Thursday 22 August 2024

நிதானம் தவறேல்!!!

 

நிதானம் தவறேல்!!!


இந்த உலகில் பலரும் பல்வேறு நோக்கங்களுக்காக காத்திருக்கின்றனர்.

அதில் பாவமான நோக்கங்களும் இருக்கலாம் நன்மையான நோக்கங்களும் இருக்கலாம்.

காத்திருப்பது சில பேருக்கு அவஸ்தையாய் இருக்கும். சில பேருக்கு ஆனந்தமாய் இருக்கும்.

மொத்தத்தில் இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் ஏதோ ஒன்றுக்காக காத்துக் கொண்டே இருக்கிறோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனை பல்வேறு குறிப்புப் பண்புகளைக் கூறி அடையாளப் படுத்துவான். அதில் ஒன்று தான் மனிதன் மிகவும் அவசரக்காரன் என்பது.

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا ۝ 

"நிச்சயமாக மனிதன் அவசரக் காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான்". (அல்குர்ஆன்; 70:19)

وكان الإنسان عجولا.

மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 17:11) 

அவன் நினைப்பது எல்லாம் உடனடியாக நடக்க வேண்டும். அவன் எதிர் பார்ப்பது எல்லாம் விரைவாக நிறைவேற வேண்டும் என அவசரப் படுகிறான்.

ஆனால், அவசரம் என்பது மனிதனின் பண்பானதல்லவே!

العجلة من الشيطان.

 "அவசரம் ஷைத்தானின் பண்புகளில் இருந்தும் உள்ளதாகும்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

"ஆகுக" என்ற ஒற்றைச்சொல் மூலம் அனைத்தையும் படைக்க சக்தி பெற்ற அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலகத்தையோ, இநத உலகத்தில் காணப்படும் வானம், பூமி போன்ற படைப்புக்களையோ அவசர அவசரமாக ஒற்றைச் சொல்லில் படைத்திடவில்லை.

மாறாக குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு படைப்பாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் படைத்ததாக குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன.

மனித படைப்பை நாம் எடுத்துக் கொண்டாலும் இதே நடைமுறையைத் தான் அல்லாஹ் கையாள்கிறான்.

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمْ فِى رَيْبٍۢ مِّنَ ٱلْبَعْثِ فَإِنَّا خَلَقْنَٰكُم مِّن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ مِنْ عَلَقَةٍۢ ثُمَّ مِن مُّضْغَةٍۢ مُّخَلَّقَةٍۢ وَغَيْرِ مُخَلَّقَةٍۢ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِى ٱلْأَرْحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوٓاْ أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرْذَلِ ٱلْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنۢ بَعْدِ عِلْمٍۢ شَيْـًٔا ۚ وَتَرَى ٱلْأَرْضَ هَامِدَةً فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ وَأَنۢبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍۢ.

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கர்ப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. (அல்குர்ஆன் : 22:5)

عَنْ أَبي عَبْدِ الرَّحْمَنِ عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ

 "إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا نُطْفَةً، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يُرسَلُ إِلَيهِ الْمَلَكُ فَيَنْفَخُ فِيهِ الرُّوحُ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍبِكَتْبِ رِزْقَهِ وَأَجَلِهِ وعَمَلِهِ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، فَواللهِ الَّذي لا إِلَهَ غَيرُهُ إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بعملِ أهلِ الجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَها إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيدخُلُهَا، وإنَّ أحدَكُم ليَعْمَلُ بعملِ أهلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَها إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ فيَد

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 5145)

எதற்கு இத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்? அவசரமின்மையே காரணம்.

ابن عبد ربه في (العقد الفريد) في ذكره لخلافة عمر بن عبد العزيز، فقال: "زياد عن مالك قال: قال عبد الملك بن عمر بن عبد العزيز لأبيه: يا أبت، مالك لا تنفذ الأمور؟ فو الله ما أبالي لو أن القدور غلت بي وبك في الحق! قال له عمر: لا تعجل يا بنيّ؛ فإنّ الله ذمّ الخمر في القرآن مرتين وحرّمها في الثالثة، وأنا أخاف أن أحمل الحق على الناس جملة فيدفعونه جملة ويكون من ذلك فتنة".

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அரசியல் குழப்பங்களும், ஊழல்களும் பிரச்சினைகளும் மிகைத்திருந்த தருணத்திலே தான் கலீபா பதவியை ஏற்றார்கள்.

எனினும் அப்பிரச்சினைகளையும் ஊழல்களையும் குழப்பங்களையும் உடனடியாக முழுவதுமாக மாற்றும் முயற்சியில் அவர்கள் இறங்க வில்லை. அல்லது அதை துரிதமாக தடுக்கும் செயல்பாட்டில் அவர் களமாடவில்லை. படிப்படியாகவே அவற்றை களைந்தார்கள்.

ஒருமுறை உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் அவருடைய மகன் கேட்டார்: தந்தையே எதற்காக நீங்கள் தயங்குகின்றீர்கள்? பிரச்சினைகளை உடனடியாக முடிக்க வேண்டியதுதானே. உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் என்ன தயக்கம்?”.

தந்தை கூறினார்: அருமை மகனே! நீ அவசரப்படுகின்றாய். மதுபானத்தை அல்லாஹ் இருமுறை இழிவுபடுத்தினான். பின்னர் மூன்றாம் முறையே அதனைத் தடை செய்தான். ஒரு விஷயம் உண்மையாகவே இருந்தாலும் மக்களின் மீது திணிப்பதை நான் பயப்படுகின்றேன். அவ்வாறு திணித்தால் மக்கள் ஒரேயடியாக மறுத்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன்”. (நூல்: அல் அக்துல் ஃபரீத், )

வணக்க வழிபாடுகளாகட்டும், அனுமதிக்கப்பட்ட (ஹலால்) விவகாரங்களாகட்டும், தடுக்கப்ட்ட (ஹராம்) காரியங்களாகட்டும் அனைத்தயுமே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் படிப்படியாகவே அமலாக்கினான் என அல்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நோன்பு, தொழுகை, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள் தொடர்பான வசனங்களில் அந்த அமலின் முக்கியத்துவம் என்ன? விதிமுறைகள் என்ன? அமலை செய்ய இயலாதவர் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி எல்லாம் பேசிய பிறகே அந்த அமலை அல்லாஹ் கடமையாக்கி இருப்பான்.

மது தடை குறித்த இறைவனின் வழிகாட்டல்...

மதுபானத்தைத் தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் மூன்று கட்டங்களாக இறக்கியருளப்பட்டன. 

மூன்றாம் கட்டமாக இறங்கிய பின்வரும் வசனமே மதுவை நெருங்க வேண்டாம்என்று அறிவித்தது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ۝ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ

மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே சைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?” (திருக்குர்ஆன் 5:91)

இறைவனின் இந்த வேண்டுகோளுக்கு இறைநம்பிக்கையாளர்களின் பதில் எவ்வாறு இருந்தது என்பதை பல்வேறு நபிமொழிகள் அறிவிப்பதை நாம் காணலாம். அதில் ஒன்று இவ்வாறு உள்ளது: இறைவா! நாங்கள் தவிர்ந்துகொண்டோம். இறைவா! நாங்கள் தவிர்ந்துகொண்டோம்”.

இந்த இறைவசனம் இறங்கிய பின்னர் இறைநம்பிக்கையாளர் நடந்துகொண்ட விதம் ஆச்சரியமானது.

வீட்டில் இருக்கும் மதுக் கோப்பைகளை வீதிக்குக் கொண்டுவந்து கொட்டிவிடுகின்றனர். மதீனா வீதிகள் முழுவதும் கொட்டப்பட்ட மதுபானங்கள் ஆறு போல் ஓடியது.

எனவே, அவசரம் ஆபத்தானதாகும். எந்த ஒன்றிலும் நாம் அவசரப்படக் கூடாது.

மாறாக, காத்திருக்க வேண்டும். காத்திருப்பதில் தான் நலவுகளும் நன்மைகளும் இருக்கின்றன.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட விவகாரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் இறைத்தூதராக இருந்தும் கூட அல்லாஹ்வின் வசனங்கள் இறக்கப்படும் வரை காத்திருந்தார்கள்.

நபித்தோழர் கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு போகாமல் ஊரிலேயே தங்கி விட்டதற்காக மாநபி ஸல் அவர்கள் மற்றும் நபித்தோழர்கள் யாரும் பேசவோ உறவாடவோ இல்லை. இதே நிலை ஐம்பது நாள் நீடித்தது. 

கஅப் இப்னு மாலிக் (ரலி) இறைவசனம் இறக்கியருளப்படும் வரை காத்திருந்தார்கள்.

21 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் தான் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது.

நீண்ட நெடும் துயரத்திற்கும் போராட்டத்திற்கும் காத்திருப்பிற்கும் பின்னர் தான் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ் அவர்களால் பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது.

பிரார்த்தனை ஒன்றை செய்து விட்டு 40 ஆண்டு காலம் மூஸா நபி அவர்கள் காத்திருந்த பின்னர் தான் ஃபிர்அவ்ன் அழிவு சாத்தியமானது.

யஅகூப் அலை அவர்களின் 40 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் தான் பாலகப் பருவத்தில் பிரிந்து போன யூசுஃப் அலை அவர்களின் அண்மை சாத்தியமானது.

ஜகரிய்யா, இப்ராஹிம் அலைஹிமஸ்ஸலாம் ஆகியோர் புத்திர பாக்கியம் பெற நீண்ட ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

அய்யூப் அலை யூனுஸ் அலை ஆகியோர் தங்களுடைய நெருக்கடிகள் தீர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

அல்லாஹ் விரும்பும் நிதானம்...

وفد عبد القيس، قال ابن حجر: (وهي قبيلة كبيرة يسكنون البحرين، ينسبون إلى عبد القيس بن أَفْصى .فلقي ثلاثة عشر راكباً 

ஒருமுறை பஹ்ரைனில் இருந்து இருபது, முப்பது ஒட்டகங்களில் பயணம் செய்து, மிகப் பெரிய குழு ஒன்று மதீனாவுக்கு வந்தது. அண்ணல் நபி [ஸல்] அவர்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பதே அந்தக் குழுவின் நோக்கம் . மதீனாவின் எல்லையை அடைந்ததுமே , ஒட்டகங்களை வேகமாகச் செல்லும்படி முடுக்கி விட்டார்கள். புழுதியை கிளப்பிக் கொண்டு அவை விரைந்தோடின . அண்ணல் நபிகளார் தங்கியிருக்கும் இடம் வந்ததும் திபுதிபுவென்று ஒட்டகங்களை இருந்து குதித்து அவரைக் காண நெருக்கியடித்துக் கொண்டு ஓடினர் . அவர்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து வந்திருந்ததால் , ஆடைகள் புழுதிபடிந்து , கசங்கி இருந்தன . தலைமுடி பரட்டையாகக் காட்சியளித்தது . அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அண்ணலாரின் திருமுகத்தை கண்டு மகிழ்ந்தனர். 

وقد قال صلّى الله عليه وسلّم لهذا الوفد: “مرحبا بالقوم غير خزايا ولا ندامى،

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இழிவும் துயரும் அற்ற சமூகத்தாருக்கு நல்வரவாகட்டும்! என்று (வாழ்த்துச்) சொன்னார்கள்.

وعن هند بنت الوازع أنها سمعت الوازع يقول: أتيت رسول الله ﷺ والأشج المنذر بن عامر -أو عامر بن المنذر- ومعهم رجل مصاب فانتهوا إلى رسول الله ﷺ فا رسول الله ﷺ فقبلوا يده، ثم نزل الأشج فعقل راحلته وأخرج عيبته ففتحها، فأخرج ثوبين أبيضين من ثيابه فلبسهما، ثم أتى رواحلهم فعقلها فأتى رسول الله ﷺ فقال: “يا أشج إن فيك خصلتين يحبهما الله عز وجل ورسوله: الحلم والأناة

அப்போது, அந்தக் குழுவின் தலைவராக வந்த முன்திர் இப்னு ஆயித் என்பவர் கொஞ்சமும் அவசரப்படவில்லை. ஆரவாரம் செய்யவில்லை . அமைதியாக ஒட்டகங்களை கட்டிப் போட்டார். களைப்புடன் இருந்த பிராணிகளுக்கு நீர் புகட்டினார். அவற்றுக்குத் தேவையான தீவனங்களை இட்டார் .

பிறகு தாம் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் ஓரிடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்தார். குளித்து முடித்தார். இருப்பதில் நல்ல ஆடை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டார். நறுமணம் பூசினார். தலையை ஒழுங்காக வாரிக் கொண்டார். பிறகு நிதானமாகவும் , கண்ணியமாகவும் அண்ணல் நபிகளாரைச் சந்திக்க வந்தார். அண்ணல் நபிகளாருக்கு முன்திரின் நிதானமும், கம்பீரமும் மிகவும் பிடித்து விட்டன. அவரிடம் அண்ணலார் "(அஷஜ்ஜே!) உங்களிடம் இரண்டு பண்பு நலன்கள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ்வும் விரும்புகிறான். முதலாவது பொறுமை, இரண்டாவது நிதானம்" என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

நிதானம் இழந்து விடக்கூடாது..

وعن أُسامةَ بنِ زَيْدٍ رضي اللَّه عنهما قَالَ: بعثَنَا رسولُ اللَّه ﷺ إِلَى الحُرَقَةِ مِنْ جُهَيْنَةَ، فَصَبَّحْنا الْقَوْمَ عَلى مِياهِهمْ، وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ رَجُلًا مِنهُمْ، فَلَمَّا غَشيناهُ قَالَ: لا إِلهَ إلَّا اللَّه، فَكَفَّ عَنْهُ الأَنْصارِيُّ، وَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ، فَلَمَّا قَدِمْنَا المَدينَةَ بلَغَ ذلِكَ النَّبِيَّ ﷺ فَقَالَ لِي: يَا أُسامةُ! أَقَتَلْتَهُ بَعْدَمَا قَالَ: لا إِلهَ إِلَّا اللَّهُ؟! قلتُ: يَا رسولَ اللَّه إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا، فَقَالَ: أَقَتَلْتَهُ بَعْدَمَا قَالَ: لا إِلهَ إِلَّا اللَّهُ؟! فَما زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذلِكَ الْيَوْمِ. متفقٌ عَلَيهِ

உஸாமா

(ரலி) அவர்கள் ஒரு போர்க்களத்தில் ஒரு எதிரியை நெருங்கி அவனைத் தாக்க முற்பட்ட போது அவர் கலிமா சொல்லி விட்டார். இருந்தாலும் உஸாமா ரலி அவர்கள் அவரை ஈட்டியால் குத்தினார்கள். அவர் மரணித்து விட்டார்கள்.நபிக்கு இந்த செய்தி கிடைத்த போது கலிமா சொன்ன பிறகு அவரை கொன்று விட்டாயா என்று கேட்டார்கள்.அதற்கு உஸாமா (ரலி) அவர்கள் தன்னைப் பாதுகாக்கத்தான் அவர் கலிமா சொன்னார் அதனால் தான் அவரைக் கொன்றேன் என்று கூறினார்கள். இருந்தாலும் நபி ஸல் அவர்கள் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஹள்ரத் உஸாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ; நபி ஸல் அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டது எனக்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்தது. எந்தளவு என்றால் அந்த நாளுக்கு முன்னால் நான் இஸ்லாத்திற்கே வராமல் இருந்திருக்க வேண்டுமே! என்று நான் எண்ணும் அளவுக்கு அது எனக்கு சிரமத்தைக் கொடுத்தது. ( நூல்: புகாரி ) 

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:- '' அரஃபாவுடைய நாளின் போது நாங்கள் அண்ணல் நபிகளாருடன் ஒட்டகங்களில் பயணித்துக் கொண்டிருந்தோம் . அப்போது பயணக் கூட்டத்தில் வந்த சிலர் முந்திச் செல்ல முயன்று ஒட்டகங்களைத் தட்டி விட்டனர் . சத்தம் போட்டனர். ஒரே களேபரம் ஆகிவிட்டது.

முன்னால் சென்று கொண்டிருந்த அண்ணல் நபி [ஸல்] அவர்கள் திரும்பி சத்தமும் கூச்சலும் வந்து கொண்டிருந்த திசையை நோக்கி .. ''மக்களே! நிதானத்தைக் கடைபிடியுங்கள் . ஏனெனில் வேகமும் , அவசரப்படுவதும் நன்மை தராது" என்று கூறினார்கள்.

பொதுவாகவே! மனிதன் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவசரத்தையே விரும்புகிறான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனின் இயல்புகளைப் பற்றி பேசுகிற போது

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ.

எனினும் நிச்சயமாக (மனிதர்களாகிய) நீங்கள் அவசரப்படுவதையே விரும்புகிறீர்கள்.( அல்குர்ஆன்: 75: 20 )

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا.

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். ( அல்குர்ஆன்: 70: 19 )

இதைத் தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான்.

اِلَّا الْمُصَلِّيْنَ.

தொழுகையாளிகளைத் தவிர (அவர்கள் அவசரபடமாட்டார்கள்). ( அல்குர்ஆன்: 70: 22 )

ஆகவே ஓர் இறைநம்பிக்கையாளன் எந்தவொரு காரியத்தை செய்யும் முன்பாக அதை நிறுத்தி நிதானித்து யோசித்து செயல்பட வேண்டும்.

அது, பேசுகின்ற ஒரு வார்த்தையானாலும் சரியே!

இறைநம்பிக்கையாளன் மனித இயல்புக்கு அப்பாற்பட்டவன் அவன் ஒரு வார்த்தையை பேச விரும்பினாலும் அதைப் பலமுறை யோசித்து பேசுவான். மனிதனோ சிந்திக்காமல் வாயில் வருவதையெல்லாம் பேசிவிடுவான் அதன் விளைவு!

وَعَنْ أَبي هُرَيْرَةَ

أَنَّهُ سَمِعَ النَّبيَّ ﷺ يَقُولُ إنَّ الْعَبْد لَيَتَكَلَّمُ بِالكَلِمةِ مَا يَتَبيَّنُ فيهَا يَزِلُّ بهَا إِلَى النَّارِ أبْعَدَ مِمَّا بيْنَ المشْرِقِ والمغْرِبِ. متفقٌ عليهِ

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் (நன்மையா தீமையா) என்று சிந்திக்காமல் ஒரு வார்த்தையை பேசி விட்டால். அதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தூரத்தில் நரகத்தில் எறியப்படுவான். ( நூல்: முஸ்லிம் )

சிந்திக்காமல் அவசரப்பட்டு பேசியதன் விளைவை இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது.

மற்றொரு அறிவிப்பில் 70 ஆண்டுகள் தூரத்தில் நரகில் தூக்கி எறியப்படுவான் என்றும் வந்தது ( நூல்: திர்மிதீ )

எனவே! இறை நம்பிக்கையாளர்களாக இருக்கக்கூடிய நாம் ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை அவசரமின்றி நிதானமாகவே செய்ய வேண்டும்.

திருக்குர்ஆன் ஓதுவதில் நிதானம்

وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ جَرِيرٍ، كُلُّهُمْ عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ الْأَحْنَفِ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَافْتَتَحَ الْبَقَرَةَ، فَقُلْتُ: يَرْكَعُ عِنْدَ الْمِائَةِ، ثُمَّ مَضَى، فَقُلْتُ: يُصَلِّي بِهَا فِي رَكْعَةٍ، فَمَضَى، فَقُلْتُ: يَرْكَعُ بِهَا، ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ، فَقَرَأَهَا، ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ، فَقَرَأَهَا، يَقْرَأُ مُتَرَسِّلًا، إِذَا مَرَّ بِآيَةٍ فِيهَا تَسْبِيحٌ سَبَّحَ، وَإِذَا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ، وَإِذَا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ، ثُمَّ رَكَعَ، فَجَعَلَ يَقُولُ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ»، فَكَانَ رُكُوعُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ، ثُمَّ قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ»، ثُمَّ قَامَ طَوِيلًا قَرِيبًا مِمَّا رَكَعَ، ثُمَّ سَجَدَ، فَقَالَ: «سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى»، فَكَانَ سُجُودُهُ قَرِيبًا مِنْ قِيَامِهِ. قَالَ: وَفِي حَدِيثِ جَرِيرٍ مِنَ الزِّيَادَةِ، فَقَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் நான் தொழுதேன். அதில் அவர்கள் அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள் என்று நான் எண்ணினேன். ஆனால்,அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். அந்த அத்தியாயத்துடன் ரக்அத்தை முடித்து விடுவார்கள் என்று நான் எண்ணினேன். அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள் என்று நான் எண்ணினேன். அவர்கள் அந்நிஸா எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும் போது இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக் கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது பாதுகாப்புக் கோரினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) நூல்: முஸ்லிம் 1291

தொழுகையில் நிதானம்....

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى قَالَ: «مَا شَأْنُكُمْ؟» قَالُوا: اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاَةِ؟ قَالَ: «فَلاَ تَفْعَلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلاَةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»

அபூகத்தாதா அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் என்று பதிலளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போனதை பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள். ( நூல் : புகாரி )

ஆகவே நிதானம் தவறாமல் அனைத்துக் காரியங்களையும் செவ்வெனே செய்வோம்!!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான தகவல் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  2. Jazakallah khairan. Wonderful messages

    ReplyDelete