Sunday, 2 March 2025

இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை – 3. அல்லாஹ்வை சாட்சியாக்குவோம்!!!

 

இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை – 3.

அல்லாஹ்வை சாட்சியாக்குவோம்!!!


மூன்றாம் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, இரண்டாம் நாள் நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமும், ஈமானுக்கு உரமும் தருகிற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரின் அமர்வையும் கபூல் செய்தருள்வானாக!

நம்முடைய நோன்புகளையும், தராவீஹ் தொழுகைகளையும் தான தர்மங்களையும், இதர வணக்க வழிபாடுகளையும் ஏற்றுக் கொள்வானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா ஆலு இம்ரான் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஓதப்பட்ட சூரா ஆலு இம்ரானின் இரண்டு இறை வசனங்கள் நம்முடைய செயல்களுக்கு நாம் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் சாட்சியாக்கி அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அப்படி ஒப்படைக்கும் போது அதற்கான பிரதிபலனை நாம் ஈருலகிலும் காண முடியும் என்ற பேருண்மையை பறை சாற்றி நிற்கின்றது.

வாழ்க்கையில் முக்கியமான சில தருணங்களில், சிக்கலான கால கட்டங்களில் நாம் செய்யும் மிக உன்னதமான நற்செயல்களின் போது அல்லாஹ்வை  நாம் சாட்சியாக்கிட வேண்டும்.

நமக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த சில செயல்கள் இருக்கும். அத்தகைய செயல்களின் போதும் நாம் அல்லாஹ்வை சாட்சியாக்கிட வேண்டும்.

யூசுஃப் அலை அவர்கள் அப்படித்தான் தமக்கும் தமதிறைவனுக்கும் தெரிந்த ஒரு காரியத்தில் அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள். அல்லாஹ் நபி யூசுஃப் அலை அவர்களை அந்த காரியத்தின் தீங்கிலிருந்து காப்பாற்றினான் என்கிறது அல்குர்ஆன்.

1.   ஒன்று, அல்லாஹ் தான் சாட்சியம் அளிப்பதாக கூறும் இறை வசனம்.

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا  بِالْقِسْطِ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ‏

அல்லாஹ், நீதியை நிலைநிறுத்தியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான்; மேலும், வானவர் (மலக்கு)களும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்); அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். ( அல்குர்ஆன்: 3: 18 )

ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் விடை பெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையின் நிறைவில் அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.

 

وبعد الانتهاء من خطبة الوداع سأل رسول الله -صلى الله عليه وسلم- الناس فقال: (وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّي، فَما أَنْتُمْ قَائِلُونَ؟ قالوا: نَشْهَدُ أنَّكَ قدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ، فَقالَ: بإصْبَعِهِ السَّبَّابَةِ، يَرْفَعُهَا إلى السَّمَاءِ وَيَنْكُتُهَا إلى النَّاسِ اللَّهُمَّ، اشْهَدْ، اللَّهُمَّ، اشْهَدْ ثَلَاثَ مَرَّاتٍ

"மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

கூடியிருந்தோர் நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்என்றார்கள்.

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள். ( நூல்: முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம் )

2.   இரண்டு, நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சீடர்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சாட்சியாக்கிய இறை வசனம்.

فَلَمَّاۤ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ قَالَ الْحَـوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ۚ اٰمَنَّا بِاللّٰهِ‌ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ‏

அவர்களில் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய) சீடர்கள்: "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கிறோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். திட்டமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்றும் நீர் சாட்சி கூறுவீராக!" எனக் கூறினர்.

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே, எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சீடர்கள் பிரார்த்தித்தனர்). ( அல்குர்ஆன்: 3: 52, 53 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்கள் சாட்சியாக்கிய அந்த செயலையும் அவர்களின் பிரார்த்தனையையும் அங்கீகரித்தான்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ 

நம்பிக்கை கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (அலை) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியது போல், நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்.  ( அல்குர்ஆன்: 61: 14 )

நபிமார்களின் முன்மாதிரியும் அது தான்!..

إِن نَّقُولُ إِلاَّ اعْتَرَاكَ بَعْضُ ءَالِهَتِنَا بِسُوءٍ قَالَ إِنِّى أُشْهِدُ اللَّهِ وَاشْهَدُواْ أَنِّى بَرِىءٌ مِّمَّا تُشْرِكُونَ - مِن دُونِهِ فَكِيدُونِى جَمِيعًا ثُمَّ لاَ تُنظِرُونِ - إِنِّى تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّى وَرَبِّكُمْ مَّا مِن دَآبَّةٍ إِلاَّ هُوَ ءاخِذٌ بِنَاصِيَتِهَآ إِنَّ رَبِّى عَلَى صِرَطٍ مُّسْتَقِيمٍ

("எங்கள் தெய்வங்களில் சில உம்மைத் தீமையால் தாக்கியுள்ளன என்பதைத் தவிர வேறொன்றும் நாங்கள் கூறவில்லை." ஹூத் பதிலளித்தார்கள்: "நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன், மேலும் நீங்களும் சாட்சியாக இருங்கள், நீங்கள் அவனுக்கு இணைவைப்பவற்றிலிருந்து நான் விலகியவன் என்பதற்கு. ஆகவே நீங்கள் அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள், பின்னர் எனக்கு அவகாசம் கொடுக்காதீர்கள். நிச்சயமாக நான் என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்! நடமாடும் எந்த உயிரினமும் இல்லை, அதன் நெற்றிமுடியை அவன் பிடித்திருக்காமல். நிச்சயமாக என் இறைவன் நேரான பாதையில் இருக்கிறான்.") ( அல்குர்ஆன்: 11: 54-56 )

حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، حَدَّثَنَا شَهْرٌ، قَالَ ابْنُ عَبَّاسٍ: حَضَرَتْ عِصَابَةٌ مِنَ الْيَهُودِ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالُوا: يَا أَبَا الْقَاسِمِ، حَدِّثْنَا عَنْ خِلالٍ نَسْأَلُكَ عَنْهُنَّ لَا يَعْلَمُهُنَّ إِلا نَبِيٌّ، قَالَ: ” سَلُونِي عَمَّا شِئْتُمْ، وَلَكِنِ اجْعَلُوا لِي ذِمَّةَ اللَّهِ، وَمَا أَخَذَ يَعْقُوبُ عَلَيْهِ السَّلامُ، عَلَى بَنِيهِ: لَئِنْ أَنَا حَدَّثْتُكُمْ شَيْئًا فَعَرَفْتُمُوهُ، لَتُتَابِعُنِّي عَلَى الْإِسْلَامِ ” قَالُوا: فَذَلِكَ لَكَ، قَالَ: «فَسَلُونِي عَمَّا شِئْتُمْ» قَالُوا: أَخْبِرْنَا عَنْ أَرْبَعِ خِلَالٍ نَسْأَلُكَ عَنْهُنَّ: أَخْبِرْنَا أَيُّ الطَّعَامِ حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ؟ وَأَخْبِرْنَا كَيْفَ مَاءُ الْمَرْأَةِ، وَمَاءُ الرَّجُلِ؟ كَيْفَ يَكُونُ الذَّكَرُ مِنْهُ؟ وَأَخْبِرْنَا كَيْفَ هَذَا النَّبِيُّ الْأُمِّيُّ فِي النَّوْمِ؟ وَمَنْ وَلِيُّهُ مِنَ المَلائِكَةِ؟ قَالَ: «فَعَلَيْكُمْ عَهْدُ اللَّهِ وَمِيثَاقُهُ لَئِنْ أَنَا أَخْبَرْتُكُمْ لَتُتَابِعُنِّي؟» قَالَ: فَأَعْطَوْهُ مَا شَاءَ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، قَالَ: «فَأَنْشُدُكُمْ بِالَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَعْلَمُونَ أَنَّ إِسْرَائِيلَ يَعْقُوبَ عَلَيْهِ السَّلامُ، مَرِضَ مَرَضًا شَدِيدًا، وَطَالَ سَقَمُهُ، فَنَذَرَ لِلَّهِ نَذْرًا لَئِنْ شَفَاهُ اللَّهُ تَعَالَى مِنْ سَقَمِهِ، لَيُحَرِّمَنَّ أَحَبَّ الشَّرَابِ إِلَيْهِ، وَأَحَبَّ الطَّعَامِ إِلَيْهِ، وَكَانَ أَحَبَّ الطَّعَامِ إِلَيْهِ لُحْمَانُ الْإِبِلِ، وَأَحَبَّ الشَّرَابِ إِلَيْهِ أَلْبَانُهَا؟» قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ عَلَيْهِمْ، فَأَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلا هُوَ، الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى، هَلْ تَعْلَمُونَ أَنَّ مَاءَ الرَّجُلِ أَبْيَضُ غَلِيظٌ، وَأَنَّ مَاءَ الْمَرْأَةِ أَصْفَرُ رَقِيقٌ، فَأَيُّهُمَا عَلا كَانَ لَهُ الْوَلَدُ وَالشَّبَهُ بِإِذْنِ اللَّهِ؟ إِنْ عَلا مَاءُ الرَّجُلِ عَلَى مَاءِ الْمَرْأَةِ كَانَ ذَكَرًا بِإِذْنِ اللَّهِ، وَإِنْ عَلا مَاءُ الْمَرْأَةِ عَلَى مَاءِ الرَّجُلِ كَانَ أُنْثَى بِإِذْنِ اللَّهِ؟» . قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ عَلَيْهِمْ، فَأَنْشُدُكُمْ بِالَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى، هَلْ تَعْلَمُونَ أَنَّ هَذَا النَّبِيَّ الْأُمِّيَّ تَنَامُ عَيْنَاهُ وَلا يَنَامُ قَلْبُهُ؟» قَالُوا: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ» قَالُوا: وَأَنْتَ الْآنَ فَحَدِّثْنَا: مَنْ وَلِيُّكَ مِنَ المَلائِكَةِ؟ فَعِنْدَهَا نُجَامِعُكَ أَوْ نُفَارِقُكَ؟ قَالَ: «فَإِنَّ وَلِيِّيَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ، وَلَمْ يَبْعَثِ اللَّهُ نَبِيًّا قَطُّ إِلا وَهُوَ وَلِيُّهُ» قَالُوا: فَعِنْدَهَا نُفَارِقُكَ، لَوْ كَانَ وَلِيُّكَ سِوَاهُ مِنَ المَلائِكَةِ لَتَابَعْنَاكَ وَصَدَّقْنَاكَ، قَالَ: «فَمَا يَمْنَعُكُمْ مِنْ أَنْ تُصَدِّقُوهُ؟» قَالُوا: إِنَّهُ عَدُوُّنَا، قَالَ: فَعِنْدَ ذَلِكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ {قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ} [البقرة: 97] إِلَى قَوْلِهِ عَزَّ وَجَلَّ {كِتَابَ اللَّهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ} [البقرة: 101] فَعِنْدَ ذَلِكَ: بَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَبٍ الْآيَةَ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் யூதர்களின் ஒரு கூட்டம் வந்தது. அவர்கள், அபுல்காஸிமே! நபியைத் தவிர வேறுயாரும் அறிய முடியாத நான்கு விஷயங்களை பற்றி உம்மிடம் கேட்கப்போகிறோம் என்று கூறினார்கள். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பியதை என்னிடம் கேளுங்கள்!. அதற்கு முன் யஃகூப் (அலை) அவர்கள் தமது பிள்ளைகளிடம் அல்லாஹ்வின் பெயரால் எடுத்த உறுதிமொழி போன்று என்னிடத்தில் அல்லாஹ்வின் பெயரால் உறுதிமொழி அளியுங்கள்: நான் நீங்கள் கேட்டவற்றுக்கு பதில் கூறிவிட்டால் என்னிடம் இஸ்லாத்தை ஏற்பதாக பைஅத்-உறுதிமொழி அளிப்பீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ஆம் அப்படியே உமக்கு உறுதிமொழி அளிக்கிறோம் என்று கூறினார்கள். எனவே நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் என்று கூறினார்கள்.

யூதர்கள், இந்த 4 விசயங்களைப் பற்றி எங்களுக்கு கூறுவீராக! என்று சொன்னார்கள்.

1 . தவ்ராத் வேதம் அருளப்படுவதற்கு முன் எந்த உணவை யஃகூப் (அலை) அவர்கள் தன் மீது ஹராமாக்கி கொண்டார்கள்?

2 . பெண்ணுடைய நீர் எந்த தன்மையுடையது? ஆணின் நீர் எந்த தன்மையுடையது? எதனால் ஆண் குழந்தை பிறக்கிறது?

3 . தூக்கத்தில் இந்த எழுதப் படிக்கத் தெரியாத நபியின் நிலை என்ன?

4 . இந்த நபிக்கு இறைச் செய்தியை கொண்டு வரும் பொறுப்பாளரான வானவர் யார்?

மீண்டும் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுடைய ஒப்பந்தத்தையும், உறுதிமொழியையும் நீங்கள் நிறைவேற்றுங்கள். நான் நீங்கள் கேட்டவற்றுக்கு பதில் கூறிவிட்டால் என்னிடம் இஸ்லாத்தை ஏற்பதாக பைஅத் செய்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ஆம் என்று உறுதியாகக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களின் மீது தவ்ராத்தை இறக்கி வைத்தவனான அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் நான் கேட்கிறேன். இஸ்ராயீல்-யஃகூப் (அலை) அவர்கள் ஒரு தடவை நீண்ட நாள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். எனவே, அல்லாஹ் எனக்கு இந்த நோயிலிருந்து நிவாரணத்தை வழங்கினால் எனக்கு மிகவும் பிடித்தமான பானத்தை தடை செய்துக் கொள்வேன்; எனக்கு மிகவும் பிடித்தமான உணவை தடை செய்துக் கொள்வேன் என்று அல்லாஹ்வுக்காக அவர்கள் நேர்ச்சை செய்தார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்த இறைச்சி ஒட்டகத்தின் இறைச்சியாக இருந்தது. அவர்களுக்கு மிகவும் பிடித்த பானம் ஒட்டகத்தின் பாலாக இருந்தது. (அல்லாஹ் அவர்களுக்கு நிவாரணம் வழங்கிய போது அதை தனக்கு தடுத்துக் கொண்டார்கள்). இது உங்களுக்கு தெரிந்த விசயம் தானே! என்று கூறினார்கள். உடனே அவர்கள் அல்லாஹ்வே! ஆம், (இது சரியான பதில்) என்று கூறினர். நபி (ஸல்)அவர்கள், இவர்கள் இப்படி கூறியதற்கு அல்லாஹ்வே நீயே சாட்சி! என்று கூறிவிட்டு (மேலும் தொடர்ந்தார்கள்.)

மூஸா (அலை) அவர்களின் மீது தவ்ராத்தை இறக்கி வைத்தவனான அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் நான் கேட்கிறேன். ஒரு ஆணின் நீர் (விந்து உயிரணு) அடர்த்தியான வெள்ளை நிறத்தில் இருக்கும்; பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) அடர்த்தி குறைந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பது நீங்கள் அறிந்த விசயம் தானே. ஒரு ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நாட்டப்படி ஆண்குழந்தை பிறக்கிறது. பெண்ணின் நீர், ஆணின் நீரை மிகைத்துவிட்டால் பெண்குழந்தை பிறக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் அல்லாஹ்வே, ஆம் இது சரியான பதில் என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களின் மீது தவ்ராத்தை இறக்கி வைத்தவனான அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் நான் கேட்கிறேன். எழுதப்படிக்கத் தெரியாத இந்த நபியின் கண்கள் தாம் உறங்குகின்றன. அவரின் உள்ளம் உறங்குவதில்லை. இது உங்களுக்கு தெரிந்த விசயம் தானே! என்று கூறினார்கள். உடனே அவர்கள் அல்லாஹ்வே ஆம், இது சரியான பதில் என்று கூறினர். நபி (ஸல்)  அவர்கள், இவர்கள் இப்படி கூறியதற்கு அல்லாஹ்வே நீயே சாட்சி என்று கூறினார்கள்.

உடனே யூதர்கள், இறைச் செய்தியை கொண்டு வரும் பொறுப்பாளரான வானவர் யார் என்பதை இப்போது கூறுவீராக! இதை வைத்தே நாங்கள் உம்முடன் சேர்ந்துக் கொள்வோம். அல்லது உம்மை விட்டு விலகிச் செல்வோம் என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்னுடைய பொறுப்பாளர் ஜிப்ரீல் எனும் வானவர் ஆவார். எனக்கு முன் அல்லாஹ் அனுப்பிய நபிமார்களுக்கும் அவரையே அல்லாஹ் பொறுப்பாளராக ஆக்கினான் என்று கூறினார்கள். உடனே யூதர்கள், உம்மை விட்டு நாங்கள் பிரிந்து செல்கிறோம். ஜிப்ரீல் அல்லாத வானவர்கள் உம்முடைய பொறுப்பாளர்கள் என்றால் நாங்கள் உம்மை ஏற்று உம்மிடம் இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி அளித்து உண்மைபடுத்திருப்போம் என்று கூறினர்.

 

நபி (ஸல்) அவர்கள், நீங்கள் ஜிப்ரீலை ஏற்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று? கேட்டார்கள். அதற்கு அவர்கள், அவர் எங்களுடைய விரோதி என்று கூறினார்கள்.

அப்போதுதான், “யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார். இது, தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளதுஎன்று கூறுவீராக!

அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை மறுக்க மாட்டார்கள்.

அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் (முஹம்மத்) அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தமது முதுகுகளுக்குப் பின்னால் வீசி எறிந்தனர். எனும் (அல்குர்ஆன்: 2:97-101) வரை உள்ள இறைவசனங்களை அல்லாஹ் இறக்கியருளினான். அது முதல் அவர்கள் அல்லாஹ்வுடைய கோபத்துக்கு ஆளானார்கள். ( நூல்: முஸ்னது அஹ்மத்: 2514 )

عن الأعمش ، عن مجاهد ، عن ابن عمر ، في قوله : ( اقتربت الساعة وانشق القمر) [ القمر ] قال : قد كان ذلك على عهد رسول الله صلى الله عليه وسلم انشق فلقتين ، فلقة من دون الجبل ، وفلقة من خلف الجبل ، فقال النبي صلى الله عليه وسلم " اللهم اشهد " . أخرجه مسلم .

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள்.

 

فخرجوا به من الحرم ليقتلوه، فقال: دعوني أصلى ركعتين، ثم انصرف إليهم، فقال: لولا أن تروا أن ما بي جزع من الموت لزدت –زدت على الركعتين- فكان أول من سن الركعتين عند القتل هو، ثم قال: "اللهم أحصهم عددا".

ثم قال: ما أبالي حين أقتل مسلماً على أي شق كان لله مصرعي

وذلك في ذات الإله وإن يشأ يبارك على أوصال شلو ممزع

குபைப் (ரலி) அவர்களைக்  கொல்வதற்காக மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே  அவர்கள் கொண்டு வந்த போது, “இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்’’ என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.)

பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கி யிருப்பேன்’’ என்று கூறினார்.

பிறகு இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு, “நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும் போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்’’ என்று (கவிபாடிக்) கூறினார்கள்.

பிறகு, ‘அபூ சிர்வஆ உக்பா இப்னு ஹாரிஸ்என்பவன் குபைப் அவர்களிடம் வந்து, அவர்களைக் கொலை செய்தான்.

தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.

கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.

وفي رواية قال: "اللهم إني لا أجد من يبلغ رسولك مني السلام، فبلغه" سنن سعيد بن منصور:فأخبر جبريل النبي ﷺ بخبر خبيب.

மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி இறைவா! உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு!என்று இறைஞ்சினார்கள்.

 

அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ஸல்} அவர்களுக்கு அறிவித்தான்.

 (அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள்) தொழுவதை முன்மாதிரியாக்கிவிட்டவர் குபபைப் அவர்களே என்றாயிற்று.

மேலும், நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப் படையினர் (கொல்லப்பட்ட) செய்தியையும், குபைப் ரலி அவர்கள் கொல்லப்பட்ட செய்தியையும் அன்றே (இறையறிவிப்பின் மூலம்) தெரிவித்தார்கள். நூல்: புகாரி, ஃபத்ஹுல் பாரீ, ஸுனன் ஸயீத் இப்னு மன்ஸூர் )

قال الإمام أحمد: حدثنا يونس بن محمد، حدثنا ليث، عن جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هُرْمُز، عن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر "أن رجلا من بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يُسْلفه ألف دينار، فقال: ائتني بشهداء أشهدهم. قال: كفى بالله شهيدًا. قال: ائتني بكفيل. قال: كفى بالله كفيلا. قال: صدقت. فدفعها إليه إلى أجل مسمى، فخرج في البحر فقضى حاجته، ثم التمس مركبًا يقدم عليه للأجل الذي أجله، فلم يجد مركبًا، فأخذ خشبة فنقرها فأدخل فيها ألف دينار وصحيفة معها إلى صاحبها، ثم زَجج موضعها، ثم أتى بها البحر، ثم قال: اللهم إنك قد علمت أني استسلفت فلانًا ألف دينار، فسألني كفيلا فقلت: كفى بالله كفيلا. فرضي بذلك، وسألني شهيدًا، فقلت: كفى بالله شهيدًا. فرضي بذلك، وإني قد جَهِدْتُ أن أجد مركبًا أبعث بها إليه بالذي أعطاني فلم أجد مركبًا، وإني اسْتَوْدعْتُكَها. فرمى بها في البحر حتى ولجت فيه، ثم انصرف، وهو في ذلك يطلب مركبًا إلى بلده، فخرج الرجل الذي كان أسلفه ينظر لعل مركبًا تجيئه بماله، فإذا بالخشبة التي فيها المال، فأخذها لأهله حطبًا فلما كسرها وجد المال والصحيفة، ثم قدم الرجل الذي كان تَسَلف منه، فأتاه بألف دينار وقال: والله ما زلت جاهدًا في طلب مركب لآتيك بمالك فما وجدت مركبًا قبل الذي أتيت فيه. قال: هل كنت بعثت إلي بشيء؟ قال: ألم أخبرك أني لم أجد مركبًا قبل هذا الذي جئت فيه؟ قال: فإن الله قد أدى عنك الذي بعثت به في الخشبة، فانصرف بألفك راشدًا". وهذا إسناد صحيح  وقد رواه البخاري في سبعة مواضع من طرق صحيحة

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், நாங்கள் அவர்களோடு அமர்ந்திருந்த சபையில் எங்களிடம் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், ”என்னிடம் சாட்சிகளை அழைத்து வாரும்! அவர்களைச் சாட்சியாக வைத்து உமக்கு கடன் தருகின்றேன்என்றார்.

கடன் கேட்டவர் சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்என்றார். அப்படியானால், “ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டு வாரும்! அவரை ஜாமீனாக வைத்து உமக்கு கடன் தருகின்றேன்என்றார் கடன் கேட்கப்பட்டவர்.

அதற்கு, கடன் கேட்டவர் பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்என்றார். அப்போது, கடன் கேட்கப்பட்டவர் நீர் கூறுவதும் ஒரு வகையில் உண்மை தான்!என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவரிடம் ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.

கடன் வாங்கியவர் கடல் வழிப் பயணம் புறப்பட்டு, தம் காரியங்களை முடித்து விட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகன வசதியைத் தேடினார். ஆனால், அவருக்கு எந்த வாகனமும் கிடைக்க வில்லை.

அப்போது, அவர் ஒரு மரக்கட்டையை விலைக்கு வாங்கி, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும், கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.

பின்னர், கடற்கரையோரமாக அந்த மரக்கட்டையை கொண்டு வந்து, வானை நோக்கி கையை உயர்த்தி….

 இறைவா! இன்ன மனிதரிடம் நான் ஆயிரம் பொற்காசுகளைக் கடனாகக் கேட்டேன். அவர் பிணையாளி வேண்டுமென்றார். நானோ அல்லாஹ்வே நீயே போதுமானவன்!என்றேன். அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக் கொண்டார்.

என்னிடம் சாட்சிகளைக் கொண்டு வருமாறு கோரினார். நானோ அல்லாஹ்வே நீயே சாட்சிக்குப் போதுமானவன்!என்றேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார்.

அவர் கூறிய தவணை முடிவடையும் முன்பாக அவருக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்து விடும் முயற்சியில் இறங்கி, வாகனத்திற்கு ஏற்பாடு செய்தேன்! அல்லாஹ்வே! ஒரு வாகனமும் எனக்கு கிடைக்கவில்லை. இதையெல்லாம் நீ நன்கறிவாய்!

எனவே, இதோ அவருக்குரிய பொற்காசுகள் நிரப்பிய மரக்கட்டையை இந்த கடலில் வீசுகின்றேன்! இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பையும் உன்னிடத்தில் ஒப்படைக்கின்றேன்என்று பிரார்த்து விட்டு அதைக் கடலில் வீசினார். அது கடலின் நடுப்பகுதிக்கு சென்றதும் திரும்பி விட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார்.

இதனிடையே, கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரின் வருகையை எதிர் பார்த்த வண்ணம் இருந்தார். ஒன்று அவர் வருவார், அல்லது நமது செல்வத்துடன் வாகனம் எதுவும் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார்.

 

அப்போது, ஒரு ஓரத்தில் ஒரு மரக்கட்டை கிடப்பதைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்கிற நோக்கத்தில் அதை எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதைப் பிளந்து பார்த்த போது, “ஆயிரம் பொற்காசுகளையும் கடிதத்தையும் கண்டார்.

சிறிது நாட்கள் கழித்து, கடன் வாங்கியவர் கடன் கொடுத்த அம்மனிதரைச் சந்திக்க வந்தார். வந்தவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது பணத்தை உமக்கு தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது, தான் வாகனம் கிடைத்து உம்மிடம் வந்திருக்கின்றேன். இதோ! உமக்கு தருவதற்காக ஆயிரம் பொற்காசுகளை கொண்டு வந்திருக்கின்றேன்என்று பொற்காசுகள் பொதியப்பட்ட கைப்பையை கடன் கொடுத்தவரிடம் காட்டினார்.

அதற்கு கடன் கொடுத்தவர் எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். அப்போது, கடன் வாங்கியவர் வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கின்றேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!என்றார்.

அதற்கு கடன் கொடுத்தவர் நீர் மரத்தில் வைத்து எனக்கு அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்து விட்டான். எனவே, நீர் கொண்டு வந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு சரியான வழியில் உமது ஊருக்குச் செல்வீராக! என்றார்.       ( நூல்: முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர், புகாரி )

அநியாயமான காரியத்திற்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சாட்சியம் பகர மாட்டார்கள்.

  وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ‏

(நபியே!) மனிதர்களில் ஒருவன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இதயத்தில் உள்ளது பற்றி அல்லாஹ்வையே சாட்சியாக்குவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன்தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். ( அல்குர்ஆன்: 2: 204 )

وَإِذَا تَوَلَّى سَعَى فِى الاٌّرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لاَ يُحِبُّ الْفَسَادَ

(அவன் (முஹம்மதே, உம்மிடமிருந்து) திரும்பிச் சென்றால், பூமியில் குழப்பம் விளைவிக்கவும், விளைச்சல்களையும் கால்நடைகளையும் அழிக்கவும் முயல்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.)

அஸ்-ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள், இந்த வசனம் அல்-அக்னஸ் பின் ஷரீக் அஸ்-ஸகஃபீ பற்றி அருளப்பட்டது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தனது இஸ்லாத்தை அறிவித்தார், ஆனால் அவரது உள்ளம் வேறு விதமாக இருந்தது.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், இந்த வசனம் சில நயவஞ்சகர்கள் பற்றி அருளப்பட்டன. அவர்கள் குபைப் மற்றும் அவரது தோழர்களை விமர்சித்தனர். அவர்கள் ரஜீஉ சம்பவத்தின் போது கொல்லப்பட்டனர். பின்னர், அல்லாஹ் நயவஞ்சகர்களை கண்டித்து இந்த வசனத்தை இறக்கினான்.

இந்த வசனம் அத்தகையவர்கள் நாவால் வழிதவறியவர்கள், செயல்களால் தீயவர்கள், அவர்களின் வார்த்தைகள் கற்பனையானவை, அவர்களின் நம்பிக்கை கெட்டது, அவர்களின் செயல்கள் ஒழுக்கமற்றவை என்பதைக் குறிக்கிறது. இந்த வசனம் ஸஆ (முயற்சி செய்தல் அல்லது நோக்கம் கொள்ளுதல்) என்ற (அரபு) வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது. இந்த வார்த்தை ஃபிர்அவ்னை விவரிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

عن النعمان بن بشير - رضي الله عنهما - قال: تصدق علي أبي ببعض ماله، فقالت أمي عمرة بنت رواحة: لا أرضى حتى يشهد رسول الله -صلى الله عليه وسلم- فانطلق أبي إلى رسول الله -صلى الله عليه وسلم- ليشهده على صدقتي، فقال له رسول الله -صلى الله عليه وسلم-: "أفعلت هذا بولدك كلهم؟ قال: لا، قال: "اتقوا الله، واعدلوا بين أولادكم"، فرجع أبي فرد تلك الصدقة. وفي لفظ: قال: "فلا تشهدني، إذًا فإني لا أشهد على جور".

நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் (அம்ரா) பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து சில அன்பளிப்புகளை எனக்கு வழங்குமாறு கேட்டார். என் தந்தை ஒரு வருடம் இழுத்தடித்தார். பிறகு (எனக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்று) அவருக்குத் தோன்றியது. (ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.) அப்போது என் தாயார் "என் மகனுக்கு அன்பளிப்பாக (இந்த அடிமையை) வழங்கியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சாட்சியாக்காத வரை இதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார். ஆகவே, என் தந்தை சிறுவனாயிருந்த எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா, தன் மகனுக்கு நான் அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுக்குத் தங்களைச் சாட்சியாக்க வேண்டும் என விரும்புகிறார்" என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பஷீர்! இவரைத் தவிர வேறு குழந்தை உமக்கு உண்டா?" என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்ற அன்பளிப்பை வழங்கினீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று சொன்னார்கள். "அப்படியானால் என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரின் செயல்பாடுகளையும் சீராக்கி வைப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment