சமூக ஊடகங்களும்… இஸ்லாம் கூறும் ஒழுங்குகளும்….
சமூக ஊடகங்களின்
பயன்பாடு என்பது இன்றைய
உலகில் தவிர்க்க முடியாத
ஒன்றாக மாறி விட்டது.
மனித சமூகத்தின்
அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக
ஆகி விட்டது. இன்னொரு
புறம் இந்த சமூக
ஊடகங்களால் பல்வேறு சீரழிவுகளையும் மனித சமூகம்
எவ்வித பாலின பாகுபாடின்றி,
வயது வித்தியாசமின்றி, பாமரன்,
பணக்காரன் என்ற வித்தியாசம்
இன்றி, ஆட்சியாளன், அதிகார
வர்க்கம் சாமானியன் என்ற
பாகுபாடின்றி சந்தித்து வருகின்றது.
மனித சமூகத்திற்கு
கிடைத்த மாபெரும் அருட்கொடைகளில் இன்றியமையாத ஒன்றுதான் நாம் இன்று அனுபவித்து
வருகிற தொழில்நுட்ப சாதனங்கள்.
ஆம்! அதை ஒரு அருட்கொடையாக நோக்கினால் அது மாபெரும்
அருட்கொடைதான். நிச்சயமாக ஒரு சமூகம் அதை மிகவும் பயனுள்ளதாக
பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் காணும் போது அது மாபெரும் அருட்கொடை என்பதில்
சந்தேகமில்லை.
ஆனால் மிகவும் வருத்தத்திற்குரிய
விஷயம் என்னவெனில் இன்னுமொரு சமூகம் இந்த தொழில்நுட்ப சாதனங்களினால் வழிகெட்டு , படுகுழியில் வீழ்ந்து கிடப்பதை காணும் போது இப்படி ஒரு தொழில்நுட்ப சாதனங்கள்
இந்த சமூகத்திற்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
சமூக ஊடகங்கள்!
தொழில்நுட்ப
சாதனங்களில் நாம் முதலில் குறிப்பிட வேண்டுமானால் சமூக ஊடகங்களை குறிப்பிடலாம்.
நாம் வாழுகின்ற
தகவல் தொழில் நுட்ப யுகத்தில் தொலைத் தொடர்பு சாதனங்கள், பொதுசன ஊடகங்களை விடவும் சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் ஊடுருவி ஆதிக்கம்
செலுத்துகின்றதன.
மக்கள் ஒருவரோடு
ஒருவர் இணைந்து இருக்கவும்,
உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், நமது அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்வது
இந்த சமூக ஊடகங்கள். இன்று மக்களிடையே மிகப் பிரபலமான சமூக ஊடகங்களாக காணப்படுவது
கூகுள், பேஸ் புக்,
ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்,
ஸ்கைப், யூடியுப் போன்றவையும்
இன்னும் பல சமூக வலைத்தளங்கள் ஆகும்.
அந்த வகையில் ஒரு முஸ்லிம் எவ்வாறு சமூக ஊடகங்களை கையாள்வது என்பதனை தெரிந்து வைத்துக்
கொள்வதோடு புதிய தலைமுறையினரை அறிவுறுத்தி உரிய வழிகாட்டல்களை
வழங்குவது காலத்தின் கட்டாயம் மாத்திரமன்றி சன்மார்க்க கடமையும், அனைவருக்குமான பொறுப்புமாகும்.
சன்மார்க்கத்தின்
வழிகாட்டல்களை பின் வருமாறு வரிசை படுத்தலாம்.
1) எப்போதும் சமூக ஊடகங்களை சரியான இலக்குகளுக்காக பயன்படுத்துவது (பர்ழு)
கடமையாகிறது.
كُنْتُمْ
خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ
عَنِ الْمُنْكَرِ َ
"மனிதர்களுக்காக
தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தர்களிலெல்லாம் மிக்க மேலான சமுதாயமாக நீங்கள்
இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை
விட்டும் அவர்களை தடுக்கிறீர்கள்.” ( அல்குர்ஆன்: 3: 110 )
2) எப்போதும் சமூக ஊடகங்களில் தீமைகளை தவிர்வதும், தவிர்ப்பதும் (பர்ழு) கடமையாகும்.
عن أبي
سعيد الخُدْريِّ رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ،
فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ،
وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
நபி ﷺ அவர்கள் கூற தான் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரி
(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:- “உங்களில் ஒருவர் ஏதாவதொரு
வெறுக்கத்தக்க செயலைக் கண்டால் தனது கை மூலம் மாற்ற முயற்சிக்கட்டும். அதற்கவர்
சக்தி பெறாவிட்டால் தனது நாவைக் கொண்டு மாற்ற முயற்சிக்கட்டும். அதற்குமவர் சக்தி
பெறாவிட்டால் தனது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். அதுவே ஈமானின் மிகத் தாழ்ந்த
நிலையாகும்.”
( நூல்: முஸ்லிம்)
3) சமூக ஊடகங்களில் இருக்கும் தீமைகள் குறித்து எச்சரிப்பது (பர்ழு) கடமையாகும்.
عن
النُّعْمانِ بنِ بَشيرٍ رضي اللَّه عنهما، عن النبيِّ ﷺ قَالَ: مَثَلُ القَائِمِ
في حُدودِ اللَّه، والْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَومٍ اسْتَهَمُوا عَلَى سفينةٍ،
فصارَ بعضُهم أعلاهَا، وبعضُهم أسفلَها، وكانَ الذينَ في أَسْفَلِهَا إِذَا
اسْتَقَوْا مِنَ الماءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ، فَقَالُوا: لَوْ أَنَّا
خَرَقْنَا في نَصيبِنا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا. فَإِنْ تَرَكُوهُمْ
وَمَا أَرادُوا هَلكُوا جَمِيعًا، وإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِم نَجَوْا
ونَجَوْا جَمِيعًا رواهُ البخاري.
நபி ﷺ அவர்கள் கூறியதாக நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்:- “விலக்கப்பட்டவைகளிலிருந்து மக்களைத் தடுப்பவர்களுக்கும் விலக்கியவைகளைச்
செய்பவர்களுக்கும் உதாரணம் கப்பலில் சீட்டுப் போட்டுக் கொண்டவர்களைப்
போன்றாகும்.சிலர் கப்பலின் மேல் தளத்திற்கும் சிலர் கப்பலின் கீழ்த் தளத்திற்கும்
நிர்ணயிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டால் மேல்
தளத்தில் உள்ளவர்களைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ‘நாம் மேல்தளத்தில் உள்ளவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் எங்கள்
பகுதியிலேயே ஒரு துவாரத்தை இட்டுக் கொண்டால் என்ன?’ என்று பேசிக் கொண்டனர். மேல்தளத்தில் உள்ளவர்கள் அவர்கள் நாடியபடி செய்ய
விட்டு விட்டால் அனைவரும் அழிந்து விடுவர். மாறாக மேலுள்ளவர்கள் தடுத்து
நிறுத்தினால் அவர்களும் தப்புவார்கள் மற்றவர்களும் தப்பிப்பார்கள்” ( நூல்: புகாரி)
4) எப்போதும் சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் கையாளுதல் (வாஜிப்) ஆகும்.
சமூக ஊடகங்களைப்
பயன்படுத்துபவர் தமக்குக் கிடைக்கப்பெறும் எந்தவொரு தகவலையும் ஊர்ஜிதப்படுத்திக்
கொள்ளாதவரை அவற்றை வெளியிடலாகாது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ
فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا
فَعَلْتُمْ نَادِمِينَ
'முஃமின்களே! உங்களிடம்
ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் (அதனை) தீர விசாரித்து தெளிவு
பெற்றுக்கொள்ளுங்கள். அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் அறியாமையின் காரணமாக ஒரு
சமூகத்தை பாதிக்கும் முடிவுகளுக்கு வந்துவிடக் கூடும். அப்போது நீங்கள் செய்ததை
நினைத்து கைசேதப்படுவீர்கள்.' ( அல்குர்ஆன்: 49: 06 )
وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا
بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ
لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ
عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا
'பயத்தையோ, (பொது மக்கள்) பாதுகாப்பையோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால், (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை
(அல்லாஹ்வுடைய) தூதரிடமும்,
அவர்களுடைய அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால், அதிலிருந்து ஊகிக்கக்கூடிய அவர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை
எடுத்துக்) கொள்வார்கள். (
அல் குர்ஆன்: 04: 83 )
أنَّ النبيَّ ﷺ قَالَ: كَفَى
بالمَرءِ كَذِبًا أنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سمعِ رواه مسلم
وعنْ أَبي هُريْرة
தான் கேட்டவற்றை
அனைத்தையும் (அப்படியே பிறரிடம்) ஒருவன் கூறுவது என்பது, அவன் பொய்யன் என்பதற்கு போதுமா(ன சான்றா)கும்’ என்று நபி ﷺ
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ( நூல் : முஸ்லிம் ).
5) சமூகத்திற்கும் சன்மார்கத்திற்கும் அவமானத்தை, தலைகுனிவை ஏற்படுத்துவது (ஹராம்) குற்றமாகும்.
عَنْ
أَبِي سَعِيدٍ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ كُرَيْزٍ، عَنْ أَبِي
هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:"كُلُّ الْمُسْلِمِ
عَلَى الْمُسْلِمِ حَرَامٌ؛ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ".
”ஒவ்வொரு முஸ்லிமுக்கும்
இன்னொரு முஸ்லிமுடைய உயிரைப் போக்குவது, அவனுடைய பொருளாதாரத்தை
மோசடி செய்வது,
அவனுடைய உணர்வுகளைக் காயப்படுத்தி அவமானப்படுத்துவது ஆகிய
இம்மூன்றும் ஹராம் தடுக்கப்பட்டது ஆகும்” என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
6) சில போது பயனுள்ளவற்றை பகிர்ந்துகொள்ளுதல் (வாஜிப்) காட்டயமாகவும்,
(முஸ்தஹப்) விரும்பத் தக்கவையாகவும் இருக்கிறது.
صعد
النبي صلى الله عليه وسلم ذات يوم على الصفا، فعلا أعلاها حجرًا، ثم هتف : ( يا
صباحاه )
وكانت
كلمة إنذار تخبر عن هجوم جيش أو وقوع أمر عظيم
.
ثم جعل
ينادى بطون قريش، ويدعوهم قبائل قبائل : ( يا بني فهر، يا بني عدى، يا بني فلان،
يا بني فلان، يا بني عبد مناف، يا بني عبد المطلب
) .
فلما
سمعوا قالوا : من هذا الذي يهتف ؟ قالوا : محمد . فأسرع الناس إليه، حتى إن الرجل
إذا لم يستطع أن يخرج إليه أرسل رسولًا لينظر ما هو، فجاء أبو لهب وقريش .
فلما
اجتمعوا قال : ( أرأيتكم لو أخبرتكم أن خيلًا بالوادى بسَفْح هذا الجبل تريد أن
تغير عليكم أكنتم مُصَدِّقِىَّ ؟
) .
قالوا :
نعم، ما جربنا عليك كذبًا، ما جربنا عليك إلا صدقًا
.
قال : (
إنى نذير لكم بين يدى عذاب شديد، إنما مثلى ومثلكم كمثل رجل رأي العَدُوّ فانطلق
يَرْبَأ أهله ) ( أي يتطلع وينظر لهم من مكان مرتفع لئلا يدهمهم العدو ) ( خشى أن
يسبقوه فجعل ينادى : يا صباحاه
)
ثم
دعاهم إلى الحق، وأنذرهم من عذاب الله، فخص وعم فقال
:
( يا معشر قريش، اشتروا أنفسكم من الله، أنقذوا أنفسكم من النار،
فإنى لا أملك لكم من الله ضرًا ولا نفعًا، ولا أغنى عنكم من الله شيئًا .
ولما تم
هذا الإنذار انفض الناس وتفرقوا، ولا يذكر عنهم أي ردة فعل، سوى أن أبا لهب واجه
النبي صلى الله عليه وسلم بالسوء، وقال : تبا لك سائر اليوم، ألهذا جمعتنا ؟ فنزلت
: { تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ } [ سورة المسد : 1
] .
தூதுத்துவத்தின்
ஒளிப்பிழம்புகளை ஏந்தியவாறு அண்ணலார் ﷺ அவர்கள் மக்காவின் ஸஃபா
மலைக்குன்றின் மீது நின்று கொண்டு “யா ஸபாஹா! காலைப் பொழுதை அடைந்தவர்களே!
என்று இருமுறை சப்தமிட்டு அழைத்தார்கள்.
பிறகு, குறைஷி குலத்தின் ஒவ்வொரு கிளையார்களின் பெயர் கூறி “ஃபஹ்ர் கிளையாரே! அதீ கிளையாரே! அப்து மனாஃபின் கிளையாரே! அப்துல் முத்தலிபின்
கிளையாரே!”
என்று அழைத்தார்கள்.
அண்ணலாரின்
அழைப்பை செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என மக்களில் சிலர்
தங்களுக்குள் வினவ,
முஹம்மத் ﷺ
அவர்கள் தான் என தங்களுக்குள் பதில் கூறிக்கொண்டனர்.
பெரும்பாலான
குறைஷி குலத்தின் கிளையார்கள் அங்கு ஒன்று கூடினர். அங்கே அபூலஹபும்
வந்திருந்தான்.
வர இயலாத ஒரு சில
கிளையார்கள் தங்களின் சார்பாக ஒருவரை அனுப்பி, முஹம்மத் ﷺ அவர்கள் என்ன சொல்கிறார்? என்று கேட்டு வருமாறு அனுப்பினார்கள்.
அனைவரும் வந்து
ஒன்று கூடிய பின்னர்,
அந்த சபையின் முன்பாக நின்ற நபி ﷺ அவர்கள் “இம்மலைக்குப் பின்னால் உள்ள கணவாயில்
உங்களைத் தாக்குவதற்காக சில குதிரை வீரர்கள் குழுமியிருக்கிறார்கள் என்று நான்
கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா?” என்று
கேட்டார்கள்.
அதற்கு, அங்கு நின்றிருந்த அத்துனை பேரும் ஒரே குரலில் “ஆம்! உங்களின் வார்த்தையை நம்புவோம்! உறுதியாக, இதுவரை நாங்கள் உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கின்றோம்! நீங்கள் ஒரு போதும்
பொய்யுரைத்து நாங்கள் கண்டதில்லை” என்றனர்.
அப்போது, நபி ﷺ அவர்கள் “எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணம்
என்ன தெரியுமா?
ஒருவர் எதிரிகளைப் பார்த்து அவர்கள் தன்னை முந்திச் சென்று, தனது கூட்டத்தினரைத் திடீரென தாக்கி விடக்கூடாது என்பதற்காக மலை உச்சியில் ஏறி நின்று “யா ஸபாஹா”
என்று அழைக்கிறாரே அவரைப் போன்றவராவேன் நான்.
ஒவ்வொரு
கிளையாரின் பெயர்களைக் கூறிய பின் “உங்களது உயிர்களை
அல்லாஹ்விடமிருந்து அழகிய விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்! உங்களை நரகிலிருந்து
பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக, நான் உங்களுக்கு
அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும், தீமைக்கும் பொறுப்பாளியாக ஆகமுடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான்
எவ்வித பலனையும் அளிக்க இயலாது.
எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உயரிய உறவொன்று எனக்கு இருக்கிறது. உரிய
முறையில் இரத்த பந்தத்திற்கான உரிமைகளையும், கடமைகளையும்
நிறைவேற்றுவேன்”
என்று கூறி முடித்தார்கள்.
இந்த எச்சரிக்கை
உரையை கேட்டு முடித்ததும்,
கூடி நின்றவர்கள் கலைந்து போக ஆரம்பித்தார்கள்.
அப்போது, அபூலஹப் அண்ணலாரை நோக்கி வந்து இரு கைகள் நிறைய மண்ணை வாரி அண்ணலாரின் மீது
போட்டு விட்டு,
“நாள் முழுவதும் உமக்கு நாசம் உண்டாகட்டும்! இதற்காகத்தான்
எங்களை இங்கு நீ ஒன்று கூட்டினாயா?” (நவூது பில்லாஹ்..)
என்று கடுமையாக பேசினான்.
அத்துனை
கிளையார்கள் முன்னிலையிலும் நபி ﷺ
அவர்களை அவமானப் படுத்தியதோடல்லாமல், மிகக் கேவலமாக சபிக்கவும் செய்தான் அபூலஹப்.
அம்மக்கள்
நபிகளாரை ﷺ ஊர் விலக்கம் செய்ததைக் கூட அல்லாஹ் கண்டித்து
இறைவசனத்தை இறக்கிட வில்லை. ஆனால், அபூலஹபின் சாபத்தை
கண்டித்து அதே வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் ஓர் அத்தியாயத்தையே (111-வது சூரா மஸத்/லஹப் அத்தியாயம்) இறக்கியருளினான்.
7) எழுதினாலும், பேசினாலும், பரப்பினாலும் பதியப்படும்!
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
'(மனிதன்) எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக்
காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து
புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)
( அல்குர்அன்: 50: 18 )
அதனால்
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரையில் எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹுதஆலா கூறும், இவ்வசனத்தை தனது உள்ளத்தில் நிலைத்திருக்கச் செய்வது
ஈமானின் ஒரு பகுதியாகும்
8) இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
சுதந்திரம் என்ற போர்வையில் தனி நபர்களின்
இரகசியங்களை பகிரங்கப்படுத்தக் கூடாது. மேலும், பிற மனிதர்களது மானத்தை
களங்கப்படுத்துவது,,அந்தரங்கத்தை வெளிப்படுத்துவது தவறாகும்..
وعن ابن
عباس رضي الله عنهما، عن النبي صلَّى الله عليْه وسلَّم: ((مَن ستَر عورةَ أخيه المسلمِ،
سَتَرَ اللهُ عورتَه يومَ القيامة،
“யார் ஒருவர் தன் சகோதரனின்
குறையை (குற்றத்தை) மறைக்கிறாரோ அல்லாஹ் மறுமையில் அவரது குறையை மறைப்பான்.” ( நூல்: இப்னுமாஜா )
9) நீதமான செய்தியை மட்டுமே பதியவோ, பகிர்ந்து கொள்ளவோ வேண்டும்.
தற்காலத்தில் சமூக
ஊடகங்கள் வாயிலாக பெரும்பாலும் பக்கச் சார்பான செய்திகளே வெளியிடப்படுகின்றன.
தமக்கு வேண்டியவர்களின் செய்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதும்
அவர்களின் தவறுகளைக் குறைத்துக் காட்டுவதும் போன்ற நீதமற்ற நடைமுறைகள்தான் கடைப் பிடிக்கப்படுகின்றன.
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا
يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ
لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
“உங்களுக்கு ஒரு சமுதாயத்தில்
இருக்கும் பகையானது நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு ஒரு போதும் தடையாக
இருக்க வேண்டாம். நீதியாக நடவுங்கள். அப்படி நடப்பது இறைபக்திக்கு மிக
நெருக்கமானதாகும்.”
( அல்குர்அன்: 5: 8 )
10) மானக்கேடான தகவல்களைப் பரப்புவதை தவிர்ந்து கொள்ளல்.
சமூகத்தில் இடம்பெறும்
பாலியல் ரீதியான அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் தாறுமாறாக
அம்பலப்படுத்தப்படும் போது குற்றச் செயல்கள் புரியும்விதம், அவற்றிலிருந்து தப்பும் வழிகள் பற்றி அறிவதற்கும் குற்றச் செயல்களில்
ஈடுபடவும் வழி பிறக்கின்றது. எனவே மனிதர்களது கற்பொழுக்கம் தொடர்பான
செய்திகளை மிகவும் கவனமாக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும்.
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ
آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ
وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
“விசுவாசிகளுக்கு
மத்தியில் மானக்கேடான செயல்களை பரப்பவேண்டுமென யார் விரும்புகின்றாரோ!
அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு.” ( அல்குர்அன்: 24:
19 )
அருட்கொடைகள் எதுவாக இருப்பினும்…
நாம் அனுபவிப்பவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்
என்பதையும் அது குறித்து நாம் விசாரிக்கப் படுவோம் என்பதையும் நம்முடைய எல்லா
செயல்களும் அல்லாஹ்வின் மகத்தான பார்வைக்கும் கவனத்திற்கும் உட்பட்டது தான்
என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْئَرُوْنَ
மேலும், எந்த அருட்கொடை (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து
உள்ளதேயாகும்;
பின்னர், ஏதாவது ஒரு துன்பம்
உங்களைத் தொட்டுவிட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள்
முறையிடுகிறீர்கள். ( அல்குர்ஆன்: 16: 53 )
ثُمَّ
لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ
பின்னர், அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி
நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 102: 8 )
وَعِنْدَهٗ
مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ
وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ
فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ
مُّبِيْنٍ
அவனிடமே
மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன; அவற்றை அவனன்றி எவரும்
அறியார்;
மேலும், கரையிலும் கடலிலும்
உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர்
இலையும் உதிர்வதில்லை;
பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு
வித்தும்,
பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப்
பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.( அல்குர்ஆன்: 6:
59 )
சமூக ஊடகங்களை
பயன்படுத்துவதால் பொன்னான நேரங்கள் வீணாகிறது. இறைவனோடு நெருங்கிய தொடர்பைத்
தருகிற தனிமை பாழாக்கப்படுகிறது.மேலும், பார்வைகள் பாவங்களில் வீழ்கின்றது.
1) நேரத்தை வீணாக்குவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களினால்
உருவாகும் பிரச்சனைகள் பல. அதிலும் தலையாயதாக கருதப்படுவது காலம் விரயம். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டிய நேரத்தை வகை தொகையில்லாமல் வீணடிக்கின்றோம்
நாம்.
சில பிரபலமான சமூக
வலைத்தளங்களை உருவாக்கியவர்கள் அதில் செலவிடும் நேரத்தை அறிந்தோம் என்றால் நாம்
செலவிடும் நேரத்தின் அருமையை உணர்வோம்.
“பேஸ் புக்” மார்க் சக்கர்பெர்க்,
2004 – 2014 மொத்தம் வரை 15 பதிவுகள் தான்
பதிந்துள்ளார். “ட்விட்டர்”
ஜேக் டார்சி, சமூக நலம் மற்றும்
அரசியல் பார்வை தொடர்பான விஷயங்களை மட்டுமே பதிவு செய்கிறார். “கூகுள் பிளஸ்”
லாரி பேஜ், உருவாக்கிய தினத்தில்
இருந்து இதுவரை 17
பதிவுகள் மட்டுமே. “இன்ஸ்டாகிராம்” கெவின் சிஸ்ட்ரோம் வெறும் 40 படங்கள் மட்டுமே
பதிந்திருக்கிறார்.
முக்கிய வலைதளங்களின்
பிரம்மாக்கள் அதில் பெரிதாக இயங்காத போது நாம் நம் பொறுப்பை உணர வேண்டும்.
அல்லாஹ் தனது
திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு
கூறுகின்றான்.
وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ
آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا
بِالصَّبْرِ (3)
”காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச்
செய்தும்,
சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத்
தவிர”.
ஆக நேரத்தை
வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன் என்பதை நாம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.
حَدَّثَنِي
مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي
هِنْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ الصِّحَّةَ وَالْفَرَاغَ، نِعْمَتَانِ مِنْ نِعَمِ
اللَّهِ، مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ.
இன்னும் இரண்டு
அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி.
இறுதித்தீர்ப்பு
நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து
அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை
எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ( நூல்: திர்மிதி )
அபூபக்கர்
சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். ”இறைவா! எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே” என்பதாகும்.
அடுத்து உமர்(ரலி)
அவர்கள்,
”இறைவா! எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாக, சிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள்.
வாழ்நாளில் ஒரு நாள் என்பது...
وقال
ابن مسعود: “ما ندمت على شيء ندمي على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزدد فيه
عملي”.
இப்னு மஸ்வூத்
(ரலி) அவர்கள் கூறுவார்களாம்: “என் வாழ்வில் என்னை விட்டும்
தப்பிப்போன எந்த ஒரு விஷயத்திற்காகவும் துளி அளவு கூட நான் வருத்தப்பட்டது
கிடையாது. ஆனால்,
ஒவ்வொரு நாள் சூரியன் மறைகிற போதும் ஒரேயொரு விஷயத்தைக்
குறித்து மாத்திரம் நான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன்.
”நேற்றை விட அதிகப்படியான எந்தவொரு நற்செயலும் செய்யாமல் என் வாழ்நாளில் ஒரு
நாள் கழிந்து விட்டதே!”...
என்று.
قال
الحسن البصري:
“ما من يوم يمرُّ على ابن آدم إلا وهو يقول: يا ابن آدم، أنا
يوم جديد، وعلى عملك شهيد، وإذا ذهبت عنك لم أرجع إليك، فقدِّم ما شئت تجده بين
يديك، وأخِّر ما شئت فلن يعود إليك أبداً”.
ஹஸன் அல் பஸரீ
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “மனிதனைக் கடந்து செல்கிற எந்த ஒரு
நாளும் இப்படிச் சொல்லாமல் கடந்து செல்வதில்லை.
ஓ ஆதமின் மகனே! நான் உனக்கான புத்தம் புதிய நாளாவேன். நீ
என்னை என்ன செய்யப் போகிறாய்? என்பதைக் காண நான் ஆவலாய்
இருக்கின்றேன்.
நான் சென்று விட்டால் இனி ஒருபோதும் உன்னிடம் திரும்பி
வரப்போவதில்லை.
நீ விரும்பினால் என்னை அழகிய முறையில் பயன்படுத்திக்கொள்!
அதற்கான பலனை உன் வாழ்வில் நீ பெற்றுக் கொள்வாய்!
நீ விரும்பினால் என்னை பயன்படுத்தாமல் நாளைக்கு செய்கிறேன்
என்று தள்ளிப்போடு! ஆனால்,
ஒன்றை நீ நன்றாக விளங்கிக்கொள்! இன்றாகிய நான் இப்போது
உன்னை விட்டும் சென்று விட்டால் இனி எப்போதும் வரப்போவதில்லை.”
يقول
أحد الصالحين: “أوقات العبد أربعة لا خامس لها: النعمة، والبلية، والطاعة،
والمعصية. و لله عليك في كل وقت منها سهم من العبودية يقتضيه الحق منك بحكم
الربوبية: فمن كان وقته الطاعة فسبيله شهود المنَّة من الله عليه أن هداه لها
ووفقه للقيام بها، ومن كان وقته النعمة فسبيله الشكر، ومن كان وقته المعصية فسبيله
التوبة والاستغفار، ومن كان وقته البلية فسبيله الرضا والصبر
மேன்மக்களான
ஸாலிஹீன்களில் ஒருவர் கூறுகின்றார்: “ஓர் அடியானின் கால நேரம்
என்பது நான்கு வகைகள் ஆகும். ஐந்தாவதாக ஒன்று கிடையாது.
1. ஓர் அடியான் தன்
வாழ்வை அல்லாஹ் வழங்கியிருக்கிற அருட்கொடையாகக் கருதி கழிப்பானேயானால் அல்லாஹ்
அவன் வாழ்க்கையை நன்றி செலுத்துவோரின் பாதையில் வழி நடத்துவான்.
அதன் விளைவாக அவன்
வாழ்க்கை அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிறைந்ததாய் அமைந்து விடுகின்றது.
لَئِنْ
شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
அல்லாஹ் கூறுவது
போன்று: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மென்மேலும்
வழங்குவேன்.” (அல்குர்ஆன்: 14:7
)
2. ஓர் அடியான் தன்
வாழ்வை அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட நிலையிலேயே கழிப்பானேயானால் அல்லாஹ் பேருபகாரம்
வழங்கப்பட்டோரின் பாதையில் வழி நடத்துவான். ஆம்! நேர்வழியிலும், நேர்வழியின் மீது நிலைத்திருக்கிற பேருபகாரத்தை வழங்குவான்.
அதன் விளைவாக
அவனது வாழ்க்கை ஈருலகத்திலும் சோபனத்திற்குரியதாய் அமைந்து விடுகின்றது.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ
اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا
تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ () نَحْنُ
أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ
அல்லாஹ் கூறுவது
போன்று: “எவர்கள் ”அல்லாஹ் தான் எங்கள் இறைவன்” என்று கூறி பின்னர் அதில்
உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது {மரண நேரத்தின் போது}
வானவர்கள் இறங்குகின்றனர். மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:
“அஞ்சாதீர்கள்!
கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின்
நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்!”
3. ஓர் அடியான் தன்
வாழ்வை நல்லறங்களோடு அல்லாஹ்விற்கு மாறு செய்த நிலையிலும் கழிக்கின்றானோ அல்லாஹ்
அந்த அடியானுக்கு ஒரு வாய்ப்பாக பாவமன்னிப்பு எனும் பாதையை திறந்து விடுவான்.
அதன் விளைவாக
அவனது வாழ்க்கை அல்லாஹ்வின் கருணைக்கும், மன்னிப்புக்கும் உரியதாய்
அமைந்து விடுகின்றது.
وَآخَرُونَ
اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى
اللَّهُ أَنْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ()
அல்லாஹ் கூறுவது
போன்று: “மேலும்,
தம் குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கும் வேறு சிலரும்
அவர்களில் உள்ளனர். அவர்கள் நற்செயலோடு தீய செயலையும் கலந்து
விட்டிருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது
கருணை புரியக்கூடும்! ஏனென்றால், திண்ணமாக அல்லாஹ்
பெரிதும் மன்னிப்பவனும்,
கருணை புரிபவனும் ஆவான்.” ( அல்குர்ஆன்: 9:102 )
4. ஓர் அடியான் தன்
வாழ்வை சோதனைகள் நிறைந்ததாய் கழிக்கின்றானோ அல்லாஹ் அந்த அடியானுக்கு
பொறுமையாளர்கள்,
சோதனைகளை அல்லாஹ்விற்காக பொருந்திக் கொள்கின்றவர்கள்
ஆகியோரின் பாதைகளில் பயணிக்க வைத்து விடுவான்.
அதன் விளைவாக
அவனது வாழ்க்கை சோபனத்திற்குரியதாய், அல்லாஹ்வின் அருளுக்கு
சொந்தமானதாய் அமைந்து விடுகின்றது.
وَبَشِّرِ الصَّابِرِينَ () الَّذِينَ إِذَا
أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ()
أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ
الْمُهْتَدُونَ ()
அல்லாஹ் கூறுவது
போன்று: “(வாழ்க்கையில் சோதனையின் போது) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு ( நபியே! )
நீர் நற்செய்தி கூறுவீராக! அவர்கள் எத்தகையோர் எனில், தங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
அத்தகையோர் மீது
அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும்.
இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்.” ( அல்குர்ஆன்: 2:155 – 157 )
2) தனிமையில் கவனம் செலுத்த வேண்டும்!
சமூக ஊடகங்களை
பயன்படுத்துவோரின் தனிமை மிகவும் ஆபத்தானது.
ஒருவருடைய
இறையச்சம் சோதிக்கப்படுவது அவர் தனிமையில் இருக்கும்போதுதான்.
தனக்கும்
அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பு தனிமையுடைய வாழ்வில் எவ்வாறு இருக்கிறது
என்பதை ஒவ்வொருவரும் அன்றாடம் சோதித்துப் பார்க்க வேண்டும்.
தனிமையில்
அல்லாஹ்வை அஞ்சுவதன் அவசியத்தை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய
கடமையும் கடப்பாடும் இருக்கிறது.
சமூகத்தின்
பார்வையில் இருக்கும் போது,
சுத்த தங்கமாய் இருக்கும் பலரும்; மார்க்கக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுகிற பலரும்; தீமைகளை விட்டும் தள்ளி நிற்கிறார்கள். ஆனால், தனியாக இருக்கும் சமயங்களில், குறிப்பாக மொபைல் மற்றும்
இணையதளத்தை பயன்படுத்தும் போது மார்க்கம் தடுத்த காரியங்களில் சர்வ சாதாரணமாக
ஈடுபடுகிறார்கள். தங்களது கடமைகளிலும் பொறுப்புகளிலும் பொடும்போக்குத் தனமாக
இருக்கிறார்கள். இத்தகைய அரை குறையான இறையச்சம் முஃமின்களுக்கு அழகல்ல.
لِيَعْلَمَ اللَّهُ مَنْ يَخَافُهُ بِالْغَيْبِ
ஏனென்றால் மறைவில்
அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறிவதற்க்காகத்தான்” (அல்குர்ஆன் 5:
94).
தொழுகையின்
இறுதியில் ஸலாம் கொடுக்கும் முன் நபியவர்கள் ﷺ கேட்ட நீண்ட ஒரு பிரார்த்தனையில் இவ்வாறும்
பிரார்த்தித்தார்கள்:
اللَّهُمَّ
إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக
ஹ(خ)ஷ்யதக ஃபில் கஃய்பி வஷ்ஷஹாதா”
“யா அல்லாஹ்! மறைவிலும்,
வெளிப்படையிலும் உன்னுடைய பயத்தை நிச்சயமாக நான் உன்னிடம்
கேட்கிறேன்”
(அந்நஸாஈ 1305).
“ஒருவனது இறுதி முடிவு
நல்லதாக அமைவதற்கும்,
கெட்டதாக அமைவதற்கும் பெரிதும் காரணமாக அமைவது அவனது
தனிப்பட்ட வாழ்க்கையே”
என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
தனிமையில் நாம்
மட்டும் தான் இருக்கிறோம். நாம் செய்யும் பாவம் நம்மைத் தவிர வேறு யாருக்கும்
தெரியாது. யாரும் பார்க்க வில்லை என்று ஒருவன் நினைத்தால் அந்த நொடியிலேயே அவனிடம்
குஃப்ர் - இறை நிராகரிப்பு ஏற்பட்டு விடுகிறது என்று பல்வேறு வசனங்கள்
எச்சரிக்கின்றது.
وقال في
سورة الحديد: {وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ
بَصِيرٌ} [من الآية:4]، وفي سورة النساء: {إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ
رَقِيباً} [النساء من الآية:1]. وفي سورة الممتحنة: {وَأَنَا أَعْلَمُ بِمَا
أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ} [الممتحنة من الآية:1]
يَعْلَمُ
خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ [الغافر -19]
... إلى آخر هذه الآيات.
"நீங்கள் எங்கிருந்தாலும்
உங்களுடன் அவனு(அல்லாஹ்வு)ம் இருக்கின்றான். நீங்கள் செய்வதை அல்லாஹ் (மிகத்
தெளிவாக) பார்த்துக் கொண்டு இருக்கின்றான்".
"திண்ணமாக! அல்லாஹ் உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்".
"நீங்கள் உங்கள் உள்ளங்களில் மறைப்பதையும், வெளிப்படையாக செய்வதையும்
நான் மிகவும் அறிவேன்".
"அவன் (அல்லாஹ்) கண்கள் செய்யும் மோசடிகளையும், உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்".
எல்லாவற்றுக்கும்
மேலாக ஒரு வசனத்தில் அல்லாஹ் பின் வருமாறு
குறிப்பிடுவான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى
الْاَرْضِؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا
خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ
اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْاۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا
يَوْمَ الْقِيٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
நிச்சயமாக அல்லாஹ்
வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர்
பார்க்கவில்லையா?
மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக
இல்லாமலில்லை;
இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக
இல்லாமலில்லை;
இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ,
அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை -
அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். ( அல்குர்ஆன்: 58:
7 )
நாம் என்னதான்
வெளிப்படையாக நல்ல பல அமல்களை செய்தாலும், நல்லவனாக வலம் வந்தாலும், தனிமையில் மறைவான சூழலில் இருக்கும் போது இறைவனுக்கு அஞ்சி
நடக்கவில்லையென்றால்,
மறுமையில் நாம் அடைகின்ற கைசேதம் குறித்து அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
حَدَّثَنَا
عِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ
بْنِ حَدِيجٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي
عَامِرٍ الْأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، أَنَّهُ قَالَ
«لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ
الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا
اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا . قَالَ ثَوْبَانُ : يَا رَسُولَ
اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا - أظهر مواصفاتهم - أَنْ لَا نَكُونَ
مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ ؟
قَالَ : أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنْ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا . رواه ابن ماجه»
“எனது உம்மத்தில் ஒரு
கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் ‘திஹாமா’ எனும் மலைகள் அளவுக்கு நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை
அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்” என்று நபியவர்கள் ﷺ கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ﷺ அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக
அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!” என்றோம்.
அதற்கு நபியவர்கள் ﷺ
"அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே
அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான
சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து
விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்’ என்று கூறினார்கள். (
நூல்: இப்னு மாஜா )
3) பார்வையைப் பாதுகாப்பது கடமையாகும்.
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا
فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30)
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
(நபியே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட
ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை
அல்லாஹ் நன்கறிந்தவன்.
தமது
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும்
நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! ( அல் குர்ஆன்: 24:30,
31)
حَدَّثَنِي
مَحْمُودٌ ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ ابْنِ
طَاوُوسٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا
أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم :- إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا
أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ
الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ
كُلَّهُ وَيُكَذِّبُهُ.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள
பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின்
விபச்சாரம் மட்டுமல்ல;
கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும்
விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத்
தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம
உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி )
عَنْ
جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ رَضيَ اللهُ عنه قَالَ:
سَأَلْتُ
رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ
فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 2159]
ஜரீர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி ﷺ அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும்
பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி ﷺ அவர்கள் கட்டளையிட்டார்கள். ( நூல்: திர்மிதி
)
عن بن
عباس عند البخاري أن النبي صلى الله عليه وسلم أردف الفضل بن العباس يوم النحر
خلفه وفيه قصة المرأة الوضيئة الخثعمية فطفق الفضل ينظر إليها فأخذ النبي صلى الله
عليه وسلم بذقن الفضل فحول وجهه عن النظر إليها وأجيب بأن النبي صلى الله عليه
وسلم إنما فعل ذلك لمخافة الفتنة لما أخرجه الترمذي
(இளைஞரான) ஃபழ்ல் (ரலி)
அவர்கள் நபி ﷺ அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்)
அமர்ந்து கொண்டிருந்த போது,
''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த
ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப்
பார்த்தார். (இதைக் கவனித்த நபியவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில்
திருப்பினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), (நூல்: புகாரி )
(இதைக் கண்ட) அப்பாஸ்
(ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை
திருப்பினீர்கள்?''
என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''ஒரு இளைஞனையும்,
இளம் பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில்
ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்
என்று தப்ரியின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. ( நூல்: ஃபத்ஹுல் பாரீ )
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ
وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
உமக்கு அறிவு
இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம்
ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. ( அல்குர்ஆன் 17: 36 )
وَيَوْمَ يُحْشَرُ
أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ (19) حَتَّى إِذَا مَا
جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا
كَانُوا يَعْمَلُونَ (20)
وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدْتُمْ عَلَيْنَا قَالُوا
أَنْطَقَنَا اللَّهُ الَّذِي أَنْطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ
مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ
அல்லாஹ்வின்
பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள்.
முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும்,
தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி
கூறும். ''எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?'' என்று அவர்கள்
தமது தோல்களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச்
செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான்.
அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும்
. ( அல் குர்ஆன்: 41:
30 )
4) சமூக ஊடகங்களை பயன் படுத்துவதில் விழிப்புணர்வு வேண்டும்..
மொபைல் போன்
பயன்படுத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
மொபைல் போனின்
வயது சுமார் 42
ஆகிறது. 1983 -ல் டாக்டர் மார்டின்
கூப்பர் 2500
பவுண்ட்விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ. டி .சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.
அப்போதெல்லாம்
பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட
நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக் காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய
சாதனமாக அது மாறிவிட்டது. மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர்
உலகில் சுமார் 12ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால், இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக
அதிகமாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்
ஒவ்வொரு ஆண்டும் மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்
அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டில்
இந்தியாவில் ஒரு பில்லியன் மக்கள் மொபைல் போன் பயன்படுத்துவார்கள் என்ற கணிப்பு
தற்போது வெளிவந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில்
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் என்றும்
கூறப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு 200
மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இந்தியாவில்
பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2025ஆம் ஆண்டில் அது 1,200 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று
தெரிவித்துள்ளது. ( நன்றி: குட் ரிட்டர்ன்ஸ், 15/09/2022 )
இந்தியாவில்
மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 100 கோடியை தாண்டியுள்ளது.( நன்றி: தினமலர், 2024 )
பேசுவதற்கு
மட்டும் வந்த இந்த மொபைல் போன் ஆரம்பத்தில் டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்)
அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில். இதனைத் தொடர்ந்து
பெரிய அளவில் டேட்டா (Data)
பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்ட 3ஜி மற்றும் 4 ஜி,
5ஜி
சேவைகள் வந்த பிறகு வாட்ஸ்அப் பேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்ட்ரா
என விரிந்து,
மோஜோ எனும் மொபைல் ஜர்னலிஸம் வரை வந்து நிற்கிறது.
இனிவர இருக்கும் வேக மாற்றங்களால் எதிர் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்
என்பது கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.
இணையதளம் வழியாகவே, 100 சதவீத ஆபாச காட்சிகள் பரப்பப்படுகின்றன; ஆபாசக் காட்சிகளை
பார்த்து,
இளைஞர்கள் பாலியல் துாண்டலுக்கு ஆளாகின்றனர்; இவ்வாறு பாதிக்கப்படுவதில், 80 சதவீத ஆண்களும், 60 சதவீத பெண்களும் அடங்குவர்' என, சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
மொபைலில் நீண்ட
நேரம் பேசுவது மற்றும்,
'ஹெட்செட்'டில் நீண்ட நேரம் பாட்டு கேட்பது
போன்றவற்றால்,
செவித்திறன் குறைபாடு, மூளை செல்கள் பாதிப்பு
ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இணையம் மற்றும் மொபைலை நீண்ட நேரம் ஒரே
இடத்திலிருந்து பல மணி நேரம் உற்று நோக்குவதால், கண்கள் களைப்படைந்து,
வறட்சி அடைந்து, கண் சம்பந்தமான நோய்கள்
ஏற்படுகின்றன. உடல் அசைவின்றி, ஒரே இடத்தில் இருப்பதால்
சர்க்கரை வியாதி,
உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தண்டுவட பாதிப்பு,
கழுத்து வலி, மன நோய், பசி இன்மை,
மலச்சிக்கல், ஆண்மைக் குறைவு போன்ற
கணக்கில் அடங்கா நோய்களுக்கு வழி வகுக்கிறது என்றும் மருத்துவ ஆய்வு கூறுகிறது.
13 வயதான சிறுவர்கள், சிறுமிகளின் சமூக ஊடக பழக்கவழக்கம் குறித்தும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்
ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்மூலம், முகநூல் அல்லது பிற சமூக
ஊடகங்களை நாளொன்றுக்கு 50
மற்றும் 100 முறைக்கு மேல்
பார்வையிடுவோர்,
அந்த ஊடகங்களை சில முறை மட்டும் பார்ப்போரை விட 37 சதவீதத்துக்கும் அதிகமாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவது தெரிய
வந்திருக்கிறது. நாளொன்றுக்கு 100 முறைக்கும் மேல் சமூக
ஊடகங்களைப் பார்வையிடுவோர்,
47 சதவீதத்துக்கும் மேல் மன அழுத்தத்தினால்
பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சமூக ஊடகத்தில் அதிக நேரத்தை செலவிடுவது என்பது நல்லதல்ல.
கடந்த ஆண்டு (2024)
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல்
தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குழந்தைகளிடம் உள்ள இணைய
பழக்கம் தொடர்பாக தங்களிடம் எந்த குறிப்பிட்ட தரவுகளும் இல்லையென்றும் அதேவேளையில், குழந்தைகள் இணைய வசதியுடன் மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்துவதால்
ஏற்படும் விளைவுகள் (உடல்,
நடத்தை மற்றும் உளவியல்-சமூகம்)" என்ற தலைப்பில்
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நடத்திய ஆய்வை மேற்கொள் காட்டி
பதிலளித்தார்.
அப்போது, 23.80 சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு படுக்கையில் மொபைல் பயன்படுத்துவதாக
அந்த ஆய்வு முடிவில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். மொபைல் பயன்பாடு காரணமாக 37.15 சதவீத குழந்தைகளின் கவனம் செலுத்தும் திறன் குறைவை எதிர்கொள்கின்றனர் என்றும்
அவர் தெரிவித்திருந்தார்.
ஆகவே, உலக வாழ்க்கையில்
ஆரோக்கியமில்லாத நோய் நொடிகளுடன் கூடிய வாழ்விற்கு காரணமாகவும், தீனுடைய அடிப்படையில் வாழ்வதை சிதைத்து அல்லாஹ்வின் திருமுன் நிற்கதியாக
நிராயுதபாணியாக நிறுத்துகிற சமூக ஊடகங்களின் தீமைகளில் இருந்து நம்மை நாமே
தற்காத்துக் கொள்வோமாக!!
பின் வரும் துஆவை ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் விடாது ஒதி
வந்து நம்முடைய தீனுடைய வாழ்வையும், துன்யாவுடைய வாழ்வையும்
சீராக அமைத்துக் கொள்வோமாக!
اَللّهُمَّ
أَصْلِحْ لِيْ دِينِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ
الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ وَأَصْلِحْ لِيْ آخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ
وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِيْ فِيْ كُلّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ
رَاحَةً لِيْ مِنْ كُلّ شَرّ
அல்லாஹும்ம அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்ம(த்)து அம்ரீ, வஅஸ்லிஹ் லீ துன்யாயல்ல(த்)தீ பீ[F]ஹா மஆஷீ, வஅஸ்லிஹ் லீ ஆகிர(த்)தியல்ல(த்)தீ பீ[F]ஹா மஆதீ வஜ்அலில்
ஹயா(த்)த ஸியாத(த்)தன் லீ பீ[F] குல்லி கைரின் வஜ்அலில்
மவ்(த்)த ராஹ(த்)தன் லீ மின் குல்லி ஷர்ரின்.
இதன் பொருள் :”இறைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக.
நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல
இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக. எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும்
அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக
எனது மரணத்தை ஆக்கு!” ( நூல்: முஸ்லிம் )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் சமூக ஊடகங்களின் தீமைகளில் இருந்து காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment