Tuesday, 4 February 2025

லவ்ஹுல் மஹ்ஃபூளும்…. களா கத்ரு(விதியு)ம்…. ( பராஅத் இரவு சிந்தனை!! – 2025 )

 

லவ்ஹுல் மஹ்ஃபூளும்…. களா கத்ரு(விதியு)ம்….

( பராஅத் இரவு சிந்தனை!! – 2025 )


இந்த மாதம் பாக்கியமும், அருள்வளமும் நிறைந்த மகத்தான ஷஅபான் மாதமாகும்.

ரமலானுக்குப் பின்னால் பாக்கியமும், அருள்வளமும் நிறைந்த மாதம் ஷஅபான் மாதமாகும்.

இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் இரவுக்கு பல்வேறு சிறப்புக்கள் இருப்பதை குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் மூலமாக இந்த உம்மத்தின் மேன்மக்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் உறுதிபடுத்தி இருக்கின்றார்கள்.

இந்த இரவில் தான் விதி முடிவு செய்யப்பட்டு வானவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றது.

இந்த இரவில் தான் வரும் ஓராண்டில் வாங்கப்பட வேண்டிய ரூஹ்களின் பட்டியல் மலக்குல் மவ்த்திடம் ஒப்படைக்கப் படுகின்றது.

இந்த இரவில் தான் அல்லாஹ் முதலாம் வானத்திற்கு வருகை புரிந்து வாழ்வாதாரத்திற்காக, உடல் ஆரோக்கியத்திற்காக, பாவமன்னிப்பிற்காக துஆ செய்பவர்கள் யாரும் உண்டா? எனக் கேட்கின்றான்.

இந்த இரவில் தான் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறை வாசிகளுக்கு மாநபி {ஸல்} பிரத்யேகமான துஆக்களைச் செய்தார்கள்.

இந்த நாளின் இரவில் நின்று வணக்கம் புரிவதும், பகலில் நோன்பு நோற்பதும் இறைவனுக்கு மிக உகந்த செயலாகும் என ஹதீஸில் வந்துள்ளது.

பாக்கியங்கள் நிறைந்த இந்த இரவில் இறைவனுக்கு உகந்த வகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனின் திருப்தியை, மன்னிப்பை, கருணையை ஆதரவு வைத்த நிலையில் அமர்ந்திருக்கும் நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கபூல் செய்தருள்வானாக!

இந்த இரவின் முக்கியத்துவங்களில் ஒன்று விதி. இந்த இரவில் தான் விதி முடிவு செய்யப்பட்டு வானவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றது.

இந்த இரவில் தான் வரும் ஓராண்டில் வாங்கப்பட வேண்டிய ரூஹ்களின் பட்டியல் மலக்குல் மவ்த்திடம் ஒப்படைக்கப் படுகின்றது.

ஆகவே, விதியுடன் தொடர்புடைய "லவ்ஹுல் மஹ்ஃபூள்" எனும் ஏடு குறித்தான சில தகவல்களை பார்க்க இருக்கிறோம்.

أما الإيمان باللوح فدليله -كما ذكر الشارح رحمه الله- قوله تعالى: ((بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ * فِي لَوْحٍ مَحْفُوظٍ))[البروج:21-22].

قطعياً اللوح والقلم من الأمور الغيبية المسلم بها عند عامة المسلمين؛ فقد ثبتت دلالتهما بالكتاب والسنة ثبوتاً، فيجب الإيمان بهما، وأن الله تعالى قد كتب في اللوح المحفوظ كل ما هو كائن إلى قيام الساعة، وهذه هي المرتبة الثانية من مراتب القدر، وهي الكتابة.

 

லவ்ஹுல் மஹ்ஃபூளை ஈமான் கொள்வது - நம்புவது ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு வாஜிபு - கடமையாகும்.

மேலும், மறைவான விஷயங்களை ஈமான் கொள்வதோடும், விதியை ஈமான் கொள்வதோடும் தொடர்புடையதாகும்.

واللوح المحفوظ له أسماء أخرى جاءت في القرآن، وهي: أم الكتاب، والكتاب المكنون، والإمام المبين، قال تعالى: ((وَكُلَّ شَيْءٍ أحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ))[يس:12]، الإمام المبين هو اللوح المحفوظ.

மேலும், லவ்ஹுல் மஹ்ஃபூளுக்கு "உம்முல் கிதாப், கிதாபும் மக்னூன், இமாமுல் முபீன்" என்று  சில பெயர்கள் இருப்பதை அல்குர்ஆனின் வாயிலாகஅறிந்து கொள்ள முடிகிறது.

லவ்ஹுல் மஹ்பூள் (வானுலக ஏடு)

وَمَا تَكُوْنُ فِىْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُوْدًا اِذْ تُفِيْضُوْنَ فِيْهِ‌ وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் உங்களைக் கவனிக்காமல் இருப்பதில்லை; பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்கு(த் தெரியாமல்) மறைந்து விடுவதில்லை; இதைவிடச் சிறியதாயினும் அல்லது பெரியதாயினும் தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. ( அல்குர்ஆன்: 10: 61 )

وَمَا مِنْ غَآٮِٕبَةٍ فِى السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

வானத்திலும் பூமியிலும் மறைந்துள்ளவற்றிலிருந்து எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. ( அல்குர்ஆன்: 27: 75 )

اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ

நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும், (நன்மை தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும், நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும் நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். ( அல்குர்ஆன்: 36: 12 )

اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْم

நிச்சயமாக, இது சிறப்பு மிக்க குர்ஆனாகும்.

فِىْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ‏

பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.

 

لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள். ( அல்குர்ஆன்: 56: 77-79 )

وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَـكُمْ اَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِه وَمَا يُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا يُنْقَصُ مِنْ عُمُرِهٖۤ اِلَّا فِىْ كِتٰبٍؕ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏

அன்றியும், அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான்; அவன் அறிவைக் கொண்டேயல்லாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; இவ்வாறே வயதானவரின் வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைக்கப்படுவதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது, அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும். ( அல்குர்ஆன்: 35: 11 )

مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ

பூமியிலோ, அல்லது உங்களிலோ எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். ( அல்குர்ஆன்: 57: 22 )

لِكُلِّ اَجَلٍ كِتَابٌ‏

ஒவ்வொரு தவணைக்கும் ஓர் (பதிவு) ஏடு உள்ளது.

 يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ ‌وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ‏

(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்துவிடுவான்; (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான்; அவனிடத்திலேயே மூலப்பதிவேடும் இருக்கிறது. ( அல்குர்ஆன்: 13: 38, 39 )

كِرَامٍۢ بَرَرَةٍ

(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள். ( அல்குர்ஆன்: 80: 16 )

فِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ

பாதுகாக்கப்பட்ட (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பலகையில் உள்ளது. ( அல்குர்ஆன்: 85: 22 )

லவ்ஹுல் மஹ்ஃபூள் எப்படி இருக்கும்?

روى الحافظ أبو القاسم الطبراني بسنده إلى النبي صلى الله عليه وسلم أنه قال: [إن الله خلق لوحاً محفوظاً من درة بيضاء، صفحاتها ياقوتة حمراء، قلمه نور، وكتابه نور، لله فيه كل يوم ستون وثلاثمائة لحظة، وعرضه ما بين السماء والأرض، ينظر فيه كل يوم ستين وثلاثمائة نظرة- يخلق ويرزق، ويميت ويحيي، ويعز ويذل، ويفعل ما يشاؤه]". رواه الإمام الطبراني مرفوعاً إلى النبي صلى الله عليه وسلم

நிச்சயமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் லவ்ஹுல் மஹ்ஃபூளை வெண் முத்துக்களால் படைத்தான். அதனுடைய பக்கங்களை சிகப்பு நிற மரகதங்ளால் படைத்தான். லவ்ஹுல் மஹ்ஃபூளில் எழுதும் பேனாவை ஒளியாகவும் முழு லவ்ஹுல் மஹ்ஃபூளையும் ஒளியாகவும் படைத்துள்ளான். ஒவ்வொரு நாளும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்னூற்று அறுபது தடவைகள் அதைப் பார்க்கின்றான்.  அவன் நாடிய விதத்தில் அவன் நாடியவர்களுக்கு படைக்கின்றான், வாழ்வாதாரங்கள் வழங்குகின்றான். அவன் நாடிய விதத்தில் அவன் நாடியவர்களை

உயிர் வாழச் செய்கின்றான். மரணிக்கச் செய்கின்றான். அவன் நாடிய விதத்தில் அவன் நாடியவர்களுக்கு கண்ணியம் அளிக்கின்றான். இழிவைத் தருகின்றான். ( நூல்: அகீததுத் தஹாவிய்யா, தப்ரானீ  )

نقل الواحدي في تفسبره: «أن طوله ما بين السماء والأرض سبع مرات،وعرضه ما بين المشرق والمغرب،

 معلق بالعرش مكتوب فيه إلى يوم القيامة» رواه البغوي في تفسيره أيضاً (4/472) عن ابن عباس

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- 'லவ்ஹுல் மஹ்ஃபூள் உடைய நீளமாகிறது வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள ஏழு மடங்கு தூரமாகும். அதனுடைய அகலமாகிறது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமாகும். லவ்ஹுல் மஹ்ஃபூள் அர்ஷில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. மறுமை நாள் வரை உள்ள அனைத்து காரியங்களும் அதில் எழுதப்பட்டுள்ளன. ( நூல்: தஃப்ஸீர் அல் பغக்வீ )

லவ்ஹுல் மஹ்ஃபூள் எங்கிருக்கிறது?

هناك اختلافات في توصيف اللوح المحفوظ بحسب المفسرين .جاء في كتاب فتح الباري «ان اللوح المحفوظ هو فوق العرش» كما ذكر القرطبي عن ابن عباس أن: «اللوح من ياقوتة حمراء، أعلاه معقود بالعرش، وأسفله في حِجْر ملك يقال له ماطريون... ينظر الله عز وجل فيه كل يوم ثلاثمائة وستين نظرة»؛ وعن أنس أنه قال: «إن اللوح المحفوظ هو في جبهة إسرافيل»؛ وعن مقاتل أن: «اللوح المحفوظ عن يمين العرش» 

லவ்ஹுல் மஹ்ஃபூள் எங்கிருக்கிறது என்பதில் குர்ஆனின் விரிவுரையாளர்களிடம்  பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

 

அர்ஷுக்கு மேல் இருக்கிறது என்றும், லவ்ஹுல் மஹ்ஃபூளின் மேல் பகுதி அர்ஷின் முகட்டிலும், அதன் அடிப்பகுதி ஒரு மலக்கின் மடியிலும் இருக்கிறது என்றும், இஸ்ராஃபீல் அலை அவர்களின் நெற்றியில் இருக்கிறது என்றும், அர்ஷின் வலது பக்கத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.  எனினும், பல்வேறு முஃபஸ்ஸிரீன்கள் அர்ஷில் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதையே குறிப்பிடுகின்றனர். அல்லாஹ்வே நன்கறிந்தவன்!

லவ்ஹுல் மஹ்ஃபூளுக்கும் விசாரணை உண்டு...

ومنها: ما أخرجه أبو الشيخ أيضاً عن أبي سنان قال: اللوح المحفوظ معلق بالعرش فإذا أراد الله أن يقضي بشيء كتب في اللوح المحفوظ فيجيىء اللوح حتى يقرع جبهة إسرافيل فينظر فيه فإن كان إلى أهل السماء دفعه إلى ميكائيل، وإن كان إلى أهل الأرض دفعه إلى جبريل، فأول ما يحاسب يوم القيامة اللوح يدعى به ترعد فرائصه فيقال له: هل بلغت؟ فيقول: نعم، فيقول: من يشهد لك فيقول: إسرافيل، فيدعى إسرافيل فترعد فرائصه، فيقال: هل بلغك اللوح؟ فإذا قال: نعم، قال اللوح: الحمد لله الذي نجاني من سوء الحساب .

லவ்ஹுல் மஹ்ஃபூள் அர்ஷில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு கட்டளையை செயல்படுத்த நாடினால் லவ்ஹுல் மஹ்ஃபூளில் அதை பதிவு செய்து விடுவான். அதை எடுத்துக் கொண்டு லவ்ஹுல் மஹ்ஃபூள் நேராக இஸ்ராஃபீல் (அலை) அவர்களிடம் சென்று அவர்களின் நெற்றியில் அந்த இறைவனின் கட்டளையை நகலெடுத்து விடும். அதை இஸ்ராஃபீல் (அலை) அவர்கள் பார்ப்பார்கள். பின்னர் அல்லாஹ்வின் அந்த கட்டளை வான் மண்டலத்தோடு தொடர்புடையதாக  இருந்தால் அதை மீக்காயீல் அலை அவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். அல்லாஹ்வின் அந்த கட்டளை பூலோகத்தோடு  தொடர்புடையதாக  இருந்தால் அதை ஜிப்ரயீல் அலை அவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

நாளை மறுமையில் அல்லாஹ்வின் படைப்புகளில் லவ்ஹுல் மஹ்ஃபூளே முதன் முதலாக கேள்வி கணக்குக்காக அழைக்கப்படும். பின்னர் அதனிடம் "உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றினாயா?" என்று கேட்கப்படும். அதற்கு, லவ்ஹுல் மஹ்ஃபூள் "ஆம்! என்று சொல்லும். அப்போது, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது என்று கேட்கப்படும். அதற்கு லவ்ஹுல் மஹ்ஃபூள் "இஸ்ராஃபீல் (அலை) இருக்கிறார், அவர் தான் சாட்சி என்று கூறும்". அப்போது, இஸ்ராஃபீல் அழைக்கப்பட்டு, "உம்மிடம் லவ்ஹுல் மஹ்ஃபூள் அல்லாஹ்வின் கட்டளையை ஒப்படைத்ததா?" என்று கேட்கப்படும். அதற்கவர், "ஆம்! என்னிடம் ஒப்படைத்தது" என்பார். இதைக் கேட்டதும் லவ்ஹுல் மஹ்ஃபூள் "கடுமையான விசாரணையில் இருந்து என்னைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!" என்று கூறும். ( நூல்: அல் மஜாலிஸுல் வஅளிய்யா ஃபீ ஷரஹி அஹாதீஸி ஃகைரில் பரிய்யா, ஷரஹுல் புகாரி லிஸ் ஸஃபீரீ (ரஹ்) …)

இன்னொரு ரிவாயத்தில்....விசாரணை இஸ்ராஃபீல் அலை அவர்களிடம் இருந்து துவங்கும் என்று வருகிறது. அந்த விசாரணையை அல்லாஹ்வே கேட்பான் என்றும் வருகிறது.

ومنها ما أخرجه ابن المبارك في الزهد عن حيان بن أبي جبلة يسنده قال: أول من يدعى يوم القيامة إسرافيل فيقول الله له: هل بلغت عهدي؟ فيقول: نعم ربي قد بلغت جبريل، فيدعى جبريل فيقال: هل بلغك إسرافيل عهدي، فيقول: نعم فتجلى عن إسرافيل، فيقول لجبريل: ما صنعت في عهدي؟ فيقول: يارب بلغت الرسل، فتدعى الرسل فيقال لهم: هل بلغكم جبريل عهده؟ فيقولون: نعم

முதல் முதலாக இஸ்ராஃபீல் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, அல்லாஹ் அவரிடம்"என்னுடைய கட்டளையை (ஒப்பந்தத்தை) ஒப்படைத்தீரா?" என்று கேட்பான். அதற்கவர், "ஆம்! ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன்" என்பார்.

ஜிப்ரயீல் (அலை) அவர்களை விசாரணைக்காக அழைத்து, அல்லாஹ் அவரிடம்"என்னுடைய கட்டளையை (ஒப்பந்தத்தை) இஸ்ராஃபீல் (அலை) ஒப்படைத்தாரா?" என்று கேட்பான். "ஆம்! என்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறுவார்கள். "யாரிடம் ஒப்படைத்தீர்" என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் "இறைத்தூதர்களிடம் ஒப்படைத்து விட்டேன்" என்பார்கள். அப்போது, அல்லாஹ் "இறைத்தூதர்களிடம் உங்களிடம் ஜிப்ரயீல் (அலை) என்னுடைய கட்டளையை (ஒப்பந்தத்தை)  ஒப்படைத்தாரா?" என்று கேட்பான். அதற்கு, இறைத்தூதர்கள் "ஆம்" ஒப்படைத்தார் என்று கூறுவார்கள்.
(
நூல்: அ
زஜ் - زஜுஹ்து லிஇமாமி இப்னுல் முபாரக் (ரஹ்) …)

أشرف الملائكة وأكرمهم أربعة جبريل وميكائيل وإسرافيل وعزرائيل، ويدل ذلك ما أخرجه أبو الشيخ عن عكرمة بن خالد أن رجلاً قال: يا رسول الله أي الملائكة أكرم على الله؟ فقال: «جبريل وميكائيل وإسرافيل وعزرائيل، فأما جبريل فصاحب الحرب وصاحب المرسلين، وأما ميكائيل فصاحب كل قطرة تسقط وكل ورقة تنبت، وأما ملك الموت فهو موكل بقبض روح كل عبد في بر وبحر هو عزرائيل .

رواه أبو الشيخ في العظمة (3/811) عن عكرمة بن خالد.

இக்ரிமா இப்னு காலித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒரு மனிதர் மாநபி ஸல் அவர்களின் சமூகம் தந்து "வானவர்களில் அல்லாஹ்விடம் அதிகம் கண்ணியம் வாய்ந்தவர்கள் யார்? என்று கேட்டார். அப்போது, நபி ஸல் அவர்கள் "ஜிப்ரயீல் (அலை) மீக்காயீல் (அலை) இஸ்ராஃபீல் (அலை) இஸ்ராயீல் (அலை) ஆகியோர் ஆவர். இதில் ஜிப்ரியீல் அலை அவர்கள் " போர்முனைகளில் உதவி புரிபவராகவும், இறைத்தூதர்களுக்கு இறைக்கட்டளையை எத்தி வைப்பவராகவும் இருக்கின்றார்கள். மீக்காயீல் அலை அவர்கள் மழை மற்றும் தாவரங்கள் மரங்கள் செடி கொடிகளை முளைக்கச் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். மலக்குல் மவ்த் எனப்படுபவர் கடல் மற்றும் கரைகளில் வாழும் மனித உயிர்களை கைப்பற்ற நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர் தான் இஸ்ராயீல் அலை ஆவார். ( நூல்: அல் ள்மா லிஇமாமி அபுஷ் ஷைக் (ரஹ்)....

قال بعض العلماء: نزل جبريل عليه السلام على آدم اثنتي عشرة مرة ونزل على إدريس أربع مرات، ونزل على نوح خمسين مرة، ونزل على إبراهيم أربعين مرة منها مرتان في صغره، ونزل على موسى أربعمائه مرة، ونزل على عيسى عشر مرات ثلاثاً في صغره وسبعاً في كبره ونزل على نبينا محمد صلى الله عليه وسلم أربعة وعشرين مرة صلوات الله وسلامه عليهم أجمعين.

"ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் 12 முறையும், இத்ரீஸ் (அலை) அவர்களிடம் 4 முறையும், நூஹ் (அலை)  அவர்களிடம் 50 முறையும், இப்ராஹிம் (அலை) அவர்களிடம் 40  முறையும், இதில் இரண்டு முறை குழந்தை பருவத்திலும், மூஸா (அலை) அவர்களிடம் 400 முறையும், ஈஸா (அலை) அவர்களிடம் பத்து முறை, இதில் மூன்று முறை குழந்தை பருவத்திலும், நமது நபி (ஸல்) அவர்களிடம் 24 முறையும் விண்ணுலகில் இருந்து பூமிக்கு வருகை தந்துள்ளார்கள்" என்று அறிஞர் பெருமக்கள் சிலர் கூறுகின்றனர். ( நூல்: ஷரஹுல் புகாரி லிஇமாமிஸ் ஸஃபீரீ (ரஹ்)....)

லவ்ஹுல் மஹ்ஃபூளில் என்ன இருக்கின்றது?..

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:  لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي  رواه البخاري

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (லவ்ஹுல் மஹ்ஃபூழ்என்னும்) பதிவேட்டில் அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டதுஎன்று எழுதினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி )

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«كَتَبَ اللهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ، قَالَ: وَعَرْشُهُ عَلَى الْمَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - "அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது". அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ்(ரலி), (நூல்: முஸ்லிம் )

 

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، وَعَقَلْتُ نَاقَتِي بِالْبَابِ، فَأَتَاهُ نَاسٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا بَنِي تَمِيمٍ»، قَالُوا: قَدْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا، مَرَّتَيْنِ، ثُمَّ دَخَلَ عَلَيْهِ نَاسٌ مِنْ أَهْلِ اليَمَنِ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا أَهْلَ اليَمَنِ، إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ»، قَالُوا: قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالُوا: جِئْنَاكَ نَسْأَلُكَ عَنْ هَذَا الأَمْرِ؟ قَالَ: «كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى المَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ، وَخَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ» فَنَادَى مُنَادٍ: ذَهَبَتْ نَاقَتُكَ يَا بْنَ الحُصَيْنِ، فَانْطَلَقْتُ، فَإِذَا هِيَ يَقْطَعُ دُونَهَا السَّرَابُ، فَوَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَرَكْتُهَا

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!என்று கூறினார்கள். அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்என்று பதில் கூறினார். பிறகு, ‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டதுஎன்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அப்படியேவிட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)என்று நான் ஆசைப்பட்டேன். ( நூல்: புகாரி )

1)   திருமறைக்குர்ஆனும்.... லவ்ஹுல் மஹ்ஃபூளும்....

اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ‏ فِىْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ‏

நிச்சயமாக, இது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள சங்கை மிக்க குர்ஆன் ஆகும்.

 لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏

அதனைத் தூய்மையான (வான)வர்களைத் தவிர (வேறெவரும்) தொட மாட்டார்கள்.

 تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏

(இது)அகிலத்தாரின் அதிபதியால்  இறைக்கியருளப்பட்டதாகும். ( அல்குர்ஆன் 56: 77-80 )

بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙفِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ 

(காஃபிர்கள் பேசிக் கொள்வது போல்) அன்றி;இது லவ்ஹுல் மஹ்ஃபூளில் - (பதிவாகி) பாது காக்கப்பட்ட கீர்த்திமிகு   குர்ஆனாகும். ( அல்குர்ஆன்:  21,22)

 

وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ‏

 نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ‏عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ‏ بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيْنٍؕ‏

மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இரட்சகனால் இறக்கியருளப்பட்டதாகும். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பவராக  இருப்பதற்காக ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) (இதை) உம் இதயத்தின் மீது தெளிவான அரபி மொழியில் இதைக் கொண்டு இறங்கினார். (அல்குர்ஆன்:192-194)

மேற்படி இறைவசனங்கள் அல்குர்ஆனுக்கும் லவ்ஹுல் மஹ்ஃபூளுக்கும் இடையேயான தொடர்பை சுட்டிக் காட்டுகிறது.

ஒட்டு மொத்த அல்குர்ஆனிய வசனங்களும் இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது முழுமையாக ஒரே தடவையில் ஏன் இறக்கி  வைக்கப்படவில்லை என்று மக்கா இணைவைப்பாளர்கள் விமர்சனம் ஒன்றை முன் வைத்தனர்.

மக்கா இணைவைப்பாளர்களின் விமர்சனத்திற்கு பின்வரும்   வசனங்களின் மூலம் பதிலடி தரப்பட்டுள்ளது.

وَقُرْءَانًا فَرَقْنَٰهُ لِتَقْرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكْثٍۢ وَنَزَّلْنَٰهُ تَنزِيلًا (الإسراء -)

நபியே நீர் மக்கள் மத்தியில் அதனை கொஞ்சம் கொஞ்சமாக ஓதிக் காண்பிப்பற்காக நாமே (இந்தக்) குர்ஆனை கட்டம் கட்டமாக இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன்: 17:106 )

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةً وَٰحِدَةً كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ وَرَتَّلْنَٰهُ تَرْتِيلًا

(الفرقان - 32)

இன்னும்: இந்தக் குர்ஆன் இவர் மீது (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறனர்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இதனைப் படிப்படியாக நாம் இறக்கி வைத்தோம்.( அல்குர்ஆன்: 25: 32 )

 

புனித குர்ஆன் பின்வரும் முக்கிய மூன்று கட்டங்களைக் கொண்டதாக காணப்பட்டதாக குர்ஆனிய அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

1) முதலாவது கட்டம்: - லவ்ஹூல் மஹ்பூலில் பதியப்படல்.

بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙفِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ 

(காஃபிர்கள் பேசிக் கொள்வது போல்) அன்றி; இது லவ்ஹுல் மஹ்ஃபூளில் - (பதிவாகி) பாதுகாக்கப்பட்ட கீர்த்திமிகு குர்ஆனாகும். ( அல்குர்ஆன்: 85: 21,22 )

2) இரண்டாவது கட்டம்: - லவ்ஹூல் மஹ்பூலில் இருந்து முதலாவது வானத்தில் உள்ள பைத்துல் இஸ்ஸாவிற்கு ஒட்டு மொத்த குர்ஆனும் இறக்கப்படல்.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) (என்ற ஓர்) இரவில் இறக்கிவைத்தோம்.(அல்குர்ஆன்: 97: :1 )

روى النسائي في "السنن الكبرى" (7 / 247)، وابن أبي شيبة في "المصنف" (16 / 469)، والطبري في "التفسير" (3 / 188 - 189)، والحاكم في "المستدرك" (2 / 223)، وغيرهم، بأسانيدهم عن الْأَعْمَشِ، عَنْ حَسَّانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: " فُصِلَ الْقُرْآنُ مِنَ الذِّكْرِ، فَوُضِعَ فِي بَيْتِ ‌الْعِزَّةِ فِي السَّمَاءِ الدُّنْيَا، فَجَعَلَ جِبْرِيلُ عليه السلام يَنْزِلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُرَتِّلُهُ تَرْتِيلًا "، وهذا لفظ النسائي.

லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் பாதுகாக்கப்பட்ட பலகையில் இருந்து முதல் வானத்தில் அதாவது கீழ் வானத்தில் உள்ள பைத்துல் இஸ்ஸா (கண்ணியமிக்க வீடு)என்பதற்கு இன்ஸால் முறையில் இறக்கப்பட்டது.இதனை பைத்துல் மஃமூர் என்றும் அழைக்கப்படுகிறது. 

முதல் வானத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் நாற்பதாவது அகவை தொட்டு 23 ஆண்டுகள் தன்ஸீல் முறையில் இறக்கப்பட்டது. 

இந்த விவரங்களில் திருக்குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட தலங்களாக நாம் அறிபவை மூன்றாகும்: 

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏. 

 நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கவைத்தோம் ( அல்குர்ஆன்: 44: :43 ), 

என்றும், மற்றொரு வசனம் ரமளான் மாதத்தில் என்றும்  குறிப்பிடுகின்றன. 

(3) மூன்றாவது கட்டம்: 

இறைத் தூதரின் 40 -63 வரையிலான 23 வருட கால நபித்துவ காலங்களில் நிலைமைகளுக்கு ஏற்ப இறக்கியருளப்பட்டது.

2) கழா கத்ர் - விதியும்.... லவ்ஹுல் மஹ்ஃபூளும்.....

இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையில் ஒன்று தான் விதியைப் பற்றிய நம்பிக்கை.

 

நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் என்று விதியைக் குறித்து நம்ப வேண்டும். மேலும், ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே அல்லாஹ் அதனை அறிந்து வைத்துள்ளான். அதனை "லவ்ஹுல் மஹ்பூழ்" எனும் ஏட்டில் அதை குறித்து எழுதி வைத்துள்ளான் என்றும் நம்பவேண்டும். அல்லாஹ் நாடியது நடக்கும்; அவன் நாட்டமின்றி எதுவும் நடக்காது; அவன் அனைத்திற்கும் ஆற்றல் உடையவன். அவன் தான் அனைத்தையும் படைத்தான். தான் நாடியதைச் செய்யக்கூடியவன். 

விதியைக் குறித்து பின்வரும் நான்கு படித்தரங்களையும் ஈமான் கொள்வது கட்டாயமாகும். இதில் எதையாவது ஒன்றை மறுத்தால் விதியின் மீதுள்ள நம்பிக்கை முழுமைபெறாது. 

1) அல்லாஹ்வின் அறிவு (அல்இல்மு). அல்லாஹ் அதனை அறிந்து வைத்துள்ளான். 

 அதாவது உலகில் படைக்கப்பட்ட இன்னும் படைக்கப்படாத சாத்தியமான, சாத்தியமற்ற அனைத்தையும் அல்லாஹ் அவனது ஞானத்தால் சூழ்ந்தறிவான் நடந்தவை, நடக்க இருப்பவை இது வரை நடக்காத ஒன்று அது நடந்தால் எப்படியிருக்கும் என்பதையும் அவன் அறிவான். 

2) அல்லாஹ்வின் எழுத்து (அல்கிதாபா). மறுமை நாள் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் அல்லாஹ் லவ்ஹுல் மஹ்ஃபூளில் எழுதி வைத்துள்ளான். 

3) அல்லாஹ்வின் நாட்டம் (அல்மஷீஆ) அல்லாஹ் நாடியது நடக்கும் அவன் நாட்டமின்றி எதுவும் நடக்காது. 

4) அல்லாஹ்வின் படைப்பு (அல்கல்க்)

அல்லாஹ் அனைத்தையும் படைக்க ஆற்றலுடையவன். 

கதர் அல்லது கத்ர் எனும் அரபுச்சொல்லுக்கு விதி, அளவு என்று பொருள். அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தும்போது அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் முடிவு செய்துள்ள விதியைக் குறிப்பிடும். அனைத்தையும் ஒரு வரையறைப்படி, விதிப்படி அவன் படைத்துள்ளான்.

விதியின் மீது நம்பிக்கைகொள்வது இறைநம்பிக்கையின் ஆறு தூண்களில் ஒன்றாகும்.

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ: ” إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ

ஒருவரின் படைப்பு அவரது தாய் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) கருக்கட்டியாக மாறுகிறது. பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) சதைக் கட்டியாக மாறுகிறது. பின்னர் ஒரு வானவரை அல்லாஹ் அனுப்பி இவரது செயல்பாடுகளைப் பதிவு செய்! இவரது செல்வத்தைப் பதிவு செய்! இவரது மரண வேளையைப் பதிவு செய்! இவர் நல்லவரா கெட்டவரா என்பதைப் பதிவு செய்!என நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. பின்னர் அவருக்கு உயிர் ஊதப்படுகிறது. உங்களில் ஒரு மனிதனுக்கும் சொர்க்கத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (நல்ல) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். உங்களில் ஒரு மனிதனுக்கும் நரகத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (கெட்ட) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து விடுவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

2)   லவ்ஹுல்மஹ்‌ஃபூலில்‌ அனைத்து விதிகளையும் ‌அல்லாஹ்‌ எழுதி வைத்துள்ளான்‌ என நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَا السَّاعَةُ قُلْ بَلَى وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ عَالِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَلَا أَصْغَرُ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرُ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ

அவன் மறைவான(யா)வற்றையும்‌ அறிந்தவன்‌; வானங்களிலோ, பூமியிலோ ஓர்‌ அணுவளவும் ‌அவனைவிட்டு மறையாது; இன்னும் அதைவிடச் சிறியதோ  சிறியதோ, இன்னும்‌ பெரியதோ ஆயினும்‌ தெளிவான (லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூல்‌) ஏட்டில் பதிவுசெய்யப்படாமல்‌ இல்லை என்று கூறுவீராக." ( அல்குர்‌ஆன்: ‌34: 03 ).

عن عبادة بن الصامت رضي الله عنه قال: يا بُنَيَّ، إنك لن تجد طعم الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك، وما أخطأك لم يكن ليصيبك، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إن أول ما خلق الله القلم، فقال له

اكتبفقال

رب، وماذا أكتب؟ قال

 اكتب مقادير كل شيء حتى تقوم الساعة

முதன்‌ முதலில்‌ அல்லாஹ்‌ எழுதுகோலைப்‌ படைத்து, அதற்கு 'எழுது' என கட்டளையிட்டான்‌. 'இறைவா, நான் ‌எதை எழுதுவது?' எனக்கேட்க, 'யுகமுடிவு நாள் வரும் வரைக்குமான அனைத்தினதும் விதிகளை எழுது' எனக் கூறினான்‌." ( நூல்: அபூதாவூத், திர்மிதி )

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ

அல்லாஹ் தனது அறிவாற்றல் பற்றியும்‌, விதிகளை எழுதி வைத்துள்ளது குறித்தும் பின்வரும்‌ அல்குர்‌ஆன்‌ வசனத்தில்‌ குறிப்பிடுகிறான்‌ நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும்‌, பூமியிலும்‌ உள்ளவற்றை நன்கறிகிறான்‌ என்பதை நீர் ‌அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்‌) ஒரு புத்தகத்தில்‌ (பதிவுசெய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும்‌ சுலபமானது." (அல்குர்‌ஆன்‌: 22: 70 ).

விதி முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் நாம் செயலாற்றாமல் இருக்கலாமா?

عن علي بن أبي طالب رضي الله عنه قال: كنا في جنازة في بقيع الغرقد فأتى رسول الله صلى الله عليه وسلم فقعد وقعدنا حوله ومعه مخصرة فنكس فجعل ينكث بمخصرته ثم قال: ما منكم من أحد ما من نفس منفوسة إلا وقد كتب الله مكانها من الجنة والنار وإلا قد كتبت شقية أو سعيدة قال: فقال رجل: يا رسول الله أفلا نمكث على كتابنا وندع العمل فقال من كان من أهل السعادة فسيصير إلى عمل أهل السعادة ومن كان من أهل الشقاوة فسيصير إلى عمل أهل الشقاوة ثم قرأ: {فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى}.

நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக பகீஉல் ஃகர்கத்பொது மையவாடியில் இருந்தோம்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள்.

பிறகு, “உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லைஎன்று சொன்னார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமாஎன்று கேட்டார்.  அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்என்று கூறினார்கள்.

 

மேலும் அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது.  நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்என்று கூறினார்கள்.

பிறகு யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்” (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி); ( நூல்: புகாரி )

இப்படி செய்திருந்தால் அப்படி ஆயிருக்குமே! என்று கூறக்கூடாது!

عن أبي هريرة، يبلغ به النبي صلى الله عليه وسلم؛ قال:«المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير، احرص على ما ينفعك، ولا تعجز، فإن غلبك أمر، فقل: قدر الله وما شاء فعل، وإياك واللو، فإن اللو تفتح عمل الشيطان 

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.  உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமேஎன்பதைச் சுட்டும்) லவ்எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். ( நூல்: முஸ்லிம் )

எழுதப்பட்ட விதியின் வழியாக அல்லாஹ் நம்மை எப்படி அழைத்துச் செல்கிறான் என்பதை இறைத்தூதர் யஅகூப் அலை மற்றும் யூஸுஃப் அலை ஆகியோரின் ஊடாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு உணர்த்துகின்றான்.

யூசுஃப் (அலை) அவர்களை பிரிந்து வாழ காரணமாக அமைந்த யஅகூப் அலை அவர்களின் வார்த்தை....

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏

قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ

நபி யூசுப் (அலை) அவர்கள் தன் தந்தையிடம் தந்தையே நான் ஒரு கனவு கண்டேன் அதில் பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் நான் எனக்கு சிரம் பணிவதைபோல் கனவு கண்டேன் என்று கூறினார்கள் அப்பொழுது நபி யாகூப் அலை அவர்கள் அல்லாஹ் நம் மகனுக்கு எதோ சிறப்பை கொடுக்க போகிறான் என்பதை உணர்ந்து அவர் கூறினார் மகனே இந்த கனவை பற்றி உன்னுடைய மற்ற சகோதர்களுக்கு கூறவேண்டாம் அவர்கள் ஏதேனும் உனக்கு தீங்கு செய்ய நேரலாம் ஏன் என்றால் நிச்சயமாக ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாக இருக்கிறான் என்று கூறினார்கள்.

இந்த கனவிற்குப் பின்னர் நபி யூசுப் (அலை) அவர்கள் மீது நபி யாகூப் அலை அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது எந்நேரமும் நபி யூசுப் (அலை) அவர்களுடன் இருப்பதையே விருபினார்கள். 

இதனைக் கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கும்  மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு காட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள் அதனை அல்லாஹ் தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

اِنَّ اَبَانَا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْن ‌ اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ

 (யூஸுஃபுடைய சகோதரர்கள்): "யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மை விட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர்; நாமோ (பலமுள்ள) ஒரு கூட்டத்தினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார்" என்று அவர்கள் கூறியதை (நினைவூட்டுவீராக)!

اۨقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَـكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَ تَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ‏

"யூஸுஃபைக் கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு பூமியில் எறிந்து விடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன் பின் நீங்கள் நல்ல மக்களாக ஆகிவிடுவீர்கள்" (என்று கூறிக்கொண்டார்கள்).

قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُـبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏

அவர்களில் ஒருவர்: "நீங்கள் யூஸுஃபைக் கொலை செய்யாதீர்கள்; நீங்கள் (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான பாழ்க்கிணற்றில் போட்டுவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பயணிகளில் சிலர் அவரை எடுத்துக்கொள்ளக்கூடும்" என்று கூறினார்.

قَالُوْا يٰۤاَبَانَا مَا لَـكَ لَا تَاْمَنَّا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ‏

(பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? நிச்சயமாக அவருக்கு நாங்கள் நன்மையை நாடுபவராக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.

 اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள் அவர் காட்டில் உள்ள பலங்களை புசித்துகொண்டும் எங்களுடன் விளையாடி கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாத்து கொள்பவராகவே இருக்கிறோம்.

 

அதற்க்கு நமது தந்தை யாகூப் அலை அவர்கள் கூறினார்கள் நீங்கள் அவரை அழைத்து செல்வது எனக்கு கவலையை தருகிறது நீங்கள் விளையாடி கொண்டிருக்கும் வேளையில் அவர் பாரமுகமானால் அவரை ஓநாய் தின்றுவிடுமே என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்

அதற்க்கு அவர்கள் ஒரு கூட்டத்தினராக நாங்கள் இருந்தும் எங்களை மீறி அவரை ஓநாய் தின்றுவிடுமானால் நாங்கள் நஷ்டக்வாளிகளாக ஆகி விடுவோம் என்று கூறினார்கள் இதனை கண்ட நமது தந்தை நபி யாகூப் அலை அவர்கள் இவ்வாறு அலைகிறார்கள் அப்படியாவது சகோதர் மீது பாசம் வரட்டும் என்று அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள் அவ்வாறே அந்து பத்து சகோதரர்களும் திட்டம் செய்தது போல் அவர்கள் ஒரு பாழடைந்த ஒரு கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்

அப்பொழுது அல்லாஹ் நபி யூசுப் அலைஅவர்களுக்கு வகி அறிவித்தான் நிச்சயமாக இந்த காரியத்தை பற்றி ஒரு நாள் நீர் அந்த சகோதரர்களிடம் கேட்பீர் என்று

அவ்வாறு இருக்க பொழுது சாய்ந்த வேளையில் அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதவர்களாக ஓடினார்கள்

தந்தையே நாங்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு விளையாடி கொண்டு யூசுபிடம் எங்களது பொருட்களை கொடுத்துவிட்டு விளையாட சென்று விட்டோம் அந்த சமயத்தில் யூசுபை ஓநாய் அடித்து தின்று விட்டது .

நாங்கள் எவ்வளவு உண்மையாளர்களாக இருந்தும் நீங்கள் எங்களை நம்ப கூடியவர்களாக இல்லை என்று கூறினார்கள்

மேலும் தங்களது வாதத்தை வலுப்படுத்த நபி யூசுப் (அலை) அவர்களது சட்டையை கழற்றி அதில் பொய்யான ரத்தத்தை நனைத்து தந்தை நபி யாகூப் அலை அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள் எவ்வளவுதான் திருடன் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டிருப்பான் அவ்வாறு அந்த சட்டையை நபி யாகூப் அலை அவர்கள் கண்டபொழுது அந்த சட்டை எங்கும் கிழியாமல் இருப்பதை கண்ட அவர் புரிந்துகொண்டார் மேலும் அவர் கூறினார் இல்லை உங்களது மனம் ஒரு தீய காரியத்தை அழகாக காட்டிவிட்டது. ஆகவே இந்த சம்பவத்திற்கு நான் பொறுமையாக இருப்பதே நன்று ஆகையால் யூசுபை காக்க அல்லாஹுவே போதுமானவன் அவனிடமே நான் உதவி தேடுகிறேன் என்று கூறினார்.

அதே போன்று யூசுஃப் அலை அவர்களும் சிறைவாசம் அனுபவிக்க அவர்களின் துஆவே காரணமாக அமைந்தது.

قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ‌ وَاِلَّا تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ‏

(அதற்கு) அவர், "என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தைவிடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியைவிட்டும் நீ என்னை நீக்கவில்லையானால், நான் இவர்கள்பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகி விடுவேன்" என்று (பிரார்த்தித்தவராகக்) கூறினார்.

وَقَالَ لِلَّذِىْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِىْ عِنْدَ رَبِّكَ

 فَاَنْسٰٮهُ الشَّيْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِى السِّجْنِ بِضْعَ سِنِيْنَ‏

அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், "என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவாயாக!" என்றும் சொன்னார்; ஆனால், (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப்பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே, அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் தங்கினார்.

பாக்கியங்கள் நிறைந்த பராஅத் இரவின் அனைத்து பரக்கத்துகளையும், அல்லாஹ்வின் மன்னிப்பையும், அவனது நெருக்கத்தையும், அவனது பொருத்தத்தையும் பெற்ற மேன்மக்களில் ஒருவராக நம்மில் ஒவ்வொருவரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆக்கியருள்வானாக!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஷஅபானில் பரக்கத் செய்து ரமழானை அடையச் செய்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments: