Tuesday, 4 February 2025

பண்பாட்டுச் சீரழிவு ஒரு சமூகத்தின்அடையாளத்தை அழித்து விடும்!! (காதலர் தின சிந்தனை – 2025)

 

பண்பாட்டுச் சீரழிவு ஒரு சமூகத்தின்அடையாளத்தை அழித்து விடும்!!

(காதலர் தின சிந்தனை – 2025)


இன்றைய இளைஞர் சமூகம் மேற்குலக கலாச்சார மாற்றங்களால் கவரப்பட்டு, தங்களின் பண்பாடுகளை, விழுமியங்களை, அடையாளங்களை இழந்து வரும் போக்கு அதிகரித்திருக்கின்றது.

அப்படியொரு கலாச்சாரச் சீரழிவு தான்  பிப்ரவரி 14 -ம் தேதி  கொண்டாடப்படும் "காதலர் தினம்”.

வணிகமயமாகிவிட்ட, உலக மயமாக்கப்பட்ட இந்த உலகில் வருடத்தில் 365 நாட்களில் சரி பாதி நாட்கள் ஏதோ ஒன்றை காரணம் காட்டி கொண்டாட்ட தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம்.

சில கொண்டாட்ட நாட்களுக்கு பின்னால் வலிமையான, நியாயமான காரணங்கள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், நியாயமான காரணங்கள் இருக்கிறது என்பதற்காக நாம் சில தினங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக இன்று வலிந்து திணிக்கப்பட்ட ஒரு தினமாக "கலாச்சார சீரழிவிற்கு" முண்ணனியில் இருக்கும் தினமாக இந்த "காதலர் தினம்" மாறி விட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி ஒரு தினம் இருப்பதே தெரியாமல் பல தலைமுறையினர் வாழ்ந்து சென்று விட்டனர்.

சமீப காலமாக இது போன்ற கலாச்சார சீரழிவுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் மாறிக் கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர் சமூகம் மேற்குலக கலாச்சார மாற்றங்களால் கவரப்பட்டு, தங்களின் இஸ்லாமிய அடையாளங்களை இழந்து வரும் போக்கும் அதிகரித்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

நாம் யார்? நமது மார்க்கம் எப்படிப்பட்ட மார்க்கம்? நமக்கு அருளப்பட்டிருக்கும் அல்குர்ஆன் எப்படிப்பட்டது? நமது வாழ்வியல் வழிகாட்டியான, நமது வாழ்வியல் முன்மாதிரியான நமது நபி ஸல் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை எல்லாம் இன்றைய தலைமுறையினர் மறந்து விட்டனர்.

ஆதலால் தான் மிகவும் எளிமையாக பிற சமய, பிற சமூக, பிற கலாச்சார பண்பாடுகளை தங்களுடைய கலாச்சாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.

அதன் போக்கில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு அது தான் சிறந்த கலாச்சாரம் என்று பெருமையாக பேசிக் கொள்கின்றனர். அதற்கு முன்னுரிமை கொடுத்து அதையே பின்பற்றி வருகின்றனர்.

1)   நம்முடைய மார்க்கம் இஸ்லாம் பாதுகாக்கப்பட்டது!

اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ

நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (பாதுகாக்கப்பட்ட) மார்க்கமாகும்; ( அல்குர்ஆன்: 3: 19 )

 

 اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ 

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டேன்; மேலும், உங்கள்மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்.

( அல்குர்ஆன்: 5: 3 )

2)   நம்முடைய குர்ஆன் பாதுகாக்கப்பட்டது!

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ் வேதத்தை (உம்மீது) இறக்கிவைத்தோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம். ( அல்குர்ஆன்: 15: 9 )

3)   நம்முடைய நபி ஸல் அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள்!

முஸ்லிம்களுடைய சட்டத்தை தெரிவுப்படுத்தி, நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹ்வால் வழிகாட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டவர்கள்.

மன இச்சைகளிலிருந்தும், சுய விருப்பங்களை மார்க்கத்திற்குள் நுழைத்து விடுவதிலிருந்தும் அல்லாஹ் விரும்பாததை அல்லாஹ்வுடைய தீனில் சொல்லி விடுவதிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள்.

وَالنَّجْمِ إِذَا هَوَى (1) مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى (2) وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. ( அல்குர்ஆன்: 53 : 1,4 )

4)   நாம் பாதுகாக்கப்பட்டவர்கள்!

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்!, அவனுடைய மார்க்கத்தால் 

பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்!, அவனுடைய வேதத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்! அவனுடைய நபியின் வழிகாட்டுதலால் நாம் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்!

 

ஆகவே, நம்முடைய பாதுகாப்பு என்பது அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணுவதிலும், நடைமுறை படுத்துவதிலும் தான் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا

எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம். (அல்குர்ஆன் 65:8)

அல்லாஹ்வுடைய இந்த வசனம் ஆயிரத்தி நாணூறு ஆண்டுகளுக்கு முன்பு இறக்கப்பட்டது.  அல்லாஹ்வின் இந்த வாக்கு இன்றளவிலும் உயிரோடு இருந்து இனி மறுமை வரையிலும் இருந்து நம்மை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அல்லாஹ்வை நம்பக்கூடிய ஒரு முஃமினின் உள்ளத்திற்கு மிகப் பெரிய அச்சத்தை அல்லாஹ்வின் எச்சரிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்த வசனம்.

காதலர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்கள் பொது இடங்களில் அநாகரிகமாக ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதும், வெட்கம் இல்லாமல் மது அருந்திவிட்டு ஆணும் பெண்ணும் கும்பலாக நெருக்கியடித்து உரசிக் கொண்டும், ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டும் ஆடி மகிழ்வதும் தான் "காதல்" க்கான அடையாளமாக, அங்கீகாரமாக கருதுகின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் இது போன்ற அர்த்தமற்ற, 

அனர்த்தமான கொண்டாட்டங்களுக்கு அடிப்படை காரணம் அவர்களிடம் வெட்கம் எடுபட்டு போனதும், தங்கள் மனம் போன போக்கில் தங்களுடைய மனோ இச்சையை பின்பற்றும் பண்பு மிகைத்து விட்டதும் தான்.

மனோ இச்சையை பின்பற்றுதலின் ஆபத்தும்... தவிந்து கொள்வதன் பலனும்...

  اَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَيْهِ وَكِيْلًا 

தன் மனோ இச்சையையே தன் (வணக்கத்திற்குரிய) தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? ( அல்குர்ஆன்: 25: 43 )

  يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ

(நாம் அவரிடம் கூறினோம்:) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே, மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! (ஏனெனில், அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுத்து விடும்; நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுகிறார்களோ, அவர்களுக்குக் கேள்விக்கணக்குக் கேட்கப்படும் நாளை (அவர்கள்) மறந்துவிட்டமைக்காக மிகக் கொடிய வேதனையுண்டு." ( அல்குர்ஆன்: 38: 26 )

أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ

(நபியே!) எவன் தன்னுடைய மனோ இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக்கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும், இதயத்தின் மீதும் முத்திரையிட்டு - இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான்; எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ( அல்குர்ஆன்: 45: 23 )

  اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‏

எனவே, எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ இன்னும், (எவர்கள்) தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகிறார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா? ( அல்குர்ஆன்: 47: 14 )

  وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ‏

فَاِنَّ الْجَـنَّةَ هِىَ الْمَاْوٰى

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி, (தன்) மனதை இச்சைகளை விட்டும் விலக்கிக் கொண்டானோ-,நிச்சயமாக (அவனுக்குச்) சுவர்க்கம் அதுதான் தங்குமிடமாகும்.( அல்குர்ஆன்: 79: 40, 41 )

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (போரிலிருந்து திரும்பிய) போர் வீரர்கள் குழு வந்தனர். அப்போது நபியவர்கள் நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதின் பக்கம் வருகை அளித்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் பெரிய ஜிஹாத் என்றால் எது என்று கேட்க ஒரு அடியான் தனது மனோ இச்சையை எதிர்த்து போர்புரிவதே (பெரிய ஜிஹாத்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.” ( நூல் : பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் பாகம் 1 பக்கம் 388 )

عن شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي اللّٰهِ. رواه الترمذي

எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி எவர் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ் வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’’ . ( நூல்: இப்னுமாஜா )

 

عَنْ اَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: وَاَمَّا الْمُهْلِكَاتُ: فَشُحٌّ مُطَاعٌ، وَهَوًي مُتَّبَعٌ، وَاِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ. ورواه البزار

வழிபடக்கூடிய கருமித்தனம், பின்பற்றப்படக்கூடிய மனோ இச்சை, தன்னைத்தானே சிறந்தவனாகக் கருதுதல் ஆகிய மூன்று காரியங்களும் மனிதனை நாசமாக்கக் கூடியவைஎன்று நபி அவர்கள் கூறினார்கள்.

( நூல்: பஸ்ஸார் )

மனோ இச்சையின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெற...

காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B](க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி

இதன் பொருள்: இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். ( நூல்: அஹ்மத் )

வெட்க உணர்வு வேண்டும்!

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ زُهَيْرٍ ، حَدَّثَنَا مَنْصُورٌ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ.

மக்கள் பெற்றுக் கொண்ட முந்தைய நபித்துவத்தின் முக்கியச் செய்தி - அதாவது - முன்வந்த நபிமார்கள் அனைவரும் கூறி வந்த செய்தி,  "உனக்கு வெட்கமில்லையானால் நீ நாடியதைச் செய்து கொள்!," என்பது தான், என்று நபி (ஸல்) கூறியுள்ளார்க்ள.  ( நூல்: புகாரி )

عن سلمانَ قال: (إنَّ اللهَ تعالى إذا أراد بعبدٍ شَرًّا أو هَلَكةً نزَع منه الحَياءَ،

அல்லாஹ் ஓர் அடியானை நாசமாக்க நாடி விட்டால் அவனை முதலில் வெட்கமிழக்கச் செய்கிறான், ... கடைசியாக அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..  ( நூல்: இப்னுமாஜா )  

 

قال رسول الله صلى الله عليه وسلم” إن لكل دين خلقا وخلق الإسلام الحياء” (رواه ابن ماجه في سننه وحسنه الألباني).

நபிகளார் நவின்றார்கள்: ஒவ்வொரு மார்க்கத்திற்கும் தனியே ஒரு சிறப்பு குணமுண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு குணம் வெட்கம் ஆகும்’. ( நூல்: இப்னுமாஜா, தப்ரானி )

 قال العلّامة ربيع بن هادي المدخلي حفظه الله تعالى:-

 والله لا يرتكب المعاصي والجرائم والظلم إلا من قلّ حياؤه أو عدم، فالحياء أمر عظيم.

ومن فوائده الجليلة: أنك ربما تهمّ بالمعصية فتذهب وتمشي إليها، ثم تتذكر وتقول: إن ربّي يراني ويسمعني فتخجل وتخاف في نفس الوقت، فيدفعك ذلك الحياء والخوف إلى الاحجام عن فعلها.

فالحياء رادع عظيم، ووازع عظيم، الحياء والخوف مع الإيمان الصادق. فعلينا ان نقوي إيماننا وأن نغذي الحياء بدراسة سير الأنبياء عليهم الصلاة والسلام .

[ المجموع شرح عقيدة السلف للصابوني، ٢/١٤٦ ]

அல்லாமா ரபீஉ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹஃபிழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-அல்லாஹ்வின் மீது ஆணையாக! வெட்கம் அறவே இல்லாதவன், அல்லது அது குறைவாக உள்ளவனே பாவங்களையும், குற்றச் செயல்களையும், அநியாயத்தையும் செய்வான். எனவே, வெட்கம் என்பது முக்கியமானதோர் விஷயமாகும்!.

சிலவேளை, நீ ஒரு பாவத்தைச் செய்ய நாடி அதனிடம் செல்கிறாய்; பின்னர் உனக்கு ஞாபகம்  வந்தவுடன், 'எனது இரட்சகன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்; என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்!' என உனக்குள் நீ சொல்லிக்கொண்டு அந்நேரமே வெட்கமும் படுகிறாய்; அச்சமும் கொள்கிறாய் என்றால் இந்த வெட்கமும் அச்சமும்தான் அப்பாவத்தைச் செய்வதை விட்டும் உன்னைத் தடுத்து நிறுத்தி விடுகிறது! இது, வெட்கப் பண்பு பெற்றுத் தருகின்ற சிறந்த பயன்களில் ஒன்றாகும்.

ஆதலால், வெட்கம் என்பது பாவச் செயல்களைக் கட்டுப்படுத்தி, அவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததொரு விஷயமாகும். இந்த  வெட்கமும், அச்சமும் உண்மையான ஈமானுடன்தான் இருந்து கொண்டிருக்கும். எனவே, நமது ஈமானை நாம் பலப்படுத்த வேண்டியதும், நபிமார்களின் வரலாறுகளைப் படிப்பதன் மூலம் வெட்கப் பண்பை நாம் வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டியதும் நமக்கு மிக அவசியமாகும்!”. ( நூல்: 'அல்மஜ்மூஉ ஷர்ஹு அகீததிஸ் ஸலஃப்' லிஸ்ஸாபூனீ (ரஹ்).... }

 

காதல் உணர்வை இஸ்லாம் ஏற்க வில்லையா?

மனித உணர்வுகளில் காதல் இன்றியமையாதது. உயிர்களுக்குள் காதல் பரிமாற்றம் அவசியம். ஆனால்,காதல் உணர்வை இஸ்லாம் திருமணம் என்ற சமூக அங்கீகாரத்துடனே ஏற்றுக் கொள்கிறது.

அதுவும் கூட இஸ்லாமிய ஒழுங்குகளுக்கு உட்பட்டு இருக்கும் போது மட்டுமே அங்கீகரிக்கின்றது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

روى عبد الله بن الأخنس، عن عمرو بن شعيب، عن أبيه، عن جدّه، قال: كان رجل يقال له مرثد بن أبي مرثد، وكان يحمِلُ الأسرى من مكّة حتى يأتيَ بهم المدينة، قال: وكان بمكّة بَغيٌّ يقال لها عناق، وكانت صديقة له، وكان وعد رجلًا أن يحمِلَه من أَسرى مكّة، قال‏: فجئت حتى انتهيت إلى حائط من حيطان مكّة في ليلة قَمْراء، فجاءت عناق فأَبْصَرَت سواد ظِلّي بجانب الحائط، فلما انْتَهَتْ إِليَّ عرفتني فقالت: مرثد! قلت: مرثد! قالت: مرحبًا وأهلًا، هلم فبتَّ عندنا اللّيلة. قال‏: قلت: يا عناق؛ إنّ الله حرَّم الزّنا قالت: يا أهل الخباء، هذا الذي يحمل الأسْرَى: قال: فاتبعني ثمانية رجال وسلكت الخندمة حتى انتهيت إلى كَهْفٍ أو غارٍ، فدخلته، وجاءوا حتى قاموا على رأسي، وأعماهم الله عنّي، ثم رجعوا ورجعت إلى صاحبي، فحملْتُه، وكان رجلًا ثقيلًا حتى انتهيت إلى الأذخر، ففككت عنه كبْلَه، ثم جعلت أحمله حتى قدمت المدينة، فأتيتُ رسولَ الله صَلَّى الله عليه وسلم، فقلت: يا رسولَ الله، أنكح عناقًا؟ فأمسك رسولُ الله صَلَّى الله عليه وسلم فلم يردّ عليّ شيئًا حتى نزلت هذه الآية: {الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً...‏}‏ [النور 3] ‏الآية. فقرأها رسول الله صَلَّى الله عليه وسلم عليّ وقال: "لَا تَنكِحهَا.

மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் அல் ஃகனவீ (ரலி), இவர்கள் ஆஸிம் (ரலி) அவர்களோடு ஷஹீதாக்கப் பட்டவர்களில் ஒருவர். பத்ர் மற்றும் உஹத் யுத்தகளங்களில் கலந்து கொண்ட தீரர்களில் ஒருவர்.

இவர் கைதிகளாகவும், பிணையாகவும் பிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வீரராக அன்றைய அரபுலகத்தில் அறியப்பட்டார்கள்.

அநியாயமாக பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற கைதிகளை எதிரிகளின் இடத்திற்கே சென்று அசாத்திய தைரியத்தோடு மீட்டு வரும் தைரியசாலி. அதற்காக சில திர்ஹத்தை சம்பந்த பட்டவர்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.

ஒரு நாள் அவர்கள் ஒருவரை மீட்டெடுக்க இரவு நேரத்தில் ஓரிடத்தில் பதுங்கியிருந்த போது அவர்களின் ஜாஹிலிய்யா காலத்து காதலி அனாக் என்பவளைச் சந்திக்க நேரிடுகின்றது.

இவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அன்று தான் அவளைச் சந்திக்கின்றார்கள். தற்போது அவள் தகாத செயல் செய்யும் விபச்சாரியாக மாறிவிட்டிருந்தாள்.

அந்த இரவிலும் இவரை அடையாளம் கண்டு கொண்ட அனாக் இன்றிரவு தம்மோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றாள்.

அனாக்! இஸ்லாம் விபச்சாரத்தை தடை செய்திருக்கின்றது அது மானங்கெட்ட செயல் என்றும், அதன் அருகே கூட நெருங்கக் கூடாது எனவும் தடை செய்திருக்கின்றது. ஆகவே தூர விலகிச் செல் என்று கூறி விரட்டி விட்டார்கள் மர்ஸத் (ரலி) அவர்கள்.

 நம்மை காசு பணம் கொடுத்து அழைக்க ஆயிரம் பேர் காத்து கிடக்க, நாம் வலிய அழைத்தும் வராமல் நம்மை அலட்சியம் செய்து விரட்டி விடுகிறாரே எனும் கோபத்தில் அவரை அவர் எந்த இடத்தில் மறைந்து கைதியை தூக்கிச் செல்ல வந்திருந்தாரோ அவர்களின் பெயர் கூறி அழைத்து இதோ மர்ஸத் உங்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு கைதியை களவாடிச் செல்ல வந்திருக்கின்றார்  என்று கூறி  சிக்க வைத்தாள்.

அவர்கள் துரத்தி வர மர்ஸத் (ரலி) அவர்கள் அங்கிருந்து தப்பி, அருகே இருந்த ஒரு குறுகலான மலைக்குன்றில் ஒளிந்து கொண்டார்கள்.

அவரைத் தேடி வந்த அந்த நபர்கள் மர்ஸத் (ரலி) அவர்கள் ஒளிந்திருந்த அந்த மலைக்குன்றின் மீது வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சிறுநீர் கழித்தனர்.

மலைக்குன்றின் பின் புறம் ஒளிந்திருந்த மர்ஸத் (ரலி) அவர்களின் தலை முழுக்க சிறுநீர் நன்றாக நனைத்து விட்டிருந்தது.

துரத்தி வந்தவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்து நடந்த சம்பவத்தை நபிகளாரிடம் விளக்கிக் கூறி தாம் அனாக்கை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னார்கள்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் மர்ஸத் (ரலி) அவர்கள் கேட்க, அப்போதும் நபிகளார் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

பின்னர் அண்ணலாரின் சபையிலிருந்து மர்ஸத் (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.

அவர்கள் சென்ற பின்னர், அல்லாஹ் நூர் அத்தியாயத்தின் 3-ஆம்  வசனத்தை இறக்கியருளினான்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், மர்ஸத் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண்ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணையோ தவிர வேறெவரையும் திருமணம் செய்ய வேண்டாம்.

விபச்சாரம் செய்யும் பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இணைவைப்பாளனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடுக்கப்பட்டிருக்கின்றது  எனும் (அல்குர்ஆன்:24:3) வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

பின்பு அனாக்கை நீர் திருமணம் செய்ய வேண்டாம்  என்று கூறினார்கள்.

( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:7, பக்கம்:116., அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:382,383., அபூ தாவூத், கிதாபுன் நிகாஹ் )

காதல் உணர்வை விட ஈமானிய உயிர்ப்பு மேலானது!

அறிவுக் கூர்மையும் உத்வேகமும் கொண்ட உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சத்திய இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லோரிடமும் தெளிவாக எடுத்துக் கூறி வந்தார்கள்.

أنس رضي الله عنه: (جاء أبو طلحة فخطب أم سليم، فكلمها في ذلك، فقالت: يا أبا طلحة .. ما مثلك يرد، ولكنك امرؤ كافر، وأنا امرأة مسلمة لا يصلح لي أن أتزوجك، فقال: ما ذاك مهرك؟ قالت: وما مهري؟ قال: الصفراء والبيضاء , قالت: فإني لا أريد صفراء ولا بيضاء .. أريد منك الإِسلام [أتزوجك وأنت تعبد خشبة نجرها عبدي فلان؟] "فإن تسلم فذاك مهري، ولا أسألك غيره". قال: فمن لي بذلك؟ قالت: لك بذلك رسول الله - صلى الله عليه وسلم -، فانطلق أبو طلحة يريد النبي - صلى الله عليه وسلم -ورسول الله - صلى الله عليه وسلم - جالس في أصحابه- فلمّا رآه قال: جاءكم أبو طلحة غرة الإِسلام بين عينيه. فأخبر رسول الله - صلى الله عليه وسلم - بما قالت أم سليم، فتزوجها على ذلك

كانت تحت مالك بن النضر والد أنس بن مالك في الجاهلية، فغضب عليها وخرج إلى الشام، ومات هناك. فخطبها أبو طلحة الأنصاريّ وهو مشرك فقالت: أما إني فيك لراغبة، وما مثلك يُرَدّ، ولكنك كافر، وأنا امْرَأَة مسلمة،

حدثنا أبو جعفر مُحَمَّد بن مسلمة الواسطي، حدثنا يزيد بن هارون، حدثنا حماد بن سلمة، عن ثابت وإسماعيل بن عَبْد الله بن أبي طلحة، عن أنس: أن أبا طلحة خطب أم سليم فقالت: يا أبا طلحة، ألست تعلم أن إلهك الذي تعَبْد ينبت من الأرض، ينجرها حبشي بني فلان؟ قال: بلى. قالت: أفلا تستحي تعَبْد خشبة؟! فقال: ما ذاك مهرك؟ قالت: وما مهري؟ قال: الصفراء والبيضاء , قالت: فإني لا أريد صفراء ولا بيضاء .. أريد منك الإِسلام  فإن تسلم فذاك مهري، ولا أسألك غيره". قال: فمن لي بذلك؟ قالت: لك بذلك رسول الله - صلى الله عليه وسلم -، فانطلق أبو طلحة يريد النبي - صلى الله عليه وسلم -ورسول الله - صلى الله عليه وسلم - جالس في أصحابه- فلمّا رآه قال: جاءكم أبو طلحة غرة الإِسلام بين عينيه. فأخبر رسول الله - صلى الله عليه وسلم - بما قالت أم سليم، فتزوجها على ذلك

உம்மு ஸுலைம் (ரலி) ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாக்கியசாலியான பெண் ஆவார். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விரும்பாத இவர்களின் கணவர் மாலிக் பின் நஜர் உம்மு ஸுலைம் அவர்களிடம் கோபித்துக் கொண்டு ஷாமிற்குச் சென்று விட்டார்.

இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவர் இறந்தும் விட்டார். இப்போது, பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த அபூதல்ஹா என்பவர் உம்மு ஸுலைம் அவர்களை திருமணம் செய்ய விரும்புவதாக தூது அனுப்பினார்.

அபூதல்ஹாவை நேரில் வரவழைத்த உம்மு ஸுலைம் அவர்கள் அவரிடம் அபூதல்ஹாவே! உம்மை திருமணம் செய்யும் விஷயத்தில் எமக்கும் உளப்பூர்வமான ஆசை உண்டு. ஆனால், நான் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன்.

ஆனால், நீரோ! இறை நிராகரிப்பாளராக இருக்கின்றீர்கள். இந்நிலையில் என்னை நீங்கள் திருமணம் செய்வதற்கு சாத்தியமே இல்லை.

அபூதல்ஹாவே! நீங்கள் என்றாவது உங்கள் கடவுளர்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததுண்டா? நீங்கள் வணங்குகின்ற கற்சிலையின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்ந்ததுண்டா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! எங்கோ ஒரு நிலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பாறையை இன்ன கோத்திரத்தைச் சார்ந்த ஒரு ஹபஷீ அடிமையான ஒரு சிற்பியல்லவா சிலையாக வடித்திருக்கின்றான்?

நீங்கள் அதைப் போய் தெய்வமாக, காக்கும் கடவுளாக வணங்குகின்றீர்களே? எந்தச் சக்தியும் இல்லாத, எந்த வலிமையும் கொண்டிராத இந்த கல்லுக்கு முன்னால் தலைசாய்த்து வணங்குகின்றீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அபூதல்ஹா தவறென்பது போல் ஆம் என்று தலையசைத்தார்.

உன்னை நான் திருமணம் செய்தால் என்ன மஹர் தர வேண்டும்? என்று அபூதல்ஹா (ரலி) அவர்கள் கேட்க,எனக்கான மஹராக எதைத் தருவதற்கு முடிவு செய்துள்ளாய்? என்று உம்மு ஸுலைம் (ரலி) பதிலுக்கு வினவ, தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ தரலாம் என்று முடிவு செய்துள்ளேன்" என்றார் அபூதல்ஹா.

"உம்மிடம் இருந்து எனக்கு தங்கமோ, வெள்ளியோ தேவை இல்லை. மாறாக, நீர் இஸ்லாத்தை தழுவதையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு மஹராக நீர் தந்தால் போதும்! வேறெதுவும் எனக்கு தேவையில்லை" என்றார் உம்மு ஸுலைம் (ரலி).

"நாம் பேசிக் கொண்ட இந்த பேச்சுக்கு யார் பொறுப்பு" என்று மீண்டும் அபூதல்ஹா வினவியதற்கு, "மாநபி ஸல் அவர்களே பொறுப்பாவார்கள்" என்று அமைதியாக கூறினார்கள் உம்மு ஸுலைம் (ரலி).

உம்மு ஸுலைம் அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் அவரை துளைத்தெடுத்திருக்க வேண்டும். மூன்று நாள் மாநபி ஸல் அவர்களின் சபை நோக்கி சென்றார்கள். பெருமானார் ஸல் அவர்கள் அபூதல்ஹாவைப் பார்த்ததும் தோழர்களிடத்தில் "இதோ! அபூதல்ஹா வருகிறார். அவரின் கண்களில் இஸ்லாத்தின் தேட்டத்தை நான் காண்கிறேன்" என்று கூறினார்கள்.

மாநபி (ஸல்) அவர்களின் அருகே வந்த அபூதல்ஹா உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுடன் நடந்த உரையாடல் மொத்தத்தையும் கூறி விட்டு, மாநபி ஸல் அவர்களின் கரங்களைப் பற்றி கலிமா ஷஹாதாவை மொழிந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.

அவர்கள் மொழிந்த ஷஹாதாவையே மஹராக வைத்து மாநபி ஸல் அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.  ( நூல்:  உஸ்துல் காபா, தபகாத் இப்னு ஸஅத் )

இன்று காதலின் பெயரால் ஈமானைத் தூக்கி எறிந்து விட்டு கண்டவர்களுடனும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும் நமது சமூகத்தின் இளைஞர்களும், யுவதிகளும் மேற்கூறிய மர்ஸத் இப்னு அபீ மர்ஸத் (ரலி) அவர்கள் மற்றும் உம்மு ஸுலைம் (ரலி) ஆகியோரின் வரலாற்றில் இருந்து பாடமும் படிப்பினையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பெண் மீது கொண்ட காதலால் ஈமானை இழந்தவர்....

كان ببغداد رجل يقال له صالح المؤذن، أذّن أربعين سنة وكان يعرف بالصلاح.

صعد صالح يوما إلى المنارة ليؤذن فرأى بنت رجل نصراني كان بيته إلى جانب المسجد فافتتن بها فجاء فطرق الباب فقالت: من؟ فقال: أنا صالح المؤذن.

ففتحت له، فلما دخل ضمّها إليه، فقالت: أنتم (المسلمون) أصحاب الأمانات فما هذه الخيانة؟!

فقال: إن وافقتِني على ما أريد، وإلا قتلتُك.

فقالت: لا إلا أن تترك دينك، فقال: أنا بريء من الإسلام ومما جاء به محمّد.

ثم دنا إليها فقالت: إنما قلتَ هذه لتقضي غرضك ثم تعود إلى دينك فكُلْ من لحم الخنزير، فأكل، قالت: فاشرب الخمر فشرب فلما دبّ الشراب فيه (وسكر)، دنا إليها فدخلت بيتا (غرفة) وأغلقت الباب وقالت: اصعد إلى السطح حتى إذا جاء أبي زوّجني منك فصعد فسقط فمات فخرجت فلفّته في مسح فجاء أبوها فقصّت عليه القصة فأخرجه في الليل فرماه في السكّة فظهر حديثه فرمي في مزبلة (ذم الهوى لابن الجوزي رحمه الله صـ ٤٥٩)

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- ஈராக்கின் பக்தாத் நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் குறித்த செய்தி எனக்குக் கிடைத்தது. 'முஅத்தின் ஸாலிஹ்' ௭ன்று அவர் அழைக்கப்படுகின்றார். நாற்பது ஆண்டுகளாக  அதான் சொல்லிக்கொண்டிருந்த அவர், ஸாலிஹான நல்ல மனிதர் என்றும் அறியப்படுகின்றார். 

ஒருநாள், பாங்கு சொல்வதற்காக 'மனாரா'வுக்கு ஏறிய அவர்,  கிறிஸ்தவொருவரின் மகளைக் கண்டுவிட்டார். அந்தக் கிறிஸ்தவரின் வீடு பள்ளிவாசலுக்குப் பக்கத்திலேயே இருந்தது.

உடனே அப்பெண் மீது காதல் மோகம் கொண்டு, அவள் வீட்டுக் கதவைப் போய் தட்டினார். உள்ளே இருந்து 'யார் நீங்கள்!' என்று அவள் கேட்க, 'நான் முஅத்தின் ஸாலிஹ்!' என்று அவர் கூறினார். அவருக்காக அவள் கதவைத் திறந்ததும் உள்ளே சென்ற அவர், அவளைத் தன் பக்கம் இழுத்து இறுக அணைத்துக்கொண்டார்.

அப்போது அவள், “நீங்களெல்லாம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்; அப்படியிருக்க ஏன் இந்த நம்பிக்கைத் துரோகம்?” என்று கேட்டாள். என் ஆசைக்கு நீ இணங்க வேண்டும்; இல்லாவிட்டால், உன்னைக் கொன்று விடுவேன்!என்றார் அவர். இல்லை; அப்படியெல்லாம் நீங்கள் செய்துவிட வேண்டாம். உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு மதம் மாறிவிடுங்கள்!என்று அவள் கூறியதும் உடனே அவர், “நான் இஸ்லாத்திலிருந்தும், நபியவர்கள் கொண்டு வந்த போதனைகளிலிருந்தும் நீங்கி விட்டேன்என்று  கூறினார்.

அதற்கு அவள், “உங்கள் குறிக்கோளை நிறைவேற்றத்தான் இதை நீங்கள் கூறியுள்ளீர்கள்; பின்னர் உங்கள் மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிடுவீர்கள்! (நீங்கள் உண்மையாளராக இருந்தால், இந்த) பன்றி இறைச்சியைச் சாப்பிடுங்கள்!என்றதும் அவர் சாப்பிட்டார்; “சாராயத்தைக் குடியுங்கள்!என்றதும் அவர் குடித்தார். போதை அவரில் ஊடுருவியபோது அவளிடம் அவர் நெருங்கினார். அப்போது அவள்  வீட்டிற்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு, “வீட்டின் மேல் மாடிக்கு ஏறிக்கொள்ளுங்கள்; என் தந்தை வந்ததும் என்னை உங்களுக்குத் திருமணம் முடித்துத் தருவார்என்று கூறினாள். உடனே அவர் மேல் மாடிக்கு ஏறினார்; கீழே விழுந்தார்; மரணித்துப் போனார்.

வெளியே வந்த அவள் ஆடையொன்றுக்குள் அவரைச் சுற்றினாள். தன் தந்தை வந்ததும் நடந்த சம்பவத்தை அவருக்குத் தெரிவித்தாள். இரவு நேரத்தில் அவர் உடலை வெளியே கொண்டு வந்த அவள் தந்தை, அதைத் தெருவில் வீசிவிட்டார். குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடந்த அவரின் செய்தி உடனே மக்களுக்குத் தெரிய வந்தது. { நூல்: 'தம்முல் ஹவா' லிப்னில் ஜவ்ஸீ, பக்கம்:409 }

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் சமூகத்தின் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் இதயங்களை இஸ்லாத்திற்காக விரிவாக்கித் தந்தருள்வானாக!

இஸ்லாமிய வாழ்க்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு வாழும் மேன்மக்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment