Thursday 26 September 2024

அண்ணல் நபி ﷺ அவர்கள் வாழ்வின் ஒரு நாள்!

 

அண்ணல் நபி அவர்கள் வாழ்வின் ஒரு நாள்!


முஹம்மது நபி {ஸல்} அவர்களின் வாழ்க்கையில் முழுமனித சமூகத்தின் வாழ்க்கைக்கும் முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மாநபி ஸல் அவர்களின் வாழ்க்கையை அல்குர்ஆனில் அழகு பட அடையாளப்படுத்துவான்.

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

உங்களில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராகவும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகின்றவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கையில் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது”.                                   ( அல்குர்ஆன்: 33: 21 )

يقول التابعي سعدُ بنُ هشامِ بنِ عامرٍ -وهو ابنُ عَمِّ أنسِ بن مالكٍ،  "أتيتُ عائشةَ"، "فقلْتُ: يا أمَّ المؤمنينَ، أخْبِريني بخُلقِ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم"، أي: كيف كان خُلقُه؟ "قالت: كان خُلقُه القرآنَ"

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சஃத் பின் ஹிஷாம்; ( நூல்: அஹ்மத் )

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வாக்கோ வள்ளல் நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வான்மறையாகவே இருந்தது என்கிறார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களின் 63 ஆண்டு கால வாழ்க்கையில் நபித்துவத்திற்கு முந்தைய மாநபி (ஸல்) அவர்களின் நாற்பதாண்டு கால வாழ்க்கை, நபித்துவத்திற்குப் பிந்தைய மக்காவின் பதிமூன்று ஆண்டு கால வாழ்க்கை, ஹிஜ்ரத் உடைய பத்தாண்டுகால வாழ்க்கை என முக்கியமான மூன்று பகுதிகளாக உள்ளன.

நபித்துவத்திற்கு முந்தைய மாநபி (ஸல்) அவர்களின் நாற்பதாண்டு கால வாழ்க்கையும் அழகானதே!

فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ

மேலும், இதற்கு முன்னர் உங்களோடு நீண்ட காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அந்த வாழ்க்கையை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?”                                          ( அல்குர்ஆன்: 10: 16 )

நபித்துவத்திற்குப் பிந்தைய மக்காவின் பதிமூன்று ஆண்டு கால வாழ்க்கை, ஹிஜ்ரத் உடைய பத்தாண்டுகால வாழ்க்கையும் அழகானதே!

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

உங்களில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராகவும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகின்றவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கையில் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது”.                                   ( அல்குர்ஆன்: 33: 21 )

 

உலகத்தின் அனைத்து மக்களுக்கும், அனைத்து துறைகளுக்கும் விளக்கமாக, முன்மாதிரியாக வாழ்ந்த பெருமானார் ஸல் அவர்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? எப்படி இருந்தது தெரியுமா?

மாநபி ஸல் அவர்களின் பிறப்பு முதல் இந்த உலகை விட்டு விடை பெற்றுச் சென்ற அந்த தருணங்கள் வரையான வாழ்க்கையின் அத்தனை பகுதிகளும் மாநபி (ஸல்) அவர்களின் அண்மையில் வாழ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபித்தோழர்களிடம் இருந்து இந்த உம்மத்தின் மேன்மக்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றனர்‌.

ஒவ்வொரு நபித்தோழரும் மாநபி ஸல் அவர்களுடனான தொடர்பை, உறவை, மாநபி ஸல் அவர்களின் சமூக, தனி மனித வாழ்வை மிகவும் கண்ணியத்துடன் பதிவு செய்தும், பகிர்ந்தும் சென்றுள்ளனர்.

அப்படியான அவர்களின் வாழ்க்கையில் அதிகாலை கண் விழித்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரையிலான மாநபி (ஸல்) அவர்களின் 24 மணி நேர வாழ்வு எப்படி இருந்தது? இஞ்ச் பை இஞ்சாக சொல்ல முடியா விட்டாலும் ஓரளவு நெருக்கமாக சில தகவல்களை இந்த வார ஜும்ஆ உரையில் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

வல்ல ரஹ்மான் வள்ளல் நபி ஸல் அவர்களின் வழி நடக்க, வாழ்வின் தடம் பின்பற்ற வற்றாத தம் கருணையால் நமக்கெல்லாம் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

இறை நினைவோடு நாளைத் துவங்குவார்கள்.....

وعن

 البراء بن عازب ـ رضي الله عنهما ـ قال : كان النبي صلى الله عليه وسلم
إذا استيقظ من نومه قال: الحمدلله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور

பர்ராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல் அவர்கள் காலையில் கண் விழித்ததும் "எங்களை மரணிக்கச் செய்த பின் மீண்டும் எங்களை உயிர்த்தெழச் செய்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகுக!" என்று கூறுவார்கள். ( நூல்: முஸ்லிம் )

وعن ابن عباس ـ رضي الله عنهما ـ أن النبي صلى الله عليه وسلم: إذا استيقظ من الليل يمسح النوم عن وجهه بيده, ثم ينظر إلى السماء ويقرأ العشر آيات الخواتم من سورة آل عمران: إن في خلق السماوات والأرض... الآيات. رواه مسلم

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல் அவர்கள் தூங்கி எழுந்ததும் தங்களுடைய கண்களை இரு கைகளைக் கொண்டு முகத்தை நன்றாக தடவுவார்கள். பின்னர் வானத்தை நோக்கி பார்த்து ஆலு இம்ரான் சூராவின் கடைசி பத்து வசனங்களை ஓதுவார்கள் ". ( நூல்: முஸ்லிம் )

நபி(ஸல்) அவர்களுக்காக, அவர்கள் பல் துலக்கவும், உளூ செய்யவும் நாங்கள் தண்ணீரை தயாராக எடுத்து வைத்திருப்போம். இரவில் அவர்களை எழுப்பி வணக்கம் புரிய, தான் நாடியபடி அல்லாஹ் அவர்களை எழுப்புவான். (எழுந்தவுடன்) நபியவர்கள் பல் துலக்குவார்கள், உளூ செய்வார்கள், தொழுவார்கள். ( நூல்: முஸ்லிம்)

قَالَ الْفَقِيهُ رَحِمَهُ اللَّهُ : حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ أَحْمَدَ ، حَدَّثَنَا الْعَبَّاسُ السَّرَّاجُ , حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعْدٍ الْبَغْلَانِيُّ ، حَدَّثَنَا ابْنُ أَبِي زُرَارَةَ الْحَلَبِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحَ , قَالَ : دَخَلْتُ مَعَ ابْنِ عُمَرَ وَعُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا ، فَسَلَّمْنَا عَلَيْهَا ، فَقَالَتْ
مَنْ هَؤُلَاءِ ؟ فَقُلْنَا : عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ ، فَقَالَتْ : مَرْحَبًا بِكَ يَا عُبَيْدَ بْنَ عُمَيْرٍ مَا لَكَ لَا تَزُورُنَا ؟ فَقَالَ عُبَيْدٌ : زُرْ غِبًّا تَزْدَدْ حُبًّا
فَقَالَ ابْنُ عُمَرَ : دَعُونَا مِنْ هَذَا ، حَدِّثِينَا بِأَعْجَبِ مَا رَأَيْتِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ : كُلُّ أَمْرِهِ عَجِيبٌ غَيْرَ أَنَّهُ أَتَانِي فِي لَيْلَتِي ، فَدَخَلَ مَعِي فِي فِرَاشِي حَتَّى أَلْصَقَ جِلْدَهُ بِجِلْدِي ، فَقَالَ : " يَا عَائِشَةُ ، أَتَأْذَنِينَ لِي أَنْ أَتَعَبَّدَ لِرَبِّي " ، قُلْتُ : وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ ، وَلَأُحِبُّ هَوَاكَ ، فَقَامَ إِلَى قِرْبَةٍ فَتَوَضَّأَ مِنْهَا ، ثُمَّ قَامَ فَبَكَى ، وَهُوَ قَائِمٌ حَتَّى بَلَغَتِ الدُّمُوعُ حِجْرَهُ ، ثُمَّ اتَّكَأَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ ، فَبَكَى حَتَّى رَأَيْتُ الدُّمُوعَ بَلَغَتِ الْأَرْضَ ، ثُمَّ أَتَاهُ بِلَالٌ بَعْدَمَا أَذَّنَ الْفَجْرُ ، رَآهُ يَبْكِي . قَالَ : لِمَ تَبْكِي يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : " يَا بِلَالُ ، أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا ، وَمَا لِي لَا أَبْكِي ، وَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ "
إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ سورة آل عمران آية  ، إِلَى قَوْلِهِ فَقِنَا عَذَابَ النَّارِ سورة آل عمران آية  ، ثُمَّ قَالَ : " وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا " .

அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் நானும், இப்னு உமர் மற்றும் உபைத் இப்னு உமைர் ( ரலி அன்ஹுமா ) ஆகியோரும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்க அன்னையரின் வீட்டிற்குச் சென்றோம்.

வீட்டின் வாசலில் நின்று கொண்டு மொத்தமாக ஸலாம் கூறி அனுமதி கேட்டோம். அப்போது என் குரலை வைத்து கண்டு பிடித்து விட்ட அன்னையர் அவர்கள் உடன் வந்திருப்பவர்கள் யார்? என்று வினவினார்கள்.

அதற்கு, நான் என்னோடு இப்னு உமர் (ரலி) அவர்களும், உபைத் இப்னு உமைர் (ரலி) அவர்களும் வந்திருப்பதாகக் கூறினேன்.

அதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உபைத் இப்னு உமைரே! உமது வரவு நல்வரவாகட்டும்! நீண்ட நாட்களாக நம்மை சந்திக்க வராததன் காரணம் தான் என்ன?” என்று வினவினார்கள்.

அதற்கு, உபைத் அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரே! இடைவெளி விட்டு சந்தித்தால் நேசம் அதிகமாகும் அல்லவா?” அது தான் காரணம் என்றார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் உங்களால் மறக்கவே முடியாத தருணம் ஏதேனும் உண்டா? அப்படியிருந்தால் எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்என்றார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கை முழுவதுமே மறக்க முடியாத தருணங்கள் தானே எனக்குஎன்று கூறி விட்டு, என் மனதை நெகிழச் செய்த ஓர் நிகழ்வினை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கின்றேன் என்று கூறிய ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள்.

என்னோடு தங்கும் முறை உள்ள ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என் வீட்டிற்கு வருகை தந்தார்கள். என்னோடு மிக நெருங்கி அமர்ந்தார்கள். பின்பு என்னிடம் ஆயிஷாவே! இன்றிரவு முழுவதும் என் இறைவனை நான் வணங்கிட விரும்புகின்றேன்! எனக்கு கொஞ்சம் அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, நான் அல்லாஹ்வின் தூதரே! உங்களின் நெருக்கத்தை எவ்வாறு நான் விரும்புகின்றேனோ, அது போன்றே உங்களது விருப்பங்களையும் நான் விரும்புகின்றேன்! தாராளமாக இரவு முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எழுந்து, உளூ செய்து விட்டு வந்து தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். பின்பு நீண்ட நேரம் அழுதவர்களாக நின்றார்கள். அவர்களின் தாடியெல்லாம் நனையும் அளவு அழுதார்கள். அவர்களின் கண்ணீர் நபிகளாரின் தொடையையும் நனைத்தது.

தொழுது முடித்ததன் பின்னர், வலது புறமாக ஒருக்கணித்து அமர்ந்து, வலது கையை வலது தொடையின்  மீது  வைத்தவர்களாக அழுது கொண்டே  இருந்தார்கள். அவர்களின்  அழுகையால் வீடு முழுவதும் நனைந்து இருந்தது.

இதே நிலையில் ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கும் விடுக்கப்பட்டது. அண்ணலாரைக் காணாத பிலால் (ரலி) அவர்களும்  வீட்டிற்கு வந்து விட்டார்கள். அண்ணலாரை  அழுத நிலையில் கண்டபிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எதற்காக  நீங்கள்  அழ  வேண்டும்? அல்லாஹ்  தான் உங்களின் முன் பின்  பாவங்களை மன்னித்து விட்டானே?”  என கனிவோடு கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் பிலாலே! நான் அல்லாஹ்விற்கு  நன்றியுணர்வுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கூறி விட்டு, இப்போது தான் ஆலுஇம்ரானின் 190 முதல் 193 வரையிலான இறை வசனங்கள் இறக்கப்பட்டது.

எவர் அதை ஓதியதன் பின்னர் அந்த இறைவசனத்தை சிந்திக்க வில்லையோ அவர் மீது  நாசம் உண்டாகட்டும்!  என்று கூறினார்கள்.      ( நூல்: புகாரி )

وعن حذيفة قال: صليت مع النبي ذات ليلة، فافتتح البقرة، فقلت: يركع بها، ثم افتتح النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسلاً، إذا مرّ بآية فيها تسبيح سبّح، وإذا مرّ بسؤال سأل، وإذا مر بتعوّذ تعوذ... الحديث  رواه مسلم

ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் இரவு நான் நபி {ஸல்} அவர்களுடன் இரவில் தொழுதேன். அப்போது, அண்ணலார் ஒரே ரக்அத்தில் சூரா பகரா, அந்நிஸா, ஆலுஇம்ரான் ஆகிய சூராக்களை ஓதினார்கள்.

ஒவ்வொரு வசனங்களைக் கடந்து செல்லும் போது அதில் தஸ்பீஹ் சம்பந்தமான ஆயத் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள். துஆவுடைய வசனம் வந்தால் துஆ கேட்பார்கள். பாதுகாப்பு சம்பந்தமான வசனம் வந்தால் பாதுகாப்பு கேட்பார்கள்.

وعن ابن مسعود قال: صليت مع النبي ليلة، فلم يزل قائماً حتى هممت بأمر سوء. قيل: ما هممت؟ قال: هممت أن أجلس وأَدَعَهُ ! متفق عليه

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் இரவு நான் நபிகளாருடன் இரவுத் தொழுகையில் ஈடுபட்டேன். நீண்ட நேரம் நின்று தொழுதார்கள். அப்போது நான் சீக்கிரமாக தொழுகையை அண்ணலார் முடித்து விட மாட்டார்களா?” என நினைத்தேன். ( நூல்: புகாரி )

வித்ரு தொழுவார்கள்....

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللهِ  صلى الله عليه وسلم  فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللهِ  صلى الله عليه وسلم  يَزِيدُ فِي رَمَضَانَ، وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي ثَلاَثًا قَالَتْ عَائِشَةُ، فَقُلْتُ  :  يَا رَسُولَ اللهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ فَقَالَ يَا عَائِشَةُ إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ، وَلاَ يَنَامُ قَلْبِي

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழ மாட்டார்கள்.(முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை என்று விடையளித்தார்கள்' எனவும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ( நூல் : புகாரி )

தொழுகைக்கு மனைவி, மக்களை எழுப்பி விடுவார்கள்...

روى ذلك أصحاب السنن الأربعة وابن حبان في صحيحه، أنه صلى الله عليه وسلم مر على ابنته فاطمة رضي الله عنها وهي مضطجعة وقت الصباح، فقال لها: "يا بنية قومي اشهدي رزق ربك، ولا تكوني من الغافلين، فإن الله يقسم أرزاق الناس ما بين طلوع الفجر إلى طلوع الشمس" رواه البيهقي.

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக  இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே! அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.( நூல்: பைஹகீ)

ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுகையை வீட்டிலேயே நபி ஸல் அவர்கள் தொழுவார்கள்.

عن عائشةَ رضِي الله عنها، قالت: لم يكُنِ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم على شيءٍ مِن النوافلِ أَشدَّ تعاهُدًا منْه على رَكعتَي الفجرِ

ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரகஅத்துக்களாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகை க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா [ரலி] (  நூல்: புகாரி )

عن أبي هُرَيرَة رَضِيَ اللهُ عَنْه: أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قرأَ في ركعتَي الفجرِ: قُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ، وقُلْ هُوَ اللهُ أَحَدٌ

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரக அத்துகளில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் மற்றும் குல்ஹுவல்லாஹுஆகிய அத்தியாயங்களை ஒதுவார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )

عن عائشةَ رضى الله عنها، قالت: كان النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم إذا صلَّى ركعتَي الفجرِ، فإنْ كنتُ مستيقظةً حدَّثَني وإلَّا اضطجعَ

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால், தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக்கொள்வார்கள். அறி: ஆயிஷா [ரலி] நூல் : புகாரி

ஃபஜ்ர் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையே ....

பெரும்பாலான நேரங்களில் நபி ஸல் அவர்கள் தொழுகைக்காக வீட்டில் இருந்து மஸ்ஜிதுக்கு வந்த பிறகு  தான் பிலால் (ரலி) இகாமத் சொல்வார்கள்.

அப்படி வருகிற நேரங்களில் நபி ஸல் அவர்கள் சில போது தோழர்களோடு பேசுவார்கள்.

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ

ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன்என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ( நூல்: புகாரி )

அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ருத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அவர், “உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்என்று கூறினார்கள் என்றார். நூல்: முஸ்லிம் 1283

ஃபஜ்ரு தொழுகை...

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو المِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، " كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى المِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ،

அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :எங்களில் ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவிற்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுவிப்பவராக இருந்தார்கள். அறுபது முதல் நூறு (வசனங்கள்) வரை ஃபஜ்ருத் தொழுகையில் ஓதுவார்கள்.( நூல் : புகாரி )

ஃபஜ்ருத் தொழுகை முடிந்ததும்....

عن أبي بن كعب رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم يوما الصبح فقال: "أشاهد فلان؟" قالوا: لا، قال: "أشاهد فلان؟" قالوا: لا، قال: "إن هاتين الصلاتين أثقل الصلوات على المنافقين، ولو تعلمون ما فيهما لأتيتموها ولو حبوا على الركب". (رواه أحمد وأبو داود بسند حسن).

உபை இப்னு கஅப் (ரலி) அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்த பின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?” என்று கேட்க, மக்களும் இல்லைஎன்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” ( நூல்: புகாரி,முஸ்லிம் )

சுபுஹுத் தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்...,

 عن سماك أنه سأل جابر بن سمرة كيف كان رسول الله صلى الله عليه وسلم يصنع إذا صلى الصبح قال كان يقعد في مصلاه إذا صلى الصبح حتى تطلع الشمس فإذا طلعت الشمس قام وكانوا يتحدثون فيأخذون في أمر الجاهلية فيضحكون ويبتسم صلى الله عليه وسلم. رواه مسلم.

நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைகளில் அமர்ந்திருந்தது உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சூரியன் உதயமாகாதவரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமானபின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைப்பார்கள்" என்று  கூறினார்கள். - அறிவிப்பாளர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) (நூல்கள் - முஸ்லிம் 1188, 1189, 4641, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).

சில போது கனவுகளுக்கு விளக்கம் அளிப்பார்கள்....

حدثنا مؤمَّل بن هشام، أبو هشام: حدثنا إسماعيل بن إبراهيم: حدثنا عوف: حدثنا أبو رجاء: حدثنا سمرة بن جندب رضي الله عنه قال: كان رسول اًلله صلى اًلله عليه وسلم – يعني – مما يكثر أن يقول لأصحابه: (هل رأى أحد منكم من رؤيا). قال: فيقصُّ عليه من شاء الله أن يقصَّ، وإنه قال ذات غداة: (إنه أتاني الليلة آتيان، وإنهما ابتعثاني، وإنهما قالا لي انطلق، وإني انطلقت معهما، وإنا أتينا على رجل مضطجع، وإذا آخر قائم عليه بصخرة، وإذا هو يهوي بالصخرة لرأسه فيثلغ رأسه، فيتدهده الحجر ها هنا، فيتبع الحجر فيأخذه، فلا يرجع إليه حتى يصح رأسه كما كان، ثم يعود عليه فيفعل به مثل ما فعل به مرَّة الأولى، قال: قلت لهما: سبحان الله ما هذان؟ قال: قالا لي: انطلق انطلق، قال: فانطلقنا، فأتينا على رجل مستلق لقفاه، وإذا آخر قائم عليه بكلُّوب من حديد، وإذا هو يأتي أحد شقَّي وجهه فيشرشر شدقه إلى قفاه، ومنخره إلى قفاه، وعينه إلى قفاه – قال: وربما قال أبو رجاء: فيشقُّ – قال: ثم يتحول إلى الجانب الآخر فيفعل به مثل ما فعلبالجانب الأول، فما يفرغ من ذلك الجانب حتى يصح ذلك الجانب كما كان، ثم يعود عليه فيفعل مثل مل فعل المرة الأولى، قال: قلت: سبحان الله ما هذان؟ قال: قالا لي: انطلق انطلق، فانطلقنا، فأتينا على مثل التنُّور – قال: وأحسب أنه كان يقول – فإذا فيه لغط وأصوات، قال: فاطَّلعنا فيه، فإذا فيه رجال ونساء عراة، وإذا هم يأتيهم لهب من أسفل منهم، فإذا أتاهم ذلك اللهب ضوضوا، قال: قلت لهما: ما هؤلاء؟

قال: قالا لي: انطلق انطلق، قال: فانطلقنا، فأتينا على نهر – حسبت أنه كان يقول – أحمر مثل الدم، وإذا في النهر رجل سابح يسبح، وإذا على شط النهر رجل قد جمع عنده حجارة كثيرة، وإذا ذلك السابح يسبح ما يسبح، ثم يأتي ذلك الذي قد جمع عنده الحجارة، فيفغر له فاه فيلقمه حجراً فينطلق يسبح، ثم يرجع إليه كلما رجع إليه فغر له فاه فألقمه حجراً، قال: قلت لهما: ما هذان؟ قال: قالا لي: انطلق انطلق، قال: فانطلقنا، فأتينا على رجل كريه المرآة، كأكره ما أنت راء رجلاً مرآة، فإذا عنده نار يحشُّها ويسعى حولها، قال: قلت لهما: ما هذا؟ قال: قالا لي: انطلق انطلق، فانطلقنا، فأتينا على روضة معتمة، فيها من كل لون الربيع، وإذا بين ظهري الروضة رجل طويل، لا أكاد أرى رأسه طولاً في السماء، وإذا حول الرجل من أكثر ولدان رأيتهم قطُّ، قال: قلت لهما: ما هذا ما هؤلاء؟ قال: قالا لي: انطلق انطلق، قال: فانطلقنا فانتهينا إلى روضة عظيمة، لم أر روضة قطُّ أعظم منها ولا أحسن، قال: قالا لي: ارق فيها، قال: فارتقينا فيها، فانتهينا إلى مدينة مبنيَّة بلبن ذهب ولبن فضة، فأتينا باب المدينة فاستفتحنا ففتح لنا فدخلناها، فتلقَّانا فيها رجال شطر من خلقهم كأحسن ما أنت راء، وشطر كأقبح ما أنت راء، قال: قالا لهم: اذهبوا فقعوا في ذلك النهر،

قال: وإذا نهر معترض يجري كأن ماءه المحض في البياض، فذهبوا فوقعوا فيه، ثم رجعوا إلينا قد ذهب ذلك السوء عنهم، فصاروا في أحسن صورة، قال: قالا لي: هذه جنة عدن وهذاك منزلك، قال: فسما بصري صعداً، فإذا قصر مثل الربابة البيضاء، قال: قالا لي: هذاك منزلك، قال: قلت لهما: بارك الله فيكما ذراني فأدخله، قالا: أما الآن فلا، وأنت داخله، قال: قلت لهما: فإني قد رأيت منذ الليلة عجباً، فما هذا الذي رأيت؟ قال: قالا لي: أما إنا سنخبرك، أما الرجل الأول الذي أتيت عليه يثلغ رأسه بالحجر، فإنه الرجل  يأخذ القرآن فيرفضه وينام عن الصلاة المكتوبة، وأما الرجل الذي أتيت عليه، يشرشر شدقه إلى قفاه، ومنخره إلى قفاه، وعينه إلى قفاه، فإنه الرجل يغدو من بيته، فيكذب الكذبة تبلغ الآفاق، وأما الرجال والنساء العراة الذين في مثل بناء التنُّور، فإنهم الزناة والزواني، وأما الرجل الذي أتيت عليه يسبح في النهر ويلقم الحجارة، فإنه آكل الربا، وأما الرجل الكريه المرآة، الذي عند النار يحشُّها ويسعى حولها، فإنه مالك خازن جهنم، وأما الرجل الطويل الذي في الروضة فإنه إبراهيم ، وأما الولدان الذين حوله فكل مولود مات على الفطرة). قال: فقال بعض المسلمين: يا رسول الله، وأولاد المشركين؟ فقال رسول الله : (وأولاد المشركين، وأما القوم الذين كانوا شطراً منهم حسن وشطراً منهم قبيح، فإنهم قوم خلطوا عملاً صالحا وآخر سيِّئاً، تجاوز الله عنهم).

ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம்.

அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். அல்லது பிளந்தார் பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், ‘இவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள்,’செல்லுங்கள், செல்லுங்கள்என்று என்னிடம் கூறினர். அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்து வைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், ‘இவ்விருவரும் யார்? என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்என்று கூறினர். அப்படியே நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், ‘இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம்.

அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், ‘அதில் ஏறுங்கள்என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காண்கிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசிங்கம் நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பி வந்தனர்.அவ்விருவரும் என்னிடம், ‘இது (-இந்த நகரம்) தான் அத்ன்எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், ‘இது உங்கள் இருப்பிடம்என்றனர்.

நான் அவர்களிடம், ‘உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்என்றேன். அவ்விருவரும், ‘இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்)அதில் நுழையத்தான் போகிறீர்கள்என்றனர். நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக்கண்டு உள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம்,'(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து) விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொயயைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)” என்று கேட்டனர்.

அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்என்று பதிலளித்தார்கள்.(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறு பாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்து விட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (என்று கூறினர்). ( நூல்: புகாரி )

தேவை ஏற்பட்டால் நபி ஸல் அவர்கள் நபித்தோழர்களிடம் பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்...

اعتاد أبو دجانة أن يكون في الصلاة خلف الرسول صلى الله عليه وسلم، ولكنه ما كاد ينهي صلاته حتى خرج من المسجد مسرعاً، فلفت ذلك نظر الرسول صلى الله عليه وسلم، فاستوقفه يوماً وسأله قائلاً: يا أبا دجانة، أليس لك عند الله حاجة؟ 

 

قال أبو دجانة: بلى يا رسول الله ولا أستغني عنه طرفة عين.

فقال النبى صلى الله عليه وسلم: إذن لماذا لا تنتظر حتى تختم الصلاة معنا وتدعو الله بما تريد؟ 

قال أبو دجانة: السبب في ذلك أن لي جاراً من اليهود له نخلة فروعها في صحن بيتي، فإذا ما هبّت الريح ليلاً أسقطت رطبها عندي، فتراني أخرج من المسجد مسرعاً لأجمع ذلك الرطب وأرده إلى صاحبه قبل أن يستيقظ أطفالي، فيأكلوا منه وهم جياع، وأقسم لك يا رسول الله أنني رأيت أحد أولادي يمضغ تمرة من هذا الرطب فأدخلت أصبعي في حلقه وأخرجتها قبل أن يبتلعها ولما بكى ولدي قلت له: أما تستحي من وقوفي أمام الله سارقاً؟ 

ولما سمع أبو بكر ما قاله أبو دجانة، ذهب إلى اليهودي واشترى منه النخلة ووهبها لأبي دجانة وأولاده.

وعندما علم اليهودي بحقيقة الأمر أسرع بجمع أولاده وأهله، وتوجه بهم إلى النبي صلى الله عليه وسلم معلناً دخولهم الإسلام"؟ 

نزهة المجالس ومنتخب النفائس" (1/ 206)

 وكذلك أشار لها البكري في كتابه إعانة الطالبين على حل ألفاظ فتح المعين (3/293)،

அதிகாலைத் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை வழமையாக் கொண்டவர் அபூதுஜானா (ரலி).

ஆயினும் அதில் சின்ன சிக்கல் என்னவென்றால்தொழுகை முடிந்த உடனேயே பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறிவிடுவார்.இதனை நபி (ஸல்) அவர்களும் கவனித்தார்கள். 

ஒருநாள் அவ்வாறு வெளியேறும்போது அபூதுஜானாவை நிறுத்தி நபிகளார் கேட்டார்கள்: "அபூதுஜானாஉமக்கு அல்லாஹ்விடம் கேட்பதற்கு எதுவுமே இல்லையா?”

அபூதுஜானா (ரலி): "ஏன் இல்லை, அவனிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது அல்லாஹ்வின் தூதரே! ஒரு கண நேரம்கூட அவனுடைய உதவியின்றி என்னால் வாழ முடியாது”.

நபிகளார்: "அவ்வாறெனில் தொழுகை முடித்து நாங்கள் வெளியேறும்போது எங்களுடன் ஒன்றாக வெளியேறலாமே. அல்லாஹ்விடம் உமது தேவைகளையும் கேட்கலாமே…”

அபூதுஜானா (ரலி): "அல்லாஹ்வின் தூதரே! காரணம் என்ன தெரியுமா? என்னுடைய அண்டை வீட்டுக்காரர் ஒரு யூதர். அவர் வீட்டு பேரீத்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் உள்ளது. இரவில் காற்றடித்து அம்மரத்தின் பழங்கள் என் வீட்டு  முற்றத்தில் விழுகின்றது. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலைவிட்டு  நான் ஏன் வேகமாக வெளியேறுகிறேன் தெரியுமா? என் குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுவதற்குள் அந்தப் பழங்களை எல்லாம் பொறுக்கி ஒன்று சேர்த்து அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.

இல்லையென்றால்.. பசியுடன் இருக்கும் என் குழந்தைகள் நான் செல்வதற்குள் எழுந்து அவற்றைப் பொறுக்கி சாப்பிட்டுவிடுவார்கள்.

இறைத் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருநாள் என் பிள்ளைகளில் ஒருவர் நான் செல்வதற்குள் ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடத் துவங்கிவிட்டது. வாயில் விரலை விட்டு அதனை வெளியே எடுத்து தூர வீசினேன். அவன் அழுதான். நான் கூறினேன்: மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் உனது தந்தை திருடன் என்ற பட்டத்துடன் நிற்பது குறித்து உனக்கு வெட்கமாக இல்லையா?”

அது கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலங்கினார்கள்.

அபூதுஜானா (ரலி) கூறிய இந்தச் செய்தியை அறிந்த அபூபக்கர் (ரலி), நேராக அந்த யூதனிடம் சென்று, அந்தப் பேரீத்த மரத்தை விலைக்கு வாங்கி அதனை அபூதுஜானா (ரலி) மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

அபூபக்கர் (ரலி) அந்த மரத்தை விலைக்கு வாங்கியதன் உண்மையான காரணத்தை அறிந்த அந்த யூதர் என்ன செய்தார் தெரியுமா…?

தமது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வேகமாக நபிகளாரைச் சந்திக்க விரைந்தார். தானும் தமது குடும்பமும் இஸ்லாத்தில் நுழைவதாக அறிவித்தார்.

(அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!)

யூதருடைய பேரீத்தம் பழங்களை தமது பிள்ளைகள் சாப்பிட்டுவிடக் கூடாதேஅது ஹராம் அல்லவா என்று அபூதுஜானா (ரலி) அஞ்சினார். குழந்தையின் வாயில் விரலைவிட்டு சாப்பிட்ட பழத்தை வெளியே எடுத்து தூர வீசினார்.

அபூ துஜானா ஸிமாக் பின் கர்ஷஹ் ரழியல்லாஹு அன்ஹு ஓர் அன்சாரி ஸஹாபி ஆவார்கள் ,ஹிஜ்ரி 12 ல் வஃபாத் ஆனார் , பத்ரு,உஹது போன்ற போர்களிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது, ( நூல்: நுஸ்ஹதுல் மஜாலிஸ் வ முன்தகபுன் நஃபாயீஸ் - 206/1, இஆனதுத் தாலிபீன் ) இந்த நிகழ்வு குறித்து சில அறிஞர்கள் மிகவும் பலகீனமானது என்றும், இந்த இரண்டு நூற்களைத் தவிர வேறெந்த வரலாற்று நூல்களிலும் இடம் பெறாததால் இதன் நம்பகத்தன்மை குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தற்கால அறிஞர்களான மிஸ்ரின் அல் அரீஃபீ, ஃபலஸ்தீனின் மஹ்மூதுல் ஹஸனாத், மிகப் பெரும் தாயீயான அம்ர் காலித் போன்றோர் இந்த இரண்டு ஆசிரியர்களும் தங்களுக்கு கிடைத்த தகவலின் படியே இந்த நிகழ்வைப் பதிவு செய்திருப்பார்கள். தற்போது நமக்கு அதன் மூல நூல் தெரியவில்லை அவ்வளவு தான். இதற்கு முன்பும் இது போன்ற எத்தனையோ அம்சங்களுக்கு பிற்காலத்தில் அதற்கான தரவுகள் கிடைத்துள்ளது. மேலும், இஸ்லாத்திற்கு விரோதமான எந்த கொளையும் இதில் இல்லை. இந்த நிகழ்வில் ஹலால் ஹராம் பேணுதல், பிற்ரின் சிரமங்களைக் களைதல், ஏழ்மையிலும் அல்லாஹ் வழங்கியதப் ப்ருந்திக் கொள்தல், குழந்தைகளுக்கு அழகிய முறையில் ஒழுக்கங்களை போதித்தல் போன்ற இஸ்லாம் வலியுறுத்தும் அம்சங்களே இடம் பெற்றுள்ளன”. ஆகவே, இது தவறான காரியமாக நமக்கு மறுமையில் பாதகமான ஒன்றாக ஆகி விடாது என்று கூறுகின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் இதன் தொடர்ச்சி.. அடுத்த வாரமும் வரும்..

6 comments:

  1. Replies
    1. ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹு ஃபீக்க! ஹழ்ரத் பெருந்தகை

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
    தங்களது இந்த ஆக்கம் மூலமாக ஒன் மேன் ஆர்மியாக மிகப்பெரிய மீலாது விழாவை நடத்தி விட்டீர்கள். என்று கூறவேண்டும். என தோன்றுகிறது. جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 🎉👍📖

    ReplyDelete
  3. மாஷா அல்லா அருமையான தலைப்பு

    ReplyDelete