வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 26.
உணவு எனும் உன்னதமான அருட்கொடை!!!
25 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
26 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அபஸ அத்தியாயம் முதல் அஷ் ஷம்ஸ் வரையிலான 12 அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அபஸ அத்தியாயத்தின் 24 -ஆம் வசனம் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கி இருக்கிற உன்னதமான ஒரு அருட்கொடையைப்
பற்றி சிந்திக்குமாறு தூண்டுகிறது.
فَلْيَنْظُرِ
الْاِنْسَانُ اِلٰى طَعَامِه
எனவே, மனிதன் தன் உணவின் பக்கம் (அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை) சிந்தித்துப்
பார்க்கட்டும்!".
இவ்வுலகில்
படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்று உணவு. அனைத்து
உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்னதாகவே
அனைத்து உயிரினங்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தி வைத்திருப்பதாக இறைவன்
கூறுகிறான்.
உயிரினங்களில்
எந்த உயிரினமும் தமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை என்று அல்லாஹ்
கூறுகிறான்.
وَكَاَيِّنْ
مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ
وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
எத்தனையோ
உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
( அல்குர்ஆன்: 29:
60 )
وَمَا
مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ
مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
இன்னும், எந்த உயிரினமும் - அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தேதவிர
பூமியில் இல்லை;
மேலும், அவை தங்கும் இடத்தையும்
அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்; இவையனைத்தும் (லவ்ஹுல்
மஹ்ஃபூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 11:
6 )
ஒரு நீல
திமிங்கலம் சுமார் 120
நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 3,600 கிலோ (8,000
பவுண்டுகள்) வரை கிரில் சாப்பிடுகிறது. ஒரு நீல
திமிங்கலத்தின் வயிற்றை நிரப்ப 1,000 கிலோ (2,200 பவுண்டுகள்) உணவு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சாம்பல்
திமிங்கலங்கள் 130
முதல் 140 நாட்கள் உணவளிக்கும்
காலத்தில் சுமார் 150,000
கிலோ (340,000 பவுண்ட்) உணவை உண்கின்றன
- ஒரு நாளைக்கு சராசரியாக 1,089
கிலோ (2,400 பவுண்ட்) உணவு
உட்கொள்ளப்படுகிறது. ஒரு சாம்பல் திமிங்கலத்தின் வயிற்றை நிரப்ப 300 கிலோ (660
பவுண்ட்) உணவு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சாம்பல்
திமிங்கலங்கள் உணவளிக்கும் பருவத்தில் அவற்றின் மொத்த உடல் எடையில் சுமார் 16% முதல் 30%
வரை அதிகரிக்கும். ( நன்றி: https://seaworld.org/animals/all-about/baleen-whales/diet/ )
யானைகள் ஒரு
நாளைக்கு சுமார் 12–18
மணி நேரம் புற்களை உண்பதிலும், மரப்பட்டைகள்,
வேர்கள், இலைகள் மற்றும் சிறிய
தண்டுகளை மேய்வதிலும் செலவிடுகின்றன, ஒரு நாளைக்கு 150 முதல் 300
கிலோ வரை உணவை உட்கொள்கின்றன. ( நன்றி: https://www.worldanimalprotection.org.au/education/animal-facts/elephants/ )
ஏகத்துவத்தை ஏற்க
மறுத்து இணை வைப்பாளர்களாக,
இறை நிராகரிப்பாறர்களாக வாழ்ந்த மக்கா குறைஷிகள் கூட தங்களுக்கு உணவு வழங்குவது அல்லாஹ்தான் என்பதை நன்கு விளங்கியிருந்தனர்.
قُلْ
مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ
وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ
الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ فَسَيَـقُوْلُوْنَ
اللّٰهُ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ
“உங்களுக்கு
வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்)
செவிப்புலன் மீதும்,
(உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து
இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின்
அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக!. உடனே அவர்கள் “அல்லாஹ்”
எனப் பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின்
அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர்
கேட்பீராக!" ( அல்குர்ஆன்: 10: 31)
அல்லாஹ் மனித
சமூகத்தைப் படைத்து மனித சமூகம் இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை
வாரி வழங்கியுள்ளான்.
அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானதும் மனிதன் உயிர்
வாழ அவசியமானதுமான உணவையும் படைத்துள்ளான்.
அந்த உணவுகளையும்
கூட பல்வேறு உணவு வகைகளாக பல சுவைகளில், பல்வேறு நிறங்களில், பல்வேறு பருவ காலங்களில் மனிதன் ருசித்து இன்புற தானியங்களையும், தாவரங்களையும்,
கனிகளையும் படைத்திருப்பாதாக கூறுகிறான்.
وَهُوَ
الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ
وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا
وَّغَيْرَ مُتَشَابِهٍ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ
يَوْمَ حَصَادِهٖ وَلَا تُسْرِفُوْا اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْن
படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்)
ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே
படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில்
அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்!
வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன்: 6:
141 )
وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ
وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِد
وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ
لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ
பூமியில்
அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும்,
கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும்
உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்)
சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில்
பல சான்றுகள் உள்ளன. ( அல்குர்ஆன்: 13: 4 )
மனித சமுதாயத்தை
படைத்த அல்லாஹ் மனிதன் ஒரே விதமான தாவர உணவை மட்டும் உண்ணாமல் இறைச்சியையும் உண்டு
மகிழுவும் அதை செரிக்கும் விதமாக உடல் அமைப்பை கொண்டு மனிதனை படைத்துள்ளான்.
وَهُوَ
الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا
وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا وَتَرَى الْـفُلْكَ
مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
கடலிலிருந்து
பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை
நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான்.
கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர் ( அல்குர்ஆன்: 16: 14 )
وَالْاَنْعَامَ
خَلَقَهَا ۚ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ
கால்நடைகளையும்
அவனே படைத்தான்;
அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளும்) இன்னும், (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள்
புசிக்கவும் செய்கிறீர்கள். ( அல்குர்ஆன்: 16: 5 )
பசி,
பட்டினி.....
பசியுடன் இருந்து
உண்ண உணவின்றி வாடும் போது தான் உணவின் அருமை நமக்கு தெரியும்.
சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் எல்லா நிலைகளிலும் உணவு பாதுகாப்பின்மையை
எதிர்கொண்டுள்ளோம்.
82 கோடி மக்களுக்கும்
மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
பல நாடுகளில்
பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. 280 கோடி மக்களால்
சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை என்கிறது 2024 ம் ஆண்டில் ஐநாவால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம். ( நன்றி: மாலைமலர், 16/10/2024 )
உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவை வீணடித்தல்...
உலகளவில் அதிகளவு
உணவு உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் அதில் மூன்றில் ஒரு
பங்கு - 1.3
பில்லியன் டன் - வீணாக்கப்படுகிறது. ஐ.நா. உணவு மற்றும்
வேளாண்மை அமைப்பின் (FAO)
கூற்றுப்படி , வீணாக்கப்படும் உணவு 1.26 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க போதுமானது: இது உலகம் முழுவதும் ஊட்டச்சத்து
குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
உலகின் பல
பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக உள்ளது, குறிப்பாக வளரும் நாடுகளில். 2020-ல், 12% உலக மக்கள் தொகைக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை, இது 928
மில்லியன் மக்களைப் பிரதிபலிக்கிறது. ( நன்றி: wfpusa.org )
உலகளாவிய
அறிக்கையின்படி,
ஒவ்வொரு ஆண்டும் 947 மில்லியன்
டன்களுக்கும் அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது.
கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின்
வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுத்தியது. அதில் 60% வீட்டில் நிகழ்கிறது.
ராப்
அமைப்பைச்சேர்ந்த ரிச்சர்ட் ஸ்வன்னெல் "ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் 947 மில்லியன் டன் உணவு,
40 டன் சரக்கை ஏற்றக்கூடிய 23 மில்லியன் ட்ரக்குகளை நிரப்பும். அதாவது இந்த ட்ரக்குகளை ஒன்றுக்கொன்று
தொடும்படி நிறுத்தினால்,
அது பூமியை ஏழு முறை வட்டமிட போதுமானது." பிபிசி
ந்யூஸிடம் தெரிவித்தார். ( நன்றி: பிபிசி தமிழ், 14/03/2021 earth.org 2023
)
உலகளாவிய உணவு
விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1
பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் 63 கோடி டன்,
உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13
கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு நாள் வீணாகும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடியும். ( நன்றி: தமிழ் திசை இந்து, 30/03/2024 )
நபி ஸல் அவர்களின்
பிரதானமான துஆக்களில் ஒன்றாக பின் வரும் துஆவும் இருந்தது.
عن أبي
هريرة-رضي الله عنه مرفوعاً: «اللهم إني أعوذ بك من الجوع، فإنه بِئْسَ
الضَّجِيعُ،
"யாஅல்லாஹ்!
உன்னிடம் பசியின் கொடுமையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். ஏனெனில், அது உறக்கத்தை பாழாக்கி விடுகிறது" என்று.
பசியால்
சோதிக்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களின் சமூகம் பசியுடன் இருப்பதை பொறுத்துக் கொள்ள
முடியாமல் ஈஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ்விடம் இருந்து உணவுத் தட்டை பெற்றுத்
தருமாறு வேண்டி நின்றனர்.
மேலும், தங்களுக்கு ஏன் உணவு தேவைப்படுகிறது? என்பதற்கான காரணத்தையும் அந்த
சமூகம் முன் மொழிந்ததை அல்குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.
اِذْ
قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ
اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ قَالَ اتَّقُوا اللّٰهَ
اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
"மர்யமுடைய மகன்
ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக, உணவு மரவையை (ஆகாரத்தட்டை) இறக்கிவைக்க முடியுமா?" என்று சீடர்கள் கேட்டபோது அவர், "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வை
அஞ்சிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
قَالُوْا
نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ
قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ
அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக்கூடியவர்களாகவும் இருக்க
விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.
قَالَ
عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً
مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً
مِّنْكَۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ
மர்யமுடைய மகன்
ஈஸா,
"அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானத்திலிருந்து எங்கள்மீது ஓர்
உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களுக்குப்பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும்,
எங்களுக்கு உணவளிப்பாயாக! நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக
இருக்கிறாய்!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
قَالَ
اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ
فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால்,
அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், அகிலத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை
வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான். ( அல்குர்ஆன்: 5: 112 - 115 )
திண்ணைத் தோழர்களின் வறுமையும்... பசியும்....
عن أبي
هريرة رضي الله عنه قال: لَقَد رَأَيت سبعين من أهل الصُّفَّةِ، مَا مِنهُم رَجُل
عَلَيه رِدَاء، إِمَّا إِزَار، وإِمَّا كِسَاء، قد رَبَطوا في أعناقِهم، فمنها ما
يبلغُ نصف الساقين، ومنها ما يبلغ الكعبين، فَيَجْمَعُهُ بيده كَرَاهِيَةَ أن تُرى
عورَتُه.
[صحيح] - [رواه البخاري]
நபித் தோழர்
அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்:- " நான் எழுபது அஹ்லுஸ்
ஸுப்பாக்களை-திண்ணைத் தோழர்களைப் பார்த்தேன்.அவர்களில் எவரிடமும் தங்களின் மேல்
பாகத்தை மறைக்கும் துணி எதுவும் இருக்கவில்லை.அவர்களிடம் ஒரு கைலி அல்லது ஒரு
போர்வை மாத்திரமே இருந்தது.அதனை அவர்கள் கழுத்தில் சேர்த்துக் கட்டியிருந்தனர்.
அதில் சிலது பாதிக் கெண்டைக் காலையும்,இன்னும் சிலது கரண்டைக்
காலையும் எட்டியிருந்தது. எனவே தங்களின் அவ்ரத் தெரிந்து விடுமோ என்பதை விரும்பாத
அவர்கள் அதனைத் தம் கைகளால் கூட்டிப் பிடித்துக் கொண்டனர்". என அபூ ஹுரைரா
(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி )
தொழுகைக்கு
வருவோரிடம் சொல்லி இவர்களை உணவுக்காக அழைத்துச் செல்லும் படி நபி(ஸல்) அவர்கள்
கூறுவார்கள். தாமும் அழைத்துச் செல்வார்கள்.
தர்மப்பொருள்கள்
ஏதேனும் வந்தால்,
அதனை நபி(ஸல்) அவர்கள் சாப்பிடாமல், திண்ணைத் தோழர்களுக்கு அனுப்பி விடுவார்கள். அன்பளிப்பு ஏதேனும் வந்தால், அதைத் திண்ணைத் தோழர்களுடன் சேர்ந்து தாமும் சாப்பிடுவார்கள்.
நபி(ஸல்) அவர்கள்
தமது பெரும்பாலான நேரங்களில் இவர்களுடன் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களோடு அளவளாவுவார்கள்.
உணவு வீட்டிலிருந்தால் இவர்களை அழைத்து உணவு வழங்குவார்கள். நபித்தோழர்கள்
இவர்களுள் ஒரிருவரை தம்மோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவருந்தச் செய்வது
உண்டு. பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து இவர்கள் வசிக்கும் திண்ணையில்
இவர்களுக்காக சிலர் தொங்கவிடுவதும் உண்டு. ( நூல்: ஃபத்ஹுல் பாரீ )
பசியின் வலி...
أَخبَرنا
أَبُو يَعْلَى، حَدثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، حَدثنا ابْنُ
فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
أَصَابَنِي جَهْدٌ شَدِيدٌ، فَلَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه،
فَاسْتَقْرَأْتُهُ آيَةً مِنْ كِتَابِ اللهِ، فَدَخَلَ دَارَهُ وَفَتَحَهَا
عَلَيَّ، قَالَ: فَمَشَيْتُ غَيْرَ بَعِيدٍ، فَخَرَرْتُ لِوَجْهِي مِنَ الْجَهْدِ،
فَإِذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى رَأْسِي،
فَقَالَ:"يَا أَبَا هُرَيْرَةَ"، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ
وَسَعْدَيْكَ، قَالَ: فَأَخَذَ بِيَدِي فَأَقَامَنِي وَعَرَفَ الَّذِي بِي،
فَانْطَلَقَ إِلَى رَحْلِهِ، فَأَمَرَ لِي بِعُسٍّ مِنْ لَبَنٍ، فَشَرِبْتُ.
ثُمَّ
قَالَ: "عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ، ثُمَّ
قَالَ:"عُدْ يَا أَبَا هُرَيْرَةَ" فَعُدْتُ، فَشَرِبْتُ حَتَّى
اسْتَوَى بَطْنِي وَصَارَ كَالْقِدْحِ، قَالَ: وَرَأَيْتُ عُمَرَ فَذَكَرْتُ له
الَّذِي كَانَ مِنْ أَمْرِي، وَقُلْتُ لَهُ: مَنْ كَانَ أَحَقَّ بِهِ مِنْكَ يَا
عُمَرُ؟ وَاللهِ لَقَدِ اسْتَقْرَأْتُكَ الآيَةَ وَلأَنَا أَقْرَأُ لَهَا مِنْكَ،
قَالَ عُمَرُ: وَاللهِ لأَنْ أَكُونَ أَدْخَلْتُكَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ
يَكُونَ لِي حُمْرُ النَّعَمِ. [7151]
அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்கள்:- ”எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான்
அவர்களிடம்,
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி
கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக்
காட்டினார்கள்(அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன்.
அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன்.
(மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), ‘அபூ ஹுரைரா!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக்
காத்திருக்கிறேன்,
இறைத்தூதர் அவர்களே; கட்டளையிடுங்கள்’ என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி
நிறுத்தினார்கள். எனககு ஏற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத்
தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய
பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இன்னும் அருந்துங்கள்,
அபூ ஹிர்!’ என்று கூறினார்கள்.
அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு ‘மீண்டும் (அருந்துங்கள்)’ என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகி விட்டது. பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த
நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘(என் பசியைப் போக்கும்
பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்து
விட்டான்,
உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை
நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம்
கேட்டேன்’
என்று சொன்னேன். உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று
(உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை
உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள். (
நூல்: புகாரி )
عن أنس
بن مالك – رضي الله عنه – قال : قال أبو طلحة لأم سليم : لقد سمعت صوت رسول الله
ضعيفاً أعرف فيه الجوع ، فهل عندك من شيء ؟ قالت : نعم ، فأخرجت أقراصاً من شعير
ثم أخرجت خماراً لها فلفت الخبز ببعضه ، ثم دسته تحت يدي ولاثتني ببعضه ، ثم
أرسلتني إلى رسول الله قال : فذهبت به فوجدت رسول الله في المسجد ومعه الناس ،
فقمت عليهم ، فقال لي رسول الله
” أرسلك أبو طلحة ؟” فقلت : نعم قال : ” بطعام ؟ ” قلت : نعم .
فقال رسول الله لمن معه : ” قوموا ” فانطلق وانطلقت بين أيديهم حتى جئت أبا طلحة
فأخبرته ، فقال أبو طلحة : يا أم سليم قد جاء رسول الله والناس وليس عندنا ما
نطعمهم ، فقلت : الله ورسوله أعلم ، فانطلق أبو طلحة حتى لقي رسول الله فأقبل رسول
الله وأبو طلحة معه ، فقال رسول الله: ” هلم يا أم سليم ، ما عندك ؟ ” فأتت بذلك
الخبز ، فأمر به رسول الله فقُمت وعصرت أم سُليم عكة فآدمته ثم قال رسول الله فيه
ماشاء الله أن يقول ، ثم قال : ” ائذن لعشرة ” فأكل القوم كلهم والقوم سبعون أو
ثمانون . [حديث صحيح : اخرجه البخاري
].
அனஸ் இப்னு
மாலிக்(ரலி) அறிவித்தார் அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு
சுலைம்(ரலி) அவர்களிடம்,
‘நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன்.
அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு)
ஏதேனும் இருக்கிறதா?’
என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து
வந்தார்கள். பிறகு,
உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து
அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே
மறைத்து வைத்துவிட்டு,
மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு
என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர்.
நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’
என்று சொன்னேன். ‘உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று அவர்கள் கேட்க,
நான் ‘ஆம்’ என்றேன்.
அப்போது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்’
என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு
முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத்
தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) ‘உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!’ என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று
வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா
அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ,
‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!’ என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு
வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி
பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை
உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ்
மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்’ என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.
அவ்வாறே
அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப்
பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் ‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்’ என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு
வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள்.
மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த
மக்கள் எண்பது பேர் ஆவர். ( நூல்: புகாரி )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமக்கு எவ்விதச் சிரமமும் இன்றி நாம் பசித்திருக்கும் போது உணவளித்து வரும்
தயாளத்தன்மைக்காக சாப்பிட்டு முடித்ததும் மாநபி ஸல் அவர்களின் வழியில்
அல்லாஹ்வுக்கு அழகிய நன்றியை செலுத்துவோம்!
كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم إذا رفعتِ المائدةُ من بينِ
يديْهِ يقولُ الحمدُ للَّهِ حمدًا كثيرًا طيِّبًا مبارَكًا فيهِ غيرَ مودَّعٍ ولاَ
مستغني عنْهُ ربُّنا .
الراوي
: أبو أمامة الباهلي المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3456 |
خلاصة حكم المحدث : صحيح |
நபி ஸல் அவர்கள் (
சாப்பிட்டு முடித்த பின் ) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது " அல்ஹம்து
லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா
முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா " என்று பிரார்த்திப்பார்கள்
பொருள் ( அதிகமான
தூய்மையான வளமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இறைவா இப்புகழ் முற்றுப்
பெறாதது கைவிடப்படக் கூடாதது தவிர்க்க முடியாதது ஆகும் ) என்று அபூ உமாமா ( ரலி)
அறிவிக்கிறார்கள்
(
நூல் : திர்மிதீ )
அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பசி பட்டினியில் இருந்தும், உணவுப் பற்றாக்குறை மற்றும்
உணவுத் தேவையில் இருந்தும் பாதுகாப்பானாக! வாழும் காலமெல்லாம் தடையில்லாத ரிஜ்கைத்
தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment