Thursday 17 October 2024

உணவு விஷயத்தில் கவனம் கொள்வோம்!!

 

உணவு விஷயத்தில் கவனம் கொள்வோம்!!


உலக உணவு தினமானது 1945 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 16 -ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் சிறப்பாக ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பொதுவாகவே உலக உணவு தினமானது, அன்றாடம் ஒருவேளை உணவு உண்பதற்கு வழியில்லாமல் துன்பப்படும் மக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் ஆடம்பர செலவின் மூலம் அதிக உணவு வீணாக்கப்படுவதை தடுத்தல் வேண்டும் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது.

உலகளவில் 82 கோடி மக்கள் பசியால் வாடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 9-ல் ஒருவர் பசியில் இருக்கிறார்.

ஒரு புறம் பசி பட்டினியால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சாப்பிட தகுதியான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன.

உலகில் 13 சதவீத உணவு, அறுவடைக்குப் பிறகும், சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் செல்வதற்கு முன்பும், மளிகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்ற பிறகு 17 சதவீதம் உணவு வீணாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40% சதவீதம்

வீணாகிறது .

அதன் மதிப்பு 58000 கோடியாகும். ஒவ்வொரு நாளும் 15000 டன் வீடடிக்கப்படுகிறது என்றும் அதில் 3000 டன் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதற்கு தகுதியானவையாக இருக்கிறது என்றால் என்ன சொல்ல?

அமெரிக்ககள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் பாதியை வீணாக்குகின்றார்கள். அதன் மதிப்பு ஆண்டுக்கு 66.10 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு 50 கிலோ என்ற அளவில் உணவு வீணடிக்கப்படுகிறது. இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது.

எனவே, உணவை வீணடிக்காமல், பசித்திருப்போரின், பட்டினி கிடப்போரின் தேவையறிந்து உணவை பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் செயல் படுவோம்.

நமக்கான உணவு நம்மை வந்தடைந்தே தீரும்!

  وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ‏

அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 51: 22 )

  وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

 

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 11: 6 )

ஈருலகிலும் உணவு முக்கியத்துவம் வாய்ந்ததே!

  قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِ‌ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏

(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம். ( அல்குர்ஆன்: 7: 32 )

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்?

  وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَآءَلُوْا بَيْنَهُمْ‌ قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ  قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَاۤ اَزْكٰى طَعَامًا فَلْيَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا‏

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்). ( அல்குர்ஆன்: 18: 19 )

இறைக் கட்டளைகளை மீறினால் முதல் அடி உணவில் தான்...

  وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ‏

மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். ( அல்குர்ஆன்: 16: 112 )

  لَقَدْ كَانَ لِسَبَاٍ فِىْ مَسْكَنِهِمْ اٰيَةٌ جَنَّتٰنِ عَنْ

 يَّمِيْنٍ وَّشِمَالٍ کُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ  بَلْدَةٌ طَيِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ‏

நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது). ( அல்குர்ஆன்: 34: 15 )

நல்லோர்களாக வாழ்ந்தால்....

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا  وَّكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا

قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏ 

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்என்று அவள்(பதில்) கூறினாள். ( அல்குர்ஆன்: 3: 37 )

உணவுக்காகவே ஒரு திருவிழா!

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ‌ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏

 

மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்என்று (பிரார்த்தித்துக்) கூறினார். ( அல்குர்ஆன்: 5: 114 )

 

உணவு குறித்தான இஸ்லாமிய மார்க்கத்தின் விசாலமான பார்வையில் இருந்து கொஞ்சமாக உங்களின் முன்பாக மேற்கொண்ட இறை வசனங்களை வரிசை படுத்தியுள்ளோம்.

நமது நபி ஸல் அவர்களும்.... உணவும்...

நபி (ஸல்) அவர்களின்  குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார். ( நூல் புகாரி )

وعن سعيدٍ المَقْبُريِّ، عَنْ أَبي هُرَيرةَ

 أَنَّه مَرَّ بِقَومٍ بَيْنَ أَيْدِيهمْ شَاةٌ مَصْلِيَّةٌ، فَدَعَوْهُ، فَأَبى أَنْ يَأْكُلَ، وقال

 "خَرج رَسُولُ اللَّه ﷺ مِن الدُّنْيَا ولَمْ يَشْبَعْ مِنْ خُبْزِ الشَّعِيرِ" رواه البخاري

நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். நபி (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன் என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார். ( நூல் புகாரி )

جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ: قَدْ سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ سَلَامِكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟» قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ، ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا الْهَيْثَمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ، ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ بَيْنَ أَيْدِيهِمْ فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو الْهَيْثَمِ بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى الله عليه وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ لَنَا فَقَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:

ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் வருகை தந்திருக்கின்றார்கள். அப்போது, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் வரவைத்ததுஎன்று பதில் கூறினார்கள்.

சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்என்று கூறினார்கள்.

கொஞ்ச நேரம் அண்ணலார் {ஸல்} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலி அன்ஹுமா) ஆகியோரோடு உரையாடிவிட்டு தோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!என்று கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி {ஸல்} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது, “வஅலைக்குமுஸ்ஸலாம்யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்களின் குரல் கொடுத்தார்கள்.

உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம் நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வினவினார்கள்.

 

அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ஸல்} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வரவேற்றார்கள்.

உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டு அல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதுஎன்று கூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.

மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!என்று கூறினார்கள்.

நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ஸல்} அவர்கள் இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்என்று கூறினார்கள்.

அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!என்று கூறினார்கள்.

மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு வைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.

கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால் முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.

மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக துஆ செய்யுங்கள்!என்று கூறினார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்!

ஆகையால், இறைவன் தன் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                      ( நூல்: திர்மிதீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنَى أَبَا شُعَيْبٍ، وَكَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ فِي أَصْحَابِهِ، فَعَرَفَ الْجُوعَ فِي وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَهَبَ إِلَى غُلاَمِهِ اللَّحَّامِ فَقَالَ اصْنَعْ لِي طَعَامًا يَكْفِي خَمْسَةً، لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ. فَصَنَعَ لَهُ طُعَيِّمًا، ثُمَّ أَتَاهُ فَدَعَاهُ، فَتَبِعَهُمْ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَبَا شُعَيْبٍ إِنَّ رَجُلاً تَبِعَنَا فَإِنْ شِئْتَ أَذِنْتَ لَهُ، وَإِنْ شِئْتَ تَرَكْتَهُ "". قَالَ لاَ بَلْ أَذِنْتُ لَهُ.

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஷுஐப் எனும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவருக்கு இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபியவர்கள் தம் தோழர்களுடன் இருந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் வாட்டத்தைக் கண்டார். உடனே இறைச்சி விற்கும் தம் பணியாளிடம் சென்று, ‘‘ஐந்து பேருக்குப் போதுமான உணவொன்றை எனக்காகத் தயார் செய். நான் அந்த ஐந்து பேரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்என்று சொன்னார்.

உடனே அந்தப் பணியாளர் அவருக்காகச் சிறிய அளவில் ஓர் உணவைத் தயாரித்தார். பிறகு அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (உணவுண்ண) அழைத்தார்கள். அப்போது நபியவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஷுஐபே! ஒரு மனிதர் எம்மைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் நினைத்தால் (நம்மோடு உணவருந்த) அவருக்கும் அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரை விட்டுவிடலாம்என்று சொன்னார்கள்.

அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள், ‘‘(அவரைத் திருப்பி அனுப்ப) வேண்டாம். நான் அவருக்கு அனுமதியளித்து விட்டேன்என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

أنَّ جَارًا لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ فَارِسِيًّا كانَ طَيِّبَ المَرَقِ، فَصَنَعَ لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، ثُمَّ جَاءَ يَدْعُوهُ، فَقالَ: وَهذِه؟ لِعَائِشَةَ، فَقالَ: لَا، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، فَعَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: لَا، قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: لَا، ثُمَّ عَادَ يَدْعُوهُ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: وَهذِه؟ قالَ: نَعَمْ، في الثَّالِثَةِ، فَقَاما يَتَدَافَعَانِ حتَّى أَتَيَا مَنْزِلَهُ.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். பாரசீகரான அவர் நன்கு (மணம் கமழ) குழம்பு சமைக்கக்கூடியவராக இருந்தார். 

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்துவிட்டு அவர்களை அழைப்பதற்காக வந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் அருகில் பசியோடு இருந்த தம் துணைவி) ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து காட்டி "இவரும் (வரலாமா)?" என்று கேட்டார்கள், அவர் (உணவு குறைவாக இருந்ததால்), "இல்லை (வேண்டாம்)" என்று கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை (அவ்வாறாயின் நானும் வரமாட்டேன்)" என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அப்போதும் அவர் "இல்லை (வேண்டாம்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் "(அவ்வாறாயின் நானும்) இல்லை" என்று கூறிவிட்டார்கள்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள்.     

அவர் மூன்றாவது முறை "சரி (வரலாம்)" என்றார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தனர்.

உணவு வழங்கியவரை கண்ணியப்படுத்தி இறைவன் இறக்கியருளிய வசனம்....

ஒரு நாள் இரவு நேரம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபையில் அபுல் முதவக்கில் எனும் ஏழை ஸஹாபியொருவர் வருகை புரிந்தார். வந்தவர் நேராக மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையான பசியில் இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது உணவு தாருங்கள்என்று கேட்டார்.

நபி {ஸல்} அவர்கள் தங்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு ஒருவரை அனுப்பி, வீட்டில் ஏதேனும் உணவு இருந்தால் வாங்கி வாருங்கள்! என்று கூறினார்கள்.

சென்றவர், திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! வீட்டில் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லையாம்!என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் கூறினார்.

பின்பு, ஒருவர் பின் ஒருவராக தங்களின் அத்துணை துணைவியர்களின் இல்லத்திற்கு அனுப்பினார்கள் {ஸல்} அவர்கள்.

 

அத்துணை துணைவியர்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய பதிலையே கூறினார்கள்.

பின்னர், உணவு கேட்ட அந்த ஏழை ஸஹாபியை நோக்கி நம்மிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று கூறிவிட்டு சபையினரை நோக்கி நம்முடைய இந்த விருந்தாளியை மகிழ்ச்சிபடுத்துபவர்கள் யாரும் இருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.என்று அறிவிப்புச் செய்தார்கள்.

அப்போது, அந்த சபையில் இருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் நான் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தி அனுப்பி வைக்கிறேன்என்று கூறி அழைத்துச் சென்றார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் நடந்த சம்பவங்களை விவரித்து விட்டு, வீட்டில் ஏதாவது உணவு இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

அதற்கு, அவர்களின் மனைவி நமது குழந்தை சாப்பிடுவதற்கான அளவே உணவு இருக்கிறது என்றார்.

அது கேட்ட அபூதல்ஹா (ரலி) நம் குழந்தையை எப்படியாவது உறங்க வைத்து விடு! உணவு பரிமாறப்படும் இடத்தில் நம் மூவருக்கும் சேர்த்தே உணவுத்தட்டை எடுத்து வை! விருந்தாளியின் தட்டில் நான் உணவை வைத்ததும் நீ விளக்கை அணைத்து விடு! நாம் இருவரும் உணவை உண்பது போல் பாவனை செய்வோம்என்று கூறினார்கள்.

அது போன்றே அங்கு நடந்தேறியது. வயிறு நிரம்பிய அந்த ஏழை ஸஹாபி மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} சபையில் நபித்தோழர்கள் குழுமியிருந்த போது மாநபி {ஸல்} அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை நபித்தோழர்களிடத்தில் விவரித்து விட்டு, நேற்றிரவு நீரும் உம்முடைய மனைவியும் நடந்து கொண்ட அந்த விதம் குறித்து அல்லாஹ் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுப் போனான்என்று கூறிவிட்டு..

இதோ இப்போது தான் ஜிப்ரயீல் (அலை) வந்து இந்த செய்தியை கூறிவிட்டு ஓர் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளியதாக கூறி ஓதிக் காண்பித்தார்கள்.

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள். என்பது மட்டுமல்ல. அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற வளங்களை தங்களுக்கு மட்டுமே தேவையானதாக அவர்கள் மனதளவில் கூட அவர்கள் நினைப்பதில்லை.

மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும் கூட, தங்களை விட பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள்.   ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

உணவை வீணடிப்பது மட்டும் விரயம் அல்ல பெருமானார் {ஸல்} அவர்களின் வார்த்தையில் கவனம் குவிப்போம்!

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ مِنْ السَّرَفِ أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ ) رواه ابن ماجه

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ விரும்பிய அனைத்தையும் உண்பதுகூட விரயம்தான்”. ( நூல்: இப்னுமாஜா )

அல்லாஹ் பசியில் இருந்து, உணவுத் தேவைகள் மிகுதியாவதில் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான தலைப்பு மிகத் தெளிவான விளக்கங்கள் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete