Thursday 21 March 2024

அல்லாஹ்விற்கு விருப்பமான பெயரே சிறந்த, அழகான பெயர்!!

 

தராவீஹ் சிந்தனை:- 12, சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 2.

அல்லாஹ்விற்கு விருப்பமான பெயரே சிறந்த, அழகான பெயர்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் பதினோராம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 12 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நேற்றிலிருந்து   நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய அமர்வில் "பெயர் சூட்டுவதில் சிறந்த பெயர் எது? என்பது தொடர்பாகவும், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான பெயர் எது? " என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

«خيرُ الأسماءِ عبدُ اللهِ وعبدُ الرَّحمنِ» (السلسلة الصحيحة [2/573]).

"பெயர்களில் சிறந்த பெயர் அப்துல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஸ் - ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா )

இன்னொரு அறிவிப்பில்...

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ سَبَلَانَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ تَعَالَى عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ .ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4300

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ( நூல்: அபூதாவூத் 4300 )

இன்னொரு அறிவிப்பில்...

وَأَخْبَرَنِي ابْنُ لَهِيعةَ، عَنْ […] أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كانَ يَقُولُ: إِنَّ أَحْسَنَ الْأَسْماءِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَعُبَيْدُ اللَّهِ، وَشَرَّها حَرْبٌ وَمُرّةُ، وَأَصْدَقَ الْأَسْماءِ الْحارِثُ وَهَمّامٌ.

பெயர்களில் மிகவும் அழகான பெயர் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், உபைதுல்லாஹ் ஆகும். பெயர்களில் கெட்ட பெயர் முர்ரா - கசப்பு, ஹர்ப் - சண்டை, போர் ஆகும். பெயர்களில் மிகவும் வாய்மையானது ஹாரிஸ், ஹமாம் ஆகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். 

சிறந்த பெயர், அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர், அழகான பெயர் என்ற இந்த மூன்று சிறப்பம்சங்களை அப்துல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகிய பெயர்கள் உள்ளடக்கியுள்ளன.

இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட 17 -ம் அத்தியாயமான அல் இஸ்ராஃ -வின் 110 –வது வசனம் இறக்கியருளப்பட்டதன் பிண்ணனி மிகவும் கவனத்திற்குரிய ஒன்றாகும்.

பெயர் சூட்டுதல் தொடர்பான ஒரு நிகழ்வின் மூலம் இந்த வசனம் இறக்கியருளப்பட்டது. ரஹ்மான் என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும் என்று பறை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சாற்றினான். பின்னால் அந்த சம்பவம் விவரிக்கப்படுகிறது. 

குழந்தை பிறந்தவுடன் அடுத்ததாக அக்குழந்தைக்கு ஒரு நல்லப் பெயர் சூட்ட வேண்டும் என்று  நாம் ஆசைப்படுகின்றோம். 

அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தைத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பெயர் சூட்டுகிறோம். 

ஆனாலும் பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை வைக்க வேண்டும் என்ற நோக்கில்  மோசமானப் பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள்.

இன்னும் பலர் தங்கள் பகுதியில் அல்லது தான் அறிந்த வகையில் யாரும் வைக்காத பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெயரின் ஓசைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் அதன் பொருளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

அழகிய பெயரை ஏன் சூட்ட வேண்டும்?

حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ بْنُ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي زَكَرِيَّا الْخُزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الدَّرْدَاءِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ ‏

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ தர்தா (ரலி),(:நூல் : அஹ்மத் )

وعن بريدة:- أن النبي ﷺ كان لا يتطير من شيء، وكان إذا بعث عاملاً سأل عن اسمه، فإذا أعجبه اسمه فرح به، ورؤي بشر ذلك في وجهه، وإن كان كره اسمه رؤي كراهية ذلك في وجهه , رواه أبو داود:3920، وصححه الألباني السلسلة الصحيحة

நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை. (ஜகாத் வசூலிப்பதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஓரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும். அறிவிப்பாளர் : புரைதா (ரலி),

( நூல் : அபூ தாவூத் )

عن أبي شُرَيْح هانىء الحارثي الصحابي رضي اللّه عنه؛ أنه لما وَفَدَ إلى رسول اللّه صلى اللّه عليه وسلم مع قومه سمعهم يُكنّونه بأبي الحكم، فدعاه رسول اللّه صلى اللّه عليه وسلم فقال‏:‏ ‏"‏إنَّ اللَّهَ هُوَ الحَكَمُ وَإِلَيْهِ الحُكْمُ فَلِمَ تُكَنَّى أبا الحَكَمِ‏؟‏‏"‏ فقال‏:‏ إن قومي إذا اختلفوا في شيء أتوني فحكمتُ بينَهم، فرضي كِلا الفريقين، فقال رسول اللّه صلى اللّه عليه وسلم‏:‏‏"‏ مَا أحْسَنَ هَذَا، فَمَا لَكَ منَ الوَلَدِ‏؟‏‏"‏ قال‏:‏ لي شُريح، ومُسلم، وعبدُ اللّه، قال‏:‏ ‏"‏فَمَنْ أَكْبَرُهُمْ‏؟‏‏"‏ قلت‏:‏ شريحُ، قال‏:‏ ‏"‏فأنْتَ أبُو شُرَيْحٍ‏"‏‏.‏

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள். (ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷுரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷுரைஹ் (ஷுரைஹின் தந்தை) எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள். ( நூல் : நஸயீ 5292 )

பெருமானார் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தவறான, தீய, கெட்ட பெயர்களை மாற்ற நேரிடும் போது மிக அதிகமாக அப்துல்லாஹ் என்றும், அதற்கடுத்து அப்துர்ரஹ்மான் என்றும் அதற்குப் பிறகு சில பெயர்களையும் சூட்டியுள்ளதாக வரலாற்றில் காண முடிகிறது.

وَحَدَّثَنِي ابْنُ سَمْعانَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، أَنَّ رَسُولَ اللَّهِ عَلَيْهِ السَّلامُ قالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ ابْنِ سَلُولَ: ما اسْمُكَ؟ فَقالَ: حُبابٌ. فَقالَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلامُ: إِنَّ حُبابًا اسْمُ شَيْطانٍ، وَلَكِنِ اسْمُكَ عَبْدُ اللَّهِ.

 

நயவஞ்சகர்களில் தலைவனாக செயல் பட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் தம் மகனுக்கு ஹுபாப் என்று பெயர் சூட்டி இருந்தார். 

அவன் நல்லவனாக இருந்த துவக்க காலத்தில் தமது மகனை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வந்த போது, நபி ஸல் அவர்கள் அந்த சிறுவரிடம் "உமது பெயர் என்ன?" என்று கேட்டார்கள். சிறுவர், ஹுபாப் என்றார்.

அப்போது, பெருமானார் (ஸல்)  அவர்கள் "ஹுபாப் என்பது ஷைத்தானின் பெயராகும். உம்முடைய பெயர் அப்துல்லாஹ் ஆகும் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

وَأَخْبَرَنِي الْقاسِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عُمارةَ بْنِ غَزِيّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ حَبّانَ: أَنَّ رَسُولَ اللَّهِ عَلَيْهِ السَّلامُ قالَ يَوْمَ بَدْرٍ: اشْتَدُّوا عَلَيَّ. فَقامَ الْحُبابُ بْنُ الْمُنْذِرِ الْأَنْصارِيُّ فَقالَ: يا رَسُولَ اللَّهِ، أَوْلَى بِبَدْرٍ عِلْمًا. قالَ: مَنْ أَنْتَ؟ قالَ: أَنا الْحُبابُ بْنُ الْمُنْذِرِ. قالَ: اسْمُكَ الْحُبابُ، إِنَّما الْحُبابُ شَيْطانٌ، أَنْتَ عَبْدُ اللَّهِ.

பத்ர் யுத்த களத்திற்கு தயாராகும் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் பத்ர் குறித்து ஏதோ கூற, மாநபி ஸல் அவர்களின் மனங்கவரும் விதமாக ஒரு நபித்தோழர் பதில் கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், "நீர் யார்?" எனக் கேட்க, அதற்கவர் "நான் ஹுபாப் இப்னு முன்திர் என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் "ஹுபாப் என்பது ஷைத்தானின் பெயராகும். உம்முடைய பெயர் அப்துல்லாஹ் ஆகும் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

وَأَخْبَرَنِي ابْنُ لَهِيعةَ، قالَ: لَمّا وَفَدَ بَنُو الشَّيْطانِ بْنِ الْحارِثِ بْنِ مُعاوِيةَ عَلَى رَسُولِ اللَّهِ عَلَيْهِ السَّلامُ سَأَلَهُمْ: مَنْ أَنْتُمْ؟ فَقالُوا: نَحْنُ بَنُو الشَّيْطانِ. قالَ: بَلْ أَنْتُمْ بَنُو عَبْدِ اللَّهِ.

பனூ ஷைத்தான் எனும் கோத்திரத்தார்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வந்த போது, அவர்கள் யார் என்று? நபி ஸல் அவர்கள் நபித்தோழர்களிடம் விசாரிக்கச் சொல்ல, விசாரித்து வந்த நபித்தோழர்கள் "அவர்கள் பனூ ஷைத்தான்" கோத்திரத்தார்களாம் என்று கூற, இல்லை "அவர்கள் பனூ அப்துல்லாஹ்" என்று மாநபி ஸல் அவர்கள் பெயரிட்டார்கள்.

وَأَخْبَرَنِي ابْنُ لَهِيعةَ، عَنْ أَبِي قَبِيلٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي غِفارٍ حَدَّثَهُ: أَنَّ أُمَّهُ جاءَتْ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ عَلَيْهِ السَّلامُ وَعَلَيْهِ تَمِيمةٌ، فَقَطَعَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلامُ تَمِيمَتَهُ، وَقالَ: ما اسْمُ ابْنُكِ؟ فَقالَتِ: اسْمُهُ السّائِبُ. قالَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلامُ: بَلِ اسْمُهُ عَبْدُ اللَّهِ. فَقُلْتُ: أَتُجِيبُ بِكُلِّهِما؟ قالَ: لا واللَّهِ ما كُنْتُ أُجِيبُ إِلّا عَلَى اسْمِ رَسُولِ اللَّهِ عَلَيْهِ السَّلامُ الَّذِي سَمّانِي.

பனூ ஃகிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தமது கையில் குழந்தையுடன் வந்தார். அந்த குழந்தைக்கு பனிகால குல்லா போட்டிருந்தார். அதை அகற்றி அந்த குழந்தையின் முகத்தை பார்த்த நபி (ஸல்) அவர்கள் குழந்தையின் பெயர் என்ன என்று கேட்க, ஸாயிப் என்று அந்த தாயார் கூறினார்கள்.

 

அப்போது, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள்.

பின்னாளில் இதை அவர் மக்களிடம் சொன்ன போது, மக்கள் உம்மை இரண்டு பெயரையும் கூறி அழைக்கவா? என்று கேட்டனர்.

அதற்கவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் என்ன பெயர் சூட்டி என்னை அழைத்தார்களோ, அதை கூறி நீங்கள் அழைப்பதையே நான் விரும்புகிறேன்" என்றார்கள்.

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنِي يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ خَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ اسْمُ أَبِي فِي الْجَاهِلِيَّةِ عَزِيزًا، فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் அஸீஸ்” (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் அப்துர் ரஹ்மான்” (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி),

அபூபக்ர் (ரலி) அவர்களும் அப்து அம்ர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். வியாபார விஷயமாக அப்து அம்ர் யமனுக்குச் சென்றிருந்தார்.

இந்த வேளையில் தான் அண்ணலார் ஏகத்துவ வசந்தத்தை ஏந்தி வந்திருக்கிற இறைத்தூதர் என தங்களைப் பிரகடனப்படுத்தினார்கள்.

அன்னை கதீஜா (ரலி), அலீ (ரலி), அபூபக்ர் (ரலி), ஜைத் (ரலி) இவர்களொடு நபிகளாரின் மூன்று பெண்மக்களும் ஏகத்துவ வசந்தத்தில் தங்களை இணைத்திருந்த தருணம் அது.

 

لقد أسلم في وقت مبكر جدا..

بل أسلم في الساعات الأولى للدعوة، وقبل أن يدخل رسول الله دار الأرقم ويتخذها مقرا لالتقائه بأصحابه المؤمنين.. فهو أحد الثمانية الذن سبقوا الى الاسلام..

عرض عليه أبوبكر الاسلام

யமனில் இருந்து திரும்பிய அப்து அம்ர், நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்து தான் ஊரில் இல்லாத போது நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக அண்ணலார் பற்றிய பேச்சு வரவே அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டு நேராக அப்து அம்ரை நபி {ஸல்} அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் மார்க்கம், வேத வெளிப்பாடு, ஓரிறைக் கொள்கை என ஏகத்துவத்தின் உண்மை முகத்தை அப்து அம்ருக்கு அண்ணலார் விளக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

அண்ணலார் பேசி முடித்ததும் அவர்களின் கரம் பற்றி கலிமா ஷஹாதா கூறி எட்டாவது நபராக தம்மை இணைத்துக் கொண்டார் அப்து அம்ர்.

 

அப்து அம்ர் - அம்ரின் அடிமை இது இஸ்லாமிய நாகரீகத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பெயர் என்று கூறிய அண்ணலார் அப்துர்ரஹ்மான் ரஹ்மானின் அடிமை என்று பெயர் சூட்டினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏகத்துவ வெளிச்சம் மக்காவின் பெருவெளியில் பரவத் தொடங்கிய போது அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரும், அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் எனும் செய்தியும் பரவத்தொடங்கியது.

அன்று மிகப்பிரபல்யமாக இருந்த பெரும் வியாபாரிகளில், செல்வந்தர்களில் அப்துர்ரஹ்மான் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அப்து அம்ரும் ஒருவர்.

எப்படி தூதுத்துவத்தை கேள்விக்குரியாக்கினார்களோ, விவாதப் பொருளாக ஆக்கினார்களோ அதே போன்று அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரையும் விவாதப் பொருளாக மாற்றினர் குறைஷிகள்.

அப்துர்ரஹ்மான் இது அன்று வரை குறைஷிகளால் அறியப்படாத பெயர். அப்துல் கஅபா, என்றும் அப்துல் உஸ்ஸா என்றும் அப்து அம்ர் என்றும் பெயர் சூட்டி அழைத்துப் பழகியவர்கள் அவர்கள். அபூபக்ர் அவர்களின் பெயர் கூட அப்துல் கஅபா என்று தான் இருந்தது நபி {ஸல்} அவர்கள் தான் அப்துல்லாஹ் என்று மாற்றினார்கள்.

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا‏

நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றனஎன்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக. ( அல்குர்ஆன்: 17: 110 )

விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அல்லாஹ் அல் இஸ்ராஃ அத்தியாயத்தின் 110 –வது வசனத்தை இறக்கியருளி ரஹ்மான் என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும் என்று பறை சாற்றினான்.

அல்லாஹ் விரும்பும் அழகிய, சிறந்த பெயர்களை சூட்டுவோம்!!

No comments:

Post a Comment