Wednesday, 22 January 2025

சாண்டா அனா காற்றும்… ஸபா காற்றும்… (காற்று அல்லாஹ்வின் அற்புதமான அருட்கொடை!)

 

சாண்டா அனா காற்றும்… ஸபா காற்றும்…

(காற்று அல்லாஹ்வின் அற்புதமான அருட்கொடை!)


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த 8 மாதங்களாக வறட்சி நிலவியது. 

இந்நிலையில், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. 

இந்தத் தீ பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம் நிலத்திலிருந்து கடற்கரையை நோக்கி வீசும் 'சாண்டா அனா' எனப்படும் காற்றாகும்.

மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசும் இந்தக் காற்று, தீயை எரியூட்டியதாக நம்பப்படுகிறது.

கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து அமெரிக்கக் கடற்கரையை நோக்கி சாண்டா அனா காற்று வீசுகிறது. மேலும் வருடத்திற்கு பல முறை இக்காற்று வீசுவதாக அறியப்படுகின்றது.

மேலும் சாண்டா அனா காற்று லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவின் சில பகுதிகளில் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

ஆனால், இந்தக் காற்றும் காட்டுத் தீயும் இணையும் போது, மிகப்பெரிய அழிவு ஏற்படுகின்றது.

சாண்டா அனா காற்று பொதுவாக செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து மே மாதம் வரை வீசும். பொதுவாக இந்த காற்று சில நாட்களுக்கு மட்டுமே வீசும், ஆனால் சில நேரங்களில் அவை பல வாரங்களுக்கு தொடர்ந்து வீசுவதையும் காணமுடியும்.

இம்முறை காற்று மிக அதிக வேகத்தில் வீசுகிறது. பொதுவாக, அவற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 மைல்கள் வரை இருக்கும், ஆனால் சில சமயங்களில் அவை மணிக்கு 100 மைல்கள் வேகத்தில் வீசும். காட்டுத்தீ பரவலின் போது மணிக்கு 100 மைல்கள் வேகத்தில் வீசியது.

கடந்த 15 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில், இப்பொது (18/01/2025 முதல்) காற்றின் வேகம் சற்று குறைந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீயால் நாசமான 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பல முக்கிய பிரமுகர்களின் வீடுகளும் அடங்கும்.

அதே நேரத்தில், பாலிசேட்ஸ் கிழக்கு பகுதியில் எரியும் காட்டுத் தீயை 17 சதவீதமும், ஈடன் தீயை 34 சதவீதமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அமெரிக்க பெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி, கலிபோர்னியாவில் 8.4 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பேரிடர் உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ( நன்றி: கனடா மிரர். காம் 21/01/2025 )

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை. உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.

வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். எனினும் அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படும்.

காற்றின் வகைகள்....

சூரியக் காற்று (Solar Wind): விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் வெளியேறிச் செல்வது.

கோள் காற்று (Planetary Wind): கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம்.

வன் காற்று (Gust): குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று.

சூறாவளி (Squall): நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று.

பூமியும்..... காற்றும்....

இந்தப் பூமியை வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 'வளிக்கோளம்' என்பது வாயு நிலையில் உள்ள பொருள். 'நீர்க்கோளம்' என்பது திரவப்பொருள். 'நிலக்கோளம்' என்பது திடப்பொருள். பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூன்று நிலைகள் உள்ளன என்பதை நாள்தோறும் நமக்கு உணர்த்தும் உருமாதிரிகள் இந்த மூன்று பிரிவுகள் என்றும் சொல்லலாம்.

வளிக்கோளத்தில் அடங்கியுள்ள காற்றுகள் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கரியமில வாயு, நியான், ஹீலியம், கிரிப்டான், செனான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் முதலியன.

காற்றுகளின் சேர்க்கைதான் வளிக்கோளம். பூமியில் காற்று (வாயு) மண்டலம் எப்படி உண்டானது? பூமி தோன்றிய தொடக்கத்தில் இது ஒரு நெருப்புக் கோளமாய் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாகக் குளிர்வடையத் தொடங்கியது. மேற்பகுதி குளிர்ந்து திடத்தன்மை பெற்ற போதிலும் உட்புறம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.

அப்போது பூமியின் உட்பகுதியில் இருந்து நெருப்பைக் கக்கியவாறு எரிமலைகள் தோன்றி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. இவற்றில் இருந்து ஏராளமான வாயுக்களும் வெளியேறின. இது பல கோடிக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்ததால் இந்த வாயுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பூமியைச் சூழ்ந்தவாறு வாயு மண்டலத்தை உருவாக்கின.

மனிதனும்..... காற்றும்....

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். 

மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். 

ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை. உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம். ஆனால் காற்று இல்லாமல் 5 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. காற்று -  

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள துணை புரியும் அற்புத சான்றாகும்.

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் - பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.( அல்குர்ஆன்: 2: 164 ) 

வலிமையான படைப்புகளில் காற்றும் ஒன்று...

وعن أنس ، قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " لما خلق الله الأرض جعلت تميد ، فخلق الجبال فقال : بها عليها ، فاستقرت فعجبت الملائكة من شدة الجبال ، فقالوا : يا رب ! هل من خلقك شيء أشد من الجبال ؟ قال : نعم ، الحديد . فقالوا : يا رب ! هل من خلقك شيء أشد من الحديد ؟ قال : نعم ، النار . فقالوا : يا رب ! هل من خلقك شيء أشد من النار ؟ قال : نعم ، الماء . فقالوا : يا رب ! هل من خلقك شيء أشد من الماء ؟ قال : نعم ، الريح . فقالوا : يا رب ! هل من خلقك شيء أشد من الريح ؟ قال : نعم ، ابن آدم تصدق صدقة بيمينه يخفيها عن شماله " رواه الترمذي

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ் பூமியை படைத்தபோது, அது நடுங்க ஆரம்பித்தது. அல்லாஹ் மலைகளைப் படைத்து பூமி ஆடாமல் நிலைநிறுத்தினான். மலைகளின் பலத்தைக் கண்டு வானவர்கள் வியப்புற்று, “ எங்கள் இறைவனே! நீ படைத்தவற்றுள் இந்த மலைகளை விட பலமானது ஏதும் உண்டா?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ், “ஆம்! இரும்புஎன்றான்.

இறைவனே! இரும்பை விட பலமானது ஏதேனும் உண்டா?”  என்று மீண்டும் கேட்டார்கள், “ ஆம்! உண்டு. அது நெருப்பு!என்று அல்லாஹ் கூறினான். இந்த நெருப்பை விட பலமானது ஏதேனும் உண்டா? “ என்று கேட்ட போது, “ஆம்! அது தண்ணீர்!என்று கூறினான். இந்த தண்ணீரை விட பலமானது உண்டா? என்று கேட்டதற்கு, “ ஆம்! அது காற்று!என்று அல்லாஹ் கூறினான்.

இந்த பலமான காற்றை விட பலமானது உண்டா? என்று கேட்டபோது, “ ஆம்! உண்டு, அது ஆதமுடைய மகனானவன் தன் இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுக்கும் தர்மமாகும்!என்று அல்லாஹ் கூறியதாக, நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். ( நூல் : திர்மிதீ )

ஸிராத்தில் வாகனமாகும் காற்று.... 

நாளை மறுமை நாளில் நரகத்தை  தாண்டிச் செல்ல, ‘சிராத்என்னும் பாலத்தை கடக்காமல் சுவனத்தில் எவரும் நுழைய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا 

மேலும் அதனை (பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் போக முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.  ( அல் குர்ஆன்: 19: 71 )   

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ:....

ثُمَّ يُؤْتَى بِالْجَسْرِ فَيُجْعَلُ بَيْنَ ظَهْرَيْ جَهَنَّمَ "، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الجَسْرُ؟ قَالَ: " مَدْحَضَةٌ مَزِلَّةٌ، عَلَيْهِ خَطَاطِيفُ وَكَلاَلِيبُ، وَحَسَكَةٌ مُفَلْطَحَةٌ لَهَا شَوْكَةٌ عُقَيْفَاءُ، تَكُونُ بِنَجْدٍ، يُقَالُ لَهَا: السَّعْدَانُ، المُؤْمِنُ عَلَيْهَا كَالطَّرْفِ وَكَالْبَرْقِ وَكَالرِّيحِ، وَكَأَجَاوِيدِ الخَيْلِ وَالرِّكَابِ، فَنَاجٍ مُسَلَّمٌ، وَنَاجٍ مَخْدُوشٌ، وَمَكْدُوسٌ فِي نَارِ جَهَنَّمَ، حَتَّى يَمُرَّ آخِرُهُمْ يُسْحَبُ سَحْبًا) الحديث.

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "மறுமை நாளில் மக்கள் அனைவரும், “ அல்லாஹ்வே காப்பாற்று!….அல்லாஹ்வே காப்பாற்று!! என்று பிரார்த்திப்பார்கள்.அப்போது நரகத்தின் மேலே பாலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்படும். என்று கூறிகொண்டிருந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன?” கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ கால்கள் வழுக்கி விழக்கூடிய, சறுக்கக் கூடிய ஓர் இடமாகும். அதன்மீது இரும்புக் கொக்கிகளும், அகண்டு நீண்ட முற்களும் இருக்கும். அதில் நஜ்து பகுதியில் விளையும் ச அதான்எனப்படும் முட்செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்;” என்று பதிலளித்தார்கள். இறை நம்பிக்கையாளர்கள், கண் சிமிட்டும் நேரத்திலும், மின்னலைப்போன்றும் காற்றைப்போன்றும், ,பறவையைப் போன்றும், உயர் ரக குதிரைகள், மற்றும் ஒட்டகங்கள் போன்றும்  (விரைவாக) அப்பாலத்தை கடந்து விடுவார்கள். ( நூல்: முஸ்லிம்,. புகாரி, . ( முஸ்லிம் & புகாரியில் இடம் பெற்றுள்ள நீண்ட ஹதீஸின் இறுதி பகுதி )

 நல்லடியார்கள் காற்றைப் போன்று விரைந்து  கடப்பார்கள்.காற்றின் வேகம் என்பது அறிவியல் ஆய்வின் படி, சராசரி 6 -12 mph (10-19 km) நடுத்தரமான காற்றின் வேகம் சுமார். மணிக்கு 40 – 50  மைல் வரையிலும்;  புயல் போன்ற நேரங்களில் அதன் வேகம் மணிக்கு 70 -100  மைல் ஆகவும் இருக்கும். புயல் காற்றின் அதிக பட்ச வேகம் 1996 ம் வருடம் ஏப்ரல் 10 அன்று ஆஸ்திரேலியாவில் பதிவாகியது, மணிக்கு 408 கி.மீ   ( 253 மைல் ) வேகமாகும்.

காற்றின்  மூலம் உதவி

அல்லாஹ்வை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவன் சொன்னபடி வாழும் அடியார்களுக்கு அறியாப் புறத்தில் இருந்தும் அவன் அருள் புரிவான். நன்மைகளை அள்ளிக் கொடுப்பான். ஏதேனும் துன்பங்களின் போது எதிர்பார்க்காத விதத்திலும் காப்பாற்றுவான்.

இன்னும் தெளிவாகச் சொல்வ தென்றால், கண்ணுக்குத் தெரியாத காற்றின் மூலம்கூட உதவி செய்வான். இதற்கு ஆதாரமாக நபிகளார் காலத்தில் நடந்த சம்பவங்கள் இருக்கிகின்றன.

இஸ்லாத்தை வேரோடு ஒழிக்க வேண்டும்;  முஸ்லிம்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பதற்காக இணை வைப்பவர்கள், காஃபிர்கள் என்று அனைவரும் ஒன்று திரண்டு போர் செய்ய வந்தார்கள். அவர்களின் தாக்குதலை முறியடிப் பதற்குக் கடந்து வர இயலாத அளவிற்கு முஸ்லிம்களால் பெரும் அகழ் தோண்டப்பட்டது.

அந்த அகழ்ப் போரின் போது எதிரிகளை சீர்குலைக்க, திணறடிக்க அவர்களுக்கு எதிராக அல்லாஹ் கடும் காற்றை அனுப்பினான். அதன் மூலம் முஃமின்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைத்தது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا

நம்பிக்கையாளர்களே!  அல்லாஹ் உங்களுக்குச் செய்திருக்கிற பெரிய உதவியை நினைவு கூறுங்கள்.  எதிரிப்படையினர் உங்களைத் தாக்க வந்த போது, நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல்காற்றை ஏவினோம்.  உங்கள் கண்களுக்குத் தென்படாத படைகளையும் அனுப்பினோம்!  ( அல்குர்ஆன்: 33: 9 )

فقد روى في صحيحه عن إبراهيم التيمي عن أبيه قال: ((كنا عند حذيفة، فقال رجل: لو أدركتُ رسول الله صلى الله عليه وسلم قاتلتُ معه وأبليتُ، فقال حذيفة: أنت كنتَ تفعل ذلك؟ لقد رأيتُنا مع رسول الله صلى الله عليه وسلم ليلة الأحزاب، وأخذتنا ريح شديدة وقُرٌّ، فقال رسول الله صلى الله عليه وسلم: ألا رجلٌ يأتيني بخبر القوم جعله الله معي يوم القيامة؟ فسكتنا فلم يجِبْهُ منا أحد، ثم قال: ألا رجل يأتينا بخبر القوم جعله الله معي يوم القيامة؟ فسكتنا فلم يجبه منا أحد، ثم قال: ألا رجل يأتينا بخبر القوم جعله الله معي يوم القيامة؟ فسكتنا فلم يجبه منا أحد، فقال: قم يا حذيفة، فأتِنا بخبر القوم، فلم أجد بدًّا إذ دعاني باسمي أن أقوم، قال: اذهب فأتني بخبر القوم، ولا تَذْعَرْهم عليَّ, فلما وليتُ من عنده جعلت كأنما أمشي في حمَّامٍ حتى أتيتُهم، فرأيت أبا سفيان يَصْلي ظهره بالنار، فوضعتُ سهمًا في كبد القوس فأردتُ أن أرميَه، فذكرتُ قول رسول الله صلى الله عليه وسلم: ولا تذعرهم عليَّ، ولو رميتُه لأصبتُه فرجعتُ وأنا أمشي في مثل الحمَّام،فلما أتيتُه فأخبرته بخبر القوم، وفرغتُ قُرِرْتُ، فألبسني رسول الله صلى الله عليه وسلم من فضلِ عباءةٍ كانت عليه يصلي فيها، فلم أزل نائمًا حتى أصبحت، فلما أصبحت قال: قُمْ يا نومانُ .مسلم .

அகழ்ப்போரின் போது, இறைத்தூதர் {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம்  இரு கரம் ஏந்தி இறைஞ்சிக் கொண்டே இருந்தார்கள்.  யாரேனும் ஒருவரை அகழைத் தாண்டி அனுப்பி உளவறிந்து வரச் செய்யலாம் என்று நினைத்தார்கள். 

 ‘‘பகைவர்களைப் பற்றி உளவறிந்து வந்து சொல்ல யாரேனும் தயாரா?  அவர் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்!என்று இறைத்தூதர் கேட்டார்கள். அகழைத் தாண்டிச் ஸெல்வது என்பதை யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.  என்ன நடக்குமோ என்கிற பீதி வேறு அவர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது.  வெளியிலோ குளிர் கொட்டிக் கொண்டிருந்தது.  உடம்பெல்லாம் விறைத்துப் போய் பற்கள் ஆடிக் கொண்டிருந்தன.  சில்லிட்ட கட்டாந்தரையில் அமர்ந்திருந்த ஸஹாபாக்கள் யாருமே வாயைத் திறக்கவில்லை.  

இறைத்தூதர் சென்றார்கள்.  இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம் துஆ கேட்டார்கள்.  மீண்டும் திரும்பி வந்தார்கள். பகைவர்களைப் பற்றி உளவறிந்து வந்து சொல்ல யாரேனும் தயாரா?  அவர் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்!’’ என்று இறைத்தூதர் கேட்டார்கள்.  அவையில் ஒரு சின்ன அசைவு கூட இல்லை.  

திரும்பவும் சென்று தொழுது துஆச் செய்தவர்களாக இறைத்தூதர் திரும்பி வந்தார்கள். பகைவர்களைப் பற்றி உளவறிந்து வந்து சொல்ல யாரேனும் தயாரா?  அவர் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்!என்று கேட்டார்கள்.  சப்த நாடி கூட ஒடுங்கிப் போனவர்களாக சஹாபாக்கள் அமர்ந்திருந்தார்கள்.

 அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடலில் குதிக்கச் சொன்னாலும் தயங்காமல் குதிப்போம்.  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இஸ்ரவேலர்கள் சொன்னது போல சாக்குப் போக்கு சொல்ல மாட்டோம்!என்ற அறிவித்த, அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அமுல்படுத்திய சஹாபாக்களே வாய்மூடி மௌனமாக உட்கார்ந்து  இருந்தார்கள் என்றால், நிலைமை எவ்வளவு படு மோசம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்!  இப்போது இறைத்தூதர் அவர்கள் சபையினரை நோட்டமிட்டார்கள். 

ஹூதைஃபா இப்னு யமான் (ரலி) அவர்களை அழைத்தார்கள். நீ சென்று வா!  இறைவன் உனக்கு வெற்றியைத் தருவான்என்று கூறி புறப்படச் சொன்னார்கள்.  ஹூதைஃபா (ரலி) கூறுகிறார்கள்: – “இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் பெயரை அறிவித்தவுடன் கீழ்படிய இதாஅத் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.  கடுங்குளிரில் குழியைத் தாண்டி எப்படி செல்வது என்கிற பயம் என்னையும் பீடித்துத் தான் இருந்தது. 

فقال رسول الله صلى الله عليه وسلم: "اللهم احفظه من بين يديه، ومن خلفه، وعن يمينه، وعن شماله، ومن فوقه، ومن تحته" ، قال: فلما وليت قال: "يا حذيفة، لا تحدثن في القوم شيئا حتى تأتيني"

மாநபி ஸல் அவர்கள் "யாஅல்லாஹ்! ஹுதைஃபாவின் முன்னாலும், பின்னாலும் வடமும், இடமும் பாதுகாப்பை ஏற்படுத்தி அவரைப் பாதுகாப்பாயாக!" என்று துஆ செய்து விட்டு, உளவறிந்து வந்தால் மட்டும் போதும்.  வேறு எந்த வேலையும் என் அனுமதியின்றி நீ செய்து விடக் கூடாது என்றும் கூறினார்கள்.  

கூடாரத்தை விட்டு வெளியே வந்ததும் எந்தக் குளிரை எண்ணி நான் பயந்து கொண்டிருந்தேனோ, அந்த குளிர் கொஞ்சம் கூட உறைக்கவில்லை.  சூடான ஒரு குளியலறையில் இருக்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டது.”. அங்கே எதிரிகளின் நிலை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

கடுமையான சூறாவளிக் காற்று வீசிக் கொண்டிருந்தது.  கூடாரங்கள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன.  எங்கு பார்த்தாலும் ஒரே பேரிரைச்ஸல்.  வாகனக் குதிரைகள் எல்லாம் மிரண்டு போய் அங்குமிங்கும் தாறுமாறாக ஒடிக் கொண்டடிருந்தன.  காரிருள், இவையெல்லவற்றையும் விட குளிர், கடுங்குளிர்!  உடம்பிலிருந்து உயிரை உருவி எடுத்து விடும் போல் இருந்தது.  குளிரைச் சமாளிக் கற்களை குவித்து நெருப்பு மூட்டலாம் என்பதை, நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.  சுழன்று சுழன்று காற்று அடித்துக் கொண்டிருந்தது.  திரும்பிச் ஸெல்வது ஒன்றே வழி என்று அபுசுஃப்யான் முடிவெடுத்து விட்டார்.  அதை விட்டால் எதிர்த்து நிற்க வேறு வழி எதுவும் அவருக்கு புலப்படவில்லை.

ஹூதைஃபா தொடர்கிறார் – “குளிர் காய்வதற்காக தனியே தணல் அருகில் ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார்.  யாரென்று உற்றுப் பார்த்தேன்.  பார்த்தால், அது அபுசுஃயான்!  ஆஹா, நல்ல வாய்ப்பு என்று எண்ணியவனாக அம்பை உருவ முதுகின் பின்னால் கைகளைக் கொண்டு சென்றேன்.  இறைத்தூதர் எச்சரித்தது ஞாபகத்திற்கு வரவே, பேசாமல் இருந்து விட்டேன்!

தமது படையில் எதிரியான் ஒருவன் நுழைந்து விட்டானோ, என்று அபுசுஃப்யானுக்கு சந்தேகம் வந்து விட்டது.  வீரர்களையெல்லாம் அழைத்து அவர் கூறினார் – “குறைஷித் தோழர்களே!  யாரோ உளவாளி வந்துள்ளான் என்று நினைக்கிறேன்.  ஒவ்வொருவரும் உங்களுக்கு அருகில் உள்ள ஆளின் கையைப் பிடித்து விசாரித்து கொள்ளுங்கள்!என்று கூறினார்.

நிலைமையின் பயங்கரத்தை வீரர்களுக்கு விளக்கிய பிறகு அபுசுஃப்யான் கூறினார். இனிமேலும் இங்கே வெட்டியாய் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை!  நான் ஒட்டகத்திக் கட்டுகின்றேன்.  வருகின்றவர்கள் வரலாம்!

மளமளவென்று கிளம்ப ஆயத்தமானார்கள் அனைவரும்!  அல்ஹம்துலில்லாஹ் என்றவாறு சந்தடியில்லாமல் திரும்பலானார் ஹுதைஃபா (ரலி),

இறைத்தூதரின் கூடாரத்தை அடைந்த ஹுதைஃபா, இறைத்தூதர் தொழுது கொண்டிருப்பதைக் கண்டார்.  பயங்கரமான குளிர் அவரை வதைத்தது!  இறைத்தூதரின் காலடியிலேயே சுருண்டவாறு படுத்துக் கொண்டார்.  சுபுஹ் நேரம் நெருங்கிய போது,“யாநவ்மான்! - தூங்குமூஞ்சியே) என்று கூறி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுப்பினார்கள்.  நடந்த விஷயங்கள் அனைத்தையும் நான் இறைத்தூதரிடம் கூறினேன். அப்போது,

قال: رسول اللّه صلى الله عليه وسلم أنه  "نُصِرْتُ بالصَّبَا، وأُهْلِكَتْ عَادٌ بالدَّبُورِ ". وقال ابن حجر -رحمه الله-: "الصَّبا الريح الشرقية، والدَّبُور الريح الغربية".

நபி (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்.  நான் (சபாஎன்னும்) கிழக்குக் காற்றின் மூலமாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன். ஆதுசமூகத்தார் (தபூர்என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர். ( நூல் :  புகாரி,  பாடம்: கிதாபுல் மகாஸி, முஸ்லிம் )

காற்றின் மூலம் எச்சரிக்கையும் அழிவும்....

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ (15) فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَى وَهُمْ لَا يُنْصَرُونَ

ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்ட னர். எங்களை விட வலிமை மிக்கவர் யார்? எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர். எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவு படுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 41: 15,16 )

وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ (41) مَا تَذَرُ مِنْ شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيمِ

ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம். அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை. ( அல்குர்ஆன்: 51: 41,42 )

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُمْ غَزَوْا غَزْوَةً بَيْنَ مَكَّةَ، وَالْمَدِينَةِ، فَهَاجَتْ عَلَيْهِمْ رِيحٌ شَدِيدَةٌ، حَتَّى وَقَعَتِ الرِّحَالُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم:"هَذَا لِمَوْتِ مُنَافِقٍ"، قَالَ: فَرَجَعْنَا إِلَى الْمَدِينَةِ، فَوَجَدْنَا مُنَافِقًا عَظِيمَ النِّفَاقِ مَاتَ يَوْمَئِذٍ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது. அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி னார்கள். மதீனாவுக்குள் வந்த போது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ( நூல்: முஸ்லிம் )

هُوَ الَّذِي يُسَيِّرُكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ حَتَّى إِذَا كُنْتُمْ فِي الْفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا بِهَا جَاءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَاءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ لَئِنْ أَنْجَيْتَنَا مِنْ هَذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ (22) فَلَمَّا أَنْجَاهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ يَاأَيُّهَا النَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَى أَنْفُسِكُمْ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களை அவன் காப்பாற்றும் போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர். ( அல்குர்ஆன்: 10: 22, 23 )

أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். ( அல்குர்ஆன்: 2: 266 )

أَفَأَمِنْتُمْ أَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلًا (68) أَمْ أَمِنْتُمْ أَنْ يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِنَ الرِّيحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ عَلَيْنَا بِهِ تَبِيعًا

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப் பாளரையும் காண மாட்டீர்கள். அல்லது மீண்டும் ஒரு தடவை அதில் (கடலில்) உங்களை அனுப்பும் போது, உங்களுக்கு எதிராகப் புயல் காற்றை அனுப்பி நீங்கள் (அவனை) மறுத்ததால் உங்களை மூழ்கடிக்க மாட்டான் என்று அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நமக்கு எதிராக உங்களுக்கு அதில் உதவுபவரை காண மாட்டீர்கள். ( அல்குர்ஆன்: 17: 67-69 )

அமேசான் எனும் அற்புத அருட்கொடை!

மொத்த உலகின் நல்வாழ்வுக்கு பெரும் பங்காற்றி வரும் இறைவனின் மகத்தான அருட்கொடையே  அமேசான் மழைக்காடுகள்.  முக்கியமாகப் பல கோடி டன் கார்பன் டை-ஆக்சைடை உட்கொள்கின்றன இந்தக் காடுகள். இந்தச் சமநிலை தவறினால் உலகம் வெப்பமயமாகி மனிதன் வாழத் தகுதி இல்லாத இடமாக மிக விரைவில் மாறிவிடும் அபாயம் உள்ளது என்று "Nature Climate Change" இதழில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வுக் கட்டுரை எச்சரிக்கை செய்கிறது.

விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளில்  சவாலான ஆய்வுகளை மேற்கொண்டும், 20 வருடங்களாக செயற்கைகோள்கள் சேகரித்த  தரவுகளை வைத்தும் இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டு  ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.

தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் உள்ள அமேசான் காடுகள் 'உலகத்தின் நுரையீரல்' என்று அழைக்கப்படுகிறது. காடு என்றால் சாதாரண காடு அல்ல, 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பையும் விட இரண்டு மடங்குக்கும் அதிகமானது. இதில் அதிகபட்சமாக 55 லட்சம் ச.கி.மீ. முழுக்க மழைக்காடுகள்.

பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈக்வடார் ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள். இந்த காடுகளின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் வியாபித்து இருக்கிறது.

மொத்த காடுகளில் 59.1 சதவீதம் இங்குதான் உள்ளது. பெரு நாட்டில் 12 சதவீதமும், பொலிவியாவில் 7.7 சதவீதமும், கொலம்பியாவில் 7.1 சதவீதமும், வெனிசூலாவில் 6.1 சதவீதமும், கயானாவில் 3.1 சதவீதமும், சுரினாமில் 2.5 சதவீதமும், பிரெஞ்ச் கயானாவில் 1.4 சதவீதமும், ஈக்வடாரில் 1 சதவீதமும் உள்ளன.

உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் சேர்த்தாலும் அவற்றையெல்லாம் விட அமேசான் காடுகளின் பரப்பளவு அதிகம். இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகில் எந்த பகுதியிலும் இல்லாத மரங்கள் இங்கு காணப்படுகின்றன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன. இவற்றில் ஏராளமானவை மனிதர்களால் அறியப்படாதவை.

இங்கு ஏராளமான வினோத 1500 பறவை வகைகள், 25 லட்சம் பூச்சி வகைகள், 2,500 மர வகைகள், 425 பாலூட்டி  வகைகள், 1 கோடிக்கும் அதிகமான விலங்குகள், 200 வகையான கொசுக்கள், ரத்தக்காட்டேரி வவ்வால்கள், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என நாம் இதுவரை பார்த்திராத இந்த காடுகளில் உலா வருகின்றன. இதனால் அவற்றை என்ன பெயரிட்டு அழைப்பது என்று கூட தீர்மானிக்க முடியவில்லை.

இங்குள்ள நதிகளில்  3 ஆயிரம் மீன் வகைகள் காணப்படுகின்றன. 'ஈல்' என்ற ஒருவகை மீன், தன் உடலில் உள்ள மின்சாரத்தை பாய்ச்சி மனிதர்களை கொல்லும் தன்மை கொண்டது.

பூமியில் உள்ள பறவைகளில் ஐந்தில் ஒரு பங்கு பறவைகள் இங்கு வசிக்கின்றன. 'அனகோண்டா' பாம்புகள் இங்குதான் உள்ளன.

அமேசான் நதி ஓரத்தில், ராட்சத நீர்நாய் போன்ற அரிய வகை விலங்குகளும் வாழ்கின்றன. அமேசான் காட்டில் பல வண்ண விஷத் தவளை, ஸ்லோத், கறுப்பு சிலந்தி குரங்கு போன்ற சிறப்பான உயிரினங்கள் காணப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய வகை உயிரினங்கள் அமேசானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகை பகுதியில் அமைந்திருக்கும் இந்த அமேசான் காடுகளில் ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்த காடுகள் வழியாக அமேசான் ஆறு பாய்கிறது. 

உலகின் இரண்டாவது மிக நீளமான ஆறு இதுதான்.  இதோட நீளம் 6,760 கிலோமீட்டர் . 1100 கிளை நதிகளை கொண்ட பெரிய ஆறு. இது உலக அளவில் 15 சதவீத நன்னீருக்கான ஆதாரமாக உள்ளது. 

காடு முழுவதும் அடர்த்தியான மரங்கள் என்பதால், தரையின் பெரும்பாலான பகுதிகள் சூரிய வெளிச்சத்தை பார்த்ததே கிடையாது. கணக்கில் அடங்காத இயற்கை வளங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.

முன்னொரு காலத்தில் அமேசான் பகுதி முழுவதும் வனமாகவே இருந்தது. சுமார் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு மக்கள் குடியேற தொடங்கியதாகவும், முதலில் மத்திய அமெரிக்க பகுதியில் இருந்து மக்கள் வந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அமேசான் பகுதியில் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேர் பூர்வீக பழங்குடியினர். இவர்களில் 500-க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. 170 வகையான மொழிகளை பேசுகிறார்கள். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினருக்கு வெளியுலக மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது; தொடர்பு வைத்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.

தற்போது 2.5 லட்சம் பழங்குடியினரே வசிப்பதாக தெரிய வந்துள்ளது. பழங்குடியினரில் சில குழுக்களை சேர்ந்தவர்கள் ஆடை அணிவது இல்லை. சிலர் பெயருக்கு ஏதோ ஒன்றை உடலில் சுற்றிக்கொள்கிறார்கள். வெயில், மழை எதுவென்றாலும் அப்படியே இருக்கிறார்கள். தங்களுக்கான உணவை வேட்டையாடி தேடிக்கொள்கிறார்கள். புல், இலை, தளைகளால் உருவாக்கப்பட்ட குடிசைகளில் வசிக்கிறார்கள். ( நன்றி: கல்கி ஆன்லைன்.காம் 19/04/2023 & தமிழ் திசை இந்து 22/06/2023, & விகடன். காம் 12/03/2022 )

அமேசான் காடுகளும்.... காலநிலை மாற்றமும்....

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் 'கார்பனை' உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது அமேசான் மழைக்காடுகள். ஒரு ஆண்டுக்கு 2 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை அமேசான் மழைக்காடுகள் உறிஞ்சுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இது உலகில் வெளியிடப்படும் கார்பன்- டை-ஆக்சைடின் மொத்த அளவில் கிட்டதட்ட 5 சதவிகிதம் ஆகும். இதனால் அதிகளவில் வெப்பம் குறைக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல! இந்த மழைக்காடுகள் உலகில் பெய்யும் மழைப்பொழிவுகளுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் தினமும் 20 பில்லியன் டன் நீராவிகளை அமேசான் மழைக்காடுகள் சுற்றப்புறத்தில் வெளியிடுகிறது. இது நீர் சுழற்சி (water cycle), நீர் இருப்பு, சுத்தமான காற்று போன்றவற்றுக்கு உதவும். உலகின் தேவைக்கான 20 சதவீத ஆக்சிஜனை தரும் ஒரே காடு,  ( நன்றி: விகடன்.காம் 12/09/2024 )

அமேசான் மழைக்காடுகள் செழித்தோங்குவதன் பிண்ணனி என்ன?...

பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக, உலகின் ஸ்திரத்தன்மைக்கு அடித்தளமாக அமைந்திருக்கும் அமேசான் மழைக்காடுகளின் பசுமைக்கும், வளத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது ஒரு காற்று தான் என்பதை நவீன அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.

உலகத்தில் மிகப்பெரிதான பரப்பளவைக் கொண்ட பாலைவனம் ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனமாகும்.

இங்கு கடும் கோடைகாலத்தில் உருவாகும் புழுதிப் புயலானது, பல பில்லியன் டன் புழுதி மணலை உயரே எழுப்பி, ( The current estimate for the annual quantity of desert dust that makes regional or global airborne migrations is 0.5 to 5.0 billion tons).வான் வெளியில் மணல் குன்றுகளாக பறந்து செல்கின்றன..செல்லும் தூரம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. They are intimately connected by a 10,000 mile long intermittent atmospheric river of dust.

கடும் வெப்பமுள்ள பாலை மணலில் என்ன சத்து உள்ளது என்று ஆய்வு செய்தபோது, பல முக்கிய நுண்ணுட்ட மினரல் சத்துக்கள் இருப்பது தெரிய வந்தது. பாலை புழுதியிலேயும் பயனுள்ளது என்று இன்று தான் அறிவியல் உலகம் அறிந்தது.

பாலைவனப் புழுதியில் இரும்புச் சத்தும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான, பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அதிகமாக உள்ளது.

நாம் வாழும் பூமியின் நிலப்பகுதியில் மட்டும் உயிரினங்கள், தாவரங்கள் வசிக்கவில்லை, மூன்று பங்கு நீர் சூழ்ந்த  கடலிலும் மீனினங்கள், தாவரங்கள் வசிக்கின்றன. குறிப்பாக கடலில் சூரிய ஒளி செல்லும் மேல்மட்ட பகுதியில் ஒளிச்சேர்க்கை மூலம் உயிர் வாழும் phytoplankton எனும் நுண்ணுயிர் கூட்டத்திற்கு இரும்புச் சத்து (Iron Nutrient) அவசியம் தேவை. கடல் உயிரினங்கள் உண்ணும் (Food web chain) உணவுச் சங்கிலியில் phytoplankton முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்க அமேசான் காடுகளை நோக்கிச் காற்றால் பரத்திச் செல்லப்படும் பாலை மணல் புழுதி, அட்லாண்டிக் கடலை கடந்து செல்லுகின்றன. அப்படிச் செல்லும்போது மெதுவாக கிழிறங்கி கடல் மட்டத்தில் மணல் புழுதியை பரப்பி விட்டே செல்கின்றன. இதிலுள்ள இரும்புச் சத்தானது கடல் மட்டத்தில் வாழும் பைடோபிளங்க்டன் எனும் நுண்ணுயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது ஒளிச் சேர்க்கையின் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு வாயுவை உறிஞ்சி புவி வெப்பமடைவதை தடுக்கிறது.

(Iron from Sahara dust helps fertilize Atlantic Ocean.Scientists have known for some time that iron from the Sahara desert can make its way to the North Atlantic Ocean by hitching a ride on tiny dust particles that get blown around during dust storms, but they’ve never quite figured out just how much iron gets deposited there. Now, new research published in the journal Nature on July 2, 2014 suggests that the amount of Saharan-derived iron in the Atlantic can be quite high. This iron helps fertilize ocean phytoplankton, which in turn suck up carbon dioxide from the atmosphere.)

சஹாரா பாலைவனத்தில் உள்ள பாலைவன மணல் துகள்கள் மிகுந்த தாதுப்பொருட்கள் நிறைந்தவை. அவை அந்த பாலைவனத்தில் வீசும் புயல் காற்றுக்களால் புழுதி புயலாக மாறி மேற்கு நோக்கி நகர்கின்றன. ஆயிரத்தி அறுநூறு மைல்கள் அப்பால் இருக்கும் அமேசான் காடுகளில் சென்று படியும் இந்த சஹாரா பாலைவன மணல் துகள்களால்தான் அந்த காடு அவ்வளவு செழுமையாக இருக்கிறதாம்.

ஆனால், இது இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த அளப்பரிய உண்மையை அல்லாஹ் அன்றே அல்குர்ஆனில் அறிவித்து விட்டான். நமது அறிவியல் உலகம் இன்றுதான் புரிந்து கொண்டது.

அல்குர்ஆனின் 51 அத்தியாயமான ஸூரத்துல் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) த்தின் ஆரம்ப சில வசனங்கள் அல்லாஹ்வின் ஆற்றலைப் பேசுகின்றன.

وَالذَّارِيَاتِ ذَرْوًا (1) فَالْحَامِلَاتِ وِقْرًا (2) فَالْجَارِيَاتِ يُسْرًا (3) فَالْمُقَسِّمَاتِ أَمْرًا (4) إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ (5)

(புழுதியை எழுப்பி) நன்கு பரத்தும் காற்றுகள் மீது சத்தியமாக!

(மணல் புழுதிச்) சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்..,

பின்னர் கடலில் (இலேசாகச்) செல்பவற்றின் மீதும்..

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக.. .

நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மையேயாகும்.- ( அல்குர்ஆன்: 51: 1-5 )

மேற்கண்ட வசனத்தில் மணல் புழுதியை சுமந்து செல்லும் காற்றுகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இப்பூவுலகத்தின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒன்று 20% நிலப்பகுதி பாலைவனமாக உள்ளது. இங்கு மழை பொழிவு மிகக்குறைவாக உள்ளதால் வறட்சியும், அதிக வெப்பமும் ஆண்டு முழுவதும் இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்..மணல்மணலைத்தவிர ஒன்றுமில்லை. அதிக வெப்பத்தின் காரணமாக காற்று சூடாகி புழுதிப்புயல் (Desert Storm) அடிக்கடி ஏற்படும்.

மேற்கண்ட வசனத்தில் மணல் புழுதியை சுமந்து செல்லும் காற்றுகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் காற்றானது இப்புழுதி மணலை எங்கே கொண்டு செல்கிறது? இதன் பயன் என்ன என்ற கேள்விக்கு இன்றைய அறிவியல் உலகம் தற்போது தான் விடை கண்டுபிடித்துள்ளது என்பதை மேலே விரிவாக பார்த்தோம்.

தினமும் சஹாரா பாலைவனத்திளிருந்து ஒரு கி.மீ கனம் உள்ள தூசுப் படலம் மேலெழும்பி அட்லாண்டிக் கடலைக் கடந்து தென்னமெரிக்க அமேசான் காடுகளில் மழையாகப் பொழிகிறது.இது சுமார் 54000   டன் பாலைவன புழுதி மண்.இப்படி வருடத்திற்கு  சுமார் நாற்பது  மில்லியன் டன் மணலானது காற்றில் ஆகாய வீதியில் நதியாக ஓடி வருகிறது. இதுபோன்ற ஒரு இயற்கை அமைப்பை அல்லாஹ் எற்படுத்தவில்லை என்றால் இன்றுள்ள காடுகளை நாம் பார்க்கமுடியாது.

அமேசான் காடுகளில் பொழியும் தொடர் மழையால் மண்ணுக்குத் தேவையான முக்கிய சத்தான பாஸ்பரஸ் மழை நீரால் அடித்துச் செல்லப்படுகிறது. இப்படி இழக்கப்படும் பாஸ்பரத்தை, சஹாரா பாலைவனத்திலிருந்து கொண்டு வரப்படும்

பாஸ்பரத்தால் ஈடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 54000 டன் பாலைவனப் புழுதி அமேசான் காடுகளில் படிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் ஒரு வருடத்திற்கு சுமார் 22,000 டன் பாஸ்பரஸ்   (Phosphorous) சத்து அமேசான் காடுகளுக்கு கிடைப்பதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

An estimated 22,000 tons of phosphorous reach the Amazon each year from the Saharan dust, according to Hongbin Yu, an atmospheric scientist at the University of Maryland who works at NASA’s Goddard Space Flight Center. Yu says that this is equivalent to the amount of phosphorous lost due to rainfall runoff in the Amazon

Why does the Saharan dust contain so much phosphorous? It comes from lake beds of northern Africa’s past, particularly the Bodélé Depression in Chad which is rich in the nutrient, NASA says.

சூறாவளி புயல் காற்று பரத்திவிடும் மண்  புழுதியில், அனைத்து உயிரினங்களின் வாழ்வாதார நன்மைகள் உள்ளது என இன்றைய அறிவியல் உலகம் கூறுவதை, அன்றே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அறிந்ததால் அதன் நன்மைகளை வேண்டி அல்லாஹ்விடம் துவா செய்துள்ளார்கள். அத்துடன் சூறாவளி புயல் காற்றினால் ஏற்ப்படும் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு வேண்டி துவா செய்துள்ளார்கள்.

رَوَى مُسْلِمٌ عَنْ عَائِشَةَ زَوْج النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا عَصَفَتِ الرِّيحُ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ»

சூறாவளிக் காற்று வீசும்போது நபி (ஸல்) அவர்கள், “ இறைவா! இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக்காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ( நூல்: முஸ்லிம், )

சஹாரா பாலை வனத்தில் மட்டும் இந்த நிகழ்வு நடக்கவில்லை.உலகில் உள்ள அத்துணை பாலைவனங்களில் உருவாகும் புழுதிக்காற்று அங்குள்ள சத்து மண்ணை உயரே இழுத்துச் சென்று அல்லாஹ் நாடும் இடங்களில் பரத்துகிறது. இந்தியாவில் உள்ள தார் பாலைவனம், சீனாவின் கோபி பாலைவனத்தில் உருவாகும் புழுதிபுயல் (Asian Dust),கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வரை சென்று படிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பாலைவனப் புழுதியில் இரும்புச் சத்தும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான, பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அதிகமாக உள்ளது. இந்த மணல் சத்துக்களை தேவையுடையோருக்குத் தகுந்தாற்போல் அல்லாஹ் பிரித்துக் கொடுக்கின்றான் என்பதை பின்வரும் வசனம் தெளிவாக்குகிறது.

فَالْمُقَسِّمَاتِ أَمْرًا

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக! ( அல்குர்ஆன்.51:4 )

( நன்றி: கல்கி ஆன்லைன்.காம்,  readislam.com 29/08/2015,  https://www.nasa.gov/missions/calipso/nasa-satellite-reveals-how-much-saharan-dust-feeds-amazons-plants/#:~:text=The%20phosphorus%20that%20reaches%20Amazon,on%20local%20and%20global%20climate.  )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய படைப்பாற்றலை புரிந்து கொள்ளும் அனைத்து வகையான அறிவையும் தந்தருள்வானாக! அவனுக்கு நன்றி செலுத்தி வாழும் நல்லடியார்களாக நம்மை ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment