வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழுங்கள்!!!
ஹரம் ஷரீஃப்பில் - 14/02/2025 அன்று இமாம் ஷேக் மாஹிர் அல் முயிக்லி ஆற்றிய ஜும்ஆ உரையின் சாராம்சம்!
எல்லா மனிதர்களுக்கும் பயனளித்து வாழ்பவரே மனிதர்களில் சிறந்தவர்.
மனிதர்களில் சிறந்தவர்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவர்கள்.
எனவே, மனிதர்களுக்கு பயனளிப்பவராகவும், அல்லாஹ்விற்கு விருப்பமானவராகவும் வாழ முயலுங்கள்!
ஏனெனில், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு நன்மையை நாடி விட்டான் என்றால்....
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍأَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا يَسْتَعْمِلُهُ قِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ. ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 346
“ஒரு அடியாருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எப்படி பயன்படுத்துவான்?‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த அடியாரின் மரணத்திற்கு முன் நல்லமல் புரி(ந்த நிலையில் மரணடை)யும் பாக்கியத்தை அவருக்கு வழங்குவான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 346
1) எந்த செயலிலும் முன்மாதிரி மனிதராக செயல்படுங்கள்!
قال الإمام أحمد : حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة ، عن عون بن أبي جحيفة ، عن المنذر بن جرير ، عن أبيه قال : كنا عند رسول الله - صلى الله عليه وسلم - في صدر النهار ، قال : فجاءه قوم حفاة عراة مجتابي النمار - أو العباء - متقلدي السيوف ، عامتهم من مضر ، بل كلهم من مضر فتغير وجه رسول الله - صلى الله عليه وسلم - لما رأى بهم من الفاقة ، قال : فدخل ثم خرج ، فأمر بلالا فأذن وأقام الصلاة ، فصلى ثم خطب ، فقال : ( يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ) إلى آخر الآية : ( إن الله كان عليكم رقيبا ) [ النساء : 1 ] . وقرأ الآية التي في الحشر : ( ولتنظر نفس ما قدمت لغد ) تصدق رجل من ديناره ، من درهمه ، من ثوبه ، من صاع بره ، من صاع تمره - حتى قال - : ولو بشق تمرة " . قال : فجاء رجل من الأنصار بصرة كادت كفه تعجز عنها ، بل قد عجزت ، ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب ، حتى رأيت رسول الله - صلى الله عليه وسلم - يتهلل وجهه كأنه مذهبة ، فقال رسول الله - صلى الله عليه وسلم - : " من سن في الإسلام سنة حسنة ، فله أجرها وأجر من عمل بها بعده ، من غير أن ينقص من أجورهم شيء ، ومن سن في الإسلام سنة سيئة ، كان عليه وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيء " .
ஒரு நாள் முற்பகல் வேளையில் மதீனாவின் மஸ்ஜித் நபவீயில் மாநபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த தருணம் அது.
மக்காவில் அடர்த்தியாக வசித்து வரும் "முளர்" கோத்திரம் முளர் கோத்திரத்தின் தலைவர் உட்பட அனைத்து ஆண்களும் மாநபி (ஸல்) அவர்களைக் காண சமூகம் தந்திருந்தனர்.
மாநபி (ஸல்) அவர்கள், அந்த கோத்திரத்தாரின் நிலை கண்டு, அவர்களின் ஆடைகளின் கோலம் கண்டு, அவர்களின் தேகத்தின் மாற்றம் கண்டு கண் கலங்கினார்கள்.
எப்படி வாழ்ந்தவர்கள் இவர்கள்! இப்போதோ! வறுமையின் கோரப்பிடியில் சிக்கி எலும்பும் தோலுமாக, பராரிகளைப் போல, பார்க்கவே பரிதாபமாக
பொலிவுடன் காட்சியளிக்கும் பெருமானாரின் (ஸல்) முகம், புன்முறுவல் பூத்துக் குலுங்கும் பெருமானாரின் (ஸல்) வதனம் சிவக்கத்துவங்கியது, முகம் மாறியது,
பிலால் (ரலி) அவர்களை அழைத்து பாங்கு சொல்லுமாறு கூறி, மதிய நேரத்து ளுஹர் தொழுகையை நடத்தி முடித்து அருகில் இருந்த மிம்பர் மேடை மீதேறி
இறையச்சத்தை நினைவூட்டி, மறுமைநாளை கண்முன் கொண்டு வந்து,
வறுமையில் வாடி நிற்கும், வசதி வாய்ப்பில் திளைத்து இப்போது விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் "முளர்" கோத்திரத்தாருக்கு உதவிட, கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று தம் முன்னால் அமர்ந்திருக்கும் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.
ஒருவர் பின் ஒருவராக சென்று தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து கொண்டிருந்த வேளையில் ஒரு நபித்தோழர் தம் இரு கரங்களிலும் உணவுப் பொருட்கள், துணிமணிகள், வெள்ளிக்காசுகள் அடங்கிய இரு பை நிறைய தூக்க முடியாமல் தூக்கியவாறு கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இவரைக் கண்டு இன்னும் சில நபித்தோழர்கள் இது போன்று கொண்டு வரத் துவங்கவே மஸ்ஜித் நபவீயில் முளர் கோத்திரத்தார்களுக்கான நிவாரணப் பொருட்கள் இரு பெரும் குவியலாக மாறிப் போயிருந்தது.
ஒரு நபித்தோழர் இரு பை நிறைய கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்த பிறகே அங்கு இருந்த மற்றவர்களும் நிறைய கொடுக்கலாயினர்.
இந்தக் காட்சியை கண்ட மாத்திரத்திலேயே மாநபி (ஸல்) அவர்களின் முகம் அப்படியே "தங்கம் ஜொலிப்பது போல் ஜொலித்தது"
இதை உற்றுக் கவனித்த கருணையே உருவான காத்தமுன் நபி (ஸல்) அவர்கள் அப்போது தான் அங்கு கூடி இருந்த அந்த நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒட்டுமொத்த இந்த உம்மத்துக்குமான ஒரு உத்தரவை பிறப்பித்தார்கள்.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ،
"யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது".
2) அழகிய வார்த்தையை பேசுங்கள்!
قال محمد بن إسماعيل البخاري:- كنا عند إسحاق بن راهويه فقال: لو جمعتم كتابا مختصرا لصحيح سنة رسول الله؟
فوقع ذلك في قلبي فأخذت في جمع الجامع الصحيح، وخرجت الصحيح من ستمائة ألف حديث.
புகாரி ஹதீஸ் கிரந்தம் உருவான பிண்ணனி குறித்து இமாம் இஸ்மாயில் அல் புகாரீ ரஹ் அவர்கள் குறிப்பிடும் போது "ஒரு நாள் எங்கள் ஆசிரியப் பெருந்தகையோடு சபையொன்றில் அமர்ந்திருந்தோம். அப்போது எங்கள் ஆசிரியர் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) எங்களிடம் "நாம் ஏன் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னத்தை உள்ளடக்கிய சுருக்கமான, அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழி திரட்டு ஒன்றை தொகுக்கக் கூடாது?!" என்று கேட்டார்கள்.
அப்போது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தின் விளைவு தான் "ஸஹீஹுல் புகாரி" யாகும். ( நூல்: முகத்திமது ஃபத்ஹுல் பாரி )
நான்கைந்து நபர்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு சபையில் பேசப்பட்ட அழகிய வார்த்தை ஒன்று இந்த உம்மத்துக்கு ஒரு கொடையையே வழங்கியது.
3) இலட்சியத்தோடு வாழுங்கள்!
رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ
"இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!"
وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ
"இன்னும், பின்வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக!"
( அல்குர்ஆன்: 26: 83, 84 )
அல்லாஹ் லட்சியத்தை அடையச் செய்வான்.
1) உம்மத்தும், மார்க்கமும்...
اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ
நிச்சயமாக இப்ராஹீம் ஒரு தலைவராகவும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும், சத்திய வழியைச் சார்ந்தவராகவும் இருந்தார். மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
شَاكِرًا لِّاَنْعُمِهِؕ اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
(அன்றியும்,) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அவன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும், அவரை நேரான பாதையில் செலுத்தினான்.
وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَؕ
மேலும், நாம் அவருக்கு இவ்வுலகத்தில் நன்மையானதையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் நல்லவர்களில் ஒருவராக இருப்பார்.
ثُمَّ اَوْحَيْنَاۤ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
(நபியே!) பின்னர், "சத்திய வழியைச் சார்ந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு 'வஹீ' அறிவித்தோம்; அவர் இணைவைப்போரில் ஒருவராக இருந்ததில்லை ( அல்குர்ஆன்: 16: 120 - 123 )
2) முன்மாதிரியும்...
قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ
இப்ராஹீமிடம் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது;
( அல்குர்ஆன்: 60: 04 )
4) மரணத்திற்கு பின் உண்டான வாழ்க்கைக்கு தொடர்படியாக நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும் விதத்தில் நல்லறங்கள் செய்யுங்கள்.
اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும், (நன்மை தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும், நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும் நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். ( அல்குர்ஆன்: 36: 12 )
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: " إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته عالما علمه ونشره، وولدا صالحا تركه، ومصحفا ورثه، أو مسجدا بناه، أو بيتا لابن السبيل بناه، أو نهرا أجراه، أو صدقة أخرجها من ماله في صحته وحياته تلحقه بعد موته"، وهو حديث حسن، في صحيح مسلم
அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- " ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும் , ( எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் , அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும் , ( பள்ளிவாசல்கள் , மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும் , அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும் , வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும் , அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும் , அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்:
5) நற்சான்று பகர்பவர்களை உருவாக்குங்கள்!
عن أبي زهير الثقفي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «يوشك أن تعرفوا أهل الجنة من أهل النار» قالوا: بم ذاك يا رسول الله؟! قال: «بالثناء الحسن والثناء السيئ. أنتم شهداء الله، بعضكم على بعض» (صحيح سنن ابن ماجة).
உலகில் வாழும் காலத்திலேயே உங்களில் சுவனவாசியையும், நரகவாசியையும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? என்று நபி ஸல் அவர்கள் நபித்தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எப்படி அறிந்து கொள்வது? என்று வினவிய போது, மக்களிடம் இருந்து வெளிவரும் அழகிய புகழும், கெட்ட புகழும் தான்" என்று கூறிய பிறகு, உங்களில் ஒவ்வொருவரும் பிறருக்கு அல்லாஹ்விற்காக சான்று பகர்பவர்கள் ஆவீர்கள் " என்றார்கள். ( நூல்: இப்னு மாஜா )
6) பிறருக்கு நன்மையை அறிமுகம் செய்து வாழுங்கள்!
عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال: «جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال: إنه أبدِع بي فاحْمِلْني، فقال: ما عندي، فقال رجل: يا رسول اللَّه أنا أدله على من يحمله، فقال رسول اللَّه صلى الله عليه وسلم::- "من دل على خيرٍ فله مِثل أجرِ فاعِلِهِ
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களின் சமூகம் வந்து "தாம் கொண்டு வந்த வாகனத்தை தொலைத்து விட்டதாகவும், தம்முடைய ஊருக்கு செல்ல தமக்கு வாகன உதவி செய்யுமாறு நபி ஸல் அவர்களிடம் வேண்டி நின்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் "தம்மிடம் தற்போது ஏதும் வாகனம் இல்லை" என்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள ஒரு நபித் தோழர் "இவருக்கு வாகன ஏற்பாட்டைச் செய்து தரும் ஒரு மனிதரைப் பற்றி நான் அறிவேன். அவரிடம் இவரை நான் அழைத்துச் செல்கின்றேன்". என்றார்.
அப்போது, நபி ஸல் அவர்கள் "ஒருவர் ஒரு நன்மையான செயல் ஒன்றை அறிவித்து தருகின்றார் எனில், அதைச் செய்தவருக்கு கிடைக்கும் அதே கூலி அதை அறிவித்துக் கொடுக்கும் இவருக்கும் கிடைக்கும்" என்றார்கள்.
7) சிரமமாக இருந்தாலும் நன்மையான காரியங்களை விரும்பி செய்து வாருங்கள்!
حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَوَّلُوا، إِلَى قُرْبِ الْمَسْجِدِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُعْرَى الْمَدِينَةُ، وَقَالَ "" يَا بَنِي سَلِمَةَ. أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ "". فَأَقَامُوا.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் அருகே இடம்பெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலி செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூ சலிமா குலத்தாரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடித் தடங்களின் நன்மைகளை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.ஆகவே, பனூ சலிமா குலத்தார் (தாம் முன்பு வசித்துக்கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர். ( நூல்: புகாரி )
8) எவருக்கும் அநியாயம் செய்து விடாமல் வாழ வேண்டும்.
قال رسول الله لأصحابه: «لَوْ خَرَجْتُمْ إلى الْحَبَشَةِ؛ فَإِنَّ بِهَا مَلِكًا لاَ يُظْلَمُ عِنْدَهُ أَحَدٌ». فلم يعلق رسول الله على شيء فى حياة هذا الرجل ولا دينه، إنما فقط علق على عدله.
தமது 14 நபித்தோழர்களை முதன் முதலாக அபீ சீனியாவை நோக்கி ஹிஜ்ரத் பயணத்திற்காக அனுப்பி வைத்த போது 'நீங்கள் அபீ சீனியாவிற்கு பயணமாக போகின்றீர்கள். அங்கே "எவருக்கும் அநீதம் இழைக்காத ஒரு மன்னர் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்" என்றார்கள்.
ஒருவரைப் பற்றி அடையாளப்படுத்தி சொல்வதற்கு எந்தனையோ அம்சங்கள் இருந்தும் கூட நபி ஸல் அவர்கள் அவரிடம் காணப்பட்ட ஒரு அழகிய குணத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தினார்கள்.
9) பாவச் சுமைகள் இல்லாத வாழ்வு வாழ வேண்டும்..
لِيَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِ وَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ
மறுமை நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாகச் சுமக்கட்டும்; மேலும், அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழிகெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்): அறிந்து கொள்ளுங்கள்! இவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது. ( அல்குர்ஆன்: 16: 25 )
ஆகவே, உலகிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களுக்கு அழைத்துச் செல்லும் "அழகிய நற்பண்புகளை தேர்ந்தெடுத்து நமது வாழ்க்கையை நாம் செதுக்கிக் கொள்வோம்.
வல்ல ரஹ்மான் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
இந்த வாரமும் ஹரம் ஷரீபின் பயானை தங்களுடைய பாணியில் கேட்க விரும்புகிறோம்!
ReplyDelete