சினிமா ஊடகம்! கால்
பதிக்குமா இஸ்லாமிய சமூகம்?..
நேர்மையான ஊடகம்
என்ற வார்த்தையே தற்போது எந்த ஊடகத்தை நோக்கியும் சொல்ல முடிவதில்லை. அச்சு ஊடகம்
தொடங்கி காட்சி ஊடகம் வரைக்கும் எங்குமே பாசிசத்துக்கு ஒத்து ஊதும் தேசிய
அர்னாப்புகளாகவும்,
தமிழக பாண்டேக்களாகவுமே இருக்கிறார்கள். இதில் அச்சு
ஊடகங்கள் மிக மோசமாக சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது.
வட இந்தியா இன்று
மிக மோசமாக இந்துத்துவ வாதிகளின் பிடியில் இருப்பதற்கு முக்கிய காரணம், ஊடகங்களின் செய்திகள் மூலமாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் வெறுப்பு. ஒரு
செய்தியில் உண்மை இருக்கிறதோ இல்லையோ முஸ்லிம் பெயர் வந்து விட்டால் முதற்பக்க
செய்தி, ஹாட் நியூஸ் என விவாதங்கள் நடக்கும். இதை கேள்விக்கேட்காமல் விட்டு, இறுதியாக அதனை உண்மையென்று நம்பி இன்று முஸ்லிம் வெறுப்பும், இந்துத்துவ ஆதரவு நிலையும் வட இந்தியாவில் பெருமளவில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, ஒரு செய்தி:- டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக சலீம் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் 2015 -ம் வருடம் ஆகஸ்ட்
மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் செல்லும்போது நிற்கவே முடியாத அளவுக்கு தள்ளாடிக்
கொண்டிருப்பது போலவும்,
ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி ரயில் பெட்டிக்குள்ளேயே
சுருண்டு விழுவது போலவும் ஒரு வீடியோ காட்சி அப்போது சமூக வலைத்தளங்களில்
பரபரப்பாக உலா வந்தது. அவர் குடிபோதையில் தடுமாறுவதாக அந்த காட்சி பகிரப்பட்டது.
அதை அப்படியே
திருடிக்கொண்ட காட்சி ஊடகங்கள், அந்த காவலர் யார்? உண்மையில் நடந்தது என்ன? என்ற அடிப்படை
விவரங்களைக்கூட விசாரிக்காமல் அந்த வீடியோவை ஒளிபரப்பின.
காட்சி ஊடகங்கள்
அனைத்தும் அவரை ஒரு குடிகாரர் போலவும், அவரால் பயணிகளுக்கு
பாதுகாப்பின்மை ஏற்பட்டதாகவும் தீர்ப்பு கூறின. இதுகுறித்து விசாரித்த காவல்துறை, சலீமை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தது. இந்த அதிர்ச்சியில் அவருடைய
மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
தன்னுடைய கண்ணியம்
பாதிக்கப்பட்டதாகக் கருதிய சலீம் நீதிமன்றத்தை நாடினார். பிரஸ் கவுன்சிலும்கூட
புகார் செய்தார். விசாரணையில், அவருக்கு மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு
பக்கவாதம் ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் நரம்புகளில்
ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவ்வப்போது இதுபோல் நிலை தடுமாறுவார் என்பது
தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட அந்த
நிகழ்வின்போது அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பதும் புலனாகியது. பின்னர் அவர்
பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள்கள், பணி நாள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆனால், அவர் பக்கம் தீர்ப்பு கிடைத்தும் அதுகுறித்த செய்தியை எந்த ஒரு பத்திரிகையும், காட்சி ஊடகமும் வெளியிடவே இல்லை.
இப்போது அதே
வேலையை தமிழகத்தில் சில ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
2009 -ல் வெளிவந்த ‘ஹமாம் சோப்'
விளம்பரம் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது,
சுரணையைக் கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பனக்
குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு
காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோடு
விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம்
விளையாடிக் கொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தைச்
சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்டுல இந்த சந்தேகமெல்லாம் ஏங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான்
அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை இழுத்து அடித்தபடி
அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆட்டோவுல அந்தக் குழந்தைங்களோட
ஒட்டிண்டு போறாளே,
அதான்.” இதைச் சொல்லும்போது அவர்
கண்களிலும்,
உடல்மொழியிலும் வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக
பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.
அந்தக் குழந்தைகள்' என்று அவர் குறிப்பிடுவது யாரை? எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளையா?
தொழு நோயாளிகளையா? இவைகூட தொற்றுநோயில்லையே!
பொத்தாம் பொதுவாக அந்தக் குழந்தைகள் என்று குறிப்பிடுவது, மற்ற எல்லா குழந்தைகளையும்தானே. அப்படியானால், அந்த ஒரு சிறுமியைத் தவிர மற்ற குழந்தைகள் சொறியோடு சுத்தமற்றவர்களாக
இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தப்படுகிறது! ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து
போவது, தெருவில் சொறிநாயோடு விளையாடுவதற்கு சமமா என்ன? இதைவிடவும் நிர்வாணமாக சாதிய வக்கிரத்தை வேறெப்படி வெளிப்படுத்த முடியும்?
ஒரு சோப்பை
உயர்த்திப் பிடிக்க இவர்கள் இழிவுபடுத்த நினைப்பது யாரை? விளம்பரக் களம் ஒரு பார்ப்பன வீடு என்பதால், காலங்காலமாகத் தொடரும் தீண்டாமையின் அடிப்படையில் இவர்கள் குறிப்பிடுவது தலித்
குழந்தைகளை என்று வைத்துக் கொள்ளலாம் தானே!
எந்தத்
தணிக்கையுமின்றி இந்த விளம்பரம் நாள்தோறும் பல நூறு முறை ஒளிபரப்பாகியது. நம்
சுயமரியாதையை கொஞ்சம்கூட அது சுண்டவில்லை. கிராமத்தின் தேநீர்க் கடைகளில்
இருக்கும் பேதத்தை கவனிக்கும் நாம், நகரங்களில் சாதியின் நவீன
வடிவங்களை சற்றும் பொருட்படுத்துவதில்லை. பல மாதங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த
விளம்பரத்தை எதிர்த்து ஒற்றைக் குரல்கூட ஒலிக்காதது, சாதி எதிர்ப்பாளர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தேடலை உருவாக்கி
விட்டிருக்கிறது. ( நன்றி: கீற்று 15/11/2009 )
அச்சு மற்றும்
காணொளி ஊடகங்களின் அறமற்ற பாதையை அடையாளப் படுத்தும் ( Samples ) மாதிரிகள் தான் இந்த இரண்டு செய்திகளும்.
உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின்,
வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த
உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன! இதில்
எதுவும் எதற்கும் சளைத்ததில்லை! பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை
மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும்
இருக்கின்றன! வர்த்தக உத்தியோடு வக்கிர புத்தியும் இணையும்போது, எவையெல்லாம் செய்தியாகும் / காட்சியாகும் என்பதற்கு நாள்தோறும் பல சான்றுகளை
நாம் குறிப்பிட முடியும்.
அந்த வரிசையில்
தற்போது சில காலங்களாக
திரைத்துறையும், சினிமா ஊடகமும்
முஸ்லிம் சமூகத்தின் மீதும்,
இஸ்லாத்தின் மீதும் வன்மத்தை
வீச ஆரம்பித்துள்ளன.
ஊடகங்களின் முக்கியத்துவம்..
ஊடகம்தான் இன்று
உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று
முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில்
இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால்
சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு
ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும்
தப்பும் தவறுமாகச் சித்தரிக்கக் கூடிய செய்திகள்தான் ஊடகங்களினூடாக மக்கள்
மன்றத்திற்கு வருகின்றன.
முஸ்லிம்கள்
தீவிரவாதிகள்;
பயங்கரவாதிகள்; பண்பாடு அற்றவர்கள்; இஸ்லாம் பிற்போக்குத்தனமானது என்ற அடிப்படையில்தான் கருத்துக்கள் வலம்
வருகின்றன.
இது போன்ற
தருணங்களில் முஸ்லிம்களுக்கென தனி ஊடகம் தேவை என்ற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.
முஸ்லிம்களுக்கென
ஊடகம் தேவையென்றால் முஸ்லிம்களது பிரச்சினைகளை முஸ்லிம்களுக்குச் சொல்வதற்கான
ஊடகமாக மட்டும் அது இருக்கக் கூடாது.
இஸ்லாமிய
சிந்தனையுடன் உலக நிகழ்ச்சிகளை நோக்கி, தேசிய சர்வதேசப் பிரச்சினைகளுக்கு
இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கக்கூடிய ஊடகமாக இஸ்லாமிய ஊடகம் இருக்க
வேண்டும். அது முஸ்லிம்கள் மட்டும் பயன் படுத்தும் ஊடகமாக இல்லாமல் மாற்று
சமூகங்களும் பயன்படுத்தும் ஊடகமாக இருக்க வேண்டும். இதன் மூலம் இஸ்லாம் இன்றைய
காலத்துக்கும் உகந்தது;
இன்று உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில்தான்
தீர்வு இருக்கின்றது என்ற உண்மை எல்லா மக்களின் உள்ளங்களிலும் ஊன்றப்பட வேண்டும்.
இதுதான் இஸ்லாமிய ஊடகத்தின் இலட்சியமாக இருக்க வேண்டும்.
இத்தகைய இலட்சியம்
கொண்ட அந்த ஊடகம் ஒன்றை முஸ்லிம்கள் உருவாக்குவதற்கு மிக விரைவில் முன் வர
வேண்டும்.
ஒவ்வொரு
காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த விடயம்தான்
குறித்த அந்த காலத்தின் மாபெரும் சக்தியாக திகழும். இதனைத்தான் மலேசியாவின்
முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹமட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
’19ஆம் நூற்றாண்டில்
யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின்
சக்தி,
21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள்தான்
அந்நூற்றாண்டின் சக்தி’
அதே போன்று
சமூகவியல் அறிஞர் கோவிந்தநாத் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘இன்றைய உலகின் ஜாம்பவாhன்கள் ஊடகத்துறையினரே அவர்கள்தான் இவ்வுலகில் கருத்துருவாக்கத்தை (opinion makers) தீர்மானிக்கிறார்கள்’
ஆக மேலுள்ள
இக்கருத்துக்களின் பிரகாரம் பார்க்கின்றபோது நிதர்சனமும் அதுதான் என்பதனை புரிந்து
கொள்ள முடிகின்றது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்திகளாகவும், ஜாம்பவான்களாகவும் ஊடகங்களே திகழ்கின்றன. அதே போன்று சமுதாய
கருத்துருவாக்கத்திலும் மாபெரும் பங்கினை வகிக்கின்றது.
இந்தளவு
சக்திவாய்ந்த இவ் ஊடகங்களில் பெரும்பான்மையானவை இன்று யாரிடமுள்ளது? யார் அதனை இயக்குகிறார்கள்? என்ற வினாக்களை
எழுப்பினால் பெரும்பான்மையான மிகப்பிரதானமான ஊடகங்கள் யூதர்களிடமும்
காணப்படுகிறது. இதனால் அவர்களே ஜாம்பவான்களாகவும் கருத்துருவாக்கத்தை
தீர்மானிப்பவர்களாகவும் (opinion
makers) காணப்படுகிறார்கள்.
இதனால்தான்
சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும்
சித்தரிக்கப்படுகிறார்கள். புனித இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாதம் நிறைந்ததாகவும்
காட்டுமிரான்டி தனகமானதாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. திரைபடங்களையும் நாடகங்களையும்
நாசூக்காக இதற்காக பயன்படுத்துகிறார்கள்.
எப்படி அச்சு
ஊடகங்கள் காட்சி ஊடகங்கள் குறித்து கோரிக்கைகள் சமூகத்தில் எழுகிறதோ அதே போன்று
சினிமா துறையிலும் முஸ்லிம்கள் காலூன்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் சமீபத்திய
காலங்களில் எழுப்பப்படுகிறது.
இஸ்லாமிய சினிமா சாத்தியமா?
"முஸ்லீம்களும்
இஸ்லாமிய சினிமா எடுக்க வேண்டும்” என்று சகோதரர் ஆளூர்
நவாஸ் MLA, இலங்கையை சேர்ந்த ஓர் அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது
அந்த குரல் சமூக வலைத்தளங்களில் வலிமையாக ஒலிக்கிறது.
பாலைவனச் சிங்கம்
எனப்படும் "ஒமர் முக்தார்' படத்தைத் தந்த இயக்குநர்
முஸ்தபா அக்கட்,
1976-ல் எடுத்த மற்றொரு மகத்தான படைப்பு "தி மெசேஜ்'. முகமது நபியின் வாழ்வையும் இஸ்லாத்தின் வரலாற்றையும் விளக்கும் திரைக்காவியம்.
35ஆண்டுகள் கடந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
நபியின்
உருவத்தைக் காட்டாமலேயே மற்ற கதாபாத்திரங்கள் மூலமாகவும் பிரம்மாண்டமான பட
உருவாக்கத்தின் மூலமாகவும் வரலாற்றைச் சொன்ன இப்படம் மாஸ் கம்யூனிகேஷனால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ம.ம.க. எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, த.மு.மு.க. பொதுச்
செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, அண்ணா பல்கலை முன்னாள்
துணைவேந்தர் மன்னர் ஜவகர்,
எல்.கே.எஸ் ஜூவல்லர்ஸ் இம்தியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற
நிகழ்வில் 12/10/2013
அன்று சென்னை ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில்
வெளியிடப்பட்டது.
இஸ்லாம் பற்றி
இஸ்லாமியர்களே இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிலர்
தவறாக விளக்கம் சொல்லியே விலக்கி வைத்துவிட்டார்கள். படங்களை வீட்டில் வைத்து
வணங்குவதுதான் தவறு. ஆனால்,
படமே வீட்டில் இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்படி
விளக்கம் சொல்கிறவர்கள்தான் ரூபாய் நோட்டை பாக்கெட்டி லேயே வைத்திருக்கிறார்கள்.
அதில் காந்தி படம் இருக்கிறதே.. எனவே இப்படி தவறான விளக்கம் சொல்லிக்
கொண்டிருந்தால் நாம் காணாமலேயே போய்விடுவோம்.
சினிமா என்பது
ஹராம் (தீமை) அல்ல. இதுபோன்ற ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஹராம்' மறைந்த (மர்ஹூம்) கவிக்கோ அப்துல்ரகுமான் இந்த மெசேஜை (ஃபத்வாவை) சொன்ன இடம், "தி மெசேஜ்'
என்ற திரைப்படம் தமிழில் திரையிடப்பட்டு குறுந்தகடாக
வெளியிடப்பட்ட 12/10/2013
அன்று இந்த கருத்தை கூறினார்.
இன்றைய சூழலில், அன்பையும் சகோ தரத்துவத்தையும் வலியுறுத்தும் மார்க்கத் தையும், பிற மதத்தினருடன் இணைந்து
வாழும் இங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையையும்
விளக்குவதற்கு சினிமா என்ற ஆயுதம் தேவை என்ற கருத்து படவெளியீட்டு விழாவில் பரவலாக
பலரின் பேச்சின் மூலம் வெளிப்பட்டது. (நன்றி: usmanihalonline. blogspot.com )
ஈரானில் சர்வதேச
பஜ்ர் திரைப்பட விழா வருடாவருடம் நடத்தப்பட்டு வருகின்றது. 12 - ஆவது சர்வதேச பஜ்ர் திரைப்பட விழாவில் முஸ்லிம் திரைப்படத் தயாரிப்பாளர்களதும்
இயக்குனர்களதும் முதலாவது கூட்டம் நடைபெற்ற போது, அதில் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட மலேசியாவின் மன்சூர் பென்புத்ரா எனும்
தயாரிப்பாளர் ஆற்றிய உரையில், அவர் குறிப்பிட்டிருந்த
சில கருத்துக்களை இங்கு பரிமாறிக் கொள்ளலாம்.
'முஸ்லிம் தயாரிப்பாளர்கள், உண்மையான இஸ்லாமிய விழுமியங்களையும் கருதுகோள்களையும் பிரதிபலிக்கின்ற
இஸ்லாமியத் திரைப்படங்களை,
குறிப்பாக முஸ்லிம் நாடுகளிலிருந்து தருவதற்கு முயற்சிக்க
வேண்டும். ஹொலிவூட்டானது முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தியலை
அறிமுகப்படுத்தியுள்ளது. உணர்வுகளின் தூண்டலுக்கு முக்கியத்துவமளித்தல், போலியான பதட்டத்தை உருவாக்குதல், மோதல்களைத் தூண்டுதல், ஆன்மீக விடயங்களைக் கேலிசெய்தல், தவறான கருத்துக்களைப்
புகுத்துதல்,
இசையினைத் துஷ்பிரயோகம் செய்தல் என்பன அவை அது
அறிமுகப்படுத்தியுள்ள பண்புகளுள் சிலவாகும். இஸ்லாமிய சினிமாவினால் மட்டுமே
ஹொலிவூட்டின் ஆரோக்கியமற்ற வளர்ச்சியையும், அது கொண்டுள்ள சமுதாய
வீழ்ச்சிக்கான தூண்டல்களையும் தடுக்க முடியும். இஸ்லாமிய சினிமாவானது, ஹொலிவூட் சினிமாவுக்கு மாற்றமானதாக இருக்க முடியும். இஸ்லாமிய சினிமாவினால்
இஸ்லாமிய ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் அதிகரிக்க முடியும்'.
'ஈரானிய சினிமா, மனித வாழ்வு மற்றும் பிரபஞ்சம் பற்றிய இஸ்லாத்தின் கருத்தை அழகாக
முனவைக்கின்றது'
என்பது இர்ஷாட் நளீமியின் கூற்று. 'இஸ்லாமிய கருதுகோள்களின் முழுப் பரிமாணத்தையும் வாழ்வின் பல்வேறு தளங்களின்
முனைகளிலிருந்து ஆரம்பித்துப் பேசும் தனித்துவப் பண்பு கொண்டது ஈரானிய சினிமா' என்பது முஹம்மத் நௌபரின் கருத்து. ( நன்றி: http://palichkahatowita. blogspot.com/2011/07/blog-post_6659.html?m=1 )
1. சாத்தியமே!! என்று சொல்பவர்களின் வாதம்...
நபிகளாரின்
அவர்களின் குடும்பத்தினரின் எளிமையான வாழ்க்கையை இன்னும் தூய்மையாக விளங்காகதன்
காரணமே இஸ்லாமிய உம்மா இவ்வளவு சீரழிவுக்கு காரணமாகும். எனவே நபிகளாரின் வரலாற்று
சரித்திரத்தை ,
அவர்களது பின் இஸ்லாமிய தலைமைத்துவத்தை சினிமா என்ற
மீடியாவினால் சமூகத்தை ஒற்றுமையோடு ஒழுக்க மயமாக்கலாம். இஸ்லாத்தை தூய்மையாக
பின்பற்றியவர்கள் அல்லாஹ்வையும் தூதரையும் சுவர்க்கம் நரகம் என்பதையே தங்களுக்குள்
மயப்படுத்தி இருந்தார்கள்.
இன்றைய நவீன
இயந்திர தொழில் நுட்ப சிந்தனைக்குள் சிக்கி இருப்பவர்களை அதைக் கொண்டுதான்
இஸ்லாமிய மயப்படுத்த முடியும். அதனை சிந்தனைக்குள் புகுத்த வேண்டுமாயின் அதன்
செயல் வடிவங்களை இவ்வாறுதான் என்று கலை காட்சியினால் கொண்டு வருதை நிச்சயமாக
இஸ்லாம் வெறுக்காது. இறை உள்ளங்கள் அவனை ஞாபகிப்பது கொண்டு மட்டுமே அமைதி பெரும்.
என்ற இறைவாக்கை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் கொண்டு வரவேண்டுமாயின் முதலில் அந்த
அசுத்தமான உள்ளங்களை சுத்தப்படுத்த வேண்டும். அந்த செயற்பாட்டை இஸ்லாமிய
சினிமாக்களால் இலேசாக செய்ய முடியும். இறைவன் நபிமார்கள் மலக்குகள் இமாம்கள்
தவிர்ந்த ஏனைய காட்சிகளை உருவப்படுத்தி ஒப்புவமை செய்வதில் கல்வி நோக்கம் வெற்றி
பெரும்.
சினிமா ஒரு நல்ல
மீடியா. ஜனங்களிடம் போய் எளிதாக சேர்கிற ஒரு மீடியா. மக்கள் மனசில் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு மீடியா சினிமா. இந்தமீடியாவின் மூலமாக நாம்
நினைத்ததைச் சொல்லலாம். எதிரிகள் அதனை நமக்கெதிராக பயன்படுத்துகிறார்கள்..
அதிலிருந்து சமூகத்தை காப்பற்ற வேண்டுமாயின் இஸ்லாமிய சினீமா மக்களிடம் தாக்கத்தை
ஏற்றபடுத்த வேண்டும். இஸ்லாம் பெண்ணை பொருளாக பார்க்கவில்லை.பெண்ணின் உடல்வாகு
வெளிப்படுத்தினால் அது கவர்ச்சியாக ஆணை ஈர்க்கும் காமப் பொருளாக மாறிவிடும்
என்பதற்காக தான் அவள் முகங்களையும் கைகளையும் தவிர மற்றவற்றை மறைத்து அவளை பெண்ணாக
உலகுக்கு காட்டுகிறது.
ஒரு காதல்
சினிமாவைப் பார்த்து காதலில் ஆசை கொள்கிறான், ஒரு காமச் சினிமா
பார்த்து காமக்கிருக்கனாக மாறுகின்றான், ஒரு விளையாட்டு வீரரை
பார்த்து விளையாட்டில் ஆசை கொள்கின்றான். இஸ்லாமிய இறை நம்பிக்கையை தெளிவு
படுத்துகின்ற வரலாற்று,
படிப்பினை சினிமாவினால் ஏன் ஒருவர் அதில் ஆசை கொள்ள
மாட்டார். நிச்சயமாக முடியும்.
எதிரிகள் சரியாக
திட்டமிட்டு செயற் படுத்துகின்ற போது. ஏன் உண்மை சரித்திரங்களை படிப்பினைகளை
எம்மால் இந்த சினிமா என்ற மீடியாவால் செய்ய முடியாது.?
சமூகத்தில்
எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் எதிர் காலத்தில் இருப்பார்கள். ஏன்
இவர்களினால் சீரழிந்த சினிமாவுக்குள் சிக்கி இருக்கும் சமூகத்தை காப்பாற்ற
முடியாது. ஒரு அறிஞன் அவனது அறிவுரையினால் திருத்துவான். ஒரு போலீஸ் அவனது
பலத்தினால் திருத்துவான் ஒரு அரசியல்வாதி அதிகாரத்தினால் திருத்துவான். ஒரு
நீதிபதி சட்டத்தினால் திருத்துவார். ஒரு கலைஞன் அவனது கலைகளால் ஏன் திருத்த
முடியாது?
யார்
விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இந்த தொழில் நுட்ப சிந்தனைக்குள் மனிதன்
சிக்ககிக் கொள்ள வேண்டிய துரதிஷ்ட நிலைக்கு உலகம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டு
விட்டது.
நாம் இந்த
நுட்பங்களை பயன்படுத்தி ஒரு நல்ல இஸ்லாமியனாகவும் வாழமுடியும். அதற்கு மாற்றாக ஒரு
ஷைத்தானிய மனிதனாகவும் இருக்க முடியம். விரும்பியோ விரும்பாமலோ நாம் இந்த தொழில்
நுட்பங்களை மீடியாக்களை பயன்படுத்தி உலகின் ஒவ்வொரு வீட்டிலும் இஸ்லாத்தின்
கதவுகளை தட்ட முடியும்.
இஸ்லாம் என்பது
மறைவை நம்பிக்கை கொள்ள செய்கின்ற மார்க்கம் அதற்கு ஒப்பு ஒவமைகள் செய்ய
முடியாதுதான். ஆனாலும் கல்வி நோக்கத்திற்காகவும் ஒரு அழிவிலிருந்து சமூகத்தை
காப்பாற்றுவதற்காகவும் எமது இஸ்லாமிய வரலாற்றை,கோட்பாடுகளை ,காலாச்சார பாரம்பறிங்களை, ஒழுக்க பன்பாடுகளை
மீடியாக்கள் மூலம் தெளிவு படுத்தலாம்.
இன்றைய சீரழிந்த
சினிமாக்கள் இருக்கின்போது ஈரான் இஸ்லாமிய குடியரசின் சினிமா முழுக்க முழுக்க
இஸ்லாமிய மயப்படுத்தபட்டிருக்கிறது. கவர்ச்சிகளை தடுத்து கூடுதலான தனிக்கை
முறைகளோடு சமூதாய நிலை உணரவைக்க கூடிய திறனை கொண்டிருக்கிறது. உலகலாவிய ரீதியில்
பல அவார்டுகளை உணர்வு ரீதியாக பெற்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
சினிமா கலை பற்றிய அறிவு...
சினிமா கலை பற்றிய
அறிவு இஸ்லாமிய மக்களிடம் இல்லாததே அதற்கான காரணம் எனலாம்.
இஸ்லாமிய
கண்ணோட்டத்தில் கலைகளை இஸ்லாம் வெறுக்க வில்லை தடுக்கவில்லை. ஆனால் அந்த கலை
தக்வாவின் பார்வையோடு உம்மத்தின் நன்நோக்கங்களுக்காக செயற்பட்டால் அதனை ஆதரிக்க
முடியும்
யார் தங்களுடைய
எந்த தொழிலாக எந்த செயற்பாடாக எந்த அறிவாக இருந்தாலும் அது தக்வாவின் அடிப்படையில்
இருந்தால் நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ஒரு வைத்தியர் தனது பதவியை அல்லாஹ்வுக்கு
பொறுத்தமாக பயன்படுத்தி சம்பாதித்தால். ஒரு மீன் வியாபாரி, விரகு எடுப்பவன் மேசன் , என்ஜினியர் , எக்கவுன்டன் மேனஜ் மேன்ட யாராக இருந்தாலும் அவை அல்லாஹ்வின் திருப்தியை பெறுமா
அல்லாஹ்வின் கோபத்தை பொறுமா என்பதை தீர்மாணித்து செயற்பட வேண்டும்.
இதன் அடிப்படையில்
சினிமா என்பது அது அல்லாஹ்வின் அனுமதிகளை பேணி அவனது தடுத்தலை பேணி
நடைமுறைப்படுத்தபடுமென்றால் அதை நிச்சயம் இஸ்லாம் வெறுக்காது.
அந்த வகையில் இஸ்லாமிய சினிமாவிற்கு தக்வா அடிப்படையாக இருக்க வேண்டும்.
மாற்று வழிகள் இருக்கிறதா?..
ஒரு விஷயத்தில் மூழ்கிய
மனிதர்களை அதிலிருந்து பிரித்து எடுக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கு அதற்கு ஈடான
மாற்று வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. இந்த அனாச்சார கவர்ச்சி சினிமாவிலிருந்து
இஸ்லாமிய சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டுமாயின் அதற்கான மாற்று வழிகாட்டல்
செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நமது சமூதாயத்தில்
ஒய்வு நேரங்களை எவ்வாறு பயன்படுத்துவது கழிப்பது என்ற வழிகாட்டல் இது வரை
இனங்கானப்பட வில்லை. அதனால்தான் இந்த சீரழிந்த சினிமாவுக்குள் உம்மா சிக்கி
இருக்கிறது.
இன்று ஒவ்வொரு
வீடுகளிலும் அந்நியர்களின் சீனிமா ஆக்கிரமித்து இருக்கிறது. பெண்கள், ஆண்கள்,
தாய், பிள்ளைகள் என்று
குடும்பம் சகிதமாக அதில் மூழ்கி கண்டு கழிக்கிறார்கள்.
வெட்கங்களை மறந்து
கவர்ச்சி காட்டுபவர்களை கண்டு ரசிக்கிறார்கள். நமது ஒவ்வொரு வீடுகளிலும் தொடர்
நாடகங்கள் நமது பெண்களை ஆட்டிப்படைத்திருக்கிறது. எது இல்லா விட்டாலும், தொடர் நாடகங்களுக்கு பெண்களிடம் கூடுதலான வரவேற்பை தொலைகாட்சிகள் பெற்று
விட்டன. இவைகளில் நாளுக்கு நாள் மூழ்கி குர்ஆன் நபிளாரின் வரலாறு இஸ்லாமிய
கோட்பாடுகள் என்னவென்று அறியாதவர்களாகவும், அறிந்தவர்கள் அதை
மறந்தவர்களாகவும்,
அதிலிருந்து தூரமானவர்களாகவும் போய் விட்டார்கள். இந்த அவல
நிலைக்கு எது காரணம்?
படித்த சமூகம் முதல் படிக்காதவர்கள் வரை செய்த குறைபாடுகளே
இவை.!! ( நன்றி: http://noonvalkalame.blogspot.com/2011/01/blog-post.html?m=1 )
எனவே, சினிமா குறித்தான நம் சிந்தனையில் மாற்றம் தேவைப்படுகிறது. ஷரீஆவின்
வழிகாட்டிகளான குர்ஆன் ஸுன்னா இமாம்களின் ஆய்வுகளில் இருந்து இஸ்லாமிய சினிமா
விற்கான ஒரு சட்ட அமைப்பை உருவாக்க இந்த உம்மத்தை வழி நடத்தும் உலமாக்கள் முன் வர
வேண்டும் " என்று "இஸ்லாமிய சினிமா" சாத்தியம் என்று வாதிடுபவர்கள்
முன் வைக்கும் வலிமையான கருத்து இது.
. 2. இஸ்லாமிய சினிமா சாத்தியம் இல்லை என்பவர்களின் வாதம்....
சினிமாத் துறையின் சர்வதேச உயர் விருதாகிய ஆஸ்கார் விருது பெற்ற ஆன்டனி குயின் (Antony Queen) சினிமா பற்றிச் சொல்லும்போது,
“சினிமா என்பது கொச்சைத்தனம் கோலோச்சும் களம்”
(cinema is the area of the vulgarity) என்றார்.
நடிப்புத்
துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும்
நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை
தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மனிதனை மிருகமாக்கும்
குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், வன்முறை மற்றும் தீவிரவாத
செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள் என்று குற்றங்களின், பாவங்களின் குவியல்களாக காட்சி தரும் இந்த சினிமாத் துறையில் "இஸ்லாமிய
சினிமா" என்பது சாத்தியமற்ற ஒன்றே என்று கூறுபவர்களின் வார்த்தைப்
பார்ப்போம்.
1. பிறரைப் போன்று
நடித்துக் காட்ட அனுமதி இல்லை.
சினிமாவில்
நடித்துக் காட்டுவது தான் பிரதானமான வேலை. ஆனால், நடிப்பு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம்
அறியலாம்.
عن عائشة، قالت: ((حكيت للنبي صلى الله عليه وسلم رجلًا فقال: ما
يسرني أني حكيت رجلًا وأن لي كذا وكذا، قالت: فقلت: يا رسول الله، إن صفية امرأة،
وقالت بيدها هكذا، كأنها تعني قصيرة، فقال: لقد مزجت بكلمة لو مزجت بها ماء البحر
لمزج)) وفي لفظ لأبي داود: ((فقال: لقد قلت كلمة لو مزجت بماء البحر
لمزجته، قالت: وحكيت له إنسانًا. فقال: ما أحب أني حكيت إنسانًا وأنَّ لي كذا وكذا
(ஒரு தடவை) நபியவர்களிடம்
ஸஃபிய்யா இப்படி இப்படி என்று அவரை உயரமற்றவர் எனச் சொல்லிக்காட்டினேன்.
அதற்கவர்கள் 'நீங்கள் இப்பொழுது சொன்ன வார்த்தையை கடலில் கலந்தாலும் கடலை நாற்றமெடுக்கச்
செய்து விடும் என்று சொன்னார்கள். (ஒரு தடவை) நபியவர்களிடம் ஒருவரின் செயலை செய்து
காட்டினேன். ஒருவரைப் போன்று செய்து காட்டுவது எவ்வளவுதான் எனக்குக் கிடைத்தாலும்
நான் விரும்பமாட்டேன் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஆதாரம்:அபூதாவூத்-4875
இந்த
ஹதீதில் இரண்டு விசயங்கள் புலப்படுகிறது.
1. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள்
இப்படி இருப்பார்கள், அப்படி இருப்பார்கள் என்று சொல்லி செய்து
காட்டியதை வன்மையாக கண்டிக்கும் விதமாக, ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன வார்த்தையைக் கடலில் கலந்தால்
கடல் நாற்றமெடுக்கும் என்று கடுஞ்சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். ஒருவரை போன்று
நடித்து காட்டுவதையும், பழித்துக் காட்டுவதையும் இங்கு நபி (ஸல்)
அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
2. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒருவரை போல் நடித்து காட்டியபோது
நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஒருவர் போல்
நடித்து காட்டுவதற்கு எனக்கு எவ்வளவு தான் (இவ்வுலகில் செல்வமாகவோ, பணமாகவோ) எனக்கு கிடைத்தாலும் நான் அதை விரும்பமாட்டேன்
என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நடித்துக்காட்டுவதை விரும்பவில்லை, வெறுத்துள்ளார்கள் என்பது நம்மால் புரிந்துக்கொள்ள
முடிகிறது.
நம்முடைய
உயிருனும் மேலான நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறர் நடிப்பதை தடுத்துள்ளார்கள், தானும் பிறர் போல் நடித்துக் காட்டுவதை வெறுத்துள்ளார்கள்
என்று ஹதீஸின் மூலம் அறிந்த பிறகும், நடிப்போடு தொடர்புடைய இசை, சினிமா, சீரியல், நகைச்சுவை காட்சிகள் என்று நவீன சைத்தானிய ஊடகத்திலிருந்து
நம்மை தூரமாக்கினால் மட்டுமே சினிமா என்ற கேடுகெட்ட ஊடகத்தை அழித்தொழிக்க வலுவான
சக்தியாக முஸ்லீம்கள் உருவாக முடியும்.
2. இஸ்லாம் ஆபாசத்தை தடுக்கிறது.
1. வீட்டில்
வயது வந்த சிறுவர் சிறுமிகளை பிரித்து வைக்க இஸ்லாம் ஏவுகிறது.
பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்
போது கூட அவர்களின் ஒழுக்க நெறிகளை இஸ்லாம் மிக அழகாகக் கற்றுத்தருகிறது. இந்த
சட்டத்தை இஸ்லாம் மட்டுமே ஏவுகிறது.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ
وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِن قَبْلِ
صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ الظَّهِيرَةِ وَمِن بَعْدِ
صَلَاةِ الْعِشَاء ثَلَاثُ عَوْرَاتٍ لَّكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ
جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ
يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ]
وَإِذَا
بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ
الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ
عَلِيمٌ حَكِيمٌ [النور : 58و59]
”நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பக-ல் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இக்ஷாத் தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு)
உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன்
பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள்.
உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத்
தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு
முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ்
அறிந்தவன்; ஞானமிக்கவன்.”
(அல் குர் ஆன் 24
: 58-59)
ஒரு பெண் திருமணம்
செய்துகொள்ள அனுமதியற்ற எந்த ஆடவருடனும் தேவையற்ற முறையில், தேவையற்ற விதத்தில் தொடர்பை வைத்துக்கொள்ளக் கூடாது.
قُل
لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ
أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ [النور : 30]
”(முஹம்மதே!) தமது
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்”. (அல்குர் ஆன் 24
: 30)
وَقُل
لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا
يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ
عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ
آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء
بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي
أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ
التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ
الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ
بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى
اللَّهِ جَمِيعاً أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [النور : 31]
”தமது பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட
பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது
அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின்
புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின்
புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின்
காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது
அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை
கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.” ( அல்குர்ஆன்: 24:
31 )
3.
வீண் விரயங்களை கண்டிக்கிறது.
சினிமாத்துறையில்
செயலாற்றுவதன் மூலம் அல்லது அதனை பார்ப்பதற்கு எமது நேரத்தை ஒதுக்குவதன் மூலம்
செல்வம் மற்றும் நேரம் வீண்விரயம் செய்யப்படுகிறது.
1. செல்வம்:
ஒரு படத்தை எடுப்பதற்கு கோடிக்கனக்கான தொகையை செலவிடல்.
அல்லது படத்தை பார்ப்பவர் தினந்தினம் அதற்கு செலுத்துகிற
தொகை.
2. நேரம்:
ஒரு படத்தை பல மாதங்களை செலவிடுகிறார்கள்.
பார்ப்பவர் கிட்ட்த்தட்ட 3 மணி நேரத்தை இதற்காக ஒதுக்குகிறார். ஒரு மாதத்திற்கு 90 மணி நேரங்கள் வீணடிக்கப்படுகிறது.
பார்த்த படத்தை
பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பல மணி நேரங்கள் ஒதுக்கப்படுகிறது.
ஓய்வு நேரங்களை
போக்க சினிமாப் படங்களை பயன்படுத்துவதாக அதிகமான இளைஞர்களும் பெண்களும் காரணம்
சொல்லுவர்,
ஆனால் சரியாகப் பார்த்தால் படம்பார்ப்பதற்காகவே ஓய்வு
நேரங்களை உறுவாக்குகிறார்கள்.
வீண் விரயத்தை
அல்லாஹ் வெறுக்கிறான்,
وَهُوَ
الَّذِي أَنشَأَ جَنَّاتٍ مَّعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ
وَالزَّرْعَ مُخْتَلِفاً أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهاً
وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُواْ مِن ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُواْ حَقَّهُ
يَوْمَ حَصَادِهِ وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ [الأنعام
: 141]
”படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்)
ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒ-வ
மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை
உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல் குர்ஆன் 06:
141)
يَا
بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وكُلُواْ وَاشْرَبُواْ
وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ [الأعراف : 31]
”ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு
தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்!
பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்பமாட்டான்.” ( அல் குர்ஆன்: 07:
31 )
4. அநாகரியமான,
அசிங்கமான செயல், நடத்தைகளை வெறுக்கிறது.
إِنَّ
اللّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاء ذِي الْقُرْبَى وَيَنْهَى
عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
[النحل : 90]
‘நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.” (அல்குர் ஆன் 16 ; 90)
5. சமூக பிளவுகளை உண்டுபண்ணும் காரியங்களை தவிர்க்கிறது, தவிர்க்கும்படியும் கட்டளையிடுகிறது.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِّن قَوْمٍ عَسَى أَن يَكُونُوا
خَيْراً مِّنْهُمْ وَلَا نِسَاء مِّن نِّسَاء عَسَى أَن يَكُنَّ خَيْراً
مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ
الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ
الظَّالِمُونَ]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيراً مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضاً أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتاً فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ [الحجرات : 11و12]
”இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.” (அல்குர் ஆன் 49 :11-12)
சினிமாக்களில் ஒரு மதத்தை இன்னுமொரு மதம் விமர்சிப்பதையும்
ஒரு சமூகத்தை இன்னொரு சமூக தால்த்தி சித்தரிப்பதும் மலிவாகவே காணப்படுகிறது.
6. தீங்கு தரக்கூடிய எல்லா வகையான போதைகளையும் வேண்டாம் என போதிக்கிறது.
قُل
لاَّ يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ
فَاتَّقُواْ اللّهَ يَا أُوْلِي الأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [المائدة :
100]
"கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி
பெறுவீர்கள்!”
( அல்குர் ஆன் 05
: 100)
وَلْتَكُن
مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ
وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ [آل عمران : 104]
“நன்மையை ஏவி, தீமையைத்
தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க
வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” (அல்குர் ஆன் 03: 104)
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَن
يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاء وَالْمُنكَرِ
وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَا مِنكُم مِّنْ أَحَدٍ
أَبَداً وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَن يَشَاءُ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ [النور
: 21]
”நம்பிக்கை கொண்டோரே!
க்ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் க்ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழி கெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒரு போதும் உங்களில் எவரையும் அவன்
பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.” (அல் குர்ஆன் 24
: 21)
இன்றைய சினிமாவில்
குறிப்பாக மூன்று விஷயங்கள் தான் அதிகம் இடம் பெற்றுள்ளன.,
1. இசை –
‘இசையில்லா சினிமா இல்லை’ என்கிற போது அது
சமூகத்திற்கு தேவையற்றதாகும் என்று வடிவமைக்கப்பட்டுவிட்டது.
2. 3. புகைத்தல்,
மது அருந்துதல்........- எல்லா மத்தைச் சார்ந்த
மருத்துவர்களாலும் அறிஞர்கர்களாலும் வேண்டாம் என்று எடுத்துரைக்கிற செயல் தான்
புகை மற்றும் போதை தரக்கூடிய குடிபானங்களும்.
அந்த
வைத்தியர்களும் அறிஞர்களும் சொல்லுவது; சமூக ஒழுக்க விழுமியங்களை
சீரழிப்பதுடன் தனிமனித சிந்தனை மற்றும் உடல் உள ஆரோக்கியத்துக்கும் ஆப்பு
வைக்கிறது என்பதாகும்.
சினிமாவில்
அதிகமாக எல்லா நடிகர்களும் வில்லன்களும் போதியளவு இசை மயக்கத்திலும் போதை, புகை மயக்கத்திலும் பாதி படத்தை கடத்துகிறனர்.
இதைத்தான்
இஸ்லாமும் மிகத் தெளிவாகச் சொல்லுகிறது.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ
وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ
تُفْلِحُونَ [المائدة : 90]
”ஈமான் கொண்டோரே!
மதுபானமும்,
சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க
செயல்களிலுள்ளவையாகும்;
ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால்
நீங்கள் வெற்றியடைவீர்கள்.”
(அல் குர்ஆன்: 05 : 90 )
اِنَّمَا
يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى
الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ
فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ
நிச்சயமாக ஷைத்தான்
விரும்புவதெல்லாம்,
மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும்
உங்களிடையே பகைமையையும்,
வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே,
அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? ( அல் குர்ஆன்: 05
: 91 )
சினிமா துறையில் முஸ்லிம் சமூகம் கால் பதிப்பதற்கு
சாத்தியம் இருக்கின்றதா? என்பதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணி ஒரு புறம் நடக்கட்டும்.
அதற்கான ஃபத்வா – மார்க்க தீர்ப்பை மெதுவாக வழங்கட்டும்.
முதலில் சாத்தியம் இருக்கிற “அச்சு – பத்திரிக்கை”
ஊடகத்தில்லாவது இந்த உம்மத் கால் பதிக்கட்டும்! பெரிய அளவில் பதில் சொல்ல இயலா விட்டாலும்,
கொஞ்சமாவது விமர்சனங்களுக்கான விடைகளை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ப்போமே!
சிந்திக்கும் சமுதாயமே இப்புவியில் செழித்தோங்கி
இருக்கிறது! செயல்படும் சமுதயாமே இப்புவியில் ஜெயம் கண்டுள்ளது!
சிந்திப்போம்!! செயல்படுவோம்!!!
காலத்திற்கேற்ற தேவையான அத்தியாவசியமான அவசியம் செயலாற்ற வேண்டிய தேவையின் பதிவு.முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சினிமா என்ற உத்தியின் மூலமாக இஸ்லாமிய வெறுப்பை களைய வேண்டும் இஸ்லாத்தை உலகின் ஒவ்வொரு இல்லத்தின் கதவுகளையும் தட்ட வேண்டும்.கட்டுரைக்கு எதிர் விமர்சனங்களை யும்.எதிர்பார்க்கலாம்
ReplyDeleteநல்லதொரு ஆக்கம் காலத்திற்கேற்ற பதிவு... பாராட்டுக்களும் துஆக்களும்!
ReplyDelete