Saturday 30 March 2024

உலகின் தண்ணீரில் சிறந்த தண்ணீர் ஜம்ஜம் தண்ணீர்!!

 

தராவீஹ் சிந்தனை:- 21. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 11.

உலகின் தண்ணீரில் சிறந்த தண்ணீர் ஜம்ஜம் தண்ணீர்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 20 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 21 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "உலகின் தண்ணீரில் சிறந்த தண்ணீர் எது?" என்ற கேள்விக்கு நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

أخرج ابن حبان والطبراني في الكبير من حديث ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله صلى الله عليه وسلم: "خَيرُ مَاءٍ عَلىَ وَجْهِ الأرْضِ مَاءُ زَمْزَمَ، فِيهِ طَعَامٌ مِنْ الطعْمِ، وَشِفاءٌ مِنْ السقْمِ

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:- பூமியில் உள்ள எல்லா நீரை விடவும் ஜம்ஜம் நீர் சிறந்ததாகும் மேலும், பசிக்குஉணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும்" இருக்கின்றது. ( அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), தப்ரானீ 11167, இப்னு ஹிப்பான் ) 

وفي حديث أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم  قال في ماء زمزم : " إنها مباركة إنها طعام طعم "  رواه مسلم

நபிகளார் (ஸல்) கூறினார்கள்: இந்தத் தண்ணீர் அருள் வளம் (பரக்கத்) நிரம்பியதாகவும் உணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கின்றது. அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 6513,

عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم ماء زمزم لما شرب له ان شربته تشتشفي به شفاك الله وان شربته لشبعك اشبعك الله به وان شربته لقطع ظمئك قطعه وهي هزمه جبرئيل وسقيا الله اسماعيل- ( دار قطني والحاكم)

ஜம் ஜம் நீர் எந்த நோக்த்திற்காக அருந்தப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறும் நோய் குணமடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அருந்தப்பட்டால் நோய் குணமாகும் பசி தீர வேண்டுமென அருந்தினால் பசி தீர்ந்து விடும் ( நூல் ஹாகிம் தார குத்னி)

ஜம்ஜம் நீரின் தனித்துவமான சிறப்புக்கள்..

இந்த மூன்று நபிமொழிகளின் மூலமாக ஜம்ஜம் நீரின் புனிதத்தை இந்த உம்மத் விளங்கிக் கொள்ள முன்வர வேண்டும். ஆறு சிறப்புகள் ஜம்ஜம் நீருக்கு இருக்கின்றன.

1.உலகின் சிறந்த நீர். 2. பரக்கத் நிறைந்தது. 3. நிய்யத் கபூலாகும். 4. பசிக்கு உணவு, 5.நோய்க்கு நிவாரணம், 6. தாகம் தீர்க்கும்.

وهو” سيد المياه وأشرفها وأجلها قدرا، وأحبها إلى النفوس، وأغلاها ثمنا، وأنفسها عند الناس، وسقيا الله إسماعيل” وهو الذي غُسل به صدر النبي صلى الله عليه وسلم مرتين فملئ حكمة وإيمانا

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: ஜம்ஜம் நீர் உலகின் அனைத்து நீர்களிலும் முதன்மையானதாகும். அந்த நீர் தரத்தாலும், உயர்வாலும் சிறந்ததாகும்.

விலைமதிக்க முடியாத மனித மனங்களால் அதிகம் விரும்பப்படும் நீராகும்.

இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட பேரற்புதம் ஆகும். நமது நபி ஸல் அவர்களின் இதயம் இருமுறை அந்த நீரால் தூய்மைப்படுத்தப்பட்டு இறைநம்பிக்கை மற்றும் அறிவு ஞானத்தால் நிரப்பப்பட்டது. ( நூல்: ஜாதுல்மஆத் )

ويستحب للحاج والمعتمر عند الفراغ من الطواف بالبيت، وقبل البدء السعي الشرب والتضلع من ماء زمزم اقتداءا برسول الله عليه الصلاة والسلام

ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் தவாஃபை நிறைவு செய்த பிறகு ஸயீ செய்யும் முன்பாக மாநபி ஸல் அவர்களின் வழக்கத்தை பின்பற்றும் முகமாக ஜம்ஜம் நீரைக் குடிப்பதும், நிரப்பமாகக் குடிப்பதும், அஹ்மதின் ரிவாயத் ஒன்றில் தலையில் ஊற்றிக் கொள்வதும் விரும்பத்தக்க நடைமுறையாகும்.

ஜம்ஜம் உடைய பரக்கத்தும், கபூலாகும் நிய்யத்தும்…

وقد روي فيه قوله عليه الصلاة والسلام:”ماء زمزم لما شرب له” وهو حديث مختلف في حكمه بين مصحح ومضعف، ولكن العمل عليه عند أهل العلم ربما لاعتبار عموم الأحاديث الواردة في شأنه.

"ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காக குறிக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்" என்று நபி ஸல் அவர்கள் கூறியதன் அடிப்படையில் குடிக்கும் முன்பாக நமது நோக்கத்தை மிகவும் உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த நபிமொழி ஸஹீஹா? ளயீஃபா? எனும் அபிப்பிராய பேதம் அறிஞர்கள் இடையே நிகழ்தாலும் பெரும்பான்மையான அறிஞர்கள் கூற்றுப்படியும், நபித்தோழர்கள் இமாம்கள், ஹதீஸ் கலை அறிஞர்கள் பெரும்பாலானோரின் அனுபவப்பூர்வமான வழிகாட்டல் படியும் இந்த ஹதீஸ் அமல் செய்ய தகுதியானதாக தரம் உயர்த்தப்படுகிறது. ( நூல்: திப்புன் நபவீ )

 

يقول الحسن بن عيسى: رأيت ابن المبارك دخل زمزم فاستقى دلوا واستقبل البيت ثم قال: اللهم إن عبد الله بن المؤمل حدثني عن أبي الزبير عن جابر أن النبي صلى الله عليه وسلم قال: «ماء زمزم لما شرب له» اللهم أني أشربه لعطش يوم القيامة فشرب

ஹஸன் இப்னு ஈஸா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நான் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை ஜம்ஜம் கிணற்றுக்கு அருகே கண்டேன். கையில் ஒரு வாளியில் ஜம்ஜம் நீரை வைத்துக் கொண்டு கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கி "அல்லாஹ்வே! நிச்சயமாக அப்துல்லாஹ் இப்னு முஃமல் அவர்கள் என்னிடம் தமக்கு அபுஸ் ஸுபைர் அவர்கள்  ஜாபிர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்கள் கூறியதாக அறிவித்த "ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காக குறிக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்" இந்த நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். "யாஅல்லாஹ் மறுமையில் எனது தாகத்தை நீ தணித்து வைப்பாயாக" என்று துஆச் செய்தார்கள். ( நூல்: தாரீகே திமிஷ்க் )

وقيل لابن خزيمة يوما من أين أوتيت هذا العلم؟ فقال: قال رسول الله صلى الله عليه وسلم: «ماء زمزم لما شرب له» وإني لما شربت ماء زمزم سألت الله علما نافعا

ஹதீஸ் கலை வல்லுநர் அபூபக்ர் இப்னு குஸைமா (ரஹ்) அவர்களிடம் "நீங்கள் இவ்வளவு மார்க்க ஞானம் நிறைந்த அறிஞராக இருக்கின்றீர்களே? அது எப்படி என்று வினவியதற்கு, நான் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்த அடிப்படையில் பயன் தரும் கல்வியை வேண்டி துஆச் செய்து ஜம்ஜம் நீரைப் பருகினேன் " என்றார்கள்.

وقال الحاكم: فضائل ابن خزيمة مجموعة عندي في أوراق كثيرة، ومصنفاته تزيد على مائة وأربعين كتابا سوى المسائل، والمسائل المصنفة مائة جزء، وله فقه حديث بريرة في ثلاثة أجزاء

ஹாகிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் தொகுத்த பல்வேறு நூல்களின் தொகுப்பு என்னிடம் இருந்தது. அதுவே சுமார் 140 நூல்களாகும். இது போக மஸாயில் - மார்க்க சட்டம் தொடர்பாக அவர்கள் தொகுத்த 100 தொகுப்புகள் என்னிடம் இருந்தது. அதிலும், பரீரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களைக் கொண்டு அவர்கள் ஃபிக்ஹ் சட்டங்களாக தொகுத்த நூல்களின் எண்ணிக்கை ஏழு ஆகும்.

وبإذن الله تعالى ثم ببركة ماء زمزم الذي شربه أبو بكر بن خزيمة هذا الماء الشريف المبارك بنية العلم، صار إمام الأئمة وركنا كبيرا من أركان السنة النبوية قلما وقولا وعملا

அல்லாஹ்வின் பெருங் கருணையாலும் ஜம்ஜம் நீரின் பரக்கத்தாலும்  பயன் தரும் கல்வி வேண்டும் என்ற எண்ணத்தில் (துஆவில்) குடித்ததால் பெரும் அறிஞராகவும், ஹதீஸ் கலை மற்றும் சட்டக் கலை வல்லுநராகவும்,   நபிமொழியை சொல்லாலும் செயலாலும் அமல் செய்யும் மகத்தான அறிஞராக திகழ்ந்தார்கள். ( நூல்: அல் மஸ்தருஸ் ஸாபிக், தத்கிரத்துல் ஹுஃப்ஃபாள் )

الإمام الزهري عالم متقن،وافر العقل، متبحر في علم السنة النبوية، ومنقطع النظير، وكان مثلا سائرا يضرب به المثل في قوة الحفظ وفي استظهار العلم، حتى قال عن نفسه: “ما استودعت قلبي شيئًا قط فنسيته”، ويقول عنه عصريه عمرو بن دينار التابعي: “ما رأيت أحدًا أنص للحديث من الزهري”  

ومن أسرار تمكن هذا الإمام العجيب في الحفظ ما جاء في سؤال الإمام أحمد بن حنبل لشيخه حيث قال: سألت يحيى بن سعيد من كان أحفظ الزهري أو قتادة؟ فقال: ما فيهما إلا حافظ، ثم قال يحيى: الحفظ نحلة من الله تعالى. وكان قتادة منحولًا، وأما الزهري فإنه حكى عنه أنه قال: رأيت في المنام أشرب ماء زمزم؛ فإنه لما شرب له فقمت فأسبغت الوضوء، وصليت أربع ركعات ثم شربته للحفظ فحفظت، فما سمعت شيئًا فأنسيته

இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) அவர்கள் மிகப் பெரிய முஹத்திஸாகவும், ஹதீஸ்களை மனனம் செய்த ஹாஃபிழாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் மனன ஆற்றலைக் கண்டு வியந்த இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல்

(ரஹ்) அவர்கள் தங்களது ஆசிரியர் யஹ்யப்னு ஸயீத் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸ்களை மனனம் செய்வதில் கதாதா (ரஹ்) அவர்கள் சிறந்தவரா? இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) சிறந்தவரா? என்று கேட்டார்கள்.

அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள் "சந்தேகமே வேண்டாம்! இருவருமே சிறந்த ஹாஃபிழ்கள் தாம். எனினும் இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஹதீஸை மனனம் செய்தாலும் அடுத்த நொடியே மறந்து விடுமாம். மறதியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள்.

ஒரு நாள் அவர்கள் தங்களது கனவில்"ஜம்ஜம் நீரை குடிப்பது போல கனவு கண்டார்களாம். அதுவும், இஸ்பாகுல் உளூ என்ற முழுமையாக உளூ செய்து நான்கு ரக்அத்துகள் தொழுது மனன ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நின்றவாறு ஜம்ஜம் நீரை குடித்தார்களாம்" அதன் பின்னர் தாம் பிறரிடம் இருந்து கேட்ட எந்த நபிமொழிகளும்  மறக்காமல் நினைவில் இருந்ததாம்" என்று அவர்களே சொன்னார்கள் என்ற இந்த தகவலை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள். ( நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால் )

من أهل العلم من شرب زمزم بنية رواية الحديث عن الشيخ، ومن ذلك ما قصه الإمام الحميدي في مجلس محدِّث الحرم المكي بن عيينة قائلا:” كنا عند سفيان بن عيينة فحدثنا بحديث زمزم: «أنه لما شرب له»، فقام رجل من المجلس ثم عاد.

فقال له: يا أبا محمد! أليس الحديث صحيحا الذي حدثتنا به في زمزم أنه لما شرب له؟

فقال سفيان: نعم.

فقال الرجل: فإني قد شربت الآن دلوا من زمزم على أنك تحدثني بمئة حديث.

فقال سفيان: اقعد. فحدثه بمئة حديث.

ورواية مئة حديث بالعلو في مجلس واحد من هذا الإمام الكبير فريد عصره؛ فرصة كبيرة ونعمة عظيمة ساقها الله إلى هذا التلميذ بسبب شرب ماء الزمزم

இமாம் ஹுமைதீ அவர்கள் இமாம் முஹத்திஸ் அல் மக்கீ இப்னு உயய்னா (ரஹ்) அவர்களின் சபையில் இருந்தோம்.

அப்போது, முஹத்திஸ் அல் மக்கீ (ரஹ்) அவர்கள், ஸுஃப்யான் இப்னு உயைய்னா (ரஹ்) அவர்கள் ஒரு நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காக குறிக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்" இந்த நபிமொழியை நடத்திக் கொண்டிருந்தார்களாம்.

சபையில் இருந்த ஒருவர் எழுந்து இந்த ஹதீஸ் ஸஹீஹானதா? என்று கேட்டார்.

அதற்கு, ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது அவர் "நான் இப்போது ஜம்ஜம் நீரைப் பருகப் போகிறேன். நீங்கள் நூறு ஹதீஸை இந்த சபையில் இப்போது எனக்கு நீங்கள் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்" என்றார். அது போல ஜம்ஜம் நீரை குடித்து விட்டு வந்தார்.

அவரை அழைத்த ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் இங்கே அமருங்கள் என்று ஒரு இடத்தை சுட்டிக் காட்டி"நூறு ஹதீஸை" அறிவிப்பாளர்கள் பெயருடன் அறிவித்தார்களாம். ( நூல்: அல் மஜாலிஸத்து வல் ஜவாஹிருல் இல்ம் )

صنف الإمام أبو عبد الله الحاكم تصانيف كثيرة في علم الحديث ورزق حسن التصنيف، حتى قال ابن عساكر: وقع من تصانيفه المسموعة في أيدي الناس ما يبلغ ألفا وخمسمائة جزء  وقال الحافظ أبو حازم العبدويي: سمعت الحاكم أبا عبد الله إمام أهل الحديث في عصره يقول: شربت ماء زمزم، وسألت الله أن يرزقني حسن التصنيف

இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள் பல கிதாபுகளை எழுதியுள்ளார்கள். 

இமாம் இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் வாழ்ந்த காலத்தில் நான் கேள்விப்பட்ட வகையில் அன்றைய மக்களிடம் இமாம் ஹாகிம் அவர்கள் எழுதிய 1500 கிதாபுகள் பயன்பாட்டில் இருந்தது.

அபூ ஹாஸிம் அல் அப்தூயீ (ரஹ்) அவர்கள் இமாம் ஹாக்கிம் (ரஹ்) அவர்கள் கூறியதாக கூறுகின்றார்கள்: நான் ஜம்ஜம் நீரைக் குடிக்கும் போது யாஅல்லாஹ்! மக்களுக்கு பயன் தரும் அழகிய கிதாபுகளை எழுதும் பாக்கியத்தை எனக்கு வழங்குவாயாக! என்று துஆச் செய்தேன்"  என்று கூறினார்களாம். ( ஸியரு அஃலாமின் நுபலா )

قال ابو عبد الله محمد بن علي الترمذي وحدثني ابي رحمه الله دخلت الطواف في ليلة ظلماء فاخذني من البول ماشغلني فجعلت اعتصر حتي اذاني وخفت ان خرجت من المسجد ان اطأ بعض تلك الاقدام وذلك ايام الحج فذكرت هذا الحديث فدخلت زمزم فتضلعت منه فذهب عني الي الصباح( تفسير قرطبي)

 

இமாம் திர்மிதி ( ரஹ்) அவர்கள் தமது தந்தையின் மூலம் அறிவிக்கிறார்கள் ஒரு நாள் இருளான இரவில் தவாப் செய்ய ஹரம் ஷரீபுக்கு சென்றேன் அந்த சமயத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது நான் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டிருந்தேன் வெளியில் சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் அது ஹஜ்ஜூடைய காலம் என்பதாலும் அவ்வாறு செய்தேன் அப்போது இந்த ஹதீஸ் எனக்கு நினைவிற்கு வந்தது உடனே ஜம் ஜம் கிணற்றுக்குச் சென்று அதன் நீரை வயிறு நிரம்ப குடித்தேன் அதன் பரக்கத்தால் அடுத்தநாள் காலை வரை எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்படவில்லை என்றார்கள். (நூல் தப்ஸீர் குர்துபி பாகம் 9)

இது போன்று இன்னும் ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் காணக் கிடைக்கின்றன.

நோய்களுக்கு நிவாரணம்..

واستحب بعض الفقهاء التزود من ماء زمزم وحمله إلى البلاد لأنه شفاء لمن استشفى ، وجاء في حديث عائشة رضي الله عنها أنها حملت من ماء زمزم في القوارير ، وقالت : حمل رسول الله صلى الله عليه وسلم  منها ، وكان يصبّ على المرضى ويسقيهم "  رواه الترمذي 4/37 .

நபியவர்கள் தோல் பைகளில் ஜம் ஜம் நீரை எடுத்துச்சென்று, அதை நோயாளிகளுக்கு அருந்தக் கொடுப்பவர்களாக, அந்த நோயாளிகள் மீது ஊற்றுபவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பு: உர்வா இப்னுல் சுபைர் (ரலி), பைஹகீ 9768, அஸ்ஸஹீஹா 883) 

وكذا كانت عائشة رضي الله عنها تحمل وتخبر أنه صلى الله عليه وسلم كان يفعله وأنه كان يحمله في الأداوي والقرب فيصب منه على المرضى ويسقيهم

இவ்வாறே அன்னை ஆயிஷாவும் இந்த நீரை எடுத்துச் செல்பவராக இருந்தார். அவரிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நபியவர்களும் இவ்வாறே எடுத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்என்று கூறினார். (ஜாமிவுத் திர்மிதீ 963

நபியவர்கள் இந்த நீரை மிகவும் விரும்புவார்கள். மதீனாவில் இருந்தபோது இந்த நீரைக் கேட்டு மக்காவுக்கு ஆள் அனுப்புவது அவர்களின் வழக்கம். 

فقد كتب صلى الله عليه وسلم  إلى سهيل بن عمرو : " إن وصل كتابي ليلاً فلا تصبحن أو نهاراً فلا تمسين حتى تبعث إليّ بماء زمزم ، وفيه أنه بعث بمزادتين وكان حينئذ بالمدينة قبل أن يفتح مكة ، وهو حديث حسن لشواهده ، 

சுஹைல் இப்னு அம்ருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள், ‘எனது இந்தக் கடிதம் உமக்கு இரவில் கிடைத்துவிட்டால், நீ பகல்பொழுதை அடைவதற்குள் ஜம் ஜம் நீரை அனுப்பிவிட வேண்டும். கடிதம் பகலில் கிடைத்தால், மாலைப்பொழுதை அடைவதற்குள்  நீரை அனுப்பிவிட வேண்டும். தாமதம் செய்துவிடாதேஎன்று குறிப்பிடுகிறார்.

சுஹைல் இரண்டு தண்ணீர்ப் பைகள் நிறைய நீரை நிரப்பி அவற்றை ஓர் ஒட்டகத்தில் வைத்து அனுப்பி வைத்தார். (பைஹகீ 202/5) 

ஜம்ஜம் உருவான சுருக்கமான வரலாறு...

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜரையும் கைக்குழந்தை இஸ்மாயீலையும் இறைக்கட்டளைப்படி தன்னந்தனியே விட்டுச் சென்றார்கள். 

அவர் போன பிறகு கைவசம் இருந்த உணவும் தண்ணீரும் தீர்ந்துவிட்ட ஒரு சமயத்தில் குழந்தை அழுகின்றது. ஹாஜர் (அலை) தமக்கு அருகில் இருந்த ஸஃபா, மர்வா ஆகிய இரண்டு மலைக் குன்றுகள் மீதும் ஏறி இறங்கி, எங்காவது தண்ணீர் தென்படுகிறதா என்று தவிக்கிறார்கள். அந்தக் குன்றுக்கும் இந்தக் குன்றுக்குமாக ஏழு தடவை ஏறி இறங்கிவிட்டார்கள். 

குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் பசியில் துடித்தபடி கால்களை உதைத்துக்கொண்டு பாலைவன மணலில் கிடந்த அந்தத் தருணத்தில்தான் அவர்களின் கால்களுக்கு அடியிலிருந்து ஊற்றுப் பிறந்தது. இறை உதவி வந்துவிட்டது. 

ஹாஜர் (அலை) அதைக் கண்டு மகிழ்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியபடி அந்த ஊற்றை நோக்கி ஜம் ஜம் (நில் நில்) என்றவாறு பாத்தி கட்டினார்கள். 

عن سعيد بن جبير قال: قال ابن عباس - رضي الله عنهما -: قال النبي صلى الله عليه وسلم: يرحم الله أم إسماعيل! لو تركت زمزم ـ أو قال: لو لم تغرف من الماء ـ لكانت عينا معينا

`ஹாஜர் அலை அப்போது அதைத் தடுத்து பாத்திக் கட்டாமல் விட்டிருந்தால், இந்த ஊற்று மறுமைநாள் வரை உலகம் முழுவதும் ஓடக்கூடிய ஆறாக ஆகியிருக்கும்என்று  ஒரு நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. (நூல்:  புகாரீ) 

ஒருவர் நாற்பது தினங்கள் வரை ஜம் ஜம் நீரை குடித்துக்கொண்டே நோன்பு நோட்பவராகவும் தவாஃபு செய்பவராகவும். நல்ல திடகாத்திரமாகவும் இருந்திருக்கிறார் என இப்னுல் கய்யூம்( ரஹ்) அவர்கள் தங்களுடைய ஜாதுல் மஆது நூலில் எழுதியுள்ளார்கள்.

ஜம்ஜம் நீர் குடிக்கும் முறை..

عن ابن عباس رضي الله عنهما أنه رأى رجلا يشرب من ماء زمزم، فقال: هل تدري كيف تشرب من ماء زمزم؟

قال: وكيف أشرب من ماء زمزم يا أبا عباس؟

فقال: إذا أردت أن تشرب من ماء زمزم فانزع دلوا منها ثم استقبل القبلة، وقل: بسم الله، وتنفس ثلاثا حتى تضلّع، وقل: اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு மனிதர் ஜம்ஜம் நீரை குடித்துக் கொண்டிப்பதைக் கண்டார்கள். அவர் அருகில் சென்று ஜம்ஜம் நீரை எப்படி குடிக்க வேண்டும் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். 

அதற்கவர், தெரியாது. எப்படி குடிக்க வேண்டும் என்று கூறுங்கள் என்றார்.

அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "தண்ணீரை கையில் எடுத்து கிப்லாவை முன்னோக்கி பிஸ்மில்லாஹ் சொல்லி மூன்று மிடராக வயிறு நிரம்ப குடிக்க வேண்டும். குடிக்கும் போது"அல்லாஹ்வே! உன்னிடம் பயன் தரும் கல்வியையும், விசாலமான வாழ்வாதாரத்தையும், அனைத்து நோய்களில் இருந்து நிவரணத்தையும் கேட்க வேண்டும்" என்று கூறினார்கள்.( நூல்: அல் அஃக்பாரு மக்கா லில் ஃபாக்கிஹி )

ابن عباس رضي الله عنهما أنه قال : " سقيت النبي صلى الله عليه وسلم  من زمزم وهو قائم "  رواه البخاري 3/492 .

நான் நபி(ஸல்) அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரில் ஒரு வாளி கொண்டு வந்தேன். அப்போது அவர்கள் அதை நின்று கொண்டு குடித் தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஜம்ஜம் நீரை நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்பதில்லை. நபி(ஸல்) அவர்களைப் போல் நின்று கொண்டும் குடிக்கலாம் என்பதை அறிகிறோம்.

وقد ذكر الفقهاء آداباً تستحب لشرب ماء زمزم ، منها استقبال الكعبة ، والتسمية ، والتنفس ثلاثاً ، والتضلع منها ، وحمد الله بعد الفراغ ، والجلوس عند شربه كغيره

ஜம் ஜம் நீரை பிஸ்மில்லாஹ் சொல்லி குடிக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் குடிப்பது  குடித்து முடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் சொல்வது ஆகிய இவை அனைத்தும் முஸ்தப்பாகும்.  நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏதுமில்லை. ( நூல்: இர்ஷாதுல் ஃகல்க் இலா தீனில் ஹக், லிஇமாமி முஹம்மது அஸ் ஸுப்கீ, பக்கம்: 236 )

உலகின் சிறந்த நீர் என்ற நபிமொழியை உண்மை படுத்திய 20 –ம் நூற்றாண்டின் ஆய்வு..

Research by Tariq Hussain, Riyadh, By MOINUDDIN AHMED

Come the Hajj season, and I am reminded of the wonders of Zamzam water.

Let me go back to how it all started. In 1971, an Egyptian doctor wrote to the European press, a letter saying that Zamzam water was not fit for drinking purposes. I immediately thought that this was just a form of prejudice against the Muslims and that since his statement was based on the assumption that since the Ka'aba was a shallow place (below sea level) and located in the center of the city of Makkah, the wastewater of the city collecting through the drains fell into the well holding the water.

Fortunately, the news came to King Faisal's ears who got extremely angry and decided to disprove the Egyptian doctor's provocative statement. He immediately ordered the Ministry of Agriculture and Water Resources to investigate and send samples of Zamzam water to European laboratories for testing the portability of the water.

The ministry then instructed the Jeddah Power and Desalination Plants to carry out this task. It was here that I was employed as a desalting engineer (chemical engineer to produce drinking water from sea water). I was chosen to carry out this assignment. At this stage, I remember that I had no idea what the well holding the water looked like. I went to Makkah and reported to the authorities at the Ka'aba explaining my purpose of visit.

They deputed a man to give me whatever help was required. When we reached the well, it was hard for me to believe that a pool  of water, more like a small pond, about 18 by 14 feet, was the well that supplied millions of gallons of water every year to hajis ever since it came into existence at the time of Hazrat Ibrahim(A.S.)many, many centuries ago.

( Source: https://alislaah4.tripod.com/moreadvices2/id21.htm )

டாக்டர் தாரிக் ஹுஸைன் அவர்கள் கூறுகிறார்கள்:- 1971 ல் எகிப்திய டாக்டர் ஒருவர் ஐரோப்பிய  ஆங்கில பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும்  ஜம் ஜம் கிணறு அது ஒரு பள்ளத்தாக்கில் இருப்பதால் மக்கா நகரில் உள்ள கழிவு நீர்கள் பள்ளத்தாக்கில் தேங்கி பூமிக்குள் சென்று ஜம் ஜம் கிணற்று நீரோடு கலந்து விடுகிறது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இதை நான் படித்தவுடனே தெரிந்துகொண்டேன், இது இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்று. ஏனென்றால் அது ஒரு பள்ளத்தாக்கில் இருக்கும் அமைப்பை வைத்து ஒரு யூகமாய் கூறப்பட்டதே அல்லாமல் விஞ்ஞானப் பூர்வமாய் அல்ல. இதை அறிந்த அப்போதைய சவூதி மன்னர் ஃபைசல் அவர்கள் கோபமடைந்து எகிப்திய டாக்டரின் யூகத்தை தவறு என்று நிரூபிக்க முடிவெடுத்தார்.

மன்னர் ஃபைசல் அவர்கள் (Ministry of Agriculture and Water Resources ) அமைச்சகத்துக்கு ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பாவிலுள்ள (European laboratories)ஆய்வு நிலையத்திற்கும் ஜித்தாவிலுள்ள (Jeddah Power and Desalination Plants கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையம்)ஆய்வு நிலையத்திற்கும் அனுப்பி வைத்தது. அப்போது நான் கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையத்தில் இன்ஜீனியராக பணி புரிந்து கொண்டிருந்தேன். ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்யும் பணியை எங்கள் நிலையத்துக்கு ஓப்படைக்கப்பட்டது.

அதன்படி நான் கஃபாவில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கினேன். அவர்கள் ஆய்வுக்கு ஜம் ஜம் தண்ணீரை எடுக்க ஒரு ஆளை நியமித்து அனுப்பினர். நான் ஜம் ஜம் கிணற்றை பார்க்க நேரிட்டபோது அது 18×14 அடிதான் இருந்தது. பல ஆயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு பல ஆயிரம் மில்லியன் கணக்கான கேலன் தண்ணீரை நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்திலிருந்து பல நூறு நூற்றாண்டுகளாக அல்லாஹ் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

நான் எனது ஆய்வை தொடங்கினேன். எனக்கு துணையாக அனுப்பப்பட்ட ஆளிடம் கிணற்றின் ஆழத்தை காட்ட சொன்னேன். அவர் குளித்து விட்டு கிணற்றில் இறங்கிய பொழுது அவரது தோள்பட்டைக்கு சிறிது மேலாகத்தான் கிணற்றின் நீர் மட்டம் இருந்தது, அதாவது சுமார் ஐந்தடி எட்டு அங்குலம். மேலும் அவர் அங்கு வேறு  குழாய்கள் இல்லை என்பதையும் கூறினார். தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வேண்டி மேலாக உள்ள தண்ணீரை குழாய் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். பிறகு அவரை ஒரே இடத்தில் நிற்கும்படி கூறினேன்..

சிறிது இடைவெளிக்குப்பிறகு இரு கைகளையும் உயர்தியபடி அல்ஹம்துலில்லாஹ்என்று கூறினார். ஊற்று நீர் சுரப்பதை காலில் உணரப்பட்டது. கிணற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே அளவாக நீர் சுரந்தது. தண்ணீரிலிருந்து சிறிது மாதிரி  எடுத்துக்கொண்டோம். காஃபா அதிகாரிகளிடம் காஃபா அருகில் உள்ள மற்ற கிணறுகளையும் பார்வையிட கோரினேன். அவைகள் எல்லாம் வற்றிய நிலையில் இருந்தன. எங்கள் ஆய்வின் படியும், ஐரோப்பிய ஆய்வின் முடிவின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. ஜம் ஜம் தண்ணீருக்கும் மற்றைய தண்ணீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கால்சியமும், மாக்னீசியமும் அளவில் சற்று அதிகம். கால்சியம் சத்து அதிகமிருப்பதால் ஹாஜிகளுக்கு களைப்பை நீக்கி விரைவில் புத்துணர்ச்சி ஏற்பட செய்கிறது. மேக்னீசியம் அதிகமிருப்பதால் தண்ணீரில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.

மேலும் ஐரோப்பிய ஆய்வின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று தெரிய வருவதால் எகிப்திய டாக்டரின் கூற்று ஆதாரமற்றது என்பது தெளிவாகிறது. எங்கள் ஆய்வும் ஐரோப்பிய கூடத்தின் ஆய்வும் ஒன்றாக இருப்பதை அறிந்து மன்னர் ஃபைசல் மகிழ்ச்சியடைந்தார். ( தமிழாக்கம் நன்றி: Readislam.com )

ஜம்ஜம் நீரின் மகத்துவத்தை உணர்ந்து, மாநபி வழிகாட்டுதலின் படி அருந்துவோம்! நம் நிய்யத்துகளை உயர்ந்ததாக ஆக்கி உயர்ந்த இலட்சியங்களை அடைவோம்!!

No comments:

Post a Comment