Monday 25 March 2024

உலகப் பெண்களில், சுவனத்துப் பெண்களில் மிகச் சிறந்தவர்கள்: 2.

 

தராவீஹ் சிந்தனை:- 14, சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 4.

உலகப் பெண்களில், சுவனத்துப் பெண்களில் மிகச் சிறந்தவர்கள்: 2.



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 13 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 14 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.

அந்த வகையில், நேற்றைய அமர்வில் பேசியது போன்றே இன்றைய அமர்வில் "சுவனத்து பெண்களில் சிறந்த பெண்கள், உலகப் பெண்களில் சிறந்த பெண்கள் யார்?" என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

عن أبو هريرة : خير نساء العالمين أربع مريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون وخديجة بنت خويلد وفاطمة بنت محمد

உலகப் பெண்மனிகளில் மிகச்சிறந்தவர்கள் நான்கு பேர்.1, மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்கள். அவர்கள். 2, ஆசியா பின்த் மஸாஹிம் (ரலி) அவர்கள் 3, கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் 4, ஃபாத்திமா (ரலி) பின்த் முஹம்மத் (ஸல்)  அவர்கள்.  ( நூல்: புகாரி  )

இன்னொரு ரிவாயத்தில்...

ومن حديث ابن عباس عن النبي - صلى الله عليه وسلم - : أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد وفاطمة بنت محمد ومريم بنت عمران وآسية بنت مزاحم امرأة فرعون .

சுவனத்து பெண்மனிகளில் மிகச்சிறந்தவர்கள் நான்கு பேர்.1, கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள். 2, ஃபாத்திமா பின்த் முஹம்மத் (ரலி) அவர்கள். 3, மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்கள். 4, ஆசியா பின்த் மஸாஹிம் (ரலி) அவர்கள்.  ( நூல்: இப்னு ஹிப்பான் )

காத்தமுன் நபியின் கல்பில் நீங்கா இடம் பிடித்த கதீஜா (ரலி) அவர்கள்..

عندما تم فتح مكة و هي من أكبر انتصارات الرسول صلي الله عليه وسلم دعته كبار بيوتها الى أن يبيت عندهم قال "انصبوا لي خيمة عند قبر خديجة". و ركّز لواء النصر أمام قبرها ليعلم العالم كله أن هذه المرأة التي في القبر شريكته في النصر.

கதீஜா (ரலி) இவ்வுலகை விட்டு விடை பெற்றுச் சென்றதன் பின்னர் சுமார் 14 வருடங்கள் கழித்து மக்கா வெற்றியின் போது நபியவர்களின் கூடாரத்தை எங்கே 

அமைப்பது என்று சஹாபாக்கள் வினவிய போது..."கதீஜாவின் மண்ணறை அருகில் அமையுங்கள்... என் கவலைகளில் அவர் பங்கு கொண்டதைப் போல என் மகிழ்விலும் பங்கு கொள்ளட்டும்..." என்று கூறினார்கள்.

புகாரியுடைய இன்னொரு ரிவாயத்தில்...

 

لما حدث في فتح مكة حيث أن النبي صلى الله عليه وسلم عندما جاء مكة فاتحا ، أمر أن تُركز رايته بالحجون ، كما في صحيح البخاري (4280) من طريق عروة بن الزبير وفيه :  ( وَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُرْكَزَ رَايَتُهُ بِالحَجُونِ

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது "வெற்றிக் கொடியை ஹஜூன் எனும் பகுதியில்" நாட்டுமாறு ஏவினார்கள்.

ومعلوم عند أهل السير أن خديجة رضي الله عنها دفنت بالحجون أيضا .

ذكر ذلك ابن إسحاق كما في "المستدرك للحاكم" (4837) ، والمؤرخون كالطبري في "تاريخه" (11/493) والذهبي في "تاريخ الإسلام" (1/152) .

فلعل هذا هو الذي جعل البعض يربط بين نصب خيمة النبي صلى الله عليه وسلم بالحجون ، أنه كان لأجل قبر خديجة رضي الله عنه .

ஏனெனில், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் ஹஜூன் என்ற பகுதியில் தான் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இதுவே பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்களின் கருத்துமாகும். ஆகவே தான் அங்கேயே கூடாரமும் அமைக்க சொன்னார்கள் என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பெருமானார் {ஸல்} அவர்களால் வாழ்முழுவதும் நினைவு கூறப்பட்டவர்...

وعن عائشة رضي الله عنها قالت: (جاءت عجوز إلى النبي صلى الله عليه وسلم وهو عندي، فقال لها رسول الله صلى الله عليه وسلم: من أنت؟ قالت: أنا جثامة المزنية، فقال: بل أنت حسانة المزنية، كيف أنتم؟ كيف حالكم؟ كيف كنتم بعدنا؟ قالت: بخير بأبي أنت وأمي يا رسول الله، فلما خرجت قلت: يا رسول الله تقبل على هذه العجوز هذا الإقبال؟! فقال: إنها كانت تأتينا زمن خديجة، وإن حسن العهد من الإيمان) رواه الحاكم

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்: 'என் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் இருந்த சமயம் ஒரு மூதாட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் யார்?' என்று கேட்க, 'நான் தான் ஜூஸாமா மதனிய்யா' என்று கூறினார். 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?, எங்களுக்குப் பிறகு (நாங்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்த பிறகு) உங்கள் நிலைமை எப்படி இருந்தது?' என நபி (ஸல்) அவர்கள் வினவ, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நாங்கள் யாவரும் நலமாக உள்ளோம்' என்று கூறிவிட்டு அந்த மூதாட்டி சென்றுவிட்டார்.

அல்லாஹ்வின் தூதரே! அந்த மூதாட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அவரின் பக்கம் இந்தளவு கவனம் செலுத்தினீர்களே' என நான் வியப்புடன் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இந்த மூதாட்டி, கதீஜா (ரலி) அவர்களின் வாழ்நாட்களில் நம்மிடம் வரப்போக இருப்பார். பழைய நட்புகளைப் பேணுவது இறைநம்பிக்கையின் அடையாளமாகும்' என நபி (ஸல்) கூறினார்கள்'. (நூல்: ஹாகிம்)

 

وَقَالَ إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ -رضي الله عنها- قَالَتِ: «اسْتَأْذَنَتْ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ -أُخْتُ خَدِيجَةَ- عَلَى رَسُولِ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-، فَعَرَفَ اسْتِئْذَانَ خَدِيجَةَ، فَارْتَاعَ لِذَلِكَ فَقَالَ: اللَّهُمَّ هَالَةَ.

قَالَتْ: فَغِرْتُ فَقُلْتُ: مَا تَذْكُرُ مِنْ عَجُوزٍ مِنْ عَجَائِزِ قُرَيْشٍ حَمْرَاءِ الشِّدْقَيْنِ هَلَكَتْ فِي الدَّهْرِ، قَدْ أَبْدَلَكَ اللَّهُ خَيْرًا مِنْهَا».

ஹாலா பின்த்து குவைலித் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, ‘இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே ( நூல்: புகாரி )

பூமான் நபியின் கல்பின் கசிந்துருகும் காதல் ஏன்?

وعن عائشة رضي الله عنها، قالت: كان النبي، صلى الله عليه وسلم إذا ذكر خديجة أثنى عليها، فأحسن الثناء، قالت: فغرت يوماً، فقلت: ما أكثر ما تذكرها حمراء الشدق، قد أبدلك الله عز وجل بها خيراً منها قال: «ما أبدلني الله عز وجل خيراً منها، قد آمنت بي إذ كفر بي الناس، وصدقتني إذ كذبني الناس، وواستني بمالها إذ حرمني الناس، ورزقني الله عز وجل ولدها إذ حرمني أولاد النساء».

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை.  நபி (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி பேசினால் அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.

ஒரு நாள் நான் அவர்களிடம் "ஏன் அந்த சிகப்பு கிழவியைப் பற்றியே புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றீர்கள். அவருக்குப் பின்னால் அவரை விட சிறந்தவர்களை அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ளானே" என்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘என்னை மக்கள் நிராகரித்த போது முதலாவதாக நம்பிக்கை கொண்டார். மக்கள் என்னை பொய் படுத்திய போது என்னை உண்மை படுத்தினார். மக்கள் என் வாழ்வாதாரத்தை தடை செய்த போது தன்னுடைய முழு வாழ்வாதாரத்தையும் தந்து என்னை அரவணைத்தார். மற்ற (என் மனைவிமார்கள்)  பெண்கள் மூலம் தடை செய்த சந்ததியை கதீஜா மூலம் அல்லாஹ் எனக்கு வழங்கினான்" என்று பதில் சொன்னார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَمَا رَأَيْتُهَا، وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا، وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً، ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ، فَرُبَّمَا قُلْتُ لَهُ: كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيجَةُ، فَيَقُولُ «إِنَّهَا كَانَتْ، وَكَانَتْ، وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி -ஸல்- அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள்.

சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களேஎன்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ‘அவர் (புத்திசாலியாக) இருந்தார். (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்ததுஎன்று பதில் சொன்னார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி-3818

கதீஜா (ரலி) அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் தனித்துவமான சிறப்பு!

وقال ابن حجر: " ومما اختصت به ـ خديجة ـ سبقها نساء هذه الأمة إلى الإيمان، فسنت ذلك لكل من آمنت بعدها، فيكون لها مثل أجرهن، لما ثبت : ( أنه من سن سنة حسنة فعمل بها بعده، كتب له مثل أجر من عمل بها لا ينقص من أجورهم شيء ) " .

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "நமது நபி ஸல் அவர்களை முதலில் ஈமான் கொண்டதன் மூலம் உலகில் மறுமை நாள் வரை ஈமான் கொண்டிருக்கும், ஈமான் கொள்ள இருக்கும் அனைவருக்கும் முன்னவராக அன்னை கதீஜா (ரலி) திகழ்கின்றார்கள். அவர்களுக்கு பின்னால் இரண்டாவதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் முதற் கொண்டு மறுமை வரை ஈமான் கொள்ளும் அனைவரின் ஈமானின் நன்மையிலும் அவர்களுக்கு பங்குண்டு.

ஏனெனில், நபி ஸல் அவர்கள் "எவர் ஒருவர் அழகிய நடைமுறை ஒன்றை துவக்கி வைத்தாரோ அவருக்கு பின்னால் யாரெல்லாம் அதை தொடர்கின்றாரோ குறைவின்றி அனைவரின் நன்மைகளில் அவருக்கு ஒரு பங்கு உண்டு" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

முதலாவதாக ஈமான் கொள்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள்!

وقال ابن الأثير: " خديجة أول خلق الله أسلم بإجماع المسلمين، لم يتقدمها رجل ولا امرأة "

இமாம் இப்னுல் அஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதியாக முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காகவே அன்னை கதீஜா (ரலி) அவர்களை அல்லாஹ் படைத்துள்ளான். ஆகவே தான் அவர்களுக்கு முன்பாக எந்த ஆணும் பெண்ணும் முஸ்லிமாக வில்லை ".

கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறுதலும், சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லுதலும்....

عن أبي هريرة رضي الله عنه، قال: ((أتى جبريل النبي صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، هذه خديجة قد أتت معها إناء فيه إدام، أو طعام أو شراب، فإذا هي أتَتْكَ فاقرأ عليها ‌السلام ‌من ‌ربها ومني، وبشِّرها ببيت في الجنة من قصبٍ، لا صخبَ فيه، ولا نصب

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்என்று கூறினார். ஜஅறிவிப்பவர்: அபூ {ஹரைரா (ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817

நபி (ஸல்) - கதீஜா (ரலி) இடையேயான அன்புப்பாலம்!

அறியாமைக் காலத்தில் பிறந்த கதீஜா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களைப் போன்றே அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள் .

பெண்களிடம் அவசியம்இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகப் பேணியதால் , " தாஹிரா " ( பரிசுத்தமானவள் ) என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள்.

நபி ( ஸல் ) அவர்களுடன் திருமணம் இனிதே நடைபெற்ற போது.கதீஜா ( ரலி ) அவர்களின் வயது நாற்பது. நபி ( ஸல் ) அவர்களின் வயது இருபத்தைந்து.

நபி (ஸல் ) அவர்களோடு இவ்வாழ்க்கையைத் தொடங்கிய அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் மகிழ்வோடு காலத்தை கழிக்கின்றார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் மூலம் பல குழந்தைகளை ஈன்றெடுக்கின்றார்கள்.

பதினைந்து வருடங்கள் கழிந்த பின்பு , நபி(ஸல் ) அவர்கள் நபித்துவம் பெறுகின்றார்கள். நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் பங்கு பெற்றார்கள். குறிப்பாக, தளர்ந்த வயதில் அபூதாலிப் பள்ளத்தாக்கில் ஊர் விலக்கு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகள் வலி நிறைந்த, அவர்களின் ஈமானிய வலிமையை உணர்த்திய கனமான ஆண்டுகள் ஆகும்.

25 ஆண்டு கால வாழ்க்கையில் நபி (ஸல்)  அவர்களுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் வழங்கியது இது தான் என்றில்லை. எல்லாவற்றையும் கொடுத்தார்கள்.

மாநபி ஸல் அவர்கள் ஒற்றை வார்த்தையில் இப்படி பதிவு செய்வார்கள்.

فَقَالَ : رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا

"என் ரத்த நாளங்களில் எல்லாம் கதீஜாவின் மீதான அன்பு பிரவாகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது" என்று. ( நூல்: முஸ்லிம் )

நபி ( ஸல் ) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக காஸிம் , அப்துல்லாஹ் ( தாஹிர் , தய்யிப் ) ஜைனப், உம்மு குல்ஸும், ஃபாத்திமா , ருகைய்யா ஆகிய குழந்தைகள் பிறந்தன.

நபி ( ஸல் ) அவர்களுக்குப் பிறந்த நாங்கு பெண் குழந்தைகள் ,மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விஷயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை.

அப்துல்லாஹ், தாஹிர் , தைய்யிப் ஆகியோர் விஷயத்தில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபடு நிலவுகின்றது மூன்று பேரும் நபி ( ஸல் ) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள்என்று சிலரும்,  அப்துல்லாஹ் என்ற குழந்தயே தாஹிர் என்றும் தய்யிப் என்று அழைப்பட்டார் என சிலரும் , காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா ( ரலி ) அவர்களுக்குவேறு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று மற்றும் சிலரும் கூறுகின்றனர் ( அல்லாஹ் மிக அறிந்தவன் )

காஸிம், அப்துல்லாஹ் ( தாஹிர் , தய்யிப் ) ஆகியோர் நபி ( ஸல் ) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர்.ஜைனப் ( ரலி ) , உம்மு குல்ஸும் ( ரலி ) ருகைய்யா(ரலி ) ஆகியோர் கதீஜா ( ரலி ) அவர்கள் இறந்த பிறகு நபி ( ஸல் ) அவர்கள் நபியாக வாழ்ந்த காலகட்டத்தில் இறந்தார்கள்.

-ருகைய்யா ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு மரணித்தார்கள் ( நூல் : அல் இஸாபா 5452 )

-ஜைனப் ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள் ( நூல் : அல் இஸாபா 11 , 218 )

-உம்மு குல்ஸும் ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி 9ல் மரணமடைந்தார்கள் ( நூல் : அல் இஸாபா 12 , 222 )

-ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்கள் இறந்த ஆறு மாதத்திற்குப் பின் இறந்தார்கள் ( நூல் : புகாரி 3093 )

       நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்னை கதீஜா (ரலி) அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! அவர்களைப் போன்று தீனுக்காக வாழ்ந்து மரணிக்கும் நஸீபை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

ஃபாத்திமா (ரலி) அவர்களைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு நாள் தனி தலைப்பாக நமது தளத்தில் பதிவு செய்யப்படும்!!

No comments:

Post a Comment