இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!
காஸா மக்களின்
வாழ்வில் மறுமலர்ச்சி தழைக்கட்டும்!!!
இஸ்ரேல் மற்றும்
ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம்
முடிவு செய்யப்பட்டுள்ளதாக,
இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும்
அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர்
நடைபெற்று வந்தது.
இந்த ஒப்பந்தம்
ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார்.
இந்த போர்
நிறுத்தம்,
"காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்" என்று அமெரிக்க
அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த
ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அதே நேரம் இதை 'ஊக்குவித்ததற்காக'
அமெரிக்க அதிபர் பைடனுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்தார்.
ஹமாஸ் தலைவர் காலில் அல்-ஹய்யா இது பாலத்தீனத்தின் "மீண்டு எழும்
திறனின்" விளைவாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு,
251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த
தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிக்கப் போகிறோம்
என்ற பெயரில் காஸாவை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அப்போது முதல்
காஸாவில் 46,700
பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும்
சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. அங்குள்ள 23 லட்சம்
மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்கு
பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. மனிதநேய உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், உணவு,
எரிபொருள், மருந்து, உறைவிடம் ஆகியவற்றுக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
ஐக்கிய நாடுகள்
சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், "போரினால் ஏற்பட்ட அதிகப்படியான பாதிப்பை" சரி செய்வதே முதல் வேலை என்று
தெரிவித்தார். பாலத்தீனர்களுக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க ஐக்கிய நாடுகள் தயாராக
இருப்பதாகவும் அவர் கூறினார். ( நன்றி: பிபிசி தமிழ் 16/01/2025 )
என்ன நடக்கும்?
ஹமாஸ் 94 பணயக்கைதிகளை கொண்டிருப்பதாகவும், அதில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. மேலும், போருக்கு முன்பாக இஸ்ரேலை சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளனர், அதில் இருவர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கிறது.
ஆறு வார கால முதல்
கட்ட போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, இருபுறத்தில் அமைதி நிலவ
வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தத்தின்போது, பெண்கள்,
குழந்தைகள், முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர், அதற்கு ஈடாக இஸ்ரேல்
சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மக்கள் அதிகமாக வாழும் காஸாவின் பகுதிகளிலிருந்து விலகி கிழக்கு திசையில்
இஸ்ரேல் படை நகரும். இடமாற்றம் செய்யப்பட்ட பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத்
திரும்ப அனுமதிக்கப்படுவர்,
மக்களுக்குத் தேவையான உதவிகளை கொண்டு வரும் நூற்றுக்கணக்கான
லாரிகள் ஒவ்வொரு நாளும் உள்ளே வர அனுமதிக்கப்படும்.
அடுத்த கட்ட போர் நிறுத்தத்தின்போது என்ன நடைபெறும்?
இரண்டாம் கட்ட
போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் இன்று (ஜனவரி 16ம் தேதி) தொடங்கவுள்ளன. இந்த போர் நிறுத்தத்தின்போது மீதமுள்ள பணயக்கைதிகள்
விடுவிக்கப்பட்டு,
இஸ்ரேல் படைகள் முழுவதுமாக விலகி, அந்த பகுதியில் 'நீடித்த அமைதி'
நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது மற்றும்
கடைசி கட்ட போர் நிறுத்தத்தின்போது காஸாவின் மறுகட்டமைப்பு நடைபெறும் - இதற்கு பல
ஆண்டுகள் ஆகலாம். மேலும்,
மீதமுள்ள பணயக்கைதிகளின் உடல்கள் இருந்தால் அவை திருப்பி
கொடுக்கப்படும்.
இரண்டாவது மற்றும்
மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள 'தெளிவான நடைமுறை' இருப்பதாக,
ஷேக் முகமது தெரிவித்தார். இதன் "விவரங்கள் இறுதி
செய்யப்பட்ட பிறகு,
ஓரிரு நாட்களில்" ஒப்பந்தம் வெளியாகும் என்று
தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் மற்றும்
ஹமாஸ், ஒப்பந்தத்தின்படி தங்கள் பொறுப்புகளை சரியாக மேற்கொள்கிறார்கள் என்பதை உறுதி
செய்ய, இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகியவை கூட்டாக வேலை செய்யும்.
"இதுவே போரின்
கடைசி பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை
அமல்படுத்த அனைத்து தரப்பும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்" என்றார் ஷேக்
முகமது. ( நன்றி: பிபிசி தமிழ் 16/01/2025 )
கத்தார் அரசின்
நேரடி பார்வையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் கத்தார் சமாதான தூதுவராக
சாதிப்பது மூன்றாவது முறையாகும்...
காசா பேர்
நிறுத்தத்தை உலகிற்கு அறிவித்தார் கத்தார் பிரதம மந்திரி
முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி..
முதலில் சூடான்
தார்ஃபூர் ஒப்பந்தம். இரண்டாவது அமெரிக்காவின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தானை மீண்டும்
தாலிபான்கள் வசம் கொண்டுவந்தது..
மூன்றாவதாக இப்போது காசா போர் நிறுத்த உடன்படிக்கை...
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிரந்தரமாக ஆக்கியருள்வானாக!
இந்த போர் நிறுத்த
ஒப்பந்தத்திற்கு பேருதவியாக செயல்பட்ட கத்தாரையும் கத்தாருக்கு உதவியாக செயல்பட்ட
எகிப்தையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லா வகையான ஆபத்துகளில் இருந்தும்
காத்தருள்வானாக;
இந்த போர் நிறுத்த
ஒப்பந்தத்திற்கு மூளையாக செயல்பட்ட அமெரிக்காவிற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
தற்போது அந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீ பேரிடரில் இருந்து மீண்டு வரச்
செய்வானாக! அந்த பகுதியில் வாழும் மக்களையும் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
சமாதான தூதுவராக செயல்படுவது சிறந்த அறம் ஆகும்!
பிரச்சினைகள்
மற்றும் மனஸ்தாபங்களால் சண்டையிட்டு பிளவுபட்ட இரு மனிதர்களுக்கிடையில், பிரிந்து சென்ற கணவன்-மனைவிக்கிடையில், மோதல் போக்கால்
ரெண்டுபட்ட ஊர் மக்களுக் கிடையில், அல்லது இரு
பிரிவினருக்கிடையில்,
கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கிடையில், போரில் ஈடுபட்டு பெருத்த சேதத்தை சந்தித்த இரண்டு நாடுகளுக்கிடையில் சமாதானமாக
பேச்சுவார்த்தை நடத்தி,
சமரச உடன்பாடு ஏற்படும் வரை சுமுகத்தீர்வு காண்பதுதான்
பேச்சுக்களிலேயே சிறந்த பேச்சாக இன்றைய உலகில் மதிப்பீடு செய்யப்படுகிறது.
அந்த வகையில்
இத்தகைய சமாதான நடவடிக்கைகளை இஸ்லாம் நிறைவான நற்பண்பாக பார்க்கிறது. மேலும், இறைவனும் வெகுவாக பாராட்டி மகிழ்கிறான்.
இது குறித்து
திருக்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சிலாகித்து இவ்வாறு குறிப்பிடுகிறான்:
لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ
بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ
ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
‘(நபியே) தர்மத்தையும், நன்மையானவற்றையும்,
மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் ஏவியவரைத் தவிர, அவர்களின் ரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்தவிதமான நலமும் இல்லை; ஆகவே எவர் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி இதைச்செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்’ ( அல்குர்ஆன்: 4: 114 )
மகத்தான கூலிகளைப் பெற்றுத்தரும் உயரிய செயல்….
وقال
الرسول صلى الله عليه وسلم ( ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة ؟
قالوا بلى ، قال : إصلاح ذات البين فإن فساد ذات البين هي الحالقة ) رواه أبو داود
والترمذي وقال حديث صحيح ، وللترمذي لا أقول تحلق الشعر ولكن تحلق الدين .
அபுத்தர்தா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“எங்களிடையே வந்த மாநபி {ஸல்} அவர்கள் உபரியான தொழுகையின், நோன்பின், தர்மத்தின் நன்மையைக் காட்டிலும் சிறந்த நன்மையைப் பெற்றுத் தருகிற ஓர் செயலை
நான் உங்களுக்கு அறிவித்து தரட்டுமா? என்று வினவினார்கள்.
அப்போது, எங்களில் சிலர் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றார்கள்.
அதற்கு, நபி {ஸல்}
இரண்டு பேருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது தான்
சிறந்த நன்மையைப் பெற்றுத்தரும் உயரிய செயலாகும். இரண்டு பேருக்கு மத்தியில்
குழப்பம் ஏற்படுத்துவது என்பது மழிக்கும் செயலாகும். நான் முடியை மழிப்பதைச்
சொல்லவில்லை. அது தீனை அவரிடம் இருந்து மழித்து விடும்” என கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ,
அபூதாவூத் )
وقال
صلى الله عليه وسلم : ( كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين ( تصلح بينهما
بالعدل ) صدقة )
”சூரியன் உதயமாகும் ஒவ்வொரு
நாளிலும் நீங்கள் இருவருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது தர்மம் ஆகும்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
( நூல்: புகாரி,
முஸ்லிம் )
قال أنس
رضي الله عنه ( من أصلح بين اثنين أعطـاه الله بكل كلمة عتق رقبة
அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரண்டு பேரை சேர்த்து வைப்பதற்காக
சமாதானம் மேற்கொள்ளும் ஒருவர் அதற்காக பேசுகின்ற ஒவ்வொரு பேச்சிற்கும் அல்லாஹ் ஒரு
அடிமையை உரிமை விட்ட நன்மையை வழங்குகின்றான்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
وعن أَبي العباس سهلِ بنِ سعدٍ السَّاعِدِيِّ
أَنَّ
رسولَ اللَّه ﷺ بلَغهُ أَنَّ بَني عَمْرِو بن عَوْفٍ كَانَ بيْنهُمْ شَرٌّ،
فَخَرَجَ رسولُ اللَّه ﷺ يُصْلِحُ بَيْنَهمْ فِي أُنَاسٍ مَعَه، فَحُبِسَ رَسُولُ
اللَّه ﷺ وَحَانَتِ الصَّلاةُ، فَجَاءَ بِلالٌ إِلَى أَبي بَكْرٍ رضي اللَّه عنهما
فَقَالَ: يَا أَبَا بَكْرٍ، إِنَّ رسولَ اللَّهِ ﷺ قَدْ حُبِسَ، وَحَانَتِ
الصَّلاةُ، فَهَلْ لكَ أَنْ تَؤُمَّ النَّاس؟ قَالَ: نَعَمْ إِنْ شِئْتَ،
فَأَقَامَ بِلالٌ الصَّلاةَ، وَتقَدَّمَ أَبُو بَكْرٍ فَكَبَّرَ وكبَّرَ النَّاسُ،
وَجَاءَ رَسُولُ اللَّه يَمْشِي في الصُّفوفِ حتَّى قامَ في الصَّفِّ، فَأَخَذَ
النَّاسُ فِي التَّصْفِيقِ، وكَانَ أَبُو بَكْرٍ
يدَهُ فَحمِد اللَّه،
وَرَجَعَ القَهْقَرَى وَراءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَتَقدَّمَ رَسُولُ
اللَّه ﷺ فَصَلَّى للنَّاسِ، فَلَمَّا فرغَ أَقْبلَ عَلَى النَّاسِ فَقَالَ:
أَيُّهَا النَّاسُ، ما لَكُمْ حِين نَابَكُمْ شَيْءٌ في الصَّلاةِ أَخَذْتُمْ فِي
التَّصْفِيقِ؟ إِنَّما التَّصْفِيقُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شيءٌ فِي صلاتِهِ
فَلْيَقُلْ: سُبْحَانَ اللَّهِ، فَإِنَّهُ لا يَسْمعُهُ أَحدٌ حِينَ يَقُولُ:
سُبْحانَ اللَّهِ إِلَّا الْتَفَتَ، يَا أَبَا بَكْرٍ، مَا منعَك أَنْ تُصَلِّيَ
بِالنَّاسِ حِينَ أَشرْتُ إِلَيْكَ؟ فَقَالَ أَبُو بكْرٍ: مَا كَانَ ينبَغِي
لابْنِ أَبي قُحافَةَ أَنْ يُصلِّيَ بِالنَّاسِ بَيْنَ يَدَيْ رسولِ ﷺ
ஸஹ்ல் இப்னு
ஸஅத்(ரலி) அறிவித்தார். அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ
தகராறு இருந்து வந்தது. எனவே, நபி ﷺ அவர்கள் தம் தோழர்கள் சிலர் புடைசூழ அவர்களிடையே
சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி ﷺ அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம்
வந்துவிட்டது. நபி ﷺ
அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால்(ரலி) பாங்கு சொன்னார்கள்.
(அதன் பிறகும்)
நபி ﷺ அவர்கள் வரவில்லை. எனவே, பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, ‘நபி ﷺ அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே
வர முடியாமல்) தாமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித் தொழுகை நடத்தினர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘சரி, நீங்கள் விரும்பினால் தொழுகை நடத்துகிறேன்” என்று கூறினார்கள். உடனே, பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் சொல்ல, அபூ பக்ர்(ரலி) (தொழுகை
நடத்துவதற்காக) முன்னால் சென்றார்கள். பிறகு, நபி ﷺ அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்தவர்களாக வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள்.
உடனே, மக்கள் கைதட்டத் தொடங்கி இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூ பக்ர்
(ரலி) தொழுகையின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள்
கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னே, அங்கே நபி ﷺ
அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி ﷺ அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள்.
உடனே, அபூபக்ர் (ரலி) தம் கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின்பக்கமாக நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்து கொண்டார்கள். உடனே, நபி ﷺ அவர்கள் முன்னால் சென்று
மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்த பின் மக்களை நோக்கி, ‘மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால்
கைதட்டத் தொடங்கி விடுகிறீர்கள். பெண்கள் தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர்
தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக்குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் ‘சுப்ஹானல்லாஹ் –
அல்லாஹ்வே தூய்மையானவன்’ என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்” என்று கூறிவிட்டு,
‘அபூ பக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன்
மக்களுக்குத் தொழுகை நடத்தவில்லை?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அபூ பக்ர்(ரலி),
‘நபி ﷺ
அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை” என்று பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
حدثني
محمد بن عبد الأعلى, قال: ثنا معتمر بن سليمان, عن أبيه, عن أنس, قال: قيل للنبيّ
صَلَّى الله عَلَيْهِ وَسَلَّم: لو أتيت عبد الله بن أُبيّ, قال: فانطلق إليه وركب
حمارا, وانطلق المسلمون, وهي أرض سبخة; فلما أتاه رسول الله صَلَّى الله عَلَيْهِ
وَسَلَّم قال: إليك عني, فوالله لقد آذاني نتن حمارك, فقال رجل من الأنصار: والله
لنتن حمار رسول الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّم أطيب ريحا منك, قال: فغضب لعبد
الله بن أُبيّ رجل من قومه قال: فغضب لكل واحد منهما أصحابه, قال: فكان بينهم ضرب
بالجريد والأيدي والنعال, فبلغنا أنه نـزلت فيهم ( وَإِنْ طَائِفَتَانِ مِنَ
الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا
).
அனஸ்(ரலி)
அறிவித்தார். நபி ﷺ அவர்களிடம், ‘தாங்கள்
அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்” என்று கூறப்பட்டது. நபி ﷺ அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள்.
முஸ்லிம்களும் நபி ﷺ
அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை
நபி ﷺ அவர்கள் சென்றடைந்தபோது அவன், ‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத்
துன்புறுத்திவிட்டது”
என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி
(தோழர்) ஒருவர்,
‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை
விட நல்ல வாசனையுடையதாகும்”
என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச்
சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும்
அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (ம்ளையின்)
குச்சியாலும்,
கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, ‘மேலும்,
இறை நம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள்
சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்” (திருக்குர்ஆன் 49:09)
என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி
எங்களுக்கு எட்டியது. ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ, புகாரி )
عن حسن
البصري وعن ابي بكرة قال: استقبل -واللَّهِ- الحَسَنُ بنُ عَلِيٍّ مُعَاوِيَةَ
بكَتَائِبَ أمْثَالِ الجِبَالِ، فَقالَ عَمْرُو بنُ العَاصِ: إنِّي لَأَرَى
كَتَائِبَ لا تُوَلِّي حتَّى تَقْتُلَ أقْرَانَهَا، فَقالَ له مُعَاوِيَةُ -وكانَ
واللَّهِ خَيْرَ الرَّجُلَيْنِ-: أيْ عَمْرُو، إنْ قَتَلَ هَؤُلَاءِ هَؤُلَاءِ
وهَؤُلَاءِ هَؤُلَاءِ، مَن لي بأُمُورِ النَّاسِ؟ مَن لي بنِسَائِهِمْ؟ مَن لي
بضَيْعَتِهِمْ؟ فَبَعَثَ إلَيْهِ رَجُلَيْنِ مِن قُرَيْشٍ مِن بَنِي عبدِ شَمْسٍ:
عَبْدَ الرَّحْمَنِ بنَ سَمُرَةَ، وعَبْدَ اللَّهِ بنَ عَامِرِ بنِ كُرَيْزٍ،
فَقالَ: اذْهَبَا إلى هذا الرَّجُلِ، فَاعْرِضَا عليه، وقُولَا له: واطْلُبَا
إلَيْهِ. فأتَيَاهُ، فَدَخَلَا عليه، فَتَكَلَّمَا وقالَا له، فَطَلَبَا إلَيْهِ،
فَقالَ لهما الحَسَنُ بنُ عَلِيٍّ: إنَّا بَنُو عبدِ المُطَّلِبِ قدْ أصَبْنَا مِن
هذا المَالِ، وإنَّ هذِه الأُمَّةَ قدْ عَاثَتْ في دِمَائِهَا، قالَا: فإنَّه
يَعْرِضُ عَلَيْكَ كَذَا وكَذَا، ويَطْلُبُ إلَيْكَ ويَسْأَلُكَ قالَ: فمَن لي
بهذا؟ قالَا: نَحْنُ لكَ به، فَما سَأَلَهُما شيئًا إلَّا قالَا: نَحْنُ لكَ به،
فَصَالَحَهُ. فَقالَ الحَسَنُ: ولقَدْ سَمِعْتُ أبَا بَكْرَةَ يقولُ: رَأَيْتُ
رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ علَى المِنْبَرِ والحَسَنُ بنُ عَلِيٍّ
إلى جَنْبِهِ، وهو يُقْبِلُ علَى النَّاسِ مَرَّةً وعليه أُخْرَى، ويقولُ: إنَّ
ابْنِي هذا سَيِّدٌ، ولَعَلَّ اللَّهَ أنْ يُصْلِحَ به بيْنَ فِئَتَيْنِ
عَظِيمَتَيْنِ مِنَ المُسْلِمِينَ.
ஹஸன் பஸரீ(ரஹ்)
அறிவித்தார். அலீ(ரலி) அவர்களின் மகனான ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன்
எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு
ஆஸ்(ரலி),
‘இவற்றில் உள்ள (போரிடுவதிலும், வீரத்திலும்) சமபலம் வாய்ந்தவர்களை நீங்கள் கொன்று விடாதவரை இந்தப் படைகள்
பின்வாங்கிச் செல்லாது என்று கருதுகிறேன்” என்று கூறினார்கள்.
அவருக்கு முஆவியா(ரலி) அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்…”
அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று
விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார்
இருப்பார்கள்?
(என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு)
யார் இருப்பார்கள்?
அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான்
இருப்பார்கள்?’
என்று பதிலளித்தார்கள். எனவே, ஹஸன்(ரலி) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர்
ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர்
இப்னி குரைஸ்(ரலி) அவர்களையும் அனுப்பி, ‘நீங்கள் இருவரும்
இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்” என்று கூற,
அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(ரலி) அவர்களிடம்
(முஅவியா(ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள
முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(ரலி), ‘நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள்
தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச்
சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழம்விட்டது” என்று கூறினார்கள்.
இதற்கு அவ்விருவரும்,
‘முஆவியா(ரலி) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக்
கூறுகிறார்கள்;
மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம்
கோருகிறார்கள்”
என்று கூறினர். அதற்கு ஹஸன்(ரலி), ‘இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?’ என்று கேட்க, அவ்விருவரும் ‘இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு” என்று கூறினர்.
ஹஸன்(ரலி) கேட்ட
ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், ‘நாங்கள் உங்களிடம்
இதற்குப் பொறுப்பேற்கிறோம்”
என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(ரலி),
முஆவியா(ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்.
மேலும்,
‘(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(ரலி) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ‘இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு
பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க
விரும்புகிறான்”
என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்” என்று அபூ பக்ரா(ரலி) கூறியதை கேட்டேன். ( நூல்: புகாரி )
مر رجل
من اليهود بملأ من الأوس والخزرج ، فساءه ما هم عليه من الاتفاق والأُلفة ، فبعث
رجلاً معه وأمره أن يجلس بينهم ويذكرهم ما كان من حروبهم يوم بُعاث وتلك الحروب ،
ففعل ، فلم يزل ذلك دأبه حتى حميت نفوسُ القوم وغضب بعضهم على بعض ، وتثاوروا ،
ونادوا بشعارهم ، وطلبوا أسلحتهم ، وتواعدوا إلى الحرة ، فبلغ ذلك النبي صلى الله
عليه وسلم فأتاهم فجعل يُسكنهم ويقول : ( أبدعوى الجاهلية وأنا بين أظهركم ؟ ) وتلا
عليهم
واعتصموا بحبل الله جميعاً ولا تفرقوا واذكروا نعمت الله عليكم
إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار
فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ) . فندموا على ما كان منهم
،واصطلحوا وتعانقوا وألقوا السلاح رضي الله عنهم جميعاً
ஒரு முறை ஒரு
யூதர் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தார்கள் நிரம்பி இருந்த அன்ஸாரிகளைக் கடந்து
சென்றார். போகிற போக்கில் முன் காலத்து சம்பவங்களை நினைவு படுத்திப் போனார்.
துவக்கத்தில்
வார்த்தைகளில் மோத,
பின்னர் ஒருவருக்கொருவர் அடிதடியில் இறங்க, அப்புறம் ஆயுதம் ஏந்தி நிற்க, இந்தச் செய்தி மாநபி {ஸல்}
அவர்களுக்கு கிடைக்க ஓடோடி வந்த அண்ணலார் “என்ன இது நான் உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போதே இப்படி நடந்து
கொள்கின்றீர்களா?
அறியாமைக் காலத்து மடச்செயல்களை இன்னும் நீங்கள் உங்கள்
மனங்களில் இருந்து தூக்கி எறியவில்லையா? என்று கேட்டு விட்டு…“நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்
கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்!
மேலும், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்! நீங்கள்
ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்தீர்கள், அவன் உங்களுக்கிடையில்
உணர்வுப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் நீங்கள் சகோதரர்கள் ஆகி விட்டீர்கள்.
மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள்! அல்லாஹ், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை
உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான். இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து
கொள்ளக்கூடும் என்பதற்காக! ( அல்குர்ஆன்:3:103)
என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். பின்னர் அவ்ஸ் மற்றும்
கஸ்ரஜ் கோத்திரத்து நபித்தோழர்கள் தங்களின் செயலுக்காக வருந்தினர். கையில் இருந்த
ஆயுதங்களை கீழே எறிந்து விட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி சமாதானமாகிக் கொண்டனர். ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )
ஆனால், இன்றோ இப்படியான சமாதானம் செய்து வைக்க வேண்டும், இரு உடைந்த இதயங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற பண்பாடு கொண்டவர்கள் மிகவும்
அரிதாகிக் கொண்டே இருக்கின்றார்கள். இந்த கால கட்டத்தில் ஃப்லஸ்தீன
பூமியில் காஸா மக்களின் வாழ்வில் மறுபடியும் வசந்த காலங்கள் மலர வேண்டும் என்ற உயரிய
நோக்கத்தில் சமாதானம் செய்து வைத்த கத்தாரின் மன்னருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
இந்த போர் நிறுத்த
ஒப்பந்த முடிவு அறிவிக்கப்பட்டதும் ஃபலஸ்தீன் சிறுவர்கள்
சிறுமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் கண்டோம்.
அவர்களின்
முகங்களில் நாம் கண்ட அந்த புன்னகையை அல்லாஹ் நிரந்தரமானதாக ஆக்கியருள்வானாக!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிரந்தரமாக ஆக்கியருள்வானாக!
ஃபலஸ்தீன் மற்றும்
காஸா, ரஃபாவில் மறு கட்டமைப்பு, மறு சீரமைப்பு
செய்யப்படும் வரை உள்ள அனைத்து காரியங்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இலகுவாக்கி
தருவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
தற்போதைய உலக நிலவரத்திற்கேற்ப திருக்குர்ஆன் மற்றும் திருத்தூதரின் அறிவுரை அடிப்படையில் சுடச்சுட ஆக்கங்களை உலமாக்களுக்கு வழங்கியுள்ளீர்கள் உஸ்தாத்.
ReplyDeleteجزاكم الله خير الجزاء يا استاذ الكريم 🎉💖👍
Jazakallah khair Hazrat
ReplyDeleteமிக சிறப்பிற்குரிய செய்திகள்.
ReplyDelete