Sunday, 16 April 2023

நேர்மையாக வியாபாரம் செய்வோம்!!!

 

நேர்மையாக வியாபாரம் செய்வோம்!!!

ரமழான் – (1444 – 2023) – தராவீஹ் சிந்தனை:- 26.


இஸ்லாமிய வாழ்வென்பது முஆஷராத், முஆமலாத், இபாதாத், ஜினாயாத், ஹுதூதாத் என மனித வாழ்க்கையின் சகல துறை சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி வாழ்வதில் அமைந்துள்ளது.

இபாதாத் எனும் வணக்க, வழிபாடுகள் தொடர்பான வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் சறுகுதல் என்பது அவனோடும், அவனைப்படைத்த ரப்போடும் தொடர்புடையதாகும். அதில் ஏற்படும் எவ்வித பிழைகளுக்கும் அவனுடைய ரப்பு அவனை மன்னிக்கலாம். அல்லது தண்டிக்கலாம்.

ஆனால், முஆஷராத், முஆமலாத் தொடர்பான வாழ்க்கையில் ஒரு மனிதன் அவன் வாழும் சமூகத்துடனும் தொடர்புடையவனாக இருக்கின்றான். இதில் சறுகுதல் ஏற்படாமல் கவனமாக தன்னுடைய வாழ்க்கையை அவன் அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவன் இவ்வுலகிலும், நாளை மறுமையிலும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.

அந்த வகையில் இஸ்லாமிய வாழ்வியலில் முஆமலாத் என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகவும், முக்கியத்துவம் பெற்றதாகவும் இருக்கின்றது.

முஆமலாத் என்பது கொடுக்கல்வாங்கல் மற்றும் வணிகம், வாணிபம், வியாபாரம், அடமானம், வாடகை, குத்தகை, கடன் போன்ற தொழிற்சார் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விரிவான ஒரு துறையாகும்.

எனவே தான் இஸ்லாம் இந்த முஆமலாத் தொடர்பான துறையில் பல்வேறு வழிகாட்டல்களை, நெறிமுறைகளை சட்டங்களாக, ஒழுங்குகளாக வரையறுத்துத் தந்துள்ளது.

உழைப்புக்கான வழிகள் பல இருக்கின்றது. அவைகளில் இஸ்லாம் வியாபாரத்திற்கென்று ஒரு தனியிடத்தை வழங்கி மகத்தான சலுகைகளையும், சட்டங்களையும் கொண்ட தனித்துறையாக இஸ்லாம் வியாபாரத்தை அலங்கரிக்கின்றது.

நரகத்திலிருந்து ஒரு மனிதனை காப்பாற்றும் வழிகளைச் சொல்லவரும் ஓரிடத்தில் அல்லாஹ் அந்த வழிகளைதிஜாரத்வியாபாரம்என்று வர்ணனை செய்வது வியாபாரத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ

ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

  تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். ( அல்குர்ஆன்: 61: 11,12 )

அதே போன்று உண்மையாக, நேர்மையாக வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி நாளை மறுமையில் மனிதர்களிலேயே புனிதர்களான நபிமார்களுடன் சுவனத்தில் வீற்றிருப்பார் என்று அடையாளப்படுத்துகின்றது.

حَدَّثَنَا ‏ ‏هَنَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَبِيصَةُ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ

உண்­மை­யான நம்­பிக்­கை­யான வியா­பாரி நபி­மார்கள், உண்­மை­யா­ளர்கள், ஷஹீத்­க­ளுடன் இருப்பார்.என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( அறி­விப்­பவர்: அபூ சஈத் (ரலி), நூல்: ஸுனன் அல்-­திர்­மிதி )

இஸ்லாம் ஒரு முஸ்லிம் எதைச் செய்வதையும் தடுப்பதில்லை. அவன் எதைச் செய்தாலும் இந்த இரண்டு அடிப்படையில் இரண்டும் பேணப்படுகின்ற வரை. அந்த அடிப்படை தான் ஹலால் – ஹராம். அதே பொதுவிதியை இந்த வியாபாரத்திற்கும் விதியாக அமைத்துள்ளது.

எனவே, வியாபாரத்தில் ஹலால் – ஹராம் பேணுதல் என்பது மிகவும் முக்கியமாகும்.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட 83 வது அத்தியாயமான அல் முதஃப்ஃபிஃபீன் சூராவின் முதல் 5 வசனங்களில் அல்லாஹ் ஹராமான வழியில் வியாபாரம் செய்த ஒரு வியாபாரிக்கு நாளை மறுமையில் ஏற்படும் கேட்டைப் பற்றி விமர்சிக்கின்றான்.

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4) لِيَوْمٍ عَظِيمٍ (5) يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ

அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள். ( அல்குர்ஆன்: 83: 1-6 )

இந்த ويل என்ற வாசகத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பயன்படுத்தக்கூடிய இடங்களைப் பாருங்கள்.

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். ( அல்குர்ஆன்: 107: 4-5 )

 

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். ( அல்குர்ஆன்: 104: 1 )

வேதத்தில் மோசடி செய்த யூதர்கள் மக்களை குறை கூறி, புறம் பேசி திரிந்திக் கொண்டிருக்கக்கூடிய அந்த மக்களுக்கு உள்ள தண்டனையை,யார் அளவையில் நிறுவையில் குறைவு செய்கிறார்களோ அவர்களுக்கும் அவர்களுக்கும் கூறுகிறான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ويل -என்ற இந்த வார்த்தைக்கு விளக்கம் குறிப்பிடுகிறார்கள்: ويل  என்பது நரகத்தில் உள்ள ஒரு மோசமான இடம். அந்த இடத்தைப் போன்று யா அல்லாஹ்! எங்களை ஆக்கி விடாதே! என்று நரகத்தின் மற்ற பகுதிகளெல்லாம் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடுகின்றன.

அப்படி என்றால், அந்த இடத்தில் உள்ள தண்டனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த தண்டனை, யார் அளந்து கொடுக்கும் பொழுது, நிறுத்துக் கொடுக்கும் பொழுது குறைவு செய்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும்.

وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

மேலும், நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே, நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும். ( அல்குர்ஆன்: 17: 35 )

இந்த இடத்தில் அல்லாஹ் தஆலா தவ்ஹீதை பற்றி கூறுகிறான். தனக்கு இணை வைக்காதே! நீ முழுமையாக என்னை மட்டுமே வணங்கு என்று சொல்லிக் கொண்டு வருகின்ற வசனங்களின் தொடரில் வியாபாரத்தை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ

ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். ( அல்குர்ஆன்: 55: 9 )

ஹலால்ஹராம்..

ஒரு முஸ்லிம் உடைய வாழ்வில் ஹலால்ஹராம் தான் அவன் எத்தகைய முஸ்லிம் என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் ஆகும். மேலும், ஹலால்ஹராம் தான் அவனுடைய முழு வாழ்வையும் அர்த்தமுள்ளதாகவும், உயிர் உள்ளதாகவும் ஆக்குகின்றன. அந்த வகையில் வியாபாரத்தில் ஹலால்ஹராம் என்பது மிகவும் அவசியமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். ( நூல். புகாரி  2059 )

இன்று நம் நிலை இவ்வாறுதான் இருக்கிறது எப்படியோ பணம் வந்தால் சரி.

கொஞ்சம் ஹராம் கலந்திருந்தாலும் தொழுகை கூடாது

وقال صلى الله عليه وسلم: " من اشترى ثوباً بعشرة دراهم وفي ثمنه درهم حرام لم يقبل الله صلاته مادام عليه منه شيء "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பத்து திர்ஹத்துக்கு வாங்கிய ஆடை.அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும் அது இருக்கும் வரை தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

ஹராம் கலந்திருந்தால் தர்மம் கூடாது..

وقال صلى الله عليه وسلم: من اكتسب مالاً من حرام فإن تصدق به لم يقبل منه
وقال صلى الله عليه وسلم: " من أصاب مالاً من مأثم فوصل به رحماً أو تصدق به أو أنفقه في سبيل الله جمع الله ذلك جميعاً ثم قذفه في النار

ஒருவர் ஹராமான வழியில் சம்பாதித்து அந்த பொருளைக் கொண்டு, உறவைச் சேர்ந்து (உறவுகளுக்கு கொடுத்து) வாழ்கின்றார், மேலும் தர்மம் செய்கின்றார், அல்லது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கின்றார். அல்லாஹ் அத்தர்மங்கள் அனைத்துயும், அவருடன் ஒன்று சேர்த்து நரகில் வீசி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

துஆ ஏற்றுக்கொள்ளப்படாது..

ابن عباس قال: تُليت هذه الآية عند النبي صلى الله عليه وسلم: { يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الأَرْضِ حَلالا طَيِّبًا } فقام سعد بن أبي وقاص، فقال: يا رسول الله، ادع الله أن يجعلني مستجاب الدعوة، فقال. "يا سعد، أطب مطعمك تكن مستجاب الدعوة، والذي نفس محمد بيده، إن الرجل ليَقْذفُ اللقمة الحرام في جَوْفه ما يُتَقبَّل منه أربعين يومًا، وأيّما عبد نبت لحمه من السُّحْت والربا فالنار أولى به"

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். ( நூல்: தஃப்சீர் இப்னு கஸீர் )

ஹஜ், உம்ரா ஏற்றுக் கொள்ளப்படாது

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ السَّقَطِيُّ قَالَ: نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ الْيَمَامِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَرَجَ الرَّجُلُ حَاجًّا بِنَفَقَةٍ طَيِّبَةٍ، وَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، فَنَادَى: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، زَادُكَ حَلَالٌ، وَرَاحِلَتُكَ حَلَالٌ، وَحَجُّكُ مَبْرُورٌ غَيْرُ مَأْزُورٍ، وَإِذَا خَرَجَ بِالنَّفَقَةِ الْخَبِيثَةِ، فَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، فَنَادَى: لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ: لَا لَبَّيْكَ وَلَا سَعْدَيْكَ، زَادُكَ حَرَامٌ وَنَفَقَتُكَ حَرَامٌ، وَحَجُّكَ غَيْرُ مَبْرُورٍ» (المعجم الأوسط -5228)

ஹஜ்ஜிற்கு செல்லக்கூடிய, உம்ராவிற்கு செல்லக்கூடிய ஒரு புனித பயணி. அவர் முதல் முதலாக தனது இஹ்ராமை அணிந்து மீக்காதில் இருந்து தல்பியா ஓதுவார். அந்த தல்பியாவில் அவர் கூறுவார்:-ரப்பே! நான் உன்னிடத்தில் வந்துவிட்டேன். உனக்கு இணை துணை இல்லை என்று அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு உம்ரா, ஹஜ்ஜுடைய பயணிகள் அவர்கள் தல்பியா கூறும்பொழுது அல்லாஹ்வின் புறத்திலிருந்து பதில் சொல்லப்படுகிறது. அப்படி பதில் சொல்லப்படும்பொழுது,அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} குறிப்பிட்டார்கள்.

யாருடைய வருமானம் ஹலாலாக இருந்து, அந்த ஹலாலான வருவாயிலிருந்து ஹஜ், உம்ராவுக்கு வருகிறாரோ அவர் தல்பியா கூறும்பொழுது சொல்லப்படும்;உனது தல்பியா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, உனது வருகை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்பதாக. யாருடைய வருமானம் ஹராமாக இருந்து, தடுக்கப்பட்ட வழிகளில் இருந்து, அல்லாஹ் அனுமதிக்காத வழியில் சம்பாதித்த சம்பாத்தியங்களிலிருந்து அவர் ஹஜ், உம்ராவிற்கு வந்திருந்தால் அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து சொல்லப்படும்;உன்னுடைய தல்பியா நிராகரிக்கப்பட்டுவிட்டது, உனது தல்பியா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதாக.

அறிவிப்பாளர் :அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் அவ்சத், எண் : 5228.

உழைப்புக்கும், சுயமரியாதைக்கும் இஸ்லாம் மதிப்பளிக்கின்றது..

உழைத்து வாழ்வதும் அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு தம் தாய் தந்தையருக்கும், தனக்கும், தம் மனைவி, மக்களுக்கும் தம் குடும்பத்தாருக்கும் ஒருவன் செலவு செய்வதே சிறந்ததும், சுயமரியாதையும் ஆகும். இஸ்லாம் உயர்ந்து வாழ்வதையும், உயர்ந்த கரம் கொண்டவனாக வாழ்வதையும் விரும்புகின்றது தூண்டுகின்றது.

وقد ذكر الحافظ ابن عساكر في ترجمة داود، عليه والسلام، () من طريق إسحاق بن بشر -وفيه كلام-عن أبي إلياس، عن وهب بن مُنَبه ما مضمونه: أن داود، عليه السلام، كان يخرج متنكرًا، فيسأل الركبان عنه وعن سيرته، فلا يسأل أحدًا إلا أثنى عليه خيرًا في عبادته وسيرته ومعدلته، صلوات الله وسلامه عليه. قال وهب: حتى بعث الله مَلَكًا في صورة رجل، فلقيه داود فسأله كما كان يسأل غيره، فقال: هو خير الناس لنفسه ولأمته، إلا أن فيه خصلة لو لم تكن فيه كان كاملا قال: ما هي؟ قال: يأكل ويطعم عياله من مال المسلمين، يعني: بيت المال، فعند ذلك نصب داود، عليه السلام، إلى ربه في الدعاء أن يعلمه عملا بيده يستغني به ويغني به عياله، فألان له الحديد، وعلمه صنعة الدروع، فعمل الدرع () ، وهو أول مَنْ عملها، فقال الله: { أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ }

வஹ்ப் பின் முனப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:-

நபி தாவூத் (அலை) அவர்கள் தமது ஆட்சியின் போது தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் வெளியே வந்து தம்மைப் பற்றியும் தமது நடத்தை பற்றியும் பயணிகளிடம் விசாரிப்பது வழக்கம் அவ்வாறு அவர்கள் யாரிடம் விசாரித்தாலும் அந்த நபர் நபி தாவூது அலைஹி அவர்களின் வழிபாடு, நடத்தை, நீதி ஆகியவை தொடர்பாக பாராட்டாமல் இருந்ததில்லை.

இந்த நிலையில் ஒரு நாள் உயர்ந்தோன் அல்லாஹ் வானவர் ஒருவரை மனித உருவில் அனுப்பி வைத்தான்

அந்த வானவரை நபி தாவூத் (அலை) அவர்களை சந்தித்தார்கள் மற்றவர்களிடம் விசாரிப்பது போன்ற அவரிடமும் நபி தாவூது (அலை) அவர்கள் விசாரித்தார்கள்.

அதற்கு அவர் நபி தாவூத் (அலை) அவர்கள் மக்களிலேயே தமக்கும் தம் சமுதாயத்தாருக்கும் நல்லவர்கள்தான். இருந்தாலும் அவரிடம் ஒரே ஒரு பழக்கம் உள்ளது அது மட்டும் அவரிடம் இல்லை என்றால் அவர் முழுமை பெற்றவராகிவிடுவார் என்று பதிலளித்தார்கள்.

நபி தாவூது (அலை) அவர்கள் அது என்ன பழக்கம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த வானவர் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் ஆன உணவு ஆதாரத்தை முஸ்லிம்களின் நிதியான பொது நிதியிலிருந்தே அவர் பெறுகிறார் .

என்று பதிலளித்தார்.

அப்போது நபி தாவூத் (அலை) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன்னிறைவை தரும்படியான கைத்தொழில் ஒன்றை நமக்கு கற்றுத் தருமாறு துஆ கேட்டார்கள்.

அரசராக மற்றும் நபியாக இருந்தும் தனக்காக வேண்டி ஒரு தொழிலை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.

அதனை அடுத்து அல்லாஹ் நபி தாவூது (அலை) அவர்களுக்கு இரும்பை இலகுவாக்கி வைத்தான் கவச ஆடைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்தான் அதன்பின் கவச ஆடை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டார் கவச ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டவர் இவரே முதலாமவர். ( தஃப்சீர் இப்னு கஸீர் )

குர்ஆனில் ஏறத்தாழ 32 இடங்களில் ஜகாத் கொடுப்பதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது அல்லது ஆர்வமூட்டபட்டுள்ளது.

அதை போன்று 16 இடங்களில் சதகா செய்ய ஆர்வமூட்டபட்டுள்ளது, சதகா செய்பவரை புகழப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாற்றமாக குர்ஆனில் எந்த இடத்திலும் ஜகாத் வாங்க சொல்லியோ, சதகா வாங்க சொல்லியோ வரவில்லை. 

ஆனால், திருக்குர்ஆனில் சுமார் ஒன்பது இடங்களில் வணிகம், வியாபாரம் குறித்து பேசப்பட்டிருக்கின்றன. மத்யன்வாசிகள் என்ற சமூகத்திற்கு அளவையில் சரியாக அளந்துகொடுக்க வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்க ஷுஐப் எனும் இறைத்தூதரையே அந்த சமூக மக்களுக்கு இறைவன் அனுப்பி வழிகாட்டியிருக்கிறான் என்று வான்மறை சுட்டிக் காடுகின்றது.

இதிலிருந்து ஒரு மனிதன் வியாபாரத்தின் மூலமோ, அல்லது இஸ்லாம் ஆகுமாக்கிய ஏதாவது ஒரு வழியின் மூலமாகவோ பிறருக்கு கொடுக்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் வழிகாட்டுகிறது.

தீய வியாபாரிகளின் நிலை..

                நபி {ஸல்} கூறினார்கள்:

«ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ»

மூன்று வகையான மக்கள் மறுமை நாளில் அல்லாஹ் தஆலா அவர்களிடத்தில் பேச மாட்டான். அவர்களை பார்க்கமாட்டான், அவர்களை தூய்மை படுத்தமாட்டான். அவர்களுக்கு மிக வலி தரக்கூடிய வேதனை நிச்சயம்என்பதாக கூறிவிட்டு, இப்படிப்பட்டவர்கள் துர்பாக்கியவான்கள், நஷ்டமடைந்துவிட்டார்கள், கேவலப்பட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள்.

இத்தகைய துர்பாக்கியவான்கள் யார்? அல்லாஹ்வுடைய தூதரே! என்று தோழர்கள் கேட்டார்கள்.

அதற்கு நபி {ஸல்} கூறினார்கள்:கூறிய அந்த மூன்று நபர்களை பாருங்கள்.

«الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ»

1. தனது கீழ் ஆடையை கரண்டைக்கு கீழ் அணியக்கூடிய ஆண்கள். (அது பெருமையாக இருந்தாலும் சரி,அல்லது சாதாரணமாக இருந்தாலும் சரி. பெருமையாக அணிந்தால் இன்னும் பயங்கரமான தண்டனை இருக்கிறது.)

2.  தான் செய்த உதவியை உபகாரத்தை சொல்லிக் காட்டக்கூடியவர்.

3.  பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவர்.

அறிவிப்பாளர் : அபூதர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 106, 171.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ، رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّرِيقِ، فَمَنَعَهُ [ص:111] مِنَ ابْنِ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ، وَرَجُلٌ أَقَامَ سِلْعَتَهُ بَعْدَ العَصْرِ، فَقَالَ: وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ بِهَا كَذَا وَكَذَا، فَصَدَّقَهُ رَجُلٌ " ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] (صحيح البخاري- 2358

மூன்று மனிதர்களை அல்லாஹு தஆலா பார்க்கமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்தமாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.

ஒரு மனிதர், ஒரு பாதையில் அவருக்கென்று ஒரு வீடு இருக்கிறது அல்லது ஒரு நிலம் இருக்கிறது. அங்கே நீர் நிலை ஒன்று கிணறோ, ஆறோ அல்லது தொட்டியோ இருக்கிறது.

அந்த நீரிலிருந்து அவர் பயன்பெற்றுக் கொள்கிறார். மிச்சமாக தண்ணீர் இருக்கிறது. அந்த மிச்ச தண்ணீரை வழிப்போக்கர்கள் பருகுவதற்கோ, தங்களது பயணத்திற்கு எடுத்து செல்வதற்கோ அவர் அனுமதிக்க மறுக்கிறார். இவர் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் இறங்குகிறது.

இன்னொரு மனிதர், தன்னுடைய இமாம் மன்னரிடத்தில் பைஅத் செய்கிறார். அவரிடமிருந்து துன்யாவை அனுபவிப்பதற்காக, அந்த மன்னர் இவருக்கு துன்யாவின் செல்வங்களை கொடுத்தால் மன்னரைக் கொண்டு திருப்தியாக இருக்கிறான். துன்யாவின் செல்வங்களை மன்னர் இவருக்கு கொடுக்கவில்லை என்றால் தன்னுடைய பைஅத்தை முறித்துவிட்டு அந்த மன்னரை ஏச ஆரம்பித்து விடுகிறான்.

மூன்றாவது வகை மனிதன், அஸர் தொழுகைக்குப் பிறகு தன்னுடைய வியாபாரத்தை ஆரம்பிக்கிறார். ஆரம்பித்துவிட்டு சொல்கிறார்; எந்த அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக கூறுகிறேன். இந்த பொருளை இன்ன இன்ன விலை கொடுத்து தான் நான் வாங்கி வந்தேன் என்பதாக.

வாங்க வந்த மனிதன் அதை நம்பி, வாங்கிக் கொண்டு சென்றுவிடுகிறார். இவரையும் அல்லாஹ் மறுமையில் பார்க்கமாட்டான். இவரை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தமாட்டான். இவருக்கு மறுமையில் பயங்கரமான வலி தரக்கூடிய வேதனை இருக்கிறது என்பதை கூறிவிட்டு குர்ஆனுடைய வசனத்தை நபியவர்கள் ஓதிகாட்டினார்கள்.

إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.  (அல்குர்ஆன் 3 : 77) அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2358.

அரபு நாட்டில் செங்கடலுக்கு வடமேற்கு பகுதியில் மத்யன்என்ற பகுதி இருந்து வந்தது. இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அளவிலும், எடையிலும் பயங்கர பொருளாதார மோசடிகளைச் செய்து வந்தார்கள். அம்மக்களைத் திருத்துவதற்காக சுஐபு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர் உபதேசித்தார். அதை அம்மக்கள் கேட்கவில்லை. அவரைப் புறக்கணித்தனர். அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. இது பற்றி திருமறை குர்ஆனின் வசனங்களை (7: 85-92 வரை)க் காணலாம்.

فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ (91) الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ

 ஆகவே,அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது.அதனால்,அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர்.” (அல் குர்ஆன் 7:91)

ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். சுஐபைப் பொய்ப்பித்தவர்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். ( அல் குர்ஆன்: 7: 92 )

வியாபாரியும்… நுகர்வோரும்…

வியாபாரி மட்டும் தான் ஹலால் – ஹராம் பார்க்க வேண்டும். வியாபாரியிடம் பொருட்களை வாங்கும் நுகர்வோர் ஹலால் – ஹராம் பார்க்கத் தேவையில்லை என்று நினைத்து விடக்கூடாது.

ஹலால் – ஹராம் என்பதை முஸ்லிம்கள் அனைவருக்கும் இஸ்லாம் பொது விதியாகவே ஆக்கியிருக்கின்றது. எனவே, நுகர்வோரும் பேணுதலோடு நடந்து கொள்ள வேண்டும்.

مظفر بن سهل قال: سمعت غيلان الخياط يقول: اشترى سري السقطي كرّ لوز بستين ديناراً وكتب في رونامجه ثلاثة دنانير ربحه، فصار اللوز بتسعين ديناراً، فأتاه الدلاّل فقال له: إنّ ذلك اللوز أريده، فقال: خذه، فقال: بكم؟ قال: بثلاثة وستين ديناراً، قال له الدلاّل: إنّ اللوز قد صار الكرّ بسبعين ديناراً، قال له السري: قد عقدت بيني وبين الله عقداً لا أحله لست أبيعه إلاّ بثلاث وستين ديناراً، قال له الدلاّل: وأنا قد عقدت بيني وبين الله عقداً لا أحله، أن لا أغشّ مسلماً، لست آخذ منك إلاّ بسبعين ديناراً، قال: فلا الدلاّل اشترى منه ولا سري باعه

 

 

ஃகைலானுல் கய்யாத் (ரஹ்) அவர்கள் கூற தாம் செவியுற்றதாக முளஃப்ஃபர் இப்னு ஸஹ்ல் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் மாபெரும் வணிகராகத் திகழ்ந்தார்கள். ஒரு சமயம் 60 தீனார் கொடுத்து ஒரு கூஜாவை விலைக்கு வாங்கி தங்களது கடையில் விற்பனைக்காக வைத்தார்கள். மேலும், ”அன்றைய நாட்குறிப்பில் 60 தீனாருக்கு விற்பனை செய்வதற்காக வாங்கிய கூஜாவிற்கு 10 தீனாருக்கு அரை தீனார் வீதம் மூன்று தீனார் லாபமாக வைத்து 63 தீனாருக்கு அதை விற்க வேண்டும்என்று எழுதி வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் கழித்து கூஜாவின் விலை ஏறியது. 90 தீனாருக்கு ஒரு கூஜா விற்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு கிராமவாசி கடைக்கு பொருள் வாங்க வந்தார். வந்தவரை கூஜாவின் அழகு ஈர்த்தது. ஸிர்ரீ (ரஹ்) அவர்களிடம் தனக்கு அந்த கூஜா வேண்டும். எவ்வளவு விலை? என்று கேட்டார்.

ஸிர்ரீ (ரஹ்) அவர்கள், கிராமவாசியிடம் 63 தீனார் அதன் விலை, அதில் 3 தீனார் எனக்கான லாபம் என்றார்கள்.

அதற்கு அந்த கிராமவாசி சிரித்தவராக, இதன் விலை மற்ற கடைகளில் எவ்வளவு தெரியுமா? 70 தீனார் ஆகும் என்றார்.

அதற்கு ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் “இருந்து விட்டு போகட்டும்! நான் வாங்கும் போது 60 தீனார் தான், எனக்கான லாபம் 3 தீனார் தான் நான் இதை வாங்கும் போதே இன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். மற்ற கடைகளின் விலை விபரமோ, விலையேற்றமோ எனக்கு அவசியமில்லாத ஒன்று என உறுதிபடக் கூறிவிட்டார்கள்.

அப்போது, அந்த கிராமவாசி வெளியில் 70 தீனாருக்கு விற்பனையாகும் ஒரு பொருளை 63 தீனாருக்கு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சக முஸ்லிம் ஒருவரிடம் இப்படி குறைந்த விலைக்கு வாங்குவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. எனவே, 70 தீனாருக்கு தர முடியும் என்றால் அந்த கூஜாவை வாங்கிச் செல்கின்றேன் என்று உறுதியாகக் கூறினார்.

அதைக் கேட்ட ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் “63 தீனாரை விட கால் தீனார் கூட கூட்டி வாங்கமாட்டேன், வேண்டுமானால் 70 தீனார் கொடுத்து மற்ற கடைகளில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

அந்தக்கிராமவாசியும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஸிர்ரீ (ரஹ்) அவர்களும் விட்டுக் கொடுக்கவில்லை.

இறுதியில் கிராமவாசி வாங்கவும் இல்லை, ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் விற்கவும் இல்லை. (நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ )

No comments:

Post a Comment