸ் துறை ஆசிரியராகவும் திகழ்ந்தார்கள்.

قال الإدريسي:

 وكان أبو حاتم على قضاء سمرقند مدة طويلة وكان من فقهاء الدين وحفاظ الآثار والمشهورين في الأمصار والأقطار عالما بالطب والنجوم وفنون العلوم ألف المسند الصحيح والتاريخ والضعفاء والكتب الكثيرة في كل فن وفقه الناس بسمرقند

وبنى بها الأمير المظفر بن أحمد بن نصر بن أحمد بن سامان صفة لأهل العلم خصوصا لأهل الحديث ثم تحول أبو حاتم من سمرقند إلى بست ومات بها

 

ஸமர்கந்தில் கலீஃபா அவர்கள் ஹதீஸ் துறைக்கென்று கட்டிக் கொடுத்த மதரஸாவில் ஹதீஸ் பாடங்களை நடத்தினார்கள்.

தலைமை காழியாகவும், ஆசிசியராகவும் இருந்து கொண்டு ஸஹீஹ் இப்னு ஹிப்பான் எனும் ஹதீஸ் நூல் உட்பட ஏராளமான வரலாற்று, ஃபிக்ஹ், ஹதீஸ் துறை சார்ந்த நூற்களை எழுதி இருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக அவர்கள் எழுதிய 17 நூற்கள் மேற்கூறப்பட்ட அத்துனை துறை சார்ந்ததிலும் மிகச் சிறந்த நூற்களாகவும், அரிய பல கருத்துக்களைத் தாங்கி நிற்பதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

இந்த 17- நூற்களில் 6 – நூற்கள் 10 பாகங்களையும், 2 நூற்கள் 20 பாகங்களையும், 3 நூற்கள் 3 பாகங்களையும் கொண்டதாகும்.

20 பாகங்களைக் கொண்ட 2 நூற்களும் மக்கா, மதீனாவின் அறிஞர்கள், மற்றும் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஆகியோரின் தரத்தையும், வரலாற்றையும் எடுத்துக் கூறும் மகத்தான பொக்கிஷங்களாகும்.

40 ஆண்டுகால கல்விப் பயணத்தில் 2000 ஆசிரியர்களிடம் இருந்து பெற்ற கல்வியின் துணை கொண்டு ஆசிரியப்பணி மற்றும் நீதிபதிப்பணி ஆகியவற்றைச் செய்து கொண்டு இடையில் கிடைத்த நேரங்களைக் கொண்டு நூற்றுக் கணக்கான நூற்களை எழுதிக் குவித்து இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களின் வாழ்வு உண்மையில் உலகையே திரும்பிப்பார்க்க வைக்கும் வாழ்வே.

இத்தனைக்கும் இமாம் அவர்கள் வெறும் 30 ஆண்டுகளில் இத்தனை நூற்களை எழுதிக் குவித்து இருக்கின்றார்கள்.

இமாம் இப்னுல் ஹம்மாத் (ரஹ்) அவர்கள் ஸுனன் இப்னு மாஜாவை விட இப்னு ஹிப்பான் (ரஹ்) தொகுத்த ஸஹீஹ் இப்னு ஹிப்பான் நூலே மிகச் சிறந்த நூலாகும்.

 

அல்லாமா தகபீ (ரஹ்) அவர்கள் தங்களின் ஸியரு அஃலா மின் நுபலாவிலும், இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் பிதாயா வன் நிஹாயாவிலும், இப்னுல் அஸீர் (ரஹ்) அவர்கள் தங்களின் அல் காமில் ஃபித் தாரீஃகிலும் மிக அற்புதமாக இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களின் வாழ்வை பதிவு செய்திருக்கின்றார்கள்.

ஷாஃபீஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக அறியப்படும் இமாம் அவர்கள் ஃபிக்ஹ் துறையிலும் மிகச் சிறந்து விளங்கி இருக்கின்றார்கள்.

இமாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த எந்த அறிஞரும் ஹதீஸ் மற்றும் கல்வித் துறையில் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைப் போன்று சாதித்ததில்லை என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தலை சிறந்த அறிஞர்களின் மாணவராகவும், தலை சிறந்த இமாம்களின் ஆசிரியராகத் திகழ்ந்த இமாம் முஹம்மத் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களின் சொந்த ஊரான புஸ்த்திலேயே இவ்வுலகை விட்டுப் பிரிந்து, புஸ்த்திலேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள்.

( நூற்கள்: அல்பிதாயா அன் நிஹாயா, அல் காமில் ஃபித்தாரீஃக், ஸியரு அஃலா மின் நுபலா )

No comments:

Post a Comment