முஸ்லிம் விரோதப் போக்கை கடைபிடிக்கும் சினிமா ஊடகம்!!
அமெரிக்காவை
கொலம்பஸ் கண்டறிந்த செய்தி ஐந்து மாதங்கள் கழித்துத்தான் அவரை அனுப்பிவைத்த
ஸ்பெயின் நாட்டு மன்னருக்குத் தெரியவந்தது.
அமெரிக்காவில்
ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 நாட்களுக்குப்
பிறகே அந்தச் செய்தி ஐரோப்பியர்களுக்குத் தெரியவந்தது.
ஆனால், 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரம் விமானத்
தாக்குதலில் தகர்க்கப்பட்டதை உலகமெங்கும் மக்கள் தங்களது வீடுகளில் தொலைக்காட்சி
மூலம் உடனடியாகக் காண முடிந்தது. ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள அற்புதத்தின்
விளைவு இது.
மக்களிடம்
கருத்துகளை உருவாக்குவதிலும் மனித மதிப்பீடுகளை வளர்த்தெடுப்பதிலும் ஊடகங்களுக்கு
முக்கியப் பங்கு உண்டு. அதனால்தான் ஊடகங்களை ‘மூன்றாவது கண்’ என்று குறிப்பிடுகிறனர்.
ஜனநாயகத்தின்
கண்களாகவும் நேர்மறையான மாற்றங்களுக்குத் துணை நிற்பவையாகவும் இருக்க வேண்டிய
ஊடகங்கள்,
காலப்போக்கில் செய்திகளை உற்பத்திசெய்யும் கூடங்களாக
மாறிவிட்டன. வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும் பக்கச் சார்பும் கொண்ட செய்திகளை
வெளியிடுவது பெருகி விட்டன.
செய்திகளில்
ஜனநாயகத்தன்மை குறைந்து,
வன்முறையையும், மத துவேஷத்தையும், காழ்ப்புணர்ச்சியையும்
ஊக்குவிக்கும் களங்களாக இன்றைய ஊடகங்கள் மாறி விட்டன.
அதன் விளைவாக
இன்று குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது வெகுஜன மக்களின் எண்ணங்களில் தவறான
உருவகத்தை விதைத்து அந்த சமூகத்திற்கெதிராக ஒரு வித வெறுப்புணர்வை வெளிப்படுத்தும்
சமூகமாக மாறியிருப்பதைக் காண முடிகிறது.
உதாரணமாக டெல்லி, பெங்களூர், சென்னை,
போன்ற தலைநகரங்களில் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு
கிடையாது என்று வெளிப்படையாகவே அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது மெல்ல
படர்ந்து தொழில் நகரங்கள்,
நகர்ப்புறங்கள் என்று அனைத்து இடங்களிலும் முஸ்லிம்களுக்கு
வீடு தர மறுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
தற்போது சில
காலங்களாக திரைத்துறையும், சினிமா
ஊடகமும் முஸ்லிம் சமூகத்தின்
மீதும், இஸ்லாத்தின் மீதும்
வன்மத்தை வீச ஆரம்பித்துள்ளன.
3 திரைப்படங்கள்…
இந்தியத்
திருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம்
அதிகரித்து,
அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக்
காட்டமுனைவதும் அவர்களுக்கு எதிரான மனோநிலையை உருவாக்குவதும் கடுமையான எதிர்
விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
1.
புர்கா:-
இஸ்லாமிய பெண்கள்
அணியும் புர்காவின் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம் பல சர்வதேச திரைப்பட
விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
இந்த படத்தை
தியேட்டரில் வெளியிட்டால் பிரச்னைகள் உருவாகலாம், தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் எழலாம் என்பதால் 'ஆகா’
ஓடிடி இணையதளத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி வெளியாகிய ‘புர்கா’
திரைப்படம் இஸ்லாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், புனித நூலான குரானையும் இழிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில்
வருடத்தை குறிப்பிடாமல் தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் ஒரு மத கலவரத்தை
அடிப்படையாக வைத்து கதையின் பின்புலம் அமைக்கப்பட்டு உள்ளது.
கலவரம் நடக்கும்
பகுதியில் வசித்து வருகிறார் நஜ்மா என்ற இஸ்லாமிய பெண். கணவனை இழந்து 4 மாதம் கூட ஆகாத காரணத்தால் இஸ்லாமிய வழக்கப்படி 4 மாதங்கள் வெளியே வராமல் இருக்கும் இத்தா விதி முறையை அவர் கடைப்பிடித்து
வருகிறார்.
இந்த நிலையில்
அந்த கலவரத்தில் காசுக்காக கலந்து கொள்ளும் கலையரசன்.. உடலில் ஏற்பட்ட காயம்
காரணமாக உதவி கேட்டு நஜ்மா வீட்டிற்கு செல்கிறார். முதலில் அவருக்கு இடம் கொடுக்க
மறுக்கும் நஜ்மா.. கடைசியில் அவரை வீட்டில் அனுமதிக்கிறார் .
அதோடு சூர்யா என்ற
கதாபாத்திரத்தில் வரும் கலையரசனுக்கு மருந்து போட்டுவிட்டு, சிகிச்சையும் கொடுக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில்
இஸ்லாமிய பெண்ணும் - கலவரத்தில் கலந்து கொண்ட ஒரு இந்துவிற்கும் இடையில் என்ன
நடந்தது.. அவர்கள் பேசிக்கொண்டது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
இத்தா இருப்பதை மத
அடக்குமுறையாகவும், மனிதநேயமற்ற பண்பாகவும், ஹிஜாபை அடக்குமுறையின்
சின்னமாகவும் இந்த திரைப்படத்தில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத்
திரையிட்டு,
உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் புர்கா
படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ( நன்றி: https://tamil.oneindia.com, https://www.hindutamil.in )
2.
ஃபர்ஹானா:-
புர்கா
திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து 'ஃபர்ஹானா'
என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் இஸ்லாமியப்
பெண்களை அவமதிக்கும் விதமாக இதில் வசனங்கள் வருகின்றன. மேலும் இந்த இரண்டு
படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும்
கொச்சைப்படுத்தப்படுகிறது.
இப்படத்தில்
தன்னுடைய குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், தன்னைப்போல் அவர்கள்
எதற்கும் ஏங்கிவிடக்கூடாது என நினைக்கும் ஒரு சராசரி தாயாகவும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய மத கோட்பாடுகளை
தாண்டி வேலைக்கு செல்வதால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தான் இந்த படத்தில்
பேசப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய
நிலையில்,
சில சர்ச்சைக்கு இடமான வகையில் காட்சிகள் இடம்
பெற்றிருந்தன.
3 .தி கேரளா ஸ்டோரி:-
தி கேரளா ஸ்டோரி (The Kerala Story) படத்தின் ட்ரெயிலர் கடந்த நவம்பர் மாதம் வெளியானபோது, பல விஷயங்கள் அதில் இட்டுக் கட்டப்பட்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டது. கேரள
சமூகத்தின்மீது பல பொய்களையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்திருந்த அந்த ட்ரெயிலர்
வெளியானபோது அதிகாரப்பூர்வமாக தணிக்கை செய்யப்பட்டிருக்கவில்லை. இத்தகவலை ஒன்றிய
திரைப்பட தணிக்கைக் குழுவே
(CBFC) வெளியிட்டிருந்தது. சென்னையை சேர்ந்த தொலைக்காட்சி
நெறியாளர் பி.ஆர்.அரவிந்தாக்ஷன், ஒன்றிய திரைப்படத்
தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியிருந்த தகவல் அறியும் உரிமை மனுவுக்கு கிடைத்த
பதிலில்தான் இந்த தகவல் கிடைத்தது. பிப்ரவரி 23, 2023 அன்று அவர்,
ட்ரெயிலரை பார்த்து தணிக்கைக் குழு சான்றிதழ்
அளித்திருந்ததா எனக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு
அனுப்பியிருந்தார். தணிக்கைக் குழு அனுப்பியிருந்த பதிலில் தெள்ளத்தெளிவாக, ட்ரெயிலர் தணிக்கை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்
புகாரளிப்பவர் இப்பிரச்சினையில் மேலதிக நடவடிக்கைகள் விரும்பினால் மேல்முறையீடும்
செய்யலாம் என யோசனை சொல்லப்பட்டிருந்தது.
தற்போது
அப்படத்தின் போஸ்டர்கள் மே 5ம் தேதி படம் வெளியாகும் என்கிற
அறிவிப்புடன் வெளியாகி இருக்கின்றன. படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரிப்பில்
சுதிப்தோ சென் இயக்கியிருக்கிறார். படத்துக்கான அடுத்த ட்ரெயிலரும் வெளியாகி
இருக்கிறது. அதில் கேரளா,
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு தஞ்சம் தரும் இடமாக
காண்பிக்கப்பட்டிருக்கிறது.
உண்மை சம்பவங்களை
அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் அப்படம் கேரளாவை பற்றியும்
அச்சமூகம் பற்றியும் தவறான கருத்துகளை பிரசாரம் செய்கிறது.
பயங்கரவாத
அமைப்புகளுக்கு ஆளெடுக்கும் இடமாக கேரளா இருப்பதாக காண்பிக்கும் படம், 32,000 கேரளப் பெண்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களுக்குள் இணைத்திருக்கின்றனர் என்ற
ஆபத்தான குற்றச்சாட்டையும் எழுப்புகிறது. உமன் சாண்டி (காங்கிரஸ்) மற்றும்
வி.எஸ்.அச்சுதானந்தன் (சிபிஐஎம்) ஆகிய இரு முன்னாள் முதல்வர்களும் குறிப்பிட்ட சில
விஷயங்களை கடுமையாக திரித்து இம்முடிவுக்கு பட இயக்குநரான சுதிப்தோ சென்
வந்திருக்கிறார். 2021ம் ஆண்டில் சிட்டி மீடியாவுக்கு அளித்த நேர்காணலில், 2010ம் ஆண்டு கேரள சட்டசபையில் பேசிய உமன் சாண்டியின் உரையிலிருந்து, 32,000 என்கிற எண்ணிக்கையை எடுத்ததாக சுதிப்தோ சென் சொல்லியிருக்கிறார்.
அதில் உண்மை
இல்லை. ஜூன் 25,
2021 அன்று கேரள சட்டசபையில் பேசும்போது 2006ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை 2667
பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருக்கும் தகவலை உமன் சாண்டி
கூறினார். இந்த பதிலில் ஐஎஸ்ஐஎஸ் பற்றி எதுவும் இல்லை. சமீபத்தில் தடை செய்யப்பட்ட
இஸ்லாமிய இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்டை பற்றி வி.எஸ்.அச்சுதானந்தன் சொன்ன
விஷயத்தை படத்தின் டீசர் திரித்து பயன்படுத்தியிருக்கிறது.
டீசரில்
வி.எஸ்.அச்சுதானந்தன் சொல்கிற விஷயம் ஒன்றாக இருக்கிறது. சப் டைட்டிலில் வரும்
மொழிபெயர்ப்பு வேறொன்றாக இருக்கிறது. சொன்ன வார்த்தைகளுக்கும் அவற்றுக்கு எந்த
சம்பந்தமும் இல்லை. அச்சமயத்தில் செய்திகளின் உண்மைத் தன்மையை பரிசோதிக்கும் தளமாக
இருக்கும் ஆல்ட் நியூஸ்,
அந்தத் தவறை சரி செய்யும்படி சுதிப்தோ சென்னிடம் கேட்டுக்
கொண்டும்,
அவர் பொருட்படுத்தவில்லை.
2018ம் ஆண்டு சுதிப்தோ
சென்னின் இயக்கத்தில் வெளியான ‘இன் தெ நேம் ஆஃப் லவ்’ என்கிற ஆவணப்படமும் இதே விஷயத்தைதான் கையாண்டிருந்தது. ஆவணப்படத்தின் பிரதான
கதையோட்டம்,
இந்து மற்றும் கிறித்துவ பெண்கள் தவறான முறையில் இஸ்லாம்
மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாதிகள் இருக்கும்
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக கூறியது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்
ஆவணப்படம் திரையிடப்பட்டபோது கொந்தளிப்பு ஏற்பட்டு, அப்படம் ‘லவ் ஜிகாத்’
பற்றியல்ல என மன்னிப்புடன் கூடிய விளக்கத்தை இயக்குநர்
இறுதியில் தர நேர்ந்தது.
2022ம் ஆண்டு நடந்த
சர்வதேச திரைப்பட விழாவில்,
இஸ்ரேல் பட இயக்குநரும் தேர்வுக்குழுவின் தலைவருமான நதவ்
லேபிட், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை விமர்சித்தபோது, அவரை எதிர்த்த ஒரே
தேர்வுக்குழு உறுப்பினர் சுதிப்தோ சென் மட்டும்தான். ( நன்றி: theaidem.com ) மேலதிக தகவல்கள் பெற மேற்பட்ட தளத்தில் the Kerala story என்று பதிவிட்டு பார்வையிடவும்.
உண்மை
என்ன?..
இந்நிலையில் கேரள
முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியுள்ளதாவது: மதச்சார்பின்மை கொண்ட கேரள
மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி'
இந்தி படத்தின் டிரைலர் அமைந்துள்ளது. சங் பரிவாரின்
கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இது என்பதை, டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.
கேரள மாநில
தேர்தலின்போது அரசியலில் ஆதாயம் அடைய சங் பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள்
எடுத்து வருகின்றன. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும்
மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘‘லவ் ஜிஹாத்’’ குற்றச்சாட்டுகளை படத்தில் வடிவமைத்தது திட்டமிட்ட சதி நடவடிக்கையின் ஒரு
பகுதியாகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிஹாத் என்ற ஒன்றே கிடையாது என்று மத்திய
அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இப்படியான சூழலில்
கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார்
முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன்
கூறியுள்ளார்.
பாஜக அரசியல்
ரீதியாக பின்னடைவுகளை சந்திக்கும் போதோ அல்லது அவர்களின் மக்கள் விரோத ஏமாற்று
வேலைகளை மறைப்பதற்காகவோ மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை முட்டாள்களாக
ஆக்குவதற்காக வேண்டி புதிய புதிய வார்த்தைகளை கண்டுபிடித்து போலியான பரப்பரைகளை
செய்திடுவார்கள்.
அந்த பரப்புரையின்
உண்மைத்தன்மையையோ,
அது தொடர்பான தரவுகளையோ யாரும் கேள்வி கேட்டிட முடியாது.
அதையும் மீறி கேட்பவர்கள் வழக்கம் போல தேச விரோத பட்டியலில் சேர்க்கப்பட்டு
விடுவார்கள். அவர்கள் பரப்புரை செய்திடும் செய்தி குறித்தான அறிவோ, ஆழமான பார்வையோ,
போதுமான தரவுகளோ உண்மையில் அவர்களிடம் இருக்காது. அவர்களின்
நோக்கம் 'வெறுப்பு அரசியல்'
என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
அப்படி அவர்கள்
மேற்கொண்ட பல போலியான பரப்புரைகளில் ஒன்று தான் 'லவ் ஜிஹாத்'.
கலப்புத் திருமணம் (ஆர்.டி.ஐ. தகவல்)
வெவ்வேறு சாதியைச்
சேர்ந்த அல்லது வெவ்வேறு மதத்தைச் சேர்த்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம்
செய்ய விரும்பினால் அது கலப்புத் திருமணம் எனப்படும்.
அதனை சட்டப்படி
செல்லும் திருமணமாக்க அதனை அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு
செய்ய வேண்டும்.
2011ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2012ஆம் ஆண்டு ஜூன் 30
வரை அவ்வாறு நடைபெற்ற கலப்புத் திருமணங்களின் மணமகன்கள்
மற்றும் மணமகள்கள் சார்ந்திருந்த மதங்கள் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றது.
அதில் கிடைத்த
விவரங்களில் கேரளாவின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மணமகன்கள் மற்றும் மணமகள்கள்
குறித்த புள்ளிவிபரங்கள்...
1. 322 கிறிஸ்தவ ஆண்கள் 35 முஸ்லிம் பெண்களையும் 287
இந்துப் பெண்களையும் மணமுடித்துள்ளனர்.
2. 418 இந்து ஆண்கள் 253 முஸ்லிம் பெண்களையும் 265
கிறிஸ்தவ பெண்களையும் மணமுடித்துள்ளனர்.
3. 200 முஸ்லிம் ஆண்கள் 153 இந்து பெண்களையும் 47
கிறிஸ்தவ பெண்களையும் மணமுடித்துள்ளனர்.( நன்றி: லவ் ஜிஹாத் எனும் மாய மான்
ஆசிரியர்: எம். முஹம்மது இஸ்மாயில், வெளியீடு: இலக்கியச்சோலை )
புர்கா:- விமர்சனமும்.. தெளிவும்..
புர்கா
திரைப்படத்தில் இடம் பெறும் இத்தா குறித்தான விமர்சனத்திற்கான தெளிவு:-
பெண்கள் இத்தா இருப்பதின் நோக்கம் என்ன?
العدة
مدة شرعها الله عز وجل بعد الطلاق وبعد الوفاة لحكم كثير، لحكم كثيرة ليست مجرد
براءة الرحم بل لحكم كثيرة؛
منها
براءة الرحم لئلا تجتمع المياه في الرحم تشتبه الأنساب،
ومنها
احترام الميت وأن يبقى له حرمة في نفس الزوجة،
وصيانة
لها عن التطلع للرجال من حين الوفاة، كما جعل الله للمطلق كذلك عدة لزوجته معروفة،
ثلاث حيض إن كانت تحيض، أو ثلاثة أشهر إن كانت لا تحيض،
فالمقصود
أن ليست الحكمة فقط مجرد براءة الرحم، بل هي من المقصود وهناك حكم أخرى وأسرار
أخرى غير مجرد براءة الرحم، وقد نبه على ذلك العلامة ابن القيم رحمه الله في كتابه
إعلام الموقعين، ونبه غيره على ذلك رحمة الله عليهم من أهل العلم.
فالمقصود
أنه ليست الحكمة مجرد العلم ببراءة الرحم، لا، ولهذا يجب على المرأة أن تعتد
مطلقاً ولو كان ما دخل بها، إذا مات عنها حتى ولو ما دخل بها إذا عقد عليها ومات
عنها قبل أن يدخل بها فإن الأدلة عامة تعمها وتعم غيرها، فعليها أن تعتد أربعة
أشهر وعشراً، وإن كان معلوماً أنه ليس في رحمها شيء، فإن التي لم يدخل بها ليس في
رحمها شيء من الزوج، وهكذا لو كانت صغيرة عقد عليها وهي صغيرة بنت خمس سنين أو تسع
سنين ثم مات عنها وقد علم أنه لم يدخل بها.
فالحاصل
أن العدة عامة للصغيرة والكبيرة والمدخول بها وغير المدخول إذا كانت للوفاة، أما
التفصيل فهو في الطلاق في هذا في عدة الحيض، إذا كانت غير مدخول بها لا عدة عليها
في الطلاق.
أما
الوفاة فإن العدة ثابتة وواجبة مطلقاً ولو لم يدخل بها ولو علم براءة الرحم. نعم
اگر
شوہر کا انتقال ہوگیا ہو تو جوان اور ضعیف العمر دونوں قسم کی عورتوں کی عدت
چار ماہ دس دن ہوتی ہے،
اور
طلاق کی صورت میں بڑی عمر کی وہ عورت جس کو حیض نہیں آتا اس کی عدت تین ماہ
ہے اور جوان عورت اگر حمل سے ہے تو اس کی عدت بچہ جننے تک ہے، اور حمل نہیں
ہے تو اس کی عدت تین حیض ہیں۔
سورۃ
بقرۃ میں ارشاد باری تعالی ہے:
وَالَّذِينَ
يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ
أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلاَ جُنَاحَ
عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللّهُ بِمَا
تَعْمَلُونَ خَبِيرٌ۔ (آیت نمبر:234)
قرآن
کریم میں ہے:
وَاللَّائِي
يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ
ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُوْلَاتُ الْأَحْمَالِ
أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ۔(سورۃ الطلاق،آیت 4)
قرآن
کریم میں ہے:
وَالْمُطَلَّقَاتُ
يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلاَثَةَ قُرُوءٍ (البقرۃ:228)
فتاوی
ہندیہ میں ہے:
عدة
الحرة في الوفاة أربعة أشهر وعشرة أيام سواء كانت مدخولاً بها أو لا
عدت کا
مقصد صرف حمل ہونے، نہ ہونے کی تصدیق نہیں ہے؛
کیوں کہ
اگر ایسا ہوتا تو حیض والی عورتوں میں صرف ایک حیض عدت ہوتی، مکمل تین حیض نہ
ہوتی؛ کیوں کہ ایک بار حیض آنے سے حمل نہ ہونا متعین ہوجاتا ہے،
نیز
قرآن کریم کی کسی آیت یا کسی حدیث میں یہ بات نہیں آئی کہ عدت محض حمل کی تصدیق کے
لیے ہوتی ہے، یہ محض من گھڑت بات معلوم ہوتی ہے؛
بلکہ
فقہائے کرام نے لکھا ہے کہ طلاق، خلع یا فسخ نکاح کی صورت میں ان عورتوں کی عدت
جنھیں حیض آتا ہو، مکمل تین حیض ہوتی ہے (جیسا کہ قرآن پاک، سورہ بقرہ، آیت: ۲۲۸ میں ہے)،
جن میں
سے پہلا حیض براء ت رحم جاننے کے لیے،
دوسرا
حرمت نکاح کی وجہ سے
اور
تیسرا آزادی کی فضیلت کی وجہ سے
اور اگر
کسی عورت کو حیض نہ آتا ہو یا وہ ابھی حیض کی عمر کو نہیں پہنچی تو مہینہ اس کے حق
میں حیض کے قائم مقام ہوگا اور اس کی عدت تین مہینہ ہوگی جیسا کہ سورہ طلاق (آیت: ۴) میں ہے۔
الحاصل
حکم خداوندی کی وجہ سے ہر وہ عورت جسے دخول یا خلوت کے بعد طلاق ہوگئی ہو، یا اس
کا خلع ہوا ہو یا شرعی طریقہ پر نکاح فسخ کیا گیا ہو یا دخول اور خلوت کی قید کے
بغیر جس عورت کا شوہر انتقال کرگیا ہو، اس پر عدت لازم وضروری ہے،
البتہ
حمل کی صورت میں عدت علی الاطلاق وضع حمل ہوگی،
اور اگر
حمل نہ ہو توشوہر کی وفات کی صورت میں چار مہینہ دس دن،
اور
طلاق وغیرہ کی صورت میں اگر حیض آتا ہو تو تین حیض ورنہ تین مہینہ ہوگی۔
عدت
مذہب اسلام میں لازم وضروری ہے اور بعض احکام میں عدت بحکم نکاح ہوتی ہے؛
اسی لیے
معتدہ کا نکاح کسی اور مرد سے جائز نہیں، اور اس کی اہمیت کی سب بڑی وجہ یہ ہے کہ
یہ اللہ تعالی کا لازم قطعی حکم ہے، اس پر عمل کرنا لازم وضروری ہے۔
عورت کا
عدت وفات یا عدت طلاق وغیرہ میں احکام عدت کی رعایت نہ کرنا اور ان کی خلاف ورزی
کرنا ناجائز وحرام ہے،
ایسی
عورت سخت گنہگار ہوتی ہے، اور اگر کوئی عورت حالت عدت میں نکاح کرلیتی ہے تو اس کا
نکاح شرعاً ہرگز درست ومعتبر نہ ہوگا؛
بلکہ
باطل وغیر معتبر ہوگا اور یہ ایسا ہی ہوگا، جیسے کوئی منکوحہ عورت اپنے شوہر کے
علاوہ کسی دوسرے مرد سے نکاح کرلے۔
பொதுவாக இத்தா
இருப்பதினுடைய நோக்கமானது அவள் தன் கணவரின் மூலமாக கர்ப்பம் தரித்து இருக்கிறாளா
இல்லையா என்பதை கண்டறிவது மட்டும் அல்ல
அது மட்டுமே
நோக்கமாக இருந்தால் மாதவிலக்கு வரக்கூடிய பெண்மணிகளுக்கு தலாக் ,குலா,
ஃபஸஹ் போன்ற பிரிவின் போது மூன்று மாதவிடாய்க் காலம் இத்தா
இருக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை
மாறாக ஒரு
மாதவிடாய் காலம் இத்தா இருப்பதை கொண்டு அவள் அந்த கணவரின் மூலம் கர்ப்பம் தரித்து
இருக்கிறாளா இல்லையா என்பதை கண்டறிந்து விட முடியும்
ஆனால் மார்க்கமோ
மூன்று மாதவிடாய்க் காலம் இருப்பதை வலியுறுத்துகிறது
எனவே இதன் மூலம்
நாம் விளங்கிக் கொள்வது கர்ப்பம் தரிப்பதை அறிவது மட்டும் நோக்கமல்ல
இத்தாவின் நோக்கமே
حكم عبدية முழுக்க முழுக்க இறைவனுக்கு
அடிபணிந்து அப்படியே செயல்படுவதாகும்,
இவ்விவகாரத்தில்
இறைவன் என்ன ஆணையிட்டானோ அதை அப்படியே ஏற்று நடப்பதாகும்
இறைவனுடைய
கட்டளைகளில் ஏராளமான நுட்பங்கள் பொதிந்திருக்கும் அது நம் அறிவுக்கு எட்டாமல் கூட
இருக்கும்
அதில்
வெளிப்படையான காரணம் கர்ப்பம் தரிப்பதை அறிந்து கொள்வதும் உண்டு
கருவில் குழந்தை
இருப்பதை அறிய ஒரு மாதம் போதும்? அந்த மாதத்தில்
மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே?
பின்னர் கணவன் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா?'' என்று சிலர்
நினைக்கலாம்.
இது நியாயமான
கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை
முதல் மாதமே அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம்.
தான் கருவுறவில்லை
என்று அவள் கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். ஆனால் நான்கு
மாதம் பத்து நாட்கள் கழிந்த பின் இவ்வாறு கூற முடியாது. கர்ப்பமாக இருப்பது வெளிப்படையாகவே மற்றவர்களுக்கும் தெரிந்து விடும்.
இரண்டாம் திருமணம்
முடித்து ஆறேழு மாதங்களில் அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தால் அது முந்தைய
கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான்.
ஆனால் நான்கு
மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு இரண்டாம் திருமணம் நடந்திருந்தால் அவன் இப்படிக்
கூற முடியாது.
வயிற்றில் குழந்தை
இருந்தால் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே என்று அவன் உண்மையை
விளங்கிக் கொள்வான்.
இத்தகைய
காரணங்களால்,
பெண்களுக்கு நன்மை செய்வதற்காக,
அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச்
செய்துள்ளான்.
கணவனை இழந்த
பெண்கள் நான்கு மாதங்களும்,
பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க
வேண்டும் என்பது இன்று அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தாவும்… அறிவியல் நிரூபணமும்…
ராபர்ட் கில்ஹாம்
என்ற யூத விஞ்ஞானி இது குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண், தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கின்றான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட்
கண்டுபிடித்தார்.
அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள
ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின்
கணவர்களது ரேகைகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு
ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம்
அதிரடியாக ஒரு காரியம் செய்தார்.
அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.
அவளிடம் மூன்று
ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அத்துடன் தம்முடைய
மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
கணவன் இறந்த ஓரிரு
மாதங்களில் ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம் கணவன் மூலம் பெற்றெடுக்கும் அவளது
குழந்தை இரண்டாம் கணவனின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போகாமல் இருக்க சாத்தியமுண்டு.
முதல் கணவனின்
டி.என்.ஏ,
யுடன் ஒத்துப் போகும் வாய்ப்பும் உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பும் இத்தாவின் அவசியத்தை உணர்த்துகிறது.
நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழித்து அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது.
திருக்குர்ஆன் அல்லாஹ்வின்
வார்த்தை என்று அறிந்து ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றதற்கு இத்தா எனும் சட்டம்
காரணமாக அமைந்தது.
அதே போன்று கணவன்
தன் மூலம் தன் மனைவி கர்ப்பம் தரித்தால்
தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் குழந்தையை தன் மனைவி
ஒழுங்காக பெற்றெடுப்பாள் என்று அந்த கணவன் நம்புகிறான்.
இதை எழுதி
கையெழுத்துப் போடாவிட்டாலும் திருமண ஒப்பந்தத்தில் இது அடங்கி நிற்கிறது.
இந் நிலையில்
முந்தய கணவனால் கர்ப்பம் தரித்த ஒருப் பெண் மூன்று நாள், ஐந்து நாள் அல்லது நாற்பது நாள், இத்தாவில் இருந்து விட்டு
வெளியேறி மறுமணம் செய்துக் கொள்கிறாள் என்றால்
இவள் இரண்டு
கணவர்களுக்குமே துரோகம் செய்தவளாகிறாள். முதல் கணவனின்
குழந்தைக்கு இரண்டாம் கணவன் தந்தையாகும் நிலை உருவாகிறது.
முதல் கணவன்
ஏழ்மையிலிருந்து இரண்டாம் கணவன் பணக்காரனாய் இருந்தால் முறையற்ற சொத்துக்கு இந்த
குழந்தை வாரிசாகிறது.
இதற்கு மாற்றமாக
முதல் கணவன் பணக்காரனாய் இருந்து இரண்டாம் கணவன் ஏழ்மையிலிருந்தால் தந்தையின்
சொத்திருந்தும் அதைப் பெற முடியாமல் பஞ்சத்திலும் ஏழ்மையிலும் இந்தக் குழந்தைத்
தள்ளப்படுகிறது.
இன்னும் ஆழமாக
சிந்தித்தால் வேறு விபரீதங்களும் இதில் தென்படும். இந்தக் குற்றங்கள்
அனைத்திற்கும் அந்தப் பெண்ணே பொறுப்புதாரியாகிறாள் என்பதால் நாற்பது நாள் போன்ற
மடத்தனமான இத்தா முறைக்கு சம்மந்தப்பட்டப் பெண்கள் ஒத்துழைக்கவேக் கூடாது.
குடும்பத்தார்
என்னதான் வற்புறுத்தினாலும் முதல் கணவனுக்கு செய்யும் துரோகத்திற்கும், நாளை இறைவனின் கேள்விகளுக்கும் அஞ்சி கட்டாயம் இதை மறுத்தே ஆக வேண்டும்.
அடுத்ததாக மனைவி கருவுற்றிருக்கிறாளா.. என்று பார்ப்பதுதான் இத்தாவின் நோக்கம் என்றால்
வயதான பெண்களுக்கு இத்தா அவசியமா..?
நீண்ட காலம்
மனைவியை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வாழும் கணவன் இறந்து விட்டால் அந்தப்
பெண்ணுக்கு இத்தாவின் சட்டம் பொருந்துமா..?
வயதான பெண்கள்
மீண்டும் திருமணம் செய்யப் போவதில்லை என்பதால் இத்தா அவசியமா.. என்றக் கேள்வியே
அங்கு எழாது.
ஏனெனில் அவர்கள்
இனி இருக்கப் போகும் காலத்தை இத்தாவில் இருப்பதுப் போன்று தான் கழிக்கப்
போகிறார்கள்.
முதிர்ந்த
வயதிலும் இல்லற உணர்விற்கு ஆட்பட்டு ஒரு பெண் திருமணத்தை விரும்பினால் அந்தப்
பெண்ணால் கருவுற முடியும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத்தில் எழ வாய்ப்புள்ளது இந்நிலையில் அவள் இத்தா இருக்கத்தான் வேண்டும்.
நீண்ட காலம்
கணவனுடன் இல்லற உறவு இல்லாத பெண்களை எடுத்துக் கொள்வோம். கணவன் இல்லாத சந்தர்பத்தில் இல்லற வேட்கையில் ஆர்வம் உள்ளப் பெண்கள் தவற
வாய்ப்புள்ளது. இங்கும் அங்குமாக இந்தத் தவறு நடக்காமல் இல்லை.
இந்நிலையில் இத்தா
புறக்கணிக்கப்பட்டு மறுமணத்திற்கு அவள் தயாரானால் அவள் தவறை நிரூபிக்க முடியாமல்
போய்விடும்.
எல்லாப் பெண்களும்
தவறு செய்பவர்கள்தானா.. என்ற கண்ணோட்டத்தில் இதைப் பார்க்கக் கூடாது.
இந்த விஷயத்தில்
நல்லப் பெண்கள் யார்?
தவறுவது யார்? என்று பிரித்தறிவது
கடினம் என்பதால் தவறை மறைக்க முடியாத ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் அனைவரையும்
கொண்டு வருவது அவசியமாகி விடுகின்றது.
அந்த அடிப்படையில்
நீண்ட காலம் கணவனை பிரிந்து கணவன் இறந்து விட்டப் பெண்களும் இத்தா இருக்கத்தான்
வேண்டும்.
கருவை கண்டறிவது
தான் இத்தாவின் நோக்கம் என்றால் கருப்பை அகற்றப்பட்ட, கருப்பையுடன் சினைப்பைகள் சேர்த்து அகற்றப்பட்ட பெண்கள் கருவுற வாய்ப்பில்லையே
அத்தகையப் பெண்கள் இந்த இத்தா சட்டத்திலிருந்து விடுப்பட முடியுமா.. என்ற சந்தேகம்
அடுத்து எழலாம்.
நான்கு மாதம்
பத்து நாள் என்ற சட்டம் கருவை கண்டறிந்து வெளிப்படுத்துதல் என்பதற்காகத்தான் என்று
தெளிவான சான்றுகள் இருப்பதால் கருவுறவே முடியாத பெண்களுக்கு இந்தச் சட்டம்
பொருந்தாது தான். ஆனாலும் இந்தப் பெண்களும் இத்தாவிலிருந்து விடுப்பட முடியாது.
கருப்பை, சினைப்பைகள் அகற்றப்பட்டப் பெண்களாக இருந்தாலும் சரி உடல் கோளாறுகளினால்
மாதவிடாயே ஏற்படாத பெண்களாக இருந்தாலும் சரி அவர்களில் தலாக் விடப்பட்டவர்கள் மூன்று
மாதக்காலம் இத்தா இருக்கவேண்டும் ,
அவர்களில் கணவர்
இறந்து விட்டால் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும், இவர்களால் கருவுற முடியாவிட்டாலும் இல்லற வேட்கையிலிருந்து விடுபட்டவர்களல்ல.
முதல் கணவன்
இறந்தப் பிறகு அவனுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சாதக பாதகங்களின் தாக்கங்கள்
குறைய அல்லது மறைய சில காலங்கள் தேவைப்படும்.
முதல் கணவனால்
அதிகம் நேசிக்கப்பட்ட மனைவியாக இருந்தால் அவளால் உடனடியாக அடுத்த திருமணத்திற்கு
தயாராக முடியாது.
முதல் கணவனின்
தாக்கம் குறைந்து மன ரீதியாக அவள் தயாராக இந்த இடைவெளி அவசியம்.
முதல் கணவனின்
கொடுமையிலிருந்து விடுபட்ட பெண்ணாக இருந்தால் பயமும் வடுக்களும் அவளை அழுத்தி
நிற்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக
அவள் தயாராவதற்கும் இந்த காலகட்டம் தேவைப்படும்.
இது நம் அறிவுக்கு
உதித்ததுதான். இந்த விளக்கம் சரியில்லை என்றால் கூட நம் அறிவுக்கு புலப்படாத வேறு ஏதோ
நோக்கம் அதில் புதைந்திருக்கலாம்.
அந்த
நம்பிக்கையில் இறை ஆணையை ஏற்று அந்தப் பெண்களும் இத்தா இருக்கத்தான் வேண்டும்.
எனவே வயது
வரம்பையோ கால வரம்பையோ பார்க்காமல் கணவனை இழந்தப் பெண்கள் அனைவரும் கட்டாயம்
இத்தாவில் இருப்பது கடமையாகும்
இதில் இறைவனுடைய
நுட்பங்கள் ஏராளம் பொதிந்து நிற்கிறது ஆதார நூற்கள்
(در
مختار مع شامی ۵: ۱۸۲،
مطبوعہ مکتبہ زکریا دیوبند)،
فتاوی
ہندیہ (529/1)
ماخذ
:دار الافتاء جامعۃ العلوم الاسلامیۃ بنوری ٹاؤن
فتوی
نمبر :144110201376
تاریخ
اجراء :14-06-2020
எனவே வயது
வரம்பையோ கால வரம்பையோ பார்க்காமல் கணவனை இழந்தப் பெண்கள் அனைவரும் கட்டாயம்
இத்தாவில் இருப்பது கடமையாகும்
இதில் இறைவனுடைய
நுட்பங்கள் ஏராளம் பொதிந்து நிற்கிறது ஆதார நூற்கள்
இத்தா (காத்திருத்தல்) இருப்பவர்களின் சட்டங்கள் என்ன?
இத்தா காலம்
என்பது இரண்டு விதமாக இருக்கின்றன
ஒன்று:- மரணத்தின் இத்தா காலம்:-
இது கணவனின்
மரணத்தின் காரணமாக வாஜிபாகின்றது
இதன் கால அளவு கர்ப்பிணியாக இல்லையெனில் நான்கு மாதம் பத்து
நாட்கள் ஆகும் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கின்ற காலம் வரை ஆகும்
பார்க்க :-
شامی
(12/355)
இரண்டு: தலாக் உடைய இத்தா காலம்:-
இது தலாக்
விட்டபின் வாஜிபாகும். இதன் அளவு கர்ப்பிணியான
பெண்ணுக்கு குழந்தை பிறக்கின்ற காலமாகும். கர்ப்பிணியல்லாத பெண்ணுக்கு 3 மாதத்தொடக்கு காலமாகும். மிகச் சிறிய வயது அல்லது
வயோதிகத்தின் காரணமாக மாதத்தொடக்கு வரவில்லையெனில் அவர்களின் இத்தா காலம் மூன்று
மாதங்கள் முழுவதும் ஆகும்.
பார்க்க:-
شامی
(12/338)
மரணத்திற்கு
முன்போ அல்லது தலாக் விடுவதற்கு முன்போ எந்த இடத்தில் கணவனுடன் இருந்தாளோ அந்த
இடத்தில் இத்தா இருப்பது அவசியமாகும்
அங்கே இத்தா
இருப்பதில் உயிருக்கோ உடைமைக்கோ கண்ணியத்திற்கோ ஆபத்து அல்லது ஏதாவது கடுமையான
பிரச்சினைகள் ஏற்படும் என்று பயந்தால்
வேறு பாதுகாப்பான இடத்தில் இத்தா இருந்து கொள்ளலாம்
மேலும் தலாக்குடைய
இத்தாவின் அனைத்து செலவுகளுக்கும் கணவனே பொறுப்பாளியாவான்.
பார்க்க:-
شامی
(12/454) ' (13/186)
இத்தாவை
கடைப்பிடிக்கும்போது மார்க்கம் அனுமதித்த காரணங்களுக்காகவே தவிர வீட்டை விட்டு
வெளியேறக்கூடாது. இத்தா முடியும் வரை
எவரையும் திருமணம் செய்யக்கூடாது. தெளிவான வார்த்தைகளால்
திருமண தூது அனுப்பக் கூடாது. அலங்காரம் செய்வதை விட்டு
விட வேண்டும்.
அதாவது உயர்தரமான ஆடை அணியக் கூடாது, நகைகள் அணிய கூடாது,
நறுமணம் பூசக்கூடாது, சுர்மா,
எண்ணெய் போடக்கூடாது, மருதாணி வைக்கக்கூடாது, தலை முடியை சீப்பால் சீவ கூடாது. ஆதார நூற்கள்:-
شامی(
12/432)
فتاوی
رحیمیہ (8/430)
بدائع
الصنائع (30/204)
வீட்டில் ஒரே
அறையில் இத்தா இருக்க வேண்டிய அவசியமில்லை , தேவையேற்பட்டால் மற்ற
அறைகளுக்கும் தாராளமாக செல்லலாம், மஹரம் அல்லாதவர்களிடம்
பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் திரைமறைவிலிருந்து தேவைக்குத் தகுந்தாற் போல் பேசிக்
கொள்ளலாம். பார்க்க:-
فتاوی
رحیمیہ (8/435)
மரணத்தின் இத்தாவின் போது பெண்ணுக்கு இத்தா கழிப்பதற்கான பணம் இல்லையெனில் உணவிற்காக
சம்பாதிப்பதற்கு வெளியே செல்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் இரவு தன் வீட்டுக்கு வந்துவிடவேண்டும் .வேறு இடங்களில் தங்குவது
கூடாது.
பார்க்க:-
شامی
(12/451)
தலைவலியை
நீக்குவதற்காக நறுமணம் இல்லாத எண்ணெய்யைத் தேய்ப்பது கூடும். இதேபோன்று மருந்திற்காக சுர்மா இடுவதும் கூடும். தலையில் பேன்
பற்றி விட்டாலோ சிக்கு ஏற்பட்டு விட்டாலோ அதை சரி செய்வதற்காக அலங்கார நோக்கமின்றி
இலேசான முறையில் தலை வாருவதில் குற்றமில்லை. பார்க்க:-
شامی
(12/435)
ரஜயீ தலாக்
கொடுக்கப்பட்ட பெண் அவள் தன்னை அலங்காரம் செய்து கொள்ள அனுமதி உள்ளது. பார்க்க:-
بدائع
الصنائع (3/209)
لا
يلزمها أن تلبس ثوبا أبيض مدة العدة،
கணவனை இழந்த இத்தா இருக்கும்
பெண்மணி வெண்ணிற ஆடைத்தான் அணியணும் என்பது கட்டாயமல்ல.
بل يجوز
لها أن تلبس ما تشاء من الثياب ـ ما لم يكن ثوب زينة
அழகையும் ஆடம்பரத்தையும் தராத எந்தவொரு ஆடையையும் அணிந்து கொள்ளலாம்.
قال
النووي في شرح صحيح مسلم:
رخص
جميع العلماء في الثباب البيض، ومنع بعض متأخري المالكية جيد البيض الذي يتزين به
அந்த அடிப்படையில்
வெண்ணிற ஆடைகளையும் அணிந்து கொள்ளலாம்.
அதே சமயம் அந்த வெண்ணிறமும் அழகு தரும் ஆடையாக இருந்தால்
அதையும் அணிவது தடையாகும்
عدة
المرأة وقت ، وليست نية
அதே போல்
இத்தாவிற்கான துவக்கம் அது நிய்யத்தை பொருத்ததல்ல. எப்போது எண்ணுகிறாளோ
அப்போது அவள் வைத்து கொள்வதற்கு.. மாறாக, கணவன் இறந்த
நேரத்திலிருந்தே துவங்கிவிடுகிறது...
إن هذا
العمل منها عمل محرم
لأن
الواجب على المرأة أن تبدأ بالعدة والإحداد من حين علمها بوفاة زوجها
ولا يحل
لها أن تتأخر عن ذلك لقوله تعالى (وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ
أَزْوَاجاً يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْراً)
وانتظارها
شهرا أو شهرين ثم تبدأ بالعدة إثم ومعصية لله عز وجل
எனவே, எந்த ஒரு
காரணத்திற்காகவும்,
சம்பிரதாயத்திற்காகவும் இத்தா நேரத்தை தள்ளி போடுவது
மிகப்பெரிய பாவச்செயலாகும்
ولا
يحسب لها من العدة إلا ما بقي من المدة من وفاته إلى أربعة أشهر وعشرة أيام.
لأن
العدة تعبدية وتحسب من حين الوفاة ولا تؤخر ولا ثانية
ولو
علمت المرأة بخبر وفاته بعد شهر تجلس في عدتها ثلاثة أشهر وعشرة أيام ولو علمت
بوفاته بعد ثلاثة أشهر لم يبق من عدتها إلا شهر وعشرة أيام
கணவன் இறந்த
செய்தி ஒருமாதத்திற்கு பின் கிடைத்தால் மீதமுள்ள 3மாதம் 10
நாட்கள் மட்டுமே இத்தா இருப்பாள்.
ولو
علمت بوفاته بعد خمسة أشهر لا عدة عليها
5 மாதத்திற்கு பின் செய்தி
கிடைத்தால் அவளுக்கு இத்தாவே கிடையாது.
فالعدة
من الوفاة لا من حين العلم بها وتوقيتها رباني ليس للعبد فيها اختيار وتخطئ
بعض
النساء
فتقول
أخرج مع الجنازة إلى المقبرة ثم أجلس في العدة نقول لها عصيت الله تعالى لأنك خرجت
في العدة
ஆக இத்தா காலம்
கணவன் இறந்த நேரத்தில் இருந்தே துவங்கி விடும். இத்தாவை துவக்கும் பெண்மணிக்கு
மாற்றார்களிடம் இருப்பதைப்போல சடங்குகளும், சம்பிரதாயங்களும் நம்மார்க்கத்தில்
அறவே கிடையாது. ( நன்றி: மௌலானா, மௌலவி அப்துர்ரஹீம் அன்வாரீ, ஃபஸ்அலூ
அஹ்லத்திக்ர். வாட்ஸ்அப் தளம் )
இந்த உம்மத் ஒரு
விஷயத்தை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முகத்திரை நிகாப் அணிவது
குறித்தான விமர்சனமாக இருக்கட்டும், முத்தலாக் குறித்தான விமர்சனமாக இருக்கட்டும்,
தற்போதைய புர்கா படத்தின் இத்தா குறித்தான விமர்சனமாக இருக்கட்டும் இந்த சங்கிகளுக்கு
தைரியமாக விமர்சிப்பதற்கு தைரியத்தைக் கொடுப்பதே நமக்குள் இருந்து கொண்டு, பித்அத்
என்றும், ஹராம் என்றும் நாளொன்றுக்கு ஒரு தீர்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும்
நாற்றம் பிடித்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் தான்.
இத்தா குறித்து
இவர்கள் எவ்வளவு பேசியிருக்கின்றார்கள்? முகத்திரை அணிவதை எவ்வளவு விமர்சித்திருக்கின்றார்கள்?
தற்போது கூட முஸ்லிம் சமூகத்தில் இவர்களின் சொல்லைக் கேட்டு “இத்தா” விஷயத்தில்
வரம்பை கடக்கக் கூடியவர்கள் அநேகம் பேர் இருக்கின்றார்கள். இவர்கள் பேசிய
வீடியோக்கள் ஏராளமாக பல ஆண்டுகளாக யூடியூப்பில் இருக்கின்றது. இவர்களையும்,
இவர்கள் விமர்சனங்களையும் சகித்துக் கொண்டதன் விளைவு தான் இன்று இந்த இடத்தில்
வந்து நிற்கின்றோம்.
எனவே, எதிர்காலங்களில்
இவர்களுக்கும் சேர்த்துமான முடிவுகளையே நாம் எடுக்க வேண்டும்.
ஹிஜாபாக இருக்கட்டும், இத்தாவுடைய விஷயமாக இருக்கட்டும்,
பெண்கள் வேலைக்கு செல்வது தொடர்பான விஷயங்களாக இருக்கட்டும் நம்முடைய ஷரீஅத் நமக்கு
சொல்லித் தந்திருக்கின்ற வழிகாட்டுதல் படி நாம் இன்னும் கூடுதல் முனைப்போடு வாழ்வது
தான் இது போன்ற விமர்சனங்களுக்கு நாம் தரும் சரியான பதிலடியாக இருக்கும்.
ஏனெனில், நபித்தோழர்களான ஸஹாபாக்கள் அவர்களை எதிர்க்கும்
போக்கு வலுவடைந்த போது இன்னும் கூடுதலாக மார்க்கத்தை நேசித்தார்கள். மார்க்கத்தைப்
பின்பற்றினார்கள்.
ஸஅத் இப்னு வக்காஸ் (ரலி) அவர்களின் தாயார் “தாய்ப்பாசம்”
எனும் அன்பை வைத்து தம் மகன் ஸஅத் இப்னு வக்காஸ் (ரலி) அவர்களை மிரட்டிய போது தாயே!
உங்களுக்கு நூறு உயிர்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு உயிராக உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு
போய்க் கொண்டிருந்தாலும் நான் என் இறை நம்பிக்கையிலிருந்து, இறை மார்க்கமான இஸ்லாத்திலிருந்து
ஒரு போதும் பிறழ்ந்து விட மாட்டேன்” என்று மிகவும் உறுதியோடு முழங்கினார்களே!. அது
போன்று ஹிஜாப் விஷயத்திலும், இதர மற்ற விஷயங்களிலும் நாம் ஷரீஆவின் சட்ட திட்டத்தின்
படி வாழ்வதை இன்னும் உறுதி செய்ய வேண்டும். இன்னும் கூடுதல் பிடிப்போடு கடை பிடிக்க
வேண்டும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் ஷரீஅத்தின்
படி வாழ்வதற்கு அருள்புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!.
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்
ReplyDelete