Wednesday 7 February 2024

மிஃராஜ் சிந்தனை 2024 – அல்லாஹ்வை சந்திக்க ஆசை கொள்வோம்!!!

 

மிஃராஜ் சிந்தனை 2024 – அல்லாஹ்வை சந்திக்க ஆசை கொள்வோம்!!!


அல்லாஹ்வின் தூதர் நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட பயணமான அல் இஸ்ரா வல் மிஃராஜ் இந்த உலகம் முடியும் நாள் வரை வரவுள்ள இந்த உம்மத்திற்கு பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

அல் இஸ்ரா வல் மிஃராஜை கடந்த கால அறிஞர் பெருமக்களும் சரி சமகால அறிஞர் பெருமக்களும் சரி பல்வேறு கோணங்களில் இந்த உம்மத்தின் கவனத்திற்கு ஆவணப்படுத்தி உள்ளார்கள்.

இஸ்ரா தொடர்பான வசனத்திற்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விரிவுரைகளை முஃபஸ்ஸிரீன்கள் எனும் விரிவுரையாளர்களும்,, மிஃராஜ் தொடர்பான நபிமொழிகளுக்கு விளக்கம் தருகிற முஹத்திஸீன்கள் ஆயிரக்கணக்கான விளக்கங்களையும் பதிவு செய்து இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த உம்மத்திற்கு சிறு மற்றும் பெரு நூலாக ஆயிரக்கணக்கான நூல்களை அன்பளித்துள்ளனர்.

அந்த நூல்களை வாசித்துப் பார்த்து அதில் இருந்து பெறப்படும் தலையாய சிந்தனைகளை, கருத்துக்களை சமூக முற்றத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் பெருந்தகைகள் ஒவ்வொரு ஆண்டும் மிஃராஜ் இரவில் பயான்களின் மூலம் தந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த "அல் இஸ்ரா வல் மிஃராஜ்" தருகிற மகத்தான சிந்தனைகளில் ஒன்று"ஒரு அடியார் அல்லாஹ்விற்கு விருப்பமான அடியாராக ஆகும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய சந்திப்பையும், அவனுடன் உரையாடுகிற நற்பேற்றையும், அவனிடத்தில் இருந்து சன்மானங்களையும், வெகுமதிகளையும் பெறுகிற தகுதியையும் அந்த அடியாருக்கு  நாளை மறுமையில் வழங்கி கௌரவிப்பான்" என்கிற மகத்தான சிந்தனையைத் தாங்கி நிற்கிறது.

ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய சந்திப்பின் மீதும் அவனுடன் உரையாடுவதன் மீதும் ஆவல் கொண்டு இந்த உலகில் நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய சந்திப்பையும், அவனுடன் உரையாடுவதற்கும் புனித மிஃராஜ் இரவில் ஒன்று கூடி இருக்கும் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

அல்லாஹ்வின் சந்திப்பை ஆசைப்பட வேண்டும்..

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பதும், அல்லாஹ்வின் சந்திப்பு என்பதும் உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும்.

மறுமை நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா)

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: 

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ ۝٢٢

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ ۝٢٣

தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

மேலும் கூறுகிறான்:

۞ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ ٱلْحُسْنَىٰ وَزِيَادَة وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌۭ وَلَا ذِلَّةٌ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ ۝٢٦

நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

இந்த ஆயத்தில் மேலும் அதிகம் உண்டுஎனும் வாக்கியத்திற்கு, நபி (ஸல் ) அவர்கள் அல்லாஹ்வை பார்ப்பதுஎன்று விளக்கம் கூறியுள்ளார்கள். மற்றோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் மூமின்கள் அல்லாஹவை சுவனத்தில் பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

ஏனென்றால் அல்லாஹ்வை பார்பது தான் சுவனவாசிகள் பெருகிற இன்பங்களிலேயே மிகப்பெரிய இன்பமாகும். 

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلاَ حِجَابٌ يَحْجُبُهُ
رواه البخاري 7443

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)நூல்: புகாரி 7443

ومنه قوله تعالى: ﴿ لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ ﴾ [يونس: 26]، فروى مسلمٌ في تفسيرها عن صُهيْبٍ: أنَّ رسولَ الله - صلَّى الله عليْه وسلَّم - تلا هذه الآية: {لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ} وقال: ((إذا دخل أهْلُ الجنَّةِ الجنَّة، وأهلُ النَّار النَّار، نادى منادٍ: يا أهلَ الجنَّة، إنَّ لكم عنْدَ الله موعدًا يُريد أن يُنْجِزَكُمُوه، فيقولون: وما هو؟ ألَم يُثقِّل موازينَنا، ويبيِّض وجوهَنا، ويدخلْنا الجنَّة، ويزحزِحْنا من النَّار؟ قال: فيكشف لَهم الحجاب، فينظرون إليه، فواللَّهِ، ما أعْطاهمُ الله شيئًا أحبَّ إليْهِم من النَّظر إليْه، ولا أقرَّ لأعيُنِهم)).

நபி (ஸல்) அவர்கள், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு என்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், “சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றது என்று அழைப்பு விடுக்கப்படுவர். அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், “(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றது என்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது,  பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. அதிகம் என்பது இது தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் , இது தான், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டு என்ற (10:26)  அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்னத் அல்பஸ்ஸார் 328

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய சந்திப்பு என்பதன் பொருள் என்ன?                 

وقولِه - عزَّ وجلَّ -: ﴿ تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلامٌ وَأَعَدَّ لَهُمْ أَجْراً كَرِيماً ﴾ [الأحزاب: 44]، فسَّرها طائفةٌ من العُلماء من السَّلف فمَن بعدَهم: بأنَّ لقاءَ الله برؤيتِه، وهو المعروفُ لغةً؛ قال ثعلبٌ - وهو من فحول علماء اللُّغة الكِبار -: "أجمع أهلُ اللُّغة على أنَّ اللُّقيا هاهنا هي الرُّؤية؛ وذلك لأنَّه لا يُمكن ملاقاةٌ وتَحيَّة وخطابٌ باللغة إلا بِرؤية".

அல் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 44 வது வசனத்திற்கு விளக்கம் தருகிற முந்தைய பிந்தைய முஃபஸ்ஸிரீன்களான அறிஞர்களில் சிலர் சந்திப்பு என்பதன் பொருள் அல்லாஹ்வை பார்ப்பது தான் என்று கூறுகின்றனர்.

மேலும், மொழியாக்க வல்லுனர்களில் மூத்த பெரும் உலமாக்களும் சந்திப்பு என்பதற்கு பார்ப்பது என்பது தான் பொருள் என்று கொள்கின்றார்கள்.

في أخبار داود عليه السلام يا داود أبلغ أهل أرضي أني حبيب من أحبني، وجليس من جالسني، ومؤنس لمن أنس بذكري، وصاحب لمن صاحبني، ومختار لمن اختارني، ومطيع لمن أطاعني، ما أحبني أحد أعلم ذلك يقينا من قلبه إلا قبلته لنفسي، وأحببته حبا لا يتقدمه أحد من خلقي، من طلبني بالحق وجدني ومن طلب غيري لم يجدني فارفضوا يا أهل الأرض ما أنتم عليه من غرورها، وهلموا إلى كرامتي ومصاحبتي ومجالستي ومؤانستي، وآنسوني أؤنسكم، وأسارع إلى محبتكم.

தாவூத்  (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஜபூரிலே கூறிய  கருத்தை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

தாவூத் அவர்களே!பூமியில் உள்ள எனது அடியார்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்.

யார் என்னை நேசிப்பார்களோ நான் அவர்களுடைய நேசன் ஆக இருக்கிறேன்.

யார் என்னோடு பேச விரும்புகிறார்களோ நான் அவர்களோடு பேசுகிறேன்.

யார் என்னுடைய நினைவில் மனமகிழ்ச்சியை காண்கிறார்களோ அவர்களுடைய மனதை நான் மகிழ்விப்பேன்.

யார் என்னோடு நட்பு வைக்க விரும்புகிறார்களோ நான் அவர்களுடைய நண்பனாக இருக்கின்றேன்.

யார் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்களோ நான் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.

யார் எனக்கு கட்டுப்படுவார்களோ அவர்களுடைய கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.

என்னுடைய அடியான் என்னை நேசிக்கிறான் என்று தெரிந்துவிட்டால், நான் அவனை எனக்காக ஏற்றுக் கொள்கிறேன்.நானும் அவனை நேசிக்கிறேன்.என்னுடைய நேசத்தை போன்று அவனுக்கு வேண்டப்பட்டவர்களில் யாரும் அவனை நேசிக்க முடியாது.

உண்மையில் யார் என்னைத் தேடுகிறானோ அவன் என்னை பெற்றுக் கொள்வான்.

யார் என்னை விட்டு விட்டு உலகத்தை தேடுகின்றானோ அவன் ஒருக் காலும் என்னை அடைய முடியாது.

       பூமியில் உள்ளவர்களே! இந்த உலகத்தை கொண்டு ஏமாந்து இருப்பவர்களே! இதை நீங்கள் தூக்கி எறியுங்கள்.

       என்னுடைய கண்ணியத்தின் பக்கம் ஓடோடி வாருங்கள்.என்னோடு நட்புக் கொள்வதற்கு ஓடோடி வாருங்கள்.என்னோடு பேசுவதற்கு ஓடோடி வாருங்கள்.

       தனிமையில் அமர்ந்து என்னுடைய நினைவில் இன்பம் காணுவதற்கு ஓடோடி வாருங்கள்.நான் உங்களுக்கு இன்பத்தை தருகிறேன்.

       உங்களை நேசிப்பதற்கு நான் விரைந்து வருகிறேன். ( நூல்: இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)

           

وقال الحسن البصري - رحمه الله -: " إذا أردت أن يكلمك الله فعليك بقراءة القرآن وإذا أردت أن تكلم الله فعليك بالدعاء وإذا أردت أن تكلم الله ويكلمك فعليك بالصلاة".

இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: "அல்லாஹ் உன்னுடன் உரையாட வேண்டும் என்று நீ விரும்பினால்  குர்ஆன் ஓதுவதை நீ வழமையாக்கிக் கொள்! 

நீ அல்லாஹ் உடன் உரையாட விரும்பினால் துஆ கேட்பதை வழமையாக்கிக் கொள்!   

நீ அல்லாஹ்வுடனும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உன்னுடனும் உரையாட வேண்டும் என்று விரும்பினால் (உபரியாக) தொழுவதை வழமையாக்கிக் கொள்!

عن ابن جابر : إن عَبد الله بن أَبي زكريا كان يقول : لو خيرت بين أن أعُمَر مئة سنة من ذي قبل في طاعة الله أو أن أقبض في يومي هذا ، أو في ساعتي هذه ، لاخترت أن أقبض في يومي هذا ، أو في ساعتي هذه شوقا إلى الله ، وإلى رسوله ، وإلى الصاحين من عباده.تهذيب الكمال , للمزي 14/523

இப்னு ஜாபிர் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்:- அப்துல்லாஹ் இப்னு அபூ ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம் "அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளோடு  நூறு வயது வரை வாழ்வது அல்லது வாழ்வின் இந்த நொடியிலேயே மரணிப்பது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு இஷ்டம் தரப்பட்டால் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், அல்லாஹ்வின் தூதரை, ஸாலிஹீன்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இன்றே, இந்த நொடியே மரணித்து விடும் வாய்ப்பையே தேர்ந்தெடுப்பேன்" என்று. ( நூல்: தஹ்தீபுல் கமால் )

ولقد ضرب الأنبياء الكرام مثلاً طيبا في حسن الشوق إلى الله تعالى , فها هو نبي الله موسى عليه السلام حين قال لله : { رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ } ( الأعراف 143 ) ، يطلب النظر إلى الله شوقاً إلى الله عز وجل لا شكاً في وجوده , ويدل عليه سؤال الله له وما تلك بيمينك, قال تعالى :\" وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى (17) قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَى غَنَمِي وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَى (18) سورة : طه.

قال المفسرون : وقد كان يكفى موسى - عليه السلام - في الجواب أن يقول : هي عصاي ، ولكنه أضاف إلى ذلك أتوكأ عليها وأهش بها على غنمي. لأن المقام يستدعى البسط والإطالة في الكلام ، إذ هو مقام حديث العبد مع خالقه ، والحبيب مع حبيبه .راجع: التفسير الوسيط 1/2818.

 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பார்க்க வேண்டும், சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டவர்களாக இருந்தார்கள்  என்று அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ‌ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ‌ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا‌ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ‏

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்என்று கூறினார். ( அல்குர்ஆன்: 7:143 )

                               மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூடுதலாக நேரம் எடுத்து பேசும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான்.

وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏

மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

قَالَ هِىَ عَصَاىَ‌ۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى‏

(அதற்கவர்) இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றனஎன்று கூறினார்.   

قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى‏

அதற்கு (இறைவன்) மூஸாவே! அதை நீர் கீழே எறியும்என்றான்.

فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى‏

அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.

قَالَ خُذْهَا وَلَا تَخَفْ‌ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى‏

(இறைவன்) கூறினான்: அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.” ( அல்குர்ஆன்: 20: 17 - 21 )

அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?

அல்லாஹ்வை சந்திக்கும் மகத்தான பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கப் பெறுதில்லை. மாறாக, யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கமலும், நல்ல அமல்களைச்  செய்பவர்களாகவும் இருக்கின்றார்களோ  அவர்களுக்குத் தான் முதலாவதாக இந்த அருட்பாக்கியம் கிடைக்கும்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவனே! என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)

இணை வைக்காமலும் நல்ல அமல்களைச்  செய்பவர்களாகவும், இருந்தால் மட்டும் போதாது. மேலும், தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
عن جرير بن عبدالله:- "كُنَّا جُلُوسًا عِنْدَ رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، إذْ نَظَرَ إلى القَمَرِ لَيْلَةَ البَدْرِ، فَقالَ: أَما إنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كما تَرَوْنَ هذا القَمَرَ، لا تُضَامُّونَ في رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لا تُغْلَبُوا علَى صَلَاةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَقَبْلَ غُرُوبِهَا، يَعْنِي العَصْرَ وَالْفَجْرَ، ثُمَّ قَرَأَ جَرِيرٌ {وَسَبِّحْ بحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا}[طه:130].
الراوي : جرير بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 633 | خلاصة حكم المحدث : [صحيح
]

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும் (50:39ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 554, 573, 4851, 7434

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய அழகிய சந்திப்பை அவனிடமே கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும். 

இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

عن السائب بن مالك قال: صلى بنا عمار بن ياسر رضي الله عنه صلاة فأوجز فقال له بعض القوم: لقد خففت أو أوجزت الصلاة فقال: أما على ذلك فقد دعوت فيها بدعوات سمعتهن من رسول الله صلى الله عليه وسلم فلما قام تبعه رجل من القوم فسأله عن الدعاء؟ فقال: اللهمَّ بعِلْمِكَ الغيبَ وقُدْرَتِكَ عَلَى الخلَقِ ، أحْيِني ما علِمْتَ الحياةَ خيرًا لِي ، وتَوَفَّنِي إذا عَلِمْتَ الوفَاةَ خيرًا لي ، اللهمَّ إِنَّي أسألُكَ خشْيَتَكَ في الغيبِ والشهادَةِ ، و أسأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا والغضَبِ ، وأسألُكَ القصدَ في الفقرِ والغِنَى ، وأسألُكَ نعيمًا لَا ينفَدُ ، و أسالُكَ قرَّةَ عينٍ لا تنقَطِعُ ، وأسألُكَ الرِّضَى بعدَ القضاءِ ، وأسألُكَ برْدَ العيشِ بعدَ الموْتِ ، وأسألُكَ لذَّةَ النظرِ إلى وجهِكَ ، والشوْقَ إلى لقائِكَ في غيرِ ضراءَ مُضِرَّةٍ ، ولا فتنةٍ مُضِلَّةٍ ، اللهم زيِّنَّا بزينَةِ الإيمانِ ، واجعلنا هُداةً مهتدينَ

அம்மார் பின் யாஸிர் (ரலி) எங்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களில் ஒருவர், “நீங்கள் தொழுகையைச் சுருக்கி விட்டீர்கள் என்று அவரிடம் சொன்னார். நான் இவ்வாறு சுருக்கித் தொழுதாலும் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்ற துஆக்களைக் கொண்டு அந்தத் தொழுகையில் துஆச் செய்தேன் என்று பதில் சொன்னார்.

அவர் எழுந்ததும் அவரை ஒருவர் பின்தொடர்ந்து அவரிடம் அந்த துஆ பற்றிக் கேட்டார். பிறகு வந்து அதை மக்களிடம் அறிவித்தார்.

அல்லாஹும்ம பி இல்மிகல் கைப வ குத்ரத்திக அலல் கல்கி, அஹ்யினி மாஅலிம்தல் ஹயாத கைரன்லீ வதவஃப்பனீ இதா அலிம்தல் வஃபாத கைரன்லீ அல்லாஹும்ம வஅஸ்அலுக கஷ்யதக ஃபில் கைபி வஷ்ஷஹாததீ. வஅஸ்அலுக கலிமதல் ஹக்கி ஃபிர்ரிளா வல் களபி வஅஸ்அலுகல் கஸ்த ஃபிஃபக்ரி வல்கினா வஅஸ்அலுக நயீமன் லாயன்ஃபது அ வஅஸ்அலுக குர்ரதி அய்னின் லா தன்கதிவு வ அஸ்அலுகர் ரிளாஅ பஃதல் களாயி அ அஸ்அலுக பர்தல் ஈஷி பஃதல் மவ்தி அ அஸ்அலுக லத்தத்தன் நள்ரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாயிக ஃபீ கைரி ளர்ராஅ முளிர்ரத்தின் வலா ஃபித்னதின் முளில்லதின் அல்லாஹும்ம ஸ(ழ)ய்யின்னா பி ஸீ(ழ)னதில் ஈமானி வஜ்அல்னா ஹுதாத்தன் முஹ்ததீன்

பொருள்: மறைவானதை அறிகின்ற உன் ஞானத்தைக் கொண்டும்,  படைப்பின் மீதுள்ள உன் ஆற்றலைக் கொண்டும், (எனது) வாழ்வு நன்மை என்று நீ அறிந்திருக்கின்ற வரை என்னை வாழ வை! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்! அல்லாஹ்வே! மறைவிலும் நேரிலும் உன்னை அஞ்சுவதை உன்னிடம் கேட்கிறேன். திருப்தியிலும் கோபத்திலும் நேரிய வார்த்தையை உன்னிடம் நான் கேட்கிறேன். வறுமையிலும் செல்வத்திலும் நடுநிலையை உன்னிடம் நான் கேட்கிறேன். அழியாத அருட்கொடையை உன்னிடம் நான் கேட்கிறேன். 

அறுந்து விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் நான் கேட்கிறேன். விதிக்குப் பின்னால் திருப்தியை உன்னிடம் நான் கேட்கிறேன். இறந்த பின்பு வாழ்க்கையின் இதத்தை உன்னிடம் நான் கேட்கிறேன்.

இடர் அளிக்கக்கூடிய துன்பம் மற்றும் வழிகெடுக்கக் கூடிய குழப்பம் இல்லாத சூழலில் உன் திருமுகத்தைப் பார்க்கின்ற சுவையையும், உன்னைச் சந்திக்கின்ற ஆசையையும் உன்னிடம் நான் கேட்கின்றேன். அல்லாஹ்வே! ஈமானின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக!
எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாக ஆக்கு! அறிவிப்பவர்: ஸாயிப் பின் மாலிக், நூல்: நஸயீ 1288

மேலும், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் நாடிய தன்னுடைய அடியார்களுக்கு இந்த மகத்தான நற்பேற்றை வழங்குவான்.

அல்லாஹ்வின் சந்திப்பை இழக்கும் துர்ப்பாக்கிய மனிதர்கள் யார்?

மறுமை நாளில் அல்லாஹ்வின் நேசர்கள் மட்டும் தான் அவனை சந்திக்கும் பாக்கியத்தை பெறுவார்கள் என்பதை விளக்கும் பாடத்தில் இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் நேசர்களான முஃமின்களுக்கு அல்லாஹ் காட்சி தருவதன் மூலம் அவர்களை சிறப்பிப்பான். இன்னும் அல்லாஹ்வின் எல்லா எதிரிகளையும் விட்டு அவன் தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்வான். முஷ்ரிக், யஹூதி, நஸாரா, வழிகேடர்கள் இன்னும் முனாஃபிக் ஆகியோர்கள் அல்லாஹ்வை பார்க்க முடியாது என்பதைத்தான் நான் அவனது கூற்றிலிருந்து அறிந்து கொண்டேன் என்று கூறி விட்டு இந்த வசனத்தை ஓதினார்கள்.                                          
كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌  

(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் : 83:15) 

1, 2, 3 இந்த மூன்று குணாதிசயங்கள் கொண்டவர்கள்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ " قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مِرَارٍ . قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ "

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். 

 

இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: 1. செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார். 2. பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர். 3. தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்-முஸ்லிம் 171)

4) தகாத உறவு முறையில் இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள்.    

لا ينظرُ اللهُ إلى رجلٍ أتَى رجلًا أو امرأةً في الدبرِ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1165 | خلاصة حكم المحدث : حسن

யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள். ( நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1165 தரம் : ஹஸன் )

5) தற்பெருமையுடன் ஆடையை அணிபவர்

لَا يَنْظُرُ اللَّهُ إلى مَن جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ.

الراوي : عبدالله بن عمر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5783 | خلاصة حكم المحدث : [صحيح]

தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள். ( நூல் : ஸஹீஹுல் புஹாரி 5783 தரம் : ஸஹீஹ் )

6,7,8) மூன்று வகையினர்

ثلاثةٌ لا ينظرُ اللهُ عزَّ وجلَّ إليهم يومَ القيامةِ : العاقُّ لوالديْهِ ، و المرأةُ المُترجِّلةُ ، و الدَّيُّوثُ .... 

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 674 | خلاصة حكم المحدث : إسناده جيد

 மூன்று நபர்கள் அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் 1.பொற்றோரைத் துன்புறுத்துபவன் 2.ஆண்களை போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண், 3.தனது குடும்பத்துப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்தும் கண்டிக்காமலிருப்பவன் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள். ( நூல்: ஸில்ஸிலா ஸஹீஹா 674 தரம் : ஸஹீஹ் )

9) செய்த உதவியை சொல்லிக் காட்டுபவர்கள்

ثلاثةٌ لا ينظر اللهُ إليهم يومَ القيامةِ، ولا يزكيهم، ولهم عذابٌ أليمٌ، الذي لا يعطي شيئًا إلا منه، والمسبلُ إزارَه، والمَنفِّقُ سلعتَه بالكذبِ

الراوي : أبو ذر الغفاري | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4471 | خلاصة حكم المحدث : صحيح

மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூதர் ( ரலி ) அறிவிக்கிறார்கள். ( நூல் : ஸஹீஹ் நஸாயீ 4471 தரம் : ஸஹீஹ் )

10)  தீய குணம் கொண்டவர்கள்

ثَلاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَومَ القِيامَةِ ولا يُزَكِّيهِمْ، قالَ أبو مُعاوِيَةَ: ولا يَنْظُرُ إليهِم، ولَهُمْ عَذابٌ ألِيمٌ: شيخٌ زانٍ، ومَلِكٌ كَذّابٌ، وعائِلٌ مُسْتَكْبِرٌ.

الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 107 | خلاصة حكم المحدث : [صحيح]

மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்- அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களைப் பார்க்கவுமாட்டான்" என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர்(தாம் அம்மூவரும்).என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள். ( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 107 தரம் : ஸஹீஹ் )

11) வேதத்தை மறைத்தவர்கள்

அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰه يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ், அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு

( அல்குர்ஆன்: 2: 174 )

இந்த வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் சுட்டி காட்டி இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி-118 )

12) அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தங்களை மீறுபவர்கள்.

 اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

 

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. ( அல்குர்ஆன்: 3: 77 )

13) சுய நலத்தோடு தலைமையுடன் நடந்து கொள்பவன்.

ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ … وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவனுக்குக் கடுமையான வேதனை உண்டு. (அந்த மூவரில் ஒருவன்) அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து, கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி, 2358 ) 

ஆகவே, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பட்டியலிட்ட  இந்த அனைத்து தீய விஷயங்களை விட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டு மறுமையில் அல்லாஹ்வின் மகத்தான சந்திப்பை பெறும் பாக்கியமான நன்மக்களாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete