பேரற்புதங்களின்
திறவுகோல் மிஃராஜ்!
( மிஃராஜ் தின சிந்தனை - 2025 )
நபி ﷺ அவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்ற மிக அற்புதமான
நிகழ்வே மிஃராஜ் ஆகும். ஒரு இரவில் மக்காவில் - ஹரமில் இருந்து ஜெருசலத்துக்கும் -
பைத்துல் முகத்தஸ்ஸுக்கும் அங்கிருந்து விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அல்லாஹ்வின் ஏராளமான அத்தாட்சிகளை பார்த்து விட்டு திரும்பி வந்தார்கள்.
மாநபி ﷺ அவர்களின் இந்த விண்ணுலகப் பயணம் பல்வேறு பாடங்களும், படிப்பினைகளும் நிறைந்தது. மாநபி முஹம்மத் ﷺ அவர்களின் மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தை உண்மையென
உறுதியாக நம்புவது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
இந்த அற்புதப்
பயணம் குறித்து மிகவும் விரிவாகப் பேசுகிற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
என்றாலும் தவறான கொள்கையுடைய சிலர் நபி ﷺ அவர்கள், மிஃராஜ் எனும் விண்வெளிப்
பயணம் சென்றதாக பதிவு செய்யப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கின்றனர்.
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ
الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ
مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
17:1 வசனத்தில் நபிகள்
நாயகம் ﷺ அவர்களை மக்காவில் இருந்து ஜெருசலம்
வரை அழைத்துச் சென்றதாகத் தான் அல்லாஹ் கூறுகிறான். ஜெருசலமிலிருந்து விண்ணுலகம்
அழைத்துச் சென்றதாகக் கூறும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரணானது என்பதுதான்
இவர்கள் மிஃராஜை மறுப்பதற்குக் காரணம் ஆகும்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இது போன்ற வழிகெட்ட கொள்கைகளில் இருந்து நாம் வாழும் வரை காத்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
தலைப்பிற்குள்
நுழைவதற்கு முன்னால் நாம் நமது உயிரினும் மேலான பெருமானார் ﷺ அவர்கள் இந்த உலகை விட்டும் விடை பெற்றுச் சென்ற அந்த
தருணம் உண்மையில் நாம் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு
நிகழ்வாகும்.
ولعل
أخصر ما يصف حال مدينة النبي صلى الله عليه وسلم ، وما فيها ، ومن فيها ، حين موت
النبي صلى الله عليه وسلم ، ما رواه عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
قَالَ: " لَمَّا كَانَ اليَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ : أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ .
فَلَمَّا كَانَ اليَوْمُ الَّذِي مَاتَ فِيهِ : أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ .
அனஸ் (ரலி)
அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ….
"மதீனாவில் மாநபி ﷺ நுழைந்த அந்த நாள் அவர்களின் வருகையால் மதீனா முழுவதும்
ஒளியால் இலங்கியது. மாநபி ﷺ
அவர்கள் இந்த உலகத்தை விட்டும் விடை பெற்றுச் சென்ற அந்த நாள் மதீனமாநகரம் தன்
முழு பொலிவையும் இழந்து இருட்டில் தத்தளித்தது".
أَخْبَرَنَا
أَحْمَدُ بْنُ عَمْرٍو، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي
يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ،
"قَبَّلَ بَيْنَ عَيْنَيِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ
مَيِّتٌ"، (سنن النسائي) صحيح
நஸாயீ உடைய ஸஹீஹான
ஒரு அறிவிப்பில் ... "ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர்
(ﷺ) அவர்கள் இந்த உலகத்தை விட்டும் விடை பெற்றுச் சென்ற
அன்று வீட்டிற்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் மாநபி (ﷺ) அவர்களின் திருமுகத்தைத் திறந்து மாநபி (ﷺ) அவர்களின் இரு கண்களையும் முத்தமிட்டார்கள்".
மேற்கூறப்பட்ட
தலைப்பை நாம் உள் வாங்க வேண்டுமானால் முதலில் நாம் அபூபக்ர் ரலி அவர்களின் உணர்வுப்பூர்வமான
அந்த செயலை நாம் புரிந்தாக வேண்டும்.
ஆம்! பெருமானார் ﷺ அவர்களின் அந்த "இரு கண்கள்" எவ்வளவு பாக்கியம் நிறைந்த கண்கள்!!
يَقُولُ
اللَّهُ تَعَالَى : أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ
وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ
"என்னுடைய
நல்லடியார்களுக்கு எந்தக் கண்ணும் (இதுவரை) கண்டிராத, எந்தக்காதும் செவியுறாத எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை யெல்லாம் நான்
தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி ﷺ அவர்கள் கூறினார்களே அத்தகைய மகத்தான சொர்கத்தைப்
பார்த்து பிரமித்த கண்கள்!
அல்லாஹ்வின் அர்ஷை, அல்லாஹ்வின் மலக்கூத்தை,
நபிமார்களின் சந்திப்பை, நேரடியான உரையாடலை, நரகத்தின் காட்சிகளை கண்ட கண்கள்!
வானவர் கோமான்
ஜிப்ரீல் (அலை) அவர்கள் உட்பட எண்ணிலடங்கா வானவர்களை அவர்களின் முழுத்
தோற்றத்துடன் கண்ட கண்கள்!
எல்லாவற்றுக்கும்
மேலாக அல்லாஹ்வின் மேலான "லிகாவைப்" பெற்ற பாக்கியமான அந்த கண்கள்!
பெருமானார் ﷺ அவர்களின் வாழ்க்கையில் பெரும்
பெரும் அற்புதங்கள் எல்லாம் நிகழ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த மிஃராஜ் எனும்
விண்ணுலகப் பயணத்தையே முதன்மைக் காரணமாக அமைத்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது?
மிஃராஜின்
நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.
1) நபித்துவம்
கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தபரீ (ரஹ்( ஆமோதிக்கிறார்கள்)
2) நபித்துவத்தின்
ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் (ரஹ்) இமாம் குர்துபீயும் (ரஹ்)
உறுதிப்படுத்துகிறார்கள்)
3) நபித்துவத்தின்
பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன்,
அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான்
மாதத்தில் நடைபெற்றது.
5) ஹிஜ்ராவிற்கு ஓர்
ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம்
மாதத்தில் நடைபெற்றது.
6) ஹிஜ்ராவிற்கு ஓர்
ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம்
நடைபெற்றது.
இந்த கருத்துகளில்
நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மேதகு அறிஞர் பெருமக்கள் நன்கு ஆய்வு செய்து
மூன்றாவது கருத்தையும் ‘மிஃராஜ்’
சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது
என்பதையும் நமக்கு ஏற்றுக் கொள்ளத் தகுந்த கருத்தாக தந்துள்ளார்கள்.
மிஃராஜில் நபி ﷺ அல்லாஹ்வை பார்த்தார்களா?
மிஃராஜில் நபி ﷺ அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட
கருத்துகள் உள்ளன:
عَنْ
ابْنِ عَبَّاسٍ قَالَ مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى وَلَقَدْ رَآهُ نَزْلَةً
أُخْرَى قَالَ رَآهُ بِفُؤَادِهِ مَرَّتَيْنِ رواه مسلم (الإيمان/258) ،
قال ابن
القيم : وقد حكى عثمان بن سعيد الدارمي في كتاب الرؤية له إجماع الصحابة على أنه
لم ير ربه ليلة المعراج ، وبعضهم استثنى ابن عباس فيمن قال ذلك ، وشيخنا
يقول ليس ذلك بخلاف في الحقيقة ، فإن ابن عباس لم يقل رآه بعيني رأسه وعليه اعتمد
أحمد في إحدى الروايتين حيث قال إنه رآه عز وجل ولم يقل بعيني رأسه
ولفظ أحمد لفظ ابن عباس رضي الله عنهما ويدل على صحة ما قال شيخنا في معنى
حديث أبي ذر رضي الله عنه قوله في الحديث الآخر حجابه النور فهذا النور هو والله
أعلم النور المذكور في حديث أبي ذر رضي الله عنه رأيت نورا
”அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப்
பார்த்தார்கள். இரண்டாவது,
நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள்" என்று.
இதில் முதல் கருத்தையே நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மேதகு அறிஞர் பெருமக்கள்
ஏற்றப் படுத்துகின்றார்கள்.
وقد ثبت بالنصوص الصحيحة واتفاق سلف الامة انه لا يرى الله أحد فى
الدنيا بعينه الا ما نازع فيه بعضهم من رؤية نبينا محمد خاصة واتفقوا على أن
المؤمنين يرون الله يوم القيامة عيانا كما يرون الشمس والقمر
மேலும், ஸலஃபுகளில் பெரும்பாலான ஸலஃபுகள் நபி ﷺ அவர்களைத் தவிர வேறு யாரும் இந்த உலகில் அல்லாஹ்வை
பார்க்க முடியாது. நபி ﷺ அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கிய பிரத்யேக
அருட்கொடை என்பதாக கூறியிருக்கின்றார்கள். இது ஆதாரபூர்வமான செய்தியாகும்.
நபி ﷺ அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய
அற்புதங்களில் மகத்தான அற்புதமாக விளங்கும் மிஃராஜை அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
வழங்கியதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்றாக பின் வரும் விஷயத்தையும் அறிஞர்கள்
குறிப்பிடுகின்றனர்.
நபிமார்கள்
விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல
அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.
وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ
இப்றாஹீம்
உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து
வந்தோம். ( அல்குர்ஆன் 6:
75 )
لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى
நபி மூஸா (அலை)
அவர்களைப் பற்றி,,(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம்.
(அல்குர்ஆன் 20
: 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
நபி இப்றாஹீம்
(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ”அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக”
மிஃராஜ் பயணத்தை
குறிப்பிடும் போதும்....
لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى
"நம்முடைய
அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே நாம் அவரை இரவில் அழைத்துச்
சென்றோம்" ( அல்குர்ஆன்: 17: 1 )
என்ற காரணத்தைக்
கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால்
அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால்
சகித்துக்கொள்ள முடிந்தது.
நபி ﷺ அவர்களின் கண்களின் பார்வைப் புலன்
என்பது மிஃராஜ் இரவில் இறைவனுடனான "லிகாவு - சந்திப்புக்குப் பின்னர் மகத்தான
வலிமை பெற்றது.
இன்னும் சொல்லப்போனால்
விண்ணுலகிற்கு மாநபி ﷺ அவர்கள் பயணப்படும் போதே பார்வைப் புலனில்
வலிமை வெளிப்படத் துவங்கியது.
لِلْمُطْعِمِ
بْنِ عَدِيٍّ حَوْضٌ عَلَى زَمْزَمَ أَعْطَاهُ إِيَّاهُ عَبْدُ الْمُطَّلِبِ،
فَهَدَمَهُ، وَأَقْسَمَ بِاللَّاتِ وَالْعُزَّى لَا يَسْقِي مِنْهُ قَطْرَةً
أَبَدًا. فَقَالَ أَبُو بَكْرٍ رضي الله عنه: يَا مُطْعِمُ، بِئْسَ مَا قُلْتَ
لِابْنِ أَخِيكَ! جَبَهْتَهُ! وكذَّبته! أَنَا أَشْهَدُ أَنَّهُ صَادِقٌ.
فَقَالُوا: يَا مُحَمَّدُ! فَصِفْ لَنَا بَيْتَ الْمَقْدِسِ. قَالَ: دَخَلْتُهُ
لَيْلًا وَخَرَجْتُ مِنْهُ لَيْلًا. فَأَتَاهُ جِبْرِيلُ عليه السلام
فصيَّره فِي جَنَاحِهِ، فَجَعَلَ يَقُولُ: بَابٌ مِنْهُ كَذَا فِي مَوْضِعِ
كَذَا، وَبَابٌ مِنْهُ كَذَا في موضع كذا، وأبو بكر رضي الله عنه يقول: صدقت،
صدقت. قالت نبعة رضي الله عنها: فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
يَقُولُ يومئذٍ: يَا أَبَا بَكْرٍ إِنِّي قَدْ سميتك الصّدِّيق ، قَالُوا: يَا
مُطْعِمُ! دَعْنَا نَسْأَلُهُ عَمَّا هو أغنى لَنَا مِنْ بَيْتِ الْمَقْدِسِ، يَا
مُحَمَّدُ! أَخْبِرْنَا عن عيرنا، فقال صلى الله عليه وسلم: أَتَيْتُ عَلَى عِيرِ
بَنِي فُلَانٍ بالرَّوحاء قَدْ أَضَلُّوا نَاقَةً لَهُمْ، فَانْطَلَقُوا فِي
طَلَبِهَا، فَانْتَهَيْتُ إِلَى رِحَالِهِمْ ، لَيْسَ بِهَا مِنْهُمْ أَحَدٌ،
وَإِذَا قَدَحُ مَاءٍ، فَشَرِبْتُ مِنْهُ، فَاسْأَلُوهُمْ عَنْ ذَلِكَ، قالوا: هذا
وَالْإِلَهِ آيَةٌ. ثُمَّ انْتَهَيْتُ إِلَى عِيرِ بَنِي فُلَانٍ، فَنَفَرَتْ
مِنِّي الإِبل، وَبَرَكَ مِنْهَا جَمَلٌ أَحْمَرُ، عَلَيْهِ جَوَالِقُ
مَخِيطٌ بِبَيَاضٍ، لَا أَدْرِي أكُسر الْبَعِيرُ، أَمْ لَا، فَاسْأَلُوهُمْ عَنْ
ذَلِكَ. فقالوا: هذه
இப்னுல் கய்யிம்
(ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி ﷺ தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த
மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக
நபி ﷺ அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து
அவர்களை ‘பெரும் பொய்யர்’
என்று வருணித்தனர். ”உங்களது பயணம்
உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக்
காண்பிக்கவே நபி ﷺ அவர்கள் அம்மக்கள் கேட்ட
அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை.
நபி ﷺ அவர்கள் மிஃராஜ் போகும் வழியில்
சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு
வரும் என்பதையும்,
அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும்
மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி ﷺ எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன.
இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர்.
சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். ( நூல்: புகாரி,முஸ்லிம்,
ஜாதுல் மஆது )
பூமியின் ஆறடிக்குள்....
حَدَّثَنَا
عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ
عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِحَائِطٍ مِنْ حِيطَانِ
الْمَدِينَةِ أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي
قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يُعَذَّبَانِ،
وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ "، ثُمَّ قَالَ " بَلَى، كَانَ
أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي
بِالنَّمِيمَةِ ". ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كِسْرَتَيْنِ،
فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً. فَقِيلَ لَهُ يَا رَسُولَ
اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ " لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا
مَا لَمْ تَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا
ﺻﺤﻴﺢ
ﺍﻟﺒﺨﺎﺭﻱ
நபி ﷺ அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக்
கடந்து சென்றார்கள். அப்போது, சவக்குழிகளுக்குள் வேதனை
செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக
இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று சொல்லிவிட்டு, ஆம்! (ஒரு வகையில் இறைவனிடம் அது பெரிய பாவச் செயல்தான்) இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும் போது (தமது அந்தரங்கத்தை) மறைக்காமலிலிருந்தார்.
மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து
ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி ﷺ அவர்களிடம், நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி ﷺ
அவர்கள், இவ்விரு மட்டைகளும் காயாத
வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ( நூல்: புகாரி )
26 ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதைப் பார்த்தார்கள் நபி ﷺ அவர்கள்!
قال أبو
حاتم، عن إسحاق بن منصور، عن ابن معين: كان ثقة.
وقال
على بن المدينى: كان يحيى بن سعيد القطان لا يحدث عنه.
وقال
النسائى: حدثنا عيسى بن يونس، حدثنا ضمرة، عن أبى زرعة السيباني، عن أبى سكينة -
رجل من البحرين - عن رجل من أصحاب النبى ﷺ قال: لما أمر رسول الله ﷺ بحفر الخندق،
عرضت لهم صخرة حالت بينهم وبين الحفر.
فقام
النبى ﷺ وأخذ المعول، ووضع رداءه ناحية الخندق، وقال: "وتمت كلمات ربك صدقا
وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم" فندر ثلث الحجر وسلمان الفارسى
قائم ينظر، فبرق مع ضربة رسول الله ﷺ برقة.
ثم ضرب
الثانية وقال: "وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلمات الله وهو السميع
العليم" فندر الثلث الآخر وبرقت برقة، فرآها سلمان.
ثم ضرب
الثالثة وقال: "وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع
العليم" فندر الثلث الباقى.
وخرج
رسول الله ﷺ فأخذ رداءه وجلس، فقال سلمان: يا رسول الله رأيتك حين ضربت لا تضرب
إلا كانت معها برقة، قال رسول الله ﷺ: "يا سلمان رأيت ذلك؟" قال: أى
والذى بعثك بالحق يا رسول الله.
قال:
"فإنى حين ضربت الضربة الأولى رفعت لى مدائن كسرى وما حولها، ومدائن كثيرة
حتى رأيتها بعيني".
فقال له
من حضره من أصحابه: يا رسول الله ادع أن يفتحها علينا، ويغنمنا ذراريهم، ونخرب
بأيدينا بلادهم. فدعا بذلك.
قال:
"ثم ضربت الثانية فرفعت لى مدائن قيصر وما حولها، حتى رأيتها بعينى"
قالوا: يا رسول الله ادع الله أن يفتحها علينا، ويغنمنا ذراريهم، ونخرب بأيدينا
بلادهم، فدعا.
ثم قال:
"ثم ضربت الثالثة فرفعت لى مدائن الحبشة وما حولها من القرى، حتى رأيتها
بعينى".
அகழ் வெட்டும்
போது இன்னொரு சம்பவமும் நடந்தது.
முஹாஜிரீன்கள் (உதா – அப்துர் ரஹ்மான் இப்னு
அவ்ஃப்) மற்றும் அன்சார்கள் (உதா – சஅத்பின் உபாதா)
கலந்திருந்த ஒரு குழுவின் ஸல்மான் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரும் பாறையொன்று எதிர்ப்பட்டது. தகர்க்கவே இயலவில்லை. கோடாரிகளின் கூர் மழுங்கிப் போனது தான் மிச்சம். பாறையைச் சுற்றிக் கொண்டு அகழை வெட்டிக் கொண்டு செல்லவும் மனமில்லை.
இறைத்தூதர்
வகுத்துத் தந்த பாதை ஆயிற்றே!
எனவே, ஓடோடிச் சென்று
இறைத்தூதரையே உதவிக்கு அழைத்து வந்தனர். அண்ணலெம் பெருமானார் ﷺ வந்து பார்த்தார்கள்.
கோடாரியை கையில் வாங்கி (“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மை….. முழுமையாக உள்ளது”) என்று கூறிக் கொண்டே ஒரே போடாய் போட்டார்கள். மின்னலென ஓர் ஒளிக்கீற்று
தெறித்தது. பாறையின் கால்பாகம் பிளந்து போனது. (“உம்முடைய இறைவனின்
வாக்கில் உண்மையும்,
நீதியும் உள்ளது”) என்று கூறியவாறு
மீண்டும் அடித்தார்கள்.
இன்னொரு பாகம் கழன்று போனது. பிறகு மூன்றாம் முறையாக (“உம்முடைய இறை வனின் வாக்கில் உண்மையும் நீதியும் உள்ளன. அவனுடைய வார்த்தை களை மாற்றக் கூடியவர் யாரும் இல்லை!”) என்று கூறினார்கள்.
பாறை முழுவதுமாய் தூள் தூளானது. பிறகு,
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸல்மான் (ரழி) இறைத்தூதரை
அணுகி, ‘அண்ணலே! தாங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் ஓர் ஒளிக் கீற்று
வெளிப்பட்டதே! என்ன அது?’
என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் ﷺ அவர்கள், ‘ஸல்மானே!’
நீங்கள் கவனிக்கவில்லையா? முதல் ஒளிக் கீற்றில்
யமன், மாளிகைகளை நான் பார்த்தேன்.
(அவற்றை முஸ்லிம்கள் வெற்றி கொள்வர்!) இரண்டாவது ஒளிக்கீற்றில் ரோமானியர்களின் சிவப்பு அரண்மனையைக் கண்டேன். (அவற்றையும் வெற்றி கொள்வர்!)
மூன்றாவது ஒளிக்கீற்றில் மதாயின் (கிஸ்ராவின்) மாளிகைகளைக்
கண்டேன்!’
என்று கூறினார்கள். இறைவனுடைய, இறைத் தூதருடைய வாக்குறுதியாகும் இது! இவை உண்மையென காலம்
நிரூபித்தது.
1262 கிலோமீட்டர் அப்பால் உள்ளதை கண்ட பெருமானார் அவர்கள்!
حدثت
غزوة مؤتة في السنة الثامنة من الهجرة في الأول من جمادى الأولى، وكان السبب لتلك
الغزوة أنّ رسول الله (صلى الله عليه وآله وسلم) بعث إلى ملك "بصرى
الشام" وهو الحارث بن عمير الأزدي قد قتله شرحبيل بن عمرو الغساني عندما علم
أنّ المقتول مبعوث برسالة إلى الملك يدعوه فيها إلى الدخول في الإسلام، وهو
المبعوث الوحيد من مبعوثي رسول الله (صلى الله عليه وآله وسلم) الذي قُتل وهو
يؤدّي وظيفته في هذا المجال.
நபி ﷺ அவர்கள் சிரியாவை சேர்ந்த புஸ்ராவில்
உள்ள கிராக்கியஸ் மன்னரின் கவர்னரிடம் ஒரு தூதுவரைஅனுப்பினார்கள். கி.பி. 629ல் பெருமானாரின் தூது செய்தியை ஹாரிஸ் இப்னு உமைருல் அஸைதி ரலி அவர்கள்
கொதிக்கும் பாலைவனங்களையும் பள்ளத்தாக்குகளையும் தனியாக குதிரை மீது அமர்ந்து
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து தற்பொழுது ஜோர்டானில் உள்ள அல்கரக்கிற்க்கு
அருகிலுள்ள முஅத்தா என்ற இடத்திற்க்கு வந்து சேர்ந்தார். பெருமானாரின் கடிதத்தை
கொடுத்ததும் அந்த தூதுவர் ஷுர்ஹபீல் இப்னு அம்ருல் கஸானீ என்பவனால் கருணையின்றி
கொலை செய்யப்பட்டார். தூதுவரை கொலை செய்யக்கூடாது என்ற பொது நீதியை கடைப்பிடிக்காத
இந்த கொடிய செயலுக்காக தமது வளர்ப்பு மகனான ஜைது பின் ஹாரிஸாவின் தலைமையில்
மூவாயிரம் வீரர்களை பெருமானார் ﷺ அவர்கள் அனுப்பினார்கள்.
பெருமானாரின்
கொடியை தாங்கி எதிரிகளின் நடுவில் முன்னேறிய ஜைது பின் ஹாரிஸா ரலி அவர்கள் மிக
வீரமாக போராடி வீர மரணம் அடைந்தார். அதற்கு பின் ஜஅஃபர் பின் அபுதாலிபு ரலி
அவர்கள் கொடியை பெற்றுக் கொண்டு எதிரிகளின் நடுவில் நுழைந்தார். அவரது கைகள்
வெட்டப்பட்டு கீழே விழுந்ததும் அந்த கொடியை தன் கக்கத்தில் இறுக்கிக் கொண்டு
முன்னேறினார். அவரது கால்களும் அதே இடத்தில் வெட்டப்பட்டது அவரும் வீரமரணம்
அடைந்தார். திடீரென முன்னேறி வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலி அவர்கள் அந்த
கொடியை தாங்கி எதிரிகளின் மீது பாய்ந்தார். அவரும் இதே இடத்தில் வீர மரணம்
அடைந்தார்.
فعن أنس
ـ رضي الله عنه ـ، أن النبي ـ صلى الله عليه وسلم ـ نعى زيدا وجعفر وابن أبي رواحة
قبل أن يرجعوا إلى المدينة أو يأتي خبرهم، فقال ـ صلى الله عليه وسلم ـ:( أخذ
الراية زيد فأصيب، ثم أخذ الراية جعفر فأصيب، ثم أخذ الراية ابن أبي رواحة فأصيب،
ثم أخذ الراية سيف من سيوف الله، حتى فتح الله عليهم )( البخاري ).
அந்த மூன்று
ஷஹாபாக்களின் மரணச் செய்தியை அறிந்த நபி ﷺ அவர்கள் ஷஹாபாக்களின் ஆத்மாக்கள் சொர்கத்திற்க்கு
உயர்த்தபட்டதை மக்களுக்கு அறிவித்தார்கள். மூன்று படைத்தலைவர்களும் இறைவனடி
சேர்ந்ததும் சுறுசுறுப்பும் திறமையும் உள்ள ஹாலித் பின் வலீத் ரலி அவர்கள் படைத்
தலைமையேற்று படையினரை ஒருங்கிணைத்தார்.
இந்தச் செய்திகள்
அனைத்தையும் மாநபி ﷺ அவர்கள் மதீனாவில் மஸ்ஜிதுன் நபவீயில் உரை
நிகழ்த்தியபடியே மக்களுக்கு தெரிவித்தார்கள். ( நூல்: புகாரி )
மறுமை நாள் வரை நிகழும், நிகழவிருக்கும்
காரியங்களை பார்க்கும் மாநபி ﷺ அவர்கள்.
حَدَّثَنا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ،
عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رضي الله عنهما، قَالَ: أَشْرَفَ
النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أُطُمٍ مِنْ آطَامِ المَدِينَةِ، ثُمَّ
قَالَ:«هَلْ تَرَوْنَ مَا أَرَى؟ إِنِّي أَرَى مَوَاقِعَ الفِتَنِ خِلَالَ
بُيُوتِكُمْ كَمَوَاقِعِ القَطْرِ»
،
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி ﷺ அவர்கள் மதீனாவின் கோட் டைகளில் ஒன்றின் மீது
ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), “நான் பார்க்கின்றவற்றை
நீங்கள் பார்க்கிறீர்களா?
நான் மழைத் துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள்
நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )
أن رسول الله ﷺ قال: إن الله زوى لي الأرض، فرأيت مشارقها ومغاربها، وإن أمتي سيبلغ ملكها ما زوى لي منها، وأعطيت الكنْزين الأحمر والأبيض، وإني سألت ربي لأمتي أن لا يهلكها بسنة بعامة، وأن لا يسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضتهم؛ وإن ربي قال: يا محمد، إني إذا قضيت قضاء فإنه لا يرد، وإني أعطيتك لأمتك أن لا أهلكهم بسنة بعامة، وأن لا أسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضتهم ولو اجتمع عليهم من بأقطارها، حتى يكون بعضهم يهلك بعضا ويسبي بعضهم بعضا. عن ثوبان
அல்லாஹ்வின் தூதர்
ﷺ அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எனக்காகப் பூமியைச்
சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும்
பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின்
ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும்
வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப்
பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே! எனப் பிரார்த்தித்தேன்.
மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே.
அவ்வாறு நீ சாட்டினால்,
அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்” என்றும் பிரார்த்தித்தேன்.
என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப் படாது. நான் உம்முடைய
சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட் டேன் என்பதை உமக்கு
(வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக
அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின்
அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச்
சிறைபிடிப்பார்கள்”
என்று கூறினான். ( நூல்: புகாரி )
حدثنا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ وَشَيْبَانُ بْنُ
فَرُّوخَ قَالَا حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ حَدَّثَنَا
وَاصِلٌ مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ
عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ عَنْ
أَبِي ذَرٍّ : عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ عُرِضَتْ عَلَيَّ أَعْمَالُ أُمَّتِي حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ
فِي مَحَاسِنِ أَعْمَالِهَا الْأَذَى يُمَاطُ عَنْ الطَّرِيقِ وَوَجَدْتُ
فِي مَسَاوِي أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِي الْمَسْجِدِ لَا تُدْفَنُ
“என் சமுதாயத்தாரின்
நற்செயல்களும் தீய செயல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. சாலையில் கிடக்கும்
தொல்லை தருபவற்றை அகற்றுவதை அவர்களின் நற்செயல்களி(ன் பட்டியலி)ல் கண்டேன்.
பள்ளிவாசலில் (உமிழ்ந்து) புதைக்கப்படாமல் இருக்கும் சளியை அவர்களின் தீய
செயல்களில் கண்டேன்”
என்று நபி ﷺ கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) ( நூல்:
புகாரி)
وحدثني
يعقوب بن إبراهيم الدورقي. حدثنا إسماعيل بن علية عن هشام الدستوائى. قال: حدثنا
أبو الزبير عن جابر بن عبدالله. قال:
كسفت
الشمس على عهد رسول الله ﷺ في يوم شديد الحر. فصلى رسول الله ﷺ بأصحابه.
فأطال القيام. حتى جعلوا يخرون. ثم ركع فأطال. ثم رفع فأطال. ثم ركع فأطال. ثم رفع
فأطال. ثم سجد سجدتين. ثم قام فصنع نحوا من ذاك. فكانت أربع ركعات وأربع سجدات. ثم
قال ” إنه عرض على كل شيء تولجونه. فعرضت على الجنة. حتى لو تناولت منها قطفا
أخذته (أو قال تناولت منها قطفا) فقصرت يدي عنه. وعرضت على النار. فرأيت فيها
امرأة من بني اسرائيل تعذب في هرة لها. ربطتها فلم تطعمها. ولم تدعها تأكل من خشاش
الأرض. ورأيت أبا ثمامة عمرو بن مالك يجر قصبه في النار. وإنهم كانوا يقولون: إن
الشمس والقمر لا يخسفان إلا لموت عظيم. وإنهما آيتان من آيات الله يريكموهما. فإذا
خسفا فصلوا حتى ينجلى”.
(904) وحدثنيه أبو غسان المسمعي. حدثنا عبدالملك بن الصباح عن هشام،
بهذا الإسناد، مثله. إلا أنه قال:
“ورأيت في النار امرأة حميرية سوداء طويلة”. ولم يقل: “من بني
إسرائيل”.
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்களது காலத்தில் கடுமையான வெப்பம் நிறைந்த ஒரு நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுடன் (கிரகணத் தொழுகை)
தொழுதார்கள். அதில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். எந்த அளவிற்கென்றால் மக்கள்
(நிற்க முடியாமல்) கீழே விழலாயினர். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு
(ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு (மீண்டும்)
நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில்
நின்றார்கள். பிறகு இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு (இரண்டாவது
ரக்அத்திற்காக) எழுந்து முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே செய்தார்கள். அவர்கள்
(இவ்விரு ரக்அத்களில்) நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.
பிறகு, "நீங்கள் நுழையவிருக்கின்ற (மறுமை வெளி, சொர்க்கம் மற்றும் நரகம்
உட்பட) அனைத்தும் எனக்குக் காட்டப்பட்டன. எனக்குச் சொர்க்கம் காட்டப்பட்டபோது
அதிலிருந்த பழக்குலையொன்றை நான் எட்டிப் பிடிக்கப்போனேன்.ஆனால் எனது கைக்கு எட்ட
வில்லை. எனக்கு (இத்தொழுகையின்போது) நரகமும் காட்டப்பட்டது. அதில் பனூ இஸ்ராயீல்
சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால்
வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல்
கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன
(அவிழ்த்து) விடவுமில்லை. (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.) மேலும், நரகத்தில் நான் அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் என்பவரையும் பார்த்தேன்.அவர்
நரகத்தில் தனது குடலை இழுத்த வண்ணம் சென்றுகொண்டிருந்தார். மக்கள் "ஒரு
மாமனிதர் (அல்லது தலைவரின்) மரணத்திற்காகவே சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம்
ஏற்படுகிறது" என்று கூறுகின்றனர். (ஆனால்) அவ்விரண்டும் அல்லாஹ்வின்
சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றை உங்களுக்கு இறைவன் காண்பிக்கிறான்.
அவற்றுக்குக் கிரகணம் ஏற்பட்டால் வெளிச்சம் வரும் வரை நீங்கள் (இறைவனைத்)
தொழுங்கள்" என்று கூறினார்கள்.
-
மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர்
பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும்
வந்துள்ளது.
அதில்
"ஹிம்யர் (யமன் நாட்டின் பழங்குடி) இனத்தைச் சேர்ந்த உயரமான கறுப்பு நிறப்
பெண்ணொருத்தியை நான் நரகத்தில் கண்டேன்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
"பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. (
நூல்: புகாரி,
முஸ்லிம் )
حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ
عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا، قَالَ: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْنَاكَ
تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ، قَالَ:
«إِنِّي أُرِيتُ الجَنَّةَ، فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا، وَلَوْ أَخَذْتُهُ
لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا»
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ
பிடிக்க முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?'' என்று
நபித்தோழர்கள் கேட்டனர். "எனக்குச் சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டது.
அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும்
அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்'' என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி)
( நூல்: புகாரி )
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு
நடந்து முடிந்த நிகழ்வைப் பார்த்தார்கள் மாநபி ﷺ அவர்கள்!
قال
حدثنا عفان من كتابه قال حدثنا سليمان يعني ابن المغيرة قال ثنا ثابت عن عبد
الرحمن بن أبي ليلى عن صهيب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى همس
شيئا لا نفهمه ولا يحدثنا به قال فقال رسول الله صلى الله عليه وسلم فطنتم لي قال
قائل نعم قال فإني قد ذكرت نبيا من الأنبياء أعطي جنودا من قومه فقال من يكافئ
هؤلاء أو من يقوم لهؤلاء أو كلمة شبيهة بهذه شك سليمان قال فأوحى الله إليه اختر
لقومك بين إحدى ثلاث إما أن أسلط عليهم عدوا من غيرهم أو الجوع أو الموت قال
فاستشار قومه في ذلك فقالوا أنت نبي الله نكل ذلك إليك فخر لنا قال فقام إلى صلاته
قال وكانوا يفزعون إذا فزعوا إلى الصلاة قال فصلى قال أما عدو من غيرهم فلا أو
الجوع فلا ولكن الموت قال فسلط عليهم الموت ثلاثة أيام فمات منهم سبعون ألفا فهمسي
الذي ترون أني أقول اللهم يا رب بك أقاتل وبك أصاول ولا حول ولا قوة إلا بالله
ஸுஹைப் இப்னு
ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஹுனைனில் நபிகளார் ஒரு நாள் சுபுஹ்
தொழுகையை தொழவைத்தார்கள். தொழுகையிலோ அல்லது தொழுகையின் முடிவிலோ திடீரென நபி {ஸல்}
அவர்கள் முனகும் சப்தத்தை நாங்கள் கேட்டோம்.
அந்த முனகல்
சப்தமும்,
அதன் வார்த்தைகளும் எங்களுக்கு விளங்கவில்லை. அதற்கான
காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் தொழுது முடித்ததும் இது குறித்து நாங்கள்
வினவினோம்.அப்போது,
மாநபி {ஸல்} அவர்கள் “நீங்கள் அதை கேட்டீர்களா? என எங்களிடம்
வினவினார்கள்.ஆமாம், ”நாங்கள் கேட்டோம்”
என்று கூறியதும், நபி {ஸல்}
அவர்கள் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்:
”தோழர்களே! நமக்கு முன்னர்
வாழ்ந்த ஒரு நபி,
தமது சமுதாயம் பெரும்பான்மை பலத்துடனும், எவராலும் எளிதில் வீழ்த்திட முடியாத ஆற்றலுடனும் வாழ்ந்து வருவதை நினைத்து
பெருமிதம் கொண்டார்.
خيـّر
الله تعالى ذلك النبي وأصحابه بأمر من ثلاثة أمور
1- أن يسلط عليهم عدواً شديداً يحتل بلادهم ويستبيحها ، فيأسرهم
ويستذلهم
2- أو أن يعاقبهم بالجوع الشديد
3- وإما أن يرسل عليهم الموت فيقبض منهم الكثير
இந்த பெருமிதம்
மிகவும் ஆபத்தானது என்பதை அந்த நபிக்கு அறிவுறுத்திட நினைத்த வல்ல ரஹ்மான் அந்த
நபியிடத்தில் “நபியே! உமது சமுதாயம்,
உம்முடைய பெருமிதத்தால் பெரும்பான்மை பலத்தை இழக்கும்
அபாயகரமான ஓர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அவர்களின்
பெரும்பான்மை பலத்தை குறைத்திடுவதற்காக பின் வருகிற மூன்று முடிவுகளில் ஏதேனும்
ஒன்றை நீரும்,
உம் சமூக மக்களும் தேர்ந்தெடுத்து நம்மிடம் தெரிவிக்க
வேண்டும்.
1. பலமான எதிரிகளை
அவர்களின் மீது நான் சாட்டுவதன் மூலம் அவர்களின் எண்ணிக்கையை குறைத்திடுவேன். 2. பசி,
பஞ்சம், பட்டினி போன்றவைகளை
அவர்களின் மீது சாட்டி சோதித்திடுவேன். 3. இவ்விரண்டுமின்றி
இயற்கையான மரணத்தின் மூலம் உம் சமூகத்தின் எண்ணிக்கையை குறைத்திடுவேன்.
இம்மூன்றில்
ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பீராக! என்று வஹீ மூலம் அறிவித்தான்.
இறைச் செய்தியை
பெற்றுக் கொண்ட அந்த நபி தம் சமூகத்தார்களை ஒன்றிணைத்து நடந்த சம்பவங்களை
விளக்கிக் கூறி,
இது இறைவனின் கட்டளை மூன்றில் எதை நீங்கள் தேர்வு
செய்கின்றீர்கள்”
என்று கேட்டார்.
அதற்கு அம்மக்கள் “நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதராய் இருக்கின்றீர்கள்! எங்களின் வாழ்விற்கு எது
சிறந்த முடிவாக இருக்கும் என்பதை தாங்களே நன்கு அறிவீர்கள். ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுக்கிற எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் முழு மனதோடு, விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். நீண்ட நேரம் அந்த இறைத்தூதர்
தொழுகையில் ஈடுபட்டார். ஏனெனில், அந்த சமூகத்திற்க்கு
ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தொழுகையில் ஈடுபடுவார்கள்.
தொழுது
முடித்ததும் அல்லாஹ் அவருக்கு தெளிவான முடிவெடுக்கும் ஆற்றலை வழங்கினான்.
தாம் தெரிவு
செய்திருக்கிற அந்த முடிவை அல்லாஹ்வின் சன்னிதானத்தில் முறையிட்டார்!
என் இறைவனே! என்
உம்மத்தினரின் மீது பலம் வாய்ந்த எதிரிகளை நீ சாட்டி விடாதே! அவர்கள் என் சமூக மக்களை
கேவலப்படுத்தி விடுவார்கள்.
என் இறைவனே! என்
உம்மத்தினரின் மீது பசி,
பட்டினி, பஞ்சம் போன்றவற்றை
சாட்டிவிடாதே! அதனால் உன் மீது இருக்கிற நம்பிக்கையில் என் சமூகத்தார்கள் குறைவு
செய்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.
என் இறைவனே!
இயற்கையான மரணத்தையே என் சமூக மக்களுக்கு வழங்கி விடு! அது தான் கௌரவமாகவும், சிறந்ததாகவும் இருக்கும் என நான் கருதுகின்றேன். அதையே நாங்கள்
தேர்ந்தெடுக்கின்றோம்”
என்று துஆ செய்தார்.
உடனடியாக, அல்லாஹ் அந்த துஆவை கபூல் செய்தான். ஆம்! அன்றைய நாளிலேயே அந்த சமூகத்தின்
எழுபதினாயிரம் மக்கள் இறந்து போனார்கள்” என்று கூறிய அண்ணலார்
இந்தச் செய்தியை அல்லாஹ் எனக்கு அறிவித்துக் கொடுத்தான்.
أما أنا
فأقول : " اللهم بك أقاتل ، وبك أحاول ، وبك أصاول ، ولا قوة إلا بك
ஆதலால், நான் அல்லாஹ்விடம் “யா அல்லாஹ்! உன் அருளாலேயே நான் சன்மார்க்க சேவை செய்கின்றேன். உன் துணை
கொண்டே எதிரிகளை நான் எதிர் கொள்கின்றேன். உன்னையன்றி எனக்கோ, என் சமூகத்திற்கோ எந்த ஆற்றலும், வலிமையும் இல்லை” என்று மன்றாடினேன்”
என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
فقال
أصحابه من بعده : اللهم بك نقاتل ، وبك نحاول ، وبك نصاول ، ولا قوة إلا بك
وذلت
ألسنتهم بها
இதைக் கேட்டதும், நபித்தோழர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெருமிதம் குறைந்து, அல்லாஹ்வின் மீதான அச்சமும், ஆதரவும் சூழ்ந்து கொள்ள அனைவரும் வானை நோக்கி கையை உயர்த்தி ”அல்லாஹ்வே! உன் அருளாலேயே
நாங்கள் எதிரிகளுடன் போர் புரிகிறோம். உன் துணை கொண்டே நாங்கள் தீனின் சேவையைச்
செய்கிறோம். எங்களுக்கு உன்னையன்றி எந்த ஆற்றலும், வலிமையும் இல்லை”.
என்று கூறினர்.
பெருமானார் {ஸல்}
அவர்கள் ஆற்றிய உரை உடனடியாக அவர்களின் உள்ளத்தில்
ஊடுருவிச் சென்றது அவர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்த பெருமையும் அகன்றது.
அல்லாஹ்வும்
ஹுனைனின் வெற்றிக்குப் பிறகு நபித்தோழர்களின் இந்த செயல் குறித்து விமர்சித்து
இறைவசனத்தை இறக்கியருளினான்.
لَقَدْ
نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ
أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ
الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ ثُمَّ أَنْزَلَ
اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ
“இதற்கு முன்னர்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். இப்போது, ஹுனைன் போர் நடைபெற்ற நாளிலும் அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்தீர்கள்.
இன்று உங்களின் பெரும்பான்மை உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது.
ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் தரவில்லை. மேலும், பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் உங்களுக்கு குறுகிப் போய் விட்டது. பின்னர்
நீங்கள் புறமுதுகிட்டு ஓடிவிட்டீர்கள்.
பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர்
மீதும் தனது சாந்தியை இறக்கியருளினான்.
பாக்கியம் நிறைந்த
பூமான் நபி அவர்களை கண்குளிர கண்டு மகிழும் நற்பேற்றினை நம் அனைவருக்கும் வல்லோன்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment