Thursday, 12 December 2024

சொர்க்கத்தின் மாளிகைகளில் பிரவேசிக்க ஆசைப்படுவோம்!

 

சொர்க்கத்தின் மாளிகைகளில் பிரவேசிக்க ஆசைப்படுவோம்!


இந்த உலகத்தில் நாம் சில காலம் வாழப் போகிறோம். வசிக்கப்போகிறோம். ஆனாலும், ஒரு வீட்டைக் கட்டி அதிலே வசிப்பதற்காக என்னவெல்லாம் செய்கிறோம். வீட்டை கட்டுவதற்காக  நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. வாயை கட்டி, வயிற்றைக் கட்டி ஒவ்வொரு நாளும்,  அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, ஆசாபாசங்களுக்கு இடம் தராமல் அதனை பத்திரமாக சேமித்து,  ஒரு இடத்தை வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும்.

இவ்வளவு சிரமத்திற்கு பின்னர் வாங்கிய அந்த இடத்தை வீடாக கட்டி முடிப்பதற்கு முன்பை விட இன்னும் மிகுந்த சிரமப்பட்டு ஒரு வீட்டை கட்டி சுற்றமும் நட்பும் உறவும் சூழ அந்த வீட்டில் குடியேறுகின்றோம். 

ஆனாலும் அந்த வீடு நமக்கு நிரந்தரமானதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்! ஒரு நாள் அந்த வீட்டை விட்டு மட்டுமல்ல இந்த உலகை விட்டே நாம் விடை பெற்று சென்று விடுகின்றோம்.

ஆனால் மறுமையில், சுவனத்தில் நாம் ஒரு இடம் வாங்கினால் அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் சுகங்களும் சாதாரணமானவை அல்ல. மிகப் பிரம்மாண்டமானவை. அதற்குத் தான் அதிகமதிகம் ஒரு முஃமினாக - இறைநம்பிக்கையாளனாக நாம் முயற்சி செய்ய வேண்டும்!

மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தும் கிடைப்பதை விட சிறந்தது என்றால் அந்த சொர்க்கத்தின் இன்ப வாழ்க்கைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்.

مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி ) 

சுவனம் எளிதாக கிடைத்திடுமா?

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ

உங்களில் போராளிகள், சகிப்புத்தன்மை உடையோர் யார் என்பதை அறியாது சுவனத்தில் (எளிதாக) பிரவேசிக்கலாம் என நினைக்கின்றீர்களா? (அல்குர்ஆன்: 3:. 142 )

ஆசைப்பட வேண்டும்....

சுவனத்தை ஒரு முஃமின் ஆசை வைப்பதுடன், அதை அல்லாஹ்விடமும் வேண்டி நிற்கவேண்டும்.

وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ

சுவனத்தின் வாரிசுக்காரர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கிடுவாயாக! (அல்குர்ஆன்: 26: 85 ) என நமது தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

என் இரட்சகனே! சுவனத்தில் எனக்கென்று உனதருகே ஒரு மாளிகையை அமைத்திடுவாயாக!, ஃபிர்அவ்ன் மற்றும் அவனது (கொடுமையான) நடவடிக்கையில் இருந்து என்னைக் காத்திடுவாயாக! என்று அன்னை ஆசியா (ரழி) அவர்கள் பிரார்த்தனை செய்தர்கள்.

அதனை நோக்கி முயற்சிக்க வேண்டும்...

قال رسول الله - صلى الله عليه وسلم -: "والذي نفس محمد بيده لا يقاتلهم اليوم رجل فيقتل صابراً محتسباً مقبلاً غير مدبر إلا أدخله الله الجنة"، فقال عمير بن الحمام أخو بني سلمة، وفي يده تمرات يأكلهن: بخ بخ[4]، أفما بيني وبين أن أدخل الجنة إلا أن يقتلني هؤلاء؟ ثم قذف التمرات من يده، وأخذ سيفه فقاتل القوم حتى قتل 

பத்ர் போர்க்களத்தில் நபி அவர்கள் முஸ்லிம்களின் அணிவகுப்பை சரி செய்து கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைவதைப் பற்றி நபித்தோழர்களுக்கு ஆர்வமூட்டிக் கொண்டு இருந்தார்கள். அப்போது "எவர் போர்க்களத்திலே பொறுமையோடும் நன்மையை எதிர்பார்த்தும் புறமுதுகிட்டு ஓடாமல் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்று போர் செய்து இறுதியில் வீர மரணம் அடைவாரோ அவர் நிச்சயம் சுவனத்தில் நுழைவார்" என்று சொன்னார்கள். அந்த போர்க்களத்திலே உமைர் பின் ஹுமாம் ரலி என்ற ஒரு நபித்தோழர். (நபியவர்கள் மதினாவிற்கு வருவதற்கு முன்பே மதினாவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதன்மையான சஹாபாக்களில் இவரும் ஒருவர்) கையிலே பேரித்தம் பழங்களை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

நபி {ஸல்} அவர்களின் அந்த வார்த்தையைக் கேட்டவுடன்  உமைர் பின் ஹுமாம் ரலி அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே! நான் இந்தப்போரில் கொல்லப்பட்டால் நீங்கள் வாக்களிக்கின்ற சுவனம்! வானங்கள், பூமியை விட விசாலமானதா ? என உமைர் பின் {ஹமாம் (ரழி) அவர்கள் பத்ர் போரில் கேட்டவர்களாக தனது  கையில் இருந்த பேரீத்தம் கனிகளை வீசி எறிந்து விட்டு  களத்தில் இறங்கி எதிரிகளோடு வீர தீரத்துடன் போர் புரிந்து இறுதியில் ஷஹீதாகி விட்டார்கள்.( நூல்: அல் இஸாபா )

மேலும் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட  நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கும்  இறைவன் சுவன வீடு குறித்து சோபனம் சொன்னதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.  அதில் பிரதானமாக கதீஜா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

في هذا الحَديثِ أنَّ رجُلًا سَأَلَ عبدَ اللهِ بنَ أبي أوْفَى رَضيَ اللهُ عنه عن الذي قالَه النبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ في خَديجةِ رَضيَ اللهُ عنها، فأخْبَر أنَّ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّمَ قال: «بَشِّروا خَديجةَ ببَيتٍ في الجنَّةِ مِن قَصَبٍ»، أي: قصْرٍ في الجنَّةِ مِن لُؤلؤٍ مُجوَّفٍ ويَاقوتٍ، «لا صخَبَ فيه ولا نَصَبَ»،

இஸ்மாயீல் பின் அபீ காலித் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் சொன்னார்களா?’’ என்று நான் கேட்டேன். அவர்கள், “ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி சொன்னார்கள்)’’ என்று பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி 3819 முஸ்லிம் 4818 )

قال أبو هريرة رضي الله عنه: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم؛ إِذْ قَالَ: "بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ فَقَالُوا: لِعُمَرَ بْنِ الخَطَّابِ. فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا، فَبَكَى عُمَرُ وَقَالَ: أَعَلَيْكَ أَغَارُ يَا رَسُولَ اللهِ"

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்கள், ‘‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். உமர் இப்னு கத்தாப் அவர்களுடையதுஎன்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’  என்று கேட்டார்கள். ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3242, முஸ்லிம் 4767.  )

சுவனத்தின் இன்பங்கள்....

يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ

أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ، مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أَطْلَعَكُمُ اللهُ عَلَيْهِ ” ثُمَّ قَرَأَ {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} [السجدة: 17]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்என்று கூறினான்.

(சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே!  இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, “அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” ( அல்குர்ஆன்: 32: 17 ) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

( நூல்: புகாரி )

சுவனத்தின் ஒரு வீதியும்.... ஒரு மரமும்...

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ سَنَةٍ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார். (நூல்: முஸ்லிம் )

عَنْ أنس بن مالك، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا، يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ، فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ: وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ، وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்என்று கூறுவர். ( நூல்: முஸ்லிம் )

சுவனத்தின் மாளிகைகள்....

تَبَارَكَ الَّذِي إِنْ شَاءَ جَعَلَ لَكَ خَيْرًا مِنْ ذَٰلِكَ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَيَجْعَلْ لَكَ قُصُورًا

அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக எற்படுத்துவான். அவற்றின் கீழ் இப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மளிகைகளையும் எற்படுத்துவான். ( அல்குர்ஆன்: 25: 10 )

وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ بِالَّتِي تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَٰئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ

 

உங்களின் மக்கட்செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள். ( அல்குர்ஆன்:  34: 37 )

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا  نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது. ( அல்குர்ஆன்: 29: 58 )

சுவனத்தில் இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறும் சுவனத்தின் அந்தஸ்துகளின் நிலையைக் குறித்து பெருமானார் சிலாகித்து கூறிய சில செய்திகளைப் பார்ப்போம்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الأُفُقِ مِنَ الْمَشْرِقِ ، أَوِ الْمَغْرِبِ لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ قَالُوا : يَا رَسُولَ اللهِ تِلْكَ مَنَازِلُ الأَنْبِيَاءِ لاَ يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிருந்தோ மேற்கிருந்தோ பயணிக்கின்ற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை

நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர்என பதிலத்தார்கள்.( நூல்: புகாரி ) 

عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ لِلْمُؤْمِنِ فِي الْجَنَّةِ لَخَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ وَاحِدَةٍ مُجَوَّفَةٍ، طُولُهَا سِتُّونَ مِيلًا، لِلْمُؤْمِنِ فِيهَا أَهْلُونَ، يَطُوفُ عَلَيْهِمِ الْمُؤْمِنُ فَلَا يَرَى بَعْضُهُمْ بَعْضًا»

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ( நூல் : முஸ்லிம் ) 

சுவனத்து மாளிகையின் வாய்ப்பு தவறிப் போய் விடக்கூடாது…

مرت زبيدة زوجة هارون الرشيد ببهلول وهو يلعب مع الصبيان ويخط الأرض بأصبعه، فما رأت ذلك زبيدة تألمت فيما يصنع ثم قالت له: ماذا تفعل؟

قال البهلول للصبيان وهو يخط بتراب الأرض بأصبعه: لا تهدموا البيت الذي بنيته ثم ألتفت إلى زبيدة وقال: أما ترين أني مشغول ببناء بيت؟

أرادت زبيدة مساعدة بهلول إلا أنها كانت تعلم أنه يرفض ذلك تألمت قليلا ثم قالت: أراك تبني بيتًا جميلاً يليق بالعظماء وها أنا أرغب بشرائه منك.

أجابها بهلول وهو منكس رأسه إلى الأرض يخط على ترابها بأصبعه هذا البيت؟ نعم أبعه إياك.

نظرت زبيدة إلى الخطوط المعوجة التي رسمها بهلول على الأرض وقالت: اشتريت منك هذا الدار فكم ثمنه؟

قام بهلول على قدميه وأشار بيده على الصبيان وقال: بألف دينار لي ولهؤلاء الذين أعانوني على البناء.

أشارت زبيدة إلى خدمها وقالت:  أعطه ألف دينار، ثم أنصرفت عنه.

أخذ بهلول النقود وقسمها بين الفقراء.

مضت الأيام وذات ليلة رأى هارون في المنام أمرًا عجيبًا رأى كأنه يساق إلى الجنة فلما بلغ أبوابها قيل له هذا قصر زوجتك زبيدة فلما أراد الدخول منعوه من ذلك.

وفي الصباح التالي قص هارون رؤياه على علماء قصره فقالوا: سل زبيده على ما فعلت من بر.

فلما سألها أخذت تفكر في العمل الذي أستحقت من أجله قصرًا في الجنه فلم تتذكر سوى أنها أعطت لبهلول الف دينار، وقصت خبرها بذلك على هارون.

أدرك هارون ضرورة البحث عن بهلول ليشتري منه البيت الذي ليس له في هذه الدنيا قرار لكنه يكون في الأخرة قصرًا مشيدًا فأين بهلول؟

فوجده في مكان ما يخط بالتراب مع صبيان الحارة، قال لبهلول وهو يحاول عدم الاكتراث: أرى أقرب أقربائي يلعب مع الصبيان ويعبث بأصبعه على التراب.

أجابه بهلول: نحن نتمتع بما رزقنا الله في هذه الدنيا وها أنت ترى أني مشغول ببناء بيت على ارض الله لكي أبعه.

قال هارون: ليس قصور الملوك كالبيوت التي أنت مشغول ببنائها إلا أني مع ذلك أود شراء أحدها.

نظر بهلول لهارون نظرة تأمل ثم هزأ منه ضاحكا وقال: ثمن هذا الدار باهظ جداً.

قال هارون: كل ما تعلقت به رغبتنا لا يصعب علينا حصوله وأن كان ثمنه باهظًا.

ذكر بهلول آلاف الأكياس والبساتين والأموال الطائلة قيمة لتلك الدار.

سكت هارون والغضب أستولى عليه لأن ما طلب بهلول ليس بالشيء القليل فإنه لو جمع ثروات الأغنياء كلها لما بلغت سعر هذا البيت.

أراد هارون أن يعرف اللغز وراء كلام بهلول وما يريد من ورائه ولذا قال لبهلول: لقد بعت مثل هذا الدار لزبيدة أقل من ذلك بكثير فقد بعتها بألف دينار ولما أردت شراءها منك أراك تقول قولا شططا!

نهض بهلول من الأرض وبعثر ما كان قد رسمه على الأرض بأطراف أصابع قدمه، وقال: ليعلم الخليفة أن بينه وبين زوجته زبيدة فرقًا شاسعًا، فإن زبيدة اشترت وهي لم تر وأنت رأيت وتريد أن تشتري ثم عاد مرة أخرى ليلعب مع الصبيان.

இறைநேசர்  புஹ்லூல் (ரஹ்) அவர்கள் இந்த உலகின் நிலையாமையை உணர்த்தும் விதமாகப் பாலைவனத்தில் மண்ணாலான கோட்டை, கொத்தளங்களைக் கட்டுவார். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படும் அந்த மண் கோட்டைகளைக் கட்டி முடித்ததும் உடைத்துவிடுவார்கள். 

ஒருநாள்.  வழக்கம்போலவே பாலைவனத்தில் மண்கோட்டைகள் அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அந்த வழியே ஜனாதிபதி ஹாரூன் ரஷீத், தனது பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். புஹ்லூலைக் கண்டதும் நின்றவர், அவரிடம் சென்று சலாம்சொல்லி நலம் விசாரித்தார்.

பதில் ஸலாம் சொல்லிய பிறகு  நலமாக உள்ளேன்!என்று புஹ்லூல் (ரஹ்) பதில் அளித்தார்கள்.

புஹ்லூல் அவர்களே! இந்த மண்கோட்டை அழகாக.. அற்புதமாக உள்ளதே! இதன் விலை என்ன?” என்று கேட்டார் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள்.

நூறு பொற்காசுகள்!என்று விலை சொன்னார்கள் புஹ்லூல் (ரஹ்) அவர்கள்.

 

என்ன..! மண்ணாலான இந்தக் கோட்டை, நூறு பொற்காசுகளா?” வியப்பால் வாய் பிளந்தார் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள்.

ஜனாதிபதி அவர்களே..! நீங்கள் வாங்கினாலும் சரி.. வாங்காவிட்டாலும் சரி... இதன் விலை நூறு பொற்காசுகள்தான்! இதோ இந்த குழந்தைகளுக்காகவும், இதைக் கட்டிய எனக்காகவும் தான் என்று புஹ்லூல் (ரஹ்) பதில் கூறினார்கள்.

அவ்வளவு விலை கொடுத்து அந்த மண்கோட்டையை வாங்க விருப்பமில்லாதவராக ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்களின் துணைவியார் ஜுபைதா (ரஹ்) அவர்கள் புஹ்லூல் அவர்களை நலம் விசாரித்து ஸலாம் சொல்லி மண் கோட்டைகள் குறித்து கேட்டறிந்து அவர்கள் கேட்ட நூறு பொற்காசுகளை வழங்கி சென்றார்கள்‌.

அன்றிரவு ஜனாதிபதி ஹாரூன் ரஷீத் அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டார்.

அந்தக் கனவில், தன்னை, வானவர் ஒருவர் சொர்க்கத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கோட்டை, கொத்தளங்களுக்கு நடுவே அழைத்துச் செல்வதைப் போலவும், அதில் அவர்கள் நுழைய முற்பட்ட போது தடுக்கப்பட்டார்கள். "அற்புதமான இந்த மாடமாளிகைகளுக்கு சொந்தமானவர் யார்?’ என்று கேட்டபோது, உமது துணைவியார் ஜுபைதா (ரஹ்) அவர்களுக்குரியது என்று அந்த வானவர் சொன்னார்.

கனவைத் தொடர்ந்து விழித்துக் கொண்ட ஹாரூன் ரஷீத், தூக்கம் வராமல் தவித்தார்கள். இந்த கனவு குறித்து மறுநாள் காலை தமது அரசவை பிரதானிகளிடம் விளக்கம் கேட்ட போது, ஒட்டுமொத்மாக அனைவரும் இது குறித்து ஜுபைதா (ரஹ்) அவர்களிடமே கேட்டு விடுமாறு கூற, தமது துணைவியார் ஜுபைதா (ரஹ்) அவர்களிடம் தாம் கண்ட கனவு குறித்து கூறிய பிறகு, உமக்காக உயர்மாளிகைகளை அல்லாஹ் அமைக்கும் அளவுக்கு நீ என்ன அமல் செய்தாய்? என்று கேட்டதற்கு, ஜுபைதா (ரஹ்) அவர்கள் பாலைநில வழிப்போக்கர் புஹ்லூலிடம் விலைக்கு வாங்கிய கோட்டைகள்தான் இவை!என்று  பதில் சொன்னார்கள்.

இன்னொரு அறிவிப்பில்... 

பாலைநில வழிப்போக்கர் புஹ்லூலிடம் உமது மனைவி விலைக்கு வாங்கிய கோட்டைகள்தான் இவை!என்று  வானவர் பதில் சொல்வது போலவும் கனவு இருந்தது.

புஹ்லூல் (ரஹ்) அவர்களைச் சந்தித்து எப்படியாவது தனக்காக ஒரு சொர்க்கக் கோட்டையை வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தவராக அதிகாலைப் பொழுதிலேயே பாலைவன மணற்பரப்பிற்கு தேடிச் சென்றார்கள் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள்.

கடைசியில் ஓரிடத்தில், மண்கோட்டைகளை அமைக்கும் பணியில் இருந்த புஹ்லூல் (ரஹ்) அவர்களைக் கண்டார்கள்.

 

மிகவும் மென்மையான குரலில், சலாம் தெரிவித்த ஹாரூன் ரஷீத், “புஹ்லூல்! நேற்று நீங்கள் சொன்ன விலைக்கே மண்கோட்டையை வாங்கிக் கொள்கிறேன்!என்றார்.

ஜனாதிபதி அவர்களே! அது நேற்றைய விலை. இன்றைய விலையோ ஆயிரம் பொற்காசுகள். அதுவும் உடனடி ரொக்கமாக!புன்முறுவலுடன் புஹ்லூல் (ரஹ்) சொன்னார்கள்.

என்ன..! நேற்று நூறு பொற்காசுகள் என்று விலை சொல்லிவிட்டு இன்று ஆயிரம் பொற்காசுகள் என்கிறீரே புஹ்லூல்?” அதிர்ச்சியுடனும் வியப்புடனும் ஹாரூன் ரஷீத் கேட்க,“என்ன செய்வது ஜனாதிபதி அவர்களே! என் கோட்டைகளுக்கு வானவர்கள் வாங்கிச் செல்லும் அளவுக்கு ஏக கிராக்கி உள்ளது.

மேலும், நீங்கள் கொடுக்கும் பொற்காசுகளும் எனக்காக அல்ல. இதோ விளையாடிக் கொண்டிருக்கும் ஏழை, எளியோரின் குழந்தைகளின் தேவைக்கானதுஎன்று பதிலளித்தார் இறைநேசர் புஹ்லூல் (ரஹ்) அவர்கள் அமைதியாக.

ஒரு பெரும் வாய்ப்பு நழுவிப்போனதை எண்ணி வருந்தி ஜனாதிபதி ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் அங்கிருந்து மௌனமாய் திரும்பினார்கள்.

சுவனத்தின் மாளிகை வேண்டுமா?

عن أبي أمامة الباهلي رضي الله عنه مرفوعاً: «أنا زعيم ببيت في رَبَضِ الجنة لمن ترك المِرَاءَ وإن كان مُحِقًّا، وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحاً، وببيت في أعلى الجنة لمن حَسَّنَ خلقه

தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: அபூதாவூத் )

வேடிக்கைப் பேச்சில், தவறான தகவல்களைத் தருவதிலோ கற்பனையாக மிகைப்படக் கூறுவதிலோ தவறு என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். வேடிக்கையாகப் பேசுவதில் ஒரு தவறும் இல்லை. அதேநேரத்தில் இந்த வேடிக்கையும் சிரிப்புகளும் வாய்மை என்ற வரம்புகளுக்குள்ளாகவே இருக்க வேண்டும். பொய் எப்போதும் பொய்தான். உண்மை பொய்யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது

ஒரு முறை குழந்தைப் பருவத்தில் இருந்த நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபிகளாரின் இல்லத்திலிருக்கும்போது அவருடைய தாயார், அங்கு விளையாடிய குழந்தையை அழைத்து என்னிடம் வந்தால் உனக்கொன்றைத் தருவேன்..!என்று என்னை அழைத்தார்.

 

அப்போது நபிகளார், “குழந்தைக்கு என்ன தரப்போகிறீர்களம்மா..?” என்று விசாரித்தார்கள்.

அதற்கு எனது தாயார் பேரீச்சம் பழம் தரப் போகிறேன் இறைவனின் தூதரே!என்றார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ஞாபகமிருக்கட்டும்... ஒருவேளை பேரீச்சம் பழத்தைக் குழந்தைக்குத் தரவில்லை என்றால் நீங்கள் பொய் சொன்னதாக இறைவனிடம் பதியப்படும்என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ – يَعْنِى سُلَيْمَانَ بْنَ حَيَّانَ – عَنْ دَاوُدَ بْنِ أَبِى هِنْدٍ عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ قَالَ حَدَّثَنِى عَنْبَسَةُ بْنُ أَبِى سُفْيَانَ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ بِحَدِيثٍ يُتَسَارُّ إِلَيْهِ قَالَ سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِى يَوْمٍ وَلَيْلَةٍ بُنِىَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِى الْجَنَّةِ قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَقَالَ عَنْبَسَةُ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ.

وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ. وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லைஎன்று. இந்த ஹதீஸை அறிவிக்கும் அம்பஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லைஎன்று.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அம்ர் இப்னு அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பஸா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லைஎன்று. இந்த ஹதீஸை அறிவிக்கும் நுஃமான் இப்னு ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் இப்னு அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லைஎன்று. ( நூல்: முஸ்லிம்:1319 )

12 ரக்அத்கள் எவை?.

சுப்ஹ் தொழுகைக்கு முன் 2 ரக்அத், ளுஹர் தொழுகைக்கு முன் 4 ரக்அத், ளுஹர் தொழுகைக்குப் பின்னர் 2 ரக்அத், மக்ரிப் தொழுகைக்குப் பின்னர் 2 ரக்அத், இஷா தொழுகைக்குப் பின்னர் இரண்டு ரக்அத்களாகும்.

சுவனத்தின் பிரவேசம் சாத்தியமே!

رواه الإمام أحمد في "الزهد" (84) قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ قَالَ: ( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ.

قَالُوا: وَكَيْفَ ذَلِكَ؟

قَالَ: مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ لَهُمْ صَنَمٌ لَا يَجُوزُهُ أَحَدٌ حَتَّى يُقَرِّبَ لَهُ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَرِّبْ! قَالَ: لَيْسَ عِنْدِي شَيْءٌ، فَقَالُوا لَهُ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا! فَقَرَّبَ ذُبَابًا، فَخَلَّوْا سَبِيلَهُ.

قَالَ: فَدَخَلَ النَّارَ. وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا! قَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ شَيْئًا دُونَ اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ: فَضَرَبُوا عُنُقَهُ، قَالَ: فَدَخَلَ الْجَنَّةَ ) .

وصححه الألباني موقوفا على سلمان رضي الله عنه، كما في "سلسلة الأحاديث الضعيفة" (12 / 722)؛

ஒரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால் சுவர்க்கம் சென்றான். இன்னொரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால்நரகம் சென்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அது எப்படி சாத்தியமானது யா ரசூலல்லாஹ்!என ஸஹாபாக்கள் வினவினார்கள். தாம் வணங்கும் சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும் வரை, அதனை கடந்துச் செல்ல அனுமதி கொடுக்காத மக்கள் வாழ்ந்த இடத்தை இருவர் கடக்க நேரிட்டது. ஒரு மனிதரிடம் அந்த சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும்படி அவர்கள் கட்டளையிட்டனர். காணிக்கை செய்ய என்னிடம் எதுவும் இல்லைஎன அவன் கூறினான். ஒரு ஈ அல்லது கொசுவாயினும் காணிக்கை செலுத்துமாறு அவர்கள் சொல்ல அவன் அந்த சிலைக்கு ஒரு கொசுவை காணிக்கை செய்தான். அக்காரணத்தால் அவன் நரக நெருப்பில் நுழைந்தான். மற்ற மனிதரையும் அச்சிலைக்கு எதையேனும் காணிக்கை செய்யும்படி வற்புறுத்திய போது மகத்துவமும், கீர்த்தியுமிக்க அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும், எதற்கும், எதையும் காணிக்கை செய்ய மாட்டேன்என அவர் மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட அந்த மக்கள் அவரை கொலை செய்தார்கள். அந்த மனிதர் சுவர்க்கம் சென்றடைந்தார்.என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் ஷிஹாப் அறிவிக்கிறார்கள்.                                      ( நூல்: அஹ்மத் )

சுவனத்தின் மாளிகைகளில் பிரவேசிக்க ஏன் ஆசைப்பட வேண்டும்?

எவர் அல்லாஹ்வின் சந்திப்பையும் மாநபி ஸல் அவர்களை சந்திப்பதையும் ஆதரவு வைக்கின்றோரோ, ஆவல் கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக சுவனத்தின் மாளிகைகளில் பிரவேசிக்க ஆசைப்படுவார்.

 

إِنَّ اللهَ يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ: يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لَا نَرْضَى؟ يَا رَبِّ وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَلَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُونَ: يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, “சொர்க்கவாசிகளே!என்று அழைப்பான். அதற்கு அவர்கள், “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளனஎன்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், “திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், “உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ், “இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?” என்பான். அவர்கள், “அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், “உங்கள்மீது என் உவப்பை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்என்று கூறுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مِنْ أَشَدِّ أُمَّتِي لِي حُبًّا، نَاسٌ يَكُونُونَ بَعْدِي، يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَآنِي بِأَهْلِهِ وَمَالِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் கூடத் தியாகம் செய்ய விரும்புவார். ( நூல்: முஸ்லிம் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் சுவனத்தை நஸீபாக்கி சுவனத்தின் மாட மாளிகைகளில் பிரவேசிக்கச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment