வழிகாட்டும் வான்மறை – தராவீஹ் சிந்தனை –
25.
தூக்கம் ஒரு கடமை!!!
24 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
25 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல் மஆரிஜ் அத்தியாயம் முதல் அந்நாஜிஆத் வரையிலான 10 அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அந் நபா அத்தியாயத்தின் 9 -ஆம் வசனம் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கி இருக்கிற அற்புதமான ஒரு அருட்கொடையைப்
பற்றி பேசுகிறது.
وَّجَعَلْنَا
نَوْمَكُمْ سُبَاتًا
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக நாம் ஆக்கினோம்.
அந்த அற்புதமான
அருட்கொடை தான் தூக்கம் ஆகும்.
தினமும் ஒரு
மனிதனின் முக்கிய தேவை என்னவாக இருக்கும்? கேட்டுப்பாருங்கள்! சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டு இதற்கான பதில் தூக்கமாகவே இருக்கும்.
ஏனெனில், முந்தைய நாளின் களைப்பில் இருந்து விடுபடவும், இன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்கவும் நல்ல தூக்கம் மிக முக்கியம்.
நமது உடல்நலம், மனநலம் போன்றவற்றுக்கு உணவு, உடற்பயிற்சி போன்றவை எந்தளவு
அவசியமோ தூக்கமும் அதே அளவு அவசியம்.
ஒரு மனிதனுக்கு
போதிய அளவு தூக்கம் இல்லையென்றால் பல்வேறு நோய்களுக்கு அது வழிவகுக்கும் என்று
மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எவ்வித தடங்கலும்
இல்லாமல் தினமும் வழக்கமான நேரத்தில் தூங்குவது நாள்பட்ட நோய்கள், உடல்பருமன்,
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்
போன்றவற்றை குறைக்கும் என்று 'வோர்ல்ட் ஸ்லீப் டே' நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
உலகம் முழுவதும்
தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.
கடந்த நூறு ஆண்டுகளில்
மனிதன் தூங்கும் நேரம் என்பது கணிசமாகக் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நல்ல தூக்கம் ஏன் அவசியம்?
தூங்கும்போது நம்
உடலில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
"வளர்சிதை மாற்ற (Metabolism) பணிகளில் ஒன்றுதான் தூக்கம். வளர்சிதை மாற்றத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று
அனபாலிசம்;
மற்றொன்று கெடபாலிசம். இவற்றை சமன்படுத்தும் பணிகள் தூக்கத்தின்போதுதான் நிகழ்கின்றன.
எனவே, தூக்கம் என்பது மிக அவசியம் என்று கூறுகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர்
எஸ். ஜெயராமன். தூக்கத்தின்போதுதான் நமது உடலில் அணுக்கள் புத்துணர்ச்சி
பெறுகின்றன.
தூக்கம்
குறையும்போது நோய் எதிர்ப்பு குறைந்துவிடுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் உடலில்
தோன்றுகின்றன,"
என்று நுரையீரல் சிறப்பு மருத்துவர் எஸ்.ஜெயராமன்
குறிப்பிடுகிறார். ( நன்றி: பிபிசி தமிழ், 16/03/2025 )
தூக்க தினமும்… புள்ளி விவரங்களும்…
2025 ஆம் ஆண்டுக்கான
உலக தூக்க தினம் வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025 அன்று கொண்டாடப்பட்டது.
இதில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட
பிரதிநிதிகள் தங்கள் சமூகங்களில் ஆரோக்கியமான தூக்கம் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தப் போவதாக உறுதிபூண்டுள்ளனர்.
இந்த தூக்க
தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் அதிர்ச்சிகரமான சில புள்ளி
விவரங்கள் கிடைத்துள்ளன.
1) தூங்குவதற்காக தனித்தனியே பிரிந்து தூங்கும் தம்பதியர்...
அமெரிக்காவை
தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெஸ்மெட் என்ற நிறுவனம் உறக்கம் சார்ந்து
நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் உலகெங்கிலும் தம்பதிகள் தனித்து உறங்குவது
தெரியவந்துள்ளது.
இதில், இந்தியாவைச் சேர்ந்த தம்பதியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அந்த
நிறுவனத்தின் ஆய்வு முடிவில் சுமார் 78 சதவீத இந்திய
தம்பதியர்கள் நல்ல மற்றும் ஆழ்ந்த உறக்கத்துக்காக தங்களது இணையரை தவிர்த்து, தனித்து உறங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சீனா 68 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், தென் கொரியா 65 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
நாடுகளை சேர்ந்த தம்பதியர்கள் 50 சதவீதம் பேர் தங்களது
இணையருடன் தனித்தும்,
சேர்ந்தும் உறங்குகின்றனர்.
குறட்டை, சத்தமாக மூச்சு விடுதல், வேலை நேரம் மாறுபடுவது, படுக்கையில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது ஆகிய காரணங்களைத்தான் ஆய்வில்
பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். வயது அதிகம் உடைய தம்பதியர்கள் அதிகம் பேர்
தனித்து தூங்குவதாகவும் கூறியுள்ளனர். மேலும், இந்த ஆய்வின் மூலம் Sleep divorce இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் இன்றைய தம்பதியர் பலர் தூக்கத்தை காரணமாக
வைத்து விவாகரத்து பெறுவது ஒரு
கலாச்சாரமாக உருவாகி வருகிறது. இதில் காதலித்து வாழ்வில் இணைந்தவர்களும் இந்த
நெருக்கடியை சந்திப்பதாக அந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. (
நன்றி: இந்து தமிழ் திசை,
05/03/2025 )
2) தூக்கத்தை தொலைக்கும் இந்திய மக்கள்....
மார்ச் 14 -ந்தேதி உலக தூக்க தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி
நாடு முழுவதும் 348 மாவட்டங்களில்
40 ஆயிரம் பேரிடம் லோக்கல் சர்க்கிள் எனும் நிறுவனத்தின்
சார்பில் தூக்கம் தொடர்பாக கடந்த மார்ச் 1 ம் தேதியில் இருந்து 10 -ம் தேதி வரை ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில்
பங்கேற்றவர்களில் 61
சதவீதம் பேர் ஆண்கள். 39 சதவீதம் பேர்
பெண்கள்.
1.
அவர்களில் 39
சதவீதம் பேர் மட்டுமே 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.
2.
மேலும்,
59 சதவீதம் இந்தியர்கள் 6 மணி நேரத்துக்கும்
குறைவாகவே இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்க முடிவதாக கூறினார்கள்
3.
அதே நேரம் 39
சதவீதம் பேர் 4 முதல் 6 மணி நேரம் தூங்குவதாக கூறி இருக்கிறார்கள்.
4.
மேலும்,
20 சதவீதம் பேர் 4 மணி நேரம் மட்டுமே
தூங்குவதாக கூறி உள்ளார்கள்.
5.
மொத்தம் 2
சதவீதம் பேர் மட்டுமே 8 முதல் 10 மணி நேரம் நிம்மதியாக தூங்குவதாக கூறி இருக்கிறார்கள்.
6.
9 சதவீதம் பேர் தங்களுக்கு ஸ்லீப் அப்னியா என்ற மருத்துவ பிரச்சனை இருப்பதாக
கூறியுள்ளார்கள்.
7.
தினமும் கொசுத் தொல்லையால் தூக்கத்தை தொலைப்பதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
8.
மிக முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக இருக்கும் மொபைல் போன்கள் பலரது
தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். மொபைல் போன்களில்
வரும் தகவல்கள்,
நீண்ட நேரம் கண்விழித்து மொபைல் பார்ப்பது போன்றவைகள்
நிம்மதியான தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறியுள்ளார்கள்.
9.
வாரத்தில் பல நாள் நீண்ட நேரம் தூங்க முடியாத ஏக்கத்தை போக்க விடுமுறை
நாட்களில் அதிக நேரம் தூங்குவதாகவும், சிலர் மதிய நேரங்களில்
தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார்கள் ( நன்றி: மாலைமலர், 10/03/2025 )
தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்....
قال
الباجي في المنتقى عند كلامه على ما رواه مالك في الموطأ أن رسول الله صلى الله
عليه وسلم قال: إن نعس أحدكم في صلاته فليرقد حتى يذهب عنه النوم، فإن أحدكم إذا
صلى وهو ناعس لا يدري لعله يذهب ويستغفر فيسب نفسه.
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால், அவர் தம்மைவிட்டுத் தூக்கம் அகலும்வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர் (உணர்வில்லாமல்)
பாவமன்னிப்புக் கோரப்போக,
அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து)விடக்கூடும்.- இதை ஆயிஷா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முவத்தா லில்
மாலிக் )
தூக்கத்தை அல்லாஹ்வே தருகின்றான்....
روى
البخاري (595)، ومسلم (681)، والنسائي (846) واللفظ له عن أَبِي قَتَادَةَ قَالَ :
" كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَالَ
بَعْضُ الْقَوْمِ : لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ .
قَالَ
: إِنِّي أَخَافُ أَنْ تَنَامُوا عَنْ الصَّلَاةِ .
قَالَ
بِلَالٌ : أَنَا أَحْفَظُكُمْ .
فَاضْطَجَعُوا
، فَنَامُوا ، وَأَسْنَدَ بِلَالٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ ، فَاسْتَيْقَظَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ طَلَعَ حَاجِبُ
الشَّمْسِ ، فَقَالَ : يَا بِلَالُ ، أَيْنَ مَا قُلْتَ ؟ .
قَالَ :
مَا أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ
!
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ عَزَّ
وَجَلَّ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، فَرَدَّهَا حِينَ شَاءَ ، قُمْ يَا
بِلَالُ فَآذِنْ النَّاسَ بِالصَّلَاةِ
.
فَقَامَ
بِلَالٌ ، فَأَذَّنَ فَتَوَضَّؤوا - يَعْنِي : حِينَ ارْتَفَعَتْ الشَّمْسُ- ثُمَّ
قَامَ فَصَلَّى بِهِمْ " انتهى
.
وقد بوب
البخاري على هذا الحديث : " بَابُ الأَذَانِ بَعْدَ ذَهَابِ الوَقْتِ "
انتهى .
அபூ கதாதா(ரலி)
அறிவித்தார்:- “நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து
கொண்டிருந்தோம். அப்போது சிலர் 'இறைத்தூதர் அவர்களே!
எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே!" என்று கேட்டனர். 'நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் 'நான் உங்களை எழுப்பி விடுகிறேன்' என்று கூறியதும் அனைவரும்
படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும்
மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள்
விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பிலாலே! நீர் சொன்னது
என்னவாயிற்று?'
என்று கேட்டார்கள். 'இது போன்ற தூக்கம்
எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை' என்று பிலால்(ரலி)
கூறினார். 'நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக்
கொள்கிறான்;
அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்"
என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) 'பிலாலே! எழுந்து தொகைக்கு பாங்கு சொல்வீராக!" என்றார்கள். (பின்னர்)
உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள். ( நூல்: புகாரி )
தூக்கத்தின் மூலம் மன அமைதி கிடைக்கின்றது..
إِذْ
يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ
مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ
عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ
உங்களுக்குச் சிறு
தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த
நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே
வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். ( அல்குர்ஆன்: 8: 11 )
ثُمَّ
أَنْزَلَ عَلَيْكُمْ مِنْ بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُعَاسًا يَغْشَى طَائِفَةً
مِنْكُمْ وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنْفُسُهُمْ يَظُنُّونَ بِاللَّهِ
غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ هَلْ لَنَا مِنَ الْأَمْرِ مِنْ
شَيْءٍ قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ يُخْفُونَ فِي أَنْفُسِهِمْ مَا لَا
يُبْدُونَ لَكَ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هَاهُنَا
قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ
الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ
وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
பின்னர்
கவலைக்குப் பிறகு உங்களுக்கு மனஅமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான்.
உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக்
கொண்டது. அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக்கால எண்ணம்
கொண்டனர். “நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் கிடைக்குமா?” என்று அவர்கள் கேட்டனர். “அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில்
மறைத்துள்ளனர். “நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க
மாட்டோம்” என்றனர். “உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும்
என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள். உங்கள் உள்ளங்களில்
உள்ளதைச் சோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில்
இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் அல்லாஹ் இவ்வாறு செய்தான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ்
அறிந்தவன்” எனக் கூறுவீராக! (குர்ஆன் 3:154)
மேற்கண்ட இரண்டு அருள்மறை வசனங்களின் ஊடாக நாம் அறிய
வேண்டிய விஷயம் கவலைகளுக்கு அருமருந்தாக அமைவது சிறு தூக்கமாகும். ஒரு சிறு
தூக்கம் கூட சில கவலைகளை மறக்கடிக்கச் செய்வதாக அல்லாஹ் சான்று பகர்கிறான்.
மேலும், இந்த இரு வசனங்களையும் ஊன்றிக் கவனித்தால் நமக்கு ஒரு உண்மை
புலப்படும்.
பத்ருப் போரில்
பிரச்சினையை எதிர் கொள்வதற்கு முன்பு தூக்கத்தைத் தந்து உள்ளத்தை
அமைதிப்படுத்துகிறான். உஹதுப் போர்க் களத்தில் பிரச்சினை முடிந்த பிறகு
தூக்கத்தைக் கொடுத்து அமைதியை ஏற்படுத்துகிறான்.
உழைப்பதற்கும், உலகின் அழகை பார்த்து அனுபவிப்பதற்கும் ஏற்ற வகையில் பகலைப் படைத்திருப்பதாகவும், உறங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் ஏற்ற வகையில் இரவைப் படைத்திருப்பதாகவும் அல்லாஹ்
குர்ஆனில் கூறுவதைப் பார்க்கிறோம்.
أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ
وَالنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
''நாமே இரவை அதில் அவர்கள்
ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள்
பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள்
இருக்கின்றன''.
( அல்குர்ஆன்: 27: 86 )
தூக்கத்தின் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்…
அந்த வகையில் இரவு முழுவதையும் வணக்க
வழிபாட்டில் ஈடுவடுவதற்காக விழிப்பது கூட தவறு என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்
காட்டுவதையும், கண்களுக்கு செய்யும் கடமையை தவற விடக்கூடாது என்பதையும்
பின் வரும் நபிமொழி மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُاللَّهِ، أَخْبَرَنَا
الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي
أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِالرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُاللَّهِ بْنُ
عَمْرِو بْنِ العَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَا عَبْدَاللَّهِ،
أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ؟ قُلْتُ:
بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ
وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا،
وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا.
அப்துல்லாஹ் பின்
அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ்வே நீர் எல்லா
நாட்களும் நோன்பு வைப்பதாகவும், இரவு முழுவதும்
தொழுவதாகவும் உன்னைப் பற்றிக் கூறப்படுகிறதே (உண்மையா?) என்று கேட்டார்கள். அதற்கு ஆம் (உண்மைதான்) என்று பதில்
அளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ""அவ்வாறு செய்யாதே! (சில நாட்கள்)
நோன்பு வை. (சில நாட்கள்) நோன்பை விட்டு விடு! (சிறிது நேரம்) தொழு, தூங்கு. ஏனெனில் நீ உனது உடலுக்கு செய்ய வேண்டிய கடமை
உள்ளது. நீ உனது கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது. நீ உனது மனைவிக்கு செய்ய
வேண்டிய கடமை உள்ளது என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயீ )
தூங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்:
عنِ
البرَاءِ بنِ عازِبٍ، رَضِيَ اللَّه عنْهمَا، قَالَ: قَالَ لي رسُولُ اللَّهِ ﷺ:
إِذَا أَتَيتَ مَضْجَعَكَ فَتَوضَّأْ وضُوءَكَ لِلصَّلاةِ،
1.
படுக்கைக்கு செல்வதற்க்கு முன்பு தொழுகைக்கு உழு எடுப்பதைப் போன்று உழு
எடுத்துக்கொள்ள வேண்டும் (புகாரி)
عن أبي
هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ((إذا أوى أحدُكم إلى
فراشه، فليأخذ داخِلَة إزارِه، فلينفض بها فراشه،
2. நாம்
அணிந்திருக்கக்கூடிய ஆடையின் ஓரத்தைக் கொண்டு படுக்கவிருக்கும் விரிப்பை மூன்று
முறை தட்டி விட வேண்டும் (புகாரி)
قال صلي
الله عليه وسلم فيما رواه الشيخان: "من قرأ بالآيتين من آخر سورة البقرة في
ليلة كفتاه"
3. தூங்குவதற்கு முன்
திருக்குர்ஆனின் 2வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் (ஆமனர் ரஸூலு) என தொடங்கும் 285,286 ஆகிய வசனங்களை ஓதிக் கொள்ள வேண்டும் (புகாரி)
فقد روت
أم المؤمنين عائشة -رضي الله عنها-: (أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم كان
إذا أوى إلى فراشِه جمَع كفَّيْهِ ثمَّ نفَث فيهما وقرَأ فيهما بـ {قُلْ هُوَ
اللَّهُ أَحَدٌ} و{قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} و{قُلْ أَعُوذُ بِرَبِّ
النَّاسِ} ثمَّ يمسَحُ بهما ما استطاع مِن جسدِه يفعَلُ ذلك ثلاثَ مرَّاتٍ
4. பின் திருக்குர்ஆனின்
சூரத்துல் இக்லாஸ்,
சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ் ஆகிய
சூராக்களை ஓதி இரண்டு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்
(புகாரி)
فذكر
الحديث.. وفيه أن الشيطان قال له: إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي لن يزال
عليك من الله حافظ ولا يقربك شيطان حتى تصبح، فقال النبي صلى الله عليه وسلم: صدقك
وهو كذوب، ذاك شيطان
5. திருகுர்ஆனின்
சூரத்துல் பகராவின் 255
வது வசனமான ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் இவ்வாறு ஆயத்துல்
குர்ஸியை ஓதக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அன்றைய இரவு முழுவதும் நமது
பாதுக்காப்பிற்க்காக ஓர் மலக்கை நியமிக்கின்றான் (புகாரி)
في
الصحيحين عن عليٍّ أن فاطمة رضي الله عنها أتتِ النبيَّ صلى الله عليه وسلم تشكو
إليه ما تلقى في يدها من الرَّحى، وبلغها أنه جاءه رقيقٌ، فلم تصادِفْه، فذكرت ذلك
لعائشة، فلما جاء أخبرَتْه عائشة، قال: فجاءنا، وقد أخذنا مضاجعنا، فذهبنا نقوم،
فقال: ((على مكانِكما))، فجاء فقعَد بيني وبينها، حتى وجدت بَرْدَ قدمَيْه على
بطني، فقال: ((ألا أدلكما على خير مما سألتما، إذا أخذتما مضاجعكما، أو أويتما إلى
فراشكما، فسبِّحا ثلاثًا وثلاثين، واحمدا ثلاثًا وثلاثين، وكبِّرا أربعًا وثلاثين؛
فهو خير لكما من خادمٍ
6. பின் 33 ஸுப்ஹானல்லாஹ்,
33 அல்ஹம்துலில்லாஹ், 34 அல்லாஹுஅக்பர்
என்று தஸ்பிஃஹ் செய்தல் (புகாரி)
قال ابن
بطال في شرح صحيح البخاري: كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل،
وضع يده تحت خده، ثم يقول: (اللهم باسمك أموت وأحيا)
7. உறங்குவதற்க்கு
முன் அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா என்று ஓதி விட்டு படுக்க வேண்டும் இதன்
பொருள் “யா அல்லாஹ் உன் பெயரைக்கொண்டு மறனிக்கின்றேன் உன் பெயரைக்கொண்டு
உயிர்வாழ்கின்றேன் .( நூல்: திர்மிதி)
ففي
الصحيحين عن جابر رضي الله عنه عن النبيِّ صلى الله عليه وسلم قال: ((إذا استجنح
الليل - أو قال: جُنح الليل - فكفُّوا صبيانكم؛ فإن الشياطين تنتشر حينئذٍ، فإذا
ذهب ساعةٌ من العِشاء فخلُّوهم، وأغلِق بابك واذكُرِ اسمَ الله، وأطفِئْ مصباحك
واذكُر اسم الله، وأوكِ سِقاءك واذكُرِ اسم الله، وخمِّر إناءك واذكر اسم الله،
ولو تعرُضُ عليه شيئًا)
8. நீங்கள்
உறங்குவதற்க்கு முன் விளக்குகளை அனைத்து விடுங்கள், கதவுகளை தாழிட்டு விடுங்கள், உணவையும் பானத்தையும்
மூடி வையுங்கள் (புகாரி)
عنِ
البرَاءِ بنِ عازِبٍ، رَضِيَ اللَّه عنْهمَا، قَالَ: قَالَ لي رسُولُ اللَّهِ ﷺ:
إِذَا أَتَيتَ مَضْجَعَكَ اضْطَجِعْ عَلى شِقِّكَ الأَيمَنِ،
9. வலது புறமாக
ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ( புகாரி )
10. இவை அனைத்தும்
முடித்து படுத்தப் பிறகு இறுதியாக இந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்..
وَعنِ
البرَاءِ بنِ عازِبٍ، رَضِيَ اللَّه عنْهمَا، قَالَ: قَالَ لي رسُولُ اللَّهِ ﷺ:
إِذَا أَتَيتَ مَضْجَعَكَ فَتَوضَّأْ وضُوءَكَ لِلصَّلاةِ، ثُمَّ اضْطَجِعْ عَلى
شِقِّكَ الأَيمَنِ، وقلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ نفِسي إِلَيكَ، وَفَوَّضتُ أَمري
إِلَيْكَ، وَأَلَجَأْتُ ظَهرِي إِلَيْكَ، رغبةً ورهْبَةً إِلَيْكَ، لامَلجأَ ولا
مَنجى مِنْكَ إِلاَّ إِليكَ، آمنتُ بِكِتَابِكَ الذِي أَنزَلْت، وَبِنَبِيِّكَ
الذِي أَرسَلتَ، فإِنْ مِتَّ. مِتَّ عَلَى الفِطرةِ، واجْعَلهُنَّ آخِرَ مَا
تَقُولُ مُتَّفقٌ عليهِ
அல்லாஹும்ம
அஸ்லம்து நஃப்ஸீ இலைக்,
வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக், வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய இலைக், லா மல்ஜஅ, வலா மன்ஜா மின்க இல்லா இலைக், ஆமன்த்து பி கிதாபிகல்லதி
அன் ஜல்த்த,
வ பி நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த.
பொருள்: யா
அல்லாஹ் நான் என் மனதை உன்பால் சரணடையுமாறு செய்துவிட்டேன் மேலும் என் காரியங்களை
உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் மேலும் எனது முகத்தை உன் பக்கம் திருப்பிவிட்டேன்
மேலும் எனது முதுகையும் உன் பக்கம் ஒதுக்கிவிட்டேன் உன்பால்
ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும்..! உன்னை விட்டுத் தஞ்சம் புகும் இடமோ உன்னை
விட்டு விரண்டோடும் இடமோ உன் அளவிலே தவிர வேறில்லை!
நீ இறக்கியருளிய
வேதத்தின் மீதும் நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன். (இவ்வாறு
ஓதிவிட்டு தூங்கி அதே நிலையில்) நாம் மரணம் அடைவோமேயானால் (இன்ஷாஅல்லாஹ்)
தூய்மையானவர்களாகவே மரணிப்போம். ( நூல்: புகாரி )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவருக்கும் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் தருகின்ற அவனுடைய
அற்புதமான அருட்கொடையான தூக்கத்தை நம் வாழ்வினில் எல்லா காலத்திலும்
தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment