Sunday 31 March 2024

பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம்!!

 

தராவீஹ் சிந்தனை:-  22. சிறந்த அமல் & சிறந்த காரியம் தொடர்:- 12.

பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம்!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 21 -ம் நோன்பை நிறைவு செய்து விட்டு, 22 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள் மற்றும் சில விஷயங்கள்  குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் இந்த நாளின் இன்றைய அமர்வில் "பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம் எது?" என்ற கேள்விக்கு நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

الإمام ابن حبان البستي في صحيحه من حديث عبد الله بن عمر رضي الله عنه. وأخرجه الإمام الطبراني في المعجم الكبير من حديث عبد الله بن عمر رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: أي البقاع خير؟ وأي البقاع شر؟ قال: «خير البقاع المساجد، وشر البقاع الأسواق».

பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம் எது? பூமியின் நிலப்பரப்பில் வெறுப்பிற்குரிய கெட்ட இடம் எது? என்று ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் கேட்டார். அப்போது நபி ஸல் அவர்கள்:- "பூமியின் நிலப்பரப்பில் சிறந்த இடம் பள்ளிவாசலாகும். பூமியின் நிலப்பரப்பில்  வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்" என்று  கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (நூல்: இப்னு ஹிப்பான் )

இவ்வுலகில் எத்தனையோ இடங்கள், பகுதிகள் இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான இடம் என்று மார்க்கம் சொல்கிறது.

உலகிலேயே மிக சிறந்த இடம் அல்லாஹ்வின் மஸ்ஜித்கள் தான்.

மஸ்ஜித்கள் இஸ்லாமிய அடையாளச் சின்னங்கள், அல்லாஹ்வின் அருளை அவனிடமிருந்து நமக்கு பெற்று தரும் சாதனம்.

மஸ்ஜித்கள் மூலம் தான் நமது வீடும், ஊரும்,  நாடும் செழிப்படைகின்றது.

இன்று மஸ்ஜித்களை அழிப்பதற்காக காவிக்கும்பல்களும், இஸ்லாமிய எதிரிகளும் கடுமையான திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள எல்லா மஸ்ஜித்களையும் கோவில்களாக மாற்ற வேண்டும் என்று முனைப்போடு ஈடுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் பள்ளிவாசல்களின் மகத்துவம் குறித்து அறிந்து கொள்வதும், பிறருக்கு அறியத் தருவதும் நம் மீது கடமையாகும்.

இந்த நேரத்தில் நாம் நமது நபி ஸல் அவர்கள் எச்சரித்துக் கூறிய கால கட்டத்தில் இருக்கின்றோம் என்பதையும் நினைவில் வைத்திருக்க கடமைப்பட்டுள்ளோம்.

மஸ்ஜித்களில் என்ன செய்ய வேண்டும்?

மஸ்ஜிதுகள் எழுப்பப்படுவதன் நோக்கம் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

1. இறைவனை உயர்த்தி அவனுடைய பெயர்களை  திக்ர்'  நினைவு   கூர்வதற்காக....

فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ

இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும்  அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும்,  மாலையிலும் அவனை சில மனிதர்கள் (ஆண்கள்) துதிக்கின்றனர். ( அல்குர்ஆன்:  24: 36 )

2. பிரார்த்தனை செய்வதற்காகவும், இக்லாஸுடன் இறைவனை வணங்குவதற்காக...

قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ

எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே  மீள்வீர்கள்! ( அல்குர்ஆன்:  7: 29 )

மாநபி {ஸல்} அவர்கள் பள்ளிவாசலில் வைத்து பல்வேறு நேரங்களில் ஓதிய 100 க்கும் மேற்பட்ட துஆக்கள், நபித்தோழர்கள், தாபிஈன்கள், இமாம்கள், அறிஞர் பெருமக்கள் தங்களுடைய வாழ்க்கையின் பல்வேறு பட்ட நிலைகளில் மஸ்ஜித்களில் வைத்து கேட்ட பிரார்த்தனைகளின் தொகுப்புகளை பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

عن أبي بن كعب رضي الله عنه قال: كان رجل من الأنصار لا أعلم أحدا أبعد من المسجد منه، وكانت لا تخطئه صلاة، فقيل له: لو اشتريت حمارا لتركبه في الظلماء وفي الرمضاء، قال: ما يسرني أن منزلي إلى جنب المسجد، إني أريد أن يكتب لي ممشاي إلى المسجد، ورجوعي إذا رجعت إلى أهلي. فقال رسول الله صلى الله عليه وسلم : «إن لك ما احتسبت»

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம்.

இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லைஎன்று கூறினார்.

அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே  கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டுஎன்று கூறினார்கள்.  ( நூல்: முஸ்லிம் )

فقال: ما يَسُرُّني أنَّ منزلي إلى جَنْبِ المسجدِ، إِنِّي أريدُ أنْ يُكتبَ لي ممشايَ إلى المسْجدِ، ورُجوعِي إذا رَجَعتُ إِلى أَهْلِي، فقَالَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: «قد جمَعَ اللهُ لك ذلك كلَّه» رواه مسلم.

நான் பள்ளிவாசலுக்கு நடந்துவருவதும் (பள்ளிவாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்என்று அந்த மனிதர் கூறியதாகவும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்என்று கூறியதாகவும் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

3. தொழுகையை நிலை நாட்டுவதற்காக....

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 عن أنس بن مالك قال : إن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فنزل في علو المدينة في حي يقال لهم بنو عمرو بن عوف ، فأقام فيهم أربع عشرة ليلة ، ثم إنه أرسل إلى ملإ بني النجار فجاءوا متقلدين بسيوفهم ، قال : فكأني أنظر إلى رسول الله على راحلته وأبو بكر ردفه ، وملأ بني النجار حوله حتى ألقى بفناء أبي أيوب ، قال : فكان رسول الله يصلي حيث أدركته الصلاة ، ويصلي في مرابض الغنم ، ثم إنه أمر بالمسجد ، قال : فأرسل إلى ملإ بني النجار فجاءوا ، فقال : ” يا بني النجار ، ثامنوني بحائطكم هذا ” قالوا : لا والله لا نطلب ثمنه إلا إلى الله ، قال أنس : فكان فيه ما أقول ، كان فيه نخل وقبور المشركين وخرب ، فأمر رسول الله بالنخل فقطع ، وبقبور المشركين فنبشت ، وبالخرب فسويت ، قال : فصفوا النخل قبلة ، وجعلوا عضادتيه حجارة ، قال : فكانوا يرتجزون ورسول الله معهم ، وهم يقولون : اللهم إنه لا خير إلا خير الآخره ، فانصر الأنصار والمهاجره.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிறந்தகத்தைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப் பாங்கான பகுதியில் இறங்கி, “பனூ அம்ர் பின் அவ்ஃப்என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடையே பதிநான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாகத்) தம் வாட்களை (கழுத்தில்) தொங்கவிட்டபடி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, பனூநஜ்ஜார் கூட்டத்தார் புடைசூழ அவர்களைக் குழுமியிருந்த காட்சியை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கிவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நேரம் வந்தடையும் இடத்திலேயே தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். (இது அவர்களது வழக்கமாக இருந்தது.) இந்நிலையில்தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்துவரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்த போது, “பனூநஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்தை எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தார், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்என்று கூறி (அத்தோட்டத்தை அளித்த)னர்.

நான் (உங்களிடம்) கூறவிருப்பவைதாம் அத்தோட்டத்தில் இருந்தன: அதில் சில பேரீச்ச மரங்கள்,இணைவைப்பாளர்களின் சமாதிகள், இடிபாடுகள் ஆகியவைதாம் இருந்தன. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டும்போது அங்கிருந்த) பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. இணைவைப்பாளர் களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப் படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றி)ச் சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன.

பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (நுழைவாயிலின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு)

வைத்தனர். அப்போது ரஜ்ஸ்எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டு) இருந்தார்கள்.

இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!என்று அவர்கள் பாடினர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ( நூல்: புகாரி )

 

عن جابر بن عبد الله قال: خلت البقاع حول المسجد، فأراد بنو سلمة أن ينتقلوا إلى قرب المسجد، فبلغ ذلك رسول الله ﷺ، فقال لهم: إنه بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد قالوا: نعم، يا رسول الله قد أردنا ذلك، فقال: يا بني سلمة دياركم تكتب آثاركم، دياركم تكتب آثاركم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?” என்று கேட்டார்கள்.

அதற்கு பனூசலமா குலத்தார் ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பனூசலமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்என்று (இரு முறை) கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

4. மார்க்க ஞானம் கற்கும் இடமாக, மார்க்க ஞானம் கற்கப்படும் இடமாக..

ஸலஃபுகளான மேன்மக்கள் மஸ்ஜித்களில் அமர்ந்து மார்க்க ஞானத்தை போதிப்பதையும், மார்க்க ஞானம் போதிக்கும் சபைகளில் சங்கமிப்பதையும் வெகுவாக பேணி வந்தார்கள்.

காரணம் பின் வரும் நபி மொழி தான். நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரமும், நபி ஸல் அவர்களின் அமர்வும் தான்.

أن النبي صلى الله عليه وسلم دخل المسجد فإذا هو بحلقتين إحداهما يقرأون القرآن ويدعون الله تعالى، والأخرى يتعلمون فقال صلى الله عليه وسلم كل على خير، هؤلاء يقرأون القرآن ويدعون الله تعالى فإن شاء أعطاهم وإن شاء منعهم، وهؤلاء يتعلمون، وإنما بعثت معلما فجلس معهم.

நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் நுழைந்து, இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, ‘அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: இப்னுமாஜா )

மஸ்ஜிதோடு தொடர்பில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

قد أخرج البخاري ومسلم عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إِلا ظِلُّهُ: إمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأ فِي عِبَادَةِ الله عز وجل، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بالْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَى ذلك وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ عز وجل، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ".

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

நாம் மஸ்ஜிதோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைப்பதோடு நாம் எதன் மூலம் தொடர்பில் இருக்கின்றோமோ அதன் நன்மைகளும் கிடைக்கும்.

1. மஸ்ஜிதை தூய்மைப்படுத்தும் பணி மூலமாக....

في الصحيحين من حديث عائشة قالت "رأى في جدار القبلة مخاطا أو بصاقا أو نخامة فحكها " رواه البخاري 407 ومسلم 549 .

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள். .அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ( நூல்: புகாரி )

مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَبْرِ فِيهِ مَيِّتُ دُفِنَ حَدِيثًا ، فَسَأَلَ أَصْحَابَهُ عَنْهُ فَقَالَ الصَّحَابَةُ : إِنَّهُ قَبْرُ أُمَّ مِحْجَنٍ، وَهِيَ المَرْأَةُ الَّتِي كَانَتْ تُنَظفُ الْمَسْجِدَ، فَعَاتَبَهُمُ النَّبي لا لِأَنَّهُمْ لَمْ يُخْبِرُوهُ بِمَوْتِهَا ، فَيُصَلِّي عَلَيْهَا صَلَاةَ الجِنَازَةِ وَقَالَ: (أَفَلَا آذَنْتُمُونِي؟ فَقَالُوا: كُنْتَ نَائِمًا فَكَرِهْنَا أَنْ نُوقِظَكَ، فَصَلَّى عَلَيْهَا الرَّسُولُ. (مُسْلِم)

மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுப்புப் பெண்இறந்துவிட்டார். ஆகவே அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் உம்மு மிஹ்ஜன் (ரலி) இறந்துவிட்டார்’’ எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? “அவருடைய அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’’ என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ( நூல்: புகாரி )

மஸ்ஜித்களின் உள்ளேயோ வெளியேயோ ஏதேனும் அசுத்தத்தை கண்டால் சத்தமில்லாமல் அதை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

பணியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்கள் என்று கடந்து செல்வதும், அல்லது சம்பந்தப்பட்ட பணியாளரை அழைத்து சுத்தம் செய்யுமாறு சொல்வதும் சிறந்த பண்பல்ல.

உலகின் மிகவும் தூய்மையான மனிதரான, நபிமார்களின் தலைவரான மாநபி (ஸல்) அவர்களை விட இங்கு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. எனவே, உடனடியாக அதை சுத்தம் செய்ய முன் வர வேண்டும்.

2. பரிபாலனம் செய்யும் நிர்வாக அலுவல் மூலமாக....

اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.( அல்குர்ஆன்: 9: 18 )

3. மஸ்ஜிதின் பரிபாலனத்திற்கு உதவி செய்பவர்களாக...

وقال المؤرخون، حمل تميم من الشام إلى المدينة قناديل وزيتاً ومقطاً «حبل»، ووافق ذلك ليلة الجمعة فأمر غلاماً يقال له أبو البزاد فقام فنشط المقط وعلق القناديل وصب فيها الماء والزيت وجعل فيها الفتيل، فلما غربت الشمس أمر أبا البزاد فأسرجها، وخرج الرسول صلى الله عليه وسلم، إلى المسجد، فإذا بها تزهر، فقال من فعل هذا؟، قالوا تميم الداري يا رسول الله، فقال: نورت الإسلام نور الله عليك في الدنيا والآخرة»،

தமீமுத்தாரி (ரலி)அவர்கள் ஃபாலஸ்தீன் சென்ற போத விளக்கு போன்று வெளிச்சம் தரும் ஒரு பொருளை வாங்கி வந்தார்கள். அதில் தொங்க விடும் கயிறு, திரி வைத்து எரிய விடுவதற்கு கண்ணாடி குடுவை, ஜைத்தூன் எண்ணெய் ஆகியவை இருந்தன. அவர்கள் ஊர் திரும்பி வந்த அந்த நாள் ஜும்ஆ நாளின் இரவாக இருந்தது.

உடனடியாக தமது பணியாளர் அபுல் புஸாதை அழைத்து, அந்த விளக்கை மஸ்ஜிதுன் நபவியில் தொங்க விடச் சொன்னார்கள். பின்னர் மக்ரிப் நேரத்தில் விளக்கு ஏற்றி வைக்குமாறு தம்முடைய பணியாளரிடம் கூறினார்கள்.

மாநபி ஸல் அவர்கள் தொழுகைக்கு மஸ்ஜிதுன் நபவீயிக்குள் பிரவேசிக்கும் போது விளக்கு வெளிச்சத்தில் மஸ்ஜிதுன் நபவி மிக பிரகாசமாக இருந்ததை பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்து  யார் இதை செய்தது என்று கேட்க?!தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தான் செய்தார்கள் என்று நபித்தோழர்கள் சொல்ல, பெருமானார் (ஸல்) அவர்களுக்காக நிறைய துஆ செய்தார்கள். நீங்கள் மஸ்ஜிதை ஒளியாக்கியதற்க்காக அல்லாஹ் உம்முடைய துன்யாவையும்,
ஆகிரத்தையும்  ஒளியாக்குவானாக!  என்று சொன்னார்கள்

இன்னொரு அறிவிப்பில்...சொல்லி விட்டு...   "என்னுடைய எல்லா பெண் மக்களையும் மணம் முடித்து கொடுத்து விட்டேன் இப்போது எனக்கு பெண் மக்கள் இருந்தால் உமக்கு நிக்காஹ் செய்து கொடுத்திருப்பேன்! என்று மிகுந்து மகிழ்ச்சியோடு சொன்னார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.

وقال النبي صلى الله عليه وسلم: «من أسرج في مسجد سراجاً لم تزل الملائكة وحملة العرش يصلون عليه ويستغفرون له ما دام ذلك الضوء فيه»

எவர் மஸ்ஜிதை விளக்கு மூலம் வெளிச்சமாக்கி வைக்கின்றாரோ, வானவர்களும், அர்ஷை சுமக்கும் வானவர்களும் அந்த விளக்கு ஒளி தரும் காலம் முழுவதும் அவரின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்கின்றனர்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

4. பள்ளிவாசலை கட்டுவதன் மூலம் அல்லது விஸ்தரிப்புக்கு உதவுவதன் மூலமாக....

جاء في مسند الإمام أحمد عن ثُمامة بن حَزْن القُشَيْري قال: (أنَّ رسولَ اللهِ -صلى اللهُ عليه وسلَّم- وبعد بني  مسجده وكثر المصلون والعباد، ضاق بهم المسجد وتمنى النبي صلى الله عليه وسلم أن يشتري أحد أصحابه الأغنياء الأرض المجاورة للمسجد ليضمها إليه، فقال مرغبًا: "من يشتري هذه البقعة من خالص ماله فيكون فيها كالمسلمين وله خير منها في الجنة؟" فأسرع عثمان واشترى تلك الرقعة من الأرض بخمسة وعشرين ألفًا، وبعد فتح مكة رأى النبي صلى الله عليه وسلم أن يوسع المسجد الحرام، فعرض على أصحاب أحد البيوت الواسعة الملاصقة للمسجد أن يتبرعوا به، فاعتذروا بأنهم لا يملكون سواه وليس عندهم مؤنة ما يستطيعون تشييد بيت غيره، فترامت الأنباء إلى عثمان، فأقبل إليهم واشتراه بعشرة آلاف دينار، وضمه للمسجد الحرام، فاشتريتُها من خالصِ مالي فجعلتُها بين المسلمينَ

 

அல்லாஹ்வின் மார்க்கத்தில் சாரை சாரையாய் மக்கள் இணைந்து 

கொண்டிருந்த தருணம், மஸ்ஜித் நபவீ நெருக்கடியில் திக்குமுக்காடியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகிலிருக்கும் இடத்தை யாராவது பெற்றுத்தந்தால் மஸ்ஜித் நவபீயை இன்னும் விஸ்தரித்து இட நெருக்கடியை குறைத்து கொள்ளலாமே என தமது விருப்பத்தை வெளிப்படுத்திய போது உஸ்மான் (ரலி) அவர்கள்15,000 தீனார் கொடுத்து மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருந்த இடத்தை வாங்கி அர்ப்பணித்தார்கள்.

மாபெரும் வெற்றியான ஃபத்ஹ் மக்காவிற்குப்பின் இஸ்லாமிய எழுச்சி ஹரம் ஷரீஃபிலும் எதிரொலித்தது!  ஆம் அங்கும் இட நெருக்கடி 10,000  தீனார் விலை கொடுத்து அருகே இருந்த இடத்தை வாங்கி (விஸ்தரிக்க)  அற்பணித்தார்கள்.

முஸ்லிம்களின் தேவைகள் அதிகமான போதெல்லாம் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு முறையும் உஸ்மான் (ரலி) அவர்கள் இறை திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமது செல்வத்தின் மூலம் பல சமூக சேவைகள் புரிந்துள்ளார்கள். ( நூல்: குலஃபாவுர் ரஸுல் (ஸல்) பக்கம் 185, 186, முஸ்னத் அஹ்மத் )

لما شكا الناس إلى عثمان ضيق المسجد، وطلبوا منه أن يزيد فيه، رأى أن يستشير أهل الرأي من صحابة الرسول  قبل أن يفعل شيئاً، فعرض عليهم الأمر وطلب منهم المشورة. وفي الصحيحين: لما أراد عثمان بناء المسجد، كره الناس ذلك وأحبوا أن يدعه على هيئته، فقال: إنكم قد أكثرتم وإني سمعت رسول الله يقول:- مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ تَعَالَى، ‏قَالَ ‏بُكَيْرٌ ‏حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّه، بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ[ (صحيح مسلم، الحديث الرقم 828)

உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்’’ என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

5. மஸ்ஜிதை நேசிப்பதன் மூலமாக....

ويدل عليه رواية أحمد ((معلق بالمساجد)) وكذا رواية سلمان ((مِنْ حُبِّها))، وزاد مالك: ((إذا خرج منه حتى يعود إليه))، وهذه الْخَصلة هي المقصودة من هذا الحديث؛ (فتح الباري 2/145)

 

قال ابن رجب رحمه الله، في وصف الرجل المعلَّق قلبُه بالمساجد: فهو يحب المسجد ويألفه لعبادة الله فيه، فإذا خرج منه تعلَّق قلبه به حتى يرجع إليه،

அர்ஷின் நிழலைப் பெற்றுத் தரும் "பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதர்" என்பதற்கு மஸ்ஜிதை நேசிப்பவர் என்று பொருள் கொள்ளப்படும் படும் என்று ஸல்மான் (ரலி) அவர்களும், 

பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தால் மீண்டும் எப்போது பள்ளிவாசலுக்கு செல்லப் போகிறோம் என்ற ஏக்கம் மனதில் நிழலாடிக்‌ கொண்டிருப்பதற்கு சொல்லப்படும் என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும், இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்களும் விளக்கம் தருகின்றார்கள். ( நூல்: ஃபத்ஹுல் பாரி, ஃபைளுல் கதீர் )

قال المباركفوري في التحفة: لأن المؤمن في المسجد كالسمك في الماء، والمنافق في المسجد كالطير في القفص،

இமாம் முபாரக்பூரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதின் விஷயத்தில் இறைநம்பிக்கையாளனின் மனசு நீரில் நீந்திச் செல்லும் மீனுக்கும், முனாஃபிக்கின் - நயவஞ்சகனின் விஷயத்தில் கூண்டில் இருக்கும் பறவைக்கும் ஒப்பானதாகும்.

மீனை நீரில் இருந்து பிரித்து விட்டால் மீன் துடி துடித்து விடும், பறவையோ எப்போது கூண்டு திறக்கப்படும் நாம் பறந்து செல்லலாம் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கும். ( நூல்: துஹ்ஃபா )

முன்னோர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் மஸ்ஜிதுடனான தொடர்புகள்…

كان عبد الله بن الزبير بن العوام رضي الله عنه يُسمَّى "حَمَام المسجد" من كثرة ملازمته للمسجد.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் மஸ்ஜிதோடு இருந்த தொடர்பின் காரணமாக "பள்ளிப்புறா" என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள்.
وها هو مفتي الحرم شيخ الإسلام أبو محمد عطاء بن أبي رباح - رحمه الله - قال عنه ابن جريج: كان المسجد فراش عطاء عشرين سنة، وكان من أحسن الناس صلاة (السير:5/ 84).

தாபிஈ அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்களின் தொழுகையைப் பற்றி இப்படி சொல்லப்படுவதுண்டு. மக்களிலேயே மிகவும் அழகிய முறையில் தொழக் கூடியவர்கள்" என்று. சுமார் இருபதாண்டு காலம் மஸ்ஜிதே அவர்களின் தங்குமிடமாக இருந்தது.

وثابت البناني الإمام الرباني - رحمه الله - الذي قال عنه أستاذه وشيخه أنس بن مالك رضي الله عنه إن للخير مفاتيح، وإن ثابتًا مفتاح من مفاتيح الخير".

ஸாபித் இப்னு புனானீ (ரஹ்) அவர்களைப் பற்றி அவர்களின் ஆசிரியர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் "நிச்சயமாக நன்மைகளுக்கு சில திறவுகோல்கள் இருக்கின்றன. ஆனால், ஸாபித் (ரஹ்) இருக்கின்றாரே "நன்மைகளின் திறவுகோல்களை" தருகிற திறவுகோல் ஆவார்கள்" என்பார்கள்.

قال عنه ابن شوذب: "ربما مشينا مع ثابت البناني، فلا يمر بمسجد إلا دخل فصلى فيه".

இப்னு ஷூதப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஸாபித் இப்னு புனானீ (ரஹ்) பல நேரங்களில் பல இடங்களுக்கு சென்றுள்ளேன். எந்த மஸ்ஜிதைப் பார்த்தாலும் உள்ளே சென்று தொழுது விடுவார்கள்.

والإمام المحدث مسند عصره أبو العباس محمد بن يعقوب الأصم - رحمه الله-: قال عنه الحاكم بلغني أنه أذن سبعين سنة في مسجده؛) الأنساب للسمعاني :1/ 295)، (السير:15/ 455).

هذا والله المعلق قلبه في المساجد، يؤذن سبعين سنة، وقد قال رسول الله صلى الله عليه وسلم من أذن اثنتي عشرة سنة، وجبت له الجنة، وكتب له بتأذينه في كل يوم ستون حسنة، وبإقامته ثلاثون حسنة؛ (رواه ابن ماجه والحاكم عن ابن عمر - رضي الله عنهما - وهو في صحيح الجامع

இமாம் ஹாக்கிம் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலை வல்லுநர் அபுல் அப்பாஸ் முஹம்மது இப்னு யஅகூப் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் குறித்து கூறுகையில் "சுமார் 70 ஆண்டுகள் அவர்கள் வசித்த பகுதியின் பள்ளிவாசலில் பாங்கு - தொழுகைக்கு அழைப்பு விடுத்தார்கள் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது. ( அல் அன்ஸாப் லிஸ் ஸம்ஆனீ )

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எவர் 12 ஆண்டுகள் பாங்கு சொல்வாரோ அவருக்கு சுவர்க்கம் செல்வது கடமையாகி விட்டது. மேலும், ஒருவர் பாங்கு சொல்வதன் மூலமாக ஒவ்வொரு நாளும் 60 நன்மைகளும் இகாமத் சொல்வதன் மூலமாக 30 நன்மைகளும் அவருக்கு எழுதப்படுகிறது. ( நூல்: இப்னு மாஜா, அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

وسفيان الثوري - رحمه الله -: قال عنه ابن وهب: رأيت سفيان في الحرم بعد المغرب صلي، ثم سجد سجدة، فلم يرفع حتى نودي بالعشاء، وقال عليُّ بن الفضيل رأيت الثوري ساجدًا، فطفت سبعة أشواط قبل أن يرفع رأسه

ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்களைப் பற்றி இப்னு வஹப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- ஒரு நாள் நான் ஹரம் ஷரீஃபிலே மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஸஜ்தா செய்யப் பார்த்தேன். இஷா பாங்கு சொல்லும் போது தான் ஸஜ்தாவில் இருந்து தலையை உயர்த்தினார்கள்.

அலீ இப்னு ஃபுளைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நாள் நான் ஹரம் ஷரீஃபிலே  ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்களை ஸஜ்தா செய்யப் பார்த்தேன். அவர்கள் தலையை உயர்த்துவதற்குள் ஏழு தவாஃப் செய்து முடித்து விட்டேன் " என்றார்கள்.

وعمارة المساجد دأبُ الصحابة رضي الله عنهم، والتابعين، والصالحين رحمهم الله؛ قال الإمام الأوزاعي رحمه الله: "خمس كان عليها الصحابة والتابعون لهم بإحسان: لزوم الجماعة، واتباع السنة، وعمارة المساجد، والتلاوة، والجهاد"،

அவ்ஜாயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களில் நபித்தோழர்கள் மற்றும் தாபிஈன்கள் மிகவும் பேணுதலோடு காணப்பட்டார்கள். 1. மஸ்ஜித் பரிபாலனம் செய்வது. 2. ஜமாஅத் தொழுகையை கடைபிடிப்பது. 3. ஸுன்னாவை பின்பற்றுவது. 4. குர்ஆன் ஓதுவது. 5. தஹஜ்ஜத் தொழுவது.

قال عمرو ميمون الأودي رحمه الله: "أدركت أصحاب محمد صلى الله عليه وسلم

وهم يقولون: إن المساجد بيوت الله في الأرض، وإنه حق على الله أن يُكرِمَ مَن زاره فيها، وأقام شرعه فيها، ورفعها عن الدَّنَس والشرك".

அம்ர் இப்னு மைமூனுல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:- நபித்தோழர்கள் "மஸ்ஜித்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும். எவர் மஸ்ஜிதுக்கு வருகை தருவாரோ, ஷரீஆவின் சட்டதிட்டங்களை நிலை நிறுத்துவாரோ, மஸ்ஜிதில் இருந்து அசுத்தத்தையும், ஷிர்க்கான பாவமான காரியங்களையும் அகற்றுவாரோ அவரை கண்ணியம் செய்வதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்.

இந்த நிலைகள் மஸ்ஜித்களில் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

من أشراط الساعة أن يعلو صوت الفاسق فيها:
قال عطاء بن يسار رحمه الله: "من أشراط الساعة عُلُوُّ صوت الفاسق في المساجد".

பாவிகள் மஸ்ஜிதின் முற்றத்தில் வந்து தங்கள் குரலை உயர்த்திப் பேசுவது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று அதாவு இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

من أشراط الساعة أن تُتَّخذ المساجد طُرقًا:
قال عبدالله بن مسعود رضي الله عنه: "كان يُقال: من أشراط الساعة أن يُسلم الرجل على الرجل للمعرفة، وتُتَّخذ المساجد طُرُقًا".

தங்களுக்கு அறிந்தவர்களுக்கு மட்டும் ஸலாம் சொல்கிற போக்கும், மஸ்ஜித்களை நடைபாதையாக மக்கள் பயன்படுத்தும் போக்கும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறினார்கள்.



يأتي زمان يجلس الناس في المساجد همتهم الدنيا:
قال عبدالله بن مسعود رضي الله عنه: "سيأتي على الناس زمان يقعدون في المساجد حِلَقًا حلقًا، إنما همتهم الدنيا، فلا تجالسوهم؛ فإنه ليس لله فيهم حاجة".

ஒரு காலம் வரும் மக்கள் மஸ்ஜிதில் வட்டமாக ஆங்காங்கே அமர்ந்து பேசுவார்கள். அவர்களின் பேச்சும், கவலையும் உலகம் தொடர்புடையதாக இருக்கும். அப்படியான சபையினரோடு நீங்கள் அமராதீர்கள் என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறினார்கள்.
منع الصبيان من اللعب في المساجد:
قال الحافظ ابن رجب رحمه الله: "رُوي عن بعض السلف أن أول ما استنكر من أمر الدين لعب الصبيان في المساجد".

இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) ஸலஃபுகள் கூறியதாக கூறினார்கள்:- தீனுடைய விஷயங்களில் துவக்கமாக எழும் குழப்பங்களில் அதிகமாக நிகழ்வது குழந்தைகள் மஸ்ஜித்களில் வந்து விளையாடுவார்கள். 

மஸ்ஜித்களை நேசிப்போம்! மாண்பாளனான அல்லாஹ்வின் மகத்தான தனிப் பெரும் கருணையை வாழ்வு முழுவதும் அனுபவிப்போம்!!

No comments:

Post a Comment