Tuesday, 12 March 2024

தூய்மையான உள்ளமும், வாய்மையான நாவும்…

 

தராவீஹ் சிந்தனை:- 2, உங்களில் சிறந்தவர் தொடர்:- 1.

தூய்மையான உள்ளமும், வாய்மையான நாவும்… 


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் முதலாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக்கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

துவக்கமாக இன்றைய அமர்வில் நாம் மஹ்மூமுல் கல்ப் மற்றும் ஸதூகுல் லிஸான் என்ற இரு உயரிய பண்புகள் குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல, பண்புகளிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டும் வித்தியாசப்பட்டும் இருக்கிறார்கள். 

ஆகையினால், ஒருவரை சிறந்தவர் என்று முடிவு செய்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். வேறுபாடான வித்தியாசமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

ஒருவருடைய காரியத்தையோ பண்பையோ காரணமாக வைத்து அவரைச் சிறந்தவர் என்று சொல்வது ஒருவருடைய பார்வையில், கண்ணோட்டத்தில் சரியாக இருக்கும் அதேசமயம், மற்றவர்களின் பார்வையில் தவறாக இருக்கும். 

காரணம், ஒருவரிடம் தாங்கள் விரும்பும் எதிர்பார்க்கும் பண்பு இருப்பதைப் பொறுத்து அவரை நல்லவர் என்று முடிவு செய்கிறார்கள். தங்களது சுய விருப்பு வெறுப்புகளை அடிப்படையாக வைத்து தீர்மானம் செய்கிறார்கள். 

நம்மைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கும் ஏகஇறைவனும் அவனிடம் இறைச்செய்தியைப் பெறும் இறைத்தூதரும், ஒருவரைச் சிறந்தவர் என்று சொல்வது இவ்வாறு இருக்காது. 

உண்மையில் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். மக்களிடம் இருக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்களை மையமாக வைத்து அவர்களில் சிறந்தவர்கள் யார்? என்பது குறித்து மார்க்கம் கூறும் சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!!

قال الشيخ محمد عمر بازمول حفظه الله تعالى:-

 علّمني ديني: أن الصالح من الناس قليل، كالإبل المئة لاتكاد فيها واحدة تصلح!

عن الزهري قال: أخبرني سالم بن عبدالله، أن عبدالله بن عمر رضي الله عنهما قال: سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: « إنّما الناس كالإبل المئة، لاتكاد تجد فيها راحلة»

அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாஸ்மூல் (ஹஃபிழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிதாகும்!

{ நூல்: புகாரி – 6498 / முஸ்லிம் – 4978 }

وَقَالَ ابن بَطَّالٍ: مَعْنَى الْحَدِيثِ: أَنَّ النَّاسَ كَثِيرٌ ، وَالْمَرْضِيَّ مِنْهُمْ قَلِيلٌ

குறைபாடுகளுடைய மனிதர்கள் உலகத்தில் நிறையவே இருந்துகொண்டிருக்கின்றனர்; ஆனால், அவர்களில் சிறப்புக்குரியவர்களாகவும் இறைவனின் திருப்திக்குரியவர்களாகவும் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்கள் ஆவார்கள்”! என்று இமாம் ஃகத்தாபீ, இமாம் இப்னு பத்தால் (ரஹிமஹுமல்லாஹ்) போன்றோர் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளித்துள்ளனர். { பார்க்க: ‘fபத்ஹுல் பாரீ’, 11/343 }

روى ابن ماجه عن عبدالله بن عمرو رضي الله عنهما قيل لرسول الله صلى الله عليه وسلم: «أي الناس أفضل؟ قال: كل مخموم القلب صدوق اللسان. قالوا: صدوق اللسان نعرفه، فما مخموم القلب؟ قال: هو التقي النقي، لا اثم فيه، ولا بغي ولا غِلّ ولا حسد» وفي الزوائد: هذا اسناد صحيح رجاله ثقات.

மக்களில் சிறந்தவர் யார் என்று நபி அவர்களிடம் கேட்கப்பட்ட போது மஹ்மூமுல் கல்ப் ஸதூகுல்லிஸான் என்று சொன்னார்கள். ஸதூகுல்லிஸான் என்றால் உண்மை பேசக்கூடியவர்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது. மஹ்மூமுல் கல்ப் என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு பாவங்களோ அக்கிரமங்களோ பொறாமையோ குரோதங்களோ இல்லாத உள்ளத்தூய்மையுள்ள இறையச்சமுள்ள மனிதர் என்று கூறினார்கள். ( இப்னுமாஜா : 4216 )

அமைதியான உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். அவர்கள் சகோதரர்களாக கட்டில்களின் மீது ஒருவரை ஒருவர் முன்னோக்கியிருப்பர்.” (அல்குர் ஆன்: 15: 47 )

அமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பொற்றுக் கொள்வார்கள்  சுவர்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.

இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: சிலர் தப்பான எண்ணங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு தீய விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெரும் பாவங்களை செய்கின்றனர். மறுமையில் நரகிலும் நுழைய கிற்கு வழிகோலுகின்றனர். இதனால் எந்தவித தப்பும் செய்யாத பெரியவர்களையும் சிறியவர்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கு சோதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்கள் இதன் மூலம் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை அறிந்தால் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தங்களது எண்ணத்தை தூய்மைப்படுத்தி தீயவற்றை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை முற்படுத்தி செய்தால் சந்தோஷமானவர்களாக இவ்வுலகில் வாழ்வார்கள்; மறுமையில் சுவர்கத்துக்கும் நுழைவார்கள்”.

أخرج ابن أبي الدنيا عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ مرسلًا عن رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه قال

  أَوَّلُ مَنْ يَدْخُلُ مِنْ بَابِ الْمَسْجِدِ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَدَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ رَضِيَ الله عَنْه، فَقَالَ لَهُ رَجُلٌ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَذَا وَكَذَا فَأَيُّ عَمَلٍ لَكَ أَوْثَقُ تَرْجُو بِهِ؟ قَالَ

 إِنّي لَضَعِيفٌ وَإِنَّ أَوْثَقَ مَا أَرْجُو بِهِ لَسَلَامَةُ الصَّدْرِ وَتَرْكُ مَا لَا يَعْنِينِي

وأصله في الصحيح

முஹம்மத் இப்னு கஅபுல் குறழீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் முன்பாக திரண்டிருந்த சபையொன்றில் இன்று இந்த வாசலில் யார் முதலில் நுழைகின்றாரோ அவர் சுவனவாசி என்று மஸ்ஜிதுன் நபவீயின் முன் வாசலை காண்பித்துக் கூறினார்கள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதில் இருந்து மாநபித்தோழர்கள் அனைவரின் பார்வையும் அங்கு நோக்கி இருந்தது.

உள்ளே ஒருவர் நுழைகின்றார்! அனைவரின் முகத்திலும் சந்தோஷம்! ஆம்! யூதபாதிரியாக இருந்து அல்லாஹ்வின் தூதரின் கரம்பிடித்து சத்திய சன்மார்க்கத்தை ஏற்ற அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் தான் அந்த சோபனத்தைத் தட்டிச் சென்றார்கள்.

சபையில் இருந்த ஒருவர் எழுந்து, நேராகச் சென்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களிடம் மாநபி {ஸல்} அவர்கள் சொன்ன சோபனத்தைச் சொல்லி விட்டு உங்களுக்கு இந்த சோபனம் கிடைப்பதற்கு உங்களிடம் இடம் பெற்றிருக்கின்ற எந்த அம்சத்தை காரணமாக கூறுவீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் நான் வயது முதிர்ந்தவன், உடல் பலவீனமானவன் ( என்னால் மிகப்பெரிய வணக்க வழிபாடுகளைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் அல்லவா நான் அவைகளைக் காரணமாக கூறமுடியும் ) என்றாலும் மாநபி {ஸல்} அவர்கள் கூறிய சோபனத்தைப் பெறுவதற்கு காரணமாக என்னிடம் காணப்படுகிற இரண்டு அம்சங்களை ஆதரவு வைக்கிறேன்.

எப்போதும் என் உள்ளத்தை அனைத்து வகையான அழுக்குகளில் இருந்தும் தூய்மை படுத்தி வைத்திருக்கின்றேன். 2. எனக்கு தேவை இல்லாத, அவசியம் இல்லாத எந்த ஒன்றிலும் நான் ஈடுபடுவதில்லைஎன்று பதில் கூறினார்கள்.  ( நூல்: இப்னு ஹிப்பான் )

عن أنس بن مالك رضي الله عنه قال: (كنا جلوساً مع رسول الله صلى الله عليه وسلم فقال: ((يطلع عليكم الآن رجل من أهل الجنة))، فطلع رجل من الأنصار ينظف لحيته من وضوئه، قد تعلق نعليه في يده الشمال، فلما كان الغد قال النبي صلى الله عليه وسلم مثل ذلك، فطلع ذلك الرجل مثل المرة الأولى، فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وسلم مثل مقالته أيضاً، فطلع ذلك الرجل على مثل حاله الأولى، فلما قام النبي صلى الله عليه وسلم، تبعه عبد الله بن عمرو بن العاص فقال: (إني لاحيت أبي، فأقسمت أن لا أدخل عليه ثلاثاً فإن رأيت أن تؤويني إليك حتى تمضي فعلت) قال: نعم، قال أنس وكان عبد الله يحدث أنه بات معه تلك الليالي الثلاث، فلم يره يقوم من الليل شيئاً غير أنه إذا تعار وتقلب على فراشه ذكر الله عز وجل وكبّر حتى يقوم لصلاة الفجر. قال عبد الله غير أني لم أسمعه يقول إلا خيراً فلما مضت الثلاث ليال، وكدت أن احتقر عمله، قلت: (يا عبد الله إني لم يكن بيني وبين أبي غضب ولا هجر ثم، ولكن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لك ثلاث مرات يطلع عليكم الآن رجل من أهل الجنة، فطلعت أنت الثلاث مرات، فأردت أن آوي إليك لأنظر ما عملك فأقتدي به، فلم أرك تعمل كثير عمل، فما الذي بلغ بك ما قال رسول الله صلى الله عليه وسلم؟) فقال:ما هو إلا ما رأيت، قال فلما ولّيت دعاني فقال: (ما هو إلا ما رأيت، غير أني لا أجد في نفسي لأحد من المسلمين غشاً ولا أحسد أحداً على خير أعطاه الله إياه)، فقال عبدالله: (هذه التي بلغت بك وهي التي لا نطيق)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம்,

அப்போது நபி (ஸல்) அவர்கள் இப்போது ஒரு மனிதர் வருவார் அவர் சுவனவாசிஎன்று கூறினார்கள்.

அப்போது,  எங்கள் முன்பாக ஒரு அன்ஸாரித் தோழர், உளு செய்த தண்ணீரின் ஈரம் சொட்டச் சொட்ட, இடது கையில் செருப்பைத் தூக்கியவாறு பள்ளியில் நுழைந்தார்.

இரண்டாவது முறையும், நபிகளார் அது போன்று கூறவே, அவர்தான் எங்கள் முன் தோன்றினார்,

மூன்றாவது முறையும் நபிகளார் அது போன்று கூறவே அவர்தான் எங்கள் முன்பாக வந்தார்..

சபையில் இருந்து நபி (ஸல்) அவரகள் எழுந்து சென்று விட்ட பிறகு,

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், நேராக அவரிடம் சென்று நான் என் தந்தையிடம் சண்டையிட்டு, மூன்று நாள் வீட்டிற்கு வரமாட்டேன் என சத்தியமிட்டு கூறிவிட்டேன். ஆகவே, மூன்று நாள் உங்களோடு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா?” என்று கூறினார்.

அதற்கு அந்த அன்ஸாரித் தோழர் சரி என சொல்லிவிட்டார்,பிறகு, அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவரோடு தங்கிய அந்த நாட்களைப்பற்றி என்னிடம் விவரித்தார்.

அவர் ஒருநாளும் இரவுத் தொழுகையில் ஈடுபடவில்லை,ஆனால், படுக்கையில் புரண்டால் அல்லாஹ்வை நினைவு கூறுவார். பாங்கு சொன்னதும் விழித்து ஃபஜ்ர் தொழ செல்வார். மற்றபடி நம்மைப் போன்றுதான் வணக்க வழிபாடுகளைச் செய்கின்றார். வேறு ஒன்றும் சிறப்பாக செய்ய நான் காணவில்லை.

பின்பு, நான் அவரிடம், நான் ஒன்றும் என் தந்தையோடு பிணங்க வில்லை. மாறாக, மாநபி (ஸல்) அவர்கள் கூறிய சோபனத்தையும், அதைத் தொடர்ந்து மூன்று முறை நீங்களே வந்த்தையும் வைத்து, உங்களோடு இருந்து உங்களுடைய பிரத்யேகமான அமலைக் கண்ணுற்று நானும் கடைபிடிக்கவே ஆவல் கொண்டு உங்களோடு தங்கினேன்.

ஆனால், அப்படியொன்றும் நீங்கள் உயர்வாக அமல் செய்ய நான் காணவில்லை" என்றேன்.

மேலும், நான் நபிகளார் சொன்னால் அது உண்மையாகத் தான் இருக்கும், சொல்லுங்கள் இப்போதே! அந்த உயர்வான நல்லறம் எது? என்று கேட்டேன்.

அப்போது, அவர் கூறினார்:

எப்போதும் நான் மற்றெந்த முஸ்லிம்களின் மீதும், குரோதமோ, பகைமையோ கொண்டதில்லை. அல்லாஹ் எனக்கு கொடுத்தைக்கொண்டு நான் திருப்தி கொள்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் பிறருக்கு வழங்கப்பட்டிருக்கும் எந்த பாக்கியத்தின் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை. என்றார்”. அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘இந்தவிஷயமே எம்மால் செய்ய முடியாத காரியமாகும். (ஹதீஸின் சுருக்கம்) ( நூல்: அஹ்மத், முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், பஜ்ஜார், நஸாயி )

قال أحد الحكماء: من طلب الله بالصدق، أعطاه مرآة يبصر فيها الحق والباطل. وقيل إن ربعي بن حراش لم يكذب كذبة قط، وكان له ابنان عاصيان على الحجاج فطلبهما، فلم يعثر عليهما فقيل للحجاج: إن أباهما لم يكذب كذبة قط لو أرسلت إليه فسألته عنهما. فاستدعى أباهما فقال: أين أبناؤك؟ قال هما في البيت فأستغرب الحجاج، وقال لأبيهما: ما حملك على هذا وأنـا أريد قتلهما، فقال: لقد كرهت أن ألقى الله تعالى بكذبة فقال الحجاج: قد عفونا عنهما بصدقك ... ذاك والله الصدق

ஞான மேதைகளில் ஒருவர் கூறுகின்றார்கள்:- "எவர் வாய்மையான சொல்லை பேசுவதன் மூலம் அல்லாஹ்வை தேடுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துப் பார்க்கும் மகத்தான சக்தியை வழங்குவான்‌.

ஹஜ்ஜாஜின் காலத்தில் வாழ்ந்த ரிப்ஈ இப்னு ஹிராஸ் (ரஹ்)  வாழ்நாளில் ஒரு முறை கூட பொய்யே பேசியதில்லை.

அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் உண்டு. அந்த ஆண் மக்கள் இருவரும் ஹஜ்ஜாஜுக்கு எதிராக புரட்சி செய்பவர்களில் உள்ளவர்கள். நீண்ட நாட்களாக அவர்களை ஹஜ்ஜாஜ் தேடிக் கொண்டு இருந்தார்.

ஆனால், அவர்கள் எங்கு தலைமறைவாக இருக்கின்றார்கள் என்று ஹஜ்ஜாஜின் படை வீரர்களுக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தேடித் தேடி அவர்கள் சோர்ந்தும் போய் விட்டனர்.

இப்படியாக, இருவரும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஹஜ்ஜாஜிடம் ஒருவர் வந்து"நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அந்த இரு இளைஞர்களின் தந்தையிடம் சென்று அவர்கள் எங்கு தலைமறைவாக இருக்கின்றார்கள்? என்று கேட்டு விட வேண்டியது தானே?! அவர் அவர்கள் தலைமறைவாக இருக்கும் இடத்தை சொல்லி விடப்போகிறார். ஏனெனில், அவர்களின் தந்தை தம் வாழ்நாளில் இது வரை பொய் பேசியதே இல்லையாம்" என்று மக்கள் பிரபல்யமாக பேசிக் கொள்கிறார்கள் என்றார்.

இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் வேகமாக ரிப்ஈ இப்னு ஹிராஸ் (ரஹ்) அவர்களின் இல்லத்திற்கு வந்து "உமது இரண்டு மகன்களும் எங்கே தலைமறைவாக இருக்கின்றார்கள்? என்று கேட்டார்.

அதைக் கேட்ட ரிப்ஈ (ரஹ்) அவர்கள்"எனது இரண்டு மகன்களும் வீட்டின் உள்ளே தான் இருக்கின்றனர்" என்றார்கள்.

ஹஜ்ஜாஜ் ரிப்ஈ (ரஹ்) அவர்களின் இரண்டு மகன்களையும் தமது கஸ்டடியில் எடுத்து விட்டு, எமது ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்து வரும்  உமது இரண்டு ஆண் மக்களையும் கொல்வதற்காகவே  இது  வரை நான் தேடியலைந்தேன்.

"உம்மிடம் கேட்டதும் தாமதிக்காமல் வீட்டில் தான் இருக்கின்றார்கள் என்று எப்படி கொஞ்சம் கூட தயங்காமல் உண்மை கூறினீர்" என்று கேட்டார் ஹஜ்ஜாஜ்.

அப்போது, ரிப்ஈ இப்னு ஹிராஸ் (ரஹ்) அவர்கள் "நாளை மறுமையில் ஒரு பொய்யனாக அல்லாஹ்வை சந்திப்பதை நான் வெறுக்கின்றேன்" என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ், "நீர் பேசிய உண்மையின் காரணமாக "மரண தண்டனை விதிக்கப்பட்ட உமது இரண்டு மகன்களின் தண்டனையும் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது" என்றார் ஹஜ்ஜாஜ்.

 

 

 

இறைவா! எங்களது உள்ளத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த வித கோபமும், குரோதமும், பிரச்சினையும் இல்லாத ஈடேற்றமான உள்ளமாக மாற்றுவாயாக!   எங்களுடைய நாவுகளை எப்போதும் உண்மை பேசக் கூடியதாக ஆக்கியருள்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment