Wednesday 13 March 2024

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டார்!!

 

தராவீஹ் சிந்தனை: 3, உங்களில் சிறந்தவர் தொடர்:- 2,

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டார்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் இரண்டாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, மூன்றாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

இரண்டாவதாக  இன்றைய அமர்வில்  சிறந்த அண்டை வீட்டார் குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டார்!

அந்த வகையில் பெருமானார் (ஸல்) அவர்கள் சிறந்த (வர்) மனிதர்கள் என்று அடையாளப்படுத்தி பட்டியல் இட்டவர்களில் "சிறந்த அண்டை வீட்டாராக" விளங்கும் ஒருவரும் ஆவார்.

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏وَابْنُ لَهِيعَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.” ( நூல்:  ஸுனனுத் திர்மிதி )

மனித வாழ்வில் உறவுகள் என்பது மகத்தான கொடையாகும். உறவுகள் தான் வாழ்வில் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. 

இந்த உறவுகள் என்பது இரத்த பந்தத்தின் மூலமும், திருமண பந்தத்தின் மூலமும், ஈமானிய சொந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் உருவாகிறது. 

இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். 

இப்படியான இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். 

சிறந்த அண்டை வீட்டார் அமைவது   ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.

عَنْ نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ -رضي الله عنه-، قَالَ : قَالَ رَسُولُ الله:- (( مِنْ سَعَادَةِ الْمَرْءِ الْجَارُ الصَّالِحُ ، وَالْمَرْكَبُ الْهَنِيءُ ، وَالْمَسْكَنُ الْوَاسِعُ)).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.” ( நூல்: முஸ்னத் அஹமத் )

பெருமானார் (ஸல்) அவர்கள் தீய, கெட்ட அண்டை வீட்டார் அமைந்து விடக்கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ

(( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الدُّنْيَا يَتَحَوَّلُ)).

யாஅல்லாஹ்!  தீய, கெட்ட அண்டை வீட்டார் அமைவதில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எப்போதுமே நம்மில் பலர் சராசரியாக வாழ்வதை விரும்புவதில்லை. மாறாக, சிறந்த நிலையில் வாழ்வதையே விரும்புகிறார்கள்.

உலக வாழ்க்கையில் இவ்வளவு கவனம் எடுக்கும் போது மறுமை வாழ்வோடு தொடர்புடைய நாம் நமது வாழ்க்கையை எவ்வளவு சிறந்த வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்விடம் சிறந்த அண்டை வீட்டாராக விளங்க ....

1. நோவினையை சகித்துக் கொள்ள வேண்டும்.

عَنْ مُطَرِّفِ بن عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ ، عَنْ أَبِي ذَرٍّ الغفاري رضى الله عنه، أَنَّ رَسُولَ اللهِ قَالَ: (إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ ثَلَاثَةً ) ومِنْ هَؤُلَاءِ الثَّلَاثَةُ الَّذِينَ يُحِبُّهُمُ اللهُ عَزَّ وَجَلَّ: (رَجُلٌ كَانَ لَهُ جَارُ سُوءٍ، يُؤْذِيهِ، فَصَبَرَ عَلَى أَذَاهُ، حَتَّى يَكْفِيَهُ اللهُ إِيَّاهُ بِحَيَاةٍ، أَوْ مَوْتٍ)

وصححه الألباني في صحيح الترغيب والترهيب

அபூதர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நீண்ட ஒரு பொன்மொழியை அறிவிக்கிறார்கள். அதில் வருவதாவது மூன்று நபர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்களில் ஒருவர் தனது கெட்ட அண்டை வீட்டாரின் நோவினையை சகித்து வாழ்பவர். எவர் அண்டை வீட்டாரின் நோவினையை சகித்து வாழ்வாரோ அல்லாஹ் அவரின் வாழ்வு, மற்றும் மரணத்திற்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஹாகிம் 2446 - முஸ்னத் அஹமத், முஃஜமுத் தப்ரானி )

2. ஸாலிஹான முஸ்லிமாக வாழ வேண்டும்..

 

روي عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله عز وجل ليدفع بالمسلم الصالح عن مائة أهل بيت من جيرانه البلاء، ثم قرأ: ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض». (رواه الطبراني في الكبير والأوسط)

"நிச்சயமாக அல்லாஹ் ஸாலிஹான ஒரு முஸ்லிமின் செயல்பாடுகளின் மூலமாக அவனது அண்டை வீட்டார்களில் நூறு அண்டை வீட்டார்களை சூழ்ந்துள்ள சோதனைகளை நீக்கி விடுகின்றான்" என்று கூறி விட்டு நபி ஸல் அவர்கள் "மனிதர்களில் சிலரைக் கொண்டு சிலருக்கு ஏற்படும் தீங்குகளை அல்லாஹ் நீக்கி விட வில்லை என்றால் இந்த பூமியில் குழப்பம் மிகைத்து விடும்" என்ற பகராவின் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

3. நல்லவனாக உம்மை நிலை நிறுத்த வேண்டும்...

قال عبدالله قال رجل يا رسول الله كيف لي أن أعلم إذا أحسنت أو أسأت؟ قال: إذا سمعت جيرانك يقولون قد أحسنت فقد أحسنت وإذا سمعتهم يقولون قد أسأت فقد أسأت». (رواه أحمد والطبراني، وعبدالله هو ابن سعود واسناده جيد).

ஒருவர் நபி ஸல் அவர்களின் சமூகம் வந்து, நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமது அண்டை வீட்டார் உம்மை நல்லவன் என்று கூறக் கேட்டால் நீ "நல்லவன்" என்றும், உம்மை கெட்டவன் என்று கூறக் கேட்டால் நீ "கெட்டவன்" என்பதை உறுதி செய்து கொள்!" என்று பதிலளித்தார்கள். ( நூல்: அஹமது )

4. உம் நடவடிக்கையால் சீர் திருத்த வேண்டும்..

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ : حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ لِي جَارًا يُؤْذِينِي ، فَقَالَ : انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ ، فَانْطَلَقَ فَأَخْرِجَ مَتَاعَهُ ، فَاجْتَمَعَ النَّاسُ عَلَيْهِ ، فَقَالُوا : مَا شَأْنُكَ ؟ قَالَ : لِي جَارٌ يُؤْذِينِي ، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ ، فَجَعَلُوا يَقُولُونَ : اللَّهُمَّ الْعَنْهُ ، اللَّهُمَّ أَخْزِهِ . فَبَلَغَهُ ، فَأَتَاهُ فَقَالَ : ارْجِعْ إِلَى مَنْزِلِكَ ، فَوَاللَّهِ لَا أُؤْذِيكَ/

முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்: “(அல்லாஹ்வின் தூதரே!) எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு துன்பமிழைக்கிறார்நபி (ஸல்) அவர்கள் பொறுமையாக இருஎன்றார்கள். அவர் மீண்டும் வந்து கூறினார்: எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார்.நபி (ஸல்) அவர்கள்: பொறுமையாக இருஎன்று கூறினார்கள். அவர் மீண்டும் மூன்றாவது முறையாக கூறினார்: எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினையளிக்கிறார்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(வீட்டிலுள்ள) உமது சாமான்களை எடுத்து வீதியிலே வைத்துவிடு. உம்மிடம் எவரேனும் வந்து காரணத்தை விசாரித்தால் என்னுடைய அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார் என்று கூறும். (மக்கள் அனைவரும் அவனை ஏசுவார்கள்; அதனால்) அவர் மீது அல்லாஹ்வின் சாபம் எற்பட்டுவிடும் என்று கூறினார்கள். அவரும் அப்படியே செய்தார். இதனை அறிந்த அவரின் அண்டை வீட்டார் ஓடோடி வந்து “உன் வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்குள் செல்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி ஒரு போதும் நான் உமக்கு நோவினை தரமாட்டேன்” என்றார். (ஹயாத்துஸ் ஸஹாபா)

5. மறுமையில் நமக்கு எதிராக இறைவன் முன் வழக்கு தொடர அனுமதிக்க விட்டு விடக்கூடாது...

قال رسول الله صلى الله عليه وسلم «كم من جار متعلق بجاره يوم القيامة يقول: يا رب هذا أغلق باب دوني فمنع معروفه» (أخرجه البخاري في الأدب المفرد».

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்)

6. தீங்கே செய்தாலும் நல்லதே செய்ய வேண்டும்.

يروى أن رجلاً جاء إلى ابن مسعود رضي الله عنه فقال له: «إن لي جاراً يؤذيني ويشتمني ويضيق عليّ، فقال: اذهب فإن هو عصى الله فيك فأطع الله فيه».

ஒரு மனிதர் இப்னு மஸ்வூத் ரலி அவர்களிடம் வந்து என் அண்டை வீட்டார் சதாவும் என்னை பழித்துக் கொண்டும், எனக்கு தீங்கிழைத்துக் கொண்டும் எனக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கின்றார்.  நான் என்ன செய்வது? என்று கேட்டார்.

அதற்கு இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் "உன் விஷயத்தில் அவர் அல்லாஹ்விற்கு மாறு செய்கிறார். அவர் விஷயத்தில் நீ அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு அவன் ஏவி இருக்கும் அடிப்படையில் அவருடன் நடந்து கொள்வீராக!" என்றார்கள்.

7. நம்மைப் போலவே நமது அண்டை வீட்டாரையும் கருத வேண்டும்.

وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ:- "وَالَّذِى نَفْسِى بِيَدِهِ لاَ يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبَّ لِجَارِهِ – أَوْ قَالَ لأَخِيهِ – مَا يُحِبُّ لِنَفْسِهِ

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (65???)

8. அனைத்திலும் முன்னுரிமை தர வேண்டும்.

நமது வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் அண்டைவீட்டாரிடம் விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்க வேண்டும். அவர் தேவை இல்லை என்றால் மட்டுமே மற்றவரிடம் விற்பனை செய்யவேண்டும். இதுவும் அண்டைவீட்டாருக்கு இருக்கும் உரிமைகளில் ஒன்றாகும்.

حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ قَالَ

وَقَفْتُ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَجَاءَ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَوَضَعَ يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَيَّ إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَال يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَيَّ فِي دَارِكَ فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا أَبْتَاعُهُمَا فَقَالَ الْمِسْوَرُ وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا فَقَالَ سَعْدٌ وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ مُنَجَّمَةٍ ، أَوْ مُقَطَّعَةٍ قَالَ أَبُو رَافِعٍ لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَمِئَةِ دِينَارٍ وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَ مِئَةِ دِينَارٍ فَأَعْطَاهَا إِيَّاهُ

நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள்புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடம்மிருந்து வாங்கிக் கொள்வீராக!எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்கமாட்டேன். என்றார்கள்.

அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிமாகத் தரமாட்டேன்என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது.

அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.  அறிவிப்பவர் : அம்ர் பின் ஷரீத், நூல் :புகாரீ (2258)

9. நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருத வேண்டும். 

باع أبو الجهم العدوي داره بمائة ألف درهم، ثم قال: بكم تشترون جوار سعيد بن العاص جاري، كم تدفعون الآن على الجوار، قالوا: وهل يشترى جوار قط؟ قال: ردوا عليَّ داري وخذوا دراهمكم، والله لا أدع جوار رجل إن فقدت سأل عني، وإن رآني رحب بي، وإن غبت حفظني، وإن شهدت قربني، وإن سألته أعطاني، وإن لم أسأله ابتدأني، وإن نابتني جائحة فرج عني، فبلغ ذلك سعيداً، فبعث إليه بمائة ألف درهم.

அபூ ஜஹ்ம்  என்பவருக்கு கடுமையான பண நெருக்கடி ஆதலால் தாம் குடியிருக்கும் வீட்டை விற்க முன் வந்தார். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் வீட்டிற்கு ஒரு லட்சம் திர்ஹமை விலையாக நிர்ணயம் செய்தது தான். வீடு கேட்டு வந்த எல்லோரும் விலையை கேட்டு விட்டு, இந்த வீட்டிற்கு 100 திர்ஹமே அதிகம். இதிலும் 1’00000 திர்ஹமா?” என திகைத்துப் போயினர். அப்படி என்ன தான் அந்த வீட்டில் இருக்கிறது என அனைவரும் வினவிய போது அபூ ஜஹ்ம் கூறினார் என் பக்கத்து வீட்டில் ஸயீத் இப்னுல் ஆஸ் [ரலி} என்ற பெருந்தன்மையான மனிதர் குடியிருக்கிறார். 

அவரின் குண நலன்களை நீங்கள் அறிவீர்களேயானால் நான் நிர்ணயித்த விலை சரிதான் என்று ஒத்துக் கொள்வீர்கள். அவருக்கு நான் தீங்கு பல செய்திருக்கின்றேன். ஆனால், எனக்கு ஒரு போதும் அவர் தீங்கிழைத்ததில்லை. மாறாக, எனக்கு உபகாரம் செய்திருக்கிறார். நான் அவரிடம் பல முறை மடத்தனமாக நடந்திருக்கின்றேன். ஆனால், அவர் என்னுடன் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்கின்றார். நான் ஊரில் இருந்தால் என்னோடு நேசம் பாராட்டுவார். நான் வெளியூர் சென்று விட்டால், நான் திரும்பி வரும் வரை என் வீட்டையும், என் வீட்டாரையும் பாதுகாத்துக் கொள்வார். 

என் தேவையை அவராகவே முன் வந்து நிறைவேற்றித் தருவார். எனக்கு ஏதாவது துன்பம் நேரிட்டால், துவண்டு போய் விடுவார். அதைக் களைவதில் மும்முரமாக ஈடுபடுவார். என்ன செய்ய என் போதாத காலம் எனக்கு பண நெருக்கடி மட்டும் இல்லை என்றால் ஒரு போதும் அவரை விட்டும் பிரியமாட்டேன்என்றார். 

இந்த செய்தியை கேள்வி பட்ட ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் உமக்கு பக்கத்து வீட்டுக் காரனாய் இருக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீயே என் பக்கத்து வீட்டாளனாய் இரு என்று கூறி ஒரு லட்சம் திர்ஹத்தை நானே தருகின்றேன் என்று கூறி ஒரு லட்சம் திர்ஹத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள் ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள்.    ( நூல்: வஃப்யாத்துல் அஃயான், பாகம்:2, பக்கம்;535 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாளை மறுமையில் அவனிடம் சிறந்தவர்களின் பட்டியலில் நம் அனைவரையும் இடம் பெறச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment