இருள் அகற்றும்
இறைமறை
தராவீஹ் சிந்தனை -
2.
வாக்குறுதியை நிறைவேற்றுவோம்!
இரண்டாம் நாள்
தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்து, முதல் நாள் நோன்பை நிறைவு
செய்து அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை
வழங்குவானாக! ஆமீன்!
அல்பகரா
அத்தியாயம் ஹிஜ்ராவிற்குப் பின்னர் மதீனாவில் இறக்கியருளப்பட்ட ஓர்
அத்தியாயமாகும். நேற்றும் இன்றும் ஓதி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஓதப்பட்ட
ஒன்னேகால் ஜுஸ்வின் பெரும் பகுதி சட்டதிட்டங்கள் குறித்தானதாகும்.
வஸிய்யத் எனும்
மரண சாஸனம்,
கிஸாஸ் எனும் பழிவாங்கல், நோன்பு,
ஹஜ்,
உம்ரா, திருமணம், தலாக் - விவாகவிலக்கு,
பால்குடி, வட்டி, வியாபாரம்,
கடன், போர், வீட்டின் ஒழுங்குகள்,
தர்மத்தின் வகைகள், சில நபிமார்களின்
செய்திகள்,
அல்லாஹ்வின் தனித்துவமான தன்மைகள் என பல்வேறு அம்சங்கள்
குறித்து,
இறைவனோடும், இறையடியார்களோடும்
தொடர்பிலிருக்கிற சட்டங்கள் குறித்தும் அதிகம் அல்லாஹ் பேசுகின்றான்.
இன்றைய தொழுகையில்
ஓதப்பட்ட இறைவசனங்களில் துவக்கமாக ஓதப்பட்ட 177 வது வசனம் நன்மை
என்றால் என்ன?
என்ற கேள்விக்கு மிகவும் விரிவாக விடை தரும் முகமாக
அமைந்துள்ளதை காண முடிகிறது.
நன்மை என்றால்
எவையெல்லாம் அடங்கும் என்பதையும்
இந்த இறைவசனம் மிக அழகாக தெளிவுபடுத்திக்காட்டுகிறது.
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ
وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ
ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ
وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ
بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ
وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ
”நன்மை என்பது உங்கள்
முகங்களைக் கிழக்கிலோ,
மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு)நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும்,
நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும்,
அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள்,
கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து
வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம்
வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை,
இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும்,
பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன்: 2: 177 )
இந்த இறைவசனத்தில்
ஈமான் கொள்வதில் ஆரம்பித்து, ஹுகூக்குல் இபாத் என்று
சொல்லப்படுகிற அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமைகளையும்,ஹுகூக்குல்லாஹ் என்று சொல்லப்படுகிற இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகள்
அத்துணையும் மொத்தமாக சேர்த்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பெயர் தான் பி(B)ர் என்று சொல்லப்படுகிற நன்மையான காரியங்கள் ஆகும்.
நன்மை செய்வதால் கிடைக்கும் பலன் என்ன?
قال
الله تبارك وتعالى: «وبشّر المحسنين»(سورة الحج، الآية : ٣٧ ) قال العلاّمة
المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:- « وبشّر المحسنين » بعبادة
الله بأن يعبدوا الله كأنهم يرونه، فإن لم يصلوا إلى هذه الدرجة فليعبدوه معتقدين
وقت عبادتهم اطّلاعه عليهم، ورؤيته إيّاهم.
والمحسنين لعباد الله بجميع وجوه الإحسان من نفع مال، أو علم،
أو جاه، أو نصح، أو أمر بمعروف، أو نهي عن منكر، أو كلمة طيبة ونحو ذلك.
فالمحسنون
لهم البشارة من الله بسعادة الدنيا والآخرة، وسيحسن الله إليهم كما أحسنوا في
عبادته ولعباده، قال الله تعالى: « هل جزاء الإحسان إلا الإحسان »- سورة
الرحمن، الآية: ٦٠ - « للذين أحسنوا الحسنى وزيادة » - سورة
يونس، الآية: ٢٦ - }
[ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسعدي،
ص - ٤٨٨ ]
وَبَشِّرِ الْمُحْسِنِينَ
“நன்மை செய்வோருக்கு
(நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக!”
(
அல்குர்ஆன்: 22: 37 )
அல்குர்ஆன்
விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள்
இவ்வசனத்தை இவ்வாறு விளக்கப்படுத்துகின்றார்கள்:-
வணக்க வழிபாட்டை
அல்லாஹ்வுக்கு நிறைவேற்றுவதுகொண்டு நன்மை செய்வோருக்கு (நபியே) நீங்கள் நன்மாராயம்
கூறுங்கள்! அந்த வணக்கத்தை அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது
போல நிறைவேற்றுவார்கள்; அந்நிலைக்கு அவர்கள்
செல்லவில்லை என்றால், தமது வணக்கத்தை
நிறைவேற்றும் நேரத்தில் அல்லாஹ்வின் கண்காணிப்பும் அவனது பார்வையும்
இருந்துகொண்டிருக்கிறது என்று உறுதிகொண்டவர்களாக அவனை அவர்கள் வணங்குவார்கள்.
அல்லாஹ்வின்
அடியார்களுக்கு நன்மை செய்வோராகவும் அவர்கள் இருப்பார்கள். பணம் மற்றும் பொருளுதவி, அல்லது கல்வி,
அல்லது பட்டம் பதவி, அல்லது உபதேசம், அல்லது நன்மையை ஏவுதல்,
அல்லது தீமையைத் தடுத்தல், அல்லது அழகிய வார்த்தை போன்ற அனைத்து வகையான நன்மைகளையும் அவர்கள்
செய்வார்கள்.
நன்மை
செய்வோருக்கு அல்லாஹ்விடமிருந்து
ஈருலக நற்பாக்கியம் கிடைக்கின்றது. அல்லாஹ்வுடைய வணக்க
வழிபாட்டிலும்,
அவனுடைய அடியார்கள் விடயத்திலும் அவர்கள் நன்மை செய்ததுபோல்
அல்லாஹ்வும் அவர்களுக்கு (அதற்கான கூலியைக் கொடுத்து) உபகாரம் செய்வான். அல்லாஹ்
கூறுகிறான்:
هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
“ நன்மைக்குக் கூலி
நன்மையேயன்றி வேறென்னதான் இருக்கிறது?!”
(
அல்குர்ஆன்: 55: 60 )
لِلَّذِينَ
أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا
ذِلَّةٌ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
" நன்மை
செய்தோருக்கு அழகான கூலியும், மேலதிகமும் இருக்கின்றது” ( அல்குர்ஆன்: 10:
26 )
حَدَّثَنِي
هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ،
حَدَّثَنِي مُعَاوِيَةُ، – يَعْنِي ابْنَ صَالِحٍ – عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ
جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَوَّاسِ بْنِ سِمْعَانَ قَالَ :
أَقَمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ سَنَةً مَا
يَمْنَعُنِي مِنَ الْهِجْرَةِ إِلاَّ الْمَسْأَلَةُ كَانَ أَحَدُنَا إِذَا هَاجَرَ
لَمْ يَسْأَلْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ – قَالَ –
فَسَأَلْتُهُ عَنِ الْبِرِّ وَالإِثْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم “ الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالإِثْمُ مَا حَاكَ فِي نَفْسِكَ
وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ ”
நான் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஓராண்டுக் காலம் (மட்டும்) தங்கியிருந்தேன்.
அவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் தெரிந்துகொள்வ(து இயலாமல் போய் விடுமோ என்ப)தே
ஹிஜ்ரத் செய்(து மதீனாவில் வந்து நிரந்தரமாகக் குடியேறு)வதற்கு எனக்குத் தடையாக
இருந்தது. (நபியவர்கள் வெளியூரிலிருந்து வருபவர்களின் ஐயங்களுக்கு விளக்கம்
சொல்வதற்கு முன்னுரிமை அளித்து வந்தார்கள்) எங்களில் ஒருவர் ஹிஜ்ரத்
செய்து(மதீனாவுக்கு வந்து குடியேறி)விட்டால், அவர் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் எதைப் பற்றியும் கேட்பதில்லை. நான் நபியவர்களிடம் நன்மையைப்
பற்றியும் தீமையைப் பற்றியும் கேட்டேன்.
அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்),
“நன்மை என்பது, நற்பண்பாகும். தீமை
என்பது, எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ்
பின் ஸம்ஆன் (ரலி), ( நூல்: புகாரி )
வாக்குறுதியை நிறைவேற்றுவோம்!..
மேற்கூறிய
இறைவசனம் மற்றும் நபிமொழியை கவனத்தில் கொண்டு "வாக்குறுதியை
நிறைவேற்றுதல்" என்ற நற்பண்பு குறித்து இன்றைய தராவீஹ் சிந்தனையாக நாம்
பார்க்க இருக்கிறோம்.
வாக்குறுதிகளை
நிறைவேற்றுவது இறைவனின் பண்பாகும். மற்றும் அவனது தூதுவர்களின் பண்புகளில்
ஒன்றாகும்.
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا
غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللَّهِ لَا
يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ
‘யார் தம் இறைவனுக்கு
அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள்
இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின்
வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. (
அல்குர்ஆன்: 39:
20 )
இஸ்மாயீல் (அலை)
அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன் பேசுகையில் ‘அவர் வாக்கை காப்பாற்றுபவர்’ என்று
குறிப்பிடுகின்றான்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ
الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا
”(நபியே) இஸ்மாயீலைப்
பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும்,
நபியாகவும் இருந்தார்’. ( அல்குர்ஆன்: 19: 54 )
ஒரு மனிதன்
நன்நடத்தைகளுக்குச் சொந்தமானவன் என்பதற்குப் பல பண்புகள் சான்று வழங்கினாலும், அனைத்திற்கும் முதன்மையானது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.
حدثنا
محمد بن يحيى بن فارس النيسابوري، حدثنا محمد بن سنان، حدثنا إبراهيم بن طهمان، عن
بديل، عن عبد الكريم بن عبد الله بن شقيق، عن أبيه، عن عبد الله بن أبي الحمساء،
قال: بايعت النبي صلى الله عليه وسلم ببيع قبل أن يبعث وبقيت له بقية فوعدته أن
آتيه بها في مكانه، فنسيت، ثم ذكرت بعد ثلاث، فجئت فإذا هو في مكانه، فقال: «يا
فتى، لقد شققت علي، أنا هاهنا منذ ثلاث أنتظرك».
அப்துல்லாஹ் பின்
அபூஹம்ஸா கூறுகிறார்: ‘நபி ﷺ அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பு நான் அவர்களிடம் ஒரு வியாபாரம்
செய்தேன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை சிறிது இருந்தது. ‘இங்கே நில்லுங்கள்,
நான் அதை கொண்டு வந்து தருகிறேன்’ என்றேன். நானும் மறந்து போய்விட்டேன். மூன்று நாட்கள் கழித்து ஞாபகம் வந்ததும்
அங்கே சென்றேன். அதே இடத்தில் நபி ﷺ அவர்கள் இருந்தார்கள்.
என்னைப் பார்த்த நபியவர்கள், ‘இளைஞனே, நீ எனக்கு சிரமம் தந்து விட்டாய். நான் உன்னை எதிர்பார்த்து இங்கேயே மூன்று
நாட்கள் காத்திருக்கிறேன்’
என்றார்கள். ( நூல்: அபூதாவூத் )
روي أن
رسول الله صلى الله عليه وسلم كان وعد أبا الهيثم بن التهيان خادماً؛ فأتى بثلاثة
من السبى فأعطى اثنين وبقي واحداً، فأتت فاطمة رضي الله عنها تطلب منه خادماً
وتقول: ألا ترى أثر الرحى بيدي؟ فذكر موعده لأبي الهيثم فجعل يقول " كيف
بموعدي لأبي الهيثم؟ فآخثره به على فاطمة
பணிவிடைக்கு ஆள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்ட அபுல் ஹைஸம் (ரலி) அவர்களுக்கு நபி ﷺ அவர்கள் ஒரு பணியாளரைத்
தருவதாக வாக்களித்திருந்தார்கள். இதற்குப் பின் நபி ﷺ அவர்களிடத்தில் மூன்று போர்க்கைதிகள் கொண்டு
வரப்பட்டனர். இதனையறிந்து நபி ﷺ அவர்களிடம் பணியாளர் ஒருவரைப் பெற்றுச் செல்லலாம் என்று பாத்திமா (ரலி) அவர்கள்
வந்து தனது கரத்தை காட்டி எனது கரம் திருகை ஆட்டி காய்த்து போய்விட்டது. எனவே
எனக்கு ஒரு பணியாளரை தாருங்கள் என்று நபியவர்களிடம் கேட்டபோது, அதற்கு நபி ﷺ அவர்கள் அபுல் ஹைசமுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவு
கூர்ந்துவிட்டு சொன்னார்கள்."நான் உனக்கு அந்த பணியாளரை கொடுத்து விட்டால்
அபுல் ஹைஸமிற்கு நான் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவது?" என்று கேட்டார்கள். பாத்திமா (ரலி) அவர்களை விட அபுல் ஹைஸம் ( ரலி)
அவர்களுக்கு வழங்குவதையே நபி ﷺ அவர்கள்
தேர்ந்தெடுத்தார்கள். ( நூல். இஹ்யா )
وعن
جابرٍ قَالَ: قَالَ لِيَ النَّبيُّ ﷺ: لَوْ قَدْ جاءَ مالُ الْبَحْرَيْن قد
أَعْطَيْتُكَ هكَذا، وهكذا، وَهَكَذا، فَلَمْ يَجِئْ مالُ الْبَحْرَيْنِ حَتَّى
قُبِضَ النبيُّ ﷺ، فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْن أَمَرَ أبُو بَكْرٍ
فَنَادى:
مَنْ كَانَ لَهُ عنْدَ رسول اللَّه ﷺ عِدَةٌ أوْ دَيْنٌ فَلْيَأْتِنَا، فَأتَيتُهُ
وقُلْتُ لَهُ: إنَّ النَّبيَّ ﷺ قَالَ لي كَذَا وكَذَا، فَحثَى لي حَثْيَةً،
فَعَدَدْتُها
فَإذا هِي خَمْسُمِئَةٍ، فَقَالَ لِي: خُذْ مِثْلَيْهَا. متفقٌ عَلَيْهِ
ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
அல்லாஹ்வின்
தூதர் ﷺ அவர்கள் வாழும் போது பஹ்ரைனில் இருந்து பொருளாதாரம்
வந்தால் நான் இன்னின்னவாறு உமக்கு தருவேன் என்று கூறினார்கள். ஆனால், மா நபி ﷺ அவர்கள் வாழும் வரை பஹ்ரைனில் இருந்து எவ்வித செல்வமும்
வரவில்லை.
நபி ﷺ அவர்கள் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று விட்ட
பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஹ்ரைனின் கவர்னர் அலா இப்னு
ஹழ்ரமீ (ரழி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்கர் (ரழி), “யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தரவேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின்
தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம்
வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)” என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், “எனக்கு இவ்வளவும்,
இவ்வளவும், இவ்வளவும் தருவதாக
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். –
“இப்படிக் கூறும் போது, தம் இரண்டு கைகளையும்
ஜாபிர் (ரலி) அவர்கள் மூன்று முறை விரித்துக் காட்டினார்கள்” என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ (ரஹ்) கூறினார்கள் , அபூபக்கர் (ரழி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள். ( நூல்: புகாரி )
قال
حذيفة بن اليمان: "ما منعني أن أَشهَد بدرًا إلا أني خرجتُ أنا وأَبي حُسَيل،
قال: فأخذَنا كفارُ قريش، قالوا: إنكم تُريدون محمدًا، فقلنا: ما نريده، ما نريد
إلا المدينة، فأخذوا منَّا عهدَ الله وميثاقَه لننصرفَنَّ إلى المدينة، ولا
نُقاتِل معه، فأتينا رسولَ الله صلى الله عليه وسلم فأخبرْناه الخبرَ، فقال:
((انصرِفا، نَفِي لهم بعهدهم، ونستعين الله عليهم
ஹுதைஃபா பின்
அல்யமான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நான் பத்ருப் போரில்
கலந்து கொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல்
(எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷிக்
காபிர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன்
சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே
செல்கிறோம்”
என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக்
கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர்.
நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது
அவர்கள்,
“நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள்.
நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக
அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள். (
நூல்' முஸ்லிம் )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் மேன்மக்களில் ஒருவராய் நம்மை ஆக்கியருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment